Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கிழக்கின் உதயம்'' வெற்றி நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் தொடங்கின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 19-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்]

''கிழக்கின் உதயம்'' வெற்றி நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் தொடங்கின

'' கிழக்கின் உதயம் '' வெற்றி விழா சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8.45 மணியளவில் மகிந்த ராஜபக்ச முப்படைகளின் அணிவகுப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பாடசாலைல மாணவர்கள் தேசிய கீத்தைப் பாட மகிந்த ராஜபக்ச தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த படையினருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் கிழக்கின் உதயம் வெற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வெற்றி நிகழ்வில் சிறீலங்கா அதிபரிடம் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியதற்ககான சாசனத்தை முப்படைத் தளபதிகளும் கையளித்தனர்.

நிகழ்வில் மகிந்த ராஜப்கச உரையாற்றிதோடு படையினரின் அணிவகுப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(2 ஆம் இணைப்பு) மகிந்தவிடம் கிழக்கு வெற்றிப் பட்டயத்தை கையளித்தனர் சிறிலங்கா முப்படைத் தளபதிகள்

[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 10:47 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் "கிழக்கு வெற்றி" பட்டயத்தை சிறிலங்காவின் முப்படைத் தளபதிகள் இன்று வியாழக்கிழமை கையளித்தனர்.

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 8.33 மணிக்கு "கிழக்கு வெற்றி" நாள் நிகழ்வுகள் தொடங்கின. சிறிலங்காவின் தேசியக் கொடியை மகிந்த ராஜபக்ச ஏற்றினார். 50 பாடசாலை சிறுமிகள் சிறிலங்கா தேசிய கீதத்தைப் பாடினர்.

சிறிலங்காவின் இறைமைக்காக உயிரிழந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 8.42 மணி முதல் 2 நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் கிழக்கு வெற்றிப் பட்டயத்தை சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளும் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தனர்.

20070719001rx9.jpg

20070719004ra0.jpg

20070719003vt9.jpg

சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மற்றும் மகிந்தவின் அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

கிழக்கின் வெற்றி குறித்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிறுபான்மை இனத்தை பெருமான்மை இனம் நசுக்குவதாக கூறுகின்றனர். சிறுபான்மை-பெருமான்மை இந்த விடயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நாம் சிறிலங்கா என்ற தேசத்தவர்கள். இது தமிழ், முஸ்லிம் மற்றும் குருமார்களினது ஆகும்.

20070719002te1.jpg

இங்கு சிறிலங்கா என்பதைத் தவிர வேறு எந்த ஒரு தேசமும் இல்லை. கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஈழம் என்பதையெல்லாம் குடும்பிமலையை கைப்பற்றியதன் மூலம் எமது இராணுவத்தினர் நொறுக்கியுள்ளனர்.

நமது நாட்டின் அபிவிருத்தி குறைவான பகுதியாக கிழக்குப் பிரதேசம் உள்ளது.

12 அல்லது 14 வயது சிறுவர்கள் யுத்தத்துக்கான ஆயுதங்களை ஏந்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கண்டிப்பாக முடியாது அல்லவா? வடக்கு - கிழக்கில் அதுதான் நடைபெறுகிறது.

சிறுவர்களிடத்தில் புத்தகங்களுக்குப் பதில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் வெடிகுண்டுகளும் சயனைட் குப்பிகளும்தான் உள்ளன. நாம் அனைவரும் இணைந்து அந்த சிறார்களின் எதிர்காலத்தை கட்டமைப்போம். அனைத்துலக நண்பர்களும் இது தொடர்பில் எமக்கு உதவுவார்கள். நண்பர்களே! நீங்கள் கிழக்குக்கு வாருங்கள்.

கிழக்கில் தொடங்கியிருக்கும் இந்த புதிய சகாப்தத்துக்கு தடை விதிக்கும் வகையில் பொய்யான கோசங்களை எழுப்ப வேண்டாம் என்று அனைத்துலக சமூகம் மற்றும் எமது அரசியல் நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். என்னை விமர்சனம் செய்யுங்கள். நாட்டுக்குத் துரோகம் செய்ய வேண்டாம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது எமது முதல் கடமையாகும். எனது வாழ்க்கையில் எதுவித இரகசியமும் இல்லை. மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். இருப்பினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டையும் குழப்ப வேண்டாம்.

இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் அவர்கள் பெற்றிருக்கிற வெற்றியை குழிதோண்டிப் புதைப்பதாகும். சிலர் மகா சங்கத்தை அவமதிப்பன் மூலம் தங்களது சொந்த குறியீடுகளை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

தொப்பிக்கல ஒரு காட்டுப் பகுதியா? சரணாலயமா? அங்கு நீர்த்தேக்கங்கள் உள்ளனவா? எத்தனை வீடுகள் உள்ளன? எத்தனை ஏக்கரில் எத்தனை மரங்கள் உள்ளன? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். இந்த வெற்றி குறித்து பொறாமைப்படாதீர்கள். இந்த வெற்றியானது நாட்டின் வெற்றி. எனது தனிப்பட்ட வெற்றியானது அல்ல. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட வெற்றி அல்ல. முப்படைத் தளபதிகளின் தனிப்பட்ட வெற்றி அல்ல. இது மக்களின் வெற்றி.

நானோ எனது குடும்பத்தினரோ அவமதிக்கப்படுவது குறித்து கவலைப்படவில்லை. பொறுமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நமது இராணுவத்தை அவமதிக்காதீர்கள்.

வடக்கு - கிழக்கு பிரச்சனைக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநாட்டினூடே தீர்வு காணப்பட ஏண்டும். அதனைத் தாமதிக்க வேண்டாம். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள். இதில் தாமதத்தை ஏற்படுத்தாதீர்கள். வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்களினது அபிலாசைகளுக்கு மதிப்பளித்து அரசியல் அதிகாரத்தில் மேலதிக பங்களிப்பைச் செய்ய உரிய திட்டத்தை உருவாக்குவோம்.

எந்த ஒரு சமூகத்தினருக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல.

தங்களது துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும் சயனைட் குப்பிகளாலும் தமிழ் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தரமுடியாது என்ற உண்மையை தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதாவது ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழ் சிறார்களின் எதிர்காலத்தை விடுதலைப் புலிகள் அழித்து விட்டனர். எமது நாட்டின் சிறார்களின் எதிர்காலத்தை அவர்கள் அழித்துவிட்டனர். தங்களத் சொந்த கலாசாரத்தை அவர்கள் அழித்துவிட்டனர்.

விடுதலைப் புலிகளின் வன்முறைகளுக்கு நான் அடிபணியவும்மாட்டேன். அஞ்சவும் மாட்டேன். அவர்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அதிர்ந்தும் போகமாட்டேன். இந்த நாட்டுக்குச் சேவையாற்றுவதை கடமையாகக் கொண்டுள்ளேன்.

கிழக்கு மக்கள் இப்போது வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். தங்களது அடிப்படை குடி உரிமைகளை கடந்த 15 ஆண்டுகாலமாக அந்த மக்கள் இழந்திருந்தனர். கிழக்கில் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

உள்ளுராட்சி சபைகளிலும் மாகாண சபைகளிலும் தங்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிற இறைமை உரிமையை கிழக்கு மக்களுக்கு நாம் அளித்திருக்கிறோம் என்றார் மகிந்த ராஜபக்ச.

படங்கள்: ரொய்ட்டர்ஸ், ஏ.எஃப்.பி.

புதினம்

ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை தமிழர்கள் நினைவுகூர, சிங்கள அரசு தமிழர்களின் நிலத்தை பறித்தெடுத்த வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் வன்முறை குரலிற்கு நான் அடிப்பணிய போவதில்லை- கிழக்கு உதயம் நிகழ்வில் ஜனாதிபதி

நிஷாந்தி

கிழக்கு உதயம் வெற்றி விழா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றது .கிழக்கு வெற்றி சமாதானத்தை முப்படைகளின் தளபதிகள் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.இதனையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டுமக்களிற்கு உரையாற்றினார்.

இதன் போது இந்த மகத்துவம் மிக்க தினத்தில் நாட்டு மக்கள் மத்திய உரையாற்றக்கிடைத்த அரச தலைவராக இருக்கின்றமைக்க்கண்டு நான் மகிழ்ச்சி படைக்கிறேன். முழு நாட்டிற்கும் பெருமையை பெற்றுக்கொடுத்த இலங்கை வரலாறு எழுதப்படுகின்ற சந்தர்ப்பத்தில் முப்படைதளபதிகளினால் அரசாங்கத்தின் பொறுப்பு தாரரான என்னிடம் ஒப்படைக்கடுகின்ற இந்த செய்திகளினால் குறிப்பிடப்படும் அத்தியாயம் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை.

பல தசப்தங்களாக எமது தாய்நாட்டின் வளம் மிகுந்த கிழக்கு பகுதியும் அங்கு வாழ்ந்த, முஸ்லிம் தமிழ், சிங்கள மக்களின் சுதந்திரத்தை முற்றாக விரட்டி விட்டோம்.என்று கூறுவதை போன்ற ஆறுதலானதும், கௌரவமானதும் செய்தியை இதுவரை நாம் கடந்தகாலத்தில் கேள்விப்படைவில்லை. கொடிய பயங்கரவாதத்தின் பணய கைதிகளாக இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் மக்களின் சுதந்திரத்திற்காக இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துணிச்சலான ,தைரியம் மிக்க நடவடிக்கையின் பெறுமதி இந்த புனித பூமியின் என்ற்மே பாதுகாக்கப்படும் எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் அதனை பேணுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.பயங்கரவாததிர்க

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் ஒருகாலத்தில வடக்கின் உதயத்துக்கும் பட்டயம் குடுத்தவை. பிறகு ஆனையிறவையும் குடுத்தவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் எத்தனைக்காலம் எண்டு பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் பறிகொடுக்க முன் விழாவைக் கொண்டாடாவிட்டால் எப்பவுமே கொண்டாட முடியாமல் போகலாம் என்ற எண்ணத்தில் அவசரமாகக் கொண்டாடுகிறார்கள் என்று விட்டுத்தள்ள வேண்டியதுதானே..

இராணுவ வெற்ற்றியை கொண்டாடுகிறவை சமாதானத்துக்கு சாவு மணி அடிச்சிட்டினம்... இனி சர்வதேசம் புலிகளை உடன்படிக்கைகளை கடுமையா கடைப்பிடியுங்கோ எண்டு சொல்ல மாட்டுது எண்டு நம்பலாம்....!

போராடுகிற இனம் போராடித்தான் உரிமையை மட்டும் இல்லை.. நிலங்களையும் கையகப்படுத்த வேணும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விழாவில் கருணா கலந்துகொள்ளவில்லையா? அல்லது அழைக்கப்படவில்லை?

B)

உதயத்தின் பின் விடிவெள்ளிக்கு என்ன தேவை?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

போர் வெற்றிக் கொண்டாட்டம் !

[19 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

தொப்பிகல பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாகக் கூறும் அரசாங்கம் `கிழக்கு நவோதயம்' என்ற தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை தேசிய ரீதியில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறது. பிரதான வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகராக முப்படைகளின் அணிவகுப்பும் விமானப்படையின் சாகசங்களும் இடம்பெறவிருக்கின்றன.

இந்த வைபவத்தின்போது கிழக்கு கைப்பற்றப்பட்டதை அறிவிக்கும் பிரகடனம் அடங்கிய பத்திரச் சுருளை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி ராஜபக்‌ஷவிடம் கையளித்தபின்னர், ஜனாதிபதி சுதந்திர சதுக்கத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார். போரைப் பொறுத்தவரை ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அடுத்த நகர்வு எத்தகையதாக இருக்கும் என்பதை அறிவதற்கும் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் என்று கூறப்படுபவற்றை அவர் எவ்வாறு கையாள உத்தேசித்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் அவரது உரையை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவத்தினர் 1995 ஆம் ஆண்டில் கைப்பற்றிய பின்னர் அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு அன்றைய ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் கொழும்பு காலி முகத்திடலுக்கு எதிரே அமைந்திருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த வைபவம் இன்று எமது நினைவுக்கு வருகிறது. `யாப்பா பட்டுண'வை விடுதலை செய்ததை அறிவிக்கும் பிரகடனம் அடங்கிய பத்திரச் சுருளை அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை திருமதி குமாரதுங்கவுக்கு கையளித்தபோது எடுக்கப்பட்ட படம் நேற்றைய தினம் கொழும்பு செய்திப் பத்திரிகைகள் சிலவற்றில் பிரசுரமாகியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 12 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்த வைபவத்தை முன்னிட்டு ஜெனரல் ரத்வத்தைக்கு புகழாரங்களைச் சூட்டிய அரசாங்க ஊடகங்கள் அவரை சப்புமால் குமாரய (சப்புமால் இளவரசர்) என்று வர்ணித்தன. கோட்டே இராஜதானிக்காக யாழ்ப்பாணப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சப்புமால் குமாரயவின் உண்மையான பெயர் செண்பகப் பெருமாள் என்றும் அவர் ஒரு தமிழர் என்பதும் சரித்திர உண்மைகள். அது வேறு விடயம். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய `நவீன சப்புமால் குமாரய' தனது செல்வாக்கையும் மதிப்பையும் இழந்து நீண்ட காலமாகிவிட்டது. அவர் அன்று திருமதி குமாரதுங்க சகிதம் கொண்டாடிய வெற்றிக்குப் பிறகு உள்நாட்டுப் போரில் வடமாகாணத்தில் என்னவெல்லாம் நிழ்ந்தது என்பது அண்மைக் காலச் சரித்திரம்.

இன்றைய கொண்டாட்டங்கள் குறித்து ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் அவரது அரசாங்கமும் பெருமைப்படுவதைக் காண்கின்றோம். உண்மையிலேயே கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகள் கண்டிருப்பதாக உரிமை கோரிக் கொண்டிருக்கும் வெற்றி கொண்டாட வேண்டிய ஒன்றா? இத்தகைய கொண்டாட்டங்கள் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வையே காண வேண்டுமென்று தென்னிலங்கையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்ற பேரினவாதச் சக்திகளை வலுப்படுத்தவே உதவும் என்றும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எஞ்சியிருக்கக்கூடிய அக்கறையும் மழுங்கடிக்கப்பட வழிவகுக்கும் என்றும் இவ்வாரம் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தொப்பிகல வெற்றியைக் கொண்டாடும் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் கடந்த 6 மாதகாலத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது பலியான அப்பாவிப் பொதுமக்கள் குறித்து கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்கவில்லையா? மாவிலாறு பிரதேசத்தில் தொடங்கி தொப்பிகல வரை நீடித்த போரின்போது தங்கள் வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அவல வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சொந்த மக்களைப் பற்றி அக்கறைப்படவில்லையா? கொண்டாட்டம் பற்றிய செய்திகள் இந்த மக்களை எந்தளவுக்கு வேதனைப்படுத்தும் என்பதை அரசாங்கத் தலைவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா? போரில் வெற்றிபெற்ற பின்னர் போரின் அநியாயத்தை, போரின் விளைவான மனித அழிவைக் கண்டு மனம்திருந்திய அசோகச் சக்கரவர்த்தி பௌத்த தர்மத்தை போதிப்பதற்கு தனது பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அகிம்சை, சமாதானம், பரிவிரக்கம், அமைதியை போதிக்கும் புத்த பெருமான் தனது மார்க் கம் தளைத்திருக்க வேண்டிய தேசமென்று நம்பியதாக கூறப்படும் இலங்கையில் போரின் வெற்றி கொண் டாடப்படும் விசித்திரத்தைக் காண்கிறோம். அபத்தங்களில் நம்பிக்கை வைத்து அட்டூழியங்கள் தொடருகின்றன!

http://www.thinakkural.com/news/2007/7/19/...l_page31547.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கறுப்புக் கொடி- சிறிலங்கா தேசியக் கொடி ஏற்ற அதிகாரிகள் மறுப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 15:14 ஈழம்] [யாழ். நிருபர்]

சிறிலங்காவின் கிழக்கின் உதயம் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காவின் அரசாங்க தினைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச கட்டிடங்களில் சிறிலங்காவின் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் எந்தவொரு திணைக்களத்திலும் அந்நாட்டுத் தேசியக் கொடிகள் ஏற்றப்படவில்லை.

சில அரசாங்க அதிகாரிகளிடம் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் அழுத்தங்கள் கொடுத்த போதிலும் அதனை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன.

மேலும் வீதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்ததுடன் உந்துருளி அணியினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழக சுற்றாடலிலும் சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய வருடாந்த கொடியேற்ற விழாவுக்குச் சென்ற பொதுமக்களிடத்தில் தெல்லிப்பளை சிறிலங்கா சோதனை நிலையத்தில் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதியவர்கள் மற்றும் பெண்களும் உடற்சோதனை மற்றும் அடையாள அட்டைகள் கையளித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் கடும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் உதயம் என்பது கிழக்கின் விடிவெள்ளி கருணா "அம்மானின்" உபயம் என்றாலும் ஆச்சரியப்படுமளவில் இருக்கல்ல. பாவம்.. கிழக்கு உதயமான போது விடிவெள்ளியை தூக்கி எறிஞ்சதுதான்.. சரியாப்படேல்ல..!

எதுஎப்படியோ அப்பாவி மக்கள் இராணுவ இயந்திரங்களுக்குள் சிக்கி செந்நீர் சிந்துவதும் உணவின்றி அலைவதும்.. மரநிழலில் தூக்கி மாழ்வதுமாவது.. தணியும்.. அதில் திருப்திப்படுவார்கள் மக்கள்..!

ஆக்கிரமிப்பாளனை எதிர்கொள்ள கிழக்கு மக்களை உளவியல் ரீதியில் பலப்படுத்துவது குறித்துச் சிந்திப்பதைத் தவிர.. கிழக்கின் உதயத்தைப் பற்றிப் பேசிப் பலனில்லை..!

ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் கிழிக்கப்படனும் அதுவும் புலிகளின் பெயரால் நடக்கனும் என்ற ஆதங்கம் தான் கிழக்கின் உதயமே அன்றி.. தென் தமிழீழம்.. அதன் இணைப்பை இழந்திடல்ல..!

புலிகளின் பொறுமையே சிங்கள அரசுக்கு இப்ப பெரிய பிரச்சனை..! ஒப்பந்தம் கிழியனும்.. என்பதில அரசுக்கு உள்ள ஆர்வம்.. வடக்கிலும் புலிகளைப் பின்னடைவுக்குள் தள்ளலாம்.. ஆனால் புலிகளின் இறுதி முடிவுகள்... காத்திரமானதாக அமையும்.. என்றும் எதிர்பார்க்கலாம்..!

யாழ் மக்களைப் பாராட்டலாம். இராணுவ ஆக்கிரமிப்பால் தாயகக் கனவை சிதைக்க முடியாது என்பதை சிறீலங்கா தேசியக் கொடிப் புறக்கணிப்பு.. மற்றும் கறுப்புக் கொடி உயர்த்தல் மூலம் மீண்டும் உணர்த்தியுள்ளனர்..!

கிழக்கின் விடிவெள்ளிக்கு காலம் நெருங்குது இனி இவரை வைத்து பாதுகாக்கும் தேவை அரசுக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் இப்போது தன் கைக்கூலி ரணிலைப் பலப்படுத்தி மகிந்தவை விழுத்துவதற்கு முயல்கின்றது. மங்கள சமரவீர ஐதேகாவைச் சாடி, கட்சியை விட்டுப் பிரிந்ததும், இப்போது ஐதேகாவோடு ஒப்பந்தம் செய்யும் அளவிற்குப் போனதும் கூடச் சர்வதேசத்தின் காய்நகர்த்தலின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

எதிர்வரும் காலங்களில் ரணிலை ஆட்சியைப் பிடிக்க வைப்பதற்காக, பிற கட்சிகளில் இருந்து பேரம் பேசப்படலாம். அதனால் தான் மகிந்தர் அவ்வாறு சுதந்திரகட்சியினர் விலை போனால், ஆட்சியைக் கலைத்துத் தேர்தல் நடத்துவேன் என்றார்.

அவ்வாறு ஒரு தேர்தல் நடக்குமானால் சிங்கள மக்களின் தலைவனாக மகிந்தவை அடையாளப்படுத்த வேண்டிய தேவையுண்டு. அதற்குத் தொப்பிக்கல வெற்றி என்பது சிங்கத்தின் வம்சவழியாக சிங்களமக்களிடம் மகிந்தாவைக் காட்டுவதற்கு இவ் வெற்றி என்பது அவசியம்.

இதற்குப் பதிலடியாகப் பொருளாதரரீதியான அழுத்தங்களைக் கொடுத்து மகிந்த மேலே வெறுப்பை ஏற்படுத்த உலகநாடுகள் முயற்சிக்கக் கூடும்.

அப்படி ஆட்சி கைமாறும் நிலை வந்தால் மகிந்த நிச்சயமாக பாராளமன்றை கலைப்பார் அப்படி செய்தால் இன்றைய நிலையில் [சிங்களவரின் மனதில் தொப்பிகல வெற்றி பெரிதாக தெரியுது] தேர்தலில் மகிந்த நிச்சயம் அமோக வெற்றியை பெறுவார்

இப்படியே சிங்கள மக்களை ஏமாற்றி காலத்தைக் களி(ழி)த்துவிடுவார்கள்.

சரியப்பா அவங்களையும் கொண்டாடத்தான் விடுங்கோவன். :huh::lol::(:( வாழ்க்கையில அவங்களும் பிளாஷ்பைக்கை யோசிக்கணும் தானே :P :P இன்னும் எவ்வளவு காலம் ? சரி அப்படியே நீங்களும் ஒருக்கா வேள்வி ஆடுகளை பாருங்கோவன்

mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1//20070718/news_01.wmv

தொடரினை பிரதி செய்து இணைய உலாவியில் புகுத்தி இதனை காண்னுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழாவில் கருணா கலந்துகொள்ளவில்லையா? அல்லது அழைக்கப்படவில்லை?

B)

உதயத்தின் பின் விடிவெள்ளிக்கு என்ன தேவை?

:huh::lol::(

கிழக்கின் உதயம் தெற்கின் அழிவின் ஆரம்பம்????

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச

குடும்பிமலையின் உச்சியில் நின்று பயங்கரவாதத்தின் ஈழக்கனவை சுக்குநூறாக்கி விட்ட செய்தியை எமது சிறிலங்கா இராணுவத்தினர் உலகுக்கு அறிவித்துள்ளனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற "கிழக்கின் உதயம்" நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

இந்த மகத்துவமிக்க நாளில் உங்கள் மத்தியில் உரையாற்றக்கிடைத்த அரச தலைவராக இருப்பதையிட்டு அளவிலா பெருமிதமடைகிறேன். முழு நாட்டுக்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்கா தேசத்தின் மதிப்புமிக்க இராணுவத்தினருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு நான் இந்த கௌரவத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறிலங்கா வரலாறு எழுதப்படும் சந்தர்ப்பத்தில் முப்படை தளபதிகளினால் அரசாங்கத்தின் பொறுப்புதாரரான என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற இந்த செய்தியினால் குறிப்பிடப்படும் அத்தியாயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. பல தசாப்தங்களாக எமது தாய் நாட்டின் வளமிகுந்த கிழக்குப் பகுதியையும் அங்கு வாழ்ந்த சிங்கள - தமிழ் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருந்த கொடூர பயங்கரவாத்தை முற்றாக விரட்டிவிட்டோம் என்று கூறுவதைப் போன்ற ஆறுதலானதும் கௌரவமானதுமான செய்தியை நாம் கடந்த காலத்தில் காணவில்லை.

கொடிய பயங்கரவாதத்தின் பணயக்கைதிகளாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட துணிச்சலான தைரியமான நடவடிக்கைகளின் பெறுமதி இந்த புனித பூமியில் என்றுமே பாதுகாக்கப்படும்.

எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதனை பல நூற்றாண்டுகள் நினைவுகூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகெங்கிலும் உள்ள இராணுவத்தினருக்கு முன்மாதிரியாக இருந்து பொதுமக்களுக்கு ஆகக்குறைந்த சிரமத்தையும் இராணுவத்தினருக்கு குறைவான சேதத்தையும் ஏற்படுத்தி இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றி பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை மிதித்து விட்டது எனக்கூறும் சில விமர்சனங்களைக் கண்டேன். பெரும்பான்மை இனம்; சிறுபான்மை இனம்; என்ற இந்த சொற்பிரயோகங்களைக்கூட நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள். கிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே குடும்பிமலையில் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழி வகுத்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்படுத்திய தோல்வியை வெறுமனே இராணுவ வெற்றியாக மட்டுமே குறிப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் தேசிய அனைத்துலக பெறுபேறும் இந்த வெற்றியினுள் பொதிந்திருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது என்பதை ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது போன்ற அநியாயமான செயலை சிறிலங்காவில் இன்றி உலகில் வேறு எங்குமே நடக்கவில்லை.

இந்த பிரதேச அதிகார மாயையை அம்பலப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக்கனவு சுக்குநூறாகச் செல்லும் செய்தியையே குடும்பிமலை உச்சியில் இருந்து கொண்டு எமது வீரம்மிக்க இராணுவத்தினர் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.

அது மட்டுமா? நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்குப் பகுதி முன்னேற்றமடையாத பிரதேசம் ஒன்றாகவே கருதப்பட்டது. வன்முறையில் சிக்குண்டதனால் வளமிக்க கிழக்கின் தைரியமிக்க மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஊனமுற்றார்கள். அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அவர்கள் அங்கவீனமடைந்தனர். முக்காடு அணிந்த பிள்ளைகளினதும் நெற்றியில் பொட்டு வைத்த தமிழ் பிள்ளைகளினதும் ஏனைய சிங்களப் பிள்ளைகளினதும் கல்வி கற்கும் உரிமையை அவர்கள் பறித்துக்கொண்டனர்.

உங்கள் 12 வயது 14 வயது பிள்ளைகள் ஆயுதங்கள் ஏந்துவதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? உண்மையிலேயே முடியாது. என்றாலும் கிழக்கிலும் வடக்கிலும் இதுதான் யதார்த்தம். புத்தகங்களுக்கும் கலர் பென்சில் பெட்டிகளுக்கும் பதிலாக அவர்களுக்குக் கிடைத்தது விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளும் குண்டுகளும் சயனைட் குப்பிகளும் ஆகும்.

இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பிள்ளைகளின் எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவோம்.

இதற்கு குறிப்பாக எமது அனைத்துலக நண்பர்கள் எமக்கு உதவுவார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அதேபோல் பொய்யான முழக்கங்களை ஏந்திக்கொண்டு கிழக்கின் இந்த உதயத்தைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்திடமும் எமது சில அரசியல்வாதிகளிடமும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எம்மிடம் குறைபாடுகள் இருந்தால் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவற்றை விமர்சனம் செய்து கொள்வோம். மகிந்த ராஜபக்சவை விமர்சனம் செய்தால் பரவாயில்லை. ஆனால் இந்த உன்னதமான நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்.

மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது எமது அடிப்படையான பொறுப்பாகும். நான் எனது காலம் முழுவதும் அதற்காக உறுதியாகச் செயலாற்றினேன் என்பது உங்களுக்கு இரகசியமான விடயமல்ல. எனினும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகவே புரிந்து கொள்ள வேண்டும். இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

அதேபோல் இராணுவத்தினரதைத் தூற்றுவதன் மூலமோ அல்லது அவர்கள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமோ இந்த வெற்றியை மூடிமறைக்கும் முயற்சியை நாம் காண்கிறோம். மகா சங்கத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமது சுயரூபத்தை மறைப்பதற்கான முயற்சிகளையும் நாம் காண்கிறோம்.

குடும்பிமலை ஒரு காட்டுப் பிரதேசமா? சரணாலயமா? அங்கு எத்தனை வாவிகள் இருந்தன? அங்கு எத்தனை வீடுகள் இருந்தன? ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் இருந்தன? போன்ற கேள்விகள் வரைபடக் கலைஞர்களுக்கு மட்டுமே முக்கியமாகின்றது.

தயவு செய்து பொறாமையோடு இதைப் பார்க்க வேண்டாம். இது அரசாங்கத்தின் அல்லது எனது தனிப்பட்ட வெற்றியல்ல.

இது பாதுகாப்புச் செயலாளரினதோ முப்படைத் தளபதிகளினதோ தனிப்பட்ட வெற்றியும் அல்ல. சிலர் அவ்வாறு நினைத்தே பித்துப்பிடித்ததுபோல் உளறுகின்றார்கள்.

இது மக்களின் வெற்றியாகும். அந்நியராக இல்லாமல் வெற்றியின் ஒரு பங்காளராகும்படி எதிர்க்கட்சித் தலைவரையும் நான் கௌரவத்துடன் அழைக்கிறேன். என்னைத் தூற்றினாலும் எனது குடும்ப அங்கத்தவர்களைப் தூற்றினாலும் பரவாயில்லை. அதை நாம் பொறுத்துக்கொள்கின்றோம். ஆனாலும் எமது இராணுவத்தினரைத் தூற்றிப் பரிகசிக்க வேண்டாம். இராணுவத்தினரை குறைத்து மதிப்பிடவும் வேண்டாம். அவர்கள் தமது உடல், உயிர், இரத்தம் என்பவற்றை தியாகம் செய்தே தாய் நாட்டுக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

நாம் அரசியலில் இருந்து விடைபெறும் நாளில் உனது பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்தாய் என்று மனச்சாட்சி எம்மிடம் கேட்கும். காலனித்துவ நாட்டையா? பிளவுபட்ட நாட்டையா?

இல்லை. நாம் எமது பிள்ளைகளுக்கு கௌரவத்துடன் வாழக்கூடிய நாட்டையே பரிசளிப்போம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் மகிழ்ந்து வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வோம்.

அனைத்துக் கட்சி மாநாட்டினூடாக இந்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை ஒருங்கிணைத்து வடக்குää கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை மேலும் தாமதமடையச் செய்ய வேண்டாம். எல்லா அரசியல் கட்சிகளும் தமது ஆலோசனைகளை விரைவாக முன்வைக்கும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றுபட்டு இறுதித்தீர்வுக்கு வாருங்கள்.

தமிழ் பேசும் மக்களை கூடுதலாக அரசியல் அதிகாரத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கு - கிழக்கு மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருக்குமாயின் நாம் அதற்காக பொறுப்புணர்வுடன் செயற்படுவோம்.

தமிழராக அல்லது முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் எவரும் துன்பத்திற்கு ஆளாகக்கூடாது.

அதேபோல் துப்பாக்கிகளின் மூலமோ குண்டுகளின் மூலமோ சயனைட் குப்பிகளின் மூலமோ தமிழ் மக்களின் விடுதலையை ஏற்படுத்திக் கொள்ள இயலாது என்ற யதார்த்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் பாழ்படுத்துகின்றார்கள். நாட்டுப் பிள்ளைகள் அனைவரினதும் எதிர்காலத்தையும் தான். அவர்கள் தமது கலாசாரத்தையும் அழிக்கின்றார்கள். எவ்வளவுதான் பயங்கரமானாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்முறைக் குரலுக்கு நான் அடிபணியவோ அல்லது பயப்படவோ போவதில்லை. அவர்களுடைய கொலை அச்சுறுத்தல்களுக்கும் நான் அசையப்போவதில்லை. நாட்டுக்கான எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற நான் உளப்பூர்வமாக கட்டுப்பட்டுள்ளேன்.

கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்தா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் குடிஉரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்தது போல் சப்தமிடுகின்றனர்.

வாக்குரிமை மட்டுமல்லாமல் மின்சாரம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாடசாலைகள் மருத்துவமனைகள் புதிய கைத்தொழில்கள் போன்ற அனைத்தும் கிழக்கு மாகாணத்தை வளமாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

நிலத்தின் சுதந்திரத்தைப் போல பொருளாதார சுதந்திரமும் முக்கியமானதாகும். இதற்காக விவசாயக் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த துரித வேலைத் திட்டத்தின் மூலமாக இந்த நாடு இழந்த பொருளாதார வளத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

ஜனரஞ்சகமான அரசியல்வாதியாக வரலாற்றில் இணைந்துகொள்ள நாம் விரும்பவில்லை. இந்த நாட்டையும். நாட்டின் எல்லா உயிர்களையும் நாட்டின் எல்லா பசுமைகளையும் நேசித்த பாதுகாவலனாக வரலாற்றில் இடம்பெற்றால் அதுவே எனக்குப் போதுமானதாகும். தேர்தலுக்காக அல்லாமல் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவராக வரலாற்றில் நான் அறிமுகப்படுத்தப்பட்டால் அதுவே நான் பெறுகின்ற உயர்ந்த கௌரவமும் திருப்தியுமாகும்.

தாய் நாட்டை உண்மையாகவே நேசிக்கின்ற மக்களுடைய உறுதிப்பாட்டின் ஓர் அடையாளமாக குடும்பிமலை வெற்றியை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியிலும் நிதானமாக இதற்கு வழங்கிய தைரியத்தை நான் உணர்வுமிக்க நேசத்துடன் மதிக்கின்றேன். வேலைநிறுத்தம் மற்றும் ஏனைய குழப்பங்கள் இன்றி இதை நாம் நிறைவேற்றினோம். இது உங்கள் பொறுமையின் வெற்றியாகும்.

இந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த போராட்டத்தில் முன்னணியில் நின்று தமது பொறுப்பை நிறைவேற்றின. இதற்கு அரசாங்கத்தின் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.

எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் நம்நாட்டின் அப்பாவி மக்கள் பிளவுபடாத தேசத்தை கௌரவமான சமாதானத்தைதான் வேண்டினார்கள். பிரஜைகளே இது உங்கள் வெற்றியாகும்.

அதேபோல் அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக நிபந்தனைகளின்றி செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இச்சந்தர்ப்பத்தில் இந்த வெற்றியின் பங்காளிகள் ஆகின்றார்கள்.

தமிழ் பேசும் எனது அன்பார்ந்த நண்பர்களே

நியாயமான காரணங்களுக்காக இடம்பெறுகின்ற யுத்தத்தை விட உங்களுக்கு சமாதானம் பெறுமதிமிக்கதென்பதை நான் அறிவேன். அது எம்மனைவருக்கும் பெறுமதியானது. நிறைந்த உணவுப்பாத்திரத்தை விட சுதந்திரம் உங்களுக்குப் பெறுமதியானது என நான் உணர்கின்றேன். உங்களிடம் விட்டுச் செல்லப்பட்ட அந்தக் கண்ணீர் நிறைந்த வரலாற்றைப் பற்றி எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனாலேயே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலப் பொறுப்பை நான் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

கிழக்கின் உதயம் கிழக்கிலங்கை மக்களின் அப்பாவி வாழ்க்கையை ஒளிமயப்படுத்தி அந்த ஒளியினூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வரலாற்று ரீதியான சகோதரத்துவமும் தளிர்விட்டு வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இந்த வெற்றியை அண்மைக்கால சிறிலங்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துங்கள்.

எல்லா இனங்களையும் மதங்களையும் சார்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோம் என உறுதிபூணுமாறு உணர்வுபூர்வமாகவும் மிகப் பொறுப்புடனும் நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

- புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு உதயம்' வெற்றி விழாவையொட்டி குடாநாட்டில் சில இடங்களில் சிங்கக்கொடி

கொழும்பில் நேற்று நடைபெற்ற "கிழக்கு உதயம்' வெற்றி விழாவையொட்டி யாழ்ப்பாணத்திலும் சில இடங் களில் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

யாழ்.செயலக முன்றிலில் உள்ள கொடிக் கம்பத்தில் நேற்றுக் காலை 7 மணிக்கு சிங்கக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.அத்துடன் குடாநாட்டில் பிரதான இராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிலும் சிங்கக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

யாழ்.வேம்ப வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தின் முன்பாகவும் சிங்கக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. -உதயன்

கொழும்பில் பாதுகாப்புத் தீவிரம்

"கிழக்கு உதயம்' வெற்றிவிழாவை ஒட்டி நேற்று கொழும்பு நகர் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

நகர வீதியெங்கும் முழத்துக்கு முழம் படையினர் மற் றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வீதி யால் செல்வோர், வருவோரை கடும் சோதனைக்குட் படுத்தினர். வடக்கு, கிழக்கு முகவரி அடையாள அட்டை களை வைத்திருந்தோர் நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.

"கிழக்கு உதயம்' நிகழ்வை ஒட்டி தலைநகரில் பல வீதிகள் நேற்றுக் காலை மூடப்பட்டன. இதனால் சில பிரதான வீதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. -உதயன்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கட்சி முக்கியஸ்தர்களின்றி வெறுமையாக இருந்த ஆசனங்கள் - கிழக்கின் உதயம் -

கிழக்கின் உதயம் எனும் பெயரில் தொப்பிகலை மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திர சேகரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை.

கிழக்கு உதயம் தேசிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படிருந்ததுடன் வெளிநாட்டு தூதுவர்கள் அனைவருக்கும் அழைப்புகள் அனுப்பபட்டிருந்தன.

ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி எம்.பிகளோ இந்நிகழ்வில் பங்கு பற்றவில்லை. வெளிநாட்டு தூதுவர்கள் பெருமளவில் சமூகதந்திருக்கவில்லை. இந்தியா, பாக்கிஸ்தான், மற்றும் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் எவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

அழைக்கப்பட்ட தூதுவர்களுக்கு பதிலாக தூதரகமட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளே பெருமளவில் கலந்து கொண்டனர்.எனினும் ல என்பது அந்நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்கள் வெறுமையாக இருந்ததன் மூலமாக அறிய முடிந்தது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சி தலைவர்களுக்காக பிரத்தியேகமாக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் ஆசனங்களும் வெறுமனே காணப்பட்டன.

இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள

கிழக்கை வலுப்படுத்த உதவுங்கள்

உலக நாடுகளுக்கு ராஜபக்ஷே கோரிக்கை

கொழும்பு: போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றி வலுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை ராணுவம் மீட்டுள்ளது. இதையொட்டி கொழும்பில் ராணுவத்தைப் பாராட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜபக் ஷே, இலங்கையின் கிழக்குப் பகுதி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கை சீரமைக்க உலக நாடுகள் நமக்கு உதவும் என்று நம்புகிறேன். உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

கிழக்குப் பகுதியில் மீண்டும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. அங்கு தேர்தல் நடத்தப்படும்.

கிழக்கில் உதயமாகியுள்ள புதிய விடியலை சீர்குலைக்க யாரும் முயலக் கூடாது. ராணுவத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

உலக நாடுகளின் ராணுவத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இலங்கை ராணுவம் இன்று உயர்ந்து நிற்கிறது.

உண்மை நிலையை உணர்ந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்ளை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். விடுதலைப் புலிகளின் எச்சரிக்கைக்கு நான் பயப்பட மாட்டேன். அவர்களின் மிரட்டல் என்னை ஒன்றும் செய்யாது என்றார் ராஜபக் ஷே. இந்த நிகழ்ச்சியில், ராணுவ அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

-thatstamil-

:D ரொம்ப நாள் இல்லை கிழக்கின் உதயம் தெற்க்கின் அஷ்தமனமாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.