Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் ஏன் யாரும் ஊரில் நிண்டு மாடு மேய்க்கப்போகவில்லை?

அம்மா அப்பா அவித்து போட்டார்கள்.

திண்டுடுட்டு ஊர் சுத்தினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்ப புட்டின் போரில் வென்று, முழு உக்ரேனையும் கைப்ற்றுவார் என்று நீங்கள் கூறியது பொய்யா அண்ணா🤣

அது வேறை… டிபார்ட்மென்ற், இது வேறை… டிபார்ட்மென்ற். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இத்தாலிக்காரர்ரை ஓலிவன் எண்ணை நூறு வீதம் சுத்தம் சுகாதாரம். உடம்புக்கும் நல்லது.

நல்லெண்ணை இஞ்சத்தையான் காலநிலைக்கு சரிவருமோ எண்டது எனக்கு சந்தேகம்.

துருக்கிக் காரரின் ஒலிவ் எண்ணையும்… நல்லது என்று,
துருக்கிக்காரன் சொல்லுறான். 😜

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இந்த அடிப்படை பொருளாதார உபகரணகளை கூட இயக்க முடியாத அளவுக்கு நாட்டை போட்டு அடித்த  பைத்தியகார அரசுதான் பிரச்சனை.

அரசுதான் பிரச்சனை மறுக்கவில்லை, அதே போல இந்த பொருளாதார நெருக்கடியை சாதாரண மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ஆனால் சில விடயங்களை நாங்களும் கவனிக்க மறந்துவிட்டோமோ என்ற கவலை அங்கே போகும் சமயங்களில் ஏற்பட்டது. 

என்னைப்பொறுத்தவரை, தற்போதைய நிலைக்கு வரமுதல் அங்கே வேலையிற்கு ஆட்கள் இருக்கும் பொழுது இயந்திரங்களை பயன்படுத்தினால் அங்கே இந்தமாதிரி வேலைகளை நம்பி உள்ளவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணமே உள்ளது. அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மாற்றீடாக வேறு வேலைகளை பயிற்றுவித்தோ அல்லது வேறு வேலைகளை கொடுத்தோ/ஊக்குவிக்கவோ இல்லை என்ற ஆதங்கம் உள்ளது. 

உதாரனத்திற்கு அரிவி வெட்டிய நெல்லை காயவைத்து அரிசியாக்க சிங்கள பகுதிகளில் இருந்துதான் ஆட்கள் வந்து லொறிகளில் ஏற்றிக்கொண்டு போகிறார்கள். ஏனென்றால் கிளிநொச்சியில் இதற்கான வசதிகள் இல்லை என்றார்கள். இந்த நிலை ஏன் ஏற்பட்டது? 
அரசியல்வாதிகளை மீறி இது பற்றி ஒன்றுமே செய்ய முடியாதா? 

நிற்க, வினைத்திறனான முறையை நாடுவதுதான் நல்லவிடயம் மறுக்கவில்லை. அதே போல இங்கே நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களையும், வசதிகளையும் அவர்களும் அனுபவிக்கவேண்டும். 
ஆனால் சில தொழில்களில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப சிங்கள பகுதிகளில் இருந்து வேலைக்கு அமர்த்துகிறார்கள், பிறகு சத்தம் போடுகிறார்கள். இதனை எப்படி நிவர்த்தி செய்வது? இவற்றையெல்லாம் பார்க்கையில் கவலை ஏற்பட்டதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அப்புறம் இந்த “மாடு நெருக்க வெட்கம்” என்பது பற்றி.

இங்கே எழுதிய பலர், புலம்பெயர் தேசத்தில் வந்து அக்கவுண்டனாக, எஞ்சினியராக, வைத்தியராக இன்னும் பல white collar படிப்புக்களை படித்தவர்கள். நமது வாழ்க்கை துணைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாரும் கூட இதே துறைகளில்தான்.

நீங்கள் ஏன் யாரும் ஊரில் நிண்டு மாடு மேய்க்கப்போகவில்லை?

சரி அதை விடுங்கள் - வெளிநாட்டில் விவசாயம், மீன் பிடி தொழிலை யாரும் இழிவாக பார்ப்பதில்லை - அப்படி இருக்க எத்தனை புலம்பெயர் தமிழர்கள் விவசாய நிலங்களில், மீன் பிடி படகுகளில் வேலை செய்கிறார்கள்? 3 தலைமுறையாக போகிறது விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவனை மட்டும் ஏன் மாடு மேய்க போககூடாது எண்டு நாம் கேட்ப்போம்🤣.

அங்கே வேறு துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் இல்லாதமையாலேயே திரும்பதிரும்ப ஒரு சில துறைகளைத்தான் நாடுகிறார்கள் என யோசிப்பதுண்டு.. ஆனால் இங்கே வாய்ப்புகள், வசதிகள் இருந்தும் குறிப்பிட்ட துறைகளைத்தான் தெரிவு செய்கிறார்கள்.  மூன்று தலைமுறை ஆகியும் பெரிய மாற்றமில்லை. வேறு துறைகளை தெரிவு செய்பவர்களை பார்க்கும் விதமும் மாறவில்லை. 

இந்த விடயம் தொடர்பாகவும், இங்கே உள்ளவர்களின் மனநிலைகளைப்பற்றியும் நான் எனது எண்ணங்களை எழுதிய போது அப்படியில்லை, நான் அவர்களை எனது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து குறை கூறுகிறேன் etc etc என்ற பிறகு இது தொடர்பாக எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன். நான் என் சார்ந்தவர்களுடன் எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறேன் மாறுகிறதா அல்லது எவ்வளவு தூரம் சரியாகும் என்று பார்ப்போம். 

அதே போல என்னைக்கேட்டால் அங்கே உள்ள பெண்கள் மிகவும் தைரியசாலிகள் அதனைவிட திருமணம் தொடர்பான எண்ணங்களிலும் மாற்றம் உள்ளது. பெற்றோரும் அவர்களை வற்புறுத்துவதில்லை. என்னைப் பொறுத்தவரை இது வரவேற்கத்தக்க விடயமும் மகிழ்ச்சியுமே! எனது அவதானி்ப்புகள் அனைத்தும் சிறிய நடுத்தர அளவான மக்கள் கூட்டங்களிலிருந்து வந்த அவதானிப்புகளே. 

அதே போல ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் அடிப்படை வசதிகளோடு வாழ்வதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கைதுணையை தேர்ந்தெடுப்பதில்லை தவறு இல்லை.    அது அவர்களது உரிமை! பெண்கள் இந்த மாதிரி இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Again, சில விடயங்களை கதைத்தால் வீண் பிரச்சனை அதனால் சிலவற்றை கடந்து போகவிரும்புகிறேன்.  

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

உணவுப் பாதுகாப்பிற்கு, உடனடியாக... நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச-தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பாக கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் இறக்குமதி, விநியோகம், முறையான மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தேசிய உரக் கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இரசாயன அல்லது கரிம உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் முழு ஈடுபாட்டின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இந்த பணியை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்பு வழங்கி முன்னுதாரணமாக அமைய வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1284621

15 hours ago, goshan_che said:

அப்புறம் இந்த “மாடு நெருக்க வெட்கம்” என்பது பற்றி.

இங்கே எழுதிய பலர், புலம்பெயர் தேசத்தில் வந்து அக்கவுண்டனாக, எஞ்சினியராக, வைத்தியராக இன்னும் பல white collar படிப்புக்களை படித்தவர்கள். நமது வாழ்க்கை துணைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாரும் கூட இதே துறைகளில்தான்.

நீங்கள் ஏன் யாரும் ஊரில் நிண்டு மாடு மேய்க்கப்போகவில்லை?

சரி அதை விடுங்கள் - வெளிநாட்டில் விவசாயம், மீன் பிடி தொழிலை யாரும் இழிவாக பார்ப்பதில்லை - அப்படி இருக்க எத்தனை புலம்பெயர் தமிழர்கள் விவசாய நிலங்களில், மீன் பிடி படகுகளில் வேலை செய்கிறார்கள்? 3 தலைமுறையாக போகிறது விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவனை மட்டும் ஏன் மாடு மேய்க போககூடாது எண்டு நாம் கேட்ப்போம்🤣.

அவர்களை மாடு மேய்க்க போகச்சொல்ல இல்லை.  தேவை வரும் போது அதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில், இப்ப பார்த்தால் படித்து வேளையில் இருப்பவர்கள் தான் ஆர்கானிக் தூடடத்தில் எல்லாம் ஆர்வமாய் உள்ளார்கள் வெளிநாடுகளிலும் ,.உதாரணத்துக்கு எத்தனையோ படித்தவர்கள் வேறு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை பார்க்க. கொரோனாக்குள் தாமாகவே முடி வெட்டிப் பழகியவர்களும் , வீட்டு திருத்தங்களும் செய்ய பழகியவர் போல் . எதாவது பிழையாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Vasee, நீங்கள் கூறுவது போல முழுமையாக தாரைவார்த்து கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

அங்கேயும் சிறு கைத்தொழில் முயற்சிகள், விவசாயத்தை பகுதி நேர வேலையாக பார்த்தபடி அவர்களது துறைசார் வேலைகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய கொள்வனவு முறைகள்/எண்ணங்களிலும் சில மாற்றங்கள் தேவை. உதாரணத்திற்கு இலங்கையின் தற்பொழுதுள்ள நிலைக்கு முன்பு, அங்கே சுய கைத்தொழில் செய்யும் சிறு கைத்தொழிலாளர்களில் எத்தனை பேருக்கு உள்நாட்டு வெளிநாட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது? கற்பகம் வணிக நிலையம், யாழ் கைத்தொழில் வளாகம் வெறுமையாக இருக்கும் ஆனால் Laksalaல் கூட்டமாக இருக்கும். இது எனக்கு தெரிந்த ஒரு உதாரணம்.

அதே போல இன்னொரு விடயம், எனது சகோதரி கூறினார், நானும் அதனை அவதானித்தேன். இப்பொழுது பாரம்பரியமாக சில தொழில்களை செய்து வந்தவர்கள் அனேகமாக படித்து முன்னேற அந்த இடைவெளியை நிரப்ப முடியவில்லை, எங்களது சமூகம் வேலைகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டதால் சில வேலைகளை செய்ய மற்றவர்களிற்கு விருப்பமில்லை. (eg: carpentry or brick layering etc). இது இலகுவில் மாறும் போலத் தெரியவில்லை. 

உள்ளூர் வேலையாட்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களையும் நடத்தும் விதம் மாறவேண்டும், நம்பிக்கை வைக்கவேண்டும். சில தேவையற்ற விடயங்களை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அங்கே போகும் சமயங்களில் உணர்ந்தேன்.

அதே போல இப்பொழுது அங்கே வாழும் இளைய சமூதாயம்(பெரும்பாலானவர்கள்) போர் நடந்த சமயத்தில் சிறுவர்களாகவோ, அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், அவர்களிற்கு நாங்கள் போர் காலத்தில் வாழ்ந்த விதங்களை பற்றி முழுமையாக/ஒழுங்காக கூறவில்லையோ எனவும் யோசிப்பதுண்டு. வாழ்க்கைமுறைகளில் மற்றும் சிந்தனைகளில் மாற்றம்(நல்லது கெட்டது இரண்டுமே உள்ளது. தீய சிந்தனைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது). இனி அதனை உணருவார்கள் என நினைக்கிறேன். 

இவையெல்லாம் எனது தனிப்பட்ட அவதானிப்புகள் மட்டுமே. மற்றவர்களிற்கு இதைவிட அதிகமாகவும் தெரிந்திருக்கும். 

இலங்கையை விட்டு வெளியேறிய பின் ஒரு தடவை கூட அங்கு திரும்ப செல்லவில்லை அதனால் அங்குள்ள நிலை தெரியாது.

15 hours ago, goshan_che said:

அப்புறம் இந்த “மாடு நெருக்க வெட்கம்” என்பது பற்றி.

இங்கே எழுதிய பலர், புலம்பெயர் தேசத்தில் வந்து அக்கவுண்டனாக, எஞ்சினியராக, வைத்தியராக இன்னும் பல white collar படிப்புக்களை படித்தவர்கள். நமது வாழ்க்கை துணைகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாரும் கூட இதே துறைகளில்தான்.

நீங்கள் ஏன் யாரும் ஊரில் நிண்டு மாடு மேய்க்கப்போகவில்லை?

சரி அதை விடுங்கள் - வெளிநாட்டில் விவசாயம், மீன் பிடி தொழிலை யாரும் இழிவாக பார்ப்பதில்லை - அப்படி இருக்க எத்தனை புலம்பெயர் தமிழர்கள் விவசாய நிலங்களில், மீன் பிடி படகுகளில் வேலை செய்கிறார்கள்? 3 தலைமுறையாக போகிறது விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவனை மட்டும் ஏன் மாடு மேய்க போககூடாது எண்டு நாம் கேட்ப்போம்🤣.

வெளிநாட்டில் நீங்கள் குறிப்பிட்ட வேலைகள் நகரத்தினை அண்டி இருப்பதில்லை, பெரும்பாலும் எம்மவர்கள் நகரத்தினை அண்டி இருப்பதனால் இந்த வேலைகள் செய்யாமலிருக்கக்கூடும்.

நீங்கள் மேலே குறிப்பிட்ட வேலைகளை ஊரில் கூட குறைவான தொழிலாகப்பார்ப்பதில்லை.

நீங்கள் கூறிய படித்தவர்கள் அல்லாமல் படிக்காதவர்கள் கூட வெளிநாட்டில் உள்ளார்கள் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்), பல தரப்பட்ட வேலைகள் செய்கிறார்கள்.

இதில் வேலைகளை குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு எந்த வேலையும் மோசமான வேலைகள் அல்ல, யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக செய்யும் அனைத்து வேலைகளும் நல்ல வேலைகளே.

ஊரில் கூலி வேலைக்கு போவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை,  அந்த வேலைகளால் வரும் காசில் ஒரு சதமும் தமக்கென எடுக்காமல் வீட்டில் கொடுத்தாலும், சகோதரர்கள், உறவினர் கேலி செய்யும் நிலை காணப்படும் (மூன்றில் இரண்டு பங்கு வீட்டு செலவினை அந்த காசுதான் ஈடுகட்டும் நிலை இருந்தும்).

இது அடிதட்டு மக்களிடம் நிகழ்வதில்லை, மத்திய தர வர்க்கத்தின் மனநிலை (பட்டினி கிடந்தாலும் கவுரவம் என பார்க்கும் நிலை).

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அரசுதான் பிரச்சனை மறுக்கவில்லை, அதே போல இந்த பொருளாதார நெருக்கடியை சாதாரண மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ஆனால் சில விடயங்களை நாங்களும் கவனிக்க மறந்துவிட்டோமோ என்ற கவலை அங்கே போகும் சமயங்களில் ஏற்பட்டது. 

என்னைப்பொறுத்தவரை, தற்போதைய நிலைக்கு வரமுதல் அங்கே வேலையிற்கு ஆட்கள் இருக்கும் பொழுது இயந்திரங்களை பயன்படுத்தினால் அங்கே இந்தமாதிரி வேலைகளை நம்பி உள்ளவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணமே உள்ளது. அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மாற்றீடாக வேறு வேலைகளை பயிற்றுவித்தோ அல்லது வேறு வேலைகளை கொடுத்தோ/ஊக்குவிக்கவோ இல்லை என்ற ஆதங்கம் உள்ளது. 

உதாரனத்திற்கு அரிவி வெட்டிய நெல்லை காயவைத்து அரிசியாக்க சிங்கள பகுதிகளில் இருந்துதான் ஆட்கள் வந்து லொறிகளில் ஏற்றிக்கொண்டு போகிறார்கள். ஏனென்றால் கிளிநொச்சியில் இதற்கான வசதிகள் இல்லை என்றார்கள். இந்த நிலை ஏன் ஏற்பட்டது? 
அரசியல்வாதிகளை மீறி இது பற்றி ஒன்றுமே செய்ய முடியாதா? 

நிற்க, வினைத்திறனான முறையை நாடுவதுதான் நல்லவிடயம் மறுக்கவில்லை. அதே போல இங்கே நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களையும், வசதிகளையும் அவர்களும் அனுபவிக்கவேண்டும். 
ஆனால் சில தொழில்களில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப சிங்கள பகுதிகளில் இருந்து வேலைக்கு அமர்த்துகிறார்கள், பிறகு சத்தம் போடுகிறார்கள். இதனை எப்படி நிவர்த்தி செய்வது? இவற்றையெல்லாம் பார்க்கையில் கவலை ஏற்பட்டதுதான் உண்மை.

4 hours ago, Hana said:

அவர்களை மாடு மேய்க்க போகச்சொல்ல இல்லை.  தேவை வரும் போது அதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில், இப்ப பார்த்தால் படித்து வேளையில் இருப்பவர்கள் தான் ஆர்கானிக் தூடடத்தில் எல்லாம் ஆர்வமாய் உள்ளார்கள் வெளிநாடுகளிலும் ,.உதாரணத்துக்கு எத்தனையோ படித்தவர்கள் வேறு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை பார்க்க. கொரோனாக்குள் தாமாகவே முடி வெட்டிப் பழகியவர்களும் , வீட்டு திருத்தங்களும் செய்ய பழகியவர் போல் . எதாவது பிழையாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

4 hours ago, vasee said:

இலங்கையை விட்டு வெளியேறிய பின் ஒரு தடவை கூட அங்கு திரும்ப செல்லவில்லை அதனால் அங்குள்ள நிலை தெரியாது.

வெளிநாட்டில் நீங்கள் குறிப்பிட்ட வேலைகள் நகரத்தினை அண்டி இருப்பதில்லை, பெரும்பாலும் எம்மவர்கள் நகரத்தினை அண்டி இருப்பதனால் இந்த வேலைகள் செய்யாமலிருக்கக்கூடும்.

நீங்கள் மேலே குறிப்பிட்ட வேலைகளை ஊரில் கூட குறைவான தொழிலாகப்பார்ப்பதில்லை.

நீங்கள் கூறிய படித்தவர்கள் அல்லாமல் படிக்காதவர்கள் கூட வெளிநாட்டில் உள்ளார்கள் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்), பல தரப்பட்ட வேலைகள் செய்கிறார்கள்.

இதில் வேலைகளை குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு எந்த வேலையும் மோசமான வேலைகள் அல்ல, யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக செய்யும் அனைத்து வேலைகளும் நல்ல வேலைகளே.

ஊரில் கூலி வேலைக்கு போவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை,  அந்த வேலைகளால் வரும் காசில் ஒரு சதமும் தமக்கென எடுக்காமல் வீட்டில் கொடுத்தாலும், சகோதரர்கள், உறவினர் கேலி செய்யும் நிலை காணப்படும் (மூன்றில் இரண்டு பங்கு வீட்டு செலவினை அந்த காசுதான் ஈடுகட்டும் நிலை இருந்தும்).

இது அடிதட்டு மக்களிடம் நிகழ்வதில்லை, மத்திய தர வர்க்கத்தின் மனநிலை (பட்டினி கிடந்தாலும் கவுரவம் என பார்க்கும் நிலை).

பிரபா, ஹனா, வசி,

உங்கள் கருத்துக்கள் யாவும் ஒரே இழையில் வருவதால் இன்றாக பதிலளிக்கிறேன்.

1. ஊரில் உள்ளவர்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள். முன்னர் போல உழைப்பதில்லை, வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அவர்களை சும்மா இருக்க வைக்கிறது என்பதில் ஓரளவுக்கு மேல் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காகில்ஸ் பூட் சிட்டிகளிலும், வங்கிகளிலும், இதர “அலுங்காமல்” வேலை செய்யும் இடங்களிலும் எமது பிள்ளைகள் வேலை செய்வதை கண்டிருப்பீர்கள். இந்த இடங்களில் எல்லாம் - வேலைக்கு ஆள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. எங்கே வேலையாட்களுக்கு ஆள் பற்றாகுறை வருகிறது? வெய்ய்யிலில் நிற்கும், உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகளுக்குத்தான் ஆள் கிடைப்பது கடினமாயுள்ளது.

இது வளர்முக பொருளாதாரங்களில் நடப்பதுதான். இதே போல் தொழில்களை ஏன் இவர்களால் கட்டாரில் செய்ய முடிகிறது என்றால் அங்கே அந்த உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்கிறது. Food city யில், ஏசியில், ஒரு பூனிபோர்மை போட்டு செக்யூரிட்டியாக குந்தி இருக்க்க கிடைக்கும் அதே சம்பளத்தை வயலில் போய் கடுமையாக உழைத்து எடுக்க யாரும் விரும்ப போவதில்லை, நாம் உட்பட.

இதற்கான பதில் ஒன்றில் இலங்கையை இப்படியான தொழில்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் (வெளி நாடுகளில் டிரக் டிரைவர், பிளம்பர்,) high wages economy ஆக்க வேண்டும். அல்லது யூகே fruit pickers ஐ எடுப்பது போல வேற நாட்டில் (சிங்கள பகுதிகள்) இருந்து seasonal workers ஐ உள்வாங்க வேண்டும். அல்லது automation.  அல்லது இவை எல்லாவறினதும் combination.
 
யுத்த இழப்பு+குறையும் பிள்ளை பேறு என யாழ்பாணத்தில் இருக்கும் manpower பிரச்சனை கிட்டதட்ட ஜேர்மனியில் இருக்கும் பிரச்சனையை ஒத்தது. ஜேர்மனி 1 மில்லியன் அகதிகளை எடுத்தது போல யாழ்பாணத்தில் செய்ய முடியாது.

இந்த வரலாற்றின் போக்கை நாம் எமது நாடுகளிலேயே அனுபவிக்கிறோம். ஒரு shift இல் 25 பேர் till இல் நின்ற சூப்பர் மார்கெட்டில் இப்போ 23 self check out, 2 cashiers என்றாகிவிட்டது.

பிரபா சொல்லும் learning and development நிச்சயம் தேவைதான் - ஆனால் அதுவும் கூட ச்skilled labour-force ஐ உருவாக்கவே அன்றி unskilled உழைப்புக்கு அல்ல.  

ஆகவே இந்த automation போக்கு ஊரிலும் தவிர்க முடியாதது. உண்மையில் ஊரில் பொருளாதாரம் வளந்து வந்தது, living standards அதிகரித்தது என்பதை காட்டி நின்ற குறியீடுகளே இந்த “பிரச்சனைகள்”. ஆனால் இனி எல்லாம் பழைய நிலைக்கு, அதன் கீழேயும் போகப்போகிறது.

2. மேலே சொன்னது macro economics பார்வை என்றால் - அடுத்து சொல்வது வர்க்க/சாதிய பார்வை. (யாழ் கள உறவுகளை, கருத்து எழுதியோரை சொல்ல வில்லை).

“வேலைக்கு ஆளில்லை” என அழுபவர்கள் யார் என பார்த்தால் - காணி வைத்திருப்பவர்கள், வள்ளம் வைத்திருப்பவர்கள், வீடு கட்டுபவர்கள்தான்.

நாட்கூலிகளின் கவலை எல்லாம் - இந்த வேலையில் நின்று முறிந்தாலும் போதிய கூலி இல்லை என்பதே.

முன்பு அரிவி வெட்டில் அந்த வட்டாரத்து குஞ்சு குருமன் ஈறாக எல்லாரும் ஈடுபடுவர்? இன்று? நிலம் வைத்திருப்பவர்களின் எத்தனை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அரிவி வெட்டுக்கு வருகிறார்கள்?

எங்கள் பிள்ளைகள் செய்யாததை, ஏழைகள் ஏன் பரம்பரையாக செய்ய வேண்டும்?

War is a great leveller என்பார்கள். யுத்தம் எம்மை பல விதங்களில் சமபடுத்தி விட்டது. நாம் எல்லாருமே அத்தனை சமூக மட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்தோம். இப்போ வெளிநாட்டு காசு எல்லாருக்கும் போகிறது.

 “இப்போ எல்லாருக்கும் வெளி நாட்டு காசு” என்பதன் பின்னால் தம்மை சமூகத்தில் உயர்ந்தோர் என கற்பிதம் செய்துகொண்ட ஒரு குழுவின் இயலாமை பெரு மூச்சு உள்ளது 🤣.

ஒரு தலைமுறைக்கு முன் கேள்வி இன்றி எனக்காக சாக்கூறியவ்வன், மாரடித்தவன், வெள்ளை கட்டியவன், வீடு கூட்டியவன், எட்டு செலவில் படையலை எடுத்து கொண்டு, துரத்த துரத்த ஓடியவன் - இவர்களின் பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சைக்கிளில் வலம் வருகிறார்கள். தமது பகுதியில் வாசிகசாலை வைக்கிறார்கள். எனக்கு நிகராக திருவிழா செய்கிறார்கள்.

நான் அதிக கூலி கொடுத்தாலும், கூலிக்கு வரமாட்டோம் என இறுமாந்து நிற்கிறார்கள்.

இதை எல்லாம் சாத்திய படுத்திய வெளிநாட்டு காசு என்ற great liberator மீது கோவம் வரத்தானே செய்யும்🤣.

3.  அவுசை பற்றி தெரியவில்லை வசி - ஆனால் ஐரோப்பாவில் மிக இலகுவில் நகரில் இருந்து கிராமம் போய் வேலை செய்யலாம். ஆனால் Tesco வில் கூட stacker வேண்டாம் cashier எண்டால் நல்லம் என நோகாமல் நுங்கு சாப்பிடவே எம்மில் பலர் விரும்புவோம். தப்பில்லை. Don’t work hard, work smart என்பதன் ஒரு வடிவம்தான் இதுவும். அதையேதான் ஊரிலும் செய்கிறார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிகு.

இப்படி வேலைக்கு ஆளில்லை என நானும் அலுத்து கொண்டவன் தான். அதேபோல வேலை சிரத்தையின்மைமை, நேரம் கடைபிடிக்காமை என அங்கத்தையான் நடைமுறைகள் பற்றி எனக்கும் குறைகள் உண்டு. 

ஆனால் காஸ் அடுப்புக்கு மாறியது, ஹாவஸ்டர் பாவிப்பது, ஏனைய தானியங்கி மயமாதல் என்பது வளர்முக நாடுகளில் சாதாரணமானதுதான்.

95க்கு பிறகு விறகை மறந்தது பிழை - அதுதான் இப்போ அவதிபடுகிறோம் என்ற பார்வை too simplistic. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பிரபா, ஹனா, வசி,

உங்கள் கருத்துக்கள் யாவும் ஒரே இழையில் வருவதால் இன்றாக பதிலளிக்கிறேன்.

1. ஊரில் உள்ளவர்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள். முன்னர் போல உழைப்பதில்லை, வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அவர்களை சும்மா இருக்க வைக்கிறது என்பதில் ஓரளவுக்கு மேல் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காகில்ஸ் பூட் சிட்டிகளிலும், வங்கிகளிலும், இதர “அலுங்காமல்” வேலை செய்யும் இடங்களிலும் எமது பிள்ளைகள் வேலை செய்வதை கண்டிருப்பீர்கள். இந்த இடங்களில் எல்லாம் - வேலைக்கு ஆள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. எங்கே வேலையாட்களுக்கு ஆள் பற்றாகுறை வருகிறது? வெய்ய்யிலில் நிற்கும், உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகளுக்குத்தான் ஆள் கிடைப்பது கடினமாயுள்ளது.

இது வளர்முக பொருளாதாரங்களில் நடப்பதுதான். இதே போல் தொழில்களை ஏன் இவர்களால் கட்டாரில் செய்ய முடிகிறது என்றால் அங்கே அந்த உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்கிறது. Food city யில், ஏசியில், ஒரு பூனிபோர்மை போட்டு செக்யூரிட்டியாக குந்தி இருக்க்க கிடைக்கும் அதே சம்பளத்தை வயலில் போய் கடுமையாக உழைத்து எடுக்க யாரும் விரும்ப போவதில்லை, நாம் உட்பட.

இதற்கான பதில் ஒன்றில் இலங்கையை இப்படியான தொழில்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் (வெளி நாடுகளில் டிரக் டிரைவர், பிளம்பர்,) high wages economy ஆக்க வேண்டும். அல்லது யூகே fruit pickers ஐ எடுப்பது போல வேற நாட்டில் (சிங்கள பகுதிகள்) இருந்து seasonal workers ஐ உள்வாங்க வேண்டும். அல்லது automation.  அல்லது இவை எல்லாவறினதும் combination.
 
யுத்த இழப்பு+குறையும் பிள்ளை பேறு என யாழ்பாணத்தில் இருக்கும் manpower பிரச்சனை கிட்டதட்ட ஜேர்மனியில் இருக்கும் பிரச்சனையை ஒத்தது. ஜேர்மனி 1 மில்லியன் அகதிகளை எடுத்தது போல யாழ்பாணத்தில் செய்ய முடியாது.

இந்த வரலாற்றின் போக்கை நாம் எமது நாடுகளிலேயே அனுபவிக்கிறோம். ஒரு shift இல் 25 பேர் till இல் நின்ற சூப்பர் மார்கெட்டில் இப்போ 23 self check out, 2 cashiers என்றாகிவிட்டது.

பிரபா சொல்லும் learning and development நிச்சயம் தேவைதான் - ஆனால் அதுவும் கூட ச்skilled labour-force ஐ உருவாக்கவே அன்றி unskilled உழைப்புக்கு அல்ல.  

ஆகவே இந்த automation போக்கு ஊரிலும் தவிர்க முடியாதது. உண்மையில் ஊரில் பொருளாதாரம் வளந்து வந்தது, living standards அதிகரித்தது என்பதை காட்டி நின்ற குறியீடுகளே இந்த “பிரச்சனைகள்”. ஆனால் இனி எல்லாம் பழைய நிலைக்கு, அதன் கீழேயும் போகப்போகிறது.

2. மேலே சொன்னது macro economics பார்வை என்றால் - அடுத்து சொல்வது வர்க்க/சாதிய பார்வை. (யாழ் கள உறவுகளை, கருத்து எழுதியோரை சொல்ல வில்லை).

“வேலைக்கு ஆளில்லை” என அழுபவர்கள் யார் என பார்த்தால் - காணி வைத்திருப்பவர்கள், வள்ளம் வைத்திருப்பவர்கள், வீடு கட்டுபவர்கள்தான்.

நாட்கூலிகளின் கவலை எல்லாம் - இந்த வேலையில் நின்று முறிந்தாலும் போதிய கூலி இல்லை என்பதே.

முன்பு அரிவி வெட்டில் அந்த வட்டாரத்து குஞ்சு குருமன் ஈறாக எல்லாரும் ஈடுபடுவர்? இன்று? நிலம் வைத்திருப்பவர்களின் எத்தனை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அரிவி வெட்டுக்கு வருகிறார்கள்?

எங்கள் பிள்ளைகள் செய்யாததை, ஏழைகள் ஏன் பரம்பரையாக செய்ய வேண்டும்?

War is a great leveller என்பார்கள். யுத்தம் எம்மை பல விதங்களில் சமபடுத்தி விட்டது. நாம் எல்லாருமே அத்தனை சமூக மட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்தோம். இப்போ வெளிநாட்டு காசு எல்லாருக்கும் போகிறது.

 “இப்போ எல்லாருக்கும் வெளி நாட்டு காசு” என்பதன் பின்னால் தம்மை சமூகத்தில் உயர்ந்தோர் என கற்பிதம் செய்துகொண்ட ஒரு குழுவின் இயலாமை பெரு மூச்சு உள்ளது 🤣.

ஒரு தலைமுறைக்கு முன் கேள்வி இன்றி எனக்காக சாக்கூறியவ்வன், மாரடித்தவன், வெள்ளை கட்டியவன், வீடு கூட்டியவன், எட்டு செலவில் படையலை எடுத்து கொண்டு, துரத்த துரத்த ஓடியவன் - இவர்களின் பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சைக்கிளில் வலம் வருகிறார்கள். தமது பகுதியில் வாசிகசாலை வைக்கிறார்கள். எனக்கு நிகராக திருவிழா செய்கிறார்கள்.

நான் அதிக கூலி கொடுத்தாலும், கூலிக்கு வரமாட்டோம் என இறுமாந்து நிற்கிறார்கள்.

இதை எல்லாம் சாத்திய படுத்திய வெளிநாட்டு காசு என்ற great liberator மீது கோவம் வரத்தானே செய்யும்🤣.

3.  அவுசை பற்றி தெரியவில்லை வசி - ஆனால் ஐரோப்பாவில் மிக இலகுவில் நகரில் இருந்து கிராமம் போய் வேலை செய்யலாம். ஆனால் Tesco வில் கூட stacker வேண்டாம் cashier எண்டால் நல்லம் என நோகாமல் நுங்கு சாப்பிடவே எம்மில் பலர் விரும்புவோம். தப்பில்லை. Don’t work hard, work smart என்பதன் ஒரு வடிவம்தான் இதுவும். அதையேதான் ஊரிலும் செய்கிறார்கள்.

கோஷன், 
எங்களது நிலையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது, நன்றாக தொகுத்துள்ளீர்கள். நாட்டை அரசு நாசமாக்கியதுக்கு, அங்கிருக்கும் நமது மக்களை குறை சொல்ல முடியாது. இப்பிடியான இயந்திரங்கள், automation என்பது தவிர்க்க முடியாது. நாங்கள் இங்கு அதை அனுபவித்துக்கொண்டு, அவர்கள் அங்கே பழைய முறைகளை backup ஆக, உடனடியாக பாவிக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, பொருளாதார நிலையில் சாத்தியமில்லாதது. மாடுகளை வைத்து உழுவது நான் அங்கிருக்கும் காலத்திலேயே ஏறக்குறைய வழக்கொழிந்து போயிட்டது, திடீரென மாடுகளை இதற்கென வளர்த்து, பழக்கி, பெரிய அளவில் தோட்டம் செய்து, விளைச்சலை பெருக்குவதென்பது  உடனடியாக சாத்தியமில்லாதது.  இப்போதைக்கு செய்யக்கூடியது அவரவர் வீடுகளில் சிறு தோட்டங்கள் செய்து, ஓரளவுக்கு சமாளிப்பது. நாட்டின் பொருளாதாரம் மீண்டால் ஒழிய, கஷ்டம்தான். 
நீங்கள் சொன்ன ஆட்கள் பற்றாக்குறையென்பது, 2019இல் போனபோது நான் நேர பார்த்திருக்கிறேன்.   சாதிய அடிப்படையில் வேலை செய்பவர்களுக்குத்தான் அதிக பற்றாக்குறை. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாதிய அடிப்படையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில்களை விட்டுவிட்டு, படித்த, எமது சமூகத்தின் பார்வையில் கவுரவமான வேலைகளை தேடிப்போகிறார்கள்.  மா இடிப்பவர்களும், தோட்டம் கொடுப்பவர்களும், விட்டு வேலை செய்பவர்களுக்கும்தான் தேவை அதிகம், ஆனால் அதை நாங்களும் செய்யமாட்டோம்,  அதிக சம்பளமும் கொடுக்க தயாரில்லை.    

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2022 at 00:38, பிரபா சிதம்பரநாதன் said:

இவையெல்லாம் உடனே நடைபெறும் சாத்தியமில்லை.. அத்துடன், மேலே Kapithan அண்ணா கூறியதைத்தான் எனது சகோதரியும் கூறினார்.. இரசயான உரத்தை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தீடீர் என நிறுத்தியதுடன் இப்பொழுது எரிபொருளும் இல்லாதமையால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலை, ஆனால் காலப்போக்கில் இவற்றை மீள உருவாக்கலாம் ஏனெனில் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் பழைய முறைகளை(மாடு வைத்து உழுதல் etc) நாடவைக்கும் என நினைக்கிறேன்!

கடந்த தைமாதம் அங்கே நின்றிருந்த பொழுது, அரிவி வெட்டு உள்ளது வருகிறீயா என சித்தி கேட்ட, சிறு வயது நினைவுகளில், அரிவி வெட்டும் ஆட்களுடன் போய் கதைக்கலாம் என அங்கே போனால், இப்படி ஒன்று வந்து நின்றது👇🏽.. 

9-AB2912-D-C05-D-464-A-BCE4-FAFBB5523-F1

எனது ஆர்வம் எல்லாம் போய்விட்டது.. ஏன் இப்படி என சித்தியிடம் கேட்டால் COVID ஒரு காரணம் மற்றைய இடங்களில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை, மற்றும் ஊரில் உள்ளவர்கள் கூட வருகிறார்கள் இல்லை என்றார்.. 

இதைக் கதைக்க வெளிக்கிட்டா இண்டைக்கு கதைச்சு முடியாது பிரபா. 

வெறுத்துப் போகும். 😔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/5/2022 at 20:19, தமிழ் சிறி said:

துருக்கிக் காரரின் ஒலிவ் எண்ணையும்… நல்லது என்று,
துருக்கிக்காரன் சொல்லுறான். 😜

ஜேர்மன்காரனை கேட்டால் ரஷ்யன் எண்ணையும் உக்ரேன் கூப்பன் மாவும் அந்தமாதிரி எண்டுறாங்கள்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பிரபா, ஹனா, வசி,

உங்கள் கருத்துக்கள் யாவும் ஒரே இழையில் வருவதால் இன்றாக பதிலளிக்கிறேன்.

1. ஊரில் உள்ளவர்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள். முன்னர் போல உழைப்பதில்லை, வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அவர்களை சும்மா இருக்க வைக்கிறது என்பதில் ஓரளவுக்கு மேல் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காகில்ஸ் பூட் சிட்டிகளிலும், வங்கிகளிலும், இதர “அலுங்காமல்” வேலை செய்யும் இடங்களிலும் எமது பிள்ளைகள் வேலை செய்வதை கண்டிருப்பீர்கள். இந்த இடங்களில் எல்லாம் - வேலைக்கு ஆள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. எங்கே வேலையாட்களுக்கு ஆள் பற்றாகுறை வருகிறது? வெய்ய்யிலில் நிற்கும், உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகளுக்குத்தான் ஆள் கிடைப்பது கடினமாயுள்ளது.

இது வளர்முக பொருளாதாரங்களில் நடப்பதுதான். இதே போல் தொழில்களை ஏன் இவர்களால் கட்டாரில் செய்ய முடிகிறது என்றால் அங்கே அந்த உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்கிறது. Food city யில், ஏசியில், ஒரு பூனிபோர்மை போட்டு செக்யூரிட்டியாக குந்தி இருக்க்க கிடைக்கும் அதே சம்பளத்தை வயலில் போய் கடுமையாக உழைத்து எடுக்க யாரும் விரும்ப போவதில்லை, நாம் உட்பட.

இதற்கான பதில் ஒன்றில் இலங்கையை இப்படியான தொழில்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் (வெளி நாடுகளில் டிரக் டிரைவர், பிளம்பர்,) high wages economy ஆக்க வேண்டும். அல்லது யூகே fruit pickers ஐ எடுப்பது போல வேற நாட்டில் (சிங்கள பகுதிகள்) இருந்து seasonal workers ஐ உள்வாங்க வேண்டும். அல்லது automation.  அல்லது இவை எல்லாவறினதும் combination.
 
யுத்த இழப்பு+குறையும் பிள்ளை பேறு என யாழ்பாணத்தில் இருக்கும் manpower பிரச்சனை கிட்டதட்ட ஜேர்மனியில் இருக்கும் பிரச்சனையை ஒத்தது. ஜேர்மனி 1 மில்லியன் அகதிகளை எடுத்தது போல யாழ்பாணத்தில் செய்ய முடியாது.

இந்த வரலாற்றின் போக்கை நாம் எமது நாடுகளிலேயே அனுபவிக்கிறோம். ஒரு shift இல் 25 பேர் till இல் நின்ற சூப்பர் மார்கெட்டில் இப்போ 23 self check out, 2 cashiers என்றாகிவிட்டது.

பிரபா சொல்லும் learning and development நிச்சயம் தேவைதான் - ஆனால் அதுவும் கூட ச்skilled labour-force ஐ உருவாக்கவே அன்றி unskilled உழைப்புக்கு அல்ல.  

ஆகவே இந்த automation போக்கு ஊரிலும் தவிர்க முடியாதது. உண்மையில் ஊரில் பொருளாதாரம் வளந்து வந்தது, living standards அதிகரித்தது என்பதை காட்டி நின்ற குறியீடுகளே இந்த “பிரச்சனைகள்”. ஆனால் இனி எல்லாம் பழைய நிலைக்கு, அதன் கீழேயும் போகப்போகிறது.

2. மேலே சொன்னது macro economics பார்வை என்றால் - அடுத்து சொல்வது வர்க்க/சாதிய பார்வை. (யாழ் கள உறவுகளை, கருத்து எழுதியோரை சொல்ல வில்லை).

“வேலைக்கு ஆளில்லை” என அழுபவர்கள் யார் என பார்த்தால் - காணி வைத்திருப்பவர்கள், வள்ளம் வைத்திருப்பவர்கள், வீடு கட்டுபவர்கள்தான்.

நாட்கூலிகளின் கவலை எல்லாம் - இந்த வேலையில் நின்று முறிந்தாலும் போதிய கூலி இல்லை என்பதே.

முன்பு அரிவி வெட்டில் அந்த வட்டாரத்து குஞ்சு குருமன் ஈறாக எல்லாரும் ஈடுபடுவர்? இன்று? நிலம் வைத்திருப்பவர்களின் எத்தனை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அரிவி வெட்டுக்கு வருகிறார்கள்?

எங்கள் பிள்ளைகள் செய்யாததை, ஏழைகள் ஏன் பரம்பரையாக செய்ய வேண்டும்?

War is a great leveller என்பார்கள். யுத்தம் எம்மை பல விதங்களில் சமபடுத்தி விட்டது. நாம் எல்லாருமே அத்தனை சமூக மட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்தோம். இப்போ வெளிநாட்டு காசு எல்லாருக்கும் போகிறது.

 “இப்போ எல்லாருக்கும் வெளி நாட்டு காசு” என்பதன் பின்னால் தம்மை சமூகத்தில் உயர்ந்தோர் என கற்பிதம் செய்துகொண்ட ஒரு குழுவின் இயலாமை பெரு மூச்சு உள்ளது 🤣.

ஒரு தலைமுறைக்கு முன் கேள்வி இன்றி எனக்காக சாக்கூறியவ்வன், மாரடித்தவன், வெள்ளை கட்டியவன், வீடு கூட்டியவன், எட்டு செலவில் படையலை எடுத்து கொண்டு, துரத்த துரத்த ஓடியவன் - இவர்களின் பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சைக்கிளில் வலம் வருகிறார்கள். தமது பகுதியில் வாசிகசாலை வைக்கிறார்கள். எனக்கு நிகராக திருவிழா செய்கிறார்கள்.

நான் அதிக கூலி கொடுத்தாலும், கூலிக்கு வரமாட்டோம் என இறுமாந்து நிற்கிறார்கள்.

இதை எல்லாம் சாத்திய படுத்திய வெளிநாட்டு காசு என்ற great liberator மீது கோவம் வரத்தானே செய்யும்🤣.

3.  அவுசை பற்றி தெரியவில்லை வசி - ஆனால் ஐரோப்பாவில் மிக இலகுவில் நகரில் இருந்து கிராமம் போய் வேலை செய்யலாம். ஆனால் Tesco வில் கூட stacker வேண்டாம் cashier எண்டால் நல்லம் என நோகாமல் நுங்கு சாப்பிடவே எம்மில் பலர் விரும்புவோம். தப்பில்லை. Don’t work hard, work smart என்பதன் ஒரு வடிவம்தான் இதுவும். அதையேதான் ஊரிலும் செய்கிறார்கள்.

நீங்கள் கூறிய அனைத்து  கருத்துகளும் மிக சரியானவையே, சிலவற்றை எமது கண்ணோட்டத்தில் பார்க்கும் போது (own perception) வேறு வகையான கோணத்தினை வழங்குகிறது, அதனால்தான் சொல்வதுண்டு எனது கருத்து தவறாக இருக்கலாம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நீங்கள் கூறிய அனைத்து  கருத்துகளும் மிக சரியானவையே, சிலவற்றை எமது கண்ணோட்டத்தில் பார்க்கும் போது (own perception) வேறு வகையான கோணத்தினை வழங்குகிறது, அதனால்தான் சொல்வதுண்டு எனது கருத்து தவறாக இருக்கலாம் என்று.

அது போலத்தான் எனது கருத்துக்களும். இங்கே எழுதியது எனது பார்வை கோபம் மட்டுமே. கோஸ்பல் உண்மைகள் அல்ல.

 Two brains are always better than one என்பது போல, பல்வேறு கோணக்களில் சிந்திப்பவர்களின் கருத்தை உள்வாங்கி, சீர் தூக்கி பாக்கும் போது, சம்பந்த பட்ட எல்லாருக்கும் தெளிவு கிடைக்க வழி ஏற்படுவதோடு, ஒரு கருத்தியல் அதன் ஈறுகள் களையப்பட்டு புடம் போடவும் படுகிறது.

இதனால்தான் மாற்றுக் கருத்துக்கான வெளி தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் echo chamber போல நாம் நம்பும் விடயங்களை மேலும் மேலும் உரக்க உரக்க கேட்டு, மனதில் அதையே reinforce பண்ணி கொள்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

எங்கள் பிள்ளைகள் செய்யாததை, ஏழைகள் ஏன் பரம்பரையாக செய்ய வேண்டும்?

War is a great leveller என்பார்கள். யுத்தம் எம்மை பல விதங்களில் சமபடுத்தி விட்டது. நாம் எல்லாருமே அத்தனை சமூக மட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்தோம். இப்போ வெளிநாட்டு காசு எல்லாருக்கும் போகிறது.

 “இப்போ எல்லாருக்கும் வெளி நாட்டு காசு” என்பதன் பின்னால் தம்மை சமூகத்தில் உயர்ந்தோர் என கற்பிதம் செய்துகொண்ட ஒரு குழுவின் இயலாமை பெரு மூச்சு உள்ளது 🤣.

ஒரு தலைமுறைக்கு முன் கேள்வி இன்றி எனக்காக சாக்கூறியவ்வன், மாரடித்தவன், வெள்ளை கட்டியவன், வீடு கூட்டியவன், எட்டு செலவில் படையலை எடுத்து கொண்டு, துரத்த துரத்த ஓடியவன் - இவர்களின் பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சைக்கிளில் வலம் வருகிறார்கள். தமது பகுதியில் வாசிகசாலை வைக்கிறார்கள். எனக்கு நிகராக திருவிழா செய்கிறார்கள்.

நான் அதிக கூலி கொடுத்தாலும், கூலிக்கு வரமாட்டோம் என இறுமாந்து நிற்கிறார்கள்.

இதை எல்லாம் சாத்திய படுத்திய வெளிநாட்டு காசு என்ற great liberator மீது கோவம் வரத்தானே செய்யும்🤣.

விளக்கத்திற்கு நன்றி கோஷான்..நேற்று உங்களுக்கு பதிலை எழுதிவிட்டு பதியவா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் நாதமுனி அண்ணாவின் “ பொன் மானே…” தலைப்பை பார்த்து கொஞ்சம் distract ஆகிவிட்டேன்☺️.. ஆனால் எழுதாமல் விடவும் மனமில்லை!!

நீங்கள் மேலே கூறியதை மறுக்கவில்லை. இது ஒரு இடைவெளியை உருவாக்கித்தான் உள்ளது. முன்னேற் வேண்டும், அதே நேரத்தில் அங்கே தேவைப்படும் சில வேலைகளுக்கான ஆட்களை கூட பயிற்சி கொடுத்தோ அல்லது அதிக சம்பளம் கொடுத்தோ அதைவிட முக்கியம் அவர்களையும் மனிதராக மதித்து நடத்தினால், வேலை வாய்ப்புகள் இருப்பதுடன் வாழ்க்கை தரமும் முன்னேறும்.. என்பதுதான எனது ஆதங்கம், எல்லாவற்றையும் மாற்றமுடியாவிட்டாலும் சிலவற்றை செய்யலாம் ஆனால் எங்களது சிந்தனைகள்/பழக்கவழக்கங்கள் சில அதற்கு இடமளிக்காது.. 

இரு வருடங்களுக்கு முன் நெல்லை வீதியில் காய வைத்திருந்த செய்தி.. கொஞ்ச நாட்களுக்கு முன்பு இரு முதியவர்கள் இறந்தவிதம் மனதை நெருடியது. அங்கே போகும் சமயங்களில் கண்ணில்படும் சில செயல்கள். இப்படி சில. இதனை கருத்தில் வைத்தே போருக்கு முன்/பின் கருத்துக்களை எழுதினேன். எல்லாம் நன்மைக்கே😊..

18 hours ago, goshan_che said:

அவுசை பற்றி தெரியவில்லை வசி - ஆனால் ஐரோப்பாவில் மிக இலகுவில் நகரில் இருந்து கிராமம் போய் வேலை செய்யலாம். ஆனால் Tesco வில் கூட stacker வேண்டாம் cashier எண்டால் நல்லம் என நோகாமல் நுங்கு சாப்பிடவே எம்மில் பலர் விரும்புவோம். தப்பில்லை. Don’t work hard, work smart என்பதன் ஒரு வடிவம்தான் இதுவும். அதையேதான் ஊரிலும் செய்கிறார்கள்.

மன்னிக்கவேண்டும், வசியிடம் கேட்டதற்கு நான் பதிலளிப்பதற்கு.. 

இந்தியர்கள் மற்றும் சில தென்கிழக்காசியா நாடுகளை சேர்ந்தவர்கள் கிராமங்களில் பண்ணைகளை, விவசாய நிலங்களை வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ இல்லை எடுத்து செய்கிறார்கள். வணிக நிலையங்கள், உணவகங்களை franchiseல் எடுத்து செய்கிறார்கள் ஆனால் எம்மவர்கள் குறைவு. எனது வேலை இவற்றோடு ஒரு வகையில் சம்பந்தப்பட்ட ஒன்று, அதனால் கிடைக்கும் அனுபவங்களை வைத்து என் கருத்தை கொஞ்ச காலத்திற்கு முன் இன்னொரு பதிவில்(வாணிப உலகில் என நினைக்கிறேன்) கூறிய பொழுது வேறுவிதமான விமர்சனங்கள் வந்தது. எனது கருத்துக்கள் முழுவதும் சரியென நினைக்கவில்லை ஆனால் ஒவ்வொருவரினது  அனுபவங்கள் வித்தியாசமானவை. 

அதே போல தற்பொழுது, Regional Australiaவில் பண்ணை வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, backpackers வரவும் COVID தொற்றின் பின் குறைந்து விட்டது. Seasonal workers, Fruit pickers போன்றவர்களில் அனேகமானோர் பசுபிக் தீவுகளில் இருந்து வேலைக்கு வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு புதிய அரசிடம் வர்த்தக அமைப்புகள் கேட்டுள்ளது. 

வசி வேறுவிதமாக கேள்விப்பட்டிருக்கலாம். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2022 at 06:25, தமிழ் சிறி said:

அனைத்து அமைச்சர்களும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்க வேண்டும் என்பதோடு நாடு எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்க, விவசாய அதிகாரிகளுடன் அரசு ஊழியர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

image.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.