Jump to content

ஜனாதிபதி ரணிலின் வெற்றி ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான மற்றுமொரு வெற்றி - டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது என்று கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

"இலங்கை அரசியல் நெருக்கடிகளையும்,பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டுக்கு தலைமை தாங்கி நாட்டை சரியான திசை வழியில் நடத்திச் செல்லக் கூடியவர், ரணில் விக்ரமசிங்க தான் என்பதை நாம் நேர்மையாகவும், துணிச்சலோடும் அன்று கூறியிருந்தோம்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய கடமைப் பொறுப்பை செய்வதற்கு நாம் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருமித்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

இவ்வாறான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அர்த்தமுள்ள வகையிலும் தமிழ் மக்களின் கெளரவமான எதிர்காலத்தையும் ஆழமாக ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானங்களை எடுக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களாக இருப்பவர்கள் தமது தவறான தீர்மானங்களால் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களில் அரசியல் பலத்தை வீணடித்துள்ளார்கள்.

ஆனாலும் நாம் எப்போதும் தீர்க்கதரிசனமான தீர்மானங்களையே எடுத்திருக்கின்றோம். எமது தேசிய நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புக்களானது தமிழ் மக்களின் சமத்துவமான எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவகை பிரச்சனைகளுக்கும்  தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  வழியேற்படுத்தும் என்பதே எமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையாகும்.

வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல. நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும்.

அந்தவகையில் எமது அனுபவமும், தீர்மானங்களும் அரசியல் சாணக்கியமானது என்பதை நாம் ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் மகத்தான வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியானது பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெற்றிபெறச் செய்யும் வெற்றியாக அமையும்.

இந்நிலையில், எமக்கான ஆதரவினை எமது மக்கள் இன்னும் அதிகமாக வழங்குவார்களாயின், மேலும் பல விடயங்களை சாத்தியமானதாக்க எம்மால் முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணிலின் வெற்றி ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான மற்றுமொரு வெற்றி - டக்ளஸ் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்னப்பா நீ லூ......பய. எத வேணாலும் சொல்லிட்டுப் போய்டுவ..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

உனக்கென்னப்பா நீ லூ......பய. எத வேணாலும் சொல்லிட்டுப் போய்டுவ..🤣

இலங்கை பாராளுமன்றம் - டக்ளஸ் தேவானந்தா  May be an image of 1 person இலங்கை பாராளுமன்றம் - டக்ளஸ் தேவானந்தா

எத்தினை வருசமாய் வெல்லுற கட்சியோடை, ஒட்டியிருந்து ... 
அமைச்சராய்   வந்த இவருக்கு... 
ரணில் வெல்லுவார் என்று கணிப்பது சுலபம் தானே...
சாமத்தியத்திலை  சாரி.... சாணக்கியத்திலை சம்பந்தனையே விஞ்சி விட்டார். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

3 hours ago, பிழம்பு said:
3 hours ago, பிழம்பு said:

வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல. நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும்.

 

பதவிக்காக வெல்லும் கட்சியில் சேர்ந்து விட்டு விளக்கம் வேறை. 

எப்படி மகிந்தவின் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு  மகிந்த டலசை  ஆதரிக்கும் போது  இவர் ரனிலை ஆதரித்தவர். தயவு செய்து ஜனநாயக நாடு என்று மட்டும் திருவாய்மலர  வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அமைச்சர் பதவி உறுதி!
மற்ற பிரதி/ராஜாங்க அமைச்சுக்கு முயற்சி!
நம்ம அயலூர் அண்ணன் ஒருத்தர் உவர நம்பி முன்னாள் அதிபரை போற்றிப் பாடுவார்!🤭 இனி எப்படி போகுது என்று பொறுத்திருந்து பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரிக்கு விழுந்த 134 வாக்குகளும் ஈபிடிபி ஆயுதக் கும்பலின் தயவில் கிடைத்தது என்று இந்த கிழட்டு ஓநாய் ஊளையிடுகிறது.

என்ன இப்ப சொறீலங்காவை ஆள்வது நரிகளும் ஓநாய்களும் என்பதால்.. இதை எல்லாம் கேட்க வேண்டிய நிலை மக்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

ஆனாலும் நாம் எப்போதும் தீர்க்கதரிசனமான தீர்மானங்களையே எடுத்திருக்கின்றோம். எமது தேசிய நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புக்களானது தமிழ் மக்களின் சமத்துவமான எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவகை பிரச்சனைகளுக்கும்  தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  வழியேற்படுத்தும் என்பதே எமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையாகும்.

ஆமா .....! இதை சொல்லும்போது, எதை வென்றெடுத்தாய் எப்போதும் அரசின் கூலியாய் செயற்பட்டு? என்பதை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது அவரது அசையா நம்பிக்கை. அடுத்தமுறை இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும்போதும் இந்த வசனநடை மாறாமல் பேசுவார். 

9 hours ago, பிழம்பு said:

வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல. நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும்.

உள்மனது சொல்லும் உண்மையை அவரால் மறைக்கமுடியவில்லை. இந்திய பத்திரிகையாளர் இவரை பேட்டி கண்டபோது, மறைந்த தனது அரசைபற்றி உளறியதை கொஞ்சம் இணைத்து விடுங்களேன்!அவரும் தான் சொன்னதை நினைவு கூர, அல்லது தான் சொன்னதை பத்திரிகைக்காரர் மாற்றி பதிந்து போட்டார் என்று மறுப்பறிக்கை விட, இல்லை இதுவும் அதே அரசுதான் பொறுத்திருங்கள் முடிவறிய என்று உறுதிப்படுத்த வசதியாக இருக்கும். 

இனியென்ன? தாடியர் தனது படை பரிவாரங்களையும், ஆயுதங்களையும்  தயார்படுத்தி வேட்டைக்கு பயமில்லாமல் புறப்படலாம்! 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.