Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், ரஷியா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. 
 
http://www.samakalam.com/அமெரிக்கா-பிரிட்டன்-உள்/

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

இதுதொடர்பாக ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

ஜேர்மனி...  இப்பவும், ரஷ்யாவுடன் நட்பு  நாடுதான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2022 at 08:16, தமிழ் சிறி said:

ஜேர்மனி...  இப்பவும், ரஷ்யாவுடன் நட்பு  நாடுதான். 😂

எப்போதும்........    நட்பு நாடு....ஏனென்றால் இங்கே 10....15%ரஷியார்கள் வாழ்கிறார்கள் ஆகவே புட்டின் ஜேர்மனியை தாக்கும் வாய்ப்பு இல்லை ஜேர்மனி எது செயதாலும் அமைதியாக இருப்பது தான் ரஷ்யாவுக்கு இருக்கும் ஓரே மார்க்கம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எப்போதும்........    நட்பு நாடு....ஏனென்றால் இங்கே 10....15%ரஷியார்கள் வாழ்கிறார்கள் ஆகவே புட்டின் ஜேர்மனியை தாக்கும் வாய்ப்பு இல்லை ஜேர்மனி எது செயதாலும் அமைதியாக இருப்பது தான் ரஷ்யாவுக்கு இருக்கும் ஓரே மார்க்கம் 🤣

நீங்கள் யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கியதற்காக ஒரு சின்ன சாத்து விழலாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

நீங்கள் யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கியதற்காக ஒரு சின்ன சாத்து விழலாம்.🤣

சாத்தியமில்லை ஏனென்றால்   1...புடின். ஜேர்மனி தலைநகர்  பேர்லின் இல் பல ஆண்டுகளுக்கு முன்பு  ரஷ்யா புலனாய்வுததுறையின்.  தலைவராக இருந்தவர் ஜேர்மனி பற்றி நன்கு தெரியும்    2...புடினின். இரண்டு மகள்மார்  இங்கே வாழ்கிறார்கள் [சரியாக தெரியாது ]. 3...பல வழிகளில் வருமானம் உண்டு” ரஷ்யாவுக்கு 

ரஷ்யாவின் முன்னாள் டென்சில்  விளையாட்டு வீரக்கனை புடினின்  சின்னவீடு. சுவிஸ் இல் இரணைப்பிள்ளைகளுடன்  வாழ்கிறார்கள் 😂 ஜேர்மனி இருக்கும் போது முதல் மனைவிக்கு நிறைய அடி கொடுப்பார்   😅புடினை. மனைவியுடன் படத்தில் பாரத்தீர்களா.? ஆனாலும் பல்துறை வல்லுநர் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

எப்போதும்........    நட்பு நாடு..

கத்தையா அண்ணா, ரஷ்யா தனது நட்புநாடுகள் இல்லை என்று நீக்கியதில் ஐரோப்பிய யுனியனும் ஒன்று.அதில் யேர்மனியும் வருகிறது.
பெரியவர் புரின் ஜனநாய விழுமியங்களை மதிப்பவர் அவரிடம் உங்கள் சர்வாதிகார யேர்மனியை நட்புநாடாக வைத்திருப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ரஷ்யா ஜனநாயகத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்றபடியால் யேர்மனியை தாக்க  நினைக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

கத்தையா அண்ணா, ரஷ்யா தனது நட்புநாடுகள் இல்லை என்று நீக்கியதில் ஐரோப்பிய யுனியனும் ஒன்று.அதில் யேர்மனியும் வருகிறது.
பெரியவர் புரின் ஜனநாய விழுமியங்களை மதிப்பவர் அவரிடம் உங்கள் சர்வாதிகார யேர்மனியை நட்புநாடாக வைத்திருப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ரஷ்யா ஜனநாயகத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்றபடியால் யேர்மனியை தாக்க  நினைக்க மாட்டார்.

விளங்க நினைப்பவன் ஜேர்மனியை தாக்க  நினைக்க மாட்டார் என்று தீர்ப்பு வழங்கியதிற்க்கு நன்றிகள் பல ஆனாலும் கணக்கில் பிழை விட்டு விட்டீர்கள் தடை செய்யப்பட்ட நாடுகள் 17..ஐரோப்பா ஒன்றியம் 28 நாடுகள் கொண்டது” ஐரோப்பா ஒன்றியம் முழுமையாக தடை செய்யப்படவில்லை....ஜேர்மனியும் தடை செய்யப்படவில்ல....என்று நம்புகிறேன் நான் பார்க்கதா செய்திகள் இருக்கலாம் உங்களுக்கு தெரிந்தால் பதிவு செய்யுங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/3/2022 at 08:16, தமிழ் சிறி said:

ஜேர்மனி...  இப்பவும், ரஷ்யாவுடன் நட்பு  நாடுதான். 😂

ஜேர்மன்காரங்கள் எப்பிடிப்பட்ட நசுக்கல் கள்ளர் எண்டது ஜேர்மனியிலை இருக்கிற எங்களுக்குத்தான் தெரியும்.உக்ரேனை மாதிரி பெரிசாய் வாய் வீரம் காட்டாங்கள்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

கணக்கில் பிழை விட்டு விட்டீர்கள் தடை செய்யப்பட்ட நாடுகள் 17..ஐரோப்பா ஒன்றியம் 28 நாடுகள் கொண்டது” ஐரோப்பா ஒன்றியம் முழுமையாக தடை செய்யப்படவில்லை....ஜேர்மனியும் தடை செய்யப்படவில்ல....என்று நம்புகிறேன்

கத்தையா அண்ணா  ரஷ்யா தனது நட்பு நாடுகள் இல்லை என்று வெளியிட்ட  பட்டியலை தான் செய்தியில் சொன்னார்கள்.  EU countries என்று தான் ரஷ்யா தெரிவித்துள்ளது. நீங்கள் சொன்ன படி ஐரோப்பா ஒன்றியம் முழுமையாக தடை செய்யப்படவில்லை  ஜேர்மனியும் தடை செய்யப்படவில்லை என்றால் ரஷ்யா நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து தான் நீக்கிய ஐரோப்பிய நாடுகளின் பெயர்களை  அல்லவா தனியாக குறிப்பிட்டிருக்கும்.
மேலே உள்ள தமிழ்  செய்தியில்  நட்பு நாடுகள் இல்லை என்று ரஷ்யா அறிவித்த நியூசீலண்ட், சிங்கப்பூர்,தைவான் பெயர்களும் இல்லை.
தைவானை தனிநாடாக ஏற்று கொண்ட ரஷ்யாவுக்கு பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.