Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"துபாய் எக்ஸ்போ 2020" நாளை முடிவடைகிறது..

 

623eeb5593b44.jpeg

 

2835466-295918056.jpeg

1080X1080PX_EN.jpg?w=2000&q=90&fm=jpg

 

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆறு மாதங்களாக அமீரகத்தின் கவர்ச்சியான துபாய் எக்ஸ்போ 2020 நாளையுடன் (31-03-2022) பிரியா விடைபெறுகிறது.

நான் இரண்டு முறை அங்கே சென்றும் முழுவதும் சுற்றிப்பார்க்க இயலவில்லை. அவ்வளவு பெரிய பரப்பளவில் ஏறக்குறைய 192 பல்வேறு நாட்டு அரங்குகள், காட்சியமைப்புகள்..

இனிமேல் இம்மாதிரியான "மெகா திருவிழா"வை வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமாவென தெரியவில்லை..

உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..! 😍

Posted
1 hour ago, ராசவன்னியன் said:

"துபாய் எக்ஸ்போ 2020" நாளை முடிவடைகிறது..

 

 

623eeb5593b44.jpeg

 

2835466-295918056.jpeg

1080X1080PX_EN.jpg?w=2000&q=90&fm=jpg

 

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆறு மாதங்களாக அமீரகத்தின் கவர்ச்சியான துபாய் எக்ஸ்போ 2020 நாளையுடன் (31-03-2022) பிரியா விடைபெறுகிறது.

நான் இரண்டு முறை அங்கே சென்றும் முழுவதும் சுற்றிப்பார்க்க இயலவில்லை. அவ்வளவு பெரிய பரப்பளவில் ஏறக்குறைய 192 பல்வேறு நாட்டு அரங்குகள், காட்சியமைப்புகள்..

இனிமேல் இம்மாதிரியான "மெகா திருவிழா"வை வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமாவென தெரியவில்லை..

உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..! 😍

நான் கிட்டத்தட்ட 130 அரங்குகளுக்கு சென்றுள்ளேன். இளையராஜா, ரகுமான், ஸ்ரேயா கோஷல், போன்றவர்களின் இசை நிகழ்ச்சிக்கும் போயுள்ளேன். நான் அபு தாபியில் வாழ்ந்தாலும், பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் Expo 2020 க்கு போகிறனான். நாளை இரவும் மூடுவிழாவிற்கு போற திட்டம் இருக்குது.

இனி வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை நடைபெற இருக்கும் "துபாய் எக்ஸ்போ 2020" முற்றுபெறும் விழாவின் முன்னோட்டம்..! 😔

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இன்னும் 70 நிமிடங்களில் தொடங்கவிருக்கும் "துபாய் எக்ஸ்போ 2020" முற்றுபெறும் விழாவின் (Closing ceremony) நேரலையை கீழேயுள்ள யூடுயூப் இணையத்தில் காணலாம்..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ராசவன்னியன் said:

 

இன்னும் 70 நிமிடங்களில் தொடங்கவிருக்கும் "துபாய் எக்ஸ்போ 2020" முற்றுபெறும் விழாவின் (Closing ceremony) நேரலையை கீழேயுள்ள யூடுயூப் இணையத்தில் காணலாம்..!

 

 

தகவலுக்கு… நன்றி ராஜவன்னியன்.  நாமும்… அந்த அழகிய காட்சிகளை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரலை தொடங்கியாச்சுது..!

https://virtualexpodubai.com/listen-watch/events/expo-2020-dubai-closing-ceremony#video

 

 

Just click above link to watch live telecast..

யுடுயூப் இணைப்பில், 4K தரத்தில் நேரலை, அருமையான படத் தெளிவு..! 🌹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான திருவிழா முடிவுற்றது..! 😔

நாளை அதிகாலை 3 மணி வரை கொண்டாட்டம், வாண வேடிக்கைகள் உள்ளன. 😍

 

Now Recorded version is available in the same link below.

 

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

அருமையான திருவிழா முடிவுற்றது..! 😔

நாளை அதிகாலை 3 மணி வரை கொண்டாட்டம், வாண வேடிக்கைகள் உள்ளன. 😍

 

Now Recorded version is available in the same link below.

 

 

மின்சார ஒளியில், இந்திரலோகத்தை துபாயில் காணவைத்த வன்னியருக்கு நன்றி!🙏

அன்பு வன்னியரே! இந்த மின்சாரத்தில், சிறீலங்காவிற்கு கொஞ்சம் கிள்ளிக் கொடுக்காவிட்டாலும், நுள்ளியாவது கொடுக்க, உங்கள் இலாகாத் தலைவியிடம் சிபாரிசு செய்தால் குறைந்தா போய்விடுவீர்கள்??🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Paanch said:

மின்சார ஒளியில், இந்திரலோகத்தை துபாயில் காணவைத்த வன்னியருக்கு நன்றி!🙏

எங்கடை ஐயாவுக்கு எப்பவும் இந்திரலோகத்திலை ஒரு கண்...😁

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

எங்கடை ஐயாவுக்கு எப்பவும் இந்திரலோகத்திலை ஒரு கண்...😁

ஏன் சாமியார்? நீங்கள் பரிமளாக்காவில் கண்வைத்து விளையாடியபோது நான் உங்களுக்கு ஆதரவாகவே ஊட்டம் தந்தேன். இன்று நான் எங்கள் வன்னியரின் உதவியால், இந்திரலோக ரம்பை, மேனகா, ஊர்வசிகளில் ஒன்றில் கண்வைக்க முயன்றால், அது உங்கள் கண்களை உறுத்துதோ.??😩 

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்களமக்கள் காணி, பொலிஸ் அதிகாரத்தை லாபாய், லாபாய், தாயட்ட ஹத்தராய் என கூவி கூவி விற்பதாகத்தான் கேள்விபடுகிறேன். இனி எல்லாரும் சகோதரயா…தையிட்டி, கந்தரோடை, வெடுக்குநாறி, பு….பூநாறி எல்லாம் இனி நாறி அல்ல, மாறி🤣. பாவங்கள் முக்காவாசி சிங்கள சனத்துக்கு கண்தெரியாது, காதும் கேட்காது. முகநூலில் போய் ஒரு பக்கம் திறந்து எழுதுங்கோ சாத்ஸ் - சிங்களவர் வந்து தாம் யார் என்பதை காட்டுவார்கள் 🤣.
    • நான் ஒன்றும் சட்டத்தரணியில்லை, சட்டங்களை ஆராய. ஏதோ ஒரு சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார். இனிமேல் இப்படியான செயலில் இறங்கினால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். 
    • நீங்கள் இன்னொரு திரியில் ஆடு அறுக்கப்படாது என்பதை ஏற்று கொண்டீர்கள். அப்போ எதுக்கு காத்து கிடக்கிறீர்கள்? அது தானாக அறுந்து விழும் தூக்கி கொண்டு போகலாம் எண்டா🤣 நான் நினைக்கிரன் அருணும் அனுரவும் சேர்ந்து தமிழ் ஈழம் தர பிளான் போடுறார்கள் என 🤣     அந்த நியாயமான கோரிக்கை - இணைந்த வடக்கு கிழக்கில், தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரம் உள்ள மாகாணசபையை கொடுக்க கூடாது.
    • இனவாதம் பேசி, தமிழருக்கு தீர்வு இல்லை, அதிகாரம் இல்லை, நாடு இல்லை என்று சிங்களமக்களை உசுப்பேத்தி வாக்கு சேர்த்த தேர்தல்கள் நடந்த இலங்கை வரலாற்றில்,  முதன்முதலாக இனவாதம், மதவாதம், வாக்குறுதி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையோடு ஜெயித்தவர் மாண்புமிகு ஜனாதிபதி அனுரா அவர்கள்! அவர் போராட்டத்தின் இழப்பு, வலி தெரிந்தவர், அரச கொடூரம் அனுபவித்தவர், உறவுகளை இழந்தவர், நிஞாயமான கோரிக்கைக்காக போராடியவர், எதை அரசு செய்திருந்தால் இழப்புகளை தவித்திருக்கலாம் என்கிற கொள்கை உடையவர். தமிழரை பற்றி சிந்திக்காத நாட்டில், தமிழர் படும் அவலங்களை உணர்ந்தவர், அதை வெளியில் சொன்னவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களும் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என எடுத்துச்சொன்னவர். இனவாதம் பேசி, தம்மை ஏமாற்றி, நாட்டை சூறையாடிய வெறுப்பு, விரக்தியினால் மட்டும் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் இவ்வளவு பெரும்பான்மையோடு வென்றிருக்க முடியாது. மக்களும், நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிறார்கள். குடும்பி மலை விகாரை விடயத்தில் சில பிக்குகளும் இனவாதிகளும் சேர்ந்து நாட்டில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வீதியில் நின்று கூப்பாடு போட்ட போதும் யாரும் செவிமடுக்கவில்லை, கஜேந்திரன் எம். பியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் யாரும் அணிசேரவில்லை. இதிலிருந்து தெரிவது; மக்கள் இனிமேலும் வன்முறையை, வன்முறையாளர்களை தொடரப்போவதில்லை என்பது. ஆகவே பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுக்கலாம். அனுரா இல்லாமல் வேறொருவர் வந்திருந்தால், அவர்களிடம் இருந்து எதை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பீர்கள்? மக்களே மாற்றத்தை கொண்டு வந்தவர்கள், ஆகவே சிங்கள சகோதரர்களிடம், சிங்களம் தெரிந்தவர்கள் பேசுங்கள். தமிழருக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது என பெரும்பாலான சிங்களமக்களுக்கு தெரியாது, இனவாதிகளும் ஊடகங்களும் பொய்களையே பரப்பின, பொய்யான  காரணங்களை கூறினர், திரித்த வரலாறுகளை கற்பித்தனர். அவை எல்லாவற்றையும் இங்கு எழுதிக்கொண்டிருக்க முடியாது. சிங்களம் தெரிந்த யாராவது முகநூல் வழியாக அவர்களுக்கு தெரிவிக்கலாம். டொ. அர்ச்சுனா இதை செய்ய முடியும். நாட்டுக்கு எப்போ பயங்கரவாத சட்டம் தேவையில்லையோ, அப்போ அது தானாக தேவையற்று போகும். முன்னைய அரசுகளில் இந்த சட்டம் தமிழருக்கெதிராக இயற்றி செயற்படுத்தப்பட்டது. இனிமேல் அது இயற்றியவர்களுக்கெதிராகவும் பாய இடமுண்டு. வாழ்க அனுர.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.