Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: வன்முறை தீவிரமானதால் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்ட அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இந்து மதத்திலும் முஸ்லீம் சமயத்திலும் உடைகளில் கட்டாயம்/கட்டுப்பாடுகள் உள்ளதா?

தெரியாததை தெரிந்து கொள்ள மட்டும் அந்த கேள்வி.

இந்துமதம் ஆரியர்களின் வருகையோடு வந்தது. அவர்கள் மதத்தில் உடைகளுக்குக் கட்டாயமோ அன்றிக் கட்டுப்பாடுகளோ எதுவுமில்லை. 

WhatsApp%20Image%202018-12-24%20at%2011.30.42.jpeg

இந்துக்களின் தாய்மதம் இசுலாமாக இருப்பதாக அந்த மதத்தினரே ஆதாரத்துடன் காட்டுவதால் மேற்கொண்டு அவர்கள் ஆடைபற்றி விபரிக்கத் தேவையில்லை என எண்ணுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

புர்காவோ அல்லது ஹிஜாப்போ போடுவது அவர்களுது சுதந்திரம்.  இவனுகளுக்கு அந்த மாணவி புர்கா அணிந்து வந்தது முக்கியமல்ல அல்லாஹு அக்பர் என்று சொன்னாளே அதுதான் முக்கியம். பெரும்பான்மையான சனாதன சமயத்தை சேர்ந்த மக்களுடன் பகைமையை வளர்த்து என்னத்தை காணப்போகிறார்கள் என்று புரியவில்லை. அந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்தியது சுத்த முட்டாள்தனம் அல்லது தீவிர மதவாதம்.

மற்றும்படி புர்காவுக்குள் அவள் அழகு. புர்காவைக் கழற்றினால் பேரழகு!

எனக்கு என் முக்காட்டு நிலவின் நினைவு வந்து குரங்குபோல் குதிக்கின்றது!👀

  • கருத்துக்கள உறவுகள்

 

காவித்துண்டோடு வந்தவர்கள் மாணவர்களே கிடையாது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் போராட்டம்: மாணவிகளின் மொபைல் எண்கள் பொதுவெளியில் வெளியீடு: போலீசில் புகார்

 

 

 
ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட மொபைல் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
hijab3-300x200.jpeg
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்,பர்தா,  புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக ஐகோர்ட்டு  ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தது.
hijab2-300x200.jpeg
இந்த நிலையில்  உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  என்.விஷ்ணுவர்தனை சந்தித்த ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த  மாணவிகளின் பெற்றோர், ”எங்கள் பிள்ளைகளின் மொபைல் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய காவல் துறை, உரிய நடவடிக்கை எடுப்பதா தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/165492

 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!

spacer.png
 

கர்நாடகாவில் ஏழு நாள் விடுமுறைக்கு பின் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்-காவி சால்வை போராட்டத்தையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல் ஒன்று முதல் 10வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று(பிப்ரவரி 16) 11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

மதம் சார்ந்த ஆடைகளை மாணவர்கள் அணிந்துவரக் கூடாது என்று உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக திங்கள்கிழமை முதல் பெரும்பாலான பள்ளி மாணவிகள் வகுப்புகளையும், தேர்வுகளையும் புறகணித்து வருகின்றனர். சில இடங்களில் பெற்றோர்களே ஹிஜாப் இல்லாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஒருசில மாணவிகள் மட்டுமே ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இன்று 11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுப்பியில் உள்ள டாக்டர் ஜி சங்கர் அரசு மகளிர் கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற மறுப்பு தெரிவித்து வகுப்புகளை புறகணித்தனர். “ஹிஜாப் அணிய அனுமதித்த பிறகே கல்லூரிக்குள் நுழைவோம். இது தவறு. ஹிஜாபுக்கு தடை என்பது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணிக்கிறோம்” என்று கூறி சென்றனர்.

பல்வேறு இடங்களில் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கோரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை காண முடிகிறது.

அதுபோன்று விஜயபுராவில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே செல்லலாம், இல்லையென்றால் அனுமதியில்லை என்று ஆசிரியர்கள் உறுதியாக கூறினர்.

இதை ஏற்க மறுத்த மாணவிகள், ”எங்களுக்கு நியாயம் வேண்டும். எங்களுக்கு ஹிஜாபும் வேண்டும், கல்வியும் வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தங்களுடைய வேதனையை வெளிபடுத்தினர்.

அதுபோன்று சிவமொக்காவில் உள்ள டிவிஎஸ் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியே வந்த மாணவிகள்,"நாங்கள் வகுப்புகளை மிஸ் செய்வோம். பரவாயில்லை, ஆனால், ஹிஜாப்பை அகற்ற முடியாது” என்று கூறினர்.

spacer.png

ஹூப்ளியில் ஜே.சி.நகரில் உள்ள எஸ்.ஜே.எம்.வி.எஸ் பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாணவிகளை அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகளும் கலைந்து சென்றனர். இந்த கல்லூரி அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், “மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது. ஆனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நாங்கள் பின்பற்ற வேண்டும். அதனால், உத்தரவை யாராவது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

https://minnambalam.com/politics/2022/02/16/19/again-hijab-issues-raise-in-karnataka-as-college-reopen-today

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் பெண் அடக்குமுறையின் அடையாளம்.. ஆண்களையும் அவமதிக்கிறது. தஸ்லிமா நஸ்ரின்!

February 17, 2022

spacer.png

‛‛ஹிஜாப் என்பது அடக்குமுறையின் அடையாளம். இது பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவமானம்” என வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.

வங்கதேசத்தை சேர்ந்தவரும், டெல்லியில் வசிப்பவருமான பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக மதஉரிமை என்பது அனைவரும் கல்வி பெறுவது தான் என நான் நம்புகிறேன். ஹிஜாப், புர்கா, நிகாப் ஆகியவை அடக்கு முறையின் அடையாளங்கள். முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் ஹிஜாப் அவசியம் என்றும், இன்னொரு தரப்பினர் அவசியம் இல்லை எனவும் நினைக்கின்றனர்.

7ம் நூற்றாண்டில் சில பெண் வெறுப்பாளர்களால் ஹிஜாப் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பெண்கள் வெறும் பாலியல் பொருளாக கருதப்பட்டனர். பெண்களை பார்த்தால் ஆண்களுக்கு பாலியல் ஆசை இருக்கும் என்று நம்பினர். இதனால் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்தனர். ஆண்களிடமிருந்து தங்களை மறைத்து கொண்டனர்.

தற்போதைய 21ம் நூற்றாண்டில் பெண்களுக்கும் சமஉரிமை உள்ளதை நாம் அறிந்துள்ளோம். அதனால் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை அடக்கு முறையின் அடையாளமாக உள்ளது. அதே நேரத்தில் பெண் என்பவர் குழந்தை பெற்றெடுக்கும் நபர் மட்டுமே எனும் நோக்கத்திலான பார்வை புர்காவால் குறைந்துள்ளது என நினைக்கிறேன். இருப்பினும் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவை பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் அவமானப்படுத்துவதாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. இதேபோல் பிற மாவட்டங்களிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே போராட்டம் வெடித்தது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.

இந்த அமர்வு வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கர்நாடகத்தில் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து சமூகமளிக்கின்றனர். ஆசிரியைகளின் கோரிக்கையை ஏற்று சில மாணவிகள் ஹிஜாப்பை அகற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். சில மாணவிகள் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை. இதை விட்டுக்கொடுக்க முடியாது எனக்கூறி திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஹிஜாப் பிரச்னை இன்னும் முடியவில்லை. இந்த நிலையிலேளே தஸ்லிமா நஸ்ரின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர். குறிப்பிட்ட மதம்சார்ந்த விஷயங்களை தனது எழுத்துக்கள் மூலம் கண்டித்ததால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். மேலும் பெண்ணியம் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதி பிரபலமானார். குறிப்பிட்ட மதம் சார்ந்த இவரது எழுத்துக்கள் சர்ச்சையை கிளப்பியதால் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. வங்காளதேசத்தில் இருந்து வெளியேறியவர் அமெரிக்கா, ஐரோப்பா, சுவீடன் நாடுகளில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் குடியேறி டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://globaltamilnews.net/2022/173082

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'தாஜ்மஹால் கட்ட காரணமாக இருந்த பேரழகி மும்தாஜ் பிறந்தநாள் இன்று 01 SEP 01SEP21 21 இஸ்லாமிய ராணிகளிடம் பர்தா எங்க டா?!?!'

 

May be an image of 12 people, people standing and text

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2022 at 20:01, nunavilan said:

 

 

 

 

கர்நாடகா ஹிஜாப் மாணவி: அல் – கய்தா வெளியிட்ட வீடியோவில் என்ன பேசப்பட்டது?

கர்நாடகாவில் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு நடுவே, தனி ஆளாக ஹிஜாப் அணிந்துகொண்டு, அல்லாஹூ அக்பர் என முழக்கமிட்டபடி மாணவி முஸ்கான் கான் சென்றார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது, அல்-கய்தா அமைப்பின் தலைவர் அய்மன் ஸவாஹிரி, அதைக் குறிப்பிட்டு மாணவி முஸ்கானை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சுமார் 8 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவில், கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் தடையை எதிர்த்து கல்லூரிக்கு முன்பாக ஹிஜாப் அணிந்து வந்து முழக்கமிட்ட இஸ்லாமிய மாணவி முஸ்கான் கானை "நமது முஜாஹிப் சகோதரி" என்று குறிப்பிட்டு, அவர் செய்தது "துணிச்சலான சாதனை" எனப் பாராட்டியுள்ளார். இது கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ஹிஜாப் விவகாரத்தில் கண்ணுக்குப் புலப்படாத சிலரின் பங்கு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே தான் கூறி வருவதாகவும் நடந்துவரும் சம்பவங்களை மாநில உள்துறை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்தபோது கர்நாடக உயர்நீதிமன்றமும் இதே கருத்தைக் கூறியிருந்தது எனக் குறிப்பிட்டவர், "அல்-கய்தாவை சேர்ந்தவரின் காணொளி மூலம் இது உறுதியாகியுள்ளது.

இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் உண்மை தெரியவரும்," எனத் தெரிவித்துள்ளார்.

"எங்கள் நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம்"

 
muskan
 
படக்குறிப்பு,

முஸ்கான்

அய்மன் ஸவாஹிரியின் வீடியோ குறித்து முஸ்கான் கானின் தந்தை முகமது ஹுசைன் பிடிஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "எங்களுக்கு அந்த வீடியோ பற்றி எதுவும் தெரியாது. அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. இன்றுதான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அவர் அரபு மொழியில் ஏதோ பேசினார். நாங்கள் அனைவரும் இங்கு அன்புடனும் நம்பிக்கையுடனும் சகோதரர்களைப் போல வாழ்கிறோம்" என்றார்.

 
கர்நாடகா ஹிஜாப் சர்ச்சையில் கருத்து தெரிவித்த அல்-கய்தா தலைவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அய்மன் ஸ்வாஹிரி முஸ்கான் கானை பாராட்டியது குறித்துக் கேட்டபோது, "அது தேவையற்ற பிரச்னை. எங்கள் நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எங்களை பற்றி அவர் பேச தேவையில்லை. இது தவறு, பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி," என்று கூறினார்.

இதற்கு முன்னதாக, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாத பிஸ்வா சர்மா, "கல்வி நிறுவனங்களில் சீருடை அணிவதன் அவசியத்தை அல்-கய்தா ஒருபோதும் புரிந்துகொள்ளாது.

ஹிஜாப் உட்பட, சீருடையைத் தவிர வேறு எதையும் மாணவர்கள் அணிவது ஏற்புடையதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீங்கள் ஹிஜாப் அணிந்தால், நாங்கள் வேறு ஒன்றை அணிவோம். பிறகு, பள்ளிகளும் கல்லூரிகளும் மதம் சார்ந்த ஆடைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கான இடமாக மாறிவிடும். அப்படியிருக்கையில் பள்ளிகளோ கல்லூரிகளோ எப்படி ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியும்?

அதனால் தான் சீருடை ஏற்படுத்தப்பட்டது. அல்-கய்தா அதை ஒருபோதும் புரிந்துகொள்ளாது. ஆனால், இந்திய இஸ்லாமியர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள்." என்றார்

 
Bin laden

பட மூலாதாரம்,GETTY IMAGES

அல் - கய்தாவின் தலைவர் அய்மன் ஸ்வாஹிரி

அல்-கய்தா அமைப்பின் தலைவர் அய்மன் ஸ்வாஹிரி உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக இந்தப் புதிய வீடியோ உள்ளது.

மே 2, 2011 அன்று, அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஸ்வாஹிரி அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் பல ஆண்டுகாளாக ஒசாமா பின்லேடனின் துணை அதிகாரியாகப் பணியாற்றினார். 9/11 தாக்குதலின் மூளையாக இவர் இருந்ததாக நம்பப்படுகிறது.

2020-ஆம் ஆண்டின் இறுதியில், அல்-கய்தா தலைவர் அய்மன் ஸ்வாஹிரி இறந்துவிட்டார் அல்லது நோய்வாய்ப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தை கிளப்பும் வீடியோ

அல் - கய்தா தலைவர் அய்மன் ஸ்வாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும் அய்மன் ஸ்வாஹிரி இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோக்களின் பின்புறங்களை காட்டிலும் இது வேறுப்பட்டதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அய்மன் ஸ்வாஹிரி நல்ல உடல் நலத்துடன் காணப்படுவதால் பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

அல்- கய்தாவின் அல்-ஷபாப் ஊடக பிரிவு இந்த வீடியோவை அதன் டெலிகிராம் மற்றும் ராக்கெட் சாட் சமூக ஊடக கணக்குகள் வாயிலாக வெளியிட்டுள்ளது.

கர்நாடகா ஹிஜாப் மாணவி: அல் – கய்தா வெளியிட்ட வீடியோவில் என்ன பேசப்பட்டது? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தஸ்லிமா நஸ்ரின் சரியான கருத்து.

On 23/2/2022 at 16:00, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'தாஜ்மஹால் கட்ட காரணமாக இருந்த பேரழகி மும்தாஜ் பிறந்தநாள் இன்று 01 SEP 01SEP21 21 இஸ்லாமிய ராணிகளிடம் பர்தா எங்க டா?!?!'

பாக்கிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு, எதிர்ப்பு ஆர்பாட்டங்களிலே ஹிஜாப் அணியாமல் பெண்கள் நிற்பதை காணமுடிகிறது. இந்தியா இலங்கையில் தான் அபாயா, ஹிஜாப்  எல்லாம்.

 

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தஸ்லிமா நஸ்ரின் சரியான கருத்து.

பாக்கிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு, எதிர்ப்பு ஆர்பாட்டங்களிலே ஹிஜாப் அணியாமல் பெண்கள் நிற்பதை காணமுடிகிறது. இந்தியா இலங்கையில் தான் அபாயா, ஹிஜாப்  எல்லாம்.

அதேமாதிரி... துருக்கியில், அநேகமானவர்கள்... மொட்டாக்கு  போடாமல் திரிவார்கள்.
ஜேர்மனிக்கு  வந்தவுடன்... 5 வயது சிறுமியில்  இருந்து, 
75 வயது கிழவி மட்டும் மொட்டாக்கு போட்டுக் கொண்டு திரிவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அதேமாதிரி... துருக்கியில், அநேகமானவர்கள்... மொட்டாக்கு  போடாமல் திரிவார்கள்.
ஜேர்மனிக்கு  வந்தவுடன்... 5 வயது சிறுமியில்  இருந்து, 
75 வயது கிழவி மட்டும் மொட்டாக்கு போட்டுக் கொண்டு திரிவார்கள்.  

🤦‍♂️

துருக்கியில் பல்கலைக்கழகத்திற்க்கு மொட்டாக்கு போட்டு கொண்டு செல்ல முடியாதாம். ஆனால் இந்தியாவில் ஹிஜாப் அணித்து தான் பாடம் படிப்பார்களாம் என்று சொல்லி அல் கய்டாவின் பாராட்டையும் பெற்றவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

தஸ்லிமா நஸ்ரின் சரியான கருத்து.

பாக்கிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு, எதிர்ப்பு ஆர்பாட்டங்களிலே ஹிஜாப் அணியாமல் பெண்கள் நிற்பதை காணமுடிகிறது. இந்தியா இலங்கையில் தான் அபாயா, ஹிஜாப்  எல்லாம்.

 

பாகிஸ்தான்  அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் முட்டாக்குப் போட்டவயை அரிதட்டு வைச்சு தேடினாலும் ஒரு 5  இல்ல 6 தான் தேறும்...

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.