Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ விமானமூலம் கோத்தா நாட்டை விட்டுதப்பி ஓடிட்டார் - பிபிசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

பழைய புளொட்காரரிடம் சொன்னால் ஈசியாய்  பிடிக்கலாம்.

சரியாகச் சொன்னீர்கள், மாலைதீவைப் பிடிக்கப்போன அனுபவம் இவர்களுக்கு நிறையவே இருக்கிறது.

கோத்தா இப்போ மாலைதீவில், 

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சபாநாயகர்
  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா சோதனை..? தஞ்சம் கேட்டு நுழைஞ்சால் அங்கேயுமா விரட்டுகிறார்கள்..?

யாருக்கும் வேண்டப்படாத ஆளாகிவிட்டாரோ? ஐ.நா. கதவுகளையும் தட்டி பார்க்கலாம்.

 

FXh1iy6aAAEZrC_?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்

றனிலுக்கு எதிராக புதிதாக ஆர்ப்பட்டமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் தலையில் கூட்டு சேர்ந்து நல்லா மிளகாய் அரைக்கிறார்கள்.

யாரும் பதவி விலகல் கிடையாது.

ராணுவத்தின் மூலம் கொதிநிலையை அடக்கிவைக்க முடிவு போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலமைப்பு சட்டம் 37 வது பிரிவில் இப்படி சொல்லப்பட்டிருகிறதாம்..! 👇

FXYjlj0WIAAkpdO?format=png&name=900x900

டிவிட்டரில் வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ராசவன்னியன் said:

இலங்கை அரசியலமைப்பு சட்டம் 37 வது பிரிவில் இப்படி சொல்லப்பட்டிருகிறதாம்..! 👇

FXYjlj0WIAAkpdO?format=png&name=900x900

டிவிட்டரில் வந்துள்ளது.

ஓம் முன்னரும் சில தடவைகள் இப்படி நடந்துள்ளது.

2009 யுத்த முடிவில். பொன்சேகாவை சீனா அனுப்பி விட்டு. மகிந்த லிபியா போனார். அப்போ பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரியை இப்படி பதில் ஜனாதிபதியாக்கினார்.

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் இருப்புக்களை திட்டமிட்ட முறையில் விநியோகிக்கவும் – ஜனாதிபதி உத்தரவு

சிங்கப்பூர் செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டா?

மாலைதீவில் இருந்து இன்று மாலை கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்லவுள்ளார் மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கபூரும் நாறப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says '### கள்ள தோனில வந்தவனுகள்னு மத்தவனுகள சொல்லிச், சொல்லி SIYA SIAMEVE MEME MEME கடைசியா நாம கள்ள தோனில Escape ஆக வேண்டிய நிலமையாகிடுச்சுல....'

  • கருத்துக்கள உறவுகள்

 

Sri Lankans living in the Maldives stage a demonstration in Male on July 13, 2022, to protest for the arrival of former President Gotabaya Rajapaksa who is fleeing his own country after thousands of protesters overran his official residence accusing him of responsibility for Sri Lanka's worst economic crisis. - Sputnik Internationalமாலைதீவிலும் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிவிட்டது 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன் அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவர் தப்பிச் செல்ல மாலத்தீவை தேர்ந்தெடுத்தது ஏன்?

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் மூன்று மாத காலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்தது. ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

மாளிகையை முழுவதுமாக கைப்பற்றினர்.

அதன்பின் ஜனாதிபதி எங்கிருக்கிறார் என கேள்விகள் எழுந்த நிலையில் அவர் இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக சொல்லப்பட்டது.

தனது மனைவி மற்றும் இரு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் அங்கு சென்றுள்ளார்.

காரணம் என்ன?

இந்திய பெருங்கடல் தீவான மாலத்தீவு இலங்கையின் அண்டை நாடு. இருநாடுகளும் நல்ல உறவை பேணி வருகின்றன. மேலும் இலங்கையிலிருந்து மாலத்தீவிற்கு 90 நிமிடங்களில் விமானம் மூலம் சென்று விடலாம்.

இரு நாடுகளும் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நேர்மறையான ராஜிய மற்றும் பொருளாதார உறவுகளை பேணி வருகின்றன. மாலத்தீவின் ராணுவத்திற்கு இலங்கை ராணுவம் பயிற்சிகளை வழங்கும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண YouTubeவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

YouTube பதிவின் முடிவு, 1

குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மாலத்தீவுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தினர் மாலத்தீவின் முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது நஷீத்திடம் நட்புறவை கொண்டுள்ளனர்.

மாலத்தீவின் தலைநகரம் மாலே விமான நிலையத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினரை வரவேற்க நஷீத் காத்திருந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல ராஜபக்ஷ குடும்பத்திற்கு அங்கு வீடுகளும் உள்ளன. மேலும் சில சொத்துக்களும் அங்குள்ளன.

 

ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்கும் மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்கும் மக்கள்

தப்பிச் சென்ற ஜனாதிபதி

உள்ளூர் நேரப்படி புதன் அதிகாலை சுமார் 03:00 மணிக்கு ஜனாதிபதியின் விமானம், மாலத்தீவின் தலைநகர் மாலேவில் தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்ட பிறகு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது..

அவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய செய்தி வெளியானதும், காலி முகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.

மக்களின் எதிர்ப்புக்கு இடையே இன்று பதவி விலகுவதாக கோட்டாப ராஜபக்ஷ அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபராக இருக்கும்வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது. அதனால் பதவியில் இருக்கும்போதே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட விரும்பியதாக நம்பப்படுகிறது.

மாலத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

 

மாலத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பட மூலாதாரம்,DHIYARES/THE MALDIVES JOURNAL

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அதை எதிர்த்து அங்குள்ள இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவை அங்கு தங்க அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இருப்பினும் ராஜபக்ஷவின் வருகை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை என மாலத்தீவின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் ராஜபக்ஷ மாலத்தீவில் தொடர்ந்து தங்க மாட்டார் என்றும், அவர் அடுத்தபடியாக வேறு ஒரு நாட்டிற்கு பயணம் செய்வார் என்றும் செய்தி வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

https://www.bbc.com/tamil/sri-lanka-62154217

  • கருத்துக்கள உறவுகள்
Jaffna Troll
@JaffnaTroll
வணக்கம்டா மாப்ள... இப்ப நான் சிங்கப்பூர்ல இருந்து..😂
#கோத்தபாய

FXikDacVsAAA2UE?format=jpg&name=small

 

https://twitter.com/Warrior80311470/status/1547361274740318210?s=20&t=oNQPHdNig6eKIGQylOvkqw

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி!

கோட்டா.. இப்போது எங்கே இருக்கின்றார்? இரகசிய தகவல் வெளியானது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால், சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர் தவறவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாலைதீவு அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக இவரின் அறைக்கு செல்ல மறுத்துள்ளதால், அவர் மக்களோடு மக்களாக லைனில் சிங்கப்பூர் இமிக்ரேஷனுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இப்போது தனி ஜெட் விமானமொன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://athavannews.com/2022/1291113

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.