Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

goldstarline.gif

யாராவது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நலம் விசாரிக்கப் போறவர்கள் சொல்வது,

American: Get well soon.

British: Wish you speedy recovery.

Germany: Gute Besserung 

Sri Lankan: இதே நோய் வந்துதான் எங்கட பக்கத்து வீட்டுக்காரனும் செத்தவன்.

goldstarline.gif

  • Like 1
  • Haha 4
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்......
June_ஆரம்பம் ....

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. 
(அவங்க சுத்தமாம்!)

சுத்தம் சுகாதாரம் ஒண்டுமில்லை ராசா! நாங்களும் சேற்றுத்தண்ணியிலை குளிச்சு.....குளத்து தண்ணியை  குடிச்சு வளர்ந்த உடம்பு ராசா இது......பிரச்சனை என்னெண்டால் இங்கத்தையான் மருந்து கலந்த சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சு நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சுது ராசா....என்ன செய்ய? அது சரி உங்கை கடையள்ளை போத்தில் தண்ணி விக்கினமெல்லோ  அது ஆர் குடிக்க ராசா?

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

2) அங்கு இருந்து "toilet tissue" வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)

இருந்த குளிக்கக்கூசை  இடிச்சுப்போட்டு வெஸ்ரேன் ஸ்ரையிலை கக்கூஸ் கட்டுறியளாம்.....ஆருக்கு ராசா வெள்ளைக்காரன் வந்து குந்தவே?

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

தேத்தண்ணிக்கடையிலை போய் வாழைப்பழம் வடையோடை தேத்தண்ணியும் குடிச்சு தம்முக்கு சிகரெட்டும் வாங்கிப்போட்டு கொப்பியிலை எழுதுங்கோ எண்டு சொன்ன காலத்திலையெல்லாம் ராசன் பிறக்கேல்லை போலை கிடக்கு..

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

ஏன் ராசா இதிலை எங்கை பந்தா இருக்குது? இதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையே?

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

உப்பிடிப்பட்டனியள் ஏன் மாட்டு வண்டிலை கைவிட்டனியள்? சைக்கிளை கைவிட்டுட்டு மோட்டசைக்கிளுக்கு ஏன் காசு கேக்கிறியள்! நடந்து போற தூரத்துக்கு ஓட்டோவிலை போறியளாமெல்லே... நாங்கள் முடிந்தளவுக்கு சைக்கிளை பயன்படுத்துறம். அதின்ரை அருமை எங்களுக்குத்தான் தெரியும்...உங்கை சைக்கிள்ளை போனால் மரியாதை இல்லையாமெல்லே...

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

உலகமே வெக்கை கூடீட்டுது எண்டு ஆய்வாளர்மார் கத்துறது ராசனுக்கு கேக்கேல்லை போலஒ கிடக்கு....அது சரி ஏன் இப்ப உங்கை எல்லாரும் வீட்டுக்குவீடு ஏசி பூட்டுறியள்? பந்தாவா? வெக்கையா?

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

உண்மைதான்.....ஒருசில ஆக்கள் இப்பிடியான பந்தாக்கள் காட்டீனம் தான். ஆனால் புலம்பெயர் நாட்டிலையெல்லாம் தமிழ் பள்ளிக்கூடங்கள் நிறையவே இருக்குது  ராசா.....நிறைய பிள்ளைகள் கன சிரமங்களுக்கு மத்தியிலையும் சிரத்தையெடுத்து படிக்கினம் ராசா.....தமிழை படிச்சு நாக்கூத்தையே வளிக்கிறது எண்டு சொல்லுற ஒரு சில சனமும் இருக்குது ராசா..

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

? கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்.........
நம்மகிறுக்குபயபுள்ளைங்க

அவர்கள் எதையும் மறக்கவில்லை....மறுக்கவில்லை அதன் நினைப்பிலையே வாழ்கிறார்கள் எண்டதுக்கு  இதைவிட என்ன உதாரணம் வேணும் ராசா?

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........!

அந்த நிலமையை சொல்லுங்க ராசா....சொல்லுங்க....எப்பிடீன்னு சொல்லுங்க ராசா...காது குளிர கேட்பம்..
 
On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

உங்க பாசையிலை சொல்லப்போனால் நாங்கள் இஞ்சை கக்கூஸ் கழுவின காசிலை உங்கை இருக்கிறவை மோட்டச்சைக்கிள் வாங்கி...வீடுகட்டி...... நடந்து போறதை  கேவலமாய் நினைச்சு ஓட்டோவிலை போறதை பார்த்து பின்பக்கக்கத்தாலை சிரிக்காமல் நாங்களும் கொடுப்புக்குள்ளை தான் சிரிக்கிறம்.

On 5/15/2018 at 1:15 AM, குமாரசாமி said:

தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... :)

இதுவும் தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்:cool:

அது சரி ஏன் ராசா? வெளிநாட்டிலையிருந்து வாற ஆக்கள் சொந்தங்கள்  பந்தங்களுக்கு பிஸ்கட்டும் சொக்லேட்டும் குடுத்தால் மூஞ்சையை நீட்டி நக்கலடிக்கிறியளாம்....அப்ப வேறை ஏதோ எதிர்பாக்கிறியள் போலை கிடக்கு!!!!!!

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Posted

சரியான பதிலடி...

Posted

இன்றுதான் கவனித்தன் எனக்கு பச்சை போடுவதை மீண்டும் தடை பண்ணியிருகிரர்கள் நன்றி குசாமி .

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, spyder12uk said:

இன்றுதான் கவனித்தன் எனக்கு பச்சை போடுவதை மீண்டும் தடை பண்ணியிருகிரர்கள் நன்றி குசாமி .

ஏன் ஸ்பைடர்.....இந்தக் கொலை வெறி?

என்னால் உங்களுக்குப் பச்சை போட முடிகிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

அது சரி ஏன் ராசா? வெளிநாட்டிலையிருந்து வாற ஆக்கள் சொந்தங்கள்  பந்தங்களுக்கு பிஸ்கட்டும் சொக்லேட்டும் குடுத்தால் மூஞ்சையை நீட்டி நக்கலடிக்கிறியளாம்....அப்ப வேறை ஏதோ எதிர்பாக்கிறியள் போலை கிடக்கு!!!!!!

ஒரு அப்பிள்   "ஐ போன்" ,  ஒரு  "லப் ரொப்" கொண்டு வந்து தாறதை   விட்டுட்டு, 
மண்ணாங்கட்டி சொக்லேட்  எங்களுக்கு  வேண்டாம்.   ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, spyder12uk said:

இன்றுதான் கவனித்தன் எனக்கு பச்சை போடுவதை மீண்டும் தடை பண்ணியிருகிரர்கள் நன்றி குசாமி .

ஸ்பைடர்...  மனவருத்தமான செய்தி.  
இன்னும் காலம் கடந்து விடவில்லை. அவ்வப்போது  களத்திற்கு வரும் போது...
பார்வையாளராக இல்லாமல்,  உங்களுக்கு  பிடித்த திரிகளில், உங்கள் கருத்தையும் பதியுங்கள்.
நிச்சயம்   பலன் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, புங்கையூரன் said:

ஏன் ஸ்பைடர்.....இந்தக் கொலை வெறி?

என்னால் உங்களுக்குப் பச்சை போட முடிகிறதே?

புங்கையூரான்.... அவரால், மற்றவர்களுக்கு  பச்சை   போட முடியவில்லை என்று கூறியுள்ளார்.

//யாழ் இணையத் தளத்தை (system) ஏமாற்றும் நோக்கோடு ‘கருத்து’ பதிபவர்களையும் ', 
வெறுமனே விருப்புக் குறிகள் இடுவதற்காக பயன்படுத்தப்படும் பாவனைப் பெயர்களையும் கட்டுப்படுத்தி
தமக்கு தாமே விருப்புப் குறிகள் இடுவதையும்//  தடுப்பதற்காக நிர்வாகம்  சில  நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

விபரங்களுக்கு... கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

விளக்கத்துக்கு நன்றி தலீவா! 

Posted
7 hours ago, தமிழ் சிறி said:

ஸ்பைடர்...  மனவருத்தமான செய்தி.  
இன்னும் காலம் கடந்து விடவில்லை. அவ்வப்போது  களத்திற்கு வரும் போது...
பார்வையாளராக இல்லாமல்,  உங்களுக்கு  பிடித்த திரிகளில், உங்கள் கருத்தையும் பதியுங்கள்.
நிச்சயம்   பலன் கிடைக்கும்.

எங்களுக்கும் நேரம் கிடைக்கணும் பார்ப்பம் அடிக்கடி வர முயல்கிரன் நன்றி ஸ்ரீ  சார் ,புன்கைஊரன் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ட அண்ணர் இணைக்கின்ற கொமடியை விட கொமடி மேலே ஒருத்தர் எழுதி இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போனகிழமை ஒருக்கால் காத்து வாங்க நடப்பமெண்டுட்டு....வாகனங்கள் சந்தடி குறைஞ்ச ரோட்டாய் பாத்து நடந்து போய்க்கொண்டிருந்தன்....அப்ப நினையாய் பிரகாரமாய் கனகாலமாய் எனக்கு தெரிஞ்ச புங்குடுதீவு மைந்தர்  குறுக்காலை வந்தார்.....

உடனை ஜேர்மன் வெதரிலை தொடங்கி ஊர் உலக கதையளை அலசி ஆராய வெளிக்கிட்டு கடைசியிலை அவரவர் குடும்ப சமாச்சாரத்துக்கு வந்தம். அப்ப அவர் தன்ரை மூத்தவங்களுக்கு வயதும் முத்திக்கொண்டு போகுது இன்னும் ஒண்டும் சரிவரேல்லை எண்டார்....அப்ப நான் சொன்னன் எனக்கு தெரிஞ்ச இடத்திலையும் மாப்பிளை தேடிக்கொண்டு திரியினம் கதைச்சு பாக்கட்டோ எண்டன்....அவரும் சந்தோசமாய்  கதைச்சு பாருங்கோவன் எண்டு சொல்லி அப்பிடியே நாங்களும் அவரவர் அலுவலை பாக்க போயிட்டம்.

அடுத்த நாள் எனக்கு தெரிஞ்ச அந்த பொம்புளை வீட்டுக்கு ரெலிபோன் அடிச்சு தேப்பன் காரனோடை சும்மா சுகம் விசாரிக்கிறமாதிரி கலியாண பேச்சு கதையை குடுத்தன்....அவரும் சந்தோசமாய் மாப்பிளையின்ரை இடம்வலம் வேலை எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு.....எதுக்கும் இவவிட்டை குடுக்கிறன் கதையுங்கோ சொல்லி போனும் காப்புக்கையுக்கு மாறிட்டுது......

சொல்லுங்கோ அண்ணை எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ  எண்டு கேட்க நானும் பதிலுக்கு நல்ல சுகமெண்டு சொல்லி கலியாண கதையை தொடக்கினன்......

அவவும் மாப்பிளையின்ரை இடம்வலம் வயது உத்தியோகம் எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு......மாப்பிளையின்ரை ஊரை விசாரிச்சா....நான் புங்குடுதீவு எண்டன்.....

அதுக்கு அவ சொன்னா தாங்கள் பண்ணைப்பாலத்தை தாண்டி அங்காலை போறேல்லையாம்.

#அப்ப போட்ட டிசைன் இன்னும் அழியேல்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இதுக்குப் பேர் தான்.....கொழுப்பு எண்டு சொல்லிறது!

வேணுமெண்டால் தடிப்பு எண்டும் சொல்லலாம்!

அந்த மகள் தான் பாவம்...!

இவ எல்லாத்திலையும் 'குற்றம்' கண்டு கொண்டிருக்க....அங்காலை....குமர் முத்திக் குரங்காகப் போகுது!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புங்கையூரன் said:

இதுக்குப் பேர் தான்.....கொழுப்பு எண்டு சொல்லிறது!

வேணுமெண்டால் தடிப்பு எண்டும் சொல்லலாம்!

அந்த மகள் தான் பாவம்...!

இவ எல்லாத்திலையும் 'குற்றம்' கண்டு கொண்டிருக்க....அங்காலை....குமர் முத்திக் குரங்காகப் போகுது!

கடுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.அது ஏன் தாத்தா அப்படி ஒரு டிசைன் போட்டு வைச்சு இருக்கீனம்...இலங்கையே ஒரு தீவு தானே..??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Murugan Transparent PNG - Lord Murugan PNG

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

No automatic alt text available.

No automatic alt text available.

மலேசிய நாட்டு, "கோலா" விளம்பரம் போலுள்ளது. ?

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

m7d3_zpsrcnxde6x.jpeg

Edited by குமாரசாமி
.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/20/2018 at 6:29 PM, குமாரசாமி said:

குமாரசுவாமி அண்ணை இந்த பிள்ளையளும் 
கறுப்பு  பொட்டுடன் இருக்கிறார்கள் 
வயதும் போகிறது போல இருக்கு..........

எனது குறிப்பை உங்களுக்கு ஈ மெயில் பண்ணவோ ?

எனக்கு பிடிச்ச கடவுள் முருகன்!

முருகனின் கொள்கை வாழ்கை என்று எல்லாம் பிடிக்கும் 

கையோட கம்மார்ஸ் மாதிரி ஒரே செலவுடன் 
அவர்களுக்கும் எல்லாம் முடிந்துவிடும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

32551167_1917999971591081_77092566632612

ஏற்கனவே...கொடுப்புப் பல்லெல்லாம்...கொஞ்சம்...அப்படி...இப்படித் தான்!

நீயும் குடிக்கிறதும் இல்லாமல்....என்னை ஏன் ...இதுக்கிள்ளை இழுக்கிறை ...தம்பி! 

அன்புள்ள அப்பா.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Maruthankerny said:

குமாரசுவாமி அண்ணை இந்த பிள்ளையளும் 
கறுப்பு  பொட்டுடன் இருக்கிறார்கள் 
வயதும் போகிறது போல இருக்கு..........

எனது குறிப்பை உங்களுக்கு ஈ மெயில் பண்ணவோ ?

எனக்கு பிடிச்ச கடவுள் முருகன்!

முருகனின் கொள்கை வாழ்கை என்று எல்லாம் பிடிக்கும் 

கையோட கம்மார்ஸ் மாதிரி ஒரே செலவுடன் 
அவர்களுக்கும் எல்லாம் முடிந்துவிடும். 

தம்பி! ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்....:99_muscle:

முதலாவதாய் குறிப்பை அனுப்பும்.....

அடுத்தது  நீங்கள் எந்தநாட்டு சிற்றிசன் எண்டது வலு முக்கியம்..... :104_point_left:

மற்றது வேலை சம்பளப்பட்டியல் கட்டாயம் வேணும்....:101_point_up:

நீங்கள் வைச்சிருக்கிற கார் வீடு கவனத்தில் எடுக்கப்படும். :322_star:

எயிட்ஸ் இல்லையெண்ட சேட்டீக்கர் கட்டாயம் வேணும்......:13_upside_down:

ஆனந்தராஜ் மாதிரி இல்லாமல் அரவிந்தசாமி மாதிரி இருந்தால் வரவேற்கத்தக்கது....:18_kissing_heart:

ஊரிலை உங்கடை மூதாதையர்ரை  ஊர் பேர் கட்டாயம் வேணும்....:223_speak_no_evil:

அப்பதான் நீங்கள் என்ன சாதியெண்டதை கண்டுபிடிக்க லேசாய் இருக்கும்.:336_zap:

இப்ப எல்லாரும் கார்த்தி,வினோத்,துசாந்த்,சாருக்,சஞ்சேய்,சிந்துசன் எண்டு பேர் வைச்சு எங்களை பேப்பட்டம் கட்டேலாது. :324_dizzy:

இன்னுமொண்டு தம்பி! உங்கடை சகோதர சகோதரிகள் எங்கை முடிச்சவை எண்ட விபரத்தையும் தந்தியளெண்டால் வசதியாய் இருக்கும்.:77_alien:

நிற்க.....:97_raised_hand:

ஒரு ரேமின் வைச்சு பிள்ளை உங்களோடை தனிய இருந்து கோப்பி குடிக்கிற சாட்டிலை உங்களை இன்ரவியூ வைக்கும்.....?  :116_eye::114_ear: 

அதுக்கு நீங்கள் டான்...டான் எண்டு பதில் சொல்ல வேணும். ?

அதுக்குப்பிறது உங்கடை கான் போனுக்கு எஸ் எம் எஸ்லிலை ஓமோ இல்லையோ எண்டு பதில் சொல்லுவம்......?

ஓகேயா? :cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவில இருந்தாலென்ன....அண்டார்டிக்காவில இருந்தாலென்ன!

தமிழன் ...எப்பவுமே.....தமிழன் தான்!

மாறவே மாட்டான்! :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

தம்பி! ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்....:99_muscle:

முதலாவதாய் குறிப்பை அனுப்பும்.....

அடுத்தது  நீங்கள் எந்தநாட்டு சிற்றிசன் எண்டது வலு முக்கியம்..... :104_point_left:

மற்றது வேலை சம்பளப்பட்டியல் கட்டாயம் வேணும்....:101_point_up:

நீங்கள் வைச்சிருக்கிற கார் வீடு கவனத்தில் எடுக்கப்படும். :322_star:

எயிட்ஸ் இல்லையெண்ட சேட்டீக்கர் கட்டாயம் வேணும்......:13_upside_down:

ஆனந்தராஜ் மாதிரி இல்லாமல் அரவிந்தசாமி மாதிரி இருந்தால் வரவேற்கத்தக்கது....:18_kissing_heart:

ஊரிலை உங்கடை மூதாதையர்ரை  ஊர் பேர் கட்டாயம் வேணும்....:223_speak_no_evil:

அப்பதான் நீங்கள் என்ன சாதியெண்டதை கண்டுபிடிக்க லேசாய் இருக்கும்.:336_zap:

இப்ப எல்லாரும் கார்த்தி,வினோத்,துசாந்த்,சாருக்,சஞ்சேய்,சிந்துசன் எண்டு பேர் வைச்சு எங்களை பேப்பட்டம் கட்டேலாது. :324_dizzy:

இன்னுமொண்டு தம்பி! உங்கடை சகோதர சகோதரிகள் எங்கை முடிச்சவை எண்ட விபரத்தையும் தந்தியளெண்டால் வசதியாய் இருக்கும்.:77_alien:

நிற்க.....:97_raised_hand:

ஒரு ரேமின் வைச்சு பிள்ளை உங்களோடை தனிய இருந்து கோப்பி குடிக்கிற சாட்டிலை உங்களை இன்ரவியூ வைக்கும்.....?  :116_eye::114_ear: 

அதுக்கு நீங்கள் டான்...டான் எண்டு பதில் சொல்ல வேணும். ?

அதுக்குப்பிறது உங்கடை கான் போனுக்கு எஸ் எம் எஸ்லிலை ஓமோ இல்லையோ எண்டு பதில் சொல்லுவம்......?

ஓகேயா? :cool:

அதுக்குதானே குறிப்பை அனுப்புகிறேன் 
குறிப்பில் உயர்வாய் இருப்பமோ தாழ்ந்து இருப்பமோ 
குதிரையாக பாய்வோமோ என்று எல்லா விபரமும் இருக்கும்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, standing, tree and outdoor

ஹ்ம்ம்... பார்க்க, வாயூறுது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.