Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

ஏன் யாரும் முயல்வதில்லை? 

முயன்றவர் ஒருவர் பற்றி குறுந்தகவல். அவர் பெயர் செந்தி்ல்மோகன். ஊரிலே எங்கள் “குமருகள்” கருக்கலைக்க பப்பா காய் சாற்றை பருகுவதை நன்கு அறிந்தவர். இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்கு எப்படி பப்பா காய் கருக்கலைக்கிறது என்பதை தேர்ந்தெடுத்தார் பிற்போக்கான கிறீஸ்தவர்களால் நிறைந்துள்ள கிறீஸ்தவ நாடுகளில் கருக்கலைக்க தடை. செந்தில்மோகனின் ஆய்வு வெளிவந்ததும் கிறீஸ்தவ உலக “குமருகளும்” கைலாசம் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். அண்ணர் உலகப்புகழ் பெற்றார். இந்த களத்தில் நிச்சயம் ஒரு அங்கத்தவர் என்றே நினைக்கிறேன். நான் எழுதியது தவறானால் திருத்துவார். மற்றவர்களும் அவர் போல் முன்வந்து இயற்கை மருத்துவ முறைகளின் பயன் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்- நீங்களும் தான். 😃

தகவலுக்கு நன்றி. பப்பாளிப் பழம் மட்டுமன்றி அன்னாசியும் இந்த விடயத்தில் அறியப்பட்டதே. அதே போல யாழ் பல்கலையில் வேப்பம் விதையில் இருந்து spermicide தயாரிக்க முயன்ற ஒரு  ஆய்வாளர் பற்றியும் அறிந்திருக்கிறேன். 

ஆனால், எனது முறைப்பாடு கொஞ்சம் வித்தியாசமானது.  "பாகற்காயைச் சாப்பிட்டால் சீனி குறையும்" என்ற பரம்பரை நம்பிக்கையில் இருந்து யாராவது அதன் உண்மையை ஆராய முயன்றிருக்கிறார்களா என்றால், இல்லை என்றே நினைக்கிறேன். முதலில் செந்தில் மோகன் செய்தது போல பாகற்காயை medicinal chemistry மூலம் ஆராய்ந்த பின்னர் தான் முன்னகர முடியும். இதைச் செய்யாமல் நம்பிக் கொண்டிருப்பதில் மட்டும் பயன் இல்லை என்பதே என் கருத்து.

மேலும், இயற்கை மருத்துவத்தை ஆராய்ந்து உறுதி செய்ய, அதற்குரிய தகுதியும் ஈடுபாடும் உடையோரே முன் வர வேண்டும். எனக்கு இதில் ஈடு பாடு கிடையாது. அப்ப ஏன் குறை பிடிக்கிறாய் என யாரும் கேட்கக் கூடும்.   விஞ்ஞான முறையிலும், உயிரியல் ஆய்விலும் இருக்கும் பரிச்சயத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான முறையில் அணுகப் படாத எந்த விடயத்தையும் சுட்டிக் காட்ட மட்டும் செய்கிறேன் - அவ்வளவே! 

  • Replies 156
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Justin said:

எனது முறைப்பாடு கொஞ்சம் வித்தியாசமானது.  "பாகற்காயைச் சாப்பிட்டால் சீனி குறையும்" என்ற பரம்பரை நம்பிக்கையில் இருந்து யாராவது அதன் உண்மையை ஆராய முயன்றிருக்கிறார்களா என்றால், இல்லை என்றே நினைக்கிறேன்.

இவர் கொஞ்சம் வித்தியாசமாக சொல்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 21:27, Justin said:

இது உண்மை - அதனால் தான் நீரிழிவின் நிலை என்னவென்று ஆராயாமல் ஏன் ஐரோப்பாவில் இன்சுலின் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள் எனக் குழம்புகிறேன்.  எங்கள் உடலில் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிக்கும் போது நடப்பது இது தான்: (மேலேயுள்ள படத்தோடு சேர்த்து வாசியுங்கள்)

1. இன்சுலின் சாதாரண அளவில் இருக்கும், ஆனால் இன்சுலின் வேலை செய்யாமல் விடும் (insulin resistance,  இன்சுலின் கதவு எனும் insulin receptor பழுதடைவது காரணம்)

2. இதனால் உடல் குழூக்கோசைப் பாவிக்காமல் குழூக்கோஸ் இரத்தத்தில் தேங்கும் - எனவே குழூக்கோஸ் கூடும்.

3. கணையம் இதைப் பார்த்ததும் மேலும் மேலும் இன்சுலினைச் சுரக்கும் (எனவே இன்சுலின் கூடும்!).

இரண்டாம் வகை நீரிழிவின் அடுத்த நிலை (உணவுக் கட்டுப் பாடில்லை, மருந்தும் ஒழுங்காக எடுப்பதில்லை என்று வைத்துக் கொண்டால்)

4. மிக அதிக இன்சுலின் இரத்தத்தில் தொடர்வதால் இன்சுலின் கதவு இன்னும் இறுகப் பூட்டிக் கொள்ளும் (desensitization) - எனவே  இரண்டாம் வகை நீரிழிவு இன்னும் தீவிரமாகும்.

5. இப்போது கணையமும் இன்சுலினைச் சுரந்து களைத்துப் போய் செயல்பாட்டைக் குறைக்கும் (insulin deficiency). 

6. இப்போது, இன்சுலின் பற்றாக்குறையும், செயல்படாத இன்சுலின் கதவோடு சேர்ந்து கொள்வதால் - இரண்டாம் வகை நீரிழிவும், முதலாம் வகை நீரிழிவும் சேர்ந்த நிலை ஏற்படும். 

இந்த உயிரியல் படி:

👆நிலை 3 இல் இருக்கும் ஒருவருக்கு இன்சுலின் கதவை வேலை செய்ய வைக்கும் மருந்துகளைத் தான் கொடுக்க வேண்டும் - அதிகமாகப் பயன் படுவது மெற்fபோமின் (metformin).

நிலை 6 இல் தான் இன்சுலினைக் கொடுக்க வேண்டிய தேவையேற்படும். 

எனவே, ஏன் "நீரிழிவு என்று கண்டு கொண்டதும் இன்சுலினைக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்" என்பது எனக்கு விளங்கவில்லை!
 
அண்ணை இது சம்பந்தமாக இன்னுமொரு கேள்வி.
இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்தால் உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமிக்கும் தானே, அந்த செயற்பாடும் diabetes நோயாளிகளுக்கு தடைப்படுமா? ஏனென்றால் diabetes வந்த பலர் உடல் மெலிகின்றனரே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அண்ணை இது சம்பந்தமாக இன்னுமொரு கேள்வி.
இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்தால் உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமிக்கும் தானே, அந்த செயற்பாடும் diabetes நோயாளிகளுக்கு தடைப்படுமா? ஏனென்றால் diabetes வந்த பலர் உடல் மெலிகின்றனரே ஏன்?

ஏராளன், இரத்தத்தில் தேங்கும் குழூக்கோஸ்  உடல் அங்கங்களுக்குள்/கலங்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் செயல்பாடு அவசியம் - மூளை மட்டும் இன்சுலின் உதவி இல்லாமலே குழூக்கோசை உள்ளே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும். 

எனவே கட்டுப் பாடற்ற நீரிழிவுள்ளோரில் பின்வரும் விடயங்கள் நடக்கும்:

1.  குருதியில் தேங்கும் குழூக்கோஸ் உடலின் கொழுப்பு இழையங்களில் (adipose tissue) கொழுப்பாக மாற்றப் படுதல் குறையும் (எனவே கொழுப்பு இழப்பு).

2. ஏனைய கலங்கள் பட்டினி கிடக்கின்றன என்று அறிந்ததும், உடலின் கொழுப்பிழையங்கள் தமது கொழுப்பை உடைத்து இரத்தத்தினுள் கொழுப்பமிலங்களை விடும் (எனவே கொழுப்பு இழப்பு).

3. உடல் கலங்கள் குழூக்கோஸ் இல்லாமல் பட்டினி கிடப்பதால், சில புரதங்களும் உடைக்கப் பட்டு சக்தித் தேவைக்குப் பயன்படும் (எனவே புரத இழப்பு, தசை இழப்பு).

இவை மூன்றும் உடல் மெலியக் காரணங்களாகும். ஆனால், கதை இன்னும் தொடரும்:

4. நிலை 2 இன் காரணமாக இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.

5. உடலில் தேங்கும் கொழுப்பமிலங்களை ஈரல் உள்வாங்கி, கொழுப்பாகச் சேமித்துக் கொள்ளும் - இது தொடர்ந்தால் fatty liver disease எனப்படும் "கொழுப்புத் தேங்கிய ஈரல்" உருவாகும் -இது ஈரலின் தொழிற்பாட்டை மேலும் குறைக்கும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎11‎-‎2021 at 19:30, குமாரசாமி said:

இவர் கொஞ்சம் வித்தியாசமாக சொல்கின்றார்.

அண்ணா , நேரம் இருந்தால் இவரது வீடியோக்களை பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2021 at 14:58, Justin said:

ஏராளன், இரத்தத்தில் தேங்கும் குழூக்கோஸ்  உடல் அங்கங்களுக்குள்/கலங்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் செயல்பாடு அவசியம் - மூளை மட்டும் இன்சுலின் உதவி இல்லாமலே குழூக்கோசை உள்ளே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும். 

எனவே கட்டுப் பாடற்ற நீரிழிவுள்ளோரில் பின்வரும் விடயங்கள் நடக்கும்:

1.  குருதியில் தேங்கும் குழூக்கோஸ் உடலின் கொழுப்பு இழையங்களில் (adipose tissue) கொழுப்பாக மாற்றப் படுதல் குறையும் (எனவே கொழுப்பு இழப்பு).

2. ஏனைய கலங்கள் பட்டினி கிடக்கின்றன என்று அறிந்ததும், உடலின் கொழுப்பிழையங்கள் தமது கொழுப்பை உடைத்து இரத்தத்தினுள் கொழுப்பமிலங்களை விடும் (எனவே கொழுப்பு இழப்பு).

3. உடல் கலங்கள் குழூக்கோஸ் இல்லாமல் பட்டினி கிடப்பதால், சில புரதங்களும் உடைக்கப் பட்டு சக்தித் தேவைக்குப் பயன்படும் (எனவே புரத இழப்பு, தசை இழப்பு).

இவை மூன்றும் உடல் மெலியக் காரணங்களாகும். ஆனால், கதை இன்னும் தொடரும்:

4. நிலை 2 இன் காரணமாக இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்.

5. உடலில் தேங்கும் கொழுப்பமிலங்களை ஈரல் உள்வாங்கி, கொழுப்பாகச் சேமித்துக் கொள்ளும் - இது தொடர்ந்தால் fatty liver disease எனப்படும் "கொழுப்புத் தேங்கிய ஈரல்" உருவாகும் -இது ஈரலின் தொழிற்பாட்டை மேலும் குறைக்கும்.

இது உங்கள் கருத்தா ? இதற்கான உசாத்துணை இணைப்புகளை இங்கு இணைப்பது உங்கள் கருத்துக்களை நம்பிக்கையை கூட்டும் என்பது எனது தாழ்மையான கருத்து .

ஏனென்றால் கொழுப்பு சம்பந்தப்பட்ட ஒரு கருதுகோள் சமீபத்தில் பிழையாக அறியப்பட்டுள்ளது நீங்களும் அறிந்து இருப்பீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 20:43, பெருமாள் said:

இது உங்கள் கருத்தா ? இதற்கான உசாத்துணை இணைப்புகளை இங்கு இணைப்பது உங்கள் கருத்துக்களை நம்பிக்கையை கூட்டும் என்பது எனது தாழ்மையான கருத்து .

ஏனென்றால் கொழுப்பு சம்பந்தப்பட்ட ஒரு கருதுகோள் சமீபத்தில் பிழையாக அறியப்பட்டுள்ளது நீங்களும் அறிந்து இருப்பீர்கள் .

இது என் கருத்து அல்ல. ஆனால் இதற்கெல்லாம் உசாத்துணையென்று ஒரு தனி ஆவணத்தைக் காட்ட முடியாது என்று அறிந்திருக்கும் அளவுக்கு எனக்கு உயிர் இரசாயனவியல் பரிச்சயமாக இருக்கிறது. அவ்வாறு பரிச்சயமில்லாததால் நீங்கள் ஆதாரம் கேட்கிறீர்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். வேண்டுமென்றால் மருத்துவக் கல்லூரிகளில் இன்றும் உயிர் இரசாயானவியல் பாட நூலாக இருக்கும் Harper's Biochemistry இன் 31 ஆவது பதிப்பில் நீங்கள் தேடிப்பார்க்கலாம். 

பிழையாக அறியப் பட்ட கருதுகோள் எது, யார் பிழையென்று நிறுவியது என்று குறிப்பிட்டால் அது பற்றிப் பேசலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 15:15, ரதி said:

அண்ணா , நேரம் இருந்தால் இவரது வீடியோக்களை பாருங்கள் 

"டாக்டர்" எஸ் ஜே சொல்லும் பல கருத்துகளுக்கு ஆதாரங்கள் இல்லை, எனவே அவதானமாகப் பின்பற்றுங்கள். "எடுத்துக் கொள்ளும் மாப்பொருளை அரைவாசியாகக் குறைத்தால் சர்க்கரை இரத்தத்தில் குறைந்து விடும்" என்று சொல்லும் ஒருவருக்கு நீரிழிவில் ஈரலின் பங்கு என்னவென்று தெரிய வாய்ப்பில்லை - இது  தெரியாமல் நீரிழிவு பற்றி பேசுபவர் போலி டாக்டராகத் தான் இருப்பார். மேலும் வெந்தயம் சர்க்கரையைக் குறைக்கும் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை - இருக்கிறது என்கிறார். எங்கே இருக்கிறதென்று தான் தெரியவில்லை! 

(AIIMM என்று லேபல் வேறு போட்டிருக்கிறார், AIMS எனும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தை மிமிக் செய்து தனது நாட்டு மருத்துவ முறைகளை அறிவியல் போலப் பரப்பும் நோக்கமிருக்கலாமென நினைக்கிறேன்!)

Edited by Justin
edit

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

அவர் ஆயுள் வேத /ஹோமியபதி [சரியாய் தெரியவில்லை ] வைத்தியர் ...அவர் ஈரலைப் பற்றி போட்ட  வீடியோக்களும் இருக்கு ...எல்லோரையும் நம்பி கண்ணை மூடிக் கொண்டு பின் தொடர்வதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் ஆயுள் வேத /ஹோமியபதி [சரியாய் தெரியவில்லை ] வைத்தியர் ...அவர் ஈரலைப் பற்றி போட்ட  வீடியோக்களும் இருக்கு ...எல்லோரையும் நம்பி கண்ணை மூடிக் கொண்டு பின் தொடர்வதில்லை 

அவருக்கு ஈரலைப் பற்றித் தெரியாதென்று சொல்ல வரவில்லை - நீரிழிவில் ஈரலின் பங்கு பற்றி போலி "டாக்டருக்கு" ஒரு மண்ணும் தெரியாது என்பது தெளிவாக எனக்கு விளங்குகிறது!😂

 நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை கூட பிரதான காரணங்கள் 2:

1. உடல் பயன்படுத்தாமல் தேங்கும் குழூக்கோஸ் 

2.  குழம்பிப் போன ஈரல் வெளியிடும் குளூக்கோஸ்

இந்த இரண்டாவது காரணத்தால் சாப்பாட்டை 50% அல்ல , 25 % ஆகக் குறைத்தாலும் நீரிழிவில் இரத்த சர்க்கரை அளவு குறையாது -  இப்படி ஈரல் இரத்தத்தினுள் குளூக்கோசை தள்ளாமல் தடுப்பது மெற்fபோமின்.

ஆயுர்வேதே, நாட்டு வைத்தியர்கள் உயிர் இரசாயனவியல், மருந்தியல் என்பன  பற்றிக் கற்பதில்லை! நீரிழிவு போன்ற ஒரு நோய்க்கு உயிர் இரசாயனவியல் அறிவில்லாமல் மருத்துவ ஆலோசனை சொல்வது பரிசல் காரன் ரைற்றானிக் கப்பல் ஓட்டுவது போன்ற நிலை!  

எனவே இவர் போன்றோரை நீங்கள் கண்ணைத் திறந்து கொண்டு பின்பற்றினாலும் உடல் நலம் முன்னேறாது என்பது என் கருத்து!
 
  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎11‎-‎2021 at 18:03, Justin said:

அவர் தனது ஆஸ்பத்திக்கு வரச் சொல்லி ஒருத்தரையும் அழைக்கவில்லை.
வெந்தயம் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும் என்று சொல்வதற்கு எந்த வித ஆதாரங்களும் இல்லை . அதே போல குணமாக மாட்டாது என்பதற்கும் ஆதாரம் இல்லை .
வெந்தயம் சாப்பிடுவதால் உடல் சூட்டை  தவிர்த்து எந்த வித பாதிப்பும் இல்லை 
இதில் ஏன் குறை கண்டு பிடிக்கிறீர் அமைச்சரே🙂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

😂இணைய போலி டாக்டர்கள் எப்படி தங்கள் கல்லாவை நிரப்புகிறார்கள் எனத் தெரியாமல் இருக்கிறீர்களா ரதி?

இப்ப நீங்கள் கொண்டு வந்து இணைத்த இணைப்பை 10 பேர் கிளிக்கினால், அந்த ஒவ்வொரு கிளிக்கிற்கும் ஐம்பது பைசா அவருக்கு விளம்பர நிறுவனங்கள் கொடுக்கும் - அவர் காசை எடுத்துக் கொண்டு மேலும் கலர் கலராக வீடியோ விட்டுக் கொண்டிருப்பார் - இப்படி தெருப்பிச்சைக் காரன் கணக்காக முதல் இல்லாத வியாபாரம் செய்த படியே "ஐயோ, மருந்துக் கம்பனிக் காரன் காசு பார்க்கிறான்!" என்று குமுறுவார்! மருந்துக் கம்பனிக் காரனாவது வேலை செய்யும் மருந்தை பில்லியன் டொலர் முதல் போட்டுத் தயாரித்த பின்னர் தான் இலாபம் கேட்கிறான் - இந்தக் கள்ளப் பரியாரிமார் முதலே போடாமல் 100% இலாபம் பார்க்கின்றனர்! எனவே யார் பெரிய கள்ளன் என்பது பெரிய மாயமில்லை!

வெந்தயம் சுகரைக் குறைக்காதென்பது தான் இப்போதுள்ள தரவு - இது தெரிந்த தகவல் தான் - தெரியாத ஒரு சந்தேகமல்ல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, Justin said:

வெந்தயம் சுகரைக் குறைக்காதென்பது தான் இப்போதுள்ள தரவு - இது தெரிந்த தகவல் தான் - தெரியாத ஒரு சந்தேகமல்ல!

நாங்கள் வெந்தயம் சாப்பிட்டம் சுகர் வருத்தத்தை அமுக்கினம் எண்ட ஆக்கள் வரிசையாய் வாங்கோ......😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தக் கள்ளப் பரியாரிமார் முதலே போடாமல் 100% இலாபம் பார்க்கின்றனர்!

விளங்குது 🤣 முதல் போட்டால் வாழ விடுவீங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2021 at 18:09, பெருமாள் said:

விளங்குது 🤣 முதல் போட்டால் வாழ விடுவீங்க ?

முதல் போட்டவனுக்கு நியாயமான இலாபம் பார்க்க உரிமையுண்டு! முதல் போடாமல் பச்சைத் தண்ணி விற்பவன் வழிப்பறித் திருடனை விடக் கேவலமான திருடன்! வழிப்பறித் திருடனாவது உடல் ரீதியில் உழைக்கிறான் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎11‎-‎2021 at 21:41, Justin said:

😂இணைய போலி டாக்டர்கள் எப்படி தங்கள் கல்லாவை நிரப்புகிறார்கள் எனத் தெரியாமல் இருக்கிறீர்களா ரதி?

இப்ப நீங்கள் கொண்டு வந்து இணைத்த இணைப்பை 10 பேர் கிளிக்கினால், அந்த ஒவ்வொரு கிளிக்கிற்கும் ஐம்பது பைசா அவருக்கு விளம்பர நிறுவனங்கள் கொடுக்கும் - அவர் காசை எடுத்துக் கொண்டு மேலும் கலர் கலராக வீடியோ விட்டுக் கொண்டிருப்பார் - இப்படி தெருப்பிச்சைக் காரன் கணக்காக முதல் இல்லாத வியாபாரம் செய்த படியே "ஐயோ, மருந்துக் கம்பனிக் காரன் காசு பார்க்கிறான்!" என்று குமுறுவார்! மருந்துக் கம்பனிக் காரனாவது வேலை செய்யும் மருந்தை பில்லியன் டொலர் முதல் போட்டுத் தயாரித்த பின்னர் தான் இலாபம் கேட்கிறான் - இந்தக் கள்ளப் பரியாரிமார் முதலே போடாமல் 100% இலாபம் பார்க்கின்றனர்! எனவே யார் பெரிய கள்ளன் என்பது பெரிய மாயமில்லை!

வெந்தயம் சுகரைக் குறைக்காதென்பது தான் இப்போதுள்ள தரவு - இது தெரிந்த தகவல் தான் - தெரியாத ஒரு சந்தேகமல்ல!

வெந்தயத்தின் பயன்கள் என்று கூகுள் பண்ணிப் பாருங்கோ ...பெரியளவில் அதன் உண்மை தன்மையை நிரூபிக்க மருந்து கம்பெனிகள் விடாது.
பி';கு; யூ  டியூப்பில் எப்படி எல்லாம் உழைக்கிறார்கள் என்று தெரியும் ...நானும் ஒன்று தொடங்கலாமா என்று யோசிக்கிறேன்  
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

Benefits of Of dill

என்று தேடியதில் நிறைய தளம்கள்  நன்றே சொல்கின்றன .

https://www.healthline.com/nutrition/dill

https://www.webmd.com/diet/health-benefits-dill#1

https://www.organicfacts.net/health-benefits/seed-and-nut/dill.html

இப்படி நிறைய தளம்கள்  வெந்தயத்தின் நன்மையை கூவி கூவி சொல்லுகின்றன ஜஸ்டின் இன்னும் அப்டேட் பண்ணவில்லை ஆக்கும் இல்லை ......🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்று வரைக்கும் கவுனி  அரிசியை மூன்று வேளையும் சாப்பிட்டு பார்த்ததில்.....
வயிறு முட்டாக இருக்காது.
எந்த கறியுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு உள்ளது.
கஞ்சியாகவும் குடிக்கலாம்.
பொங்கல் மாதிரியும் செய்து சாப்பிடலாம்.
இனிப்பு பண்டங்களாகவும் செய்து சாப்பிட்டு பார்த்தேன்.
வயிறு சுமையில்லாமல் இருக்கின்றது.
இரவிலும் சாப்பிட்டு பார்த்தேன்.இரவில் பாண் சாப்பிடுவதை விட இது சாப்பிடலாம் என நான் முடிவெடுத்துள்ளேன்.ஒரு மாத காலமாக பாண் வாங்குவதில்லை.

இதர தகவல்கள் வரும் மாதம் இரத்த பரிசோதனையின் பின்னர் எழுதுகின்றேன்.:)

  • கருத்துக்கள உறவுகள்

Karuppatisii.th.jpg

Karuppatisi.th.jpg

மேலே படத்திலேயுள்ள அரிசி இங்கு வியட்நாமியரின் கடையிலே 3.99 யூரோவிற்குக் கிடைக்கிறது

Edited by nochchi
பிழைதிருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, nochchi said:

Karuppatisii.th.jpg

Karuppatisi.th.jpg

மேலே படத்திலேயுள்ள அரிசி இங்கு வியட்நாமியரின் கடையிலே 3.99 யூரோவிற்குக் கிடைக்கிறது

அவர்களிடம் இந்த அரிசி வாங்கினால் எதற்கு நல்லது என கேட்டு விசாரியுங்கள்.
உண்மையான மருத்துவபூர்வமான விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அவர்களிடம் இந்த அரிசி வாங்கினால் எதற்கு நல்லது என கேட்டு விசாரியுங்கள்.
உண்மையான மருத்துவபூர்வமான விடயங்களை அறியக்கூடியதாக இருக்கும்.

நன்றி. முயற்சிக்கின்றேன். ஆனால், ஆளொரு மௌனசாமி போன்றவர். கடுகடுப்பான முகம். பார்ப்போம்.

நானிந்த அரிசையை கழுவி அந்த பெட்டியில் உள்ளது போல் 30நிமிடம் ஊறவிட்டுச் சமைத்து, ஆட்டெலும்புச் சூப்போடு (சூப்பைவிட்டுக் குழைத்தல்ல) உண்டேன். சுவையாக இருந்தது. 

அரிசி கறுப்புநிறமுடையதல்ல. கடும்நாவல் நிறம். அரிசிகழுவி நீரில் அந்த நிறமே தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, nochchi said:

நன்றி. முயற்சிக்கின்றேன். ஆனால், ஆளொரு மௌனசாமி போன்றவர். கடுகடுப்பான முகம். பார்ப்போம்.

நானிந்த அரிசையை கழுவி அந்த பெட்டியில் உள்ளது போல் 30நிமிடம் ஊறவிட்டுச் சமைத்து, ஆட்டெலும்புச் சூப்போடு (சூப்பைவிட்டுக் குழைத்தல்ல) உண்டேன். சுவையாக இருந்தது. 

அரிசி கறுப்புநிறமுடையதல்ல. கடும்நாவல் நிறம். அரிசிகழுவி நீரில் அந்த நிறமே தெரிகிறது.

வைத்தியர்களை விட அந்த நாட்டுக்காரர்களுக்கு நாட்டு மருத்துவ ரீதியாக ஏதும் விடயங்கள் தெரிந்திருக்கலாம் அதனால் கூறினேன்.
மற்றும்படி அந்த அரிசியை சமைத்த போது நீங்கள் சொன்ன மாதிரியே எனக்கும் இருந்தது.

உணவே மருந்து.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

Benefits of Of dill

என்று தேடியதில் நிறைய தளம்கள்  நன்றே சொல்கின்றன .

https://www.healthline.com/nutrition/dill

https://www.webmd.com/diet/health-benefits-dill#1

https://www.organicfacts.net/health-benefits/seed-and-nut/dill.html

இப்படி நிறைய தளம்கள்  வெந்தயத்தின் நன்மையை கூவி கூவி சொல்லுகின்றன ஜஸ்டின் இன்னும் அப்டேட் பண்ணவில்லை ஆக்கும் இல்லை ......🤣🤣

இன்னமும் DILL மன்னர் விளக்கம் தரவில்லையா இந்த திரியில் ?

அவரால் முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

இன்னமும் DILL மன்னர் விளக்கம் தரவில்லையா இந்த திரியில் ?

அவரால் முடியாது .

உங்களை ,என்னை மாதிரி முட்டாள்களுடன் கதைத்து வேலையில்லை என்று பேசாமல் ஒதுங்கி இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2021 at 16:54, பெருமாள் said:

Benefits of Of dill

என்று தேடியதில் நிறைய தளம்கள்  நன்றே சொல்கின்றன .

https://www.healthline.com/nutrition/dill

https://www.webmd.com/diet/health-benefits-dill#1

https://www.organicfacts.net/health-benefits/seed-and-nut/dill.html

இப்படி நிறைய தளம்கள்  வெந்தயத்தின் நன்மையை கூவி கூவி சொல்லுகின்றன ஜஸ்டின் இன்னும் அப்டேட் பண்ணவில்லை ஆக்கும் இல்லை ......🤣🤣

இந்த தளங்களில் இருந்து மருத்துவ தகவல்களை அப்டேற் செய்து கொள்ளும் தரத்தில் ஜஸ்ரின் இல்லை! உங்கள் போன்றோர் அப்படி இருப்பது ஆச்சரியமில்லை!😉

On 23/11/2021 at 13:54, ரதி said:

வெந்தயத்தின் பயன்கள் என்று கூகுள் பண்ணிப் பாருங்கோ ...பெரியளவில் அதன் உண்மை தன்மையை நிரூபிக்க மருந்து கம்பெனிகள் விடாது.
பி';கு; யூ  டியூப்பில் எப்படி எல்லாம் உழைக்கிறார்கள் என்று தெரியும் ...நானும் ஒன்று தொடங்கலாமா என்று யோசிக்கிறேன்  
 
கூகிளில் வந்தால் நிச்ச்சயம் உண்மையாகத் தான் இருக்கும் ரதி!😎 எந்த கம்பனிகள் விடாது என்கிறீர்கள்?

(எப்படி மருத்துவ ஆய்வுகள் யாரால் செய்யப் படுகின்றன என்று இரு வருடங்கள் முன்பே தெளிவாக எழுதி விட்டேன். மீண்டும் எழுதி மெனக்கெட முடியாது. எழுதினாலும் திரும்பவும் கள்ளப் பரியாரி சொல்வதைத் தானே நம்புவீர்கள்?😂).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.