Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலியாணத்தன்று மழை - Dr. T. கோபிசங்கர்

Featured Replies

கலியாணத்தன்று மழை  

“இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். 

வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும் விளக்கீட்டுக்கு ஒரு பந்தம் வைக்கிறது வழக்கம் . ஊர் வழியவும் தனிக்க கொட்டிலுக்க தான் அம்மி , உரல் ஆட்டுக்கல் எல்லாம் இருக்கும். ஒதுக்கபட்ட வாழ்க்கை சில உயர்திணைக்கு மட்டுமில்லை அஃறினைக்கும் வைச்சது ஏனெண்டு தெரியாது. 

“அம்மி பொழியிறது… கத்தி சாணை “ எண்டு ரோட்டால கத்திக்கொண்டு போனவனைப் பிடிச்சு போன மாசம் தான் அம்மி பொழிஞ்சது. நடுவில பூ design போட்டு பொழிஞ்சு தந்தவன். பொழிஞ்ச அம்மியை ரெண்டு தரம் பழைய தேங்காய்ப்பூ வைச்சு அரைச்சு பொழிஞ்ச தூசு மண் எல்லாம் தேச்சு கழுவோணும் , இருந்தாலும் ரெண்டு நாளைக்கு மண் கடிபடும். 

அம்மியோட குழவியையும் சேத்துத் தான் பொழியிறது. சில குழவிகள் ரெண்டு பக்கமும் முனை மழுங்கி இருக்கும். மற்றதுகள் ஒரு பக்கம் முனை மழுங்கி மற்றப்பக்கம் வட்டமாயும் இருக்கும். குழவியை பிடிச்சு அம்மியின்டை நீளத்துக்கு இழுத்து அரைக்கேக்க ,முதல்ல முழங்கையை நீட்டி குழவியைத் தள்ளி பிறகு நாரியால முன்னுக்கு சரிய குழவியை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு போகும் . 

திருப்பி இழுக்கேக்க இறுக்காமலும் அதேவேளை உருளாமலும் மெல்ல குழவியைப் பிடிச்சி தோள்மூட்டால இழுத்து நாரியை நிமித்த குழவி திருப்பி வர “சம்பல் அரைக்கயில என் மனசை அரைச்சவளே” எண்ட இளையராஜா பாட்டு ஓடும். குழவியை உருட்டி உருட்டி அரைக்கிறேல்லை ஆனாலும் ஒவ்வொரு இழுவைக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாத் திரும்பும் நல்லூர் சப்பறம் மாதிரி.  

வாங்குப்பலகையில குந்திக்கொண்டிருந்து நனையப் போட்ட எட்டு பெரிய செத்த மிளகாயை நடுவில வைச்சு அதோட சிரட்டையில இருக்கிற கல்லு உப்பை சேத்து குழவியை ரெண்டு பக்கமும் பிடிச்சு சத்தம் வாற மாதிர கடகட எண்டு தட்டி மிளகாயை சப்பையாக்கீட்டு மிளகாய் ஊறப்போட்டிருந்த தண்ணீல கையை நனைச்சிட்டு அந்த நுனி விரலால சொட்டிற தண்ணியை அதுக்க மேல விட்டிட்டு நாலு உரிச்ச வெங்காயத்தை வைச்சு நசிச்சுக்கொண்டு இழுத்து அரைக்கத் தொடங்கினன்.

நாலு தரம் கொஞ்சம் இழுத்து அரைக்க மிளகாய் அருவல் நொருவலா வந்திச்சுது. குழவியால நசிக்கேக்க பறந்த வெங்காயத்தை தேடி எடுத்து தண்ணீல அலசீட்டு திருப்பியும் நசிச்சு கருவப்பலையையும் சேத்து அரைச்சு எல்லாம் கலந்து வர அதை எதிர்ப்பக்கமாத் தள்ளிப்போட்டு ,தட்டில இருக்கிற தேங்காய்ப்பூவை தும்பில்லாம எடுத்து நடு அம்மீல வைச்சு மிளகாயோட சேத்து ரெண்டு இழுத்தரைக்க செம்மை வெண்மையை ஆட்கொண்டது.

தேங்காய் பூவை சேத்து அரைக்கேக்க அம்மிக்கும் நோகாம தேங்காய்ப் பூவுக்கும் நோகாம அரைக்க வேணும், இல்லாட்டி சம்பல் குழையலாத்தான் வரும். கடைசீல கொட்டை எடுத்த ரெண்டு பழப்புளியை சேத்து அரைச்சிட்டு குழவி அம்மி எல்லாம் வழிச்சு தட்டில போட்டுக் கொண்டு எழும்ப அண்ணா ரோஸ் பாணோட உள்ள வர, “ அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள்” சந்தர்ப்பம் கூறி விளக்குக எண்டு படிச்சது தான் ஞாபகம் வந்திச்சிது. 

ரொலக்ஸ் பேக்கரீல போடுற அச்சுப் பாண் , ரோஸ் பாண் ( அதுக்கு நீங்க இங்கலீசில என்ன பேர் வைச்சாலும் நமக்கு ரோஸ் பாண் தான்) வெந்து வாற மணம் காலமை alarm அடிச்ச மாதிரி எழுப்பும் . சம்பலை விட்டா பாணுக்கு பழைய மீன் குளம்பு தான் பேரின்ப பெரு வாழ்வைத்தரும். 

“ சீலையை வித்தாவது சீலா வாங்கு எண்டு சொல்லிறவை “ எண்ட மீன் பெட்டிக்காரன்டை கதையைக் கேட்டு , வாங்கிக்கொண்டு வந்து மீன் bag ஐ வீட்டை குடுத்தன். அரிவாளில செதில் சீவி , துண்டறுத்து பிறகு கழுவி எடுத்துக் கொண்டந்து மண்சட்டீல வைக்கிற மீன்குழம்பு அடுத்த நாள் காலமை வரைக்கும் demand இல இருக்கும் . குழம்பின்டை ருசி அரைச்சுப்போடிற தேங்காய் கூட்டில தான் இருக்கு. 

அம்மம்மா ஒரு காலை மடக்கி மற்றதை நீட்டி சுளகில பிடைக்கிற மாதிரி இருந்து தான் அரைப்பா. மீன் குழம்புக்கு கூட்டரைக்குறதில அவ expert. தேங்காயை அரைக்கேக்க மிளகாயத்தூள் உப்புச்சேத்து குழவியை இறுக்கிப் பிடிச்சு தேங்காய்ப்பூவை அமத்தி அரைக்கப் பட்டுப்போல கூட்டு வரும் . 

தேங்காய் அரைச்சு பிறகு மிளகு ,சின்னச்சீரகம் ,உள்ளி எல்லாம் சேத்து அதையும் அரைச்சு எடுத்து வைச்சிட்டுத்தான் குழம்பு வைக்கத் தொடங்கிறது . கப்பிப்பாலில புளிவிட்டு வெங்காயம் ,மிளகாய் உப்புப் போட்டு மண்சட்டீல விட்டு கொதிக்கத் தொடங்க கச்சேரி தொடங்கும் . முதல் கொதியோட மீனையும் அரைச்ச கூட்டையும் போட்டு கடைசீல சீரக உருண்டையைப் போட்டு கொதிக்க விட மீனின் ஆத்மா சாந்தி அடைஞ்சு குழம்போட ஐக்கியமாகும் . 

அவசரத்துக்கு அம்மி உரலாயும் திரிகையாயும் மாறும். கை உரல் வர முதல் ஏலக்காயில இருந்து இஞ்சிவரை நசிச்சோ குத்தியோ போடிறதெண்டா அம்மீல தான் . குழவியை வைச்சு தட்டுப் பெட்டீல பழைய பேப்பரைப் போட்டிட்டு பயறு , உழுந்து கோது உடைக்கிறதும் சில வேளை அம்மீல வைச்சு மாவும் அரைக்கிறது . 

சாமத்திய வீட்டில மொம்பிளைக்கு , குழவியை வைச்சுக்கொண்டு நிக்க விடுறதாம் எண்டு ஆச்சி சொல்லிறவ. ஆலாத்தி முடியும் வரை அதைத் தாங்கிக்கொண்டு நிண்டா நாளைக்கு எதையும் தாங்குவாளாம் எண்டதுக்குத்தான் அப்பிடி எண்டும் சொல்லிறவ. அது பிறகு குடமாகி , பிறகு செம்பாகி இப்ப Make up காரர் குடுக்கிற bouquet ஆக மாறீட்டுது. 

சாமத்தியம் தாண்டி கலியாணத்திலேம் அம்மிக்கு இடம் இருக்கு மிதி படுறதுக்கு . மச்சாளின்டை கலியாண வீடண்டு விடாம மழை பெய்யேக்க , மாமி வருண பகவானுக்கு நேந்து தேங்காய் உடைச்சு வைச்சிட்டு ,” அப்பவும் உனக்குச் சொன்னான் அம்மீல வைச்ச தேங்காய்ப் பூவை எடுத்துச் சாப்பிடாதை எண்டு இப்ப பார் மழை விடமாட்டன் எண்டிது “ எண்டு மச்சாளைப் பேச , அண்டைக்கு நானும் சம்பல் அரைக்கேக் சாப்பட்டதை நெச்சு கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினன் நல்ல வேளை மனிசி அம்மிப்பக்கம் போகாத படியா மழை பெய்யேல்லை.

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எல்லா வீட்டிலயும் நடந்திருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் (டாகடர் )இவ்வளவுக்கு   விளக்கமாக எழுதுவது ஆச்சரியமாக உள்ளது. சமையல் விடயத்தில் டிப்ளோமா எடுத்தவர் போல  அல்லது தாயுடன் அதிக நேரம் சமையலில் ஈடுபடடவர் போல இருக்கிறார். நல்ல அவதானி. இதை அவருக்கு சொல்லி விடவும். சமையலிலும் டாகடர் படடம் கொடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

உடலுழைப்புக்கான சந்தர்ப்பங்களை நவீனங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம்.

  • தொடங்கியவர்
28 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

திருவை  கல் 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

அது இங்கும் விக்கிது நிழலி .......இப்ப அதை வாங்கி பரிசளிப்பதும் ஒரு பேஷனாகிப் போச்சுது.....பொம்பிளைகளும் ரெண்டு நாளைக்கு வச்சு அரைப்பினம் பின்பு அது சாமான்கள் வைக்கிற தட்டுபோலத்தான் பயன்படும்........!   😂

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

நிழலியவர்களே, இணைப்புக்கு நன்றி. உண்மை சுவியவர்களே, எமது வாழ்வியலின் ஒவ்வொரு விடயங்களும் மனிதனது உடல் நலனைப்பேணும் பாங்காக உள்ளமையானது எங்களின் உணவுப் பண்பாட்டின் மேன்மையைக் காட்டுறது. 'அரைச்ச கறி' என்ற கறியை முதல்நாளவித்து வைத்து ஒடியல்புட்டோடு உண்பதும் அதன் சுவையும் எமது தலைமுறையோடு சரியென்றே நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

20211117-085947-1.jpg

9 hours ago, நந்தன் said:

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

ஏக்கம் தலையில் விழாத வரைக்கும் ஓகே  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

ஒருபோதும் கஷ்டங்கள் தானாக வருவதில்லை கந்தையா நாங்களாக தேடிபோனால்தான் உண்டு.....ஒரு கோப்பை பாலுக்கு ஒரு பசுவை வைத்து பராமரிக்கிறதே அதிகம் இதற்குள் இன்னொன்று தேவையா......!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.