Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன்

(ஆர்.ராம், எம்.நியூட்டன்)

13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

sumanthiran.JPG

தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும் எனும் தலைப்பில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு யாழ் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1949 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்ட போது தமிழ் மக்களுக்கான கொள்கை நிலைப்பாடு முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது. இதன் போது தந்தை செல்வா ஆற்றிய உரையானது பின்னர் 1951 ஆம் ஆண்டு திருகோணமலை மாநாட்டில் கட்சித் தீர்மானமாக அறிவிக்கப்பட்டது. 

அன்றிலிருந்து தமிழரசுக் கட்சி அந் நிலைப்பாட்டிலேயே தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது நிலைப்பாட்டிற்கான மக்களின் ஆதரவும் ஆணையும் தற்போது வரையில் காணப்படுகின்றது.

அதாவது, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்பதே எம்முடையதும் மக்களுடையதும் நிலைப்பாடாகும். போரின் பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் மக்கள் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக் கொள்கையை முன்வைத்து அனைத்து தேர்தல்களிலும் ஆணை பெற்று வந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. வெவ்வேறு காலப்பகுதியில் அவை உள்வருவதும் வெளிச்செல்வதுமாக இருந்துள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்ற விடயத்தில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கவில்லை.

கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டு மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி அவர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற கஜேந்திரகுமார் தரப்புரூபவ் விக்னேஸ்வரன் தரப்பு ஆகியனவும் இக் கோரிக்கையையே முன்வைத்து ஆணை பெற்றுள்ளன.

அவ்வாறிருக்க தற்போது தமிழ் பேநும் தரப்புக்களாக ஒன்றுகூடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு கோருவதற்கு முயற்சிக்கப்படுறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி இந்த விடயத்தை முன்னெடுகின்றது. அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கானதல்ல. அப்படியிருக்கும்போது எவ்வாறு அக்கட்சி இந்த விடயத்தை முன்னெடுக்கலாம் அது மக்களின் ஆணைக்கு மாறானதாகும். 

சுமஷ்டிதான் இறுதி தீர்வு என அக்கட்சியினர் குறிப்பிட்டாலும் தற்போது தமிழ் பேசும் கட்சிகள் கையொப்பமிடுவதற்காக தயாரிக்கும் வரைவில் 13 ஐ அமுல்படுத்துதல் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த வரைபை பார்வையிட்டுள்ளேன். தமிழரசுக் கட்சி இந்த நிலைப்பாட்டுக்கு செல்ல முடியாது. ஆகவேரூபவ் எமது நிலைபாடு என்ன என்பதை 21 ஆம் திகதி வெளிப்படுத்துவோம். 1997 ஆம் ஆண்டு இராணி சட்டத்தரணி நவரட்ணராஜாவின் நிவைவுரையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையிலேயே பழுதுபட்டது. அதனை திருத்தமுடியாது என்று கூறிவிட்டார்.

அதே நேரம் தற்போது அட்சியிலுள்ள ராஜபக்ஷ தரப்பினர்தான் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி முழுமையாக அமுல்படுத்துவதோடு அதற்கு அப்பால் செல்வோம் என்று நான்கு தடவைகள் வாக்குறுதி அளித்துள்ளனர். நாங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையோ முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையோ சந்திதத்த போது 13 ஐ வலியுறுத்தவில்லை. அப்படியிருக்கையில் வாக்குறுதியளித்த ராஜபக்ஷக்கள் வேண்டுமானால் 13 ஆம் திருத்தச்சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி அமுலாக்கட்டும். அது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

நாங்கள் வலிந்துபோய் அடிப்படையில் பழுதான திருத்தமுடியாத 13 ஆவது சட்டத்தை அமுலாக்கவேண்டிய தேவை கிடையாது. பிறிதொரு நிகழ்ச்சி நிரலில் 13 ஐ அமுல்படுத்தும் சில தரப்புக்களின் செயற்பாட்டிற்கு ஆதரவினை வழங்க முடியாது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/119295

அதற்காக உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது வேறு ஏதும. காரணத்தாலேயோ 13 வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக அமுல் படுத்த முன்வந்தால் முன்பு போல் அதை நிராகரித்து  சமஸ்டிக்காக காத்திருப்பது மடமை. கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மெதுவாக வெனிலும் நகர்வதே புத்திசாலித்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

நாங்கள் வலிந்துபோய் அடிப்படையில் பழுதான திருத்தமுடியாத 13 ஆவது சட்டத்தை அமுலாக்கவேண்டிய தேவை கிடையாது. பிறிதொரு நிகழ்ச்சி நிரலில் 13 ஐ அமுல்படுத்தும் சில தரப்புக்களின் செயற்பாட்டிற்கு ஆதரவினை வழங்க முடியாது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது என்றார்.

அதாவது ஐயா என்ன சொல்லவர்றார் என்றால் ...இந்திய தேய்வழக்கான 13 ஐ அமுல்படுத்துவோம் என்று சொல்லும்போது நாங்கள் வேண்டாமென்போம், திரும்ப எல்லாம் அடங்கியதும் 13 யாவது அமுல்படுத்து என்று இந்தியாவை நோண்டுவோம், இப்படியே ஈழத்தமிழர் அரசியல் தீர்வுவிடயத்தை கொதிநிலையில் வைத்திருந்து மக்களை மந்தைகளாக்கி இந்திய அரசியலை இலங்கையில்  செய்துகொண்டிருப்போம், அதாவது நீங்க இப்பிடிக்கா சுத்தினால் நாங்க அப்படிக்கா சுத்துவோம், நீங்க அப்பிடிக்கா சுத்தினால் நாங்க இப்பிடிக்கா சுத்துவோம் மொத்தத்தில் ஈயம் பூசுன மாதிரியும் இருக்க பூசாத மாதிரியும் இருக்க ஆகவேண்டியதை  Proxy தேசிக்காய்கள் நாங்கள் செய்துகொள்வோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 21:25, tulpen said:

அதற்காக உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது வேறு ஏதும. காரணத்தாலேயோ 13 வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக அமுல் படுத்த முன்வந்தால் முன்பு போல் அதை நிராகரித்து  சமஸ்டிக்காக காத்திருப்பது மடமை. கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மெதுவாக வெனிலும் நகர்வதே புத்திசாலித்தனம். 

13 ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை அப்படியே அமுல்ப்படுத்த வேண்டும்.

ஆனால், 1987 இற்குப் பின்னர் இன விகிதாசாரத்தை மிகவும் நேர்த்தியாக சிங்கள அரசுகள் வடக்குக் கிழக்கில் மாற்றிவிட்டனவே? அதுமட்டுமல்லாமல் 1987 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகளவான ராணூவ முகாம்களும், ராணுவத்தினரின் பிரசன்னமும் வடக்குக் கிழக்கில் இருக்கிறது. இவையும் அகற்றப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தின் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் தமிழரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்று அடாத்தாக இந்த அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொன்டுதான் நில ஆக்கிரமிப்பையும், பொலீஸ் அடக்குமுறையினையும் சிங்களம் செய்கிறது.

இவை எல்லாவற்றையும் இலகுவில் விட்டுக்கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

மிகவும் நியாயமான கேள்வி ரஞ்சித்.

நிச்சயம் இராணுவம் குறைந்தளவு 1987 இல் இருந்த அளவுக்குகாவது குறைக்கப்பட வேண்டும்.

குடியேற்றத்தை திருப்புவது கடினம். ஆனால் வடக்கு-கிழக்கை இணைத்தால் நாம் இன்றும் 60% க்கு மேல் என நினைக்கிறேன். ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களவர் 70% தானே? ஆகவே அதிகாரம் கையில் வந்தால் சிறுகச், சிறுக சாதிக்கலாம்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மிக முக்கியம்.

இதை விட இப்போதைக்கு நாம் மேலதிகமாக எதையும் கோரத்தேவையில்லை. 

ஏன் தெரியுமா?

இவை எதையும் சிங்களம் கொடாது.

அந்த நிலையில் மேற்கு+இந்தியாவுடன் அவர்களை கொழுவி விட்டு நாம் அலுவல் பார்க்க முடியும். அதன் பலனான 13 ஐ விட அதிகமாக கூட நமக்கு கிடைக்கலாம்.

இது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 04:49, கிருபன் said:

அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன்

தமிழீழம் என்பதும் புலிகளால் வைக்கப்பட்ட கோரிக்கையல்ல.

77 இல் தமிழ் மக்களால் தந்த ஆணையே.

On 19/12/2021 at 05:25, tulpen said:

அதற்காக உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது வேறு ஏதும. காரணத்தாலேயோ 13 வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக அமுல் படுத்த முன்வந்தால் முன்பு போல் அதை நிராகரித்து  சமஸ்டிக்காக காத்திருப்பது மடமை. கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மெதுவாக வெனிலும் நகர்வதே புத்திசாலித்தனம். 

எதை தீர்வாக பெறுகிறோமோ

அது தான் நிரந்தரம்.

1 hour ago, goshan_che said:

அந்த நிலையில் மேற்கு+இந்தியாவுடன் அவர்களை கொழுவி விட்டு நாம் அலுவல் பார்க்க முடியும். அதன் பலனான 13 ஐ விட அதிகமாக கூட நமக்கு கிடைக்கலாம்.

இலங்கையில் பிரச்சனை இல்லை என்றால் இந்தியாவும் மேற்கும் எப்படியாம் மூக்கை நுழைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் பிரச்சனை இல்லை என்றால் இந்தியாவும் மேற்கும் எப்படியாம் மூக்கை நுழைப்பது.

மிக சரியான கேள்வி அண்ணா. 

13 ஐ இலங்கை தராவிட்டால் - மேலே சொன்னது போல் வெட்டி ஆட வேண்டும்?

தந்துவிட்டால்?

இப்போ 13 ஆ? 13+ ஆ ஒன்றும் இல்லையா என்பதே கேள்வி.

13 ஐ முழுமையாக தந்து விட்டால், அதன் பின் இலங்கையை அவர்கள் மீள அடக்க வேண்டி வந்தால் அப்போ நாம் சமஸ்டி, confederation என ஏறலாம்.

Scotland ஐ பாருங்கள். 97 இல் devolution, பிறகு devo max, ஆனாலும் பிரிந்து போவோம் என்ற மிரட்டலும் உண்டு.

இனவாத இலங்கை அரசை பிரித்தானியாவுடன் ஒப்பிட முடியாது, ஆனால் அமெரிக்க படைகள் இலங்கையில் ஒரு தளம் அமைத்தால் - பிறகு இவர்களையும் பிக்குக்களையும், இந்தியாவையும் வெட்டி ஆடல் இலகு.

இது ஒன்றும் blue print அல்ல. என் எண்ணம் மட்டுமே.

ஆனால் நாம் காத்திருக்க முடியாது. இனப்பரம்பலை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஏதாவது ஒரு தீர்வு வந்தா சந்தோசமே.

இலங்கையை ஒரு கொதிலையில் வைத்திருக்கவே வெளிநாடுகள் விரும்புகின்றன.

இல்லாவிட்டால் 2009 இன் பின் வெளிநாடுகளின் கையிலே பந்துகள் இருந்தும் எதுவுமே செய்யவில்லை.
இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

இப்ப கூட சீனர்களின் முன்னேற்றத்தை எதிர் கொள்ள முடியாமையே தமிழர்களின் பிரச்சனையை கையிலெடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 10:49, கிருபன் said:

தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அது மக்கள் ஆணையில்லை தமிழரசுக்கட்சியின...தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி  அதாவது வாக்குகள் அறுவடை செய்ய பயன்படுத்திய வாக்குறுதியாகும்  உங்களுக்கு நன்றாக தெரியும் பெற்றுக் கொள்ள முடியாது என்று  ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாகக் பெற இதனைத் தவிர உங்களிடம் வேறு என்ன உண்டு.  ?...மக்கள் உங்களிடம் வந்து சமஷ்டியைப் பெற்று தா என்று கேட்டார்களா. ?இன்றைய நிலையில் உங்கள் போன்றோர் அரசியலை விட்டு விலகுவது தான் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு ஆகும்

10 hours ago, ரஞ்சித் said:

13 ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை அப்படியே அமுல்ப்படுத்த வேண்டும்.

ஆனால், 1987 இற்குப் பின்னர் இன விகிதாசாரத்தை மிகவும் நேர்த்தியாக சிங்கள அரசுகள் வடக்குக் கிழக்கில் மாற்றிவிட்டனவே? அதுமட்டுமல்லாமல் 1987 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகளவான ராணூவ முகாம்களும், ராணுவத்தினரின் பிரசன்னமும் வடக்குக் கிழக்கில் இருக்கிறது. இவையும் அகற்றப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தின் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் தமிழரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்று அடாத்தாக இந்த அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொன்டுதான் நில ஆக்கிரமிப்பையும், பொலீஸ் அடக்குமுறையினையும் சிங்களம் செய்கிறது.

இவை எல்லாவற்றையும் இலகுவில் விட்டுக்கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

எனது கருத்து, இப்படியே எல்லாவற்றையும் நிராகரித்து சென்றால் எமது மக்கள் மேலும் பலவீனமடைந்து அடுத்த தலைமுறை எதையுமே பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அதனால் தான் இயன்றளவு கிடைப்பதை பெற்று அதை பலப்படுத்தி செல்லும் தந்திரோபாயத்தை மேற்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பலவீனமடையும் ஒரு மக்கள் கூட்டமாக தமிழர்கள்  சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எமது தந்திரோபயாயங்களை மாற்ற வேண்டிய தேவை உண்டு. இல்லை என்றால் இப்படியே,  கிடைக்கும் கிடைக்கும் என்று வெட்டியாக அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டு பொழுது போக்கிவிட்டு அடுத்த தலைமுறையிடம் வெறுமையை கையளிக்க வேண்டி ஏற்படும்.  அதை தான் 1950 ம் ஆண்டுல் இருந்து தமிழர் தலைமையை அலங்கரித்த அனைத்து தலைமைகளும் செய்தனர். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ மிஸ்டர் அமிர்தலிங்கமே நிராகரிச்சிட்டார். சமஸ்டியை செல்வா காலத்திலேயே சிங்களவன் நிராகரிச்சிட்டான். தமிழீழத்தை நீங்களா புலிகளைக் காட்டிக்கொடுத்து அதையும் இல்லாமல் ஆக்கிட்டீங்கள்.

இப்ப.. அப்ப என்ன தான் உங்கட யோசனை. அதைச் சொல்லுங்களேப்பா..???!

ஒத்தராச்சியத்துக்குள் சிங்களவரோடு வாழ்வது பாக்கியம்.. இது தானே.

இதை கோத்தா வாயாலேயே சொல்ல வைச்சிடலாமே. இதில இவர் எதுக்கு தனிய கிடந்து முக்கணும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

எனது கருத்து, இப்படியே எல்லாவற்றையும் நிராகரித்து சென்றால் எமது மக்கள் மேலும் பலவீனமடைந்து அடுத்த தலைமுறை எதையுமே பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அதனால் தான் இயன்றளவு கிடைப்பதை பெற்று அதை பலப்படுத்தி செல்லும் தந்திரோபாயத்தை மேற்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பலவீனமடையும் ஒரு மக்கள் கூட்டமாக தமிழர்கள்  சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எமது தந்திரோபயாயங்களை மாற்ற வேண்டிய தேவை உண்டு. இல்லை என்றால் இப்படியே,  கிடைக்கும் கிடைக்கும் என்று வெட்டியாக அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டு பொழுது போக்கிவிட்டு அடுத்த தலைமுறையிடம் வெறுமையை கையளிக்க வேண்டி ஏற்படும்.  அதை தான் 1950 ம் ஆண்டுல் இருந்து தமிழர் தலைமையை அலங்கரித்த அனைத்து தலைமைகளும் செய்தனர். 

அண்ணை,

இப்ப இருக்கிற மாகாணசபையால ஒரு பிரியோசனமும் இல்லையெண்டு உங்களுக்குத் தெரியும். அதை இப்ப இருக்கிற மாதிரியே ஏற்றுக்கொண்டால் என்ன பிரியோசனம்?

அதனாலதான் 13 ஆவது திருத்தச் சட்டத்தில தாங்கள் செய்யிறதாய் சிங்களவர்கள் ஒப்புக்கொண்ட விடயங்களைச் செய்யச் சொல்லிக் கேட்கலாம். அதைக் கேட்க எங்களிடம் பலம் இல்லை. ஆரோ ஒரு வெளித்தரப்புத்தான் இதைச் செய்ய வேணும்.

போதாக்குறைக்கு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேணும் எண்டு நீதிமன்றத்தாலும் சட்டம் இயற்றியிருக்கிறாங்கள். 

அதனாலதான், ஒரிஜினல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தவேண்டும் எண்டு கேட்கிறன். அது ஒண்டும் பிழையில்லையே? 

இப்பவிருக்கிற ஒண்டுமேயில்லாத மாகாணசபையை ஏற்றுக்கொண்டால், பிறகு எதையுமே மேலதிகமாகக் கேட்க இயலாது. 

இது என்னுடைய அபிப்பிராயம். 

10 minutes ago, ரஞ்சித் said:

நிச்சயமாக பிழை இல்லை ரஞ்சித்.  அதுவே எனது எண்ணமும். இதை அடைய எப்படியான தந்திரோபாயங்களை பிரயோகிக்க வேண்டும் என்பது அங்குள்ள அனைத்து கட்சிகளும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற புரிந்துணர்வுடன் பேற்கொள்ளப்பட வேண்டிய விடயம். ஒருவரை ஒருவர் துரோகியாக குற்றம் சாட்டும் நிலை வேலைக்காகாது. 

உதாரணமாக 13 ம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுகொள்ள முடியாது எனினும் அதை வெளிப்படையாக சுமந்திரன் சொல்வது தீர்வை நோக்கிய நகர்வை கெடுக்கும் என்றே நினைக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.