Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ்: இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட வைரஸை பரப்பலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • மிஷெல் ராபர்ட்ஸ்
  • சுகாதார செய்தியாளர், பிபிசி இணைய செய்திகள்

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை பரப்புகிறார்களோ, அதே போல இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பரப்புகிறார்கள்.

அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றாலும் அல்லது குறைவான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருந்தால், அவர்களில் ஐந்தில் இரு பகுதியினருக்கு அல்லது 38 சதவீதத்தினருக்கு வைரஸை பரப்புகிறார்கள்.

ஒருவேளை வீட்டில் உள்ள அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தால், இந்த எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக அல்லது 25 சதவீதமாக குறைகிறது.

ஏன் நிறைய மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமென 'தி லேன்செட்' என்கிற மருத்துவ சஞ்சிகை தன் கட்டுரையில் கூறியுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்பதாலேயே அவர்கள் தொற்றை பரப்பமாட்டார்கள் என்று நம்ப முடியாது என அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது.

கொரோனா தடுப்பூசிகள் கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் மரணங்களைத் வெகு சிறப்பாக தவிர்த்துள்ளன. ஆனால் கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில், குறிப்பாக அதிகம் பரவக் கூடிய கொரோனாவின் டெல்டா திரிபுக்குப் பிறகு அத்தனை சிறப்பாக செயல்படவில்லை.

கொரோனா தடுப்பூசி வழங்கும் பாதுகாக்கும் குறையும் தரவு விவரம்
 
படக்குறிப்பு,

கொரோனா தடுப்பூசி வழங்கும் பாதுகாக்கும் குறையும் தரவு விவரம்

மேலும் காலப் போக்கில் கொரோனா தடுப்பூசிகளால் கிடைக்கும் பதுகாப்பும் குறைகிறது, புதிய பூஸ்டர் டோஸ்கள் தேவைப்படுகின்றன.

வீட்டில் குடும்பங்கள் வழியாகத்தான் பெரும்பாலும் கொரோனா தொற்று பரவுகிறது. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சரியாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதில் லண்டன் மற்றும் போல்டன் பகுதியில் உள்ள 440 குடும்பங்களும் சேர்க்கப்பட்டு பி சி ஆர் கொரோனா பரிசோதனை செய்தபோது:

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களோடு ஒப்பிடும் போது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா திரிபு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், குறிப்பிடும் வகையில் உள்ளது. அது வெறுமனே ஒருதொற்று போலத்தான் தெரிகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்றிலிருந்து விரைவாக குணமடைகிறார்கள், ஆனால் அவர்களின் வைரல் லோட், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இணையாகவே உள்ளது.

எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட, வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்ப முடியும் என்பதை இது விளக்குகிறது.

"தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களால் கொரோனா பரவுவதைக் காணும் போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களைத் தாங்களே தொற்றிலிருந்தும், நோயின் தீவிரத்தன்மையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குளிர் காலத்தில் பலரும் வீட்டுக்குள் நிறைய நேரத்தை நெருக்கமாக செலவழிக்க இருக்கும் போது இது அவசியமாகிறது" என ஆய்வை இணைந்து தலைமை தாங்கி நடத்திய லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அஜீத் லால்வானி கூறுகிறார்.

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

"தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். எனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த ஆய்வை இணைந்து நடத்திய இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த அனிகா சிங்கநாயகம் "புதிய கொரோனா திரிபுகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் எங்கள் கண்டுபிடிப்புகள் தடுப்பூசியின் தாக்கம் குறித்த முக்கிய விவரங்களை வழங்குகிறது, அதிகம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடுகளில்கூட, குறிப்பாக உலக அளவில் ஏன் டெல்டா திரிபால் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்கிற விவரங்களை வழங்குகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட, கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பொது சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்ந்து அவசியமாகிறது" என அவர் கூறினார்.

கொரோனா வைரஸ்: இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட வைரஸை பரப்பலாம் - ஆய்வு சொல்வதென்ன? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் இன்னொரு திரியில் ஐஸ்டினுக்கு சொல்ல வந்தேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டருடன் மல்லகட்டாது, அவருக்கு நெருக்கமான, போடமாட்டேன் என்று அடம் பிடிப்பவர் மேல் தாவும்.

இதில் பிரச்சணை, ஊசி போட்டவருக்கு வைரஸ் இருப்பதே தெரியாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதைத் தான் இன்னொரு திரியில் ஐஸ்டினுக்கு சொல்ல வந்தேன் 
 
ஆம், ஜஸ்ரினுக்கு விளங்கியது - ஆனால் ஊசி போடாதவர்கள் போல ஊசி எடுத்துக் கொண்டவர்களால் பரப்ப இயலாது!

ஊசி போடும் வயதில்லாத மகளுக்கு கொரனா வந்து போனது - பிரச்சினைகள் இல்லை: ஊசி போட்ட நானும் மனைவியும் பொசிரிவாக வரவில்லை!

இது தான் சொல்லியிருந்தேன், ஊசி போட்டுக் கொண்டோர் சமூகப் பரவலில் செலுத்தும் பங்களிப்பு மிகக் குறைவு! எனவே, இது ஊசி போட்டுக் கொள்ளாமலிருக்க ஒரு சாட்டு அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நண்பி பைசர் இரு ஊசிகளும் போட்டு கொண்டார்...ஊசி போட்டு இரு மாதத்திற்கு பிறகு குடும்பத்தோட கொரோனா வந்திட்டுது ...என்னை பொறுத்த வரை நோய் எதிர்த்து சக்தியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் வளர்த்து கொண்டால் இப்படியான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

On 17/1/2021 at 18:38, ரதி said:

நெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல்  வெளியே போகலாமா ?

On 17/1/2021 at 19:05, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

இது பற்றி கடந்த ஜனவரியில் இன்னொரு தலைப்பில் எங்கள் கருத்துப்பரிமாற்றமும்.. இந்த தலைப்புக்கு சாலப் பொருந்திச் செல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎-‎10‎-‎2021 at 19:17, nedukkalapoovan said:

இது பற்றி கடந்த ஜனவரியில் இன்னொரு தலைப்பில் எங்கள் கருத்துப்பரிமாற்றமும்.. இந்த தலைப்புக்கு சாலப் பொருந்திச் செல்கிறது. 

நன்றி ...என்னுடைய சந்தேகம் இரு ஊசிகள் போட்டவர்களுக்கும் கொரோனா வரக் கூடிய சந்தர்ப்பம் இருக்கு ...அவர்களும் நோய் காவிகளாய் இருக்க கூடும் ...அப்படி இருக்கும் போது எப்படி சில பொது இடங்களில் ஊசி போட்டதை மட்டும் அடிப்படையாய் வைத்து அனுமதி கொடுக்கிறார்கள்?...அது பிழை அல்லவா ?...அதை விட  டெம்ப்ரேய்ச்சர் செக் பண்ணி உள்ளே விடுவது நல்ல முறை அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

தடுப்பூசி அதன் இயல்பூக்க திறன் குறையாத வரை.. அது தூண்டு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை குறித்த நபர்களுக்கு நோய் தொற்று வந்தாலும் ஆபத்தான சூழலுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு வெகு குறைவு. ஆனால்.. அவர்கள் தனிச்சுகாதாரப் பழக்க வழக்கங்களை துறப்பின்... பெளதீகக் காவிகளாக இருந்து நோய் தொற்றுக்கு கணிசமான பங்களிப்பை செய்து கொண்டே இருப்பர். அது தடுப்பூசி போடாதவர்கள்.. போட்டு அதன் இயல்பூக்கச் செயற்பாடு குறைந்தோரில்.. நோய் பாதிப்பை அதிகப்படுத்தும்.

பைசர்.. அன்ராசெனிக்கா போட்டவர்களில் கூட 6 மாதம் கடந்தால்.. அதன் இயல்பூக்க நோய் எதிர்ப்பு சக்தி.. வெகுவாகக் குறைந்து நோய் தொற்றுக்கு இலக்காகவும்.. நோய் பரப்புகையை கூட்டவும் வகை செய்வார்கள்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்.. உடல்வெப்பநிலை பரிசோதனை.. தனிமனித சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றக் கோருவது.. ஓரளவுக்கு புதிய தொற்றுக்களை மட்டுப்படுத்த உதவலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு இணைந்ததாக. 

  • கருத்துக்கள உறவுகள்

 ஜஸ்ரின் , நெடுக்காலபோவான் எனக்கு ஒரு சந்தேகம் தடுப்பூசி உற்பத்தியில் தற்ப்போது பயன்படுத்தும் கண்ணாடி குப்பிக்குப்பதிலாக (Vials) பிளாஸ்ரிக்கில் (Polyethylene) உற்பத்தி செய்யலாமா? 

இதன் போது ஏற்படும் வெப்பத்தை குளிர்வூட்டலில் ஏறத்தாழ 40 - 50 பாகை செல்சியல் வரை குறைத்து அதனுள்  Viral Vector Vaccines மற்றும் mRNA Vaccines தயாரிக்கமுடியுமா? அப்படி தயாரிக்கும்போது வெப்பம் Vaccines தரத்தை பாதிக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2021 at 05:04, vasee said:

வசி, 

GMP உற்பத்தி முறையில் மனித உடலில் செலுத்தப் படும் மருந்துகளை உருவாக்கும் போது அனேகம் கண்ணாடி தான் பயன்படுத்தப் படுகிறது. கண்ணாடி இலகுவாக தூய்மைப் படுத்தக் கூடியது, மாசுக்களை மருந்தில் கலக்காது என்பதால் இருக்கலாம். அதே நேரம் பொலிஎதிலீன், பொலிப்ரொபைலின் போன்றவையோடு  சில மருந்துப் பொருட்கள் ஒட்டிக் கொள்ளக் கூடியவை - எனவே பிளாஸ்ரிக் தவிர்க்கப் படுகின்றது என நினைக்கிறேன்.

உங்கள் வெப்ப நிலைக் கேள்வி விளங்கவில்லை: வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா அல்லது வெப்பம் அதிகுளிர் நிலைக்குக் குறைந்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா? விளக்கம் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிப்படையாதா? என்பது எனது கேள்வியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2021 at 01:06, Justin said:

வசி, 

GMP உற்பத்தி முறையில் மனித உடலில் செலுத்தப் படும் மருந்துகளை உருவாக்கும் போது அனேகம் கண்ணாடி தான் பயன்படுத்தப் படுகிறது. கண்ணாடி இலகுவாக தூய்மைப் படுத்தக் கூடியது, மாசுக்களை மருந்தில் கலக்காது என்பதால் இருக்கலாம். அதே நேரம் பொலிஎதிலீன், பொலிப்ரொபைலின் போன்றவையோடு  சில மருந்துப் பொருட்கள் ஒட்டிக் கொள்ளக் கூடியவை - எனவே பிளாஸ்ரிக் தவிர்க்கப் படுகின்றது என நினைக்கிறேன்.

உங்கள் வெப்ப நிலைக் கேள்வி விளங்கவில்லை: வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா அல்லது வெப்பம் அதிகுளிர் நிலைக்குக் குறைந்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா? விளக்கம் தேவை. 

பொலிஎதிலீன் குப்பிகளில் உடலினுள் செலுத்தும் மருந்துகளை உற்பட்த்தி செய்யும் ஒரு நிறுவனம் அவர்களது BFS Technology (ஊதி , நிரப்பி, அடைத்தல்) மூலம் ஒரு vector viral vaccine trials செய்துள்ளது

இதன் போது பொலிஎதிலீனை உருக்குவதற்கு குறைந்த பட்சமாக 175 பாகை C பயன்படுத்துகிறது

அனால் அச்சில் பொலிஎதிலினுள் மருந்தினை செலுத்தும் போது பொலிஎத்திலீன் வெப்பம் குறைந்த பட்சம் 40 C ஆக உள்ளது.

இந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் (BFS) vector viral vaccine and mRNA vaccine தயாரிக்க முயற்சிக்கிறது இது சாத்தியப்படுமா?

அதாவது பொலிஎதிலீன் வெப்பம் (40C) மருந்தினை பாதிகாதா?

மத்திய மானில அரசுகளிடம் பணம் பெறுவதற்காக வெறுமனே போலியான முயற்சிகளில் ஈடுபடுகிறார்களா?

அவுஸ்ரேலிய அரசிடமிருந்து கடந்த ஆண்டு ஆவணி மாதமளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பணம் ஏற்கனவே பெற்றிருந்தது இந்த நிறுவனம், தற்போது இந்த ஆண்டு புதிய மானியத்திற்காக விண்ணப்பித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2021 at 19:10, vasee said:

இந்த உற்பத்தி முறையின் தகவல்கள் பற்றி மேலதிகமாகத் தெரியாமல் பதில் சொல்வது கடினம். ஆனால், இது வரை மேற்கில் வெளிவந்த கோவிட் தடுப்பூசிகள் lyophilized powder எனப்படும் திண்மமாகத் தான் பொதி செய்யப் பட்டு , செலுத்தப் படும் இடத்தில் திரவமாகக் கரைக்கப் படுகின்றன. அப்படிக் கரைக்கப் பட்ட மருந்து குளிரூட்டியில் சில மணிநேரங்கள் அழியாமல் இருக்கும். எனவே, சேமித்து வைக்க (<-20 C) அதி குளிரூட்டல் தேவை - ஆனால் சிறிது நேர உயர் வெப்ப நிலை தடுப்பூசியை அழிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.