Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாப்பாடு இல்லை.. குழந்தைக்கு பால் கூட இல்லை.. தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் இலங்கை மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு இல்லை.. குழந்தைக்கு பால் கூட இல்லை.. தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் இலங்கை மக்கள்..

 

https://tamil.oneindia.com/

 

இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
 
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது
boat-people-1-300x168.jpg
 

இலங்கை பொருளாதார நிலை

இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. அதேபோல் இலங்கையில் கடுமையான மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் விலை அங்கே ஏறிவிட்டது. இலங்கையில் ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாய் ஆகும்.

 
இலங்கை விலைவாசி

இலங்கை விலைவாசி

அதேபோல் 1 கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய் ஆகும். கோழி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய். முட்டை ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க மக்கள் பல கிலோ மீட்டர் லைனில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த அவலம் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி எனப்படும் Samagi Jana Balawegaya அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. மக்களும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.

அகதிகள் தமிழ்நாடு

இந்த நிலையில்தான் இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியா இலங்கை இடையே 13 மணல் திட்டு உள்ள பகுதியில் இன்று கடலோர காவல்படையினர் ரோந்து பணிகளை செய்து வந்தனர். அப்போது தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டு பகுதியில் 1 ஆண், 2 பெண்கள், ஒரு கை குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை உடனே கடலோர காவல்படையினர் மீட்டு க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை அகதிகள்

இவர்களிடம் க்யூ பிரிவு போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில் பஞ்சம் காரணமாக இவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை, குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூட முடியவில்லை. விலைவாசி அதிகமாகிவிட்டது. வேலையும் கிடைக்கவில்லை.

 
தமிழ்நாடு உதவி

தமிழ்நாட்டிற்கு வந்தால் தப்பித்துக்கொள்ளலாம். இங்கே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நம்பி வந்தோம் என்று அவர்கள் விசாரணையில் கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வந்த இவர்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்பட்டது.

தனுஷ் கோடி

எல்லோருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. கை குழந்தைக்கு பால் தரப்பட்டது. இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருக்கும் மேலும் பலர் தமிழ்நாட்டிற்கு தப்பித்து வர வாய்ப்பு உள்ளதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து பலர் இங்கே வரலாம் என்றும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் இங்கு ரோந்து பணிகளை கடலோர காவல்படையும், உளவுத்துறையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

ஆனால் இவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வந்த இவர்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்பட்டது.

அப்போ எப்படி எந்த மொழியில் விசாரணை நடத்துகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, satan said:

அப்போ எப்படி எந்த மொழியில் விசாரணை நடத்துகிறார்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

சாப்பாடு இல்லை.. குழந்தைக்கு பால் கூட இல்லை.. தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் இலங்கை மக்கள்..

இந்தியா தான் ஏதோ செற்றப் பண்ணி ஏத்திவிட்ட மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார்! இவர்கள் பேசுகிற தமிழ் அவர்களுக்கு விளங்கவில்லையோ? நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும் என்பார்கள், சரியாத்தான் இருக்கு. தமிழ் நாடு, தஞ்சம் தேடியவர்கள் தமிழர், விசாரணை தமிழில் ஆனால் அவர்கள் தமிழரா சிங்களவரா? என தெரியவில்லையாம். இது குசும்புதானே! ஒருவேளை இப்பிடியாய் இருக்குமோ,  தமிழ் பேசும் சிங்களவரோ?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சாமியார்! இவர்கள் பேசுகிற தமிழ் அவர்களுக்கு விளங்கவில்லையோ? நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும் என்பார்கள், சரியாத்தான் இருக்கு. தமிழ் நாடு, தஞ்சம் தேடியவர்கள் தமிழர், விசாரணை தமிழில் ஆனால் அவர்கள் தமிழரா சிங்களவரா? என தெரியவில்லையாம். இது குசும்புதானே! ஒருவேளை இப்பிடியாய் இருக்குமோ,  தமிழ் பேசும் சிங்களவரோ?  

தமிழு சரிதான்..அனால் கொஞ்சம் படிச்ச தமிழ்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி, உணவுப் பஞ்சம்: நான்கு மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள்

22 மார்ச் 2022
 

இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் உள்ளதால், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேச்சாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட 6 பேர் நான்கு மாத கைக்குழந்தையுடன் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிராப்ட் கப்பல் சென்றது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த ஆறு இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், இந்த ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக, பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை தமிழர்கள் மீது மெரைன் போலீசார் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-60841530

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மேலும் 10 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தனர்!

யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில்  தஞ்சமடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வந்துள்ளதாக  வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால்மா,  அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின்  விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருந்து  தமிழகத்திற்கு அகதிகாளக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டத்தின் கடற்கரையில் இருந்து படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர்  தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

நடுக்கடலில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட  பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி  சுமார்  37 மணி நேரத்திற்கும் மேலாக  குழந்தைகளுடன் நடுக்கடலில்  தத்தளித்தளித்த நிலையில்  பல மணி நேர  முயற்சிக்கு பின்னர் இயந்திரம் திருத்தப்பட்டு, நேற்று  செவ்வாய்கிழமை  இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு  தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின்  2012ல் மீண்டும்  இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக  அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும்  என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த  கடல் பாதுகாப்பு அதிகரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய  தகவல் தெரிவிக்கின்றன.

vavuniya-12.jpg

vavuniya-13.jpg

vavuniya-9.jpg

vavuniya-7.jpg

vavuniya-8.jpg

vavuniya-2.jpg

vavuniya-3.jpg

IMG-20220322-WA0032.jpg

https://athavannews.com/2022/1273006

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடியால் தமிழ்நாடு வந்த அகதிகள் - 'பிழைத்தால் இந்தியாவில் வாழ்வோம் இல்லையெனில் கடலோடு சாவோம்'

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில் ஒரே நாளில் 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் மீது மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

அதே போல் தற்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாட்டால் இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும், எனவே சர்வதேச கடல் எல்லை, மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த ஆறு பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல் திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

மணல் திட்டில் அதிகாலை முதல் குடிநீர் மற்றும் உணவு இன்றி கைக்குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தவித்து வருவதாக அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் மணல் திட்டில் இருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.

அதை தொடர்ந்து திங்கள் கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் வவுனியாவை சேர்ந்த ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுள்ளனர்.

37 மணி நேரமாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள்

நடுக்கடலில் படகில் இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், பல மணி நேர முயற்சிக்குப் பின் இஞ்சின் சரி செய்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.

 

இலங்கை நெருக்கடி

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் 16 இலங்கை தமிழர்கள் மீதும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்கவும், அவர்களுடன் வந்துள்ள சிறுவர்களை தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்ல தயாரான போது தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழர்கள் அனைவரையும் மண்டபம் ஈழ அகதிகள் மறு வாழ்வு முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறப்பு அரசாணை வழக்கியதால் இலங்கை தமிழர்களை புழல் சிறைக்கு அழைத்து செல்லாமல் அரசாணைக்காக இரவு வரை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை தமிழர்கள் காத்திருந்தனர்.

இரவு வரை அரசாணை நீதிமன்றத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனுப்படாததால் மீண்டும் இலங்கை தமிழர்களை மீண்டும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை சிறையில் அடைப்பதா அல்லது மண்டபம் ஈழ அகதிகள் முகாமில் ஒப்படைப்பதா என தெரியாமல் மெரைன் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

'இலங்கையில் சாமானிய மக்கள் வாழ முடியாது'

இலங்கை தமிழர்கள் தமிழகம் வருவதற்கான காரணம் குறித்து தனுஷ்கோடி வந்துள்ள மன்னாரை சேர்ந்த கியூரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தனுஷ்கோடி வர முயற்சி செய்து திங்கள்கிழமை இரவு அங்கிருந்து கிளம்பினோம். மன்னார் மாவட்டத்திலிருந்து பைபர் படகில் எங்களை அழைத்து வந்து இங்கு விட்டவர்களின் முழுமையான தகவல் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனால் தமிழகம் அழைத்து வர தலா நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் என ஆறு நபர்களுக்கு 60 ஆயிரம் கொடுத்தோம்."

 

இலங்கை நெருக்கடி

 

படக்குறிப்பு,

கியூரி

"எங்களுக்காக திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு பைப்பர் படகு பேசாலை கடற்கரையில் காத்திருந்தது. அந்த படகில் முகத்தை மூடி இருந்த நபர் ஒருவர் கையசைத்தார் நாங்கள் படகில் ஏறி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வந்து இறங்கினோம்.

இறுதிக்கட்ட போரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு 2001ஆம் ஆண்டு அகதியாக வந்து குடியாத்தம் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியை திருமணம் செய்தேன். பின் இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததால் விமானம் மூலம் இலங்கைக்கு சென்று வாழ்ந்து வந்தோம்.

எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 மாதங்களாக நான் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறேன். தற்போது இலங்கையில் உள்ள சூழ்நிலையில் எனது இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என்னால் தனியாக வாழ இயலாது. எனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் படகு மூலம் அகதியாக தனுஷ்கோடி வந்தேன்" என்று கூறினார் கியூரி.

உயிரை காத்து கொள்ள இரண்டாவது முறையாக தமிழகத்தில் தஞ்சம்

தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள சிவரத்தினம் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறேன். தற்போது இலங்கையில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்கு சாமானிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பத்துடன் எனது அக்கா குடும்பத்தையும் சேர்த்து 10 பேர் திங்கள்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்.

இலங்கையில் தற்போது அரிசி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 300 ரூபாய் கொடுத்தாலும் போதிய அரிசி கிடைப்பதில்லை குழந்தைகளுக்கு கலந்து கொடுக்கும் பால் மாவு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கையைப் பொறுத்த அளவு தற்போது உள்ள சூழ்நிலையில் கடுமையாக உழைத்தால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியும் ஆனால், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் நாங்கள் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளோம்.

எங்களை போல் இலங்கையில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருவதற்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் பைப்பர் படகிற்கு போதிய மண்ணெண்ணை கிடைக்காததாலும், மண்ணெண்ணெய் விலை உயர்வால் வாங்க இயலாததாலும் இலங்கையில் தங்கி உள்ளனர்.

நான் தனுஷ்கோடி வந்தது எனது சொந்த படகு என்பதால் 15 ஆயிரம் ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கி கொண்டு குடும்பத்துடன் அகதியாக தமிழகம் வந்துள்ளேன்.

இலங்கையில் ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிட 2500 ரூபாய் தேவைப்படும் அதுவும் இரண்டு வேளை உணவு மட்டும் சாப்பிட முடியும் அடுத்த வேளைக்கு மீண்டும் சமைக்க வேண்டும்.

1990 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன்.இலங்கையில் பிரச்சனை முடிவுக்கு வந்த பின்பு 2012 ஆம் ஆண்டு விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்குச் சென்றேன். ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக பட்டினிச்சாவு இருந்து பிழைப்பதற்காக மீண்டும் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு அகதியாக வந்து உள்ளேன் என்றார் சிவரத்தினம்.

'ஒரு நாள் சாப்பட்டிற்கு 3 ஆயிரம் செலவாகிறது'

இலங்கையில் இருந்து வந்துள்ள சிவசங்கரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதுவே அசைவ உணவு சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஒரு வேலைக்கு செலவாகிறது." என்றார்.

"எனது கணவர் கூலி வேலைக்கு செல்கிறார். அவருக்கு தினசரி வருமானம் 1500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்து என்னால் எப்படி என் குழந்தையுடன் இலங்கையில் வாழ முடியும், எனவே என் தம்பி குடும்பத்துடன், படகில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம்.

இலங்கை அரசு இதுவரை எந்த விதமான உதவியும் மக்களுக்கு செய்யவில்லை. இலங்கையில் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வர தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியாது.

 

இலங்கை நெருக்கடி

 

படக்குறிப்பு,

சிவசங்கரி

என் தம்பி என்னையும் என் குடும்பத்தையும் தமிழகத்திற்கு அகதியாக செல்ல அழைத்த போது இங்கிருந்து கஷ்டப்படுவதற்கு பதில் இந்தியா போவோம் 'பிழைத்தால் இந்தியாவில் வாழ்வோம் இல்லையெனில் கடலோடு சாவோம்' என்று முடிவு செய்து தான் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மன்னாரில் இருந்து கிளம்பினோம்.

கிளம்பி ஒரு மணி நேரத்தில் படகு என்ஜினில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் நின்றது. இன்ஜினை சரி செய்ய சுமார் 37 மணி நேரத்துக்கு மேலானதால் இன்ஜினை சரி செய்யும் வரை கடும் வெயிலில் குடிநீர், உணவு இல்லாமல் உயிருக்கு போராடிய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்.

இலங்கையில் இருக்கும் மக்கள் மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகின்றனர். காரணம் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் கடப்பது கடும் சவாலாக உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகத்திற்கு அகதிகளாக அதிகமான இலங்கை தமிழர்கள் வர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார் சிவசங்கரி.

உரிய ஆவணங்கள் இல்லாததால் சட்ட நடவடிக்கை

தமிழகத்திற்கு வரும் இலங்கை அகதிகள் மீது எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக பதிவு செய்யாமல் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இலங்கை நெருக்கடி

இலங்கையில் இருந்து வரக்கூடிய நபர்கள் உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் வந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியும். உரிய ஆவணங்கள் இன்றி வரும் நபர்கள் மீது நிச்சயம் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் தான் தற்போது தனுஷ்கோடி வந்துள்ள இலங்கை தமிழர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தங்க அனுமதி கோரினால் அதை ஏற்க முடியாது. அவர்கள் எந்த நோக்கத்தோடு தமிழகத்திற்குள் வருகிறார்கள், அவர்கள் யார் என்ற பல்வேறு கோணங்களில் சந்தேகம் உள்ளதால் சட்ட ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாக மெரைன் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம்

கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாளில் 16 இலங்கை தமிழர்கள் இரு நாட்டு பாதுகாப்பையும் மீறி கடல் வழியாக படகில் தமிழகத்திற்குள் நுழைந்தது கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இன்னும் பலர் தமிழகம் வர தயாராக இருப்பதாக இலங்கையில் இருந்து வந்துள்ள இலங்கை தமிழர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய கடற்பரப்பில் கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த முடிவு செய்ததுடன், கடற்கரை ஓரங்களில் தமிழக கடலோர காவல் குழும போலீசார், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

https://www.bbc.com/tamil/india-60852564

  • கருத்துக்கள உறவுகள்

Pancha-paandavar.jpg

th?id=OIP.v2juMlJf1xnE13kJNdDa4gAAAA&pid=Api&P=0&w=179&h=180

  • கருத்துக்கள உறவுகள்

நரக அசுரர்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

th?id=OIP.v2juMlJf1xnE13kJNdDa4gAAAA&pid=Api&P=0&w=179&h=180

ஸ்ரீலங்காவில் உள்ள... எல்லாத்தையும் விற்று, காசாக்கி போட்டார்கள்.
தமிழன் கேட்ட  மாதிரி... அவனது ... வடக்கு, கிழக்கு நிலத்தை...
சண்டை இல்லாமல், அவனுக்கே... கொடுத்திருந்தால்...
இந்த நிலைமை வந்திருக்குமா?

தென் கிழக்கு ஆசியாவில்... உள்ள, 
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,  நேபாளம், பூட்டான்.. என்று எல்லா நாடுகளும்.
இந்த கொரோனா நேரம்... பொருளாதாரத்தில் சிக்கல் இல்லமால், முன்னேறி  இருக்கு.
ஸ்ரீலங்கா மட்டும்... அதல பாதாளத்தில் விழுந்திருக்கு,
அதுக்கு... கொரோனாவை சாட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

உண்மைக்கு காரணம், 30 வருட போர் என்பதனை ஒப்புக் கொள்ள மனம் இல்லை.   

  • கருத்துக்கள உறவுகள்

தடை தாண்டி மீன் பிடிப்போரை கேட்கவும் ஆளில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people

பஞ்சம் பிழைக்க வந்தோர் மீது, பாய்ந்தது... பாஸ்போர்ட் சட்டம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.