Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்?

  • சுபம் கிஷோர்
  • பிபிசி செய்தியாளர்
26 ஜூலை 2022, 01:51 GMT
 
இந்திய குடியுரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்கள் "சொந்த காரணங்களுக்காக" குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை விட்டுள்ளனர். 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடாவின் குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

சீனாவில் வசிக்கும் 300 பேர் அந்த நாட்டின் குடியுரிமையையும், 41 பேர் பாகிஸ்தான் குடியுரிமையையும் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் குடியுரிமையை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 85,256 ஆகவும், 2019 ஆம் ஆண்டில், 144,017 ஆகவும் உள்ளது.

2015 மற்றும் 2020 க்கு இடையில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குடியுரிமையை கைவிட்டனர். 2020 ஆம் ஆண்டில் இந்தப்போக்கில் குறைவு ஏற்பட்டது. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள காரணம் கொரோனா என்று நம்பப்படுகிறது.

"இந்த முறை எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பணிகள் முடங்கியதால் குடியுரிமை பெற முடியாத சிலருக்கு இந்த ஆண்டு குடியுரிமை கிடைத்துள்ளது,"என்று வெளிநாட்டு விவகார நிபுணர் ஹர்ஷ் பந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியர்கள் ஏன் குடியுரிமையை கைவிடுகிறார்கள்? நாட்டிற்கு வெளியே வாழும் குடியுரிமையை கைவிட்டவர்கள், கைவிட விரும்புபவர்கள் மற்றும் நிபுணர்களிடம் இந்தப் போக்கு குறித்து பிபிசி பேசியது.

வெளிநாட்டில் வாழ்வதால் பல நன்மைகள்

தனது குடியுரிமை கைவிடப்படுவது அல்லது 'ப்ரெயின் ட்ரெயினை' கட்டுப்படுத்த இந்தியா விரும்பினால், அது பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவில் வசிக்கும் பாவ்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். புதிய வாய்ப்புகள், மேம்பட்ட வசதிகள் மற்றும் இரட்டை குடியுரிமை போன்றவற்றை இந்தியா கருத்தில் கொள்வது அவசியம் என்கிறார் அவர்.

இந்திய குடியுரிமை

பாவனா கடந்த 2003-ம் ஆண்டு வேலை தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருக்கு அங்கு பிடித்துப்போனதால் அங்கேயே குடியேற முடிவு செய்தார். அவரது மகள் அங்குதான் பிறந்தார். பின்னர் அவர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார்.

"இங்கு வாழ்க்கை மிகவும் எளிதாக உள்ளது. வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை விட சிறந்த வாய்ப்புகள் இங்கு கிடைக்கும்."என்று பாவ்னா குறிப்பிட்டார்.

"மேலும், பணிச்சூழல் மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் செய்யும் வேலையின் அளவிற்கு ஏற்ப உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும்."

பணியிட சூழல்

கனடாவில் வசிக்கும் 25 வயதான அபினவ் ஆனந்த், இதே கருத்தைக் கொண்டுள்ளார். அங்கு படிப்பை முடித்த அவர் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வருகிறார். அவர் இன்னும் இந்திய பாஸ்போர்ட்டைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் இந்திய குடியுரிமையை கைவிடத்தயாராக உள்ளார்.

நல்ல பணிச்சூழல் இதற்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார். எனவே அவர் இந்தியாவுக்குத் திரும்பிவர விரும்பவில்லை.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

பட மூலாதாரம்,PATRICK T. FALLON/AFP VIA GETTY IMAGES)

"வேலை நேரம் இங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் விதிகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப உங்களுக்கு ஊதியம் கிடைக்கும். இந்தியாவில் விதிகள் அவ்வளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. அதனால் நான் வேலைக்காக அங்கு செல்ல விரும்பவில்லை. வேறு ஒரு நாட்டில் இருந்துகொண்டு வேலை செய்யவேண்டும் என்றால் அந்த நாட்டின் குடியுரிமையைப்பெறுவதில் என்ன தவறு," என்று அபினவ் வினவுகிறார்.

நல்ல வேலை, அதிக பணம் மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

"பெரிய நாடுகளில் சிறந்த வசதிகள் உள்ளன. ஆனால் பலர் சிறிய நாடுகளுக்கும் செல்கின்றனர். பல சிறிய நாடுகள் வர்த்தகத்திற்காக சிறந்த வசதிகளை வழங்குகின்றன. பலரின் குடும்பங்களும் அத்தகைய நாடுகளில் குடியேறியுள்ளன,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உணர்ச்சிபூர்வ நெருக்கம், நன்மைகள் குறைவு

மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஷ்ரா கடந்த 22 ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வருகிறார். இந்தியாவுடன் உணர்ச்சிபூர்வ நெருக்கம் இருப்பதால் இந்தியாவின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்கிறார் அவர். அவரது மனைவி இஸ்ரேலைச் சேர்ந்தவர். அவரது குழந்தைகள் அங்கு பிறந்து அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளனர்.

இரட்டை குடியுரிமை

பட மூலாதாரம்,STEFANI REYNOLDS/AFP VIA GETTY IMAGES

ஆனால் இந்திய பாஸ்போர்ட் காரணமாக தனக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதாக கூறுகிறார். பெரும்பாலான நாடுகளுக்கு செல்ல தான் விசா பெற வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.

ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்டும் அவர், "எனக்கு லண்டன் செல்ல விசா வேண்டும். ஆனால் உங்களிடம் இஸ்ரேலிய பாஸ்போர்ட் இருந்தால், விசா இல்லாமல் நீங்கள் அங்கு செல்லலாம். எனவே விசாவிற்கு விண்ணப்பிக்க இங்கே அலுவலகம் இல்லை" என்று கூறுகிறார்." விசா முத்திரையைப் பெற இஸ்தான்புல்லுக்குச் செல்லவேண்டும்.அங்கு செல்வதற்கான செலவும் அதிகமாக இருக்கும். இது போன்ற விஷயங்கள் சிரமத்தை அளிக்கின்றன," என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா.

"நான் இந்தியாவுடன் உணர்ச்சிபூர்வமாக மிகவும் இணைந்திருக்கிறேன். ஆகவே நான் குடியுரிமையை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால் அதைத் தவிர என்னை பொறுத்தவரை எந்த நன்மையும் இல்லை." என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய பாஸ்போர்ட்டுடன் இப்போது விசா இல்லாமல் 60 நாடுகளுக்குச்செல்லலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. பாஸ்போர்ட் தரவரிசையில், 199 நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 87வது இடத்தில் உள்ளது.

இரட்டை குடியுரிமை தேவையா?

இரட்டை குடியுரிமை வழங்குவதை இந்தியா கொண்டுவந்தால், குடியுரிமையை கைவிடுபவர்கள் என்ணிக்கை குறையும் என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா.

தான் வேறு நாட்டின் குடியுரிமை பெற முயற்சிப்பதாகவும், ஆனால் வேறு வழி இல்லாமல்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அபினவ் ஆனந்த், கூறுகிறார்.

"நான் பிறந்த நாட்டின் குடியுரிமை எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. எனவே குடியுரிமையை கைவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இரட்டை குடியுரிமை பெறமுடியாததால், இந்திய குடியுரிமையை கைவிட்ட பலரை எனக்குத் தெரியும்,"என்கிறார் அவர்.

பாவனா தற்போது தனது இந்திய குடியுரிமையை கைவிட்டுவிட்டார். அவரிடம் OCI கார்டு உள்ளது . ஆனால் இரட்டை குடியுரிமை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிறார் அவர்.

OCI card

பட மூலாதாரம்,PTI

OIC கார்டு என்றால் என்ன?

இந்தியா இரட்டைக் குடியுரிமை வழங்குவது இல்லை. அதாவது நீங்கள் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெறவிரும்பினால் இந்திய குடியுரிமையை கைவிட வேண்டும்.

OCI கார்டு என்பது வெளிநாட்டில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான சிறப்பு வசதியின் பெயர். OCI என்பது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா( இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்).

உலகின் பல நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வசதி உள்ளது. ஆனால் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அவர் தனது இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் அல்லது கனடா போன்ற நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள இத்தகையவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. ஆனால் இந்தியாவுடனான அவர்களின் தொடர்பு இப்போதும் உள்ளது.

இந்திய குடியுரிமையை கைவிட்ட பிறகு இவர்கள் இந்தியாவுக்கு வர விசா பெற வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, 2003-ல் இந்திய அரசு PIO அட்டையை வழங்கியது.

PIO என்றால், இந்திய வம்சாவளி நபர். இந்த அட்டை பாஸ்போர்ட் போல பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இதற்குப் பிறகு 2006 இல் ஹைதராபாத்தில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் ஓசிஐ கார்டு வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது

நீண்ட காலமாக PIO மற்றும் OCI கார்டுகள் இரண்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆனால் 2015 இல் PIO வழங்குவதை ரத்து செய்து, OCI கார்டை தொடர்வதாக அரசு அறிவித்தது.

OCI இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் எல்லா வகையான பொருளாதார பரிவர்த்தனைகளை செய்வதற்கும் அனுமதிக்கிறது, மேலும் OCI வைத்திருப்பவர் எப்போது வேண்டுமானாலும் விசா இல்லாமல் இந்தியாவிற்கு வரலாம். OCI அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

OCI கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய குடிமக்களைப் போலவே எல்லா உரிமைகளும் உள்ளன என்றும் ஆனால் அவர்களால் நான்கு விஷயங்களைச் செய்ய முடியாது என்றும் இந்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் கூறுகிறது. அந்த நான்கு விஷயங்கள்

  • தேர்தலில் போட்டியிட முடியாது
  • வாக்களிக்க முடியாது
  • அரசு வேலை அல்லது அரசியலமைப்பு பதவியை வகிக்க முடியாது
  • விவசாய நிலத்தை வாங்க முடியாது.

வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரிக்குமா?

தற்போதைய பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, வரும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறையலாம் என்கிறார் பந்த்.

மற்ற நாடுகளின் நிலையை விட இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. இப்போது இங்கு அதிக வாய்ப்புகள் வரும். அதனால் மக்கள் இந்தியாவில் வாழ விரும்புவார்கள். ஆனால், அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் அங்கு குடியுரிமை பெறுவதில் இருந்து பின்வாங்கமாட்டார்கள்," என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-62297251

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2022 at 09:05, ஏராளன் said:

இரட்டை குடியுரிமை வழங்குவதை இந்தியா கொண்டுவந்தால், குடியுரிமையை கைவிடுபவர்கள் என்ணிக்கை குறையும் என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா.

ஒரு பில்லியனுக்கு மேல் மக்கள் உள்ளதால் யார் போனாலும் இன்னொருவரால் நிரப்ப முடியும் என இந்தியா நினைப்பதாக இந்தியர் ஒருவர் கூறினார்.
அத்தோடு இந்திய கடவுச்சீட்டை திருப்பி  கொடுக்கும் போது(கைவிடும் போது)  குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க  வேண்டும் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
சொத்துக்கள் உள்ளவர்கள் இரட்டை குடியுரிமையை அதிகம் விரும்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு இடத்தில் தொடுப்பு வைத்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. 🤓

இவர்களுக்கு வெளிநாட்டு சகல வசதிகளும் வேணும், அதே நேரம் பிறந்த நாட்டில் சகல உரிமைகளும் வேணுமென்டால், இந்தியாவில் இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள் எல்லாம் பேயன்களா? 😡

'போனமா.. செல்வத்தை.. கல்வியை ஈட்டினோமா.. திரும்பி வந்தோமா..' என இருக்கோணும், அப்படி வாழ விருப்பமில்லை என்றால், வாய்ப்பிருந்தால் வசதிகளை தேடிப்போன இடத்திலேயே எஞ்சிய வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்ளுங்கள், யாரும் குறை சொல்லப்போவதில்லை, ஏனெனில் இங்கே திறமையான மனிதவளம் மிக அதிகம், பிறந்த பூமிக்கும் அவர்களின் சேவை தேவையுமில்லை.🤩

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

நல்ல கருத்து.  👍

குறிப்பாக குஜராத்திகள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைப்பட்டவர்கள். இந்தியாவில் உள்ள சொத்தை விடுவதில் அவர்களுக்கு பெரிய கவலை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு விடையமும் இல்லை

வெளிநாட்டு வாழ்கயை வாழ்ந்தவர்கள் ஒரு விடையத்தைப் பழகியிருப்பார்கள் அதாவது தங்களுக்குத் தேவையான அர்ச அலுவலகத்திலோ அன்றேன் உள்ளூராட்சி அலுவலகத்திலோ ஒரு விடையத்தை அல்லது அனுமதி தொடர்பாகவோ செய்து முடிக்கவேண்டுமாகில் அவர்கள் வதியும் நாடுகளில் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றை நாங்களே செய்து முடிக்கலாம் மேலதிகாரிகளுக்கு முன்னால் கூழைக்கும்பிடுபோட்டுக் கைகட்டி வாய்பொத்தி அல்லது தரகர்களிடம் போய் நிற்கவேண்டியதில்லை (அதாவது சட்டவிரோதமான) வெளிநாடுகளில் அனைத்து நடைமுறைகளும் இலகுபடுத்தப்பட்டுள்ளது 

ஆனால் இந்தியாவில் ஒருத்தரைத் தூகூகி உள்ள போடவேண்டுமாகில் ஏதாவது ஒரு கஞ்சா கேசையோ அல்லது பூட்டு ஆட்டல் சட்டத்தையோ பயன்படுத்தி அல்லது போலியான சாட்சியங்களைப் பயன்படுத்தி உள்ளே போட முடியும் 

ஒரு வீடு கட்ட வேண்டுமெனில் மணலோ ஜல்லியோ காணியில் கொண்டாந்து கொட்டினால் வட்டச்செயலாளர் வந்து வீட்டின் முன்னால் நிற்பார் கவுன்சிலர் வேறு வந்து நிற்பார் அனுமதி எடுத்தீர்களா அப்படியென்றால் மாநகரக் கமிசனரைக் கவனிக்க வேண்டும் கவுன்சிலரைக் கவனிக்கவேண்டும் இஞினியரை கவனிக்கவேண்டும் ஒரு பிரச்சனையும் இல்லை எல்லாத்துக்கும் சேர்த்து எனக்கு ஒரு தொகையை வெட்டுங்கோ நான் பார்த்துக்கொள்கிறேன் என்பேர் அதுக்குப்பிறகு இன்னுமொரு கட்சிக்காரர் வருவார். 

ஏன் சென்னை வெள்ளத்தின்போது கருத்துச்சொன்ன கமல்காசனின் வீட்டுத்தெருவின் சாக்கடையை அடைக்கப்பண்ணி தெருவையே நாறடித்தவர்கள்தானே எங்கள் ரத்தத்தின் ரத்தங்கள்

இப்படியான தொந்தரவுகள் இல்லாது பழகிப்போனால் திரும்பவும் இந்தியாவுக்கு வர எவருக்கும் மனம் வராது. தவிர பாடசாலைகளில் பிள்ளைகளின்மேல் கொடுக்கப்படும் சுமை சொல்லிமாளாது. இவைகளைத் தவிர்க்கவே ஒரு சாதாரண இந்தியன் முயல்கிறான்.

உதாரணத்துக்கு

உடுவில் பிரதேச செயலகத்தில் எனது வீட்டுக்கு மின் இணைப்பு தொடர்பாக பிரதேச செயலரிடம் ஒரு கையெழுத்து வாங்கப்போயிருந்தேன் அப்போது பிரதேச செயலர் அலுவலகத்தில் இல்லை இங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் பிரதம எழுத்தாளர் இருக்கிறார் அவரிடம் போய் கதையுங்கோ விசயத்தைச் சொல்லி விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் கையெளுத்து வாங்கி வைப்பர் என. அங்கு போனால் ஒரு நடுத்தர வயது கடந்த அம்மையார் இருந்த்தார் நான் விசையத்தை விளக்கமாகச் சொன்னேன் 

அதாவது எனது வீட்டுக்கு மின்சாரம் வர இரண்டு போஸ்ற் நடவேண்டும் அனால் ஒரு போஸ்ருடன் விசையத்தை முடிக்கிறதெண்டால் பக்கத்துவீட்டுக்காரரின் கணிக்குள்ளால வயர் வருகுது நான் அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கிப்போட்டன் நீங்கள் ஒருக்கால் கையெளுத்தை வாங்கித்தாங்கோ என 

அவர் சொன்னார் இது சரிவராது ஏன் என்றால் தற்காலிகமாக அனுமதிக்கிறேன் எனப் போட்டிருக்கு  நிரந்தரமாக அனுமதி எனக்கடிதம் தாங்கோ என நான் சொன்னேன் மின்சார சபையிடம் இப்ப ஒரு போஸ் போடக்கூடைய வளம்தான் இருக்கு இரண்டு போஸ்ருக்கு நீண்ட நாள் காவல் இருக்கவேண்டும் நான் வெளிநாட்டிலை இருந்து ஒருமாத லீவில வந்திருக்கிறன் பக்கத்துவீட்டுக்காரன் வயரைக் களட்டச்சொன்னால் நான் களட்டுறன் அதுவரைக்கும் அனுமதி தாங்கோ என

அதுக்கு அந்த அம்மா சொன்னா நீங்கள் கனக்கக் கதைக்கிறியள் உங்களுக்கு அனுமதி தரமுடியாது என. இப்ப தெரியுதா வளர்ச்சி அடைந்த நாடுகளது நிர்வாகத்துக்கும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளது நிர்வாகத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் இலகுவான நடைமுறையையும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ரெண்டு இடத்தில் தொடுப்பு வைத்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. 🤓

இவர்களுக்கு வெளிநாட்டு சகல வசதிகளும் வேணும், அதே நேரம் பிறந்த நாட்டில் சகல உரிமைகளும் வேணுமென்டால், இந்தியாவில் இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள் எல்லாம் பேயன்களா? 😡

'போனமா.. செல்வத்தை.. கல்வியை ஈட்டினோமா.. திரும்பி வந்தோமா..' என இருக்கோணும், அப்படி வாழ விருப்பமில்லை என்றால், வாய்ப்பிருந்தால் வசதிகளை தேடிப்போன இடத்திலேயே எஞ்சிய வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்ளுங்கள், யாரும் குறை சொல்லப்போவதில்லை, ஏனெனில் இங்கே திறமையான மனிதவளம் மிக அதிகம், பிறந்த பூமிக்கும் அவர்களின் சேவை தேவையுமில்லை.🤩

நல்லதொரு கருத்து எல்லா நாட்டவருக்கும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

ரெண்டு இடத்தில் தொடுப்பு வைத்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. 🤓

இவர்களுக்கு வெளிநாட்டு சகல வசதிகளும் வேணும், அதே நேரம் பிறந்த நாட்டில் சகல உரிமைகளும் வேணுமென்டால், இந்தியாவில் இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள் எல்லாம் பேயன்களா? 😡

'போனமா.. செல்வத்தை.. கல்வியை ஈட்டினோமா.. திரும்பி வந்தோமா..' என இருக்கோணும், அப்படி வாழ விருப்பமில்லை என்றால், வாய்ப்பிருந்தால் வசதிகளை தேடிப்போன இடத்திலேயே எஞ்சிய வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்ளுங்கள், யாரும் குறை சொல்லப்போவதில்லை, ஏனெனில் இங்கே திறமையான மனிதவளம் மிக அதிகம், பிறந்த பூமிக்கும் அவர்களின் சேவை தேவையுமில்லை.🤩

இந்தியா இலங்கை பங்களாதேஷ் இன்னும் பல ஆசிய நாடுகள் மனித வளத்தை தொலைக்கும் நாடுகள் மேற்கு நாடுகளுக்கு மனித வளத்தின் பெறுமதி தெரிந்தவர்கள் எங்களை எல்லாம் கருணை அடிப்படையில்தான் அகதி அந்தஸ்த்து தந்தார்கள் என்றா நினைகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இந்தியா இலங்கை பங்களாதேஷ் இன்னும் பல ஆசிய நாடுகள் மனித வளத்தை தொலைக்கும் நாடுகள் மேற்கு நாடுகளுக்கு மனித வளத்தின் பெறுமதி தெரிந்தவர்கள் எங்களை எல்லாம் கருணை அடிப்படையில்தான் அகதி அந்தஸ்த்து தந்தார்கள் என்றா நினைகிறீர்கள்?

இல்லை.

நான் சொல்ல வந்த விடயம், ஒருவர் ஒரு நாட்டின் பிரஜையாக மட்டுமே விசுவாசமாக வாழ அனுமதிக்க வேண்டும். வசதியை விரும்பியோ அல்லது வேறொரு காரணத்துக்காகவோ அயல்நாட்டை தாயகமாக ஏற்றுக்கொண்ட பின், 'ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்' என வைத்துக்கொண்டு இரண்டு நாடுளுக்கும் 'பெப்பே' காட்டுவதை அனுமதிக்கக் கூடாது.

ஆசை படலாம், பேராசை கூடாது.

திறமை, வசதி, etc..etc..etc.. இருந்தால் பிறந்த நாட்டை விட்டு, வேறு நாட்டு பிரசையாக தாராளமாக மாறிக்கொள்ளட்டும், மகராசனாக போய் வாழட்டும், யாரும் வருந்தவில்லை, தடுக்கவில்லை.. ஆனால் இங்கே திரும்பி வர நினைக்கக் கூடாது.

தங்களுக்கு துட்டும், வசதியும் வேணும், தாங்கள் புத்திசாலிகளென நினைத்து, இங்கேயும் வந்து துரைத்தனமும் காட்டவும், எல்லா உரிமைகளும் அனுபவிக்க வேணுமென்டால், பிறந்த நாட்டில் பல்வேறு இன்னல்களை, அரசியல், சமுதாய சிக்கல்களை சகித்துக்கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களா? 😡

இம்மாதிரி ஆட்களுக்கு OCI தகுதி கொடுப்பதையே நிறுத்த வேண்டும். 'பிறந்த நாட்டை துறந்தவர்கள், இனி மற்றவர்களைப் போல அவர்களும் வெளிநாட்டவரே..' என்ற வகையில்தான் கண்டிப்பு காட்டப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த OCI ஆட்களின் 'அலப்பறை'யை சில மாதங்களுக்கு முன் நேரில் கண்டேன்..!

நான் கொரானா பி.சி.ஆர் டெஸ்ட் (PCR Test) எடுக்க, சென்னை அமைந்தகரையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றேன்.

காலை ஏழரை மணியிருக்கும். பரிசோதனைக்கு சுமாரான கூட்டம் ஏற்கனவே இருந்தது. எனக்கு முன் ஒரு "அரை டவுசர்" குடும்பம், இவர்கள் அமெரிக்க குடியுமை பெற்றவர்கள், தகவல் தொழிற்நுட்ப துறையில் இருப்பவர்களாம்..! (பெரியவருக்கு 55 வயதிருக்கும், அம்மணிக்கு 50, சிறுவர், சிறுமிக்கு 18க்கு மேல்) வரிசையில் காத்திருந்தது.

காத்திருக்கும் ஹாலில் இருக்கைகள் கம்மி, நின்று கொண்டிருந்தோம். OCI குடும்பத்தின் உடையும், பேச்சு தோரணையும், மொத்த குடும்பமும் பொறுமையில்லாமல் அடித்த லூட்டிகள், பந்தாக்களை கண்டு அங்கிருந்தவர்களே முகம் சுளித்தார்கள்.

முடிவில் கவுண்டரில் இருந்த நர்ஸ், இவர்களை கூப்பிட்டு 'போய்த் தொலையுங்கள்' என சோதனைக்கு வரிசையிலிருந்து முன்னுரிமை கொடுத்து முடித்து அனுப்பி வைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ராசவன்னியன் said:

 "அரை டவுசர்" குடும்பம்.  நல்ல பொருத்தமான வர்ணனை. ரசித்து சிரித்தேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 "அரை டவுசர்" குடும்பம்.  நல்ல பொருத்தமான வர்ணனை. ரசித்து சிரித்தேன். 😁

Sorry சிறி, ஒரு கடுப்பில் எழுதியது. 😛

பிறந்த நாட்டுக்கு வந்தோமா, அந்த நாட்டின் பழக்க, வழக்கங்களுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றி நடந்துகொள்ள வேண்டும்.

மாடு மாதிரி வளர்ந்த பின், அரை டவுசர் மாட்டிக்கொண்டு, கிழடுகள் (ஆணும், பெண்ணும்) சோல்ஜனா பையை மாட்டிக்கொண்டு, இங்கிருப்பவர்களை விநோதமாக, அலட்சிய பார்வையில் நோக்கி, தாங்கள் ஏதோ அந்நிய கிரகத்திலிருந்து குதித்தவர்கள் போல இங்கே திரிவது நல்லாவா இருக்கு..? 🤔

இவர்களின் பூர்வீகத்தை விசாரித்துப் பார்த்தால், ஏதாவது கட்டையாம்பட்டி, நொட்டையாம்பட்டியாக இருக்கும்! 🤗

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

புரிந்தது... ராஜவன்னியன்.
அற்பனுக்கு... பவுசு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்.
இதே.. நிலை, நம் நாட்டிலும் உள்ளது.

அதுகும்... இப்ப, நல்லூர் திருவிழா நடக்கின்ற நேரம் நடக்கின்ற கூத்துகள் ஏராளம்.
அளவுக்கு அதிகமான நகைகளை... ஆண்களும்
மாட்டிக் கொண்டு செய்கின்ற, அலப்பறை கொஞ்ச நஞ்சமல்ல. 

போர் நடந்த பூமியில்... மக்கள் உயிர் இழப்பு, பொருள் இழப்புகளை சந்தித்து...
சொல்லமுடியாத துயரத்தில் இருக்கும் போது...
அவர்கள் முன், இந்த வெளிநாட்டவர்  நடக்கும் முறை மிகக் கேவலமானது. 😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

மாடு மாதிரி வளர்ந்த பின், அரை டவுசர் மாட்டிக்கொண்டு, கிழடுகள் (ஆணும், பெண்ணும்) சோல்ஜனா பையை மாட்டிக்கொண்டு, இங்கிருப்பவர்களை விநோதமாக, அலட்சிய பார்வையில் நோக்கி, தாங்கள் ஏதோ அந்நிய கிரகத்திலிருந்து குதித்தவர்கள் போல இங்கே திரிவது நல்லாவா இருக்கு..? 🤔

இவர்களின் பூர்வீகத்தை விசாரித்துப் பார்த்தால், ஏதாவது கட்டையாம்பட்டி, நொட்டையாம்பட்டியாக இருக்கும்! 🤗

வணக்கம் ராசவன்னியர்! நீங்கள் எழுதிய சம்பவங்கள் அனைத்தும் ஒரு அச்சு பிசகாமல் இலங்கையிலும் தாராளமாக உண்டு.இதை அவ்வப்போது மேட்டுக்குடிகள் என்றும் சொல்வோம்.
இவையின்ரை அலப்பறைகளை பார்க்கிறவன் இரத்தம் கக்கியே சாவான்.அவ்வளவு கொடுமையாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2022 at 09:15, ராசவன்னியன் said:

ரெண்டு இடத்தில் தொடுப்பு வைத்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது. 🤓

இவர்களுக்கு வெளிநாட்டு சகல வசதிகளும் வேணும், அதே நேரம் பிறந்த நாட்டில் சகல உரிமைகளும் வேணுமென்டால், இந்தியாவில் இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள் எல்லாம் பேயன்களா? 😡

'போனமா.. செல்வத்தை.. கல்வியை ஈட்டினோமா.. திரும்பி வந்தோமா..' என இருக்கோணும், அப்படி வாழ விருப்பமில்லை என்றால், வாய்ப்பிருந்தால் வசதிகளை தேடிப்போன இடத்திலேயே எஞ்சிய வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்ளுங்கள், யாரும் குறை சொல்லப்போவதில்லை, ஏனெனில் இங்கே திறமையான மனிதவளம் மிக அதிகம், பிறந்த பூமிக்கும் அவர்களின் சேவை தேவையுமில்லை.🤩

ஆனால் பெரும் அந்நிய செல்வணிகளை கொண்டுவந்து 
செல்வழிக்கும்போது அது இந்தியாவுக்கு நல்லதுதானே?

இரட்டை குடியுரிமை இந்தியாவுக்கு நன்று என்றே எண்ணுகிறேன் 
மிகவும் தரமான  வயோதிபர் மடங்களை இப்போதே அமைத்து செயல்படுத்தினால் 
பின்னாளில் அவர்கள் இந்தியாவில் வாழவே விரும்புவார்கள் அப்போது பெரும்பாலான சேமிப்பை 
கொண்டு வருவார்கள் 

தமிழ் ஈழத்தை பொறுத்தவரை இது சிக்கலானதாகவே அமையும் 
காரணம் மிகவும் குறிகிய நிலப்பரப்பை வெளிநாட்டு தமிழர்கள் 
காணிகள் வாங்கி குவிப்பதால் விலைவாசி ஏறி ... உள்ளூர் மக்களால் 
காணி கொள்வனவை எட்டியும் பார்க்க முடியாதா நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

ஆனால் பெரும் அந்நிய செல்வணிகளை கொண்டுவந்து 
செல்வழிக்கும்போது அது இந்தியாவுக்கு நல்லதுதானே?

இரட்டை குடியுரிமை இந்தியாவுக்கு நன்று என்றே எண்ணுகிறேன் 
மிகவும் தரமான  வயோதிபர் மடங்களை இப்போதே அமைத்து செயல்படுத்தினால் 
பின்னாளில் அவர்கள் இந்தியாவில் வாழவே விரும்புவார்கள் அப்போது பெரும்பாலான சேமிப்பை 
கொண்டு வருவார்கள் 

தமிழ் ஈழத்தை பொறுத்தவரை இது சிக்கலானதாகவே அமையும் 
காரணம் மிகவும் குறிகிய நிலப்பரப்பை வெளிநாட்டு தமிழர்கள் 
காணிகள் வாங்கி குவிப்பதால் விலைவாசி ஏறி ... உள்ளூர் மக்களால் 
காணி கொள்வனவை எட்டியும் பார்க்க முடியாதா நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள் 

இல்லை, இந்தியர்களின் மனநிலையை/குணத்தை சரிவர புரியாமல் சொல்லுகிறீர்களென எண்ணுகிறேன். அவர்களின் பேராசைக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் அளவில்லை.

அதுவும் சில ஆண்டுகள் வசதியாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டால் போதும், அவர்களின் மூளை, மூக்கிற்கு வந்துவிடும்.

உதாரணத்திற்கு, கடந்த ஏப்ரலில் சிங்கப்பூர் சென்று 3 வாரங்கள் இருந்தேன்.

அப்போது சில இந்திய தமிழர்களை சந்திந்து பேசும் வாய்ப்பு கிட்டியது. அவர்களில் சிலர் நிரந்தர வதிவிடமும்(PR), சிலர் அந்நாட்டு பிரசையாகவும்(Citizens) வாழ்கின்றனர். அவர்களின் பார்வையில், அங்கே வேலை அனுமதி பெற்ற(Work Permit) சக தமிழர்களை அலட்சியமாக பார்க்கும் மனநிலையிலும், கர்வத்துடனுமே  இருக்கிறார்கள்.

இந்தியர்களின் வளர்ப்பு அப்படி..!  மாறாதையா மாறாது, மனமும் குணமும் மாறாது..!! 🤗

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.