Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பதியில் பிரதமர் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார்.

88448153.jpg

திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

88448176.jpg

பிரதமர் மஹந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார்.

பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதியில் பிரதமர் மஹிந்த | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணனே குபேரனிடம் கடன் வாங்கிதான் கல்யாணம் கட்டினார் .. கலியுகம் முடியும் வரை வாங்கிய கடனுக்கு தன்னால் வட்டிதான் கட்ட முடியும் என்று தெளிவாக சொல்லி போட்டார் ..

நீர் அங்கு அல்ல எங்கு வேண்டினாலும் காசு பெறாது..😊

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி உண்டியல் கண்டிசன் எப்படி இருக்கென்று செக் பண்ணியிருப்பாரு..

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லோரும் கை விட்டு விட்டார்களோ? தேவஸ்தானம் கைகொடுக்க முன்வந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மகிந்த சுவாமி தரிசனம்

Published by T Yuwaraj on 2021-12-24 12:25:35

 
 

 

இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

 

Photo__1_.jpg

 

நேற்று இந்தியா  சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

 

Photo__4___1_.jpg

 

அதனையடுத்து, இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜபகர் ரெட்டி, அர்ச்சகர்கள் மரியாதையுடன் மகிந்த ராஜபக்ஷவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

 

Photo__5_.jpg

சுவாமி தரிசனத்திற்கு பின்னர் மகிந்த ராஜபக்ஷ தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.

Photo__6_.jpg

மேலும் அடுத்த வருடத்திற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்று (24.12.2021) மாலை வரை திருமலையில் தங்கும் அவர் ஐந்து மணிக்கு மேல் புறப்பட்டு இலங்கை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo__2___1_.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அகழ்வாராய்ச்சி என்கிற பெயரில் சைவ ஆலயங்கள் இடிப்பு, சிலைகள் உடைப்பு. இந்தியாவில் தரிசனம் விசித்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சகாரு, மீ பூர்வீகலு தெலுகு வாரு?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and people standing

 

மஹிந்தவும், அவருடைய குடும்பமும், இந்துக்களை விட ஆச்சாரமாகவும், பக்தியாகவும் இருக்கின்றார்கள், எவ்வளவு தான் ஏழுமலையானுக்கு காவடி எடுத்தாலும் ,  சிங்கள பௌத்தர்கள் 1977 ஆண்டு சிறிமா அரசாங்கத்துக்கு கொடுத்த மாதிரி மரண அடி கொடுக்க காத்து  இருக்கின்றார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் இனப்படுகொலையாளனுக்கு பட்டுச்சாத்தி, படம் பிடித்து, முக்கியத்துவம் கொடுத்து ஆரவாரிப்பதன்  நோக்கம் என்னவோ? நாங்களும் அவர்களே என்கிறார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, zuma said:

May be an image of 5 people and people standing

 

மஹிந்தவும், அவருடைய குடும்பமும், இந்துக்களை விட ஆச்சாரமாகவும், பக்தியாகவும் இருக்கின்றார்கள், எவ்வளவு தான் ஏழுமலையானுக்கு காவடி எடுத்தாலும் ,  சிங்கள பௌத்தர்கள் 1977 ஆண்டு சிறிமா அரசாங்கத்துக்கு கொடுத்த மாதிரி மரண அடி கொடுக்க காத்து  இருக்கின்றார்கள்.
 

மகிந்த இன்று நேற்றல்ல அன்று தொடக்கமே திருப்பதி ரசிகன். ரணிலும் திருப்பதி  ரசிகனே..........

அங்கே ஆரியம் புகுந்து விளையாடுகின்றது.

ஒரு சில வியாபரிகளோ  தாம் தமிழினம் என்பதை மறந்து  தமிழனை திராவிடம் எனும் இல்லாத ஒன்றுக்குள் தள்ளிவிடப்பார்க்கின்றார்கள்..

ஆந்திராவிடம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 7 people and people standing

பட்டை என்ன, கொட்டை என்ன( கையில் ) ,பெட்டு என்ன, மாலை என்ன என்று, அந்த மாதிரி மஹிந்த அசத்துகின்றார்.🤣

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 

அங்கே ஆரியம் புகுந்து விளையாடுகின்றது.

ஒரு சில வியாபரிகளோ  தாம் தமிழினம் என்பதை மறந்து  தமிழனை திராவிடம் எனும் இல்லாத ஒன்றுக்குள் தள்ளிவிடப்பார்க்கின்றார்கள்..

ஆந்திராவிடம்.

 

இலங்கையில் உள்ள எந்த இந்தக் கோயிலுக்கும்  (நல்லூரானை தவிர) மஹிந்த  சென்றால் இதேமாதிரி தான் வரவேற்ப்பு இருக்கும்  , அங்கேயும் ஆரியம் புகுந்து விளையாடுகின்றதா? 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

இலங்கையில் உள்ள எந்த இந்தக் கோயிலுக்கும்  (நல்லூரானை தவிர) மஹிந்த  சென்றால் இதேமாதிரி தான் வரவேற்ப்பு இருக்கும்  , அங்கேயும் ஆரியம் புகுந்து விளையாடுகின்றதா? 😜

நல்லூரில் மகிந்த தானாக சேர்ட்டை கழட்டி விட்டு போவார். அங்கேயும் இதே தடல் புடல் மரியாதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நல்லூரில் மகிந்த தானாக சேர்ட்டை கழட்டி விட்டு போவார். அங்கேயும் இதே தடல் புடல் மரியாதைதான்.

நான் அறிந்த மட்டில் அரசியல்வாதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதில்லை, தற்போது மாற்றி விட்டார்களோ தெரியவில்லை 
 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, zuma said:

நான் அறிந்த மட்டில் அரசியல்வாதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதில்லை, தற்போது மாற்றி விட்டார்களோ தெரியவில்லை 
 

ஓம் சுமா, ஆனால் நல்லூரில் விசேட வழிபாடு என்ற முறையே இல்லை என நினைக்கிறேன். திருப்பதியில் ரேட் போட்டு ஒவ்வொரு வகை பூசைக்கும்/ தரிசனத்துக்கும் ஒவ்வொரு வகை கட்டணம் எடுப்பார்கள். பணம் கொடுத்தால் மகிந்த செய்த பூசை அதற்குரிய சலுகைகளை நாமும் அனுபவிக்கலாம்.

அதற்காக நல்லூரில் சாமன்யனையும் பிரசித்தமானவர்களையும் ஒரே மாதிரி நடத்துகிறார்கள் என்பதும் சரியில்லை என நினைக்கிறேன்.

உதாரணமாக மகிந்த குறித்த நேரத்தில் வருகிறேன் என அறிவித்து (பூசை நேரம்தான்) ஆள் அம்பு சேனையுடந்தானே போவார்? எங்களை சொல்வது போல டிக்கெட்டை எடுத்து விட்டு லைனில் தனிதனியா வாங்கோ எண்டு சொல்வதில்லைதானே?

அதே போல் மகிந்தவிடம் தமக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, நல்லூர் கோவில் மட்டும் கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் கூட்ட அனுமதிக்கபட்டதும் உண்டு.

என்னை பொறுத்தவரை மதம் என்றாலே அது அதிகாரத்தின் உற்ற தோழன் தான்.

ஒவ்வொரு மதத்தலமும்/அமைப்பும் அதிகாரத்துக்கு சிறப்புரிமை காட்டும் விதங்கள் வேறுபடலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆந்"திராவிடம்"

உண்மையிலே தங்களுக்கு ரைமிங் சென்ஸ் அதிகம் தோழர் 👍..

பாராட்டி ஆக வேண்டும்..😊

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

May be an image of 7 people and people standing

இந்தாள் பவுத்தத்தில் சைவசமயத்துக்கு மாறிவிட்டார் ஆக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இந்தாள் பவுத்தத்தில் சைவசமயத்துக்கு மாறிவிட்டார் ஆக்கும் .

சிங்கள தேசிய தூண்களும், தமிழ் தேசிய தீராந்திகளும் ( எப்பவும் தூண் எண்டு மட்டும் சொல்லாமல், இனி தீராந்தி, அத்திவாரம், முகட்டு ஓடு என்றும் சொல்ல வேண்டும்) ஆத்திர அவசரம், நேர்த்தி, மகனுக்கு துலாபாரம் எண்டால் சித்தூர் டிஸ்டிரிக்கு பஸ் ஏறுவது வழமைதானே.

ஆந்திர - விடம் கசப்பது தமிழ் நாட்டு அரசியல் மேடைகளில் மட்டும்தான், அதுவே திருப்பதிக்கு போய் விட்டால் - லட்டாக இனிக்கும்🤣.

பிகு

 வெங்கட் இஸ் வைஸ்நவ். நாட் சைவையிட். பஸ் ஹி இஸ் முருகன்ஸ் அங்கிள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.