Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை!

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது.

SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார்.

https://athavannews.com/2022/1287439

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட வரிசை. ஆனால் எரிபொருளுக்கு உத்தரவாதம் இல்லை. பன்னிரண்டு மணி நேரம் வரிசையில் காய்ந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார்கள் பலர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/1291691165/videos/757740262026749 👈

உயிரை பணயம் வைத்து, புகையிரத கூரையில்  இருந்து 
பயணம் செய்யும் இலங்கை மக்கள்.
சிங்கப்பூராக  மாற வேண்டும் என்று, கனவு கண்ட நாடு... அது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100004147954765/videos/2254382604710227 👈

☝️ எரி  பொருள் வாங்க, பல மணித்தியாலமாக காத்திருக்கும் 
ஆயிரக்கணக்கான மக்களை பாருங்கள். 
இது... ஒரு எரி பொருள் நிரப்பு நிலையத்தில் கண்ட காட்சி.
இதனைப் போல் நாட்டில், மற்ற நிலையங்களிலும் 
காத்திருக்கும்  உள்ள மக்கள் தொகையை பார்த்தால்... 
அவர்களின்... நேரம், உழைப்பு எல்லாம்...  பிரயோசனமற்றதாக போய்விடுகின்றது.
இது கூட.. அரசாங்கத்துக்கு இழப்புத் தான்.

இவற்றுக்கு காரணமானவர்கள், ஒரு வித குற்ற உணர்வும் இல்லாமல்... 
இருப்பதை பார்க்க வெறுப்பு வருகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/1291691165/videos/757740262026749 👈

உயிரை பணயம் வைத்து, புகையிரத கூரையில்  இருந்து 
பயணம் செய்யும் இலங்கை மக்கள்.
சிங்கப்பூராக  மாற வேண்டும் என்று, கனவு கண்ட நாடு... அது.

 சிங்கப்பூராக மாறவேண்டும் என்பது கனவு மட்டுந்தான், அதற்காக எதுவும் செய்யத்தேவையில்லை, சொல்லிக்கொண்டே இருப்பது. எப்படியான சிங்கப்பூர் என்று சொல்லவில்லை? அங்கே எல்லா இன, மத, கலாசாரங்களை ஏற்று, மதித்து, சரிசமமாக அனுசரித்து, கடினமாக உழைத்து வாழ்ந்தார்கள், உயர்ந்தார்கள். செயற்பாடு ஒன்றுமில்லாமல் கனவு மட்டும் கண்டால் சிங்கப்பூராக மாறிவிடுமா? பிச்சை எடுப்பு, வாங்கிய கடனை அடைக்க வழியில்லை, சுத்திவர கடன், மற்றைய நாடுகள் இவர்களோடு கதைக்க பயப்படுகிறார்கள், அடுத்தநாளே தட்டை ஏந்திக்கொண்டு வந்து நின்று தட்டப்போகிறார்கள் என்று. இதில கனவு வேறு. அதுவும் சிங்கப்பூரைபோல!

15 minutes ago, தமிழ் சிறி said:

இவற்றுக்கு காரணமானவர்கள், ஒரு வித குற்ற உணர்வும் இல்லாமல்... 
இருப்பதை பார்க்க வெறுப்பு வருகின்றது.

மனசாட்சியோடு கஷ்ரப்பட்டு, உழைத்து வாழ்பவர்களுக்கே குற்ற உணர்வு வரும், மற்றவர்களை சுரண்டினால், அவர்கள் சுரண்டவும் மாட்டார்கள். களவெடுத்து வாழ்பவர்களுக்கு குற்ற உணர்வு வருமா? இத்தனை உயிர்களையும் கொன்று குவித்துவிட்டு விருந்துண்டு  கொண்டாடியவர்களுக்கு குற்ற உணர்வு ஏது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

 சிங்கப்பூராக மாறவேண்டும் என்பது கனவு மட்டுந்தான், அதற்காக எதுவும் செய்யத்தேவையில்லை, சொல்லிக்கொண்டே இருப்பது. எப்படியான சிங்கப்பூர் என்று சொல்லவில்லை? அங்கே எல்லா இன, மத, கலாசாரங்களை ஏற்று, மதித்து, சரிசமமாக அனுசரித்து, கடினமாக உழைத்து வாழ்ந்தார்கள், உயர்ந்தார்கள். செயற்பாடு ஒன்றுமில்லாமல் கனவு மட்டும் கண்டால் சிங்கப்பூராக மாறிவிடுமா? பிச்சை எடுப்பு, வாங்கிய கடனை அடைக்க வழியில்லை, சுத்திவர கடன், மற்றைய நாடுகள் இவர்களோடு கதைக்க பயப்படுகிறார்கள், அடுத்தநாளே தட்டை ஏந்திக்கொண்டு வந்து நின்று தட்டப்போகிறார்கள் என்று. இதில கனவு வேறு. அதுவும் சிங்கப்பூரைபோல!

அண்மைய காலிமுகத் திடல் போராட்டத்தின் போது....
ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து... இரண்டு பத்திரிகையாளர் செய்தி சேகரிக்க 
இலங்கைக்கு வந்திறங்கியவுடன்... இலங்கையில் மிகவும் உயரமான கட்டிடங்களை 
கண்டு ஆச்சரியப்  பட்டு விட்டார்களாம். 

இந்த சின்னஞ்சிறு நாட்டில், இவ்வளவு உயரமான கட்டிடங்களை...
சீனாக்காரன்  கடனுக்கு, தன்னுடைய ஆட்களை வைத்து காட்டியது என்று...
அவர்களுக்கு தெரியுமோ தெரியாது.

போதாக் குறைக்கு... வட்டி ஒருபக்கம் ஏற,
பராமரிப்பு செலவு என்று... பல மில்லியன்களை 
தின்று கொண்டு இருக்கிறது அந்தக் கட்டிடங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=585085876323971 👈

☝️ பெற்றோல் வியாபாரம்... இப்படியும் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் அரசாளும்நாட்டில் வேறெதை எதிர்பார்க்கமுடியும்? மக்களை மீட்க போர் செய்யிறோம் என்று அவர்களின் மனங்களை காயப்படுத்தும் போர்க்கொண்டாட்டங்களும், வெற்றிக்கோபுரங்களும் அதுவும் கடனில. எவனுக்காவது அறிவு இருந்ததா? கொடுத்தவர்களும் திருப்பி தருவானுகளா? என்று கேள்வி கேட்கவுமில்லை, யோசிக்கவுமில்லை.

4 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=585085876323971 👈

☝️ பெற்றோல் வியாபாரம்... இப்படியும் நடக்கிறது.

நோனா பெரிய இடமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நோனா பெரிய இடமோ?

 காரின் இலக்கத் தகட்டில்... 
கிழக்கு மாகாணத்தில் பதிவு பெற்றுள்ளதாக தெரிகின்றது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=585085876323971 👈

☝️ பெற்றோல் வியாபாரம்... இப்படியும் நடக்கிறது.

15 minutes ago, satan said:

முட்டாள்கள் அரசாளும்நாட்டில் வேறெதை எதிர்பார்க்கமுடியும்? மக்களை மீட்க போர் செய்யிறோம் என்று அவர்களின் மனங்களை காயப்படுத்தும் போர்க்கொண்டாட்டங்களும், வெற்றிக்கோபுரங்களும் அதுவும் கடனில. எவனுக்காவது அறிவு இருந்ததா? கொடுத்தவர்களும் திருப்பி தருவானுகளா? என்று கேள்வி கேட்கவுமில்லை, யோசிக்கவுமில்லை.

நோனா பெரிய இடமோ?

அவ டாக்குத்தர் போல!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=585085876323971 👈

☝️ பெற்றோல் வியாபாரம்... இப்படியும் நடக்கிறது.

பெண் என்றால் பேயும் இரங்கும். பெற்றோல் இரங்காதா.....😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=974662596486215 👈

☝️ இன்னுமொரு சம்பவம். ☝️
களை கட்டும்...  திருட்டு பெற்றோல் வியாபாரம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை!

இலங்கை மக்கள் எத்துணை பொறுமையானவர்கள் என்பதனை உலகுக்குத் தெரிவிக்க இதனைவிட வேறு ஆதாரங்கள் இல்லை. 😌  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=585085876323971 👈

☝️ பெற்றோல் வியாபாரம்... இப்படியும் நடக்கிறது.

இது தமிழ் பிரதேசம் போல இருக்கிறது.

சிங்கள பிரதேசமென்றால் ஏதாவது அசம்பாவம் நடந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் இரத்து

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின்... அனுமதிப்பத்திரம் இரத்து.

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை விநியோகித்த CEYPETCO மற்றும் LIOC ஆகிய நிறுவனங்களால் உரிமம் பெற்ற மூன்று எரிபொருள் வாகனங்களின் போக்குவரத்து உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த எரிபொருள் வாகனங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர்களை காணொளி மூலம் தமது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு எரிசக்தி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1287563

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தமிழ் பிரதேசம் போல இருக்கிறது.

சிங்கள பிரதேசமென்றால் ஏதாவது அசம்பாவம் நடந்திருக்கும்.

வெள்ளவத்தை பக்கம் போல கிடக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

வெள்ளவத்தை பக்கம் போல கிடக்கு.....

சாதாரண கூலிகளை பழிவாங்குவதை விட உத்தரவு போட்டவர்களை பிடிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது தமிழ் பிரதேசம் போல இருக்கிறது.

சிங்கள பிரதேசமென்றால் ஏதாவது அசம்பாவம் நடந்திருக்கும்.

22 minutes ago, தமிழ் சிறி said:

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் இரத்து

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின்... அனுமதிப்பத்திரம் இரத்து.

மேலும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர்களை காணொளி மூலம் தமது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு எரிசக்தி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

விதிக்கு மீறிய  வியாபாரம் செய்யப் போய்...
பார ஊர்திகளின் அனுமதிப் பத்திரத்தையும், 
தமது தொழில்களையும் இழந்து விட்டார்கள்.  

20 லீற்றர் பெற்றோல்... அதன் ஊழியர்களின் குடும்பங்களை, 
நடுத்தெருவில் நிறுத்தியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 ஊழியர்களின் குடும்பங்களை, 
நடுத்தெருவில் நிறுத்தியிருக்கு.

இப்ப அவை மட்டும் இல்லை எல்லாரும் நடுத்தெருவில் தான் நிக்கினம்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப அவை மட்டும் இல்லை எல்லாரும் நடுத்தெருவில் தான் நிக்கினம்.😄

உண்மைதான்... பாணுக்கு, அரிசிக்கு, எரிவாயுக்கு, பெற்றோல், 
மண் எண்ணை என்று..எல்லாம் வாங்க, மணித்தியாலக் கணக்கில் 
தெருவில் வரிசையில் நிற்க வேண்டி இருக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

விதிக்கு மீறிய  வியாபாரம் செய்யப் போய்...
பார ஊர்திகளின் அனுமதிப் பத்திரத்தையும், 
தமது தொழில்களையும் இழந்து விட்டார்கள்.  

20 லீற்றர் பெற்றோல்... அதன் ஊழியர்களின் குடும்பங்களை, 
நடுத்தெருவில் நிறுத்தியிருக்கு.

முதலாளிகளின் உத்தரவுகளை மீற முடியுமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
May be a cartoon of text that says 'ලංකා ලං லஙுகா LANKA'
 
காலமை அஞ்சு மணிக்கு... லைனைப் போட்டு,
மத்தியானம் ஒரு மணிக்கு, பவுசர் வந்து.. பின்னேரம் மூன்டு மணிக்கு,
ஆயிரம் ஓவாக்கு பெற்றோல் அடிக்கிற... அந்த ஏழெட்டு மணித்தியாலத்துக்குள்ள...
🥤 இரண்டு பெப்சி
🍱 ஒரு பைக்கற் பிஸ்கட்
🧂 ஒரு லீற்றர் தண்ணி போத்தல்
என்று வாங்கி குடிச்சிட்டு...
 
கடைசியா கணக்குப் பாரத்தா,
பிளக்கல விக்கிறவனிட்டை, பெற்றோலை வாங்கியிருந்தா...
கொஞ்சக் காசும், நிறைய நேரமும் மிஞ்சியிருக்கும் போல இருக்கு ☹️☹️☹️
 
நூறு ரூபா, மாடு... ஆயிரம் ரூபா, வைக்கல் திண்டிச்சாம் 🤓🤓🤓

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இது தமிழ் பிரதேசம் போல இருக்கிறது.

சிங்கள பிரதேசமென்றால் ஏதாவது அசம்பாவம் நடந்திருக்கும்.

1 hour ago, குமாரசாமி said:

வெள்ளவத்தை பக்கம் போல கிடக்கு.....

May be an image of 3 people and text that says 'வலசக்தி வமைக்க POWERAND ENERGY மீணசந்தி විදමීමිල මිලකේති අපානනංමයි JUST IN MINISTRY FPOWERAND NERGY H SERVO AUE WLmad Nவு ETWORK பம்பலப்பிட்டி எரிபொருள் பவுசர் சம்பவம் உடனடியாக உரிமம் இரத்து சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை தொடர்பில், மூன்று எரிபொருள் பாரவுர்திகளின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். newshint24.com'

இருவரும்... சரியாக கணித்திருக்கின்றீர்கள். 👍 😁
பம்பலபிட்டியில் தான்... இந்தச் சம்பவம் நடந்திருக்கு. 
Newshint24

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக அனைத்தும் நடந்து முடியவில்லை இதுவே ஆரம்பமாகும் என நினைக்கிறேன். எங்களால் இனவாதம்பேசி நாட்டுமக்களைச் சமாதானப்படுத்தலாம் என்றால்  புலியையும் இல்லாதொழிச்சாச்சு, மடவேலை செய்துபோட்டம், இல்லாட்டில் சர்வடேசங்களிட்டையும் புலியின் பெயரைச் சொல்லி சர்வதேசத்திடமும் சமாதானத்துக்கான போர் எனச்சொல்லி காசு பார்த்திருக்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள்தான் இனிமேல் வந்து நாட்டை முன்னேற்றப்போகினம் என  யாழ்குடாவில கதை அடிபடுகுதாம் ஒருதர் கேட்டைடத்தில நான் கூறினேன் புலிகளது காசை அடிச்சவனெல்லாம் ஒதுக்கியதுபோக ஒதுங்கிட்டினம், இனிமேல் ஒருத்தரும் வரபோவதில்லை ஆர்வக்கோளாறில ஒன்றிரண்டுபேர் வெளிக்கிட்டவர்கள் அவர்களிடம் நீங்கள் யாரு யார் உங்களுக்கு அனுமதி தந்தவையள் அப்பிடி எண்டால் அவையள ஒரு அறிக்கை விடச்சொல்லுங்கோ பாக்கலாம் என கேட்டது ஒரு புறமிருக்க மறுபடியும் காசடிக்க வந்திட்டாங்கள் எனப் புறுபுறுக்க வந்த நாலுபேரும் எப்போதோ ஒதுங்கிட்டாங்கள். எனக்கூறினேன்.

ஆனால் ஒரு விடையம் எனக்கு மனதில பட்டுது சொன்னால் கோவிக்கமாடியள் என நினைக்கிறன்

நான் ஊருக்குப் போகும்போது அவசரத்துக்கு ஏதாவது வாகனம் பிடிச்சால் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாது நாலு ஆட்டோவை மறித்தால் ஐந்தாவதுதான் நிக்கும் மற்றப்படி எதுக்கு ஆட்டோ ஓடுறம் எனத்தெரியாமலேயே சும்ம துருவில சவாரி இல்லாமல் திரிவினம். இரவு ஏழு மணிக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில இருந்து பத்துக்கிலோ மீறர் தூரம் உள்ள எனது ஊருக்குப் போக இரண்டாயிரம் ரூபாய் கேட்பார்கள் ஏன் எண்டு கேட்டால் பெற்றோல் விலை கூடிப்போட்டுது இரவில வருகிறது பயம் மற்றப்படி திருபிவரும்போது வெறுமனதான் வரவேண்டும் எனக்கன நியாயம் கதைப்பார்கள்.

ஒருவித மனச்சாட்சியும்மில்லாது செயற்படுவார்கள்.  இந்தவேளையில இதைச் சுட்டிக்காட்டுவது சரியில்லைத்தான் ஆனால் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை. 

ஏதாவது அலுவலாய் வங்கி வாசலுக்குப் போனால் கழுவிவிட்டு அந்தக்காசை அடிச்சுவிட வந்திட்டினம் எனுமாப்போல் ஒரு பார்வை பார்ப்பினம் பாருங்கோ ச்சா எண்டிருக்கும். ஆனால் நாய் உழைச்சகாசு குரைக்காது என்பதுபோல் நாம் புலம்பெயர் தேசத்தில் நாம் உழைச்சகாசு மணக்காதுதானே.

வந்திட்டார் சரம் கட்டிக்கொண்டு தெருவில திரியுறதுக்கு எங்கட ஊரில ஒருவர் வெளிநாட்டிலிருந்து என முதுகூக்குப் பின்னால கதைக்கிறதை நான் நிறையவே கேட்டிருக்கிறன் தவிர முக்கால் காச்சட்டை போட்டாலும் வேட்டி கட்டினாலும் பிறத்தாலை நக்கல் நையாண்டி செய்தவையளையும் யாழ்ப்பாணத்தில நிறையவே கண்டிருக்கிறன். 

அவர்களில் யாராவது இந்தக்கருத்தப் பார்த்தால் அவை அனைத்தும் அவர்களுக்கே அர்ப்பணிக்கிறன். 

அதுசரி விடிய விடிய பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்களே இவர்கள் வேலைவெட்டிகளுக்குப் போவதில்லையா யாழ்ப்பாணத்தில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.