Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அதனை அனுமதிக்க முடியாது - சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அதனை அனுமதிக்க முடியாது - சம்பிக்க

 (எம்.மனோசித்ரா)

இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எம்.சி.பேர்னாண்டோவினால் , அப்போதைய திறைசேறி செயலாளர் சஜித் ஆட்டிகலவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் , அதானி என்ற இந்திய நிறுவனத்திற்கு மன்னார் வலயத்தில் 500 மெகா வோல்ட் கற்றுமின் சக்தியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அதானி நிறுவனத்தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்து விமானத்தின் மூலம் இந்த பிரதேசத்தை கண்காணித்ததாக செய்திகள் வெளியாகின.

இதன் போது அவர்களுக்கு 6000 மெகாவோல்ட் சூரிய மற்றும் காற்று மின்சக்தி தேவைப்படுவதாக அப்போதைய அரசாங்கமும் நிறுவனங்களும் தெரிவித்தன.

ஆனால் இலங்கையில் நாளாந்த மின் தேவை 2500 மெகா வோல்ட் மாத்திரமேயாகும். அதானி என்பது தனியார் நிறுவனமொன்றாகும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு இவ்விடயத்தில் இரு அரசாங்கங்கள் தலையிட முடியும் என்பது கேள்விக்குரியதாகும்.

இது தொடர்பில் மின்சாரசபை தலைவர் கோப்குழுவில் தெரிவித்த கருத்தினை தற்போது வாபஸ் பெற்றுள்ள போதிலும் , அவர் திறைசேறி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி அதானி நிறுவனம், இலங்கை மின்சாரசபை, முதலீட்டுசபை, நிதி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் 500 மெகா வோல்ட் மின் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதற்கு உத்தியோகபூர்வ சான்றுகள் உள்ளனவா? மின்சாரசபை தலைவரின் கருத்தை ஜனாதிபதி மறுத்துள்ளார்.

அவ்வாறெனில் பிரதமரா இந்த ஆலோசனையை வழங்கியது? மின்சாரசபை சட்டத்தின் பிரகாரம் பிரதமருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கும் அதிகாரம் கிடையாது. அமைச்சரவை அனுமதி உள்ளது என்று கூறப்படுவது இதற்கு பதில் அல்ல. காரணம் சட்டத்திற்கு முரணாக அமைச்சரவைக்கு செயற்பட முடியாது.

எனவே மன்னால் வலயத்தின் மின்சக்தி துறையை முழுமையாக அதானி தனியார் நிறுவனத்திற்கு வழங்கி நாட்டின் இறையான்மை காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சாரசபை சட்டத்தின் மூலம் , அதானி நிறுவனத்திற்கு இதனை வழங்குவதில் அரச தரப்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின் ஏனைய தரப்பினர் ஊடாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை , இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/129410

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு, மருந்து, அரச ஊழியருக்கு சம்பளம், எரி பொருள், எரிவாயு... எதுவுமே இல்லை.
அதற்கு இந்தியாவின் உதவி இல்லாவிடில்... எப்பவோ, பட்டினி சாவு ஆரம்பித்து இருக்கும்.

ஆனால்... இலங்கையின் இறையாண்மை, கடலாமை என்று கொண்டு.... 
கொழுப்பு எடுத்த கதைகளுக்கு... குறைவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால்... இலங்கையின் இறையாண்மை, கடலாமை என்று கொண்டு.... 
கொழுப்பு எடுத்த கதைகளுக்கு... குறைவில்லை. 

அண்மையில் ஒரு திரி தொடர்ந்தது.

பிரான்சு அடிமையுரிமையாளர்  அடிமைகளை இழப்பதற்கான நட்ட இடை  பிரான்ஸ் கோரி, மீண்டும் ஹெய்ட்டி மீது படையெடுப்பதாக பிரான்ஸ் அச்சுறுத்த,  ஹெய்ட்டி சுதந்திரம், இறையாண்மையை பிரான்சிடம்  வாங்கியது அந்த நட்ட எடை கொடுத்து எனும் கருத்துப்பட பதிவு ன்று தொடர்ந்தது.

அதை yarl இல் யார் சொன்னார்கள் என்பதை பார்க்கிலும், சம்பிக்க சொன்னதில் உள்ள இறுமாப்பு (அதை நான் இறுமாப்பு என்று சொல்லமாட்டேன்) போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் தெரிகிறது இறைமையை விலை (பணம், பொருள்) கொடுத்து வாங்க முடியாது என்று.

இது தான் இறையாண்மைமையை கொண்டுள்ள இனம் / தேசம் இடம் உள்ள தன்னம்பிக்கையும், துணிவும்.

இறையாண்மை என்பது தேசம் / இனம் முழுவதும், பரவி, வியாபித்து, புரையோடி இருப்பது; வாங்கும், விற்கும்   விடயம் அல்ல.

இறையாண்மை நிலை நாட்டப்படுவது (நீங்கள் சமபிகாவை எது சொன்னாலும்).

நான் நல்லூர் வாய் வழி வரலாற்றில் சொல்லிய கொடி கொடுப்பது என்பதை, ஒரு முறை எவரோ பலர் தமக்கு தரும் படி, கொடி  கொடி கொடுப்பவர்கள் சற்று நலிந்து இருக்கையில் கேட்டு இருக்கிறார்கள் என்பதே எனக்கு நினைவு வந்தது இறையாண்மையை வாங்கலாம், விற்கலாம் எனும் கருத்தை பார்த்தபோதும், இப்பொது சம்பிக்க சொன்னதை பார்த்த போதும்.

கொடி  கொடுப்பவர்கள் அப்படி நலிந்த நிலையில் கூட,  கொடி  கொடுக்கும் செலவுகளுக்கு நேரடியாந ஒரு சிறு உதவியையும் கேடகவில்லை.

அவர்களின் உறவுகள் எவரும் கூட   கொடி  கொடுக்கும் செலவுகளுக்கு நேரடியாக உதவ மறுத்து விட்டனர். உறவினர்கள், அவர்களின் வாழ்க்கைக்கு தேவையானதுக்கே செலவுகள், பொருட்கள் போன்றவற்றை கொடுத்தனர்.

இது ஓர் சிறிய ஒப்பீடு.  கொடி கொடுப்பதிலேயே இவ்வளவு இறையாண்மை இருக்கும் போது, தேசத்துக்கான இறையாண்மையை சிந்தித்து பாருங்கள். 

சொல்ல மறந்து விட்டேன், நல்லூர் கோயில் நிர்வாகம், உரிமையாளர் கூட இணங்கி இருக்க மாட்டார்கள் வேறு எவரும் கொடி கொடுப்பததற்கு.  
 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு எழுதி கொடுக்கப்பட்டவை பற்றி சம்பிக்க பேசவில்லை. அந்த நேரம் இறையாண்மை பாதிக்கப்படவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வேண்டுமானால் இடுப்பிலே கைபிடித்துத் தூக்கிவிட்டலாமேயன்றி இடுப்பிற்குக் கீழே கைவைத்தால் நடப்பதே வேறென்பதை எந்தவொரு தன்மானமுள்ளவரும் எதிர்க்கவே செய்வர். ஆனால் அப்படிச் சொல்லும் தகமை சிங்கள உயர்குழாச் சிந்தனைவாதச் சம்பிக்கவுக்கு இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இறைமை உள்ள நாடு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா வித உரிமைகளும் இருக்கு அது சிறீ லங்காவாக இருந்தாலும் என்ன தமிழர் நிலம் ஆகவிருந்தாலும் என்ன இன்று மன்னார்பகுதி நாளை கச்சதீவு இப்படி எதிர்காலத்தில் தமிழர் நிலம் எல்லாம் இந்தியனுக்குத் தாரை வார்த்துக்கொடுப்பதை யாழ் களத்தில் எவரும் விரும்பமாட்டார்கள் என அறிகிறேன்.

மோடி கொத்தாவை அழைத்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாரை அதானிக்குக் கொடு இல்லையேல் நாம் போர்க்குற்றம் இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உங்களுக்கு ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியது இப்போது சிங்களவர்களாலேயே வெளியில் வந்துவிட்டது.

நாளை வடபகுதிக்கடலில் பல இந்திய மீனவர்களை இந்தியாவே கொன்றொழித்துவிட்ட சிங்களம் செய்தது எனக்கூறி கச்சதீவை ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Elugnajiru said:

ஒரு இறைமை உள்ள நாடு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா வித உரிமைகளும் இருக்கு அது சிறீ லங்காவாக இருந்தாலும் என்ன தமிழர் நிலம் ஆகவிருந்தாலும் என்ன இன்று மன்னார்பகுதி நாளை கச்சதீவு இப்படி எதிர்காலத்தில் தமிழர் நிலம் எல்லாம் இந்தியனுக்குத் தாரை வார்த்துக்கொடுப்பதை யாழ் களத்தில் எவரும் விரும்பமாட்டார்கள் என அறிகிறேன்.

மோடி கொத்தாவை அழைத்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாரை அதானிக்குக் கொடு இல்லையேல் நாம் போர்க்குற்றம் இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உங்களுக்கு ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியது இப்போது சிங்களவர்களாலேயே வெளியில் வந்துவிட்டது.

நாளை வடபகுதிக்கடலில் பல இந்திய மீனவர்களை இந்தியாவே கொன்றொழித்துவிட்ட சிங்களம் செய்தது எனக்கூறி கச்சதீவை ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இன்னொரு இனத்தை(பூர்வீக குடிகளை)அழித்து பெரும் சிங்கள தேசத்தைப் படைக்க நினைத்ததன் பலாபலனை அறுவடை செய்வதற்கான நிகழ்வுநிரல் நகர்கிறது. ஆனால் இப்போதுகூடச் சிங்களம் திருந்தவில்லை. அப்படியொரு சிந்தனை மாற்றம் வந்திருந்தால் குருந்தூரை ஆக்கிரமிக்க கோத்தா  ஆட்களைத் திரட்டடி அனுப்பியிருக்கார். இப்போதாவது கடற்பலிகளது காலத்தை ஒருமுறை சிறிலங்கா, இனவாதக் கண்ணாடியைக் களற்றி வைத்துவிட்டு உற்றுநோக்கித் தமிழருக்கான இறையாண்மையை ஏற்றாலே 90வீதமான சிக்கல்களிலிருந்து இலங்கைத்தீவு விடைபெற்று சிறீலங்கா-தமிழீழம் என்ற நாடுகளாக அல்லது 'இலங்கை ஐக்கிய சமஷ்டிக் கூட்டரசு' என்றோ ஒருவருக்கொருவர் வழிவிடுவதே தீவினது மக்கள் நலனுக்கு ஏற்றதாகும். இல்லையென்றால் இந்தியா, சீனா, மேற்குலகும் அவர்களின் கிழக்கினது அடிவருடிகளும் பகுதி பகுதியாகத் தமது நலன்களை அடைவார்கள். இறுதியாக சிங்களவரும் தமிழரும் கையேந்தி நிற்கும் நிலைவரும். இன்று எம்மை அடிமையாக்கியதாக அடையும் புழங்காகிதம், நாளை உங்களையும் அடிமையாக்கப்போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய இழந்த தமது பலத்தை பெற மிக இலகுவான வழி இனவாதத்தை கையில் எடுப்பதாகும். வேறு எவ்வழியிலும் சிங்கள மக்களை சமரசமம் செய்ய முடியாது என்பது  மகிந்த குடும்பமல்ல அனைத்து சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா காசு இபொருட்கள் மட்டும் கொடுக்க வேண்டுமே ஒழிய இறையாண்மையில் கைவைக்கக் கூடாது.எடுக்கிறது பிச்சை இதற்கிடையில் இறையாண்மையும் மண்ணாங்கட்டியும்.

  • கருத்துக்கள உறவுகள்

-- தற் மொமன்ற் --

IMG-20220615-185801.jpg எனக்கு பழைய சோறு ஒத்துக்காது என்டு உனக்கு தெரியுமல்லொ..👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டு குடிமக்களின் உரிமைகளை பறித்து, அடிமைகளாக வைத்துக்கொண்டு இறையாண்மை கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தன் மக்களை சமமாக நடத்த தெரியவில்லை, பிச்சை போடுகிற நாட்டுக்கு பாடம் எடுக்கிறார்கள். இறையாண்மை உள்ளவர்கள் ஏன் கையேந்த வேண்டும் இன்னொரு நாட்டிடம்?  இறையாண்மை என்னவென்று தெரியுமா இவர்களுக்கு? விலைபோன நாட்டுக்குள்  இறையாண்மை தேடுகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.