Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால்.

அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......?

தொடருங்கள் ரகு...

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Like 5
  • Thanks 1
  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால்.

அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......?

தொடருங்கள் ரகு...

நன்றி, இதுதான் உண்மையிலேயே நமக்கு தேவை, வெறுமனவே உக்கிரைனுக்கு விழும் அடியையும் அதன் அழிவை ரசிப்பதை விட்டு விட்டு , இதை வைத்து இனி இப்பிடி ஏதாவது எங்களுக்கு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும், நீ முன்பு எங்களுக்கு துரோகம் செய்தாய் என்று குளத்துடன் கோபித்துக்கொண்டு ஒன்றுமே நடக்க போவதில்லை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நீர்வேலியான் said:

நன்றி, இதுதான் உண்மையிலேயே நமக்கு தேவை, வெறுமனவே உக்கிரைனுக்கு விழும் அடியையும் அதன் அழிவை ரசிப்பதை விட்டு விட்டு , இதை வைத்து இனி இப்பிடி ஏதாவது எங்களுக்கு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும், நீ முன்பு எங்களுக்கு துரோகம் செய்தாய் என்று குளத்துடன் கோபித்துக்கொண்டு ஒன்றுமே நடக்க போவதில்லை. 

உண்மை சகோ 

அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

ஆனால் இவ்வுலகில் முள்ளிவாய்க்கால் மீண்டும் வரவேண்டி இருக்கிறது அந்த அவலத்தையும் நாம் மனமொத்தன்றியும் இணைத்து குழைத்து செல்லவேண்டியும் இருக்கிறது. இது தான் நிஜம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ரஞ்சித்துக்கு இல்லை ...பதில் எழுத வேண்டாம் ...உங்கள் திரியில் எழுதுவது வேஸ்ட் ...எழுத கூடாது தான் என்று நினைத்தேன்...உங்கட கருத்தை சுதந்திரமாய் எழுத வேண்டுமானால் நீங்கள் உங்கள் மு.பு தான் எழுத வேண்டும் ...தங்கட கருத்தை சொல்ல அல்ல பிரபல்யமாக  யாழை பயன்படுத்துவார்களாம் ஆனால் வாசிப்பவர் எதிர் கருத்து வைக்க கூடாதாம் ..எல்லாம் எழுதி முடித்த பின் பதில் அளிக்க முடியாமல் போய் ஓடி ஒளிந்து கொள்வார் ...சில காலம் கழித்து வந்து இப்படி வேற ஏதாவது எழுத வேண்டியது தான் ..அவர் எழுதுவதை வாசிக்காமல் சேர்ந்து உருட்ட இங்கு  சிலர் இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால்.

அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......?

தொடருங்கள் ரகு...

விசுகு அண்ணா உங்களுக்குத்கு தான் இந்த கேள்வி....தகுந்த விளக்கம் தருவீர்கள் என நினைக்கிறேன் .முடிந்தால் தனி திரி திறந்து பதில் எழுதுங்கள் ...ஓரு  நாட்டுக்குள்  இருக்கும் இரு வேறு மொழி இனங்கள் அதில் பெரும்பான்மையான அரசும் , மக்களும் சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைப்பதும், அவர்கள் தங்கட நாட்டுக்குள்ளேயே உரிமை ,தனி நாடு கேட்டு போராடுயதும் ,  தேவையில்லாமல் அயல் நாட்டுடன் பிரச்சனைக்கு போய் , அதை பேசி தீர்க்க முயலாமல் யுத்தத்தை வலிந்து தேடிக் கொண்டவர்கர்களையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்?
ரஸ்யா ,உக்ரேன் யார் சரி ,பிழைக்கு அப்பால் எங்கட பிரச்சனைக்கும் ,இதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?
நாளைக்கே இவங்கட பிரச்சனை தீர்ந்து ஒன்றுக்கு ஒன்றாகி விடுவார்கள் ...எங்கட பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை .சர்வதேசத்திற்கும் இல்லை...இருந்திருந்தால் எப்போதே தீர்த்து இருப்பார்கள் 

ஏற்கனவே சிலர் எழுதியது தான் ...நானும் எழுதி இருக்கேன் ....உங்களுக்கு தீர்வு தர வேண்டியது இலங்கை அரசு தான் ....அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க உக்ரேன் பிரச்சனையை சாதகமாக்க வேண்டிய தேவை இல்லை ...அதை விட எத்தனையோ வழிகள் இருக்கு ...மேலே நீங்கள் எழுதியது போல் உங்களை போல சிலர் எழுதுவதே ஒரு ஜோக் தான் . 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......?

வணக்கம் விசுகர்!
இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தை மரியோபுல் நிகழ்வுடன் ஒப்பிடுவதன் மூலம் எனக்கிருக்கும் சந்தேகங்களை உங்களை கேட்கின்றேன்.

மரியோபுல்லுக்கு கிடைக்கும் ஆதரவை எப்படி எமக்கு சாதகமாக பயன்படுத்த முடுடியும்? அந்த மரியோபுல் சம்பவத்திற்கு யார் தீர்ப்பு கொடுப்பார்கள்?
உக்ரேன் சம்பவத்தை எப்படி எமது ஈழ போராட்டத்துடன் ஒப்பிட முடியும்?
ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவை மீறி எதுவுமே நடக்காது என்பது தற்போது அல்ல அப்போதே தெட்டத்தெளிவாக தெரிந்து விட்டது. சிங்களம் விரும்பினால் கூட இந்தியா ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை போடும்.
 
அண்மைக்கால பார்வைகளின் படி சீனா கூட இந்தியாவை மீறி தமிழர் பிரதேசங்களில் அதிகமாக எதுவுமே செய்யப்போவதில்லை.சில வேளை இந்தியா சினம் கொண்டால் ஒட்டு மொத்த சிறிலங்காவையும்  சீனா விட்டு போக வாய்ப்புள்ளது.அது அப்போதைய சிறிலாங்கா அரசாட்சியை பொறுத்தது.ஒப்பந்தங்கள் பல சீனாவுக்கு இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரை  மொழி கலாச்சாரம் சமயம்  இனம் என்று பார்க்கையில் இந்தியாவின் இன்னொரு மாநிலம் இலங்கை.

மேற்குலகும் இந்தியாவை மீறி ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சனையில் எதுவும் செய்து விடப்போவதில்லை. அப்படி செய்தாலும் இந்தியா பச்சைக்கொடி காட்டிய பின்னர்தான் ஏதும்.....அதுவும் இந்திய நலன் சார்ந்தே இருக்கும்.

நமது பாசையில் சொல்லப்போனால் இந்தியா சகல நாடுகளுக்கும் "இலங்கை என்ரை ஏரியா" என விளித்து சொல்லியிருக்கும் என்பது என் ஊகம்.

இதை விட ரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் இந்தியா யார் பக்கம் என்று பார்த்தால் அதுவும் தலை சுத்துது.
இந்தியா கூடுதலாக ரஷ்யா சார்பான நாடு. அதிலும் மோடி ரம்பின் கூட்டாளி.ரம்ப் யாரின் கூட்டாளி?

யுத்தமும் அழிவுகளும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஒரு இடத்தில் மக்கள் அழியும் போது கண்டும் காணாமல் இருந்து விட்டு இன்னொரு இடத்தில் அதே போல் வரும் அழிவுகளை கண்டு கொதித்தெழும் மேற்குலகை கண்டிக்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் இந்த ரஷ்ய-உக்ரேன் யுத்தமும்  ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டமும் ஒன்றல்ல. இவை இரண்டும் வெவ்வேறு கோணங்கள்.

அமைதியாக வாசித்தமைக்கு நன்றி விசுகர்.
உங்கள் பதில் கருத்து எனக்கு மிக முக்கியம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

உண்மை சகோ 

அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

இது சுய ஆக்கம் எனும் பெயரில் வேறொரு திரியில் உள்ள வன்மத்தை தீர்க்க ஆரம்பிக்கப்பட்ட  குளோனிங் திரிதான் இது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருக்கியில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவ்ரோவ் சிவிலியன் மரணங்களை முற்றிலுமாக  மறுத்தார். "இது ஒரு பொய்க் கூப்பாடு. ரஸ்ஸியாவின் எதிரிகளால் செய்யப்பட்டுவரும் பொய்ப்பிரச்சாரம், நாம் உக்ரேனை ஆக்கிரமித்துள்ளோம் என்பதே முழுப் பொய்யாகும்" என்று அடித்துக் கூறினார்.

சிவிலியன்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது சட்டத்திற்கு முரணானது என்பது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலப் பழமைவாய்ந்த மரபாகும். உக்ரேனில் ரஸ்ஸியா செய்துவருகின்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக ஹேக்கில் அமைந்திருக்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உக்ரேனியர்களாலும், சர்வதேச அமைப்புக்களாலும் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. 

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ ஏ கரீம் என்பவர் ரஸ்ஸியாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்க்குற்றங்களுக்காக குறைந்தது 39 சர்வதேச நாடுகளிலிருந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் பைடனும் ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டினை ஒரு போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாட்டியிருப்பதோடு, உக்ரேனில் சிவிலியன்கள் மீதான தொடர்ச்சியாகத் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருக்கும் ரஸ்ஸிய ராணுவத்தளபதிகள் மற்றும் போர் வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களை தமது அரசாங்கம் சேகரித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மீதான தாக்குதல்கள் எக்காலத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் தவிர்க்கப்படல் அவசியம் என்பது சர்வதேசச் சட்டமாக இருந்துவருவதோடு, இத்தாக்குதல்கள் மனித நேயத்திற்கெதிரான மிகவும் கீழ்த்தரமான தாக்குதல்கள் என்றும் கருதப்பட்டு வருகின்றன. ஆனாலும், இத்தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக கருதப்படுவதற்கு, இவை வேண்டுமென்றே நடத்தப்பட்டவைதான் என்பதை குற்றஞ்சாட்டுபவர்கள் நிரூபித்தல் அவசியம்.

ஆனால், உக்ரேனின் நடத்தப்பட்டுவரும் இத்தாக்குதல்கள் உண்மையிலேயே வைத்தியசாலைகளையும், மருத்துவர்களையும் இலக்குவைத்தே நடத்தப்படுவதை உறுதிசெய்துள்ள இச்செய்தி நிறுவனம் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நடிக்கிறார்கள் என்றோ அல்லது உக்ரேன் அரசால் கொல்லப்பட்டவர்கள் என்றோ காட்டுவதையும் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள். மேலும், ராணுவக் காரணங்களுக்காகவே இவ்வைத்தியசாலைகளைத் தாம் தாக்கியதாக ரஸ்ஸியா கூறிவருவதையும் பொய்யென்று நிரூபிப்பதற்கான சாட்சியங்களும் இச்செய்தியமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

"ரஸ்ஸியா எமது வைத்தியசாலைகளையும், மருத்துவ நிறுவனங்களையும் வேண்டுமென்றே இலக்குவைத்துத்தான் தாக்குகிறது. இன்னொரு நாட்டின் ராணுவத்தைத் தாக்கி அழிப்பது போல எமது வைத்தியசாலைகளைத் தாக்கி அழித்து வருகிறது" என்று முன்னாள் உக்ரேனிய சுகாதார அமைச்சர் கூறினார். உக்ரேனில் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துவரும் அவர் இதுவரையில் உக்ரேனின் அழிக்கப்பட்ட குறைந்தது 34 வைத்தியசாலைகளின் விபரங்களையும், கொல்லப்பட்ட பொதுமக்களின் தகவல்களையும் சேகரித்து வருகிறார்.

"வைத்தியசாலைகளைக் குண்டுபோட்டு அழிப்பது மிகவும் கொடூரமானது. இதன்மூலம் ரஸ்ஸியா எமது மக்களுக்குக் கூறும் செய்தி ஒன்றுதான், உங்களுக்கு எந்த இடமுமே இனிப் பாதுகாப்பு இல்லை என்பதுதான் அது" என்று அவர் மேலிம் கூறுகிறார்.

இதுவரையில் பல்வேறு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான  தாக்குதல்தான் பங்குனி 9 ஆம் திகதி மரியோபுல் மகப்பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ரஸ்ஸியாவின் ஏவுகணைத் தாக்குதல். ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இந்த நகரத்தினுள் பணிபுரியும் இரு ஏ பி செய்தியாளர்கள், இவ்வைத்தியசாலைமீதான தாக்குதல் நடந்து சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு சென்றிருந்தார்கள். 

வைத்தியசாலையின் உட்பகுதியில் இரண்டு மாடிகள் ஆளமான பாரிய குழியொன்றிலிருந்து  நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அதனைச் சுற்றி எரிந்துய, உருக்குலைந்து போன பல கார்களை அவர்கள் கண்டார்கள். இக்குண்டுவீச்சினால் அவ்வைத்தியசாலையினைச் சுற்றியிருந்த பல கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்திருந்தன. 

.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இம்மருத்துவமனை மீதான திட்டமிட்ட தாக்குதல்களில் உயிர் தப்பியவர்களை மருத்துவப் பணியாளர்கள் வெளியே மீட்டுவரும் ஒளிப்படங்களையும், புகைப்படங்களையும் இவ்விரு ஏ பி செய்தியாளர்களும் சாட்சிப்படுத்திக்கொண்டார்கள். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருத்தி தனது அடிவயிற்றை இருகப்பற்றியிருக்க, அவளது கால்களுகிடையிலிருந்து 
வழிந்தோடும் குருதியோடு அவளை இன்னும் நான்கு மருத்துவப் பணியாளர்கள் தூக்கிச் செல்வது காண்பிக்கப்படுகிறது. இக்குண்டுவீச்சிலிருந்து  அவள் காப்பாற்றப்பட்டாலும், அவளது உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவசர சத்திர சிகிச்சை ஒன்றின்மூலம் அவளது மரணித்துக்கொன்டிருக்கும் சிசுவைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயன்றபோதும், அவள் இறந்துபோனாள், அவளோடு அவளது பிறவாத சிசுவும் இறந்துபோனது.

இத்தாக்குதலில் உயிர்தப்பிய இன்னொரு கர்ப்பிணிப் பெண் மரியானா இரத்தம் தோய்ந்த முகத்தோடு நடக்கமுடியாது தள்ளாடியவாறு வந்துகொண்டிருந்தாள். நொறுங்கிப்போன மாடிப்படிகளிலிருந்து தள்ளாடிக்கொண்டு இறங்கிவந்த அவளை உதவியாளர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். 

இத்தாக்குதலில் குறைந்தது ஒரு குழந்தை உட்பட மூன்று சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இன்னும் 17 கர்ப்பிணிப் பெண்கள் காயமடைந்திருந்தனர். ஆனால், இத்தாக்குதல் குறித்து பேசிய ரஸ்ஸிய பாதுகாப்பு அமைச்சர் தமது விமானப்படையே இவ்வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரேனிய ராணுவத்தின் விசேட ராணுவப்பிரிவான அசோவ் பட்டாலியன் இவ்வைத்தியாசாலையில் நிலைகொண்டிருந்ததாகவும் அதனாலேயே இதனை தாம் அழிக்கவேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். உக்ரேன் நாஜிக்களால் ஆளப்பட்டுவருவதாக ரஸ்ஸியர்களை நம்பவைத்துவரும் புட்டினும் அவரது அரசாங்கமும் உக்ரேனில் சிவிலியன்கள் மீதான தாக்குதல்களை நாஜிக்களை அழிக்கும் விசேட நடவடிக்கை எனும் பெயரில் நியாயப்படுத்தி வருகின்றது.

ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய ரஸ்ஸிய தூதுவர் வசிலி நிபென்சியா பேசும்போது, " காயப்பட்ட கர்ப்பிணிப் பெண்களாகக் காட்டப்பட்டவர்கள் அனைவருமே நடிகர்கள்தான், இவர்கள் எவருமே அப்பாவிப் பெண்கள்கிடையாது. ரஸ்ஸிய அரசாங்கத்தின்மீதும், ராணுவத்தின்மீதும் கறையைப் பூசுவதற்காகவே இதனை அவர்கள் செய்கிறார்கள்" என்று வெளிப்படையாகவே தாக்குதல்களை நியாயப்படுத்தியிருந்தார்.

லண்டனில் செயற்பட்டுவரும் ரஸ்ஸிய உயர்ஸ்த்தானிகராலயம் தனது கீச்சகப் பதிவில் காயப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின்படங்களை அருகருகே வைத்து "பொய்ச்செய்தி"
 என்று தடித்த எழுத்துக்களில் செய்திவெளியிட்டிருந்தது. நடந்துவரும் உண்மைச் சம்பவத்தை பொய்யென்று மறுத்தமைக்காக ரஸ்ஸிய உயர்ஸ்த்தானிகராலயத்தின் இக்கீச்சகப் பதிவினை சட்டத்திற்கு முறணான பதிவென்று கீச்சக நிர்வாகம்  நீக்கிவிட்டிருந்தது.

காயப்பட்ட பெண் மரியோபுல்லில் வசிக்கும் யூ டியுப் வலைத்தள நடத்துனர் என்பதும், அவர் தனது அண்மைய பதிவுகளில் தனது கர்ப்பம் பற்றி தொடர்ச்சியாகக் காணொளிகளை வெளியிட்டு வந்தவர் என்பதும், இவரே ரஸ்ஸியத் தாக்குதலில் காயப்பட்டவர் என்பதும் ஏ பி செய்தியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

கட்டிட இடிபாடுகளையும், சூழவிருந்த எரிந்துபோன வாகன எச்சங்கலையும் சாட்சிப்படுத்தியிருக்கும் ஏ பி செய்தியாளர்கள் இவ்வைத்தியசாலை ராணுவ விவகாரங்களுக்காகப் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது வெளியில் சிதறிக் கிடந்த சேதமடைந்த வாகனங்களில் ராணுவ வாகனங்களையோ காணவில்லயென்று கூறுகிறார்கள். வைத்தியசாலை இடிபாடுகளுக்கிடையே சாதாரண வைத்தியசாலைப் படுக்கைகளையும், மருத்துவ உபகரணங்களையும் தவிர வேறு எவையுமே அங்கு இருக்கவில்லை.

.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 31/3/2022 at 21:28, ரதி said:

விசுகு அண்ணா உங்களுக்குத்கு தான் இந்த கேள்வி....தகுந்த விளக்கம் தருவீர்கள் என நினைக்கிறேன் .முடிந்தால் தனி திரி திறந்து பதில் எழுதுங்கள் ...ஓரு  நாட்டுக்குள்  இருக்கும் இரு வேறு மொழி இனங்கள் அதில் பெரும்பான்மையான அரசும் , மக்களும் சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைப்பதும், அவர்கள் தங்கட நாட்டுக்குள்ளேயே உரிமை ,தனி நாடு கேட்டு போராடுயதும் ,  தேவையில்லாமல் அயல் நாட்டுடன் பிரச்சனைக்கு போய் , அதை பேசி தீர்க்க முயலாமல் யுத்தத்தை வலிந்து தேடிக் கொண்டவர்கர்களையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்?
ரஸ்யா ,உக்ரேன் யார் சரி ,பிழைக்கு அப்பால் எங்கட பிரச்சனைக்கும் ,இதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?
நாளைக்கே இவங்கட பிரச்சனை தீர்ந்து ஒன்றுக்கு ஒன்றாகி விடுவார்கள் ...எங்கட பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை .சர்வதேசத்திற்கும் இல்லை...இருந்திருந்தால் எப்போதே தீர்த்து இருப்பார்கள் 

ஏற்கனவே சிலர் எழுதியது தான் ...நானும் எழுதி இருக்கேன் ....உங்களுக்கு தீர்வு தர வேண்டியது இலங்கை அரசு தான் ....அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க உக்ரேன் பிரச்சனையை சாதகமாக்க வேண்டிய தேவை இல்லை ...அதை விட எத்தனையோ வழிகள் இருக்கு ...மேலே நீங்கள் எழுதியது போல் உங்களை போல சிலர் எழுதுவதே ஒரு ஜோக் தான் . 

இந்த திரியையோ அதில் எனது கருத்தையோ நீங்கள் உள்வாங்கவில்லை என்று தெரிகிறது

இங்கே இவர்கள் ஒப்பிடுவது போன்று நடந்தால்???

யார் குற்றியும் அரிசியானால் சரி

அல்லது சிறு துரும்பும் பல் குத்த உதவும்

வேறு எந்த பெரிய எதிர்பார்ப்பும் எனக்கில்லை

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2022 at 00:52, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!
இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தை மரியோபுல் நிகழ்வுடன் ஒப்பிடுவதன் மூலம் எனக்கிருக்கும் சந்தேகங்களை உங்களை கேட்கின்றேன்.

மரியோபுல்லுக்கு கிடைக்கும் ஆதரவை எப்படி எமக்கு சாதகமாக பயன்படுத்த முடுடியும்? அந்த மரியோபுல் சம்பவத்திற்கு யார் தீர்ப்பு கொடுப்பார்கள்?
உக்ரேன் சம்பவத்தை எப்படி எமது ஈழ போராட்டத்துடன் ஒப்பிட முடியும்?
ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவை மீறி எதுவுமே நடக்காது என்பது தற்போது அல்ல அப்போதே தெட்டத்தெளிவாக தெரிந்து விட்டது. சிங்களம் விரும்பினால் கூட இந்தியா ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை போடும்.
 
அண்மைக்கால பார்வைகளின் படி சீனா கூட இந்தியாவை மீறி தமிழர் பிரதேசங்களில் அதிகமாக எதுவுமே செய்யப்போவதில்லை.சில வேளை இந்தியா சினம் கொண்டால் ஒட்டு மொத்த சிறிலங்காவையும்  சீனா விட்டு போக வாய்ப்புள்ளது.அது அப்போதைய சிறிலாங்கா அரசாட்சியை பொறுத்தது.ஒப்பந்தங்கள் பல சீனாவுக்கு இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரை  மொழி கலாச்சாரம் சமயம்  இனம் என்று பார்க்கையில் இந்தியாவின் இன்னொரு மாநிலம் இலங்கை.

மேற்குலகும் இந்தியாவை மீறி ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சனையில் எதுவும் செய்து விடப்போவதில்லை. அப்படி செய்தாலும் இந்தியா பச்சைக்கொடி காட்டிய பின்னர்தான் ஏதும்.....அதுவும் இந்திய நலன் சார்ந்தே இருக்கும்.

நமது பாசையில் சொல்லப்போனால் இந்தியா சகல நாடுகளுக்கும் "இலங்கை என்ரை ஏரியா" என விளித்து சொல்லியிருக்கும் என்பது என் ஊகம்.

இதை விட ரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் இந்தியா யார் பக்கம் என்று பார்த்தால் அதுவும் தலை சுத்துது.
இந்தியா கூடுதலாக ரஷ்யா சார்பான நாடு. அதிலும் மோடி ரம்பின் கூட்டாளி.ரம்ப் யாரின் கூட்டாளி?

யுத்தமும் அழிவுகளும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஒரு இடத்தில் மக்கள் அழியும் போது கண்டும் காணாமல் இருந்து விட்டு இன்னொரு இடத்தில் அதே போல் வரும் அழிவுகளை கண்டு கொதித்தெழும் மேற்குலகை கண்டிக்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் இந்த ரஷ்ய-உக்ரேன் யுத்தமும்  ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டமும் ஒன்றல்ல. இவை இரண்டும் வெவ்வேறு கோணங்கள்.

அமைதியாக வாசித்தமைக்கு நன்றி விசுகர்.
உங்கள் பதில் கருத்து எனக்கு மிக முக்கியம்.

உங்கள் கருத்துக்கு என்னிடம் மாற்று கருத்து இல்லை அண்ணா

ஆனால் கிணற்றுக்குள் விழுந்த ஒருத்தனுக்கு ஒரு துரும்பு கிடைக்குமல்லவா?? அந்த செக்கனில் வரும் ஒரு நம்பிக்கை இருக்கே?? அது மட்டும் தான் எனது நிலை 

இன்றைய செய்தியின் படி மரியோபோலுக்குள் செஞ்சிலுவை சங்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் நுழைகின்றன.

இன்று நாம் இவர்களது பாரபட்சத்தை கேள்வி கேட்கலாம் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/4/2022 at 11:25, விசுகு said:

கிடைத்த ஒரு சிறு துரும்பை வைத்தும் வல்லமை உள்ள பாலஸ்தீனம் இன்னும் விடிவு பெறவில்லை. மாறாக அதன் தலைவரையே......?

எம் இன நிலமை ஏதும் வேறு பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்கு ஒருவர் நான் எழுதிவிட்டு, கேள்விகளுக்குப் பயத்தில் காணாமல்ப் போய் ஒளித்துக்கொள்வதாகவும், பின்னர் வந்து சத்தமில்லாமல்  எழுதுவதாகவும் விசனப்பட்டிருந்தார். அது துரோகத்தின் நாட்காட்டியில் நான் நேரம் கிடைக்கும்போது எழுதுவதை வைத்துக் கூறப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன செய்வது? செய்த துரோகம் அப்படி, பலவிடங்களிலும் தேடித்தான் எழுதவேண்டியிருக்கிறது. குறிப்பாக சிங்கள இனவாதிகளின் பக்கங்களிலிருந்து, அவர்களுக்குத்தானே கருணாவின் அருமை எங்களை விட நன்றாகத் தெரிகிறது, என்ன நான் சொல்வது? ஆகவே, இனியும் அங்கு நான் எழுதுவேன் என்பதைக் கூறிக்கொண்டு உக்ரேனுக்குள் செல்லலாம். 

உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்தி ஆய்வு ஒன்றினை அடிப்படையாக வைத்தே இதனை எழுதுகிறேன். ஆனால், கடந்த இரு நாட்களில் புச்சா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் பல நூற்றுக்கணக்கான (ரஸ்ஸியாவினதும், ரஸ்ஸிய அனுதாபிகளினதும் பார்வையில் , நடிகர்கள்) ரஸ்ஸிய ராணூவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களினதும் எண்ணிக்கை 400 ஐத் தாண்டிவிட்டிருக்கிறது என்பதையும், பல உக்ரேனியப் பெண்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கினர் (இது ரஸ்ஸியா உக்ரேனியப் பெண்களைத் தங்களது கண்களைப் போலக் காத்து நிற்கிறதெனும் ரஸ்ஸிய அனுதாபிகளின் நற்சான்றிதழ்களுக்கு மத்தியிலும்) என்கிற செய்தியையும் கூறிக்கொண்டே ஆய்வுக்குள் நுழையலாம். 

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் விடுத்திருக்கும் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை

Destroyed armored vehicles on a road

உக்ரேனில் தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான  செர்னிவ், கார்க்கிவ், கியிவ் ஆகிய பகுதிகளில் உக்ரேனிய மக்கள் மீது ரஸ்ஸிய ராணுவம் புரிந்துவருகின்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்கள் பலவற்றினை ஆவணப்படுத்தி வருகிறது. 

இவற்றுள் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகள், ஆண்களைக் கூட்டமாக இழுத்துச் சென்று சுட்டுப் படுகொலை செய்தது, மாசி 27 முதல் பங்குனி 14 வரையான காலப்பகுதியில் பொதுமக்களைத் துன்புறுத்தியமை, அச்சத்தில் வைத்திருந்தமை ஆகியன அடங்கலான பல வன்முறைகளை ரஸ்ஸிய ராணுவம் புரிந்துள்ளது ஆவணமாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பொதுமக்களின் வீடுகளைச் சூறையாடிய ரஸ்ஸிய ராணுவம் உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் விறகுகள் என்று பல்வேறுவிதமான உடைமைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் போர்க்குற்ரவாளிகள் என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.

"நாம் சேகரிக்கும் விபரங்கள் பேசக் கூசுபவை, வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்து மிகவும் குரூரமாக நடத்தப்பட்டவை" என்று மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய -  மத்திய ஆசியாவுக்கான இயக்குனர் ஹியூ வில்லியம் தெரிவிக்கிறார். "அப்பாவி உக்ரேனியர்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், கொலை, சித்திரவதை உட்பட்ட ஏனைய வன்முறைகள் போர்க்குறறங்களில் அடங்குவதால் அவை விசாரிக்கப்படுதல் அவசியம்" என்று அவர் கூறுகிறார்.

கண்காணிப்பகம் செவ்வி கண்ட 10 பொதுமக்களில் சிலர் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள். சிலர் நேரடியான சாட்சிகள். இவர்கள் எல்லோருமே ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 

பங்குனி 4 ஆம் திகதியன்று, தலைநகர் கியிவிலிருந்து 30 கிலோமீட்டர்கள் வட மேற்கில் அமைந்திருக்கும் புச்சா எனும் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட ரஸ்ஸிய ராணுவம் அங்கிருந்த 5 ஆண்களை இழுத்துச் சென்று அவர்களில்  தலையில் சுட்டுக் கொன்றதைக் கண்ட சாட்சியொருவர் இதுபற்றிய தகவல்களை வழங்கியிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாசி மாதம் 27 ஆம் திகதி தனது மகன் உட்பட ஆறு பேரை ரஸ்ஸிய ராணுவம் இழுத்துச் சென்று கூட்டாகத் தலையில் சுட்டுக் கொன்றதை அத்தாயார் கண்டிருக்கிரார். 

60 வயது மதிக்கத்தக்க தகப்பனையும் அவரது மகனையும் இழுத்துச் சென்று சுடமுயன்றவேளை, இன்னொரு ரஸ்ஸிய வீரனால் தாம் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறுகிரார். 

பங்குனி 6 ஆம் திகதி வொசல் எனும் கிராமத்தினுள் புகுந்த ரஸ்ஸியப்படை அங்கிருந்த வீட்டினுள் புகைக்குண்டுகளை வீசியெறிந்திருக்கிறது. உள்ளேயிருந்து வெளியே ஓடிவந்த தாயையும் அவரது 14 வயது மகளையும் அவர்களது வீட்டின் முன்றலிலேயே ரஸ்ஸிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. அவர்களுடன் கூடவிருந்த இன்னொரு உறவினர் சூட்டுக்காயங்களுடன் அவ்வீட்டினுள் கிடந்து இரண்டாம் நாள் உயிரிழந்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்.

பங்குனி 13 ஆம் ஆண்டு கார்க்கிவ் புறநகர்ப் பகுதியை ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டபோது, தனது குடும்பத்திலிருந்து தன்னை தனியே இழுத்துச்சென்ற ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் அருகிலிருந்த பாடசாலையில் வைத்து தன்மீது தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ஒரு பெண் கூறுகிறார். தன்னைக் கடுமையாகச் சித்திரவதை செய்த ரஸ்ஸிய ராணுவத்தினர் தனது தலைமுடியினை வெட்டி எறிந்ததோடு, முகம், கழுத்து, உடம்பில் ஏனைய பாகங்கள் என்று பலவிடங்களில் கத்தியால் கீறிக் காயப்படுத்தியதை கண்காணிப்பகத்திடம் காட்டியிருக்கிறார்.

ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்திருந்த பல பகுதிகளிலிருந்து வெளியே வந்த உக்ரேனியர்கள் கூறிய பொதுவான விடயம் தான் ரஸ்ஸிய ராணுவம் கொள்ளைகளில் ஈட்டுபட்டதென்பது. பல வீடுகளுக்குள் புகுந்த ரஸ்ஸிய ராணுவம் அங்கிருந்த உணவு, உடைகள் உட்பட பெறுமதியானவற்றைக் கொள்ளையடித்தபின்னர், வீடுகளை எரித்துவிட்டுச் சென்றிருக்கிறது. பெருமளவு வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருட்களைக் கூட ரஸ்ஸிய ராணுவம் விட்டு வைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரஞ்சித் said:

இங்கு ஒருவர் நான் எழுதிவிட்டு, கேள்விகளுக்குப் பயத்தில் காணாமல்ப் போய் ஒளித்துக்கொள்வதாகவும், பின்னர் வந்து சத்தமில்லாமல்  எழுதுவதாகவும் விசனப்பட்டிருந்தார். அது துரோகத்தின் நாட்காட்டியில் நான் நேரம் கிடைக்கும்போது எழுதுவதை வைத்துக் கூறப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன செய்வது? செய்த துரோகம் அப்படி, பலவிடங்களிலும் தேடித்தான் எழுதவேண்டியிருக்கிறது. குறிப்பாக சிங்கள இனவாதிகளின் பக்கங்களிலிருந்து, அவர்களுக்குத்தானே கருணாவின் அருமை எங்களை விட நன்றாகத் தெரிகிறது, என்ன நான் சொல்வது? ஆகவே, இனியும் அங்கு நான் எழுதுவேன் என்பதைக் கூறிக்கொண்டு உக்ரேனுக்குள் செல்லலாம். 

உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்தி ஆய்வு ஒன்றினை அடிப்படையாக வைத்தே இதனை எழுதுகிறேன். ஆனால், கடந்த இரு நாட்களில் புச்சா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் பல நூற்றுக்கணக்கான (ரஸ்ஸியாவினதும், ரஸ்ஸிய அனுதாபிகளினதும் பார்வையில் , நடிகர்கள்) ரஸ்ஸிய ராணூவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி உக்ரேனியர்களினதும் எண்ணிக்கை 400 ஐத் தாண்டிவிட்டிருக்கிறது என்பதையும், பல உக்ரேனியப் பெண்களை ரஸ்ஸிய ராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கினர் (இது ரஸ்ஸியா உக்ரேனியப் பெண்களைத் தங்களது கண்களைப் போலக் காத்து நிற்கிறதெனும் ரஸ்ஸிய அனுதாபிகளின் நற்சான்றிதழ்களுக்கு மத்தியிலும்) என்கிற செய்தியையும் கூறிக்கொண்டே ஆய்வுக்குள் நுழையலாம். 

அந்த செய்தி ஆய்வு எதுவென்று கூற முடியுமா, தயைகூர்ந்து 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போருக்கான விதிமுறைகளில் வேண்டுமென்றே அப்பாவிகளைக் கொல்லுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் அதனோடு இணைந்த பாலியல் சித்திரவதைகளை போரில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல், சித்திரவதைகள், மனித நாகரீகமில்லாது மக்களையும் சரணடைந்தவர்களையும் நடத்துவது, மக்களின் சொத்துக்களைச் சூறையாடுவது, சொத்துக்களுக்கு வேண்டுமென்றே நாசத்தை ஏற்படுத்துவது என்பன தவிர்க்கப்படவேண்டிய, தடைசெய்யப்பட்ட குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

இத்தகைய செயல்களைச் செய்யுமாறு கட்டளையிடுவோர், செயல்களைச் செய்வோர், செய்வதற்கு உடந்தையாக இருந்தோர் அனைவருமே போர்க்குற்ரவாளிகளாகக் கருதப்படுவர் என்கிறது சட்டம். அவ்வாறே தனக்குக் கீழ் இயங்கும் ராணுவ வீரர்கள் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரிந்தும், அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்த தளபதிகளும் போர்க்குற்றவாளிகளே என்கிற இச்சட்டம். 

"உக்ரேனில் அப்பாவிகளுக்கெதிரான பாரியளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் தனது ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை விச்சரிப்பதற்கு ரஸ்ஸியாவுக்கு கடப்பாடு இருக்கிறது" என்று வில்லியம் கூறுகிறார். "கொலைகள், பாலியல் வன்கொடுமைகளைக் கண்டும் காணாதது போல அவற்றை ஆமோதிக்கும் தளபதிகளும் போர்க்குற்றவாளிகள் தான்" என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

கார்க்கிவ் பாலியல் வன்கொடுமை
பங்குனி 13 ஆம் திகதி ஒல்கா எனும் பெண்ணை  இழுத்துச் சென்ற ரஸ்ஸிய வீரர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். கார்க்கிவ் பகுதியில் மலய ரொகான் எனும் கிராமத்தில் வசித்து வந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு ரஸ்ஸிய ராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார்.

மாசி 25 அன்று தமது கிராமத்திற்குள் புகுந்த ரஸ்ஸிய ராணுவத்தினர் , அக்கிராமத்தின் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த 40 பெண்களையும் சிறுமிகளையும் அச்சுருத்தியிருக்கிறார்கள். தன்னுடைய 5 வயது மகள், தன்னுடைய தாய், தனது சகோதரி மற்றும் தன்னுடைய சகோதரருடன் ஒல்கா அங்கு தஞ்சமடைந்திருக்கிறார். 

நள்ளிரவு பாடசாலையின் கதவுகளை உடைத்துக்கொண்டு ரஸ்ஸிய ராணுவம் உள்நுழைதிருக்கிறது. 
தானியங்கித் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் நின்றிருந்த ஒரு ராணுவத்தினன், அங்கிருந்த எல்லோரையும் எழுது வரிசயில் நிற்குமாறு மிரட்டியிருக்கிறான். ஒல்காவும், தனது மகளின் கைகளைப்பிடித்துக்கொண்டு எழுந்து நின்றிருக்கிறார். தனது பிள்ளையைத் தருமாறு ரஸ்ஸிய வீரன் கேட்கவும் அவர் மறுத்திருக்கிறார். உடனே தனது சகோதரனை வா என்று இழுத்தெடுத்த அந்த வீரன் ஏனையவர்கள் எல்லோரையும் முழந்தாலிட பணித்திருக்கிறான். 
 தனது சகோதரனை இழுத்துச் சென்ற அந்த வீரன் 2 மணித்தியாலங்களின் பின்னர் திரும்பவும் அங்கு வந்திருக்கிறான். 

சிறிது நேரத்தின் பின்னர் தன்னருகே வந்த அவன், தன்னைப் பின் தொடருமாறு மிரட்டத்த் தொடங்கியிருக்கிறான். 

பாடசாலையின் இன்னொரு அறைக்குள் தன்னை இழுத்துச் சென்ற அவன், துப்பாக்கி முனையில் தனது ஆடைகளைக் களையச் சொல்லியிருக்கிறான். துப்பாக்கியை தனது நெற்றிக்கு நேரேபிடித்தபடி தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்திய அவன், பலமுரை அப்பெண்ணுடன் கட்டாய உடலுறவில் ஈடுபட்டிருக்கிறான். அவள் மறுத்த ஒவ்வொரு பொழுதிலும் துப்பாக்கியால் அவளருகில் சுட்டு அச்சுருத்தியே இதனைச் செய்திருக்கிறான். இப்படிப் பலமுறை அவளை வன்புணர்ந்த அவன், அருகிலிருந்த கதிரை ஒன்றில் இருக்குமாறு பணித்திருக்கிறான்.

நான் எனது உள்ளாடைகளை இனி அணியலாமா அவள் கேட்கவும், மேலாடையினை மட்டும் அணி, ஆனால் உடலின் கீழ்ப்பகுதிக்கு எதனையும் அணியக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான். தனது மகளை இப்படியே தன்னால் சென்று பார்க்கமுடியாது என்று அவள் கூறவும், உனது மகள் உயிருடன் வேண்டுமென்றால், இப்படியே போ என்று கூறி மிரட்டியிருக்கிறான். 
வெறும் 20 வயதே மதிக்கத்தக்க அந்த ராணுவ வீரன் திடீரென்று தனது கத்தியை உருவி அப்பெண்ணின் கழுத்தில் கீரத்தொடங்கவே அவள் பயத்தில் அலறியிருக்கிராள். அவளது அலறுலுக்கு மத்தியிலும் அவன் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு மறுபடியும் உள்ளாக்கியிருக்கிறான். 

தன்னை பாலியல் வன்கொடுமை புரிந்துகொண்டே தனது கத்தியினால் தனது கன்னம், உடலின் பாகங்கள் என்று பலவிடங்களிலும் கீறிய அவன், தனது முடியையும் வெட்டி எறிந்ததாகக் கூறுகிறாள் ஒல்கா. பாலியல் வன்கொடுமையின்போது தன்னை மீண்டும் மீண்டும் கடுமையாகத் தாக்கியதாக கண்காணிப்பகத்திடம் கூறிய ஒல்கா தனது காயங்களைச் சாட்சியாகக் காட்டியிருக்கிறாள். 

அதிகாலை வரை தன்னை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை புரிந்த பின்னர், அங்கிருந்து அவன் சென்றுவிட்டதாக அப்பெண் கூறுகிறாள். தன்னைக் கொலை செய்யவே தனியாக இழுத்துச் செல்கிறான் என்று தான் பயந்ததாகவும், ஆனால் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு தான் உயிர்வாழ்வது அதிஷ்ட்டம் தான் என்றும் அவள் கூறுகிறாள். 

இவ்வகையான பாலியல் வன்கொடுமைகளை ரஸ்ஸிய ராணுவம் மரியோபுள்ளில் இருக்கும் சில பகுதிகளிலும், சேர்னிவ் பகுதிகளிலும் செய்திருப்பதாகக் கூறும் கண்காணிப்பகம், இதுதொடர்பாகத் தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் பலவற்றை தாம் விசாரித்து வருவதாகவும் கூறுகிறது.

ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் தொடரும்.....

19 minutes ago, Kapithan said:

அந்த செய்தி ஆய்வு எதுவென்று கூற முடியுமா, தயைகூர்ந்து 🙏

ஏ பி மற்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, ரஞ்சித் said:

அட மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள்.

புரிந்துகொண்டேன்.

Edited by Kapithan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆக்கிரமிப்பாளனின் கொலைகளைப் பற்றி எழுதுவதற்கு நான் அவனின் செய்திகளைப் படித்தால் முடியாது. அப்படியிருந்தால், என் மக்கள் மீதான இனக்கொலைபற்றி அறிவதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தையும், லங்கா புவத்தையும்தான் நான் படித்திருக்க வேண்டும். தமிழ்நெட்டை அல்ல.

நான் தமிழெட்டை மட்டுமே படித்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அதே காரணம் தான் இங்கேயும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்குலக ஊடகங்களில் அனேகமானவை அரை லங்காபுவத் தான். தங்கள் நலனுக்கு உகந்த செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன அல்லது திரித்துக் கூறுகின்றன. 

தமிழ்நெற்றையும் லங்காபுவத் தையும் ஒருங்கே வாசித்தபடியால்தான் எனக்கு லங்காபுவத்தின் உண்மைத்தன்மையின் அளவு புலப்பட்டது.  

மேற்குலகு ரஸ்ய ஊடகங்களைத் தடை செய்ததன் காரணம் தங்களால் வெளியிடப்படும்  செய்திகளின் உண்மைத் தண்மையை ஒப்பிட்டு நோக்கக்கூடாது என்பதற்காகவே.  ரஸ்ய ஊடகங்களைத் தடைசெய்த மேற்கு ஏன் இரஸ்ய எரிபொருள், எரிவாயு என்பவற்றைத் தடை செய்யவில்லை ? 

மேற்கின் சனநாயகம், பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை என்பவற்றின் சீழ்பிடித்த பக்கங்கள் இதுதான். 

இதைச் சொன்னா என்னைப் பைத்தியக்காறன் எங்குறாவுக..

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

 ரஸ்ய ஊடகங்களைத் தடைசெய்த மேற்கு ஏன் இரஸ்ய எரிபொருள், எரிவாயு என்பவற்றைத் தடை செய்யவில்லை ? 

நாங்கள் வாற வருசம் தொடக்கம்  தான் ரஷ்ய காஸ்,எண்ணை,மண்ணெண்ணை ஒண்டும் வாங்கமாட்டம். அது வரைக்கும் வாங்குவம்.🤣

என்ன யோசைனையிலை உக்ரேன் சனாதிபதி ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உடனடியாய் ரஷ்யாவிட்ட இருந்து வாற எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லுவார்? ரஷ்யாவிலை இருந்து வாற காஸ் நிண்டால் ஐரோப்பவிலை இருக்கிற பெரும்பாலான தொழிற்சாலைகள் உடனடியாக இழுத்து மூட வேண்டியதுதான். இப்ப உக்ரேனுக்கு போற ஆயுதங்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியினால் உருக்கி செய்யப்பட்டதே.இப்ப ஐரோப்பிய நாடுகளுக்கை தஞ்சம் புகுந்த உக்ரேன் மக்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியிலான வெப்பத்திலேயே நிம்மதியாக துயில் கொள்கின்றனர்.☹️

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனியப் பொதுமக்கள் மீதான கூட்டுப் படுகொலைகாளும் ஏனைய வன்முறைகளூம்

மாசி மாதம் 27 ஆம் திகதி சேர்னிவ் பிராந்தியத்தின் ஸ்டேரி பைகீவ் கிராமத்தினுள் புகுந்த ரஸ்ஸியப்படையினர் அங்கு தென்பட்ட 6 ஆண்களை கூட்டாக இழுத்து வந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இப்படுகொலைகளுக்கு சாட்சியாகத் திகழும் டெட்டியானா இப்படுகொலைகள் குறித்து மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் புகாரளிக்கையில், "எனது கிராமத்திற்கும் ஸ்டேரி பைகீவுக்கும் இடையில் இருந்த ஒற்றைத் தொடர்பான பாலத்தினத் தகர்த்த ரஸ்ஸிய ராணுவம் இவ்விரு கிராமங்கள் மீதும் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டவாறே அப்பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டது. ரஸ்ஸிய ராணூவத்தின் கனரக வாகனத் தொடரணி அவ்வூருக்குள் நுழைவதை நான் கண்ணுற்றேன். உள்நுழைந்த சில நிமிடங்களில் இந்தப் படுகொலைகளை ரஸ்ஸிய ராணுவம் புரிந்தது" என்று கூறுகிறார்.

"கிராமத்தின் அநேகமான மக்கள் கடுமையான எறிகணை வீச்சிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமது நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருந்தனர். இதனையடுத்து ஒவ்வொரு வீடு வீடாகச் சென்ற ரஸ்ஸிய ராணுவத்தினர் வீடுகளுக்குள் இருந்த ஆண்களை வெளியே இழுத்து வந்தனர். அவர்களில் அறுவரை தலையில் சுட்டுக் கொன்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த அறுவரில் இருவர் சகோதரர்கள். இன்னொருவருக்கு வெறும் 20 வயதே ஆகியிருந்தது. இந்த ஆண்களை இழுத்துச் செல்லும்போது, பின்னால் அழுது மன்றாடிக்கொண்டு வந்த தாய்மாரையும் சகோதரிகளையும் மிரட்டிய ரஸ்ஸியப் படையினர், "எம்மைப் பின் தொடர வேண்டாம், இவர்களை விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பியனுப்புவோம்" என்று கூறியிருக்கின்றனர். ஆனால், கிராமத்தின் சிறிய மூலையொன்றிற்கு தமது பிள்ளைகள் இழுத்துச் செல்லப்படுவதையும் பின்னர் மறைவான இடமொன்றில் நிரலாகச் சுட்டுக் கொல்லப்பட்டதை வேதனையுடன் பலர் பார்த்ததாக டெட்டியானா மேலும் கூறுகிறார்.

தனது 20 வயது மகனைப் பறிகொடுத்த தாயார் கூறுகையில், "அவர்கள் எனது மகனையும் எனது மைத்துனரையும் எங்களிடமிருந்து இழுத்துச் சென்றார்கள். எம்மை மிரட்டி, அங்கேயே இருக்குமாறு அவர்கள் பணித்துவிட்டே அவர்களை இழுத்துச் சென்றார்கள். அவர்களை இழுத்துக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பதை நான் அறியேன். எனது மகனையும் மைத்துனரையும் போலவே இன்னும் சில ஆண்களை அவர்கள் இழுத்துச் செல்வதை பலர் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறதென்பதை உணர்ந்துகொண்ட நான் அருகிலிருக்கும் ரஸ்ஸிய ராணுவத்தின் காவலரணுக்கு ஓடிச்சென்று எனது பிள்ளைகள் எங்கே என்று அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அங்கு நின்ற ரஸ்ஸிய ராணுவத்தினர். "கலங்க வேண்டாம், அவர்களை சும்மா விசாரித்து மிரட்டுவதற்காகவே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் , விரைவில் அனுப்பிவைப்பார்கள்" என்று ஏளனத்துடன் கூறியிருக்கிறார்கள். அந்தக் காவலரணிலிருந்து ஒரு 50 மீட்டர்கள் போயிருக்கமாட்டோம், எங்களின் பின்னால் தொடர்ச்சியான துப்பாக்கிச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சத்தம் வந்த திசைநோக்கி ஓடிச்செல்ல எத்தனித்த எம்மை ரஸ்ஸிய ராணுவம் தடுத்துவிட்டது. மறுநாள் காலை அவ்விடத்திற்குச் சென்றபோது, வயல் வெளியொன்றிற்கு அருகிலிருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றில்  எனது மகனும், ஏனைய ஐந்துபேரும் சடலங்களாகக் கிடந்ததை நாம் கண்டோம்" என்று வேதனையுடன் கூறுகிறார்.

"கட்டிடத்தினுள் மூவரும், அதற்கு வெளியே ஏனைய மூவருமாக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களின் தலைப்பகுதியில் சுட்டே ரஸ்ஸிய ராணுவம் அவர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. எனது மகனின் சடலத்திலிருந்து அவரது தொலைபேசி, பணம், ஏனைய ஆவணங்கள் என்பவற்றை ரஸ்ஸிய ராணுவத்தினர் திருடியிருந்தார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

எங்களுக்கும் இப்பிடி நடந்துதான், வாசிக்கும்போதே ஒரு மாதிரியாக உள்ளது, இவ்வளவையும் தேடி, மொழிபெயர்த்து, தொகுத்து எழுதியுள்ளீர்கள்👏👏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

றுநாள் காலை கொல்லப்பட்ட தமது பிள்ளைகளின் உடல்களை எடுப்பதற்குச் சென்ற தாய்மாரை ரஸ்ஸிய ராணுவம் தடுத்துவிட்டது. அதன் பின்னர் வந்த நாட்களில் இப்பகுதியெங்கும் மிகக் கடுமையான எறிகணை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இடைவிடாது ரஸ்ஸியா நடத்திக் கொண்டிருந்தது.

பங்குனி மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அப்பகுதிக்குச் சென்ற அந்தத் தாய் தனது பிள்ளைகளின் உடல்களை எடுக்க அனுமதி தருமாறு ரஸ்ஸிய ராணுவத்தைக் கேட்டிருக்கிறார். "நாங்கள் அவர்களின் காவலரணில் சென்று கேட்கும்போது, அவர்கள் எங்களை சேமக்காலைக்குப் போகச் சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து கிராமத்திலிருந்த சுமார் 75 பேர்வரையில் சேமக்காலையில் கூடினோம். சிறிது நேரத்தில் எமது பிள்ளைகளின் உடல்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களைத் தனித்தனி குழிகளில் புதைத்தோம்" என்று அவர் மேலும் கூறினார்.

தனது பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட ஏனைய நான்கு ஆண்களீனதும் பெயர்களை அத்தாயார் கூறினார். அவர்கள் வொலொடொமிர்40, ஒலெக்சாண்டர் 40, இன்டோர் 31 மற்றும் ஓலே 33.

டெடானியா மேலும் பேசுகையில், "எமது கிராமத்திலிருந்து அனைத்துவீடுகளிலிருந்தும் விறகுகளை ரஸ்ஸிய ராணுவத்தினர் எடுத்துச் சென்றிருந்தனர். எமக்குச் சமைப்பதற்கோ அல்லது குளிரின்பொழுது தீமூட்டுவதற்கோ எந்த விறகையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை" என்று கூறினார்.

பங்குனி 4 ஆம் திகதி , தலைநகர் கியிவுக்கு 30 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் புச்சா பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த அப்பாவி மனிதர் ஒருவரை ரஸ்ஸிய ராணுவம் சுட்டுக் கொன்றதையும், இன்னும் நால்வரை இழுத்துச் சென்று சுட ஆயத்தப்படுத்தியதையும் அப்பகுதி ஆசிரியர் ஒருவர் சாட்சியப்படுத்தியிருக்கிறார். "காலை 7 மணியிருக்கும், எமது வீதியால் ரஸ்ஸிய ராணுவத்தின் மூன்று யுத்தத் தாங்கிகளும் ரஸ்ஸிய வீரர்களை ஏற்றும் நான்கு டிரக் வண்டிகளும் செல்வதைப் பார்த்தேன். எமது வீடுகளுக்குள் நுழைந்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் வீட்டின் மூலையில் பதுங்கிக் கொண்டேன். சிறிதுநேரத்தில் எனது வீட்டின் முன்கதவின் கண்ணாடி அடித்து நொறுக்கப்படுவது கேட்கிறது. சில நொடித்துளிகளீன் பின்னர், "வெளியே வாருங்கள், வீட்டினுள் கிரனேட்டுக்களை கழற்றி வீசப்போகிறோம்" என்று அதட்டும் ரஸ்ஸிய வீரன் ஒருவனின் குரல் கேட்கிறது. நான் தனியாகவே இருக்கிறேன், என்னைக் கொன்றுவிடாதீர்கள், நான் வெளியே வருகிறேன் என்று அலறிக்கொண்டு எனது கைகளை மேலே தூக்கியபடி நான் வீட்டிற்கு வெளியே வந்தேன்". 

"ஒரு அதிகாரியும் இரு ராணுவவீரர்களூமாக அங்கே மூன்று பேர் நின்றிருந்தனர். எனது கைபேசியைப் பறித்த அதிகாரி, அதனைப் பரிசோதிக்கத் தொடங்கினான். உள்ளே சென்று உனது அடையாளப் பத்திரங்களை எடுத்துக்கொண்டு வா என்று அதட்டினான். நான் அவற்றினை எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். வெளியே வரும்போது, என்னைப்போன்றே எனது அயலவர்களையும் ரஸ்ஸிய ராணுவத்தினர் இழுத்துச் செல்வது தெரிகிறது". 

"எம்மை ஒரு பாரிய சேமிப்புக் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். கட்டிடத்திற்கு வெளியே இருந்த முன்றலில் எம் அனைவரையும் நிற்கவைத்தார்கள். அதில் அநேகமானவர்கள் பெண்கள், 50 வயதினைத் தாண்டிய சில ஆண்களூம் அங்கே இருந்தார்கள். சுமார் 30 ரஸ்ஸிய ராணுவ வீரர்கலும் அவர்களின் அதிகாரியும் அங்கே இருந்தனர். அங்கே இழுத்துவரப்பட்ட அனைவரினது அடையாள ஆவணங்களை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்த ரஸ்ஸியர்கள், உங்களில் யார் யார் பிரதேச தற்பாதுகாப்பு ராணூவத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டனர்".

"அங்கிருந்த பெண்களீல் கர்ப்பிணிப் பெண்ணொருத்தி இருந்தாள். இயற்கை உபாதையினைக் கழிக்க அவள் பாடாதபாடு பட்டுக் கொண்டிருக்க, அவளை மலசல கூடத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரினேன். நீண்ட அந்தக் கட்டிடத்தில் முடிவில் இருந்த மலசல கூடத்தை ஒரு ரஸ்ஸிய வீரன் காட்டினான். நானும், அப்பெண்ணும் நடந்துசெல்லும்போது ஒரு பகுதியில் மிகப்பெருமளவில் குருதியோடிக்கிடந்ததைக் கண்டோம். அப்பகுதியிலிருந்த சுவர்கள், கதவுகள் எங்கு இரத்தக்கறை பீய்ச்சிட்டுக் கிடந்தது. கடுமையான குளிரில், திறந்த வெளியில், சரியான மேலாடைகள் இன்றி எம்மை இருத்தி வைத்திருந்தது ரஸ்ஸிய ராணுவம்" என்று அவர் மேலும் கூறினார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிது நேரத்தின்பின்பு, ரஸ்ஸிய ராணுவத்தினர் ஐந்து இளவயது ஆண்களை அங்கே இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த சப்பாத்துக்களையும், மேலங்கிகளையும் கழற்றுமாறு அவர்களூக்குப் பணிக்கப்பட்டது. வீதியின் அருகே அவர்களை முழங்கால்களில் இருக்குமாறு ரஸ்ஸிய ராணுவம் பணித்தது. அவர்களின் பின்னால் நின்றுகொண்டிருந்த ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் அந்த இளைஞர்களின் டீ சேர்ட்டுக்களை அவர்களின் தலைகளுக்கு மேலே இழுத்துவிட்டார்கள். அதில் ஒரு இளைஞனின் பிடரியில் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டான் ஒரு ரஸ்ஸிய  வீரன். சுடப்பட்ட அந்த இளைஞன் முன்னே சாயவும் அங்கிருந்த பெண்கள் எல்லாம் அலறத் தொடங்கினோம். மற்றைய நான்கு இளைஞர்களும் இன்னமும் முழங்காலில் இருந்துகொண்டிருந்தார்கள். அங்கிருந்த ரஸ்ஸிய அதிகாரி எங்களைப் பார்த்து இப்படிக் கூவினான், "நீங்கள் அச்சப்படத் தேவையில்லை, உங்களில் ஒருவரும் பிரச்சினையானவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் ஐந்துபேரும் தீண்டத் தகாதவர்கள். ஆகவே அவர்களை அழிக்கவே வந்திருக்கிறோம்".

"பல மணி நேரத்திற்குப் பின் எம்மை எமது வீடுகளுக்கு போகச் சொன்னார்கள், நான் வரும்வரை அந்த நான்கு இளைஞர்களும் அங்கேயே முழங்காலில் இருத்தப்பட்டிருந்தார்கள். அந்த இரவு முழுதும் அப்பகுதியெங்கும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. அந்த நான்கு இளைஞர்களுக்கும் என்ன நடந்தது என்பதுபற்றி எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.

"ஐந்து நாட்களின் பின்னர், அப்பகுதியிலிருந்து வெளியேற ரஸ்ஸிய ராணூவம் எம்மை அனுமதித்தது. அவ்வீதியால் நடந்துசெல்லும்போது அன்று கொல்லப்பட்ட அந்த இளைஞனின் உடல் அதே இடத்தில் அப்படியே கிடந்ததைக் கண்டேன். ஏனைய நால்வரையும் காணவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

டிமடிரோ எனும் 40 வயது உக்ரேனியர் தனது அனுபவம் பற்றிக் கூறும்போது, "பங்குனி 7 ஆம் திகதி கடுமையான செல்வீச்சில் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த எமது பகுதியான பூச்சாவிகிருந்து நாம் தப்பி ஓடினோம். எந்தப் பாதை பாதுகாப்பானது என்று எமக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆகவே நடந்து செல்வதென்று தீர்மானித்திருந்தோம். சுமார் 5 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் வொர்செல் கிராமத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் தலைக்குமேலே வெண்ணிறத் துணிகளை அசைத்துக்கொண்டு உயிரைக் கையில்ப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தோம்".

"வொர்சலில் இருந்த இரு மாடிக் கட்டிடம் ஒன்றில் அன்றிரவு நாம் தங்கினோம். எம்முடன் அங்கே தஞ்சமடைந்திருந்த பலர் காயப்பட்டிருந்தனர் ஒரு பெண்ணிற்கு நெஞ்சுப் பகுதியும், கால்களும் கடுமையாகச் சேதமடைந்திருந்தது. நாம் அங்கு செல்வதற்கு ஒரு நாளுக்கு முன்னமே அந்தப் பெண்ணை ரஸ்ஸிய ராணுவத்தினர் சுட்டதாக அவளின் உறவினர்கள் என்னிடம் கூறினர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரஸ்ஸிய ராணுவம், கிர்னேட்டுக்களையும் கழற்றி வீசியிருந்தது. புகைக்குண்டுகளை ரஸ்ஸிய ராணுவம் இக்கட்டிடத்தினுள் வீசியபோது, மூச்சுத்தினறி வெளியே ஓடிவந்த அப்பாவிகள் மீது, வெளியே காத்திருந்த ரஸ்ஸிய ராணூவம் சரமரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியது. அத்தாகுதலில் தம்முடன் இருந்த 14 வயதுச் சிறுமி தலையில் சூடுபட்டுக் கொல்லப்பட்ட இப்பெண்ணின் நெஞ்சுப்பகுதியிலும், கால்களிலும் சூடு விழுந்தது. ஆனால், நாம் அங்கு சென்ற மறுநாள் காலையில் அப்பெண்ணும் உயிரிழந்துபோனாள்" என்று அவர் கூறினார்.

பங்குனி 4 ஆம் திகதி இர்பின் பிராந்தியத்தின் சபுச்சாயா எனும் கிராமத்திற்குள் நுழைந்த ரஸ்ஸிய ராணுவம் தன்னையும் தனது மகனையும் கொல்வதற்கு ஆயத்தப்படுத்தியதாக இன்னொரு கூறினார். 

"சுமார் பத்துப் பேர்வரை எமது நிலக்கீழ் அறையில் பதுங்கியிருந்தோம். 13 ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் திடுதிடுப்பென்று எமது வீட்டினுள் நுழைந்தனர். எம்மை படுத்திருக்குமாறு கோரிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினர். எனது மகன் தற்காப்பு ராணுவத்தில் பணிபுரிகிறான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவனது பெயரைச் சொல்லி, எங்கே இருக்கிறான் என்று என்னைக் கேட்டனர். எனது மகன் வெளியே செல்லவும் அவனையும் என்னையும் இழுத்துக்கொண்டு செல்ல ஆயத்தமாகினர். அப்போது அங்கே வந்த அவர்களது அதிகாரி, "இவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டிச் சுடுங்கள் " என்று கத்தினான். அவனது சொற்படி சில வீரர்கள் எங்களை வீட்டின் பின்னால் இழுத்துக்கொண்டு சென்றார்கள். ஆனால், அவர்காளீல் ஒருவனுக்கு எம்மைக் கொல்வதில் இஷ்ட்டமில்லை. எனது மகனின் உடலில் "வலதுசாரிகளின் இலச்சினை பச்சை குத்தப்பட்டிருகிறதா" என்று தேடிவிட்டு, எங்களைப் போகச் சொல்லி விட்டு விட்டான். அவனாலேயே நாம் உயிர் தப்பினோம்" என்று அவர் கூறினார்.

"எனது வீட்டிற்கு அருகிலிருக்கும் நீதிபதியொருவரின் வீட்டிற்குச் சென்ற ராணுவத்தினர் அவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பெறுமதியான பல பொருட்களை அவர்கள் சூறையாடுவது தெரிந்தது. பொருட்களைச் சூறையாடிவிட்டு, வீட்டைச் சேதப்படுத்திய ரஸ்ஸிய ராணுவம் அங்கிருந்து அகன்றதும், நாமும், இன்னும் அங்கே அடைக்கலமாகி இருந்தோரும் இரு கார்களில் வேறு பாதுகாப்பான பகுதிக்குத் தப்பி வந்தோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.