Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்

February 8, 2022
spacer.png
 
இலங்கை – இந்திய கடற்பரப்பில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை இரு நிலத்தில் வாழும் தமிழர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்படாவது,

தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளான தமிழ்த்தேசிய இன மக்களைத் தங்களுக்குள்ளேயே மோதிச்சண்டையிட வழிவகை செய்திடும் சிங்கள இனவாத அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஈழப்பெருநிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தி, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலிலே படுகொலை செய்தும் இன்னும் வன்மம் தீராது தமிழர்களுக்குள்ளேயே பகைமூட்டும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

யாழ்ப்பாணம் மாவட்டம், சுப்பர்மடம் கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவத்தம்பிகள் தணிகைமாறன், பிரேம்குமார் ஆகியோர் படகு கவிழ்ந்து உயிரிழந்த செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன். தம்பிகளை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பிகளின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்யவியலாதது. அம்மரணம் ஏற்படுத்தும் வலியென்பது சொற்களால் விவரிக்க முடியாதது. அதேசமயம், அது விபத்துதானே ஒழிய, திட்டமிடப்பட்டத் தாக்குதல் அல்ல; தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்துச்சொந்தங்களை ஒருநாளும் பகையாளியாகக் கருதவோ, தாக்குதல் தொடுத்திடவோ மாட்டார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன். அது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கோர விபத்து; ஏற்கவே முடியாத ஒரு துயரச்சம்பவம். அத்துயரை நானும் பகிர்ந்துகொள்கிறேன்; வலியை முழுமையாக உணர்ந்துகொள்கிறேன்.

அதேநேரத்தில், இம்மரணத்தைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, ஈழத்து மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் செயல்களுக்குப் பலியாகாது விழிப்போடும், தெளிவோடும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்து மீனவர்கள்தான் ஈழ மீனவர்களைத் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என அந்நிலத்தில் பரப்புரைசெய்வதும், தமிழகத்து மீனவர்களது படகுகளை ஈழத்து மீனவர்களுக்கு ஏலத்தில் விற்று, காழ்ப்புணர்வை தமிழக மீனவர்களிடம் உருவாக்க முயல்வதுமான போக்குகள் சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்த துடிக்கும் பெரும் மோசடித்தனமாகும்.

சிங்கள இனவாத அரசால் இனப்பேரழிவை தமிழர் தாயகம் எதிர்கொண்டபோது, தமிழகத்திலிருந்த 18 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காக்க தங்கள் உயிர்களை இரையாக்கினார்கள்; அவர்கள் தங்கள் உள்ளத்திலே கொதித்த நெருப்பை உடலிலே கொட்டி தீக்குளித்து, போராட்ட நெருப்பைப் பற்ற வைத்தார்கள். ஈழத்தாயகம் எப்போதெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் கொதித்தெழுந்து தங்கள் உறவுகளைக் காக்க உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது. ஆகவே, தமிழகத்துக்கும், ஈழத்துக்குமான தொப்புள்கொடி உறவை, வரலாற்று வழித்தொடர்பை எவராலும் மறுக்க முடியாது. ஏற்கனவே, தமிழ்த்தேசிய இன மக்களை சாதியும், மதமும் பிளந்து, பிரித்து ஓர்மையைத் தடுத்துக் கெடுக்கும் நிலையில் அரங்கேற்றப்படும் சதிச்செயல்களையும், தமிழகத்து தமிழர்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்குமான இரத்த உறவை முற்றாக அறுக்கத்துடிக்கும் பெருஞ்சூழ்ச்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டியது பெருங்கடமையும், பேரவசியமாகிறது. அந்நிலத்தில் தமிழ் மீனவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்; சிங்களர்களில் எவரும் மீனவர்கள் இல்லை என்பது போலவும், சிங்கள மீனவர்களது வளங்களை தமிழக மீனவர்கள் சுரண்டுகிறார்கள் என்பது போலவும், தமிழகத்து மீனவர்கள் சிங்கள மீனவர்களைத் தாக்குகிறார்கள் என்பது போலவும் கருத்துருவாக்கம் செய்து, இரு நிலத்து மீனவர்களையும் பகையாளிகளாக மாற்ற முனைவது கொடும் வன்மத்தின் உச்சமாகும்.

ஆகவே, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பிளவையும், பகையையும் உருவாக்கத் துடிக்கும் இனவெறி சிங்கள ஆட்சியாளர்களின் தமிழர் விரோதச்செயல்பாடுகளுக்கு இரையாகாது அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தமிழர் ஓர்மையையும், இணக்கப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டுமென இரு நிலத்தில் வாழும் தமிழர்களையும் உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

https://www.ilakku.org/tamil-nadu-eelam-fishermen-must-thwart-the-maneuver-to-create-animosity-seeman-request/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களும் ஈழத்து மீனவர்களும் சந்தித்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால் சிங்கள இந்திய கூட்டை இலகுவாக முறியடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

தமிழக மீனவர்களும் ஈழத்து மீனவர்களும் சந்தித்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால் சிங்கள இந்திய கூட்டை இலகுவாக முறியடிக்கலாம்.

ஏன் பேச வேண்டும் ? இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் சொல்லவில்லையே. 😏

தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டால் ஏது பிரச்சனை ?

ஒவ்வொரு நாளும் 10 அத்துமீறும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை பிடித்து இழுத்து வந்து நீதிமன்றில் ஒப்படைத்தால் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.

மாதம் 300 மீன்பிடிப் படகுகள். 

எட்டிப் பார்க்கவே மாட்டார்கள்.

Edited by Kapithan

2 hours ago, கிருபன் said:

அம்மரணம் ஏற்படுத்தும் வலியென்பது சொற்களால் விவரிக்க முடியாதது. அதேசமயம், அது விபத்துதானே ஒழிய, திட்டமிடப்பட்டத் தாக்குதல் அல்ல; தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்துச்சொந்தங்களை ஒருநாளும் பகையாளியாகக் கருதவோ, தாக்குதல் தொடுத்திடவோ மாட்டார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

இந்த தொப்புள்கொடி உறவுகள் தான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கடற்கரைகளில் இருந்து சாதாரண கண்களால் பார்த்தாலே தெரியும் அளவுக்கு நெருங்கி வந்து தடை செய்யப்பட்ட வலைகளையும் மீன்பிடி முறைகளையும் பயன்படுத்தி மீன் பிடிப்பது மட்டுமன்றி வேண்டும் என்றே வடபகுதி மீனவர்களின் பெறுமதி வாய்ந்த வலைகளை அறுத்தெறிகின்றனர். வடபகுதி மீனவர்களின் சிறிய படகுகளுடன் தம் பெரிய படகுகளை மோத விட்டு சேசப்படுத்துகின்றனர். மீன் குஞ்சுகளை கூட விடாமல் கொன்று குவித்து எதிர்கால வளத்தையே நாசம் பண்ணுகின்றனர்.

கடந்த வாரம் சுப்பர் மடத்தில் இந்த மீன்பிடி கொள்ளையர்களால் சேதமாக்கப்பட்ட தன் பெறுமதிவாய்ந்த படகையும் வலையையும் தீமூட்டி தன்னையும் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற ஒரு வடபகுதி மீனவர்  சக மீனவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார். ஆனால் அவரின் சேதமான படகு அழிந்து போய்விட்டது.

கடந்த வாரம் இந்த கொள்ளையர்களை தடுக்க முயன்ற வடபகுதி மீனவர்கள் மீது பெற்றோல் குண்டும் வீசியிருக்கின்றார்கள்.  எல்லாவற்றுக்கும் ரெடியாகவே வருகின்றனர் (ஆனால் சிங்கள கடற்படை சுற்றிவளைத்தால் அவர்கள் மீது இப்படி தாக்குதல் நடாத்த் அஞ்சுவார்கள்)

2 hours ago, nunavilan said:

தமிழக மீனவர்களும் ஈழத்து மீனவர்களும் சந்தித்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால் சிங்கள இந்திய கூட்டை இலகுவாக முறியடிக்கலாம்.

நுணா,

இது பற்றி ஏற்கனவே நானே சில தடவை இங்கு எழுதியுள்ளேன். இரு தரப்பு மீனவர்களும் 2016 இல் சந்தித்துக் கொண்டனர். அதில் தமிழக மீனவர்கள் தமக்கு 3 வருடம் அவகாசம் கொடுக்கும்படியும், அதற்குள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் முறைகளயும் முற்றாக கைவிடுவோம் என்றும் ஒத்துக்கொண்டு இருந்தனர். இன்று 2022.... ஆனால் எந்த மாற்றமும் அவர்களிடம் இல்லை.

அத்துடன் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால், கதியால்களுக்கு மேல் எட்டிப்பார்த்து எல்லாம் கதைக்க முடியாது. ஏதாவது ஒரு விதத்தில் இரு அரசுகளினதும் வெளியுறவு அமைச்சினது அனுமதி பெறல் வேண்டும்.

இன்னும் ஒரு விடயம், இவ்வளவு நாளும் இது தொடர்பாக கள்ள மவுனம் செய்த சீமான், இன்று தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுகின்றது என்று தெரிந்த பின் தான் வாயை திறக்கின்றார். தன் மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டாதே என்றோ அல்லது தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தாதே என்றோ சொல்ல வக்கில்லை சீமானுக்கு.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஏன் பேச வேண்டும் ? இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் செல்லவில்லையே. 😏

தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டால் ஏது பிரச்சனை ?

ஒவ்வொரு நாளும் 10 அத்துமீறும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை பிடித்து இழுத்து வந்து நீதிமன்றில் ஒப்படைத்தால் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.

மாதம் 300 மீன்பிடிப் படகுகள். 

எட்டிப் பார்க்கவே மாட்டார்கள்.

கப்பித்தான் அவர்களும் தமிழர்கள்.  இடையில் சிங்களவரும் , இந்திய அரசும் புகுந்து விளையாடுவதை அனுமதிக்க கூடாது. 
 
2 minutes ago, நிழலி said:

இந்த தொப்புள்கொடி உறவுகள் தான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கடற்கரைகளில் இருந்து சாதாரண கண்களால் பார்த்தாலே தெரியும் அளவுக்கு நெருங்கி வந்து தடை செய்யப்பட்ட வலைகளையும் மீன்பிடி முறைகளையும் பயன்படுத்தி மீன் பிடிப்பது மட்டுமன்றி வேண்டும் என்றே வடபகுதி மீனவர்களின் பெறுமதி வாய்ந்த வலைகளை அறுத்தெறிகின்றனர். வடபகுதி மீனவர்களின் சிறிய படகுகளுடன் தம் பெரிய படகுகளை மோத விட்டு சேசப்படுத்துகின்றனர். மீன் குஞ்சுகளை கூட விடாமல் கொன்று குவித்து எதிர்கால வளத்தையே நாசம் பண்ணுகின்றனர்.

கடந்த வாரம் சுப்பர் மடத்தில் இந்த மீன்பிடி கொள்ளையர்களால் சேதமாக்கப்பட்ட தன் பெறுமதிவாய்ந்த படகையும் வலையையும் தீமூட்டி தன்னையும் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற ஒரு வடபகுதி மீனவர்  சக மீனவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார். ஆனால் அவரின் சேதமான படகு அழிந்து போய்விட்டது.

கடந்த வாரம் இந்த கொள்ளையர்களை தடுக்க முயன்ற வடபகுதி மீனவர்கள் மீது பெற்றோல் குண்டும் வீசியிருக்கின்றார்கள்.  எல்லாவற்றுக்கும் ரெடியாகவே வருகின்றனர் (ஆனால் சிங்கள கடற்படை சுற்றிவளைத்தால் அவர்கள் மீது இப்படி தாக்குதல் நடாத்த் அஞ்சுவார்கள்)

நுணா,

இது பற்றி ஏற்கனவே நானே சில தடவை இங்கு எழுதியுள்ளேன். இரு தரப்பு மீனவர்களும் 2016 இல் சந்தித்துக் கொண்டனர். அதில் தமிழக மீனவர்கள் தமக்கு 3 வருடம் அவகாசம் கொடுக்கும்படியும், அதற்குள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் முறைகளயும் முற்றாக கைவிடுவோம் என்றும் ஒத்துக்கொண்டு இருந்தனர். இன்று 2022.... ஆனால் எந்த மாற்றமும் அவர்களிடம் இல்லை.

அத்துடன் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால், கதியால்களுக்கு மேல் எட்டிப்பார்த்து எல்லாம் கதைக்க முடியாது. ஏதாவது ஒரு விதத்தில் இரு அரசுகளினதும் வெளியுறவு அமைச்சினது அனுமதி பெறல் வேண்டும்.

இன்னும் ஒரு விடயம், இவ்வளவு நாளும் இது தொடர்பாக கள்ள மவுனம் செய்த சீமான், இன்று தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுகின்றது என்று தெரிந்த பின் தான் வாயை திறக்கின்றார். தன் மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டாதே என்றோ அல்லது தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தாதே என்றோ சொல்ல வக்கில்லை சீமானுக்கு.
 
சீமான் இதனையாவது  சொன்னார். ஸ்ராலினின் பொறுப்பு என்ன என்று கூறமுடியுமா?
 
12 minutes ago, nunavilan said:

சீமான் இதனையாவது  சொன்னார். ஸ்ராலினின் பொறுப்பு என்ன என்று கூறமுடியுமா?
 
சீமான், ஸ்டாலின் மட்டுமல்ல எந்த தமிழகத்து அரசியல்வாதிகளும் தமிழக மீனவர்களை நோக்கி கொள்ளையடிக்க அயல்வீட்டுக்கு போகாதே என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ஸ்டாலின் சொல்லாமல் விட்டால் தவறு, அதையே சீமான் சொல்லா விட்டால் தவறு இல்லை என்று நினைக்கும் சில புலம்பெயர் கோஷ்டிகள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

சீமான், ஸ்டாலின் மட்டுமல்ல எந்த தமிழகத்து அரசியல்வாதிகளும் தமிழக மீனவர்களை நோக்கி கொள்ளையடிக்க அயல்வீட்டுக்கு போகாதே என்று சொல்ல மாட்டார்கள்....

நிச்சயம் சொல்ல மாட்டார்கள், மீனவர்களின் ஓட்டு வேண்டுமல்லவா..?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

நிச்சயம் சொல்ல மாட்டார்கள், மீனவர்களின் ஓட்டு வேண்டுமல்லவா..?

இதற்காக தான் சொன்னேன்  இரு தரப்பும்  மீண்டும் மீண்டும் மீண்டும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என.
ஸ்ராலினுக்கு தனது ஜிம் உடற்பயிற்சியை 68 வயதிலும் போடவே நேரம் போதாது. இதற்குள் மீனவர் பிரச்சனை பற்ரி பேச அவருக்கு எங்கு நேரம்??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கப்பித்தான் அவர்களும் தமிழர்கள்.  இடையில் சிங்களவரும் , இந்திய அரசும் புகுந்து விளையாடுவதை அனுமதிக்க கூடாது. 
 
(சிங்களம் நில அபகரிப்பு செய்தால் பிழை, அதையே தமிழகம் செய்தால் சரி ? )

வட கடல் மீனவர்களின் உண்மையான பிரச்சனையை எவருமே சரியாக புரிந்துகொள்கிறார்கள் இல்லை என நினைக்கிறேன். 

சுருக்கமாக சொன்னால், 

வியட்னாமில் அமெரிக்கா விசிறிய Agent Orange போன்றதுதான் இந்திய மீனவர்களின் மீன்பிடி  முறை.

அழிவு மட்டுமே மிஞ்சும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனையில் தமிழகத்தின் ஒருபகுதி மீனவர்கள் திட்டமிட்டே எல்லை கடந்து வருகிறார்கள் என்பது சீமானுக்கு நன்கு தெரியும் இருந்தும் அவர்களை இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்வதுபோல் ஒரு மாயையை உருவாக்குகிறார்.

தமிழக மீனவர்கள் ஈழ மீனவர்களை தாக்கமாட்டார்கள் என்று கூறுகிறார், ஆனால் தமிழக மீனவர்கள் வடபகுதி மீனவர்களை தாக்கிய சில செய்திகள் ஏற்கனவே வந்திருக்கிறது அது யாழிலும் பகிரபட்டிருக்கிறது.

ஈழபிரச்சனையில் அனைத்தும் அறிந்த சீமான் இதுபற்றி எதுவுமே அறியாமல் இருக்கிறார் என்று சொன்னால் அது அப்பட்டமான பொய் என்று அவர்பாணியில் அறுதியிட்டு கூறலாம்.

எதிர்காலத்தில் அவர் ஆட்சியமைத்தால்  தமிழக மீனவர்களை காக்க நெய்தல்படை உருவாக்கப்படும் எவனாவது அவர்களை தொட்டால் வெடித்து சிதறும் அளவிற்கு தாக்குதல் தொடுக்கப்படும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

உண்மையிலேயே இலங்கையின் வடகரையை அண்மித்து வந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை காக்க அவரின் நெய்தல்படை இலங்கை கரைவரை வந்து இலங்கை கடற்படைமீது தாக்குதல் நடத்துமா அது சாத்தியமா , அல்லது இந்திய மீனவர்கள் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் ஈழ மீனவர்கள்மீது போர் தொடுக்குமா?

முதலில் இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு மாநில அரசு தனியான ஒரு தற்கொலை போர் படையை உருவாக்க முடியுமா?  எப்படியெல்லாம் தமிழக மக்களை மேடை பேச்சின்மூலம் உண்மையான பிரச்சனைகளை ஆராயமல் உணர்ச்சிவசபடுத்தி பேய்க்காட்டுகிறார்கள் சீமான் உட்பட்ட தமிழக அரசியல்வாதிகள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

அன்றே அந்த மேடையில் எல்லை தாண்டி செல்லாதீர்கள் என்று ஒருவரி மேடையில் சொல்லியிருந்தால் நிலமையின் தீவிரத்தை தமிழகமக்கள் ஓரளவாவது புரிந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்குமே.

இப்போதுகூட தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடபடபோவதாக பல நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தது தமிழக முதல்வர்வரை ஒப்புக்கு ஓரிரு கடிதங்கள் அனுப்பிவிட்டு கண்டுக்காமல் இருந்தார் ஏனையவர்கள் பெரிதாக ஏதும் செய்யாமல் அமைதியாகவே இருந்தார்கள்., சீமான் உட்பட. ஏலம் விட்டபின் இப்போது மீனவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.

டக்ளஸ் சொல்கிறார் மீனவர்கள் படகுகளை வந்து எடுத்துக்கொண்டு போங்கள் என்று பலமுறை அறிவுறுத்தியும் அவை பயனற்ற படகுகள் என்று தமிழக அரசும் அமைப்புக்களும் அதுபற்றி இறுதிவரை அக்கறையே காட்டவில்லையென்று, நிறுத்தி வைக்க இடமின்றியும் சுற்று சூழல் மாசுபாடு கருதியுமே அவை விற்கபட்டதாக சொல்கிறான்.

டக்ளஸ் ஒன்றும் யோக்கியன் என்பதற்காக இதை பதிவிடவில்லை அவர் சொல்வதில் உண்மையில்லையென்றால் இன்று ஏலம்விடப்படதற்கு எதிராக குரலெழுப்பும் தமிழக அரசியல்வாதிகள் இந்த காணொலியை வைத்து  தாம் தமிழக மீனவர்களை ஏமாற்ற முனையவில்லை என்பதை நிரூபிக்கலாமே.  

இலங்கை மீனவர்களுக்கு தமிழக மீனவர்களின் விசைபடகுகள் விளைவிக்கும் நாசத்தை ஒரு பக்கம் விடுங்கள், தமிழக மீனவர்களுக்கே தமிழக விசைபடகுகள் ஏற்படுத்தும் நாசத்தையும் அதை தடுக்கமுடியாமல் சாதாரண மீன்பிடி படகு மீனவர்கள் ஏற்படுத்தும் அவல குரலையும் கீழேயுள்ள காணொலியில் பாருங்கள் .

குறிப்பாக 7 வது நிமிடத்திலிருந்து எப்படி அநியாயம் விளைவிக்கின்றார்கள் என்று அவதானியுங்கள் . சொந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தையே இப்படி நாசம் செய்பவர்கள் தொப்புள்கொடி அறுணாகொடி உறவுகள்பத்தி சிந்திப்பார்களா என்று சீமான் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இது கண்ணுக்கு தெரிந்த புண் இதை வார்த்தை ஜாலங்கள் காண்பித்து தெரியவேயில்லையென்று பேய்க்காட்டினால் இலங்கை இந்திய மீனவர்களின் உறவை சீர்குலைப்பது அரசியல்வாதிகளேயன்றி வேறு யாருமல்ல.

இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால் பேசவேண்டியது மீனவர்களுடன் அல்ல, விசைபடகுகளின் முதலாளிகளுடன் தமிழக அரசியல் தலைவர்கள் பேசவேண்டும். விசைபடகுகளை வாடகைக்கு விடுபவர்களின் அழுத்தங்களிற்காகவே எப்படியாவது பணம் சம்பாதிக்க எல்லைமீறி எந்த விததில் வேண்டுமானாலும் மீன் பிடிக்கிறார்கள்.

விசைபடகு முதலாளிகளுடன் பேசி தமிழக அரசியல்வாதிகள் இந்த பிரச்சனையை தீர்க்க வாய்ப்பேயில்லை, ஏனெனில் பல விசைபடகுகளின் உரிமையாளர்களே அரசியல்வாதிகளும் அரசியல் பின்புலம் கொண்டவர்களும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க  ஒரே வழி உள்ளிடும் அதனை படகுகளையும் மீனவர்களையும் கைப்பற்றுதல் மட்டுமே. 

வயிற்றில் அடிப்பார்கள் என பயப்பிடுவார்களானால் இந்தப்பக்கம் எட்டியும் பாரார். 

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவுகளுக்கிடையே சச்சரவுகள் தேவையில்லை; தமிழக - இலங்கை மீனவர்களது பிரச்சினையை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்காதீர்கள்

எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்ப்போம் -ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ்
 
a11.jpg?itok=5lBqju55

தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையே இடம்பெற்றுவரும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் சச்சரவுகளுக்கு சுமுகமான முறையில் அவசரமாக தீர்வு காணப்பட வேண்டுமே தவிர அவற்றை தமது அரசியல் தேவைகளுக்காக இரு நாட்டு அரசியல் தலைமைகளும் ஒருபோதும் பயன்படுத்தக் கடாது என்று ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எஸ்.  ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

இது இருநாட்டு மீனவர்கள் சமூகம் சார்ந்த பிரச்சினை. இலங்கை தமிழ் மக்களுடன் எமக்கு தொப்புள் கொடி உறவு உள்ளது என்பதை இது பகுதியினருமே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு இருக்கையில் இந்த சிறு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆன தேவையாக உள்ளது. இந்த இருநாட்டு மீனவர்களும் சச்சரவுக்கு உள்ளாகும் விடயத்தில் நாங்கள் அதாவது இந்திய மீனவர் சமூகம் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோம். அதேபோன்று இலங்கை மீனவர்களும் இந்த விடயத்தில் பொறுமையாகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

உண்மையை சொன்னால் எமது இந்த பிரச்சினையை தமது அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள சில  அரசியல்வாதிகள் முனைப்பாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

எமது இந்த நிலைமையை பயன்படுத்தி எவராவது அரசியல் இலாபம் பெற முயன்றால் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று நான் இருதரப்பு மீனவ சமூகத்தையும் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தேவையற்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை விடுத்த இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். போராட்டங்கள் மூலம் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமடையுமே  தவிர இதனை குறைக்க முடியாது.

மணவை அசோகன்

https://www.vaaramanjari.lk/2022/02/06/செய்திகள்/தொப்புள்கொடி-உறவுகளுக்கிடையே-சச்சரவுகள்-தேவையில்லை-தமிழக-இலங்கை-மீனவர்களது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நாங்கள் விரைவில் இலங்கை வந்தேனும் எமது மீனவ சமூகத்துடன் பேச்சு நடத்தி ஒற்றுமையாக நமக்குள் நிலவும் சகல பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்வோம். அதுவரை பொறுமையாக இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது இந்த நிலைமையை பயன்படுத்தி எவராவது அரசியல் இலாபம் பெற முயன்றால் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று நான் இருதரப்பு மீனவ சமூகத்தையும் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தேவையற்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை விடுத்த இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். போராட்டங்கள் மூலம் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமடையுமே  தவிர இதனை குறைக்க முடியாது.

மணவை அசோகன்

https://www.vaaramanjari.lk/2022/02/06/செய்திகள்/தொப்புள்கொடி-உறவுகளுக்கிடையே-சச்சரவுகள்-தேவையில்லை-தமிழக-இலங்கை-மீனவர்களது

நீங்கள் ஏன்  உள்ளே வருகிறீர்கள் ? உங்களுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

உங்கள் சமுத்திரத்தை அழித்ததுபோல் எங்கள் கடலையும் அழிக்கவா? 

போடா.......ங்...

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பூழ்க் கொடி உறவென்று மாய்மாலம்பேசி இந்தியன் வருகின்றான். அப்படி தொப்பூழ்க் கொடி உறவு ஒன்று இருக்குமாயின் வெட்கமே இல்லாமல் எமது மீனவர்களின் கடல்வளங்களை அழித்து /கொள்ளையடித்து விட்டு இந்திய ஊடகங்களுக்கு எமது மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று சொல்லமாட்டான். இந்தியன் இந்தியன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

சீமான், ஸ்டாலின் மட்டுமல்ல எந்த தமிழகத்து அரசியல்வாதிகளும் தமிழக மீனவர்களை நோக்கி கொள்ளையடிக்க அயல்வீட்டுக்கு போகாதே என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ஸ்டாலின் சொல்லாமல் விட்டால் தவறு, அதையே சீமான் சொல்லா விட்டால் தவறு இல்லை என்று நினைக்கும் சில புலம்பெயர் கோஷ்டிகள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர்.

தங்கள் அரசவையிலும் உள்ளார்கள் மன்னா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.