Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியின் பெயரால்  உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள்

March 24, 2022
spacer.png
 
உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தனது சமீபத்திய காணொளியில் மூலம் உரையாற்றிய அவர்,

ரஷ்யாவின் போர்  உக்ரைனுக்கு  எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரம் தொடர்புடையது அது – ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் .

“உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால்  உக்ரைனை ஆதரிக்கவும், சுதந்திரத்தை ஆதரிக்கவும், எங்களுடைய வாழ்க்கையை ஆதரிக்கவும் வாருங்கள்” என்று ஸெலென்ஸ்கி   அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.ilakku.org/support-ukraine-in-the-name-of-peace-presidents-appeal-to-the-nations-of-the-world/

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தங்கள் மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் மக்கள் போராடத் தயாரில்லாத போது, எங்கோவிருக்கும் உக்ரேனுக்காக உலக மக்கள் போராடுவார்களா என்பது கேள்விக்குறியே.

ஆனால், உக்ரேன் இன்றிருக்கும் நிலை மிகவும் பரிதாபகரமானது, அவலமானது. அதன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இக்கொடுமையான அழிவு யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கொல்லப்பட்டுவரும் இம்மக்களுக்கு அனுதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாத நிலையிலேயே பல நாடுகள் இருக்கின்றன. இதேவேளை உக்ரேனியர்கள் சிலரின் முன்னைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இனக்குழுமங்களின் அவலமும் கண்ணில் வந்துபோவது, இவ்வினக் குழுமங்களில் குறிப்பிடத் தக்களவு மக்களை உக்ரேனின்மீது அனுதாப்பபடுவதையும் தடுத்தே வருகிறது. ஆனால், தனிப்பட்ட சிலரின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த உக்ரேனும் அழிக்கப்படுவதை ஆதரிப்பதோ அல்லது வேடிக்கை பார்ப்பதோ சரியான தெரிவாக இருக்காது என்பதே எனது அனுமானம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேனுக்கு ஏட்டிக்கு போட்டியாக ஆயுத உதவி செய்கின்றார்கள். ஆளுதவியும் போய்க்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே பெரிதாக அனுதாபப் படத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

தனிப்பட்ட சிலரின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த உக்ரேனும் அழிக்கப்படுவதை ஆதரிப்பதோ அல்லது வேடிக்கை பார்ப்பதோ சரியான தெரிவாக இருக்காது என்பதே எனது அனுமானம்.

உங்கள் அனுமானம் தான் மிகச் சரியானது.
இனக்குழுமங்களுக்கு பல காலமாகவே அகன்ற ரஷ்யா மீது ஒரு கவர்ச்சி இருப்பதாக தெரியவருகிறது.
இப்போ சிங்களவர்களும் மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்களும் ரஷ்ய ஆதரவு மேற்கு நாடு எதிர்ப்பு என்கின்ற ஒரு புள்ளியில்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு ஏட்டிக்கு போட்டியாக ஆயுத உதவி செய்கின்றார்கள். ஆளுதவியும் போய்க்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே பெரிதாக அனுதாபப் படத்தேவையில்லை.

இதே உதவியை எமக்கும் செய்திருந்தால், எமது தேசத்தைத் தக்க வைத்திருப்போம். ஆனால், எல்லோருமே சேர்ந்துதான் அழித்தார்கள்.

எப்படியிருப்பினும், இன்று கடுமையான வான்குண்டுவீச்சுக்கும், ஏவுகணைத் தாக்குதலுக்கும் முகம்கொடுத்து, உயிர்காக்க உலகெங்கும் ஓடும் அந்த உக்ரேனியரின் முகத்தில் எனக்குத் தெரிவதும் எனது அக்காளின், தங்கையின், தாயின் அதே வலிதோய்ந்த முகம்தான். 

எமக்குத்தான் சுதந்திரம் கிட்டவில்லை, அவர்களாவது இந்த அகோர யுத்தத்திலிருந்து விடுதலை பெறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரஞ்சித் said:

இதே... உக்ரேன்தான், முள்ளி வாய்க்காலில்...
எமது அக்காளின், தங்கையின், தாயின் தலையில் குண்டு போட்டது.
அப்படி இருந்தும், உக்ரேனுக்கு  முட்டு கொடுக்க எப்படி மனம் வருகுதோ... 

உக்ரேன்... ரஷ்யாவின் பாதுகாப்பில் இருப்பதுதான், அவர்களுக்கு  நல்லது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இதே... உக்ரேன்தான், முள்ளி வாய்க்காலில்...
எமது அக்காளின், தங்கையின், தாயின் தலையில் குண்டு போட்டது.
அப்படி இருந்தும், உக்ரேனுக்கு  முட்டு கொடுக்க எப்படி மனம் வருகுதோ... 

உக்ரேன்... ரஷ்யாவின் பாதுகாப்பில் இருப்பதுதான், அவர்களுக்கு  நல்லது. 🤣

நாங்கள் சிங்களவனின் பாதுகாப்பில் இருபதுபோல என்கிறீர்கள். நல்லதுதான், நாங்களும் இருப்போம், அதுதான் எமக்கும் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரஞ்சித் said:

இதே உதவியை எமக்கும் செய்திருந்தால், எமது தேசத்தைத் தக்க வைத்திருப்போம். ஆனால், எல்லோருமே சேர்ந்துதான் அழித்தார்கள்.

எப்படியிருப்பினும், இன்று கடுமையான வான்குண்டுவீச்சுக்கும், ஏவுகணைத் தாக்குதலுக்கும் முகம்கொடுத்து, உயிர்காக்க உலகெங்கும் ஓடும் அந்த உக்ரேனியரின் முகத்தில் எனக்குத் தெரிவதும் எனது அக்காளின், தங்கையின், தாயின் அதே வலிதோய்ந்த முகம்தான். 

எமக்குத்தான் சுதந்திரம் கிட்டவில்லை, அவர்களாவது இந்த அகோர யுத்தத்திலிருந்து விடுதலை பெறட்டும்.

எமது ஈழ விடுதலைப்போர் எதனால் ஆரம்பிக்கப்பட்டது என உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்?

அரேபிய நாடுகளில் நடக்கும் சண்டைகள் வியாபார நோக்குடன் நடத்தப்படுபவை.

ஆனால் இந்த ரஷ்ய-உக்ரேன் யுத்தம் எதனால், எதற்காக நடத்தப்படுகின்றது என தெரியுமா?

இந்த யுத்தத்தில் ஜேர்மனி ஒரு  நன்றி கெட்ட தனமாக நடக்கின்றது.

மற்றும்படி யுத்த அழிவுகள் எமக்கும் சோகத்தை தருகின்றது தான்.

3 hours ago, ரஞ்சித் said:

இதே உதவியை எமக்கும் செய்திருந்தால், எமது தேசத்தைத் தக்க வைத்திருப்போம். ஆனால், எல்லோருமே சேர்ந்துதான் அழித்தார்கள்.

எமது அழிவுகளுக்கு இந்தியா மட்டுமே கதாநாயகன்.

3 hours ago, ரஞ்சித் said:

எமக்குத்தான் சுதந்திரம் கிட்டவில்லை, அவர்களாவது இந்த அகோர யுத்தத்திலிருந்து விடுதலை பெறட்டும்.

உக்ரேன் அமெரிக்காவின் முதுகை சொறியும் மட்டும் சுதந்திரமாகத்தானே நடமாடியது?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரஞ்சித் said:

நாங்கள் சிங்களவனின் பாதுகாப்பில் இருபதுபோல என்கிறீர்கள். நல்லதுதான், நாங்களும் இருப்போம், அதுதான் எமக்கும் பாதுகாப்பு.

நீங்கள் கருதும் சிங்கள பாதுகாப்பு இதுவா சார்? 😎

Bild

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ சிங்களவர்களும் மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்களும் ரஷ்ய ஆதரவு மேற்கு நாடு எதிர்ப்பு என்கின்ற ஒரு புள்ளியில்.

ஆனால் முற்றிலும் வேறுபட்ட, துருவப்பட்ட காரணங்களால் என்று தெரிந்தும் அதை மறைக்கின்றீர்கள்.

தமிழர்கள் மேற்கை வெறுப்பது, சிங்கள பெளத்த பேரினவாதத்தில் இருந்து தம்மை மீட்டெடுக்க வந்த புலிகள் எனும் மீட்பர்களின் அழிவுக்கும் அதன் பின்னரான அவலத்துக்கும் தாம் நம்பியிருந்த மேற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது மட்டுமன்றி இன்றுவரைக்கும் தம் அவலத்தை இலங்கை அரசை தம் பக்கம் கொண்டு வர வைக்கும் ஒரு துருப்புச் சீட்டாக மட்டுமே அது பயன்படுத்துவதன் மீதான எதிர்ப்புணர்வு.

ஆனால் சிங்களம், தமிழர்களை மேலும் அழித்தொழிப்பதற்கு தடையாக மேற்கு இந்த துருப்புச்சீட்டை மேற்கு பயன்படுத்துகின்றது ஆத்திரத்திலும் இதன் மூலம் தமிழர்களை தாம் நினைத்தவாறு அழித்தொழிக்க முடியவில்லையே எனும் கோபத்திலும்.

ஒரு வட்டப்பாதையில் எதிர் எதிராக பயணிக்கும் போது, ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் அதன் அர்த்தம் பயணிக்கும் திசை ஒன்று என்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் கருதும் சிங்கள பாதுகாப்பு இதுவா சார்? 😎

Bild

அதை உங்களின் நண்பரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். ஏனென்றால் உக்ரேன் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதுதான் உக்ரேனுக்குப் பாதுகாப்பு என்று அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு இனத்தையும் அதன் தேசத்தையும் அழிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு அதிகாரத்தின் கீழ் இருப்பதுதான் அந்த இனத்திற்குப் பாதுகாப்பு என்றும் கூறும் உங்களின் நண்பரிடம் நாமும் அப்படியே சின்களவரின் பாதுகாப்பில் இருக்கலாமா என்று கேட்கிறேன்.

உங்களுக்குப் புரிகிறது, அவருக்கும் புரியப்படுத்துங்கள்.

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அனுமானம் தான் மிகச் சரியானது.
இனக்குழுமங்களுக்கு பல காலமாகவே அகன்ற ரஷ்யா மீது ஒரு கவர்ச்சி இருப்பதாக தெரியவருகிறது.
இப்போ சிங்களவர்களும் மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்களும் ரஷ்ய ஆதரவு மேற்கு நாடு எதிர்ப்பு என்கின்ற ஒரு புள்ளியில்.

அதுமட்டுமல்ல, ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த, ஈழத்தமிழினம் மீதான சிங்கள இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் சரியென்கிற நிலைக்கு சிலர் வெகு விரைவில் வருவார்கள். அந்தப்புள்ளியிலும் இவர்கள் சிங்களவர்களைச் சந்திப்பார்கள், பொறுத்திருந்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

அதை உங்களின் நண்பரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். ஏனென்றால் உக்ரேன் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதுதான் உக்ரேனுக்குப் பாதுகாப்பு என்று அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு இனத்தையும் அதன் தேசத்தையும் அழிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு அதிகாரத்தின் கீழ் இருப்பதுதான் அந்த இனத்திற்குப் பாதுகாப்பு என்றும் கூறும் உங்களின் நண்பரிடம் நாமும் அப்படியே சின்களவரின் பாதுகாப்பில் இருக்கலாமா என்று கேட்கிறேன்.

உங்களுக்குப் புரிகிறது, அவருக்கும் புரியப்படுத்துங்கள்.

அதுமட்டுமல்ல, ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த, ஈழத்தமிழினம் மீதான சிங்கள இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் சரியென்கிற நிலைக்கு சிலர் வெகு விரைவில் வருவார்கள். அந்தப்புள்ளியிலும் இவர்கள் சிங்களவர்களைச் சந்திப்பார்கள், பொறுத்திருந்து பாருங்கள். 

சிங்களம் எதிரி என்பதற்காக எந்த ஒரு புள்ளியிலும் சந்திக்கக்கூடாது என்பதும் மிகத் தவறான அணுகுமுறை அல்லது பிடிவாதம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, விசுகு said:

சிங்களம் எதிரி என்பதற்காக எந்த ஒரு புள்ளியிலும் சந்திக்கக்கூடாது என்பதும் மிகத் தவறான அணுகுமுறை அல்லது பிடிவாதம் தான்.

வேலையாலை வந்து  நீங்கள் சொன்ன இதே பதிலை உப்பு தூள் போட்டு கொஞ்சம் காரமாய் எழுதுவம் எண்டு யோசிச்சனான்.

என் வேலையை குறைத்ததிற்கு நன்றி விசுகர்.🙏 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிங்களம் எதிரி என்பதற்காக எந்த ஒரு புள்ளியிலும் சந்திக்கக்கூடாது என்பதும் மிகத் தவறான அணுகுமுறை அல்லது பிடிவாதம் தான்.

சிங்களவர்களை நீங்கள் எந்தப்புள்ளியில் சந்திக்கிறீர்கள்? அவர்களின் இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் கீழ்  “பாதுகாப்பாக” வாழலாம் என்கிற புள்ளியிலா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

முற்றிலும் வேறுபட்ட, துருவப்பட்ட காரணங்களால் என்று தெரிந்தும் அதை மறைக்கின்றீர்கள்.

தமிழர்கள் அழிவிற்கும் துன்பத்திற்கும் மேற்குலகம் தான் காரணம் என்று நம்புவதால் மேற்குலகில் வாழ்கின்ற தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலை எடுத்து  ரஷ்யாவின் உக்ரைனை ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் நிலையை எடுத்தார்கள் என்கிறீர்கள். யாழ் களத்தில் இதுபற்றி  எவ்வளவோ விளக்கமாக எடுத்து சொல்லிவிட்டார்கள். நீங்கள் உங்கள் பிடிவாதத்தை மாற்ற போவது இல்லை.
மேற்கில் குடியேறிய ரஷ்ய வம்சாவளி கூட ரஷ்ய எதிர்ப்பு உக்ரைன் ஆதரவு நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
இன்னொரு திரியில் இலங்கையில் உள்ள தமிழர்களும் மேற்குநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் போன்றே ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு  ஆதரவு, உக்ரைன் எதிர்ப்பு நிலை கொண்டவர்கள் என்றீர்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் புரின் , ரஷ்யா மீதான பேராதரவு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் இலங்கையில் ? எனக்கு இலங்கை பற்றி சொன்னவர்கள் அப்படி சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

சிங்களவர்களை நீங்கள் எந்தப்புள்ளியில் சந்திக்கிறீர்கள்? அவர்களின் இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் கீழ்  “பாதுகாப்பாக” வாழலாம் என்கிற புள்ளியிலா? 

தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமெனில் சிங்களவரிடம் இருந்தே தமிழருக்கு கிடைக்கும். வேறு எவராலும் தமிழருக்கு தீர்வு தர முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, kalyani said:

தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமெனில் சிங்களவரிடம் இருந்தே தமிழருக்கு கிடைக்கும். வேறு எவராலும் தமிழருக்கு தீர்வு தர முடியாது.

ஆக்கிரமிப்பையும், இனவழிப்பையும் சரியென்று ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்கள் அழிவிற்கும் துன்பத்திற்கும் மேற்குலகம் தான் காரணம் என்று நம்புவதால் மேற்குலகில் வாழ்கின்ற தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலை எடுத்து  ரஷ்யாவின் உக்ரைனை ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் நிலையை எடுத்தார்கள் என்கிறீர்கள். யாழ் களத்தில் இதுபற்றி  எவ்வளவோ விளக்கமாக எடுத்து சொல்லிவிட்டார்கள்.

என்ன விளக்கம்??

நீங்கள் உங்கள் பிடிவாதத்தை மாற்ற போவது இல்லை.
மேற்கில் குடியேறிய ரஷ்ய வம்சாவளி கூட ரஷ்ய எதிர்ப்பு உக்ரைன் ஆதரவு நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

ஆகவே??

இன்னொரு திரியில் இலங்கையில் உள்ள தமிழர்களும் மேற்குநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் போன்றே ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு  ஆதரவு, உக்ரைன் எதிர்ப்பு நிலை கொண்டவர்கள் என்றீர்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் புரின் , ரஷ்யா மீதான பேராதரவு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் இலங்கையில் ? எனக்கு இலங்கை பற்றி சொன்னவர்கள் அப்படி சொல்லவில்லை.

சமூக ஊடகங்களில் ரஸ்ய ஆதரவு தான் உள்ளது.

3 minutes ago, ரஞ்சித் said:

ஆக்கிரமிப்பையும், இனவழிப்பையும் சரியென்று ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வா?

ஏதோ ஒரு தீர்வு. தருவதை வாங்கும் நிலையில் தான் அங்கு தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்து நாம் வியாக்கியானம் கதைக்கலாம்.

தமிழிழ கனவை புலிகளோடு நிறுத்தி கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

ஏதோ ஒரு தீர்வு. தருவதை வாங்கும் நிலையில் தான் அங்கு தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்து நாம் வியாக்கியானம் கதைக்கலாம்.

தமிழிழ கனவை புலிகளோடு நிறுத்தி கொள்ளுங்கள்.

தமிழீழமா? இல்லையே. எமது எஞ்சியிருக்கும் நிலம் பறிபோகாமலும், அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியுடனும் கூடிய தீர்வுதான் நான் கேட்பது. இதுகூடத் தேவையில்லையென்றால் நாங்கள் தமிழர்களாக இருக்கத் தேவையில்லை.

இதைக் கேட்பது உங்களுக்கு கனவாகத் தெரிந்தால், நிறுத்திக் கொள்ளவேண்டியது நான் அல்ல, நீங்கள்தான்.

அடுத்தது, நீங்கள் புலி எதிர்ப்புவாதியென்று இதுவரை தெரியாமலேயே இருந்துவிட்டேன், தெரியப்படுத்தியமைக்கு நன்றி. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு புள்ளியில் இணைந்து விட்டோம், இப்பிடி இணைவதில்தான் எமக்கு தீர்வுகள் கிடைக்கும்/ கிடைக்கலாம் என்பது போன்ற ஒரு கதை இங்கே உலாவுது. அது என்ன, எப்பிடி என்று யாராவது புரியப்படுத்துங்கள். உக்கிரைனுக்கு எதிராக நாங்கள் சிங்களவர்களுடன் சேரும் இந்த புள்ளிக்காக தான் இவ்வளவு காலமும் நாங்கள் காத்திருந்தோமா? சரி, Volunteerஆன இந்த ரஷ்யா ஆதரவு மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறோம் என்று யாராவது தெளிவுபடுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

 சரி, Volunteerஆன இந்த ரஷ்யா ஆதரவு மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறோம் என்று யாராவது தெளிவுபடுத்துங்கள்.

ஒருத்தரை எதிர்த்தால் அவரது எதிரியை ஆதரிக்கிறோம் என்பதே உங்கள் கற்பனை தான் சகோ. கற்பனைகளுக்கு நாம் பதில் சொல்ல முடியாது நாம் எழுதுவதற்கு மட்டும் தான் நாங்கள் பொறுப்பு. 

8 hours ago, ரஞ்சித் said:

சிங்களவர்களை நீங்கள் எந்தப்புள்ளியில் சந்திக்கிறீர்கள்? அவர்களின் இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் கீழ்  “பாதுகாப்பாக” வாழலாம் என்கிற புள்ளியிலா? 

உங்களுக்கு தெரியாதது அல்ல 

ஒவ்வொரு முறையும் தனது கரங்கள் பலம் பெறும் போதும் தலைவர் போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அவர் எந்த புள்ளியில் சிறீலங்காவை சந்தித்தார்???

எனவே.....??

வேண்டாம். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

ஒவ்வொரு முறையும் தனது கரங்கள் பலம் பெறும் போதும் தலைவர் போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அவர் எந்த புள்ளியில் சிறீலங்காவை சந்தித்தார்???

நல்லதொரு பதில் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நீர்வேலியான் said:

Volunteerஆன இந்த ரஷ்யா ஆதரவு மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறோம்

சிந்திக்க வைக்கும் சிறந்த கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நீர்வேலியான் said:

சரி, Volunteerஆன இந்த ரஷ்யா ஆதரவு மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறோம் என்று யாராவது தெளிவுபடுத்துங்கள்

எதுவும் சாதிக்கப்போவதில்லை, ரஸ்ஸிய சாம்ராஜ்ஜியத்தை புடின் எனும் சக்கரவர்த்தியின் தலைமையில் மீண்டும் உருவாக்குவதைத் தவிர. இதனால் இவர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. ரஸ்ஸியா இன்றுவரை இலங்கையைக் காப்பாற்றி வருகிறது. அது பரவாயில்லை, ஆனால், மேற்குலகு முதுகில் குத்திவிட்டது, இன்றுவரை அது தமிழரின் பிரச்சினை பற்றியோ, போர்க்குற்ற விசாரணை பற்றியோ பேசினாலும் கூட, மேற்குலகு மூக்குடைபடவேண்டும் என்பதே எமது அவா. ஆகவேதான் மேற்குலகின் ஆதரவுடன் போராடும் உக்ரேனின் மக்கள் கொல்லப்படுவதும், உக்ரேன் நகரங்கள் தரைமட்டமாக்கப்படுவதும் எமக்கு நிறைவான மனமகிழ்வைத் தருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ரஞ்சித்,

இந்த களத்தில் மாத்திரமல்ல, சோசியல் மீடியாக்களிலும் எம்மவர்களின் சத்தம் தாங்க முடியவில்லை. உக்கிரைன் மக்கள் இப்படி அடிவாங்குவதில் நமக்கு அப்படி என்ன ஆனந்தமோ அல்லது பெருமையோ தெரியவில்லை. பெரும்பான்மையால் காலம் காலமாக பாதிக்கப்பட்ட இனமாக, பெரிய நாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு இனம் அடி வாங்குவதை கொண்டாடுவதான் மூலம் நாம் என்ன செய்தியை இந்த உலகிற்கு சொல்ல முயல்கிறோம் என்று எனக்கு புரிந்ததேயில்லை. 

உக்கிரைன் இற்கு செய்யும் உதவியை மேற்கு நாடுகள். எங்களுக்கு செய்யவில்லை என்ற வெறும் வெறுப்பு, நமக்கு தேவையில்லாத எதிர்ப்பு/ஆதரவு நிலையை எடுக்க வைக்கிறது. உக்கிரைன் இருக்கும் location, பொது எதிரி, வெள்ளை இனத்தவர் போன்றவை இவர்களின் வெளிப்படையான உதவிக்கு காரணங்கள் என்று தெளிவாக தெரிகிறது. ஏதாவது சந்தர்ப்பங்கள் வந்தால் ஒழிய இந்த அளவில் நேரடியான உதவிகள் எங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதும் புரிகிறது. இந்த உலகம் நியாயம், நேர்மை, தர்மம், என்ற அடிப்படையில் என்றுமே இயங்கியதில்லை, இயங்கப்போவதும் இல்லை, வல்லவன் வகுத்ததே சட்டம். இன்று மேற்கு என்று இருக்கும் அந்த வல்லவன் வரும் காலத்தில் சினாவாகவோ அல்லது ரஷ்யாவாகவோ இருக்கலாம் ஆனால் இந்த ஒழுங்கு மாறப்போவதேயில்லை, இதுதான் யதார்தம்.

எனக்கு புரிந்தவரையில், எமக்கு இருக்கும் ஒரே தெரிவு, மேற்கு நாடுகளில் எமது இருப்பை அரசியல் ரீதியில் பலப்படுத்தி, தொடர்ந்து lobbying செய்வதன் மூலம், ஏதாவது தீர்வுக்கு முயற்சிப்பது. அந்த ஒரு கட்டமைப்பு இங்கு மாத்திரமே இருக்கிறது, நாங்களும் இங்குதான் இருக்கிறோம். இங்கு இருக்கும் எமது வாக்கு பலமும், பொருளாதார பலமும், எமது ஒன்றிணைந்த கட்டமைப்புமே எமது முக்கியத்தை உணர வைக்கும். இதை நாம் ரசியாவிலோ அல்லது சினாவிலோ செய்ய முடியாது, ஏனெனில் நாம் ஒருவரும் அங்கு இல்லை, அத்துடன் அதற்குரிய அரசில் கட்டமைப்பும் அங்கு இல்லை. இந்த போரில் மேற்கு நாடுகளுக்கு எதிரான எமது நிலை நிச்சயமாக எமக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. இராகுக்கு எதிரான போரில் நாம் அமெரிக்க எதிர்ப்பு நிலையை எடுத்திருந்தால், அதில் அர்த்தம் இருக்கும், இந்த போரில் நாங்கள் ஒரு சிறுபான்மை இனமாக தார்மிக ஆதரவை கொடுப்பதை விட்டு விட்டு தவறான ஒரு  செய்தியை மற்றவர்களுக்கு சொல்கிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.