Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அமெரிக்கா, இந்தியா, மேற்கு நாடுகள் அளுத்தத்தில் இலங்கை ஒரு தீர்வை தர தள்ளப்படுதல்.

இந்த நாடுகள் விரும்பினால் அல்லது நினைத்தால் இலங்கையில் இலகுவாக ஒரு தீர்வு உருவாகும் ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்   மேலும் நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் எதாயினுமென்று. இலங்கையில் தமிழர்களுக்குத் இலங்கையரசு பூரண சுயாட்சி கொடுக்கத் தவறினால் இலங்கைத்தமிழரின். விடுதலையை. நாங்கள் ஆதரிப்போம் ...அங்கீரிப்போம். என்று பகிங்கரமாக அறிவிப்பு செய்வார்களா?[உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்யவேண்டியதில்லை ]ஒரு வெருட்டு மட்டுமே...இது கூட செய்யமாட்டார்கள். 

  • Replies 152
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

காலம் முழுதும் பழி சுமப்பவர்களாக வாழ நேரிடும். வரலாற்றுப்பிழை செய்தோராக வரலாற்றில் எழுதப்படுவோம்.

வரலாற்றுப்பிழை. இது தமிழனோடு கூடிப்பிறந்திருப்பது. இது அன்றும் கூடியிருந்தது, இன்றும் கூடியிருக்கிறது, இனியும் கூடியிருக்கும். 😲

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இந்த நாடுகள் விரும்பினால் அல்லது நினைத்தால் இலங்கையில் இலகுவாக ஒரு தீர்வு உருவாகும் ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்   மேலும் நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் எதாயினுமென்று. இலங்கையில் தமிழர்களுக்குத் இலங்கையரசு பூரண சுயாட்சி கொடுக்கத் தவறினால் இலங்கைத்தமிழரின். விடுதலையை. நாங்கள் ஆதரிப்போம் ...அங்கீரிப்போம். என்று பகிங்கரமாக அறிவிப்பு செய்வார்களா?[உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்யவேண்டியதில்லை ]ஒரு வெருட்டு மட்டுமே...இது கூட செய்யமாட்டார்கள். 

இதுதான் நிலமை.

இருக்கும் ஒரே ஒரு ஓரளவு நடக்க கூடிய வழியான இந்திய+மேற்குலக அழுத்தம் கூட இப்படி ஒரு அரைகுறை வழியாகவே இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் நலந்தான் முக்கியம். எமது சுயாட்சி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

போராடத்தின் ஆரம்பத்தில் இப்படி நடந்து கொண்டதில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்தான் - 90 க்கு பின் ஒரு நிழல் அரசாக மாறிய பின் அவர்களை அணிசாரா நிலைக்கு இட்டு சென்றது.

வரலாற்றில் இருந்து பாடம் படித்து தமது கொள்கையை புலிகள் செம்மை செய்தமைக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

அவசரப்பட்டு தவறான கருத்தை பதிவது... பிறகு உருட்டுவது.....

இது தானே வாடிக்கை....

புலிகள் அணிசேர்ந்ததாலே, சில நன்மைகளையும், கூடவே சில தீமைகளையும் அனுபவித்தார்கள்....

இந்திய ராணுவத்துடன் மோதல், ராஜீவ் கொலை... பின்..... அங்கே, யாருமே... இவர்களை அணுகக்கூடிய, இவர்கள் யாரையுமே  அணுகக்கூடிய அரசியல் சூழல் 2009 இறுதிவரை இருக்கவில்லை.

1990 க்கு பின்னர், நடுநிலைமை பேணிணார்கள் என்று அடித்து விடுவது தவறு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதுதான் நிலமை.

இருக்கும் ஒரே ஒரு ஓரளவு நடக்க கூடிய வழியான இந்திய+மேற்குலக அழுத்தம் கூட இப்படி ஒரு அரைகுறை வழியாகவே இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் நலந்தான் முக்கியம். எமது சுயாட்சி அல்ல.

தலைவனாகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபோது சுயாட்சிக்கான அழுத்தங்களை ஒரு சில நாடுகளும், நாடுகளின் மாகாணங்களும் கொடுத்தது வெளிப்படை. ஏன்! பிரேமதாச சநாதிபதியாக இருந்தபோது வடமாகாணத்தை மட்டும் கொடுக்க முன்வந்தார். அச்சமயங்களில் கொடுப்பதை வாங்கிக்கொள்ள தமிழினத்துக்கு ஒரு தலைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இன்று கொடுப்பதை வாங்கிக்கொள்ள எவர் உள்ளனர்? யாரிடம் கொடுப்பது.??   

Edited by Paanch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Paanch said:

தலைவனாகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபோது சுயாட்சிக்கான அழுத்தங்களை ஒரு சில நாடுகளும், நாடுகளின் மாகாணங்களும் கொடுத்தது வெளிப்படை. ஏன்! பிரேமதாச சநாதிபதியாக இருந்தபோது வடமாகாணத்தை மட்டும் கொடுக்க முன்வந்தார். அச்சமயங்களில் கொடுப்பதை வாங்கிக்கொள்ள தமிழினத்துக்கு ஒரு தலைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இன்று கொடுப்பதை வாங்கிக்கொள்ள எவர் உள்ளனர்? யாரிடம் கொடுப்பது.??   

நாடு சிறந்து பளபளக்க  சுமந்திரனை பரிந்துரை செய்கின்றேன் 😎

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Paanch said:

உண்மை ஆனால் அப்போது கூட அவர்கள் எல்லாரும் என்ன தரவந்தாலும் அது நமக்கு நல்ல தலைவன் இருக்கிறாரா, நமக்கு எது நல்லது என்பதை விட தமக்கு எது நல்லது என்பதிலேயே தங்கி இருந்தது.

தலைவர் பலமாக இருந்தார் - ஆகவே அவரை கூட வைத்திருக்க விரும்பினார்கள். 

இப்போ யாரும் அப்படி இல்லை. ஆகவே பாராமுகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அவசரப்பட்டு தவறான கருத்தை பதிவது... பிறகு உருட்டுவது.....

இது தானே வாடிக்கை....

புலிகள் அணிசேர்ந்ததாலே, சில நன்மைகளையும், கூடவே சில தீமைகளையும் அனுபவித்தார்கள்....

இந்திய ராணுவத்துடன் மோதல், ராஜீவ் கொலை... பின்..... அங்கே, யாருமே... இவர்களை அணுகக்கூடிய, இவர்கள் யாரையுமே  அணுகக்கூடிய அரசியல் சூழல் 2009 இறுதிவரை இருக்கவில்லை.

1990 க்கு பின்னர், நடுநிலைமை பேணிணார்கள் என்று அடித்து விடுவது தவறு.

விடுதலை புலிகள் 1987 இற்கு பின் தமிழக அரசியல் சம்பந்தமாக equidistance பேணினார்கள் என்பது வெளிப்படை.

இதற்கு 87 க்கு முன் அவர்கள் எடுத்த் நிலையில் இருந்த பெற்ற பாடங்களே காரணம்.

வைகோ பிரிவின் போது கருணாநிதி புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என நாடகம் ஆடிய போது கூட, வைகோவின் பக்கம் நிலை எடுத்து புலிகள் கருணாநிதியை விமர்சிக்கவில்லை.

இதெல்லாம் விடயத்தை கவனிப்பவர்களுக்கு புரியும்.

2014 இல் தமிழக காங்கிரஸ் எம்பிகள் எத்தனை திமுக எம்பிகள் எத்தனை என அரிவரி கணக்கு கூட தெரியாத கத்து குட்டிகளுக்கு விளங்காது🤣.

43 minutes ago, குமாரசாமி said:

நாடு சிறந்து பளபளக்க  சுமந்திரனை பரிந்துரை செய்கின்றேன் 😎

🤣 முந்தி ஊரில எவர் சில்வர் கழுவ தேங்காய் husk (தமிழில எழுதினால் அர்த்தம் மாறிப்போகும்🤣. பொ…..) பாவிக்கிறனாங்கள். 

இவரும் அதுவோ?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

🤣 முந்தி ஊரில எவர் சில்வர் கழுவ தேங்காய் husk (தமிழில எழுதினால் அர்த்தம் மாறிப்போகும்🤣. பொ…..) பாவிக்கிறனாங்கள். 

இவரும் அதுவோ?

 husk எண்டு கூகிள்லை தேட இதுதான் வருது.......எண்டாலும் உது பக்கவிளைவில்லாத பரிசுத்தமான  பொருள் எல்லோ 😂

Aishwarya Traders Coconut Coir Husk, Packaging Type: Sack Bag

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இதுதான் நிலமை.

இருக்கும் ஒரே ஒரு ஓரளவு நடக்க கூடிய வழியான இந்திய+மேற்குலக அழுத்தம் கூட இப்படி ஒரு அரைகுறை வழியாகவே இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் நலந்தான் முக்கியம். எமது சுயாட்சி அல்ல.

சிங்களவன். இலங்கை தமிழருக்கு ஒரு உறுதியான தீர்வு தர பின்நிற்பதற்க்கான காரணங்களில் முக்கியமானது எமக்கு பக்கத்தில் தமிழ்நாடு இருப்பதாகும்.    இலங்கை தமிழருக்கு பூரண சுயாட்சி கிடைக்க தடையாக இருக்கும் ஒரே நாடு இந்தியா ஆகும்  

இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்களால். பலம் வாய்த்த எதிர்கட்சியாக வர முடியாது   ஆட்சியிலும் பலமிக்க தரப்பாக வர முடியாது காரணம் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 40 மட்டுமே  இந்த 40இலும்  இரண்டு மூன்று பிரிவுகள் உண்டு   இலங்கை தமிழரைப் பொறுத்தவரை...வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு    முஸ்லீம்   என்ற வேறுபாடுகளின்றி இலங்கை தமிழர் என்று ஒரே அணியில் நிற்போமாயின்   பலமிக்க எதிர்கட்சியாகவும.....ஆட்சியில் பலமிக்க தரப்பாகவும். வர முடியும்   அப்படி வர முயற்சிப்பது தான் ஒரு தீர்வை கண்டடைய சிறந்த வழியாகும் 

8 minutes ago, Kandiah57 said:

  இலங்கை தமிழரைப் பொறுத்தவரை...வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு    முஸ்லீம்   என்ற வேறுபாடுகளின்றி இலங்கை தமிழர் என்று ஒரே அணியில் நிற்போமாயின்   பலமிக்க எதிர்கட்சியாகவும.....ஆட்சியில் பலமிக்க தரப்பாகவும். வர முடியும்   அப்படி வர முயற்சிப்பது தான் ஒரு தீர்வை கண்டடைய சிறந்த வழியாகும் 

நீங்கள் கூறிய விடயம் சிந்திக்க தக்கது. வரவேற்கத்தக்க கருத்து

இதனை 1950 களில் மிக இலகுவாக செய்திருக்க கூடிய சாத்தியம் இருந்தது. இனி செய்வது  சவால்கள் நிறைந்தது. ஆனால் செய்ய முடியாதது இல்லை. நிச்சயமாக காலம் எடுக்கும். அதை செய்யும் மனப்பாங்கில் எமது மக்களோ அரசியல்வாதிகளோ அரசியல் ரீதியில் வளர்தெடுக்கப்படவில்லை. முக்கியமாக எமது யாழ் மக்களின் மனநிலை எப்போதும் வித்தியாசமானது.  இவ்வாறான பலதரப்பட மக்களை இணைத்து ஒரு தேசியத்தை கட்டியெழுப்ப பாரிய தடைகளை கொண்ட  மனப்பாங்கை தம்முள் கொண்ட சமுதாயம். @goshan_che போன்ற ஆழமாக சிந்கதிக்கும் ஆற்றல் கொண்ட கருத்தாளர்கள் இது தொடர்பாக சிறந்த விளக்கத்தை கொடுக்க முடியும்.

 ஆனால் இதை முயன்று பார்ப்பதில் தவறில்லை என்பது எனது எண்ணம்.  

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் அரசியல் ரீதியாகத் தமிழர் சாதித்தது என்ன? திட்டல், வசைவு, உடைப்பு இப்படி நீண்டபட்டியல் உண்டு.  இதற்குள்ளால் சிங்களம் சுழித்தோடித் தன்னை அனைத்துலகின் தடைகளை உடைக்கும் சக்தியாக மாற்றிவருகிறது. அதன் அறுவடையை எதிர்வரும் மார்ச் மாத மனித உரிமைச் சபை நடவடிக்கையிலே அறியலாம். ஆனால் நாமோ நமக்கு நாமே நாமம்தான். 

22 hours ago, Kandiah57 said:

ஏன் முடியாது  ?சிங்களவன் விரும்பினால்    முடியும்.எங்களுக்கு உரிய தீர்வு தமிழ்நாடு மாநிலம் போன்றது இல்லை.  மேலும் இவர்களை நம்பினால் தீர்வு ஒருபோதும் கிடையாது 

சிங்களம் விரும்பாதென்பது பட்டறிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சிங்களவன். இலங்கை தமிழருக்கு ஒரு உறுதியான தீர்வு தர பின்நிற்பதற்க்கான காரணங்களில் முக்கியமானது எமக்கு பக்கத்தில் தமிழ்நாடு இருப்பதாகும்.    இலங்கை தமிழருக்கு பூரண சுயாட்சி கிடைக்க தடையாக இருக்கும் ஒரே நாடு இந்தியா ஆகும்  

இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்களால். பலம் வாய்த்த எதிர்கட்சியாக வர முடியாது   ஆட்சியிலும் பலமிக்க தரப்பாக வர முடியாது காரணம் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 40 மட்டுமே  இந்த 40இலும்  இரண்டு மூன்று பிரிவுகள் உண்டு   இலங்கை தமிழரைப் பொறுத்தவரை...வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு    முஸ்லீம்   என்ற வேறுபாடுகளின்றி இலங்கை தமிழர் என்று ஒரே அணியில் நிற்போமாயின்   பலமிக்க எதிர்கட்சியாகவும.....ஆட்சியில் பலமிக்க தரப்பாகவும். வர முடியும்   அப்படி வர முயற்சிப்பது தான் ஒரு தீர்வை கண்டடைய சிறந்த வழியாகும் 

அண்ணை இதில் 2 விடயங்களை சொல்கிறீர்கள்.

1. தமிழ் நாடு பக்கத்தில் இருப்பதால் இலங்கை தீர்வை தர பின்னிற்பதாக. இதை முற்றாக மறுக்கவில்லை. ஆனால் சிங்கள-பெளத்த மகாவம்ச மனோநிலை இதற்கும் மேலானது.

பறங்கியரை ஏன் ஒதுக்கி அவுஸ்ரேலியாவுக்கு ஓட்டினார்கள்?

முஸ்லீம்களை ஏன் ஒதுக்குகிறார்கள்?

அவர்களுக்கு அருகே தமிழகம் போல் ஒரு நாடில்லையே?

நிச்சயமாக வரலாற்றில் நிகழ்ந்தவை, முன்னைய தமிழக ஆளுமை அவர்களின் மனோ நிலையில் ஒரு பகுதி.

ஆனால் தீவின் ஒவ்வொரு அங்குலமும் தமது என்பதும், தமிழர்கள் அதில் ஒரு பகுதியை அடாத்தாக பிடித்துள்ளார்கள், ஆகவே அவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல என்பது மிக பெரும்பான்மையான சாதாரண சிங்கள குடி மகனின் மனோநிலை.

இந்த மனோ நிலை மாறாமல் - அவர்களாக தீர்வு தர சாத்தியம் இல்லை.

இதை மாற்ற நாம் முயலலாம். முயல வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள மக்களிடம் விழிபுணர்வை அவர்கள் மொழியில் ஏற்படுத்த வேண்டும். ஆனால் இது நடக்க பல காலம் எடுக்கலாம்.

அதற்குள் இப்போ இருக்கும் நிலையை தொடர விட்டால். நிலமும் சனதொகை பரம்பலும் முற்றாக மாறி விட்டிருக்கும்.

2. தமிழர்கள் மட்டும் அல்ல - ஒட்டு மொத்த தமிழ், முஸ்லீம் சிறுபான்மை ஒன்று சேர்ந்தாலுமே - சிஙகள வாக்குகள் மறுபக்கம் போய் குவிந்து விடும். 77 இல் அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவர். இலங்கை பாராளுமன்றில் கூட்டணியே 2வது கட்சி.  ஆனால் 78 யாப்பு, குடியேற்றம், கலவரம் எதை தன்னும் இந்த பலமான நிலையை கொண்டு கூட்டணியால் தவிர்க்க முடிந்ததா?

மயித்யிரி நல்லாட்சி அரசு கூட இப்படித்தான். சில பொதுவான சிறிய நல்ல விடயங்களை ( முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்) செய்ய விட்டார்கள் என அடுத்த தேர்தலில் எல்லா சிங்கள மக்களும் கோட்டாவுக்கு போட்டார்கள்.

இதுதான் இலங்கயின் உள்ளே ஒரு தீர்வை பெற முடியாமைக்கு காரணம்.

அப்படியே ஒருவர் தீர்வை தந்தாலும், அடுத்த தேர்தலில் அதை இல்லாது ஒழிப்பேன் என சொல்பவர் வந்து அதை ஒழிப்பார். அல்லது வட கிழக்கு இணைப்பை போல நீதி மன்றம் தலையிடும்.

ஆகவே வெளி அழுத்தம், உத்தரவாதம் இல்லாமல் இலங்கையில் ஒரு தீர்வு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு சாத்தியமில்லை என்பது என் நிலைபாடு.

3. எமக்கு இப்போ அவசரத்தேவை எமது நிலத்தின் மக்கட் வகுப்பை (demography) பேணுவது. அதுக்கு காணி அதிகாரம் தேவை. என்னை கேட்டால் இந்தியாவை திறமையாக கையாண்டு, தமிழ்நாட்டில் எதிரிகளை உருவாக்காமல் எல்லாரையும் பயன்படுத்தி, காணி அதிகாரம் மட்டுமாவது உள்ள ஒரு தீர்வை இப்போதைக்கு நாம் அடைய வேண்டும். 

ஏனையவற்றை வரும் சந்ததிகள் பார்க்கட்டும் என விடலாம். ஆனால் இப்படி ஒரு காணி உரிமையுள்ள தீர்வு அவசரமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் நிலமும், குடிபரம்பலும் இல்லை என்றாகி விட்டால் அடுத்த சந்ததிகளுக்கே போராட தேவையோ, காரணமோ இராது.

1 hour ago, tulpen said:

நீங்கள் கூறிய விடயம் சிந்திக்க தக்கது. வரவேற்கத்தக்க கருத்து

இதனை 1950 களில் மிக இலகுவாக செய்திருக்க கூடிய சாத்தியம் இருந்தது. இனி செய்வது  சவால்கள் நிறைந்தது. ஆனால் செய்ய முடியாதது இல்லை. நிச்சயமாக காலம் எடுக்கும். அதை செய்யும் மனப்பாங்கில் எமது மக்களோ அரசியல்வாதிகளோ அரசியல் ரீதியில் வளர்தெடுக்கப்படவில்லை. முக்கியமாக எமது யாழ் மக்களின் மனநிலை எப்போதும் வித்தியாசமானது.  இவ்வாறான பலதரப்பட மக்களை இணைத்து ஒரு தேசியத்தை கட்டியெழுப்ப பாரிய தடைகளை கொண்ட  மனப்பாங்கை தம்முள் கொண்ட சமுதாயம். @goshan_che போன்ற ஆழமாக சிந்கதிக்கும் ஆற்றல் கொண்ட கருத்தாளர்கள் இது தொடர்பாக சிறந்த விளக்கத்தை கொடுக்க முடியும்.

 ஆனால் இதை முயன்று பார்ப்பதில் தவறில்லை என்பது எனது எண்ணம்.  

9 minutes ago, nochchi said:

சிங்களம் விரும்பாதென்பது பட்டறிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kandiah57 said:

இருக்கலாம்   நடந்து கொண்ட முறை பிழை   எந்தச்சுழ்நிலையிலும். தனது தனித்தன்மையை. விட்டுகொடுத்திருக்கக்கூடாது   குறைந்த பட்சம்  இலங்கை தமிழருக்கு பூரண மாநில சுயாட்சி கொடு என்று சொல்லியிருக்க வேண்டும் சொன்னரா?இல்லையோ      மட்டுமல்ல நீ. உன் நண்பனுடன் இருந்தால்  நீயும் போய் சேர்த்து இருப்பாய். என்ற போது     நகைத்து விட்டு வந்தரே. தேவையா?தமிழகத்தில் இருந்து இருக்கலாம் 

நீங்கள் கூறுவது சரி. ஆனால் அவர் சென்றது இந்தியத் தரப்பின் பிரதிநிகள் குழுவாக என்பதை மனம்கொள்ள வேண்டும். அவர்சென்றதே தவறென்று வருத்தும்போது தொடர்ந்து அது தொடர்பில் நாம் சுட்ட வேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆகவே வெளி அழுத்தம், உத்தரவாதம் இல்லாமல் இலங்கையில் ஒரு தீர்வு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு சாத்தியமில்லை என்பது என் நிலைபாடு.

3. எமக்கு இப்போ அவசரத்தேவை எமது நிலத்தின் மக்கட் வகுப்பை (demography) பேணுவது. அதுக்கு காணி அதிகாரம் தேவை. என்னை கேட்டால் இந்தியாவை திறமையாக கையாண்டு, தமிழ்நாட்டில் எதிரிகளை உருவாக்காமல் எல்லாரையும் பயன்படுத்தி, காணி அதிகாரம் மட்டுமாவது உள்ள ஒரு தீர்வை இப்போதைக்கு நாம் அடைய வேண்டும். 

இதனை அடைவதற்கே தமிழ்பேசும் மக்கள் ஓரணியாகத் தத்தமது அரசியல் கொள்கைகளை ஒருபுறம் வைத்துவிட்டுத் தமிழர்தேசமாக இணைய வேண்டும். ஆனால் அது இன்னொரு தமிழர் விடுதலைக் கூட்டணியாகவோ, ஈழ தேசிய விடுதலை முன்னணியாகவோ இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

இந்த நாடுகள் விரும்பினால் அல்லது நினைத்தால் இலங்கையில் இலகுவாக ஒரு தீர்வு உருவாகும் ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள்   மேலும் நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் எதாயினுமென்று. இலங்கையில் தமிழர்களுக்குத் இலங்கையரசு பூரண சுயாட்சி கொடுக்கத் தவறினால் இலங்கைத்தமிழரின். விடுதலையை. நாங்கள் ஆதரிப்போம் ...அங்கீரிப்போம். என்று பகிங்கரமாக அறிவிப்பு செய்வார்களா?[உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்யவேண்டியதில்லை ]ஒரு வெருட்டு மட்டுமே...இது கூட செய்யமாட்டார்கள். 

அவர்கள் செய்வதற்கான என்ன தேவை இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nochchi said:

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் அரசியல் ரீதியாகத் தமிழர் சாதித்தது என்ன? திட்டல், வசைவு, உடைப்பு இப்படி நீண்டபட்டியல் உண்டு.  இதற்குள்ளால் சிங்களம் சுழித்தோடித் தன்னை அனைத்துலகின் தடைகளை உடைக்கும் சக்தியாக மாற்றிவருகிறது. அதன் அறுவடையை எதிர்வரும் மார்ச் மாத மனித உரிமைச் சபை நடவடிக்கையிலே அறியலாம். ஆனால் நாமோ நமக்கு நாமே நாமம்தான். 

சிங்களம் விரும்பாதென்பது பட்டறிவு. 

ஆமாம் உண்மை அதை மாற்ற முயற்சி செய்யவேண்டும்  ....இன்று அவர்கள் தனியாக ஆட்சி செய்கிறார்கள்...இந்த நிலையை இல்லாமல் செய்ய முயற்ச்சிக்க வேண்டும். இது கடினம் தான் மேற்குநாடுகள்...இந்தியாவை நம்புவதை விட சுலபம் ஆட்சியில் நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாகும்போது. எங்களை பிரிந்து விட அவர்கள் விரும்பலாம் 

20 minutes ago, nochchi said:

அவர்கள் செய்வதற்கான என்ன தேவை இருக்கிறது. 

இல்லை தான்  பிறகு ஏன் மனித உரிமைபேரவைக்கூட்டத்தை எதிரபார்கிறீர்கள்?

46 minutes ago, nochchi said:

நீங்கள் கூறுவது சரி. ஆனால் அவர் சென்றது இந்தியத் தரப்பின் பிரதிநிகள் குழுவாக என்பதை மனம்கொள்ள வேண்டும். அவர்சென்றதே தவறென்று வருத்தும்போது தொடர்ந்து அது தொடர்பில் நாம் சுட்ட வேண்டுமா? 

தேவையில்லை    அவர் தமிழ்நாடு மக்களுக்கு சிறந்த தலைவர் தான்  இலங்கை தமிழருக்கு இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

இல்லை தான்  பிறகு ஏன் மனித உரிமைபேரவைக்கூட்டத்தை எதிரபார்கிறீர்கள்?

நன்றி,

அவர்கள் என்னத்தை செய்கிறார்கள்என்று பார்ப்போமே என்றுதான். எங்கள் மக்கள் குழறி அழுதபோது கைவிரித்துவிட்டு ஓடிய  ஐநா என்பதை மறந்துவிட முடியாது. ஐநாவைத் தமிழர்தரப்பு ஒரு தீர்வுதரும் அமைப்பாக நோக்கின் அது ஏமாற்றமே. இது அழுத்தக்குழு போன்றது. அதனிடம் பல கத்திகள் கதாயுதங்கள் இருக்கலாம். அவை மேற்கின் தேவைக்கேற்பப் பிரயோகிக்கப்படும். அவளவே எனது புரிதல்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

ஆகவே வெளி அழுத்தம், உத்தரவாதம் இல்லாமல் இலங்கையில் ஒரு தீர்வு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு சாத்தியமில்லை என்பது என் நிலைபாடு

வெளி அழுத்தம் வரும். ஆனால் இலங்கை தமிழருக்கு ஆக இல்லை  

இந்தியாவை  பாகிஸ்தான்.....சீனா...இரண்டு நாட்டாலும். வெற்றிகொள்ள முடியாது  ஆனால் இலங்கையால்  இந்தியாவை 10.  ...15....20..ஆண்டுத்திட்டத்தில். உடைக்க முடியும் எப்படியென்றால் இலங்கை தமிழருக்கு பூரண சுயாட்சி கொடுப்பதன் மூலம்  அப்படி கொடுத்தவுடன்  தமிழ்நாடு போராட்டங்களை செய்யும் தமிழ்நாட்டினை பிரிந்து   தா.  என்பார்கள்  இதனை தொடர்ந்து எனைய மாநிலங்களிலும் போராட்டம் வெடிக்கும்   இது. இந்தியாவுக்கு நன்றாக தெரியும்.  எனவே… பூரண சுயாட்சி கொடுக்க விடமாட்டார்கள். ...சீனா இந்தியாவை உடைக்க விரும்பி இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. தமிழ் சிங்களம் தரப்புக்களுக்கிடையில். பேசுமாயின்  சில மாற்றங்கள் எற்பபடும்.  போர்செய்வதைவிட  இது சீனாவுககு இலகுவான வழி இந்தியாவை உடைகக. இப்போது தான் தூதுவர் யாழ்ப்பாணம் போய் வந்துள்ளார்  எங்கள் தரப்பு நெருக்கமானல்  நல்லது நடக்கும் பொறுத்து இருந்து பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எமக்கிடையே பகிர்வதைவிட நேரடியாக அவருக்கே எழுதலாம் அல்லது உரையாடலாம். இது சிலவேளையில் இனியாவது எமக்கு உதவக்கூடும். அவர் தற்போது இந்திய அரசினது நாடாளுமன்ற உறுப்பினர்.

தொல்.திருமாவளவனர்களின் தொடர்புக்கு:

வீட்டுமுகவரி: R-62, IInd, Avenue, T.N. H.B. Colony,,Velachery, Chennai - 600 042,Tamil Nadu
கைபேசி எண்: 9953133206
பணியிட முகவரி: 148-150, South Avenue, New Delhi -110 011

5 minutes ago, Kandiah57 said:

சீனா இந்தியாவை உடைக்க விரும்பி இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. தமிழ் சிங்களம் தரப்புக்களுக்கிடையில். பேசுமாயின்  சில மாற்றங்கள் எற்பபடும்.  போர்செய்வதைவிட  இது சீனாவுககு இலகுவான வழி இந்தியாவை உடைகக. இப்போது தான் தூதுவர் யாழ்ப்பாணம் போய் வந்துள்ளார்  எங்கள் தரப்பு நெருக்கமானல்  நல்லது நடக்கும் பொறுத்து இருந்து பார்ப்போம் 

இந்தியாவை உடைத்தல் அது சாத்தியமா? காஸ்மீர் காலிஸ்தான் போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

இந்தியாவை உடைத்தல் அது சாத்தியமா? காஸ்மீர் காலிஸ்தான் போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

விளங்கவில்லை.   இலங்கை தமிழருக்கு பூரண....பலமிக்க. சுயாட்சி தந்தார்கள் என்றால் மட்டும் இந்தியா மாநிலங்களும். பூரண   பலமிக்க  சுயாட்சி கேட்டு போராட்டம் செய்வார்கள்    அப்படி தொடர்ந்து நடந்தால் பிரியும்” வாய்ப்பு உண்டு. மிக்க நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் Wishful thinking என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதுவே நினைவில் வருகிறது.

ஒவ்வொருவரும், தமது விருப்பு, வெறுப்புகளை பதிகிறீர்கள்.

எது சாத்தியமாகலாம் என்று காலம் சொல்லட்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தேவையில்லை    அவர் தமிழ்நாடு மக்களுக்கு சிறந்த தலைவர் தான்  இலங்கை தமிழருக்கு இல்லை 

அண்ணை அவர் தமிழ் நாடு மக்களுக்கு மட்டும்தான் தலைவர். தன்னை எமது தலைமையாகவோ அல்லது எம்மிடமான நெருக்கத்தை வைத்தோ அவர் அரசியல் செய்யவில்லை.

எம் நட்பு சக்தியாக இருந்தார். இடையில் பிழை விட்டார். வருந்துகிறார். 

இதை தோழமை சுட்டலுடன் கடந்து போவது அவருக்கு நன்மை என்பதை விட, எமது எதிர் காலத்துக்கு அவசியமானது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அவை மேற்கின் தேவைக்கேற்பப் பிரயோகிக்கப்படும்

இந்த உலகில் சிங்கம் மட்டும் அல்ல, நரியும், கழுதைபுலியும், பட்டாம் பூச்சியும் வாழ முடியும். அதற்கான ஏது நிலை இருக்கிறது.

எமது வலிமை என்ன, பலவீனம் என்ன, எல்லை (லிமிட்) என்ன என தெரிந்தால், சிங்கத்தின் உடம்பில் வாழும் உண்ணி போல வாழ முடியும்.

நாம் உண்ணி என்றால், உண்ணியின் வாழ்க்கை முறையைதான் கையில் எடுக்க வேண்டும். இல்லை நான் சிங்கம் போலவே வாழ்வேன் என அடம்பிடிக்காமல்.

ஒரு காலத்தில் உண்ணி, எறும்பாகி, சிங்கம் கூட ஆகலாம். ஆனால் படிமுறைபடியே நடக்கும். 

உலகின் எல்லா சாம்ராஜ்யங்களும் சிற்றரசுகளாகவே உதித்தன.

1 hour ago, Kandiah57 said:

வெளி அழுத்தம் வரும். ஆனால் இலங்கை தமிழருக்கு ஆக இல்லை  

அழுத்தம் வருவது மட்டுமே எங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். 

அதை எமது நலனுக்கு பயன்படுத்த தெரிய வேண்டும்.

அவர்கள் நலனை பற்றியோ அவர்களின் லாபம் பற்றியோ கவலை படாமல், எமது நலன் என்ன என்பதிலும் அதை அடைய இருவர் நலனையும் sync பண்ணுவதிலும் நம் கவனம் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விளங்கவில்லை.   இலங்கை தமிழருக்கு பூரண....பலமிக்க. சுயாட்சி தந்தார்கள் என்றால் மட்டும் இந்தியா மாநிலங்களும். பூரண   பலமிக்க  சுயாட்சி கேட்டு போராட்டம் செய்வார்கள்    அப்படி தொடர்ந்து நடந்தால் பிரியும்” வாய்ப்பு உண்டு. மிக்க நன்றி 

ஆனால் இலங்கை விடயத்தில் இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டுக்கு இது பிரதான காரணம் இல்லை. 

பங்களா தேசை தனி நாடாக்கிய போகு மேற்கு வங்கம் பிரியும் என இந்தியா பயப்படவில்லையே?

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பிரதான காரணம் - அவர்கள் இலங்கையை இன்னொரு பாகிஸ்தானாக, நிரந்தர எதிரியாக்க விரும்பவில்லை.

அதுதான் இந்திய மாநிலங்களை விட பல மடங்கு குறைந்த 13 ஐ எம் தலையில் கட்டினார்கள். நீங்கள் சொல்வதுதான் காரானம் என்றால் தமிழ் நாட்டளவு அதிகாரமாவது 1987 இல் எமக்கு தந்திருப்பார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.