Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் விலை உயர்ந்த பொருள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது..

spacer.png

பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி  மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன்ரி மேட்டரில் ஒரே ஒரு துகள் என்ற அளவில் அன்ரி மேட்டருக்கு ஏதோ நடந்துவிட அதே ஒரு பில்லியனுக்கு ஒரு துகள் என்ற கணக்கில் அன்ரி மேட்டருடன் மோதாமல் தப்பிய மேட்டர் துகள்கள்தான் நாங்களும் இந்த பூமியும் பேரண்டமும்.. பில்லியனில் ஒரு துகள் என்ற கணக்கில் தப்பி உருவான இந்த அண்டமே கற்பனை பண்ண முடியா பேரண்டமாக விரிந்திருக்கையில் பெருவெடிப்பின் போது உருவான அத்தனை  மேட்டரும் தப்பி இருந்தால்..? நினைத்து பார்க்கவே சிறுமூளை இருக்கும் தலைசுத்தி மயக்கம் வருது.. எப்படி பெருவெடிப்பின் போது தப்பிய நேர் ஏற்றம் உள்ள மேட்டரால் உருவான இந்த அண்டமும் பூமியும் நாமும் இருக்கிறோமோ அப்படியே ஒருவேளை பெருவெடிப்பின் போது நேர் ஏற்றம் கொண்ட மேட்டருடன் மோதாமல் தப்பிய அன்ரி மேட்டர்களால் இன்னொரு திசையில்  அன்ரி மேட்டர் பேரண்டம் தோன்றி அங்கும் பூமி மாதிரி ஏதும் ஒரு கோளில் மனிதர்கள் போல் உயிரினங்களும் வாழலாம் யார்கண்டார்.. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.. பூரா நேர் எதிர் ஏற்றம் பெற்ற துகள்களால்(particles) உருவாகி இருக்கலாம்.. பரிசோதித்து பார்த்தால் மட்டுமே தெரியும் வெறும் எதிர்மறை ஏற்றத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் இருக்காதாம்.. அதாவது எங்க உலகத்தில் உள்ள எலெக்ரோன்களுக்கு எதிர்மறை ஏற்றம்(-) போல் அவர்கள் உலகத்தில் எலெக்ரோன்களுக்கு நேர்மறை ஏற்றம்(+) அவ்வளவுதான்.. ஆனால் தப்பித்தவறி எமது பேரண்டத்துக்கு கிட்ட வந்து தொலைச்சுதெண்டா அவ்வளவுதான்.. நொடிப்பொழுதில் பஸ்பமாகி தூய ஒளிசக்தியாகி இரண்டு பேரண்டமும் அற்ற வெற்றிடமாய் மயான அமைதி நிலவக்கூடும்..

spacer.png

சரி நேர்மறை ஏற்றத்தை கொண்ட எமது பேரண்டத்தில் எங்காவது விஞ்ஞானிகள் அன்ரி மேட்டரை கண்டிருக்கிறார்களா என்றால் இல்லையாம். ஏறக்குறைய அன்ரி மேட்டர் எதுவும் இல்லை - இது சில கதிரியக்கச் சிதைவுகளிலும், காஸ்மிக் கதிர்களின் ஒரு சிறிய பகுதியிலும் மட்டுமே தோன்றுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்... இன்றுவரை பெருவெடிப்பின்( இது பெரு வெடிப்பு அல்ல பெரு விரிவாக்கம் என்பது அனைவரும் அறிந்ததே) போது காணாமல் போன அன்ரி மேட்டர் என்னாச்சு அல்லது எப்படி இவ்வளவு மேட்டர் தப்பியது என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.. ஒரு டீஸ்பூன் அன்ரி மேட்டர் இப்பூமியில் ஏதாவது ஒரு வழியில் உருவாகுமானால் அடுத்த நொடியே அது அமெரிகாவின் Manhattan நகரத்தையே அழித்துவிடும் அளவுக்கு போதுமான அளவு வெடிப்பை ஏற்படுத்துமாம்.. 

அதெல்லாம் சரி அந்த விலை உயர்ந்த பொருள் என்ன அது எங்க இருக்கெண்டா.. அது வேற ஒண்டும் இல்ல இதே அன்ரி மேட்டர்தான்.. எங்க இருக்கெண்டால் சுவிஸ் எல்லையை ஒட்டி பிரான்சில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில்.. துகள்களை மோதவிட்டு ஆய்வு செய்யும் சுவிசில் அமைந்துள்ள அனைவருக்கும் தெரிந்த cern ஆய்வுகூடத்துடன் இணைந்து இது ஒரு பகுதி ஆய்வுகூடமாக அமைந்துள்ளதாம்.. துகள்களின் மோதலின் போது பெருவெடிப்பில் உருவானதுபோல அன்ரி மேட்டரும் cern ஆய்வுகூடத்தில் உருவாகிறதாம்.. அதை இங்கு அனுப்பி பரிசோதிக்கிறார்கள்.. 200 அன்ரி புரோட்டன்களை வெறும் நானூறு நாட்கள்தான் அங்கு பாதுகாத்து வைக்கலாம்.. கருதமுடியாத அளவுக்கு மிகச்சிறியது என்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்.... அந்த அன்ரி மேட்டரால் ஒரு பந்தை உருவாக்கி கீழ போட்டால் ரெகுலர் மேட்டர் போல் அந்த பந்தும் கீழ விழும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.. கீழ விழுவது மட்டுமல்ல நம்மைப்போல ரெகுல மேட்டருக்கு உள்ள எல்லா தன்மைகளும் அன்ரி மேட்டருக்கு இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இதன் விலை(அதாவது அதை உருவாக்க ஆகும் செலவு) என்னவென்றால் வெறும் ஒரு கிராம் அன்ரிமேட்டர் 2700 ட்ரில்லியன் டொலர்சாம்..🤭🤭 
 
Sources:👇

https://www.spacetv.net/antimatter/

Current estimate of Antimatter, courtesy of Elise: 
Stefan Ulmer made a back-of-the-envelope calculation based on energy and power consumption. The explanation goes as follows: 
1. CERN produces 3e7 antiprotons per AD cycle or about 1e15 per year
2. This is about 1e15*1.67e-27kg = 1.67 nanogram per year
3. 1 gram of antiprotons has an energy (E=mc^2) of 9e13 Joule
4. The efficiency of the antiproton production process is 1e-9, so you need a billion times more energy: 9e22 Joule
5. The cost of power for CERN is 1kWh = 3.6e6 Joule = 0.1 euro
6. So that would make 0.1/3.6e6*9e22 = 2.5e15 euro
7. And it would take CERN 6e8 years

https://ntrs.nasa.gov/archive/nasa/ca...

https://nuclearsecrecy.com/nukemap/- you can see the nuke city

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

நன்றி இணைப்புக்கு .

வருகைக்கு நன்றி அண்ணை..

  • கருத்துக்கள உறவுகள்

What Was It Like When We Lost The Last Of Our Antimatter?

மாட்டர் - ஆன்ரிமாட்டர் சிதைவு மட்டுமல்ல.. ஆக்கமும் நிகழ்கிறது.

ஆதலால் தான்.. மாட்டரால் ஆன.. பிரபஞ்சத்துக்கு ஒப்பான ஆன்ரிமாட்டராலான.. பிரபஞ்சமும் இருக்க வாய்ப்புள்ளதான கருதுகோள்கள் உள்ளன. 

ஒரு மனிதனை.. ஒத்த இன்னொரு ஆன்ரிமாட்டர் மனிதனும் இருக்க வாய்ப்புள்ளது.. ஏனெனில்.. சோடிப் பொருளாக்கத்தில் சக்தி.. மாட்டரை மட்டுமல்ல.. அதற்கு ஒத்த எதிர்நிலை ஆன்ரிமாட்டரையும் உருவாக்குகிறது. 

Our universe has antimatter partner on the other side of the Big Bang, say  physicists – Physics World

https://physicsworld.com/a/our-universe-has-antimatter-partner-on-the-other-side-of-the-big-bang-say-physicists/

Our universe has antimatter partner on the other side of the Big Bang, say physicists

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாசமும் உணவும் தண்ணீரும் தேவையில்லாத இனமும் இருக்கலாம் என நினைக்கத்தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஓணாண்டி ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

Quarks and antiquarks

Super-Kamiokande - PHYZARRE

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 20:33, பாலபத்ர ஓணாண்டி said:

வெறும் எதிர்மறை ஏற்றத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் இருக்காதாம்.. அதாவது எங்க உலகத்தில் உள்ள எலெக்ரோன்களுக்கு எதிர்மறை ஏற்றம்(-) போல் அவர்கள் உலகத்தில் எலெக்ரோன்களுக்கு நேர்மறை ஏற்றம்(+) அவ்வளவுதான்

ஆன்ரிமாட்டர்களுக்கு எதிரேற்றம் மட்டுமல்ல.. பரயோன் இலக்கங்களின் அளவும் எதிர்மறையாக மாறி இருக்கும்... குறிப்பாக.. ஹட்ரோன்களில்.ஹட்ரோன்களின் வகுப்பில் தான் புரத்தோன்களும் அன்ரிபுரத்தோன்களும்.. நியுற்றோன்களும் அன்ரிநியுற்றோன்களும் அடங்குகின்றன. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிதைவுத் தொழில்நுட்பம்.. ஏலவே.. PET (positron emission tomography) ஸ்கானர்களில் பாவிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

மருத்துவத்துறையில்.. பெட் ஸ்கானர்கள் மகத்தான பங்களிக்கின்றன. 

Positron Emission Tomography - ScienceDirect

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 20:33, பாலபத்ர ஓணாண்டி said:

உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது..

spacer.png

பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி  மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன்ரி மேட்டரில் ஒரே ஒரு துகள் என்ற அளவில் அன்ரி மேட்டருக்கு ஏதோ நடந்துவிட அதே ஒரு பில்லியனுக்கு ஒரு துகள் என்ற கணக்கில் அன்ரி மேட்டருடன் மோதாமல் தப்பிய மேட்டர் துகள்கள்தான் நாங்களும் இந்த பூமியும் பேரண்டமும்.. பில்லியனில் ஒரு துகள் என்ற கணக்கில் தப்பி உருவான இந்த அண்டமே கற்பனை பண்ண முடியா பேரண்டமாக விரிந்திருக்கையில் பெருவெடிப்பின் போது உருவான அத்தனை  மேட்டரும் தப்பி இருந்தால்..? நினைத்து பார்க்கவே சிறுமூளை இருக்கும் தலைசுத்தி மயக்கம் வருது.. எப்படி பெருவெடிப்பின் போது தப்பிய நேர் ஏற்றம் உள்ள மேட்டரால் உருவான இந்த அண்டமும் பூமியும் நாமும் இருக்கிறோமோ அப்படியே ஒருவேளை பெருவெடிப்பின் போது நேர் ஏற்றம் கொண்ட மேட்டருடன் மோதாமல் தப்பிய அன்ரி மேட்டர்களால் இன்னொரு திசையில்  அன்ரி மேட்டர் பேரண்டம் தோன்றி அங்கும் பூமி மாதிரி ஏதும் ஒரு கோளில் மனிதர்கள் போல் உயிரினங்களும் வாழலாம் யார்கண்டார்.. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.. பூரா நேர் எதிர் ஏற்றம் பெற்ற துகள்களால்(particles) உருவாகி இருக்கலாம்.. பரிசோதித்து பார்த்தால் மட்டுமே தெரியும் வெறும் எதிர்மறை ஏற்றத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் இருக்காதாம்.. அதாவது எங்க உலகத்தில் உள்ள எலெக்ரோன்களுக்கு எதிர்மறை ஏற்றம்(-) போல் அவர்கள் உலகத்தில் எலெக்ரோன்களுக்கு நேர்மறை ஏற்றம்(+) அவ்வளவுதான்.. ஆனால் தப்பித்தவறி எமது பேரண்டத்துக்கு கிட்ட வந்து தொலைச்சுதெண்டா அவ்வளவுதான்.. நொடிப்பொழுதில் பஸ்பமாகி தூய ஒளிசக்தியாகி இரண்டு பேரண்டமும் அற்ற வெற்றிடமாய் மயான அமைதி நிலவக்கூடும்..

spacer.png

சரி நேர்மறை ஏற்றத்தை கொண்ட எமது பேரண்டத்தில் எங்காவது விஞ்ஞானிகள் அன்ரி மேட்டரை கண்டிருக்கிறார்களா என்றால் இல்லையாம். ஏறக்குறைய அன்ரி மேட்டர் எதுவும் இல்லை - இது சில கதிரியக்கச் சிதைவுகளிலும், காஸ்மிக் கதிர்களின் ஒரு சிறிய பகுதியிலும் மட்டுமே தோன்றுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்... இன்றுவரை பெருவெடிப்பின்( இது பெரு வெடிப்பு அல்ல பெரு விரிவாக்கம் என்பது அனைவரும் அறிந்ததே) போது காணாமல் போன அன்ரி மேட்டர் என்னாச்சு அல்லது எப்படி இவ்வளவு மேட்டர் தப்பியது என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.. ஒரு டீஸ்பூன் அன்ரி மேட்டர் இப்பூமியில் ஏதாவது ஒரு வழியில் உருவாகுமானால் அடுத்த நொடியே அது அமெரிகாவின் Manhattan நகரத்தையே அழித்துவிடும் அளவுக்கு போதுமான அளவு வெடிப்பை ஏற்படுத்துமாம்.. 

அதெல்லாம் சரி அந்த விலை உயர்ந்த பொருள் என்ன அது எங்க இருக்கெண்டா.. அது வேற ஒண்டும் இல்ல இதே அன்ரி மேட்டர்தான்.. எங்க இருக்கெண்டால் சுவிஸ் எல்லையை ஒட்டி பிரான்சில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில்.. துகள்களை மோதவிட்டு ஆய்வு செய்யும் சுவிசில் அமைந்துள்ள அனைவருக்கும் தெரிந்த cern ஆய்வுகூடத்துடன் இணைந்து இது ஒரு பகுதி ஆய்வுகூடமாக அமைந்துள்ளதாம்.. துகள்களின் மோதலின் போது பெருவெடிப்பில் உருவானதுபோல அன்ரி மேட்டரும் cern ஆய்வுகூடத்தில் உருவாகிறதாம்.. அதை இங்கு அனுப்பி பரிசோதிக்கிறார்கள்.. 200 அன்ரி புரோட்டன்களை வெறும் நானூறு நாட்கள்தான் அங்கு பாதுகாத்து வைக்கலாம்.. கருதமுடியாத அளவுக்கு மிகச்சிறியது என்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்.... அந்த அன்ரி மேட்டரால் ஒரு பந்தை உருவாக்கி கீழ போட்டால் ரெகுலர் மேட்டர் போல் அந்த பந்தும் கீழ விழும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.. கீழ விழுவது மட்டுமல்ல நம்மைப்போல ரெகுல மேட்டருக்கு உள்ள எல்லா தன்மைகளும் அன்ரி மேட்டருக்கு இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இதன் விலை(அதாவது அதை உருவாக்க ஆகும் செலவு) என்னவென்றால் வெறும் ஒரு கிராம் அன்ரிமேட்டர் 2700 ட்ரில்லியன் டொலர்சாம்..🤭🤭 
 
Sources:👇

https://www.spacetv.net/antimatter/

Current estimate of Antimatter, courtesy of Elise: 
Stefan Ulmer made a back-of-the-envelope calculation based on energy and power consumption. The explanation goes as follows: 
1. CERN produces 3e7 antiprotons per AD cycle or about 1e15 per year
2. This is about 1e15*1.67e-27kg = 1.67 nanogram per year
3. 1 gram of antiprotons has an energy (E=mc^2) of 9e13 Joule
4. The efficiency of the antiproton production process is 1e-9, so you need a billion times more energy: 9e22 Joule
5. The cost of power for CERN is 1kWh = 3.6e6 Joule = 0.1 euro
6. So that would make 0.1/3.6e6*9e22 = 2.5e15 euro
7. And it would take CERN 6e8 years

https://ntrs.nasa.gov/archive/nasa/ca...

https://nuclearsecrecy.com/nukemap/- you can see the nuke city

சொந்த ஆக்கமோ புலவர் ?

சும்மா பிச்சி மேஞ்சிட்டீயள் போங்கோ🔝.

உந்த ஜெனீவாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையத்தை நானும் 2016 சுவிஸ் பயணத்தின் போது போய் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சூரியகுடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களிற்குள்ளே எமது பூமிக்கு மட்டும் தான் அதிக (பணப்)பெறுமதி உண்டு என பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. பூமியிலுள்ள செல்வத்தின் மொத்த பெறுமதி ஏறத்தாள 5 ஆயிரம் திரில்லியன் அமெரிக்க டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் பூமியில் உள்ள அனைத்து சொத்துக்களையும் சுரண்டியெடுத்து (யாரவது வேற்றுக்கிரக வாசிகளுக்கு) விற்றாலும் இந்த அண்டி மாட்டர்லை வெறும் 2 கிராம் கூட வாங்கமுடியாதே. இல்லையென்றால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வருட உற்பத்தியின்(GDP) வருமானத்தை 100 வருடங்களுக்கு இலவசமா தர வேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

புலவரும் பகிடியளோட நில்லாது இது போல விடயங்களையும் எங்களுக்கு பகிர்ந்தால் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/1/2022 at 01:09, goshan_che said:

சொந்த ஆக்கமோ புலவர் ?

சும்மா பிச்சி மேஞ்சிட்டீயள் போங்கோ🔝.

உந்த ஜெனீவாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையத்தை நானும் 2016 சுவிஸ் பயணத்தின் போது போய் பார்த்தேன்.

ஆள்லை விசயம் இருக்கு...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஆள்லை விசயம் இருக்கு...:cool:

நிச்சயமாக. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.