Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்துள்ளது.

அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோட்டாபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோட்டாபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.

புகார் என்ன?

சிங்கப்பூர்

படக்குறிப்பு,

அலெக்சாண்டிரா லில்லி கேதர்

அலெக்சாண்டிரா தற்போதுபெர்லின் நகரில் உள்ளார் என்றும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தததாகவும் கூறப்பட்டுள்ளது.

"கோட்டாபயவுக்கு எதிராக புகார் செய்துள்ளோம். சிங்கப்பூர் அரசாங்கம் அவரை கைது செய்வதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை நிலையைப் பறைசாற்ற முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இப்போது சிங்கப்பூருக்கு அமைந்துள்ளது," என்கிறார் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.

சிங்கப்பூர் தனது சொந்த சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அவற்றின் அடிப்படையிலேய கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை தயாரித்த குழுவில் அலெக்சாண்டிராவும் ஓர் உறுப்பினர்.

இற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட போரின்போது கோத்தபாய ராஜபக்சே ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு அளித்துள்ள 63 பக்கங்களுக்கு நீளும் குற்றவியல் புகார் மனுவில் குறிப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது.

கோத்தபாயவைக் கைது செய்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெறற்றுள்ளதாக சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி இந்தக் கடிதம் பெற்றபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலதிக கருத்துகள் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை விளக்கம்

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

படக்குறிப்பு,

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

"போர்க்குற்றம், இனப்படுகொலை, சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலும் என்றாலும், சிங்கப்பூர் அந்த நடவடிக்கையை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தும்," என்று அரசு பலமுறை தெரிவித்துள்ளது என்றுறார் பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஷுபாங்கர் டாம். இவர் சிங்கப்பூரிலும் சில காலம் பணியில் இருந்துள்ளார்.

சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாக அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்றாலும் அந்நாடு நீண்டகாலமாக அவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு வெளிநாட்டுத் தலைவரை மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் எனில், சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப அதை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் எழும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு போர்ப் பகுதியில் இருந்து ஐ.நா, நிவாரண முகமைகளை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு கூறியுள்ளது.

"இதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் சாட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார் கோத்தபாய.

கோட்டாபயவை கைது செய்து விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை சட்ட அதிகாரியிடம் மனு அளிதி்துள்ளோம். இதுவே எங்கள் வழக்கின் அடிப்படையாக இருக்கும்," என்கிறார் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka).

சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய வெளியேற வேண்டுமா?

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையே கோட்டாபய எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தணா தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக SOCIAL PASS அடிப்படையில்தான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இவ்வாறான ஏற்பாட்டில் ஒருவர் சிங்கப்பூர் வந்தால், சம்பந்தப்பட்டவர் அங்கு 14 நாள்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும்.

கோத்தாபய கடந்த 13ஆம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனவே அவர் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவக்கு, குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான 'சோஷியல் விசிட்' எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும். அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் விசா வழங்கப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது.

எனவே, அவர் மேலும் சில காலம் தங்க சிங்கப்பூரின் குடிநுழைவு சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்து அரசுத்தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

https://www.bbc.com/tamil/global-62306565

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை!

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை!

போர்க் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும், அவர் மீதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெனிவா உடன்படிக்கையின் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கு சிங்கப்பூருக்கு விருப்பம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

ஆகையினால் வெளிப்படையாக, கோட்டாபய ராஜபக்ஷ செய்த குற்றங்களில் விசாரணை நடத்திய பிற அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் ஏற்கனவே சேகரித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா என்பதைப் பார்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்தோடு, இவரால் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறார்கள், உங்கள் விசாரணைக்காக அவர்களை நேர்காணல் செய்ய, உங்களுக்கு உதவ என்னால் முடிந்ததைச் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
https://newuthayan.com/556/

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல காரியம் நல்லபடி நடந்தால் சரி.........!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ: மேலும் 14 நாட்களுக்கு விசா நீட்டிப்பு

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
26 ஜூலை 2022
புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்
 
கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வந்த நிலையில் அவரின் விசா மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்தது.

அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோட்டாபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோட்டாபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.

புகார் என்ன?

சிங்கப்பூர்

படக்குறிப்பு,

அலெக்சாண்டிரா லில்லி கேதர்

அலெக்சாண்டிரா தற்போதுபெர்லின் நகரில் உள்ளார் என்றும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தததாகவும் கூறப்பட்டுள்ளது.

"கோட்டாபயவுக்கு எதிராக புகார் செய்துள்ளோம். சிங்கப்பூர் அரசாங்கம் அவரை கைது செய்வதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை நிலையைப் பறைசாற்ற முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இப்போது சிங்கப்பூருக்கு அமைந்துள்ளது," என்கிறார் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.

சிங்கப்பூர் தனது சொந்த சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அவற்றின் அடிப்படையிலேய கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை தயாரித்த குழுவில் அலெக்சாண்டிராவும் ஓர் உறுப்பினர்.

இற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட போரின்போது கோத்தபாய ராஜபக்சே ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு அளித்துள்ள 63 பக்கங்களுக்கு நீளும் குற்றவியல் புகார் மனுவில் குறிப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது.

கோத்தபாயவைக் கைது செய்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெறற்றுள்ளதாக சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி இந்தக் கடிதம் பெற்றபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலதிக கருத்துகள் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை விளக்கம்

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

படக்குறிப்பு,

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

"போர்க்குற்றம், இனப்படுகொலை, சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலும் என்றாலும், சிங்கப்பூர் அந்த நடவடிக்கையை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தும்," என்று அரசு பலமுறை தெரிவித்துள்ளது என்றுறார் பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஷுபாங்கர் டாம். இவர் சிங்கப்பூரிலும் சில காலம் பணியில் இருந்துள்ளார்.

சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாக அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்றாலும் அந்நாடு நீண்டகாலமாக அவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு வெளிநாட்டுத் தலைவரை மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் எனில், சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப அதை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் எழும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு போர்ப் பகுதியில் இருந்து ஐ.நா, நிவாரண முகமைகளை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு கூறியுள்ளது.

"இதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் சாட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார் கோத்தபாய.

கோட்டாபயவை கைது செய்து விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை சட்ட அதிகாரியிடம் மனு அளிதி்துள்ளோம். இதுவே எங்கள் வழக்கின் அடிப்படையாக இருக்கும்," என்கிறார் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka).

சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய வெளியேற வேண்டுமா?

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையே கோட்டாபய எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தணா தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக SOCIAL PASS அடிப்படையில்தான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இவ்வாறான ஏற்பாட்டில் ஒருவர் சிங்கப்பூர் வந்தால், சம்பந்தப்பட்டவர் அங்கு 14 நாள்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும்.

கோத்தாபய கடந்த 13ஆம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனவே அவர் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவக்கு, குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான 'சோஷியல் விசிட்' எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும். அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் விசா வழங்கப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது.

எனவே, அவர் மேலும் சில காலம் தங்க சிங்கப்பூரின் குடிநுழைவு சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்து அரசுத்தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

https://www.bbc.com/tamil/global-62306565

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 2 கிழமை விசா சிங்கப்பூர் அரசால்  கொடுக்கப்பட்டுள்ளதாம். Cmr.fm

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு நன்றாகவே தெரியும்; தான் பதவியிலிருந்து இறங்கியதும் மனித உரிமை மீறல் குற்றச்சாடை எதிர்கொள்ள நேரிடும்  வெளிநாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்றாலும் என்பது  ஆனாலும் விதி எப்படி ஆளை கிளப்பி பொறி வைத்திருக்கு? ஒருவேளை தப்பி நாடு வந்து சேர்ந்தாலும், இனி இவர் வெளிநாடுகளை எட்டியும் பார்க்க முடியாது, இனி இங்கு வந்து சண்டித்தனமும் காட்ட முடியாது, பல்லுப்பிடுங்கின பாம்புதான்! எங்கோ கேள்விப்பட்ட நினைவு ஒரு நாட்டு அதிபருக்கெதிராக (ஆபிரிக்க நாடொன்றாக இருக்கலாம்)  சர்வேதேச பாதுகாப்புச் சபையினால் பிடிவிறாந்து சமர்பிக்கப்பட்டு, ஆனால் அவர் தன் நாட்டு மக்களை கிளப்பி அதற்கு எதிராக போராட வைத்து, தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று சவால் விட்டதாக, இப்போ அவர் இறந்திருக்கலாம். கோதாவுக்கு இனி நாட்டில் பெரும் ஆதரவு இருக்காது. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கொடுக்கப்பட்ட  ஒவ்வொரு  தலையங்கமுமே ◌தடுமாற்றத்தை  காட்டுது??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

மேலே கொடுக்கப்பட்ட  ஒவ்வொரு  தலையங்கமுமே ◌தடுமாற்றத்தை  காட்டுது??

எனக்குந்தான்! ஒருவேளை யஷ்மின் சூகாவின் வேண்டுகோளுக்கமைய கோத்தாவை விசாரணை செய்வதற்காக விசாவை நீட்டித்தார்களோ? ஏனென்றால் கோத்தா இது கேட்டதும் விசா நீட்டிப்பு கோரியிருக்க வாய்ப்பில்லை. அரசியல் தந்திரங்களை யாரறிவார்? மகிந்தா; தான் ஆட்சிக்கதிரை யேறாவிடில் தன்னை மின்சாரக்கதிரையில ஏற்றி விடுவார்கள்  என்று வாய் ஓயாமல்  சொல்லிக்கொண்டே இருப்பார், இப்போ அதற்கான நேரம் வந்ததாற்தான் ஏறிய கதிரையில் இருந்து இறக்கப்பட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவச் சான்றிதழ் அளித்து விசாவை நீட்டித்திருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவையும், ராஜபக்ஷ வம்சத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த போர்க்குற்ற விசாரணைகளை ஒரு பயமுறுத்தும் கருவியாகப் மேற்குலகு பாவிக்குமேயன்றி, ஒருபோதும் அதனைப் பாவித்துத் தண்டிக்கப்போவதில்லை. அதை ஒருமுறை பாவித்துவிட்டால், இவர்கள் மேலான தமது பிடி போய்விடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  ஆகவே, ஒருபோதும் பாவிக்கப்படாது.

அதுபோல, இந்தியா ஒருபோதுமே ராஜபக்ஷேக்கள் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால், ராஜபக்ஷேக்களைத் தண்டிக்கும் விசாரணைகளில் இந்தியாவின் பங்கும் வெளிவரலாம். இது இந்திய அரசுக்கு சர்வதேச ரீதியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, ஐ நா மனிதவுரிமைக் கவுன்சில் கூட்டங்களில் தீர்மானங்களை வலுவிழக்கப் பண்ணியதுபோலவோ அல்லது இலங்கைக்கு ஆதவான நிலைப்பாட்டை எடுத்ததுபோல விசாரணைகக் குழப்பவே இந்தியா முயலும்.

நாமும் இன்னொருமுறை மிக இலகுவாக ஏமாற்றப்படப்போகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இது போன்ற  சந்தேகங்களும்

நம்பிக்கையீனங்களும்  எல்லோருக்குமுண்டு??

ஆனால்  இதைவிட  வேறு தருணங்கள் தமிழருக்கு கிடைக்கப்போவதில்லை?

எனவே இதையாவது  ஒரு  துரும்பாக பிடித்து  நகர்வதே  சாலச்சிறந்தது

இப்படியான நகர்வினால்  தமிழருக்கு ஏதும்  பாதிப்புக்கள்  இனி  இப்பொழுதைவிட  வர  என்ன  இருக்கு???

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

இது போன்ற  சந்தேகங்களும்

நம்பிக்கையீனங்களும்  எல்லோருக்குமுண்டு??

ஆனால்  இதைவிட  வேறு தருணங்கள் தமிழருக்கு கிடைக்கப்போவதில்லை?

எனவே இதையாவது  ஒரு  துரும்பாக பிடித்து  நகர்வதே  சாலச்சிறந்தது

இப்படியான நகர்வினால்  தமிழருக்கு ஏதும்  பாதிப்புக்கள்  இனி  இப்பொழுதைவிட  வர  என்ன  இருக்கு???

எங்கள் விசுகு அண்ணாவுக்கு கேள்விக் குறிகளில் அதீத மோகமோ? 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

எங்கள் விசுகு அண்ணாவுக்கு கேள்விக் குறிகளில் அதீத மோகமோ? 😃

100 வீதம் உறுதியாக  சொல்லமுடியாதவைகளுக்கு  மட்டும்?

😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

கோத்தாவையும், ராஜபக்ஷ வம்சத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்த போர்க்குற்ற விசாரணைகளை ஒரு பயமுறுத்தும் கருவியாகப் மேற்குலகு பாவிக்குமேயன்றி, ஒருபோதும் அதனைப் பாவித்துத் தண்டிக்கப்போவதில்லை. அதை ஒருமுறை பாவித்துவிட்டால், இவர்கள் மேலான தமது பிடி போய்விடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  ஆகவே, ஒருபோதும் பாவிக்கப்படாது.

அதுபோல, இந்தியா ஒருபோதுமே ராஜபக்ஷேக்கள் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால், ராஜபக்ஷேக்களைத் தண்டிக்கும் விசாரணைகளில் இந்தியாவின் பங்கும் வெளிவரலாம். இது இந்திய அரசுக்கு சர்வதேச ரீதியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, ஐ நா மனிதவுரிமைக் கவுன்சில் கூட்டங்களில் தீர்மானங்களை வலுவிழக்கப் பண்ணியதுபோலவோ அல்லது இலங்கைக்கு ஆதவான நிலைப்பாட்டை எடுத்ததுபோல விசாரணைகக் குழப்பவே இந்தியா முயலும்.

நாமும் இன்னொருமுறை மிக இலகுவாக ஏமாற்றப்படப்போகிறோம். 

மனித பெலத்திற்கு அப்பாற்பட்டதும் ஒன்று உண்டு. அது ஆரம்பித்தால் யாரும் எதிர்த்து நிற்க முடியாது. எல்லா நாடுகளுக்கும் தெரியும், இலங்கையில் நடந்தது இனவழிப்பு என்பதும்  ஆனால் இந்தியா என்கிற சகுனி தனது பிராந்திய நலனுக்காக அதை மறைத்து தனக்கு சாதகமாக்கியதையும் அறியும்.  அதே சந்தர்ப்பத்தை இந்தியாவில் உருவாக்கி நீதியை நிலைநாட்ட காலம் வரும். ஏற்கெனவே உடைந்த இந்தியா இன்னும் உடைவதில் வியப்பேதுமில்லையே.  வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்திலேயே உண்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.