Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை

January 12, 2022
spacer.png
 
வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது.

இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் கடந்த 6 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது, வழக்கின் தீர்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி, சட்டமா அதிபரினால், கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில், 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும், 8 கைதிகளின் படுகொலை தொடர்பிலேயே சட்டமா அதிபருக்கு வழக்கு தொடர போதிய சாட்சிகள் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
https://www.ilakku.org/welikada-prison-massacre-former-prisons-commissioner-sentenced-to-death/

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

சிறையில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் என்றால் அதிகாரிக்கு மரணதண்டனை. அதேவேளை கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்றால் அதிகாரிக்குப் பதவி உயர்வும், சிங்களத் தேசியத்தின் பாதுகாவலன்  என்கிற பட்டமும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

1 hour ago, விசுகு said:

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கற்பகதரு said:

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

தனது கண்ணை தான் இறந்த பின் தானம்  கொடுக்க  நினைப்பது பாரிய குற்றமல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

ஏதாவது செய்தார்களா?

இன்று வரைக்கும் யாராவது  பதில் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.
மாறாக இன்று வரைக்கும்   விடுதலைப்புலிகள் மீது    குறை குற்றங்களை சுமத்திய வண்ணமேயுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏதாவது செய்தார்களா?

இன்று வரைக்கும் யாராவது  பதில் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.
மாறாக இன்று வரைக்கும்   விடுதலைப்புலிகள் மீது    குறை குற்றங்களை சுமத்திய வண்ணமேயுள்ளனர்.

அண்ணை, இருக்கிற எல்லாப்பிரச்சினைக்கும் புலிகளைக் குற்றஞ்சாட்டுறதில சிலருக்கு அலாதிப் பிரியம் கண்டியளோ. இதில கனகாலமாய் புலியெதிர்ப்புச் செய்யிற ஆக்களும், புதிசா சேந்த ஆக்களும் இருக்கினம். தங்கள நடுநிலைவாதிகளாக, கனவான்களாக, தாங்கள் “விசிலடிச்சான் குஞ்சுகள்” இல்லையெண்டு  காட்ட,  தாங்கள் இந்தப் படிக்காத கூட்டத்திலிருந்து “வேறுபட்டவர்கள்” என்று காட்ட அவர்களுக்கு இந்தப் புலியெதிர்ப்பு தேவையாய் இருக்கு. 

ஆனால், எங்களால அது ஏலாது. எங்களுக்காக, எங்கட தாய் நாட்டின் விடுதலைக்காக, எங்கள் மொழி, கலாசார, பண்பாட்டு விடுதலைக்காக தங்கட வாழ்க்கையை அர்ப்பணிச்ச அந்த ஜீவன்களை எங்களால மறக்கேலாது அண்ணை. நாங்கள் உயிரோடு இருக்குமட்டும் அவர்களைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருப்போம். அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுதான் இருப்போம். ஆம், நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள்தான், நாங்கள் அறிவற்றவர்கள்தான், ஆம் நாங்கள் புலிவால்கள்தான். ஆனால், அதற்காக வெட்கப்படப்போவதில்லை. 

ஏனென்றால், எங்களின் அடையாலமே அவர்கள்தான்.

16 hours ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

1983 வெலிக்கடையில் சிறைக்காவலர்களாலும், சிங்களக் கைதிகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் 53. 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் சிறையதிகாரிகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் 26. 

இதற்கும் புலிகளைக் குற்றஞ்சாட்ட தமிழ்க் “கனவான்கள்” இங்கே இருக்கிறார்கள்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

16 hours ago, விசுகு said:

மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

தமது தவறுகளை அடையாளம் கண்டு திருந்த முடியாதவர்கள் இல்லாமல் போனது மக்களுக்கு நன்மையானது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஏனென்றால், எங்களின் அடையாலமே அவர்கள்தான்.

சிறப்பு. இதைவிட விளத்தமாகக் கூறுதல் கடினம். அதற்காக எல்லோரும் விளங்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

தலைவரின் கனடா பயணம் போல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, விசுகு said:

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

19 hours ago, கற்பகதரு said:

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

எல்லாமே தவறு என்று சொல்லித்தானே போன பாதையில் குறுக்கால்   வந்து அடித்து அழித்தீர்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செவ்வனே சகலதையும் செய்வோம் என்று உறுதி பூண்டு அழித்தீர்கள்?
அதற்காகத்தானே விசுகர் அந்த கருத்தை சொன்னார்.

12 வருடங்களாகி விட்டது இன்னும் ஒழுங்கான  பதில் சொல்ல வக்கில்லை என்றால் வாடகை வாயை மூடிக்கொண்டிருங்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் கூற்றம் கூறியே எமது ஈழத்தமிழினத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

ஞானம் ஒரு புறம் இருக்கட்டும்.

சொன்னது செய்ய ஏன் தடை?

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாட்களுக்கு பிறகு கற்பகதருவ கண்டது மகிழ்ச்சி.. அடிக்கடி எழுதுங்கோ அப்பதான் மற்றாக்களும் எழுதுவாங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திண்ணையில் நின்று  உரு வந்து ஆடுபவர்களும் மேடைக்கு வந்து ஆடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

திண்ணையில் நின்று  உரு வந்து ஆடுபவர்களும் மேடைக்கு வந்து ஆடலாம்.

மேடைக்கு வந்து ஆடவுமல்லோ தெரிய வேணும்.😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nunavilan said:

மேடைக்கு வந்து ஆடவுமல்லோ தெரிய வேணும்.😀

ஒரு இடத்தில் விடயங்கள் தெரிந்தால் மட்டும் போதாது. யதார்த்தங்கள் அதி முக்கியம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

இதுதான் உண்மை. விழுந்த அடியில மூளை கலங்கி புலிகளை முழு மனதோடு ஆதரித்தவர் ஒரு இரவிற்குள் புலிகளை முழு மனதோடு எதிர்க்கத்தொடங்கியது மட்டுமல்லாமல் சிங்களத்தோடு ஐக்கியமாகி தமிழ் அடையாளத்தைத் துறப்போம் என்று திருவாய் மலர்ந்தவர். இப்ப தன்னைச் சிங்களவனாகவே (மதவாச்சியில் யாழ்தேவிக்குள் ஏறித் தமிழர்களைக் கொன்ற கொள்ளையடித்த சிங்களவர்களில் தன்னையும் ஒருவனாக அடையாளப்படுத்திக்கொண்டு)  பார்க்கத் தொடங்கிவிட்டவர்.

இதுபோதும் என்று நினைக்கிறேன் மூளை யாருக்குக் கலங்கியிருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு!

9 hours ago, விசுகு said:

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

அவர்தான் தன்னைச் சிங்களவனாக வரிந்துகொண்டிருக்கிறாரே அண்ணை, அப்ப புலிகளை அழித்ததுகுறித்து அவர் சந்தோசப்படுவது சாதாரணம்தானே?

அதற்காக 2009 இற்கு முன்னர்வரை என்ன செய்துகொண்டிருந்தார் எண்டெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.

அது வேற வாயி, இது நாறவாயி !!!

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

அண்ணை, பிரபாகரனுக்குக் கொடுக்கமுடியாது என்று சொன்ன தீர்வை வேறு எந்த நாய்க்கும்   கொடுக்கமாட்டேன் என்று போர் வெற்றியின் பின் பெளத்த பேரினவாதம் கூறிவிட்டது. ஆனால் இன்னமும் சிலர் சுமந்திரனும் சாணக்கியனும் தீர்வு எடுத்துத் தருவார்கள் என்று நம்புகிறார்கள். அதனாலேயே புலிகள் அழிக்கப்பட்டதில் இன்புற்றிருக்கிறார்கள்.

ஆனால், இவர்களுக்கும் இதுவரை தான் படிப்பித்த அதே பழைய பாடத்தை சிங்களப் பயங்கரவாதம் படிப்பிக்கும். அப்போது புலிகளின் பாதையே சரியென்று உணர்வார்கள். ஆனால்,  தீர்விற்கான தேவை அப்போது இருக்காது. முழுத் தமிழர்தாயகமும்  ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களத்துடன் ஐக்கியமாகியிருக்கும்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஞானம் ஒரு புறம் இருக்கட்டும்.

சொன்னது செய்ய ஏன் தடை?

யார் சொன்னது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.