Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை விரைவில் தீர்ப்பது தொடர்பாக, மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகள் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக,  பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீர்ப்பது தொடர்பில் 04.20.2022ஆம் திகதியிடப்பட்டு எனக்கும், பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதம் தொடர்பில்

நீங்கள் முன்பு எனக்கு அனுப்பிய, அதாவது ஏப்ரல் 4, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நான் எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்பதை முதலில் மரியாதையுடனும், அன்புடனும் ஒப்புக்கொள்கிறேன்.

நீங்கள் சுட்டிக் காட்டியது போல், நாட்டில் ஏற்பட்டுள்ள உடனடி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. தினசரி, புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நிபுணர்களின் உதவியுடன் நான் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து, வீட்டு எரிவாயு மற்றும் பல்வேறு எரிபொருள்கள் வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தீவிர கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, என்னால் நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர், மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளர் ஆகியோர் சர்வதேச நிதி நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், சம்பந்தப்பட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் நட்பு நாடுகளுடனும் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக, “சர்வதேச நாணய நிதியம்” மற்றும் இந்திய அரசு ஏற்கனவே நேர்மறையான பதிலை அளித்துள்ளதுடன், மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடுத்த சில வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எதிர்வரும் சில வாரங்களில் தற்காலிக தீர்வுக்கு செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்க சட்ட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்கள்:

ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ் டி சில்வா – தலைவர்

ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

நீதிபதி திரு. ஏ. டபிள்யூ.ஏ. சலாம்

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. மனோகார டி சில்வா

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சமந்த ரத்வத்தே

பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன்

பேராசிரியர் டபிள்யூ. செனவிரத்ன

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. நவீன் மாரப்பன

திருமதி கௌசல்ய மொல்லிகொட – செயலாளர்

இந்தக் குழு சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு குழுக்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாடி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான வரைவுகளை தயாரித்து வருகின்றது. அந்த வரைவுகள் தயாரிக்கப்பட்டு  நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் குழு எனக்கு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக தயாரிக்கப்பட்ட வரைபு கிடைக்கப்பெற்றவுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரைவின் நகலை உங்களுக்கு அனுப்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நான் ஆதரவளிப்பதாகவும், பாராளுமன்றத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்து அத்தகைய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அன்புடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்புகளை எதிர்பார்த்து அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டும், அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தூய்மையான எண்ணத்துடன் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது.  இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது அழைப்பு அவ்வாறே உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் என்ன செய்தாலும், அனைத்து செயல்முறைகளும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பிற்குள் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, உங்களது முன்மொழிவுகளையோ அல்லது மக்களின் அபிலாஷைகளையோ நானோ அல்லது எமது அரசாங்கமோ எக்காலத்திலும் புறக்கணிக்கமாட்டோம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

அமைச்சரவை இல்லாமல் ஒரு நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியாது. மேலும், அமைச்சரவை இல்லாதது நடைமுறைச்சாத்தியமற்றது. அதன்படி, மூத்த அமைச்சர்களின் உதவியுடன் பெரும்பான்மையான இளம் உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நான் நியமித்தேன்.

மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்காக குறுகிய காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன என்பதை நான் மரியாதையுடன் குறிப்பிடுகிறேன்.

எனது பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றில் நான் தடியடியோ, கண்ணீர்ப்புகையோ பிரயோகிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு எமது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். எனது அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை / ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன்.

19.04.2022 அன்று பொதுமக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன், மேலும் இது குறித்து முறையான விசாரணை நடத்த பல குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த விசாரணைகள் முடிந்தவுடன் அதுபற்றி உங்களுக்கு அறிவிக்கவும் எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் கூறியது போல், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் உங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை மரியாதையுடன் எதிர்பார்க்கிறேன்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், எமது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நீங்கள் முன்மொழிந்தால், எனது முழு ஆதரவையும் வழங்குவேன் என்பதை நான் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1278524

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதும் இவர்களை தாண்டி தான் தமிழருக்கு தீர்வு வரும் என்பதும் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.😭

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஊதாரித்தனம், மத்தள விமான நிலையம், ஹம்பந்தோட்டை துறைமுகம் என்று மட்டும் நீளவில்லை.  

லண்டணில் இருந்து திட்டமிட்டிருந்த நாளுக்கு முன்னதாக திரும்ப நினைத்த மகிந்தா ராசாவும் பரிவாரங்களும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானத்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டும் தம்மை பயணிக்க வைக்க வேண்டும் என கேட்க அவர்கள் மறுக்க, கோபத்தில், ராஜபக்ச எமிரேட்ஸ் நிறுவனத்தினை வெளியே அனுப்பி, ஸ்ரீலங்கன் நிறுவனத்தினை வேலை இல்லாமல் சுழண்டு கொண்டு திரிந்த தனது மனைவியின் சகோதரத்திடம் கொடுக்க, அவரோ, ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டு, நிறுவனத்தினை ஒரேயடியாக கீழே இறக்கி விட்டார். 

தினம் ஒரு நாட்டில், தினம் ஒரு விமான பணிப்பெண்ணுடன், இந்த மைத்துனரின் பேய் ஆட்டம் குறித்து, நீண்ட பதிவு ஒன்றினை இங்க முன்னர் போட்டிருக்கிறேன்.

தென் கிழக்கு ஆசியாவில் மிக வெற்றிகரமாக, எமிரேட்ஸ் கீழ் இயங்கிய நிறுவனம், கீழே விழுந்து, இன்று வரை எழுந்திருக்கவே இல்லை.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

Colombo Lotus Tower – Lakpura LLC

Lotus tower, sri lanka, HD mobile wallpaper | Peakpx

தாமரைக் கோபுரமும்.... பெருமளவு பணத்தில் கட்டப்  பட்டது மட்டுமல்லாது,
அதன் வருடாந்த பராமரிப்பு செலவே... பல மில்லியன்களை  தாண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

Colombo Lotus Tower – Lakpura LLC

Lotus tower, sri lanka, HD mobile wallpaper | Peakpx

தாமரைக் கோபுரமும்.... பெருமளவு பணத்தில் கட்டப்  பட்டது மட்டுமல்லாது,
அதன் வருடாந்த பராமரிப்பு செலவே... பல மில்லியன்களை  தாண்டுமாம்.

புலிகளை வென்றேன், தமிழர்களை அடிமைப்படுத்தினேன் என்பது அரசு கட்டிலை தரும் ஆனாலும், காசு இல்லாவிடில், கதை கந்தல் என்பதுக்கு, மகிந்தரும் ஒரு உதாரணம்.🤗

Always MONEY is the KING.

தமிழர்களை நாட்டினை விட்டு திரத்தினால், முழு நாடுமே சிங்களவர்களுக்கு சொந்தம் என்று நினைத்தார் JR ஜெயவர்த்தனே.

இன்று, கோத்தாவே தமிழர்களை வருமாறு கோரும் நிலையில் பணபலத்துடன் தமிழர்கள்.

இந்த நிலையை எதிர்பார்த்து, தீர்க்கதரிசனத்துடன், மகிந்தா, ஒரு தீர்வுக்கு போயிருந்தால், பரம்பரை, பரம்பரையாக அவரை நாடு பூஜித்து இருக்கும்.

இன்று, பெரும் அவலத்துடன் வெளியே போகப்போகிறார்.

அதனையே இந்த கட்டுரையும் சொல்கிறது..

https://www.dailymirror.lk/opinion/Why-Rajapaksas-are-refusing-to-resign/172-235710

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இந்த நிலையை எதிர்பார்த்து, தீர்க்கதரிசனத்துடன், மகிந்தா, ஒரு தீர்வுக்கு போயிருந்தால், பரம்பரை, பரம்பரையாக அவரை நாடு பூஜித்து இருக்கும்.

இதைத்தான்  முள்ளிவாய்க்காலின் பின்  நான்  எழுதினேன்

முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்க்கான ஒரு தீர்வை மகிந்த வைத்திருந்தால்

அவரே இலங்கை  முழுமைக்குமான ஒரே  தலைவராக  வந்திருக்க  வாய்ப்பிருந்தது

ஆனால் இன்று அனைத்த  மககளாலும் கலைக்கப்படும் தலைவரா???

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

இதைத்தான்  முள்ளிவாய்க்காலின் பின்  நான்  எழுதினேன்

முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்க்கான ஒரு தீர்வை மகிந்த வைத்திருந்தால்

அவரே இலங்கை  முழுமைக்குமான ஒரே  தலைவராக  வந்திருக்க  வாய்ப்பிருந்தது

ஆனால் இன்று அனைத்த  மககளாலும் கலைக்கப்படும் தலைவரா???

இவர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி. கோத்தா எங்கு போனாலும் துரத்தி துரத்தி அடி விழப்போகுது. இருக்கவும் விட மாட்டார்கள் இவர் எவ்வளவுதான் இறங்கி வந்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

இவர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி. கோத்தா எங்கு போனாலும் துரத்தி துரத்தி அடி விழப்போகுது. இருக்கவும் விட மாட்டார்கள் இவர் எவ்வளவுதான் இறங்கி வந்தாலும்.

முள்ளிவாய்காலில் நடந்ததை விடுங்க....

பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்க படுகொலையே போதும் இவர்கள் கம்பி எண்ண..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தமிழர்களை நாட்டினை விட்டு திரத்தினால், முழு நாடுமே சிங்களவர்களுக்கு சொந்தம் என்று நினைத்தார் JR ஜெயவர்த்தனே.

தமிழர்களை துரத்துவதில் குறியாய் இருந்த சிங்கள மகா  பேரினவாதிக்கு தங்களுடைய இனம் மகா சோம்பேறிகள் என்பது தெரியாது . ஆறு லட்ஷம் தோட்ட தமிழரை வெளியேறிய பின் எந்த ஒரு சிங்களவனோ  சிங்களத்தியோ தேயிலை கொழுந்து பறிக்கும் வேலைக்கு போனது கிடையாது கடந்த கால அம்பாந்தோட்ட துறைமுக அபிவிருத்தி ஆகிலும் கொழும்பு போட் சிற்றி வேலையாகினும் சீனர்களை கொண்டே வேலை செய்வித்தனர் சிங்களவர்களினால்  முடியாதவர்கள் ஏலா வாளிகளை  கொண்ட சமூகம் கணக்க  வேண்டாம் கடைசி சண்டையில் கூட         வேற்று நாட்டு படைகளே  கூட இருந்தனர் .

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

வந்தவன் உழைப்பான்..... உள்ளான் உக்காந்து தின்பான்....

மத்திய கிழக்கிலும் அதே கதைதான்.....

அதுதானே கதை இங்கே ஐக்கிய ராச்சியத்திலும்.

முந்தி இந்த போஸ்டாபிஸ் எல்லாம், டாய் போட்டுக்கொண்டு, வெள்ளையள் ஏதோ பெரியஆபிசர் மாதிரி இருப்பினம்...

இப்ப, நம்ம அக்காமார், அண்ணமார் எல்லோ நிக்கினம்.... 

****

கொழும்பு, அம்பாந்தோட்டை, வேலை செய்த்து எல்லாம் சீனத்து சிறைக்கைதிகள். (free labour)

அவர்கள் அப்பிரிக்காவிலும் அவ்வாறே செய்கிறார்கள்.

வெள்ளைகள், மனித உரிமை வகுப்பெடுக்க வெளிக்கிட்டு, கடூழிய சிறை எண்டது உங்கட ஐடியா.... அதை சிறைக்கு வெளியிலே செய்கிறார்கள். அம்புட்டுதான் என்று சொல்லி வாயை மூட வைத்தார்கள், சீனர்கள்.

உண்மையில் அது சரி தான் என்று தோன்றுகின்றது. சிறையில் ஓசி சாப்பாடு, ஜிம் வசதி என்று, உள்ளே போவதை இங்கே விரும்புகிறார்கள்.

உள்ளே இருந்தாலும், உழைத்து சாப்பிடு என்பதே சீனத்து நிலைப்பாடு. ஆகவே, உள்ளே போக விரும்பமாட்டார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சகோதரர்கள் நிலைமையை நயாகரா சிண்ட்ரோம் என்று சொல்லலாம் 

நயாகரா நதியில் சென்று கொண்டிருந்த படகில் ரொம்பவே ரிலாக்ஸ் ஆக இருந்தான் அவன்...... நீரின் ஓட்டத்துடனே படகு சென்று கொண்டிருந்ததால், அவனுக்கு துடுப்பினை வலிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.

அமைதியாக, சாய்ந்திருந்து கொண்டு, இருபக்கமும் இருந்த, ரம்மியமான காட்சிகளை ரசித்தவாறே, இருந்தான்.

முக்கியமாக உலகத்தினை மறந்து விட்டான்...

மெதுவாக இரைச்சல் சத்தம் கேட்க்கிறது. பொருட்படுத்த வில்லை, பொருட்படுத்த விரும்பவில்லை.

அவனது லயிப்பு அப்படி....

சத்தம் பெரிதாக கேட்க்கிறது... இன்னும் அது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

சத்தம் மிக அதிகமாக கேட்கிறது.... படகு வேகமெடுக்கிறது....

அப்போது தான், வேகத்துக்கு காரணத்தினை அறிய அவன் எழுந்து பார்க்கிறான்... இப்போது சத்தம் எங்கிருந்து வந்தது என்று புரிகிறது..... படகை திருப்பி தப்பிக்கொள்ள நேரம் இல்லை.

இன்னும் சில கணத்தில், படகு அவனுடன், நயாகரா நீர்வீழ்ச்சியில் சிக்கி, விழப்போகிறது. 

அவனும், அவனது படகும் தப்பிக்க வழியே இல்லை.

இதுவே  நயாகரா சிண்ட்ரோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கணக்க  வேண்டாம் கடைசி சண்டையில் கூட         வேற்று நாட்டு படைகளே  கூட இருந்தனர் .

வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
ஏனென்றால் நான் அறிந்த வரையில்  300,000 படைவீரர்களை கொண்ட பெரும் படையணியை அரசாங்கம் அன்று வைத்திருந்தது. அதையும் தாண்டி பல்நாட்டு இராணுவ தொகுதியும் ஆலோசனை மற்றும் நேரடி யுத்த பங்களிப்பு செய்திருந்தார்கள். ஆனால்  வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

வெளிநாட்டுப் படைகள் (இந்தியா ) சண்டையில் ஈடுபட்டன / பின் தள ஒத்துழைப்பு (ஆலோசனை அல்ல) வழங்கியதற்கு ஆதாரம் இருக்கிறது. சண்டையில் காயமடைந்த, இறந்த இந்தியப்ப்படையினர் தொடர்பான தகவல்கள் பல உண்டு.  ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதனை இங்கே குறிப்பிட முடியாது. 

சிங்கள ஊடகவியளாளர்களே இதற்கான சாட்சிகளாக / ஆதாரங்களாக இருக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
ஏனென்றால் நான் அறிந்த வரையில்  300,000 படைவீரர்களை கொண்ட பெரும் படையணியை அரசாங்கம் அன்று வைத்திருந்தது. அதையும் தாண்டி பல்நாட்டு இராணுவ தொகுதியும் ஆலோசனை மற்றும் நேரடி யுத்த பங்களிப்பு செய்திருந்தார்கள். ஆனால்  வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என நினைக்கிறன்.

44 minutes ago, Kapithan said:

வெளிநாட்டுப் படைகள் (இந்தியா ) சண்டையில் ஈடுபட்டன / பின் தள ஒத்துழைப்பு (ஆலோசனை அல்ல) வழங்கியதற்கு ஆதாரம் இருக்கிறது. சண்டையில் காயமடைந்த, இறந்த இந்தியப்ப்படையினர் தொடர்பான தகவல்கள் பல உண்டு.  ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதனை இங்கே குறிப்பிட முடியாது. 

சிங்கள ஊடகவியளாளர்களே இதற்கான சாட்சிகளாக / ஆதாரங்களாக இருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தில்… சில  இராணுவத்தினர் அணிந்திருந்த சீருடைகள்,
இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் என்று, அப்போதே செய்தி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கைபார் அடிச்சு கதைக்கத்தான் -

இதன் கருத்து ப்ளீஸ்? 😁

உண்மையில.... எனக்கு பங்கோடை, முந்தி மாதிரி, அடிபட நேரம் இல்லை. ஒரு பேப்பர் நேற்று எழுதிக்கொடுத்து, அடுத்தது கொடுக்க, இன்னும் 10 நாள் இருப்பதால், இங்கை வந்தேன்..

எல்லாம் முடிய பார்ப்போம்.... ஆனாலும் பங்கு, வேறு எங்கையோ பிஸி மாதிரி தெரியுது.....

நம்ம பெருமாள், அமத்தி பிடிச்சா பிறகு, கொழும்பு டெலிக்ராபில வேறு பெயரிலே, எழுதுறாரோ எண்டு சந்தேகம்... 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்…. மகிந்தவின் அலரி மாளிகையின் முன்னால், “மைனா கோ கோம்” என்று எழுதி,
இரண்டாவது நாளாக போராட்டம் செய்கிறார்களாம்.
மகிந்தவை ஏன், மைனாவுடன் ஒப்பிடுகிறார்கள்?

கண்டியில் இருந்து கொழும்பு வாறார் பசில்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 2019ல் எப்படி ராஜா போல இருந்த மனிசன், இப்ப..... தூசண வார்த்தைகளால் அர்ச்சிக்கப்படுகிறார்...

காலம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உக்கிரேனிய விமான படையினர் கடைசி சண்டையில் கூலிக்கு  கொத்து குண்டு தமிழ்மக்கள் மீது போட்டு விட்டனர் என்றுதானே யாழில் திரிகள் கொழுந்து விட்டு எரிகின்றன பார்க்கலையா 

உங்கள் வசதிக்கேற்ப உங்கள் முன்னைய வரிகளையே கண்டும் காணாதது போல மீண்டும் கருத்து வைக்கிறீர்கள்.
பெருமாள்.. நீங்கள் எழுதிய கருத்து "வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள்.
இந்த கூட என்ற உங்கள் கருத்துக்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன். மற்றும்படி என்னுடைய கருத்தில் கூட மிகத்தெளிவாக எழுதியிருக்கிறேன். 
உணர்ச்சிவசத்தில் எதையும் கருத்தாக வைக்கும் போக்கு எவ்வளவு நன்மை தரும்??

தமிழ் சிறியர், கப்பித்தான், நீங்களும் கூட அதை கவனிக்காதது மாதிரி கருத்து எழுதுகிறீர்கள்... 🙄

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Sasi_varnam said:

நான் மிகத் தெழிவாகத்தான் கூறியுள்ளேன்.

அன்னிடம் சாட்சிகள்/ ஆதாரங்கள் உண்டு. அதை இங்கே கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளேன். 

அதை கவனிக்கவும் சசியர்.. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நான் மிகத் தெழிவாகத்தான் கூறியுள்ளேன்.

அன்னிடம் சாட்சிகள்/ ஆதாரங்கள் உண்டு. அதை இங்கே கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளேன். 

அதை கவனிக்கவும் சசியர்.. 

அதாவது 300,000 ஐயும் தாண்டி அதற்கு அதிகமான தொகை வெளிநாட்டு படைகள் இலங்கையில் இருந்தது. 👌

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

அதாவது 300,000 ஐயும் தாண்டி அதற்கு அதிகமான தொகை வெளிநாட்டு படைகள் இலங்கையில் இருந்தது. 👌

ஆகக் குறைந்தது 5,000(-15000) இந்தியப் படையினர் வன்னியில் நின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

ஆகக் குறைந்தது 5,000(-15000) இந்தியப் படையினர் வன்னியில் நின்றனர். 

5,000 - 15,000 < 300,000 isn't it? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

உங்கள் வசதிக்கேற்ப உங்கள் முன்னைய வரிகளையே கண்டும் காணாதது போல மீண்டும் கருத்து வைக்கிறீர்கள்.
பெருமாள்.. நீங்கள் எழுதிய கருத்து "வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள்.
இந்த கூட என்ற உங்கள் கருத்துக்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன். மற்றும்படி என்னுடைய கருத்தில் கூட மிகத்தெளிவாக எழுதியிருக்கிறேன். 
உணர்ச்சிவசத்தில் எதையும் கருத்தாக வைக்கும் போக்கு எவ்வளவு நன்மை தரும்??

தமிழ் சிறியர், கப்பித்தான், நீங்களும் கூட அதை கவனிக்காதது மாதிரி கருத்து எழுதுகிறீர்கள்... 🙄

புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையே இவரை இன்றுவரை தெரியாது என்று சொன்னவர் நீங்கள் கடைசி யுத்தத்தில் அவ்வப்போது உண்மையை ஆங்காங்கே சரத் பொன்சேகா தொடக்கம் மகிந்த ராஜபக்ஸா வரை உளறி கொட்டியவர்கள் முக்கியமாய் இந்தியாவின் ராணுவ உதவி அன்றி சண்டையை இலகுவாக முடித்து இருக்க முடியாது என்று ராஜபக்சே கூறியவர் அதுக்காக நான் கேட்டது கூட இருந்தவர்கள் என்று ராணுவம் இருந்ததா இல்லியா என்று வம்பு பிடிக்கவேணாம் மன்னாரில் சண்டை நடக்கும்போது உள்வாங்கப்பட்ட படையினருக்கு பயிற்சி காணாது என்று சிறிதுகாலம் சண்டையை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் அதற்கு பதிலாக அயலக படை வந்தது அவர்களின் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது வெளிநாட்டு  வாழ் இந்தியர் ஒருத்தர் மூலமாக அதற்கு ராணுவம் சம்பந்தப்பட்ட விடயங்கள் சொல்ல முடியாது என்று பதில் வந்தது .

நீங்கள் கேள்வி  கேட்டது நல்லதுதான் கடைசி சண்டையில் பலநாட்டு ராணுவமும் உதவி ஆளணி என்பவை கொடுத்தனுப்பியது அது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் ஆனால் ஆதாரம் என்று தேடினால் கூகிள் மாமா மறைத்து விடுவார் அது நாடுகளின் மறைமுக வேண்டுகோள் ஆகவே கோத்தா போல் சிறிது நாட்கள் கொடுங்கள் 😃

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

பெருமாள்... இங்கே சிலபேர் அடித்துவிடும் கதைகளை (முள்ளிவாய்க்கால் அவலங்களை எம்மிடமே எமக்கு தெரியாதது போல படம் போட்டு காட்டும் நபர்களின்)  கப்ஸாக்களை கேட்டு நொந்துபோய் sarcastic ஆகா சொன்னது தான் எனக்கு ஐயா கலாநிதி, அரசியர் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை இவ்வளவு நாள் தெரியாது என்று நான் கூறியது. அதை நீங்கள் அப்படியே எடுத்துகொண்டு இருக்குறீர்கள். சிறப்பு!!! 

சரி நீங்கள் எழுதிய " கடைசி சண்டையில் கூட வேற்று நாட்டு படைகளே  கூட இருந்தனர்." இதன் தமிழ் அர்த்தம் உள்ளூர் படையணியை விட வெளிநாட்டு படைகள் அங்கு யுத்தம் புரிந்தன என்று தான் நான் புரிந்து கொள்கிறேன்.
அதை தான் மிகைப்படுத்தல், அல்லது தவறு என்றும் கூறுகிறேன். காரணம் அன்றைய கட்டத்தில் இலங்கை படையின் எண்ணிக்கை சுமார் 300,000. இதற்கு ஆதாரம் இருந்தும் ஒருவர் தருவதில் சிக்கல் என்கிறார். நீங்கள் வேறு எதோ  சொல்கிறீர்கள். பரவாயில்லை கடந்து போவோம். 
  
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

 உங்களின் சிங்கள அனுதாபத்துக்கு எதிராக பாலா சிங்கத்தின் வீடியோ ஒளிநாடாவை இணைக்க அவரை யார் என்றே தெரியாது என்று மழுப்பியவர் நீங்கள் இப்ப இப்படி சிரிப்புதான் வருகுது .

உங்களின் ஆதங்கத்துக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.