Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விறகு பயன்படுத்தும்... இலங்கைப் பெண்களின், ஆயுட்காலம் அதிகம் – சரத் வீரசேகர

Featured Replies

7 minutes ago, குமாரசாமி said:

விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவை தெரியும்.சுகாதாரமானதும் கூட...

Bioangus Grünau - Grillen mit Holz oder Kohle

நான் வேலை செய்த பல இடங்களில் விறகு அடுப்பு மிக முக்கியமானது. அதன் தனிச்சுவைக்கே பலர் தேடி வருவர். எரிசக்தி செலவும் மிக மிக குறைவு.

முன்னரெல்லாம் மட்டக்களப்பில் சைக்கிளில் வீடு வீடாக விறகு விற்பனை செய்வர். இன்று அப்படி இல்லை போல் தெரிகின்றது.

எரியும் விறகிலிருந்து சாம்பல் புகை மற்றும் சுவாலையால் இடைக்கிடை தீய்ந்து கரிப்பிடிக்கும் உணவின் சுவை தனிதான். இதயே அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய்தான் வரும்.

இந்தியாவில் இலவச காஸ் அடுப்புகள் கொடுக்கப்பட்டு விறகு அடுப்புகளைக் கைவிடத் தூண்டியதன் முக்கிய நோக்கம் விறகு அடுப்பிலிருந்து வெளியாகும் நுண்துகள்கள் சுற்றாடலுக்குப் பாதகமானது. கோடிக்கணக்கான விறகு அடுப்புகள் ஒரே நாட்டில் எரிந்து அவை வெளிவிடும் நுண் துகள்களின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள். 

இன்றுகூட புதுடெல்லி உலகின் மிக மோசமான மாசடைந்து நகரமாகக் காட்சியளிப்பதற்கான் முக்கிய காரணம் சுற்றுப்புற விவசாயிகள் வயலில் புற்கள் வைக்கல் போன்றவற்றை எரிப்பதாலாகும். அவர்கள் இதைக் கைவிட மறுப்பதற்கான காரணம் அரசாங்கத்தின் எந்த விளக்கத்தையும் ஏற்காது இன்னும் பழமைவாதிகளாக உள்ளதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முன்னரெல்லாம் மட்டக்களப்பில் சைக்கிளில் வீடு வீடாக விறகு விற்பனை செய்வர். இன்று அப்படி இல்லை போல் தெரிகின்றது.

சைக்கிளே இல்லை அண்ணை. எல்லாரும் விர்…புறூம்…புறூம்…😎

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா! மக்கள் மேல் எங்களுக்கு அதிக அக்கறை, அதனாற்தான் தொடர்ந்து பாடம் நடத்துகிறோம். ஆனால் அதே மக்கள் மீது இரசாயன, எரி, கண்ணீர் குண்டுகளை போட்டு அழிப்போம். அது எப்பிடி? ஏன்?  என்று மட்டும் கேட்கக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மின்சார ,காஸ் அடுப்புக்களில் விட அடுப்பில் சமைப்பது சத்தானது அல்லவா 🙂

அப்படியா? சத்து பொருட்கள் சமைக்கப்படும் உணவில்தான் இருக்கும். வெப்பம் வழங்கபடும் முறையினால் உணவில் உள்ள சத்தின் அளவு மாறுமா?

மேலோட்டமாக பார்க்க இல்லை என்றே தோன்றினாலும் - முன்னர் toast பண்ணிய பாணில், டோஸ்ட் பண்ணாத பாணை விட glycemic index குறைவு என்ற எமது முந்திய சம்பாசணையும் நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எரியும் விறகிலிருந்து சாம்பல் புகை மற்றும் சுவாலையால் இடைக்கிடை தீய்ந்து கரிப்பிடிக்கும் உணவின் சுவை தனிதான். இதயே அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய்தான் வரும்.

இந்தியாவில் இலவச காஸ் அடுப்புகள் கொடுக்கப்பட்டு விறகு அடுப்புகளைக் கைவிடத் தூண்டியதன் முக்கிய நோக்கம் விறகு அடுப்பிலிருந்து வெளியாகும் நுண்துகள்கள் சுற்றாடலுக்குப் பாதகமானது. கோடிக்கணக்கான விறகு அடுப்புகள் ஒரே நாட்டில் எரிந்து அவை வெளிவிடும் நுண் துகள்களின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள். 

இன்றுகூட புதுடெல்லி உலகின் மிக மோசமான மாசடைந்து நகரமாகக் காட்சியளிப்பதற்கான் முக்கிய காரணம் சுற்றுப்புற விவசாயிகள் வயலில் புற்கள் வைக்கல் போன்றவற்றை எரிப்பதாலாகும். அவர்கள் இதைக் கைவிட மறுப்பதற்கான காரணம் அரசாங்கத்தின் எந்த விளக்கத்தையும் ஏற்காது இன்னும் பழமைவாதிகளாக உள்ளதுதான்.

எல்லாம் சரிதான் இணையவன்! இந்த சரத் வீரசேகர சொல்கிற காரணங்களும், நேரமும் பற்றியே நாம் ஆராய்கிறோம். வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம் அதுவரை பொறுத்திருங்கள்! எல்லாவற்றிலும் இரு பக்கம் உண்டு. எது அதிக பலனை மக்களுக்கு கொடுக்கிறதோ, கட்டுப்படியாகிறதோ? அதையே கைக்கொள்வர். அதைவிட்டு வங்குரோத்து அடைந்தவுடன் அதை மறைக்க  கொடி பிடித்தால் ஏறிவிடுமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர பஞ்சத்துக்கு பழமைவாதி.

@குமாரசாமிஅண்ணை பரம்பரை பழமைவாதி 🤣.

இருவரும் அடுப்பெரிப்பதை ஆதரித்தாலும், அப்படி ஆதரிப்பதற்கான காரணங்கள் முற்றிலும் வேறானவை.

ஆனால் பகிடிக்கு அப்பால் கு . சா அண்ணை சொன்ன ஒரு விடயம் உண்மைதான். சாக்கோல் அல்லது வூட் பேர்னரில் போடும் பார்பிகியு வுக்கு கிட்டயும் வராது காஸ், எலெக்ரிக் பாபிகியூ உணவின் சுவை என்பதை ஒரு ஆட்டு தொடையின் மீது அடித்து சத்தியம் செய்கிறேன்.

ஆனால் இங்கே கூட wood burning ஹீற்றர், ஸ்டவ் எல்லாம் சூழலுக்கு கேடாம் எண்டுதான் சொல்லப்படுகிறது.

particle pollution (துகள் மாசடைவு) ஆனது மோட்டார் வாகனங்களை விட wood burners இல் அதிகம் என்கிறார்கள்👇.

https://amp.theguardian.com/environment/2022/feb/15/wood-burners-emit-more-particle-pollution-than-traffic-uk-data-shows

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சைக்கிளே இல்லை அண்ணை. எல்லாரும் விர்…புறூம்…புறூம்…😎

படிகள் ஏறி ஏறி மேலே சென்றால் இறங்கவும் தெரியணும்.🤣

முன்னேறிய நாடுகள் இயற்கையான வாழ்வு பற்றியும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.. காடுகளையே உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இணையவன் said:

இன்றுகூட புதுடெல்லி உலகின் மிக மோசமான மாசடைந்து நகரமாகக் காட்சியளிப்பதற்கான் முக்கிய காரணம் சுற்றுப்புற விவசாயிகள் வயலில் புற்கள் வைக்கல் போன்றவற்றை எரிப்பதாலாகும். அவர்கள் இதைக் கைவிட மறுப்பதற்கான காரணம் அரசாங்கத்தின் எந்த விளக்கத்தையும் ஏற்காது இன்னும் பழமைவாதிகளாக உள்ளதுதான்.

இதை அரசுதான் முக்கிய கவனமெடுத்து வைக்கோல் புற்களை எரிக்காமல் பார்க்க வேண்டும். நாம் இருக்கும் நாடுகளில் வைக்கோலை எரிக்கிறார்களா என்ன? 
அதை எவ்வளவு அழகாக உருட்டி மாட்டு தீவனமாகவும் வேறு வழிகளுக்கும் பயன் படுத்துகின்றார்கள்.

STROH - Definition und Synonyme von Stroh im Wörterbuch Deutsch

Stroh- mehr als nur Einstreu | Dr. Susanne Weyrauch

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உடல்களை விறகு கட்டைகளை அடுக்கி எரிப்பதும் ( சமய முறைப்படி) சூழலுக்கு ஆபத்தானது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இறந்த உடல்களை விறகு கட்டைகளை அடுக்கி எரிப்பதும் ( சமய முறைப்படி) சூழலுக்கு ஆபத்தானது தானே?

ஓம் இந்த openair pyre இல் உடலங்களை எரிக்க தடை, தடை நீக்கம் என இங்கிலாந்தின் உச்ச நீதி மன்றம் வரை வழக்கு போயுள்ளது.  வழக்கின் முக்கிய கருப்பொருள் சூழல் மாசசைதல்தான்.

வழக்கு முடிந்தாலும் இன்னும் தக்க சூழலியல் தற்காப்பு இல்லாதபடியால் இதுவரை இங்கே கட்டையை போட்டு எரிக்க அனுமதியில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விறகையும் சமைப்பதற்கு பயன்படுத்துவதில்லை 
 
On ‎09‎-‎06‎-‎2022 at 07:44, Nathamuni said:

யாழ்பாணத்தில் பெற்றோல், டீசல், காஸ், தட்டுப்பாடு இல்லையாமே.

விசாரித்து பார்த்தால், படகில் ஏறி அங்க வந்தால்.... முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும்.... அதுக்கு பதிலாக.... பொருட்கள் தங்கு தடையில்லாமல் போகவிடலாம் என்று முடிவாம்.

வாற பொருளை தடுக்கும் நிலையில், நம்ம பக்கத்தில நிலைமையும் இல்லை....

நான் அங்கு நின்ற போது அவதானித்தேன் ...சிலரிடம் கேட்டேன் ...தெரியாது அக்கா என்று சிரித்து மழுப்பி  விட்டார்கள் 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரதி said:

எல்லா விறகையும் சமைப்பதற்கு பயன்படுத்துவதில்லை 
 
நான் அங்கு நின்ற போது அவதானித்தேன் ...சிலரிடம் கேட்டேன் ...தெரியாது அக்கா என்று சிரித்து மழுப்பி  விட்டார்கள் 

இன்று சண்டேரைம்ஸில் சொலல்லியிருக்கினம்.... நேற்று நாலு ஆடுகள், மற்றும் கோழியள் வந்து இறங்கி, நேவியை பார்த்து விட்டுட்டு ஓடிவிட்டார்கள்.

அவைகளின் படமும் போட்டருககு.... பிறகு இணைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

இன்று சண்டேரைம்ஸில் சொலல்லியிருக்கினம்.... நேற்று நாலு ஆடுகள், மற்றும் கோழியள் வந்து இறங்கி, நேவியை பார்த்து விட்டுட்டு ஓடிவிட்டார்கள்.

அவைகளின் படமும் போட்டருககு.... பிறகு இணைக்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து… ஆடு, கோழி எல்லாம் வந்து இறங்குதா?
இன்னும்… என்னென்ன வரப் போகுதோ…
படத்தை போடுங்கள் முனி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டிலிருந்து… ஆடு, கோழி எல்லாம் வந்து இறங்குதா?
இன்னும்… என்னென்ன வரப் போகுதோ…
படத்தை போடுங்கள் முனி.

தமிழ்நாட்டிலிருந்து சகலமும் கடல் வழியாக வந்துகொண்டிருக்கின்றன. 

கடற்படையினர் கடத்தல் பொருட்களில்  தமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மிகுதியை விடுவிக்கின்றனர். இது கூட்டாக பெரும் எடுப்பில் நடைபெறுகிறது. மன்னார்க் கடல்தான் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

தமிழ்நாட்டிலிருந்து சகலமும் கடல் வழியாக வந்துகொண்டிருக்கின்றன. 

கடற்படையினர் கடத்தல் பொருட்களில்  தமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மிகுதியை விடுவிக்கின்றனர். இது கூட்டாக பெரும் எடுப்பில் நடைபெறுகிறது. மன்னார்க் கடல்தான் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

பஞ்சத்துக்கு பறவாயில்லை தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

தமிழ்நாட்டிலிருந்து சகலமும் கடல் வழியாக வந்துகொண்டிருக்கின்றன. 

கடற்படையினர் கடத்தல் பொருட்களில்  தமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மிகுதியை விடுவிக்கின்றனர். இது கூட்டாக பெரும் எடுப்பில் நடைபெறுகிறது. மன்னார்க் கடல்தான் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

இரு பகுதியினருக்கும்… லாபம் தரும் புதிய சந்தை ஒன்று உருவாகின்றது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

பஞ்சத்துக்கு பறவாயில்லை தானே?

உண்மைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இன்று சண்டேரைம்ஸில் சொலல்லியிருக்கினம்.... நேற்று நாலு ஆடுகள், மற்றும் கோழியள் வந்து இறங்கி, நேவியை பார்த்து விட்டுட்டு ஓடிவிட்டார்கள்.

அவைகளின் படமும் போட்டருககு.... பிறகு இணைக்கிறேன்.

https://www.sundaytimes.lk/220612/columns/china-clears-air-praises-india-for-helping-sri-lanka-485764.html

1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டிலிருந்து… ஆடு, கோழி எல்லாம் வந்து இறங்குதா?
இன்னும்… என்னென்ன வரப் போகுதோ…
படத்தை போடுங்கள் முனி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்நாட்டிலிருந்து… ஆடு, கோழி எல்லாம் வந்து இறங்குதா?
இன்னும்… என்னென்ன வரப் போகுதோ…
படத்தை போடுங்கள் முனி.

கவனம் சாட்டோட சாட்டாய் அந்த நாட்டு படைகளும் வந்திறங்கிடும்! கேட்கவும் நாவெழாது, நக்குண்டார் நாவிடார்!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎06‎-‎2022 at 19:26, Nathamuni said:

இன்று சண்டேரைம்ஸில் சொலல்லியிருக்கினம்.... நேற்று நாலு ஆடுகள், மற்றும் கோழியள் வந்து இறங்கி, நேவியை பார்த்து விட்டுட்டு ஓடிவிட்டார்கள்.

அவைகளின் படமும் போட்டருககு.... பிறகு இணைக்கிறேன்.

அவங்கட எரிபொருள் சரியில்லை ...கலப்படம் ,மைல்லேஜ் குடுக்குதில்லை வாகனம் பழுதாகப் போகுது என்று குறையும் சொல்லினம்.
நான் நிக்கும் போது யாழில் எரிபொருளுக்கு லைனில் நின்றவர்கள் குறைவு ..அநேகமானவர்கள் திரும்ப, திரும்ப லைனில் நின்று  தேவைக்கு அதிகமாய் வேண்டிப் பதுக்கினம் .
வவுனியாவை தாண்டியதும் சனம் இரவிரவாய் வரிசையில் நிக்குது ....அதில் பெண்களும் அடக்கம் . சில பேர் கைக் குழந்தையுடன் வரிசையில் நிக்கினம்.
அப்படி இருந்தும் கொழும்பில் ஆட்டோகாரர் மீற்றர் போட்டு தான் ஓட்டினம் .நியாய விலை தான் எடுக்கினம் 
யாழ்ப்பாணத்து ஓட்டோகாரர் படு மோசம் 
டவுனுக்குள்ளேயும்நல்லூர் கோயிலை சுத்தியும் பிச்சை எடுக்காமல் டீசன்டாய் காசு கேட்பவர்கள் கூடி விட்டார்கள் .
நான் போய் சில தினங்கள் ஹொட்டலில் இருக்க வேண்டி வந்தது .அநேகமான இரவுகளில் அங்கு பார்ட்டி நடந்தது ...கிரிக்கெட் போட்டி நடந்து அதில் வென்றவுடன் ஏதாவது பெரிய ஹொட்டல்களில் பார்ட்டி நடக்கும் .
அங்கிருக்கும் இளவயது பெண்களும் பப்புகளில் இருந்து குடிப்பதை காண கூடியதாய் இருந்தது.
காங் சண்டைகளையும் ,கோஸ்டி மோதல்களையும் கண்டேன்.
அதிக விபத்துக்கள் நான் நின்ற கொஞ்ச நாளிலே கண்டேன்.
குடித்து விட்டு போதையில் 3 பேர் ஒரு மோ.சைக்கிளில் போய் [மூவரும் 20 க்கு குறைவானவர்கள்]  எதிர் தரப்பை வெட்ட , அவர்கள் துரத்த இவர்கள் படு வேகமாய் வந்து ஏதோ மின்சார தூணோடு மோதி தாங்களும் செத்து ,விதியால் மேதான் வேலை செய்து விட்டு வந்தவர்களையும் சாவு கொண்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2022 at 17:08, goshan_che said:

ஓம் இந்த openair pyre இல் உடலங்களை எரிக்க தடை, தடை நீக்கம் என இங்கிலாந்தின் உச்ச நீதி மன்றம் வரை வழக்கு போயுள்ளது.  வழக்கின் முக்கிய கருப்பொருள் சூழல் மாசசைதல்தான்.

வழக்கு முடிந்தாலும் இன்னும் தக்க சூழலியல் தற்காப்பு இல்லாதபடியால் இதுவரை இங்கே கட்டையை போட்டு எரிக்க அனுமதியில்லை.

சீக்கியர்கள் அப்படி ஒருமுறை லெஸ்டர் Northumbria பகுதியில் திறந்த பகுதியில் எரித்தது குறித்து, டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையில் படத்துடன் பார்த்தேன்.

நான் நினைப்பது சரியானால், சீக்கியர்கள், அந்த வழக்கில், இந்து முறைப்படி எரிக்கும் உரிமை உள்ளது என்று வாதாடி வென்று, எரித்து அத்துடன் நிறுத்தி விட்டார்கள்.

காரணம், சமூகத்தில், ஆர்வமும், மினக்கெட, ஆளோ, நேரமோ இல்லை என்பதே.

உங்களிடம் மேலதிக தகவல் இருந்தால் பகிருங்கள்.

https://www.theguardian.com/uk/2006/jul/13/religion.world

http://news.bbc.co.uk/1/hi/uk/7953581.stm

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.