Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

aincome & Tax filing என்பது tax department டுடன் தொடர்புடையது. இதில் நாதம்ஸ் கூறியதில் என்ன பிழை ? 

கோசான் வாழ்க்கையிலேயே tax filing செய்யாதவரோ , 

நான் மேலே tax file பண்ணுவதை பற்றி நாதம் கூறியதை பிழை என்று சொல்லவில்லையே கற்பஸ். 

  • Replies 118
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் மேலே tax file பண்ணுவதை பற்றி நாதம் கூறியதை பிழை என்று சொல்லவில்லையே கற்பஸ். 

நானும் வேறு எதைப்பற்றியும் கூறவில்லையே ? 

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவை வரி விசாரணையில் இருந்து அவர்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் கன்சேவேடிவ் கட்சி காப்பாற்றுகிறது என்பதற்கான சில பதிவுகள்.

இது பாராளுமன்றில்

https://www.civilserviceworld.com/professions/article/nicky-morgan-demands-hmrc-chief-jon-thompson-respond-to-lycamobile-concerns

இது லைக்காவை கன்சேவேடிவ் தொடர்புகள் மூலம் ரெய்ட் ஆகாமல் தடுத்தது பற்றிய செய்தி

https://www.buzzfeed.com/amphtml/heidiblake/uk-refused-to-raid-lycamobile-citing-its-tory-donations

இது லைக்காவின் வரி ஏய்பு (இங்கே வெள்ளை அடிப்பது போல சாதாரண tax file பண்ணுவதில் ஏற்படும் தாமதம் அல்ல) பற்றிய செய்தி

https://amp.theguardian.com/money/2020/feb/02/major-tory-donor-lycamobile-embroiled-in-three-disputes-with-hmrc

4 minutes ago, Kapithan said:

நானும் வேறு எதைப்பற்றியும் கூறவில்லையே ? 

அப்படி எண்டால் சரி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

லைக்காவை வரி விசாரணையில் இருந்து அவர்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் கன்சேவேடிவ் கட்சி காப்பாற்றுகிறது என்பதற்கான சில பதிவுகள்.

இது பாராளுமன்றில்

https://www.civilserviceworld.com/professions/article/nicky-morgan-demands-hmrc-chief-jon-thompson-respond-to-lycamobile-concerns

இது லைக்காவை கன்சேவேடிவ் தொடர்புகள் மூலம் ரெய்ட் ஆகாமல் தடுத்தது பற்றிய செய்தி

https://www.buzzfeed.com/amphtml/heidiblake/uk-refused-to-raid-lycamobile-citing-its-tory-donations

இது லைக்காவின் வரி ஏய்பு (இங்கே வெள்ளை அடிப்பது போல சாதாரண tax file பண்ணுவதில் ஏற்படும் தாமதம் அல்ல) பற்றிய செய்தி

https://amp.theguardian.com/money/2020/feb/02/major-tory-donor-lycamobile-embroiled-in-three-disputes-with-hmrc

அப்படி எண்டால் சரி 🤣

வரி ஏய்ப்பு க்கும் வரி தாமதித்துக் கட்டுதல் என்பதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. 

ஆனால் வியாபார உலகில் இவை எல்லாமே சர்வ சாதாரணமானவை. 

நாங்கள் மட்டுமே இதனை சாதாரண மனித வாழ்க்கையுடன்(ஒழுக்கத்துடன்)  கலந்து பார்க்கின்றோம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

வரி ஏய்ப்பு க்கும் வரி தாமதித்துக் கட்டுதல் என்பதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. 

ஆனால் வியாபார உலகில் இவை எல்லாமே சர்வ சாதாரணமானவை. 

நாங்கள் மட்டுமே இதனை சாதாரண மனித வாழ்க்கையுடன் கலந்து பார்க்கின்றோம். 

சாதரண  வரி தாமதித்து கட்டுதலுக்கும், வேணும் எண்டே வரியை கட்டாமல் விட்டு அதன் மூலம் unjust enrichment அடைவதற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

குறிப்பாக சாதாரணமாக ஐந்துக்கும் பத்துக்கும் tax return பண்ணும் சாதாரண மனிதர்களை போலன்றி, பெரு நிறுவனங்களாக இருப்பவர்களுக்கு இருக்கும்  வரி சம்பந்தபட்ட corporate responsibility வேறு விதமானது. அது PLC என்றால் என்ன LTD என்றால் என்ன.

நாம் எமது சின்ன லெவல் tax return விளக்கத்தை வைத்து இதை அணுக கூடாது.

இப்படி ஒரு சின்ன விடயமாக இருந்தால் பிரிதானிய பாரளுமன்ற தெரிவு குழுவும், அரச திணைக்களங்களும் இதில் மினக்கெடாது என்பதும் வெளிப்படை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

சின்ன லெவல் tax அல்ல விடயம். Tax மட்டுமல்ல, இந்த  systemமே அப்படித்தான் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதுவும் பெரு முதலாளிகள், வசதிபடைத்தோர் சார்பாக.

Canada வந்திருந்த ஆரம்பத்திலிருந்தே வாகன காப்புறுதி மோசடிகள் தொடர்பாக என்றுமே எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் எப்போது வாகனம் எடுத்தேனோ அப்போதுதான்  புரிந்தது அடித்தட்டு மக்கள் இந்த வேலையை ஏன் செய்கிறார்களென்று.

அந்த அளவு வாகனத்திற்கான காப்புறுதிக் கட்டணம். மாதாந்த வருமானத்தில் 25%ற்கும் அதிகமாகவே கட்டுகிறார்கள். 

இதுவும் அதுபோலத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

(லைக்க ஞான, லிபாரா, France என்று கடந்த காலத்தையும் தோண்ட வெளிக்கிட்டால்  ஊரில் இருந்துதான் தொடங்க வேண்டும் கோசான். அப்பிடிப்பார்த்தால் ஒருவருமே மிஞ்சப்போவதில்லை 😉)

இதைதான் எல்லா மட்டைகாராரும் சொல்லுவது கற்ப்ஸ்.

சொல்ல போனால் தொடர்ந்து எமது புலம்பெயர் சமூகத்தில் “என்ன செய்தாவது காசு உழைத்தால் போதும்” என்ற மனநிலை உருவாக இந்த மாதிரியான சப்பை கட்டல்களே காரணம் ஆகிறது.

இப்போ லண்டனில் தமிழ் இளையோர் மத்தியில் நல்ல காசு பார்க்கும் தொழில் என்றால் கஞ்சா வியாபாரம்தான். அனைவரும் இங்கே பிறந்த பிள்ளைகள்.

இவர்களின் குடும்பங்களை ஆராய்ந்தால் - அங்கே இப்படி பட்ட ஒரு அணுகுமுறை இருப்பதை காணலாம்.

ஏனையோர் பற்றி எனக்கு தெரியாது - ஆனால் களவு, திட்டமிட்டே வங்குரோத்தாகும் களவு, ஏமாற்று வேலை, போதை பொருள், மட்டை, வரி ஏய்பு என்று பார்த்தால் நான் நிச்சயம் மிஞ்சுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

இந்த “தலைவர் வந்தோன சேர்த்த காசை திருப்பி தருவேன்” காறர் மாரி முதல்லையே எதை எல்லாம் சொல்லக்கூடாது எண்டு லிஸ்ட் போட்டுட்டு - சொல்லுங்கோ எண்டால் எப்படி நாதம்🤣.

பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்பிடுவான்.

இன்னும் லைக்கா அள்ளி, அள்ளி கொடுக்கிற கன்சேவேடிவ்தான் ஆட்சியில் இருக்கு. அவர்கள் லைக்காவை விசாரணையில் இருந்து பாதுகாப்பதாக பாராளுமன்றிலேயே கூறப்பட்டுள்ளது. எப்படியும் ஆட்சி மாறும் - அப்ப வெளிவரும் அவசரம் வேண்டாம்.

அடுத்து நான் எதையும் நிறுவ வேண்டியதில்லை நாதம். நீங்களே நிறுவி விட்டீர்கள் 👇.

 மேலே நீங்கள் சொன்ன வரியை இழுத்தடிப்பு செய்வது வித்தை அல்ல. அதுவும் களவுதான். ஒரு ஆஸ்பத்திரிக்கு, பள்ளிகூடத்துகு போக வேண்டிய பணத்தை அவர் வருட கணக்கில் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறார் என்றால் அதை விட ஈனத்தனம் வேறு இருக்குமா?

இழுத்தடிப்பது, அரசின் நேரத்தை வீணடிப்பது, பிறகு கொஞ்சம் fine ஐ கட்டி விட்டு காசை கொடுப்பது. ஆனால் அந்த காலத்தில், கொடுக்க வேண்டிய காசு fine ஐ விட பல மடங்கு வளர்ந்திருக்கும்.

இது பக்கா களவு.

கிரெடிட் கார்ட் மோசடி செய்வோம். பிடிபட்டால் 3 வருடம்தான் உள்ளே. செய்யும் களவுக்கு அது ஒக்கே என்று கணக்கு போடும் களவுக்கும் இதுக்கும் ஒரு வேறுபாடுமில்லை.

ஆனால் இதை எல்லாரும் செய்யினம் என சப்பை கட்டு கட்ட வேண்டாம். நேர்மையான பலர் உள்ளர்கள்.

ஆனால் நான் எழுதியது லைக்காவின் இப்போதைய வரி ஏய்பு பற்றி அல்ல. அவர்களின் ஆரம்பம் பற்றி. 

ஒரு அரசியல் கட்சிக்கு பணம் கொடுப்பது வேறு, வரித்துறை வேறு என்பது புரியாதவர் அல்ல நீங்கள்.

எதை வைத்து சொல்கிறீர்கள், "எப்படியும் ஆட்சி மாறும் - அப்ப வெளிவரும் அவசரம் வேண்டாம்." என்று?

இது இலங்கை அல்ல. பிரதமரே, வீட்டில் விருந்து கொடுத்தார் என்று, போலீஸ் விசாரணைக்கு உள்ளாகி, தண்டம் விதித்த நாடு.

Quote

CV யில் பொய் சொல்லுவது, வேலை தந்தவருக்கு எப்படி வெடி வைப்பது, ரணில் ஜனாதிபதியானது விடா முயற்சி - இப்படி நம்மிருவரின் moral compass எதிரும் புதிருமாக இருப்பது இது முதல்தடவை அல்லவே நாதம். இதையும் அதில் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

ஆகா... நீண்ட நாளுக்கு பின்னர், என், பழைய கூட்டாளியை சந்திக்கிறேன். ஆனாலும் எனக்கு பழைய நிலைக்கு போக விருப்பம் இல்லை.

வரியை தாமதமாக கட்டுவது,பக்கா களவு என்றால், உங்கள் புரிதல் குறித்து சொல்ல எதுவும் இல்லை.

ஆகவே.... நகர்கிறேன். வேறு திரியில் சந்திப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சின்ன லெவல் tax அல்ல விடயம். Tax மட்டுமல்ல, இந்த  systemமே அப்படித்தான் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதுவும் பெரு முதலாளிகள், வசதிபடைத்தோர் சார்பாக.

Canada வந்திருந்த ஆரம்பத்திலிருந்தே வாகன காப்புறுதி மோசடிகள் தொடர்பாக என்றுமே எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் எப்போது வாகனம் எடுத்தேனோ அப்போதுதான்  புரிந்தது அடித்தட்டு மக்கள் இந்த வேலையை ஏன் செய்கிறார்களென்று.

அந்த அளவு வாகனத்திற்கான காப்புறுதிக் கட்டணம். மாதாந்த வருமானத்தில் 25%ற்கும் அதிகமாகவே கட்டுகிறார்கள். 

இதுவும் அதுபோலத்தான். 

களவு எங்கு நடந்தாலும் களவுதான்.

இங்கே சோசல் காசை கொள்ளை அடிப்போர் பலர் லைக்கா போன்ற பெரு முதலாளிகளை காட்டி தம்மை நியாயப்படுத்துவார்கள்.

பெரும் முதலாளிகளும் அவர்களின் அடிபொடிகளும் சோசல் காசில் இருப்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என சொல்லி, கவனத்தை திசை திருப்பி விட்டு தாம் மில்லியன், பில்லியன் கணக்கில் சுத்துவார்கள்.

ஆனால் இருவருமே கெட்ட சயனட்டுகள்தான்.

இப்படி பட்டவர்கள் ஒரு நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க அந்த நாடு இந்தியா போல மாறிவிடும்.

இந்த நாடுகளின் வளமான வாழ்க்கைக்கு அடிப்படை சட்டம், ஒழுங்கு, ஒழுங்கான வரி செலுத்தல் போன்றவைதான்.

அல்லது இந்தியா, ரஸ்யா போல கொள்ளையர்களின் கூடாரமாகிவிடும் நாடு.

இந்தியன் படத்தில் சொன்னதுதான்.

1 minute ago, Nathamuni said:

ஒரு அரசியல் கட்சிக்கு பணம் கொடுப்பது வேறு, வரித்துறை வேறு என்பது புரியாதவர் அல்ல நீங்கள்.

எதை வைத்து சொல்கிறீர்கள், "எப்படியும் ஆட்சி மாறும் - அப்ப வெளிவரும் அவசரம் வேண்டாம்." என்று?

இது இலங்கை அல்ல.

இது இலங்கை அல்ல - என்ற எமது நம்பிக்கையை வெகுவாக உடைத்தது இந்த கன்சேவேடிவ் ஆட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

டேவிட் கமரென் செய்த களவுகள் வெளிவருவதை வாசித்திருபீர்கள். மேலே நான் தந்த இணைப்பு வடிவாக விளக்குகிறது, எப்படி லைக்கா மீதான விசாரணையை முடக்க பார்த்தார்கள் என.

4 minutes ago, Nathamuni said:

ஆகா... நீண்ட நாளுக்கு பின்னர், என், பழைய கூட்டாளியை சந்திக்கிறேன். ஆனாலும் எனக்கு பழைய நிலைக்கு போக விருப்பம் இல்லை.

வரியை தாமதமாக கட்டுவது,பக்கா களவு என்றால், உங்கள் புரிதல் குறித்து சொல்ல எதுவும் இல்லை.

ஆகவே.... நகர்கிறேன். வேறு திரியில் சந்திப்போம்.

எனக்கும் அதில் விருப்பமில்லை. ஆனால் நான் லைக்காவை பற்றி ஒரு வரி எழுத நீங்கள்தான் ஆக்ரோஷமாக ஓடி வந்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கினீர்கள்.

தவிரவும் எனக்கும் உங்களுக்குமான moral compass வித்தியாசம் நிதர்சனமானதே. அதை பல திரிகளில் இருவரும் உணர்ந்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

வரியை தாமதமாக கட்டுவது,பக்கா களவு என்றால், உங்கள் புரிதல் குறித்து சொல்ல எதுவும் இல்லை.

மீண்டும் கற்ப்ஸிடம் சொல்லியதைதான் உங்களிடம் சொல்கிறேன்.

வரியை தாமதித்து கட்டுவது வேறு, அதை திட்டமிட்டு கட்டாமல் விட்டு, இடைப்பட்ட காலத்தில் அந்த பணத்தை முதலிட்டு லாபம் பார்த்து, அதன் பின் பார்த்த லாபத்தை விட மிக சிறிய தொகையை அபரதாம் என கட்டுவது வேறு.

இதில் லைக்கா செய்வதாக சொல்ப்படுவது இரண்டாம் வகை.

நானும் நகர்கிறேன்.

சாமத்திய பட்ட பெட்டை கல்யாணம் முடிக்கும் வரை இந்த திரியை நீள விடாமல்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

சின்ன லெவல் tax அல்ல விடயம். Tax மட்டுமல்ல, இந்த  systemமே அப்படித்தான் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதுவும் பெரு முதலாளிகள், வசதிபடைத்தோர் சார்பாக.

Canada வந்திருந்த ஆரம்பத்திலிருந்தே வாகன காப்புறுதி மோசடிகள் தொடர்பாக என்றுமே எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் எப்போது வாகனம் எடுத்தேனோ அப்போதுதான்  புரிந்தது அடித்தட்டு மக்கள் இந்த வேலையை ஏன் செய்கிறார்களென்று.

அந்த அளவு வாகனத்திற்கான காப்புறுதிக் கட்டணம். மாதாந்த வருமானத்தில் 25%ற்கும் அதிகமாகவே கட்டுகிறார்கள். 

இதுவும் அதுபோலத்தான். 

கோரோனோ காலத்தில், காசை சும்மா அள்ளிக் கொடுத்தார்கள், இனாமாக, கடனாக....

காரணம் பணம் கையில் இருந்தால், பண சுற்று அதிகரித்து, அரச வரி வருமானம் நிலையாக இருக்கும் என்று.

இந்த நாட்டில், சும்மா வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு, கொடுப்பனவு கொடுப்பதன் நோக்கமும் அதுவே.

இப்போது, சகலரும், கொரோனா காலத்தில் வியாபாரம் இல்லை. வரியை கொஞ்சம், கொஞ்சமாக தாமதமாக கட்டுகிறோம் என்கிறார்கள். வரித்துறையும் சம்மதிக்கிறது.

காரணம், வியாபார உலகம் recovery ஆகி, பழைய நிலைக்கு வரவேண்டும் என்று.

இதனை பக்கா களவு என்றால், என்ன சொல்வது?

குறைந்த வட்டியில் அரச கடனை வாங்கி, வீடு, கார் வாங்கி போட்டு, இரண்டு வருடத்தில் நல்ல காசு பார்த்தவர்கள் நம்மவர் மட்டுமல்ல. 

சட்டத்தினுள் என்ன ஆட்டமும் போடலாம்.... விசயம் தெரிந்து ஆடினால்... முட்டாள் தனமாக ஆடி பிடி படாமல் இருக்கும் வரை கெட்டித்தனம் தான்.

சவுத் வூட்போர்ட எனும் இடத்தில, ஒரு பாகிஸ்தானியர் பிடிபட்டுள்ளார். சிறைக்கு அனுப்பி உள்ளனர்.

2020 ஆகஸ்ட் பகுதியில், eat out என்று வெளியில் சாப்பிட்டால் ஆளுக்கு £10 அரசு கொடுக்கும் என்ற திட்டம்.

தனது நாலு curry restaurants களில் வராத ஆட்கள், வந்ததாக, கல்லாபெட்டில ரெசிப்ட் போட்டு, £1.2 மில்லியன் எடுத்து விட்டார்.

இப்போது சிக்கி விட்டார். அந்த பணத்தில் வாங்கிய, லம்போகினி கார், இரண்டு வீடுகள், seize பண்ணி விட்டார்கள். 

அடுத்த தேர்தலில் லேபர் வெல்லுமெண்டால், லைக்கா டபாரெண்டு கட்சி மாறி காசு கொடுக்கும். இது இங்கே பலரும் செய்வது தானே.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

கோரோனோ காலத்தில், காசை சும்மா அள்ளிக் கொடுத்தார்கள், இனாமாக, கடனாக....

காரணம் பணம் கையில் இருந்தால், பண சுற்று அதிகரித்து, அரச வரி வருமானம் நிலையாக இருக்கும் என்று.

இந்த நாட்டில், சும்மா வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு, கொடுப்பனவு கொடுப்பதன் நோக்கமும் அதுவே.

இப்போது, சகலரும், கொரோனா காலத்தில் வியாபாரம் இல்லை. வரியை கொஞ்சம், கொஞ்சமாக தாமதமாக கட்டுகிறோம் என்கிறார்கள். வரித்துறையும் சம்மதிக்கிறது.

காரணம், வியாபார உலகம் recovery ஆகி, பழைய நிலைக்கு வரவேண்டும் என்று.

இதனை பக்கா களவு என்றால், என்ன சொல்வது?

இதை எங்கே களவு என்று சொன்னே. வரியில் மட்டும் அல்ல, வீசாவில் இருப்பவர்கள், இன்னும் பலருக்கு கொரோனா காலத்தில் சில நேர சலுகைகள் (time concessions)  வழங்கப்பட்டன. 

இவை HMRC concessions என்று அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கேட்டால் வழங்கப்படும். அதுவும் குறித்த கால அட்டவணையில் கட்டி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

ஆனால் லைக்காவின் விடயம் கொவிட்ற்கு பல காலம் முந்தியது. தவிர அவர்கள் எந்த concession ஐயும் தமக்கு அப்பிளை பண்ணுமாறு கேட்டதாக தெரியவில்லை. 

அவர்கள் செய்தது, வரியை கட்டாமல், அந்த காசை வைத்து மேலதிக வருமானத்தை பார்த்து விட்டு, பின் சிறிய அபராதத்தை கட்டியது.

11 minutes ago, Nathamuni said:

சட்டத்தினுள் என்ன ஆட்டமும் போடலாம்.... விசயம் தெரிந்து ஆடினால்... முட்டாள் தனமாக ஆடி பிடி படாமல் இருக்கும் வரை கெட்டித்தனம் தான்.

நிச்சயமாக. ஆனால் தமக்கு சட்டம் தெரியும் என நினைத்து ஆடி, கம்பி எண்ணி கொண்டிருக்கும் பல white collar criminals இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்க கூடாது.

13 minutes ago, Nathamuni said:

அடுத்த தேர்தலில் லேபர் வெல்லுமெண்டால், லைக்கா டபாரெண்டு கட்சி மாறி காசு கொடுக்கும். இது இங்கே பலரும் செய்வது தானே.

பிரச்சனை பேப்பரில் வர முன்னம் எண்டால் லேபர் வாங்கி இருக்கும். இனி யோசிப்பார்கள். 

ஆனால் சொல்ல முடியாது, வியாபாரிகளை விட மோசமானவர் அரசியல்வாதிகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

குறைந்த வட்டியில் அரச கடனை வாங்கி, வீடு, கார் வாங்கி போட்டு, இரண்டு வருடத்தில் நல்ல காசு பார்த்தவர்கள் நம்மவர் மட்டுமல்ல. 

அரசாங்கம் கொவிட் நேரம் “வியாபாரம் மீள என” என கொடுத்த சலுகை வட்டி 50,000 பவுண்ட்ஸ் கடனை வாங்கி, சொந்த பெயரில் வீடு, கார் வாங்கியதை நீங்கள் களவு இல்லை என்கிறீர்களா?

உங்கள் பார்வையில் அது களவாக இருக்காமல் போகலாம் ஆனால் அது களவுதான்👇

https://amp.theguardian.com/world/2022/jun/06/covid-bounce-back-loans-paid-for-cars-watches-and-even-porn

இதைதான் நான் மேலே “எப்படியும் காசு பார்த்தால் சரி” என்ற மனநிலை என கூறினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்துக்கு உட்பட்டு செய்யும் எதுவுமே தவறு அல்ல. களவும் இல்லை. அது சிறைக்கு செல்லும் தண்டனைக்குரிய வேலை என்றால் யாரும் செய்ய மாட்டார்கள்.

தாமதமாக வரி கட்டி, அதுக்குரிய அபராதம் கட்டுவது சட்டத்துக்கு உள்பட்டது தான். ஒரு வியாபாரி, எந்த வகையிலும் பணத்தினை மேலும் பெருக்கவே செய்வான். இல்லாவிடில் அவன் வியாபாரி அல்ல. தாமதமாக கட்டி, அதன் மூலம், பெருகும் வியாபாரத்துக்கும் வரி கட்ட வேண்டும் என்பதால், வரித்துறை விட்டுப் பிடிக்கும்.

BTW, வரித்துறை மிகவும் efficient ஆகி புதிய தொழில் நுட்பத்துடன் புகுந்து விளையாடுது. நம்மவர்களில் பலர், நிறைய வீடுகள் வாங்கி சந்தோசமாக இருந்தார்கள். காணிப்பதிவகத்துடன், வரித்துறை தொடர்பு கொண்டு, அப்பிடியே எல்லா வீடுகள் லிஸ்ட்டினை வைத்துக்கொண்டு, பலரை அழைத்து விசாரிக்கின்றனர்.  பழைய மட்டை கோஸ்டிகள் சிக்கலில்.... வந்த காலத்தில் இருந்து என்ன வேலை, என்ன வருமானம் என்று கதை எழுதி தருமாறு கோரி செக் பண்ணுகிறார்கள். சிலருக்கு, வீடுகளை வித்து, வரியை கட்டும் நிலை.

நமக்கு தெரிந்தது லைக்கா, அதனால் அது குறித்து மட்டும் சொல்கிறோம்.

தனி முதலாளி கொம்பனிகள், பல இதனையே செய்கின்றன. லிஸ்ட் இங்கே தந்தால், மிக நீளமாக இருக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்?:411:
சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.:hurra:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

அரசாங்கம் கொவிட் நேரம் “வியாபாரம் மீள என” என கொடுத்த சலுகை வட்டி 50,000 பவுண்ட்ஸ் கடனை வாங்கி, சொந்த பெயரில் வீடு, கார் வாங்கியதை நீங்கள் களவு இல்லை என்கிறீர்களா?

உங்கள் பார்வையில் அது களவாக இருக்காமல் போகலாம் ஆனால் அது களவுதான்👇

https://amp.theguardian.com/world/2022/jun/06/covid-bounce-back-loans-paid-for-cars-watches-and-even-porn

இதைதான் நான் மேலே “எப்படியும் காசு பார்த்தால் சரி” என்ற மனநிலை என கூறினேன்.

கோவிட் காலத்தில் வியாபார மீள்வுக்கு கொடுக்கவில்லை. பசி இல்லாமல் இருங்கோ என்று கொடுத்தது. ( Business recovery loan was given until 30 June 2022) 

காசை மாசாமாசம் கட்டினால் சரி.

ஆனால், வியாபாரத்தின் 25% கடனாக கொடுக்கப்பட்டது.

உண்மையில் கடந்த வருட (2019/20) கம்பெனி சமர்ப்பன விபரத்தில் கொடுக்கப்பட்ட வியாபார figure கேட்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அதனை கேட்காமல், அவரவர் சொன்ன figure மேல் கொடுத்த அரசின் மேலும் தவறு. அவ்வாறு பொய் சொல்லி எடுத்தவர்கள், இப்போது சிக்கலில்.

பொய் சொன்னால் சட்டம் பாயும், அது களவு தான். 

பலர் பணத்துடன் நாட்டினை விட்டு போய் விட்டார்கள். போனவர்களில், IT காரர்களும் இருந்தார்கள். 2021 ஏப்ரல் 6 வரை outside IR 35 அமுலுக்கு வரவில்லை. ஆகவே இவர்கள் அனைவரும் லிமிடெட் கம்பெனிக்கு பணத்தினை வரவழைத்தவர்கள். அந்த sales figure ஐ பல மடங்கு கூடுதலாக சொல்லி (வங்கி செக் பண்ணவில்லை என்பது தெரிந்து) அடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

இதனால் தான் லாரி டிரைவர் இல்லாமல் போன நிலை வந்தது.

இன்றும் job market அமோகமாக இருப்பதுக்கு காரணம் அதுவே.

அது வேறு, late வரி கட்டுதல் வேறு. நாளை £10,000 கட்ட வேண்டும், ரெடி. எதிர்பாராத விடயமாக, பணம் தேவைப்படுகிறது. ஒரு மாதம் தாமதிக்கும் என்று வரித்துறைக்கு சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். களவு அல்ல.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கோவிட் காலத்தில் வியாபார மீள்வுக்கு கொடுக்கவில்லை. பசி இல்லாமல் இருங்கோ என்று கொடுத்தது.

காசை மாசாமாசம் கட்டினால் சரி.

ஆனால், வியாபாரத்தின் 25% கடனாக கொடுக்கப்பட்டது.

உண்மையில் கடந்த வருட (2019/20) கம்பெனி சமர்ப்பன விபரத்தில் கொடுக்கப்பட்ட வியாபார figure கேட்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அதனை கேட்காமல், அவரவர் சொன்ன figure மேல் கொடுத்த அரசின் மேலும் தவறு. அவ்வாறு பொய் சொல்லி எடுத்தவர்கள், இப்போது சிக்கலில்.

பொய் சொன்னால் சட்டம் பாயும், அது களவு தான். 

பலர் பணத்துடன் நாட்டினை விட்டு போய் விட்டார்கள். போனவர்களில், IT காரர்களும் இருந்தார்கள்.

இதனால் தான் லாரி டிரைவர் இல்லாமல் போன நிலை வந்தது.

இன்றும் job market அமோகமாக இருப்பதுக்கு காரணம் அதுவே.

நாதம் அந்த கடனின் பெயரே “bounce back” loan. அதாவது வியாபாரத்தை கொவிட் தாக்கத்தில் இருந்து மீள எழுப்ப.

அதை வைத்து சொந்த பெயரில் வீடு, கார் வாங்கியது, அதில் லாபம் பார்த்தது களவு. லோன் அதுக்கு கொடுக்கபடவில்லை. 

நீங்கள் bounce back loan ஐ யும், “சாப்பிடுங்கோ” என கொடுத்த furlough வையும் குழப்புகிறீர்கள்?

கொவிட்நேரம் ஆட்களை வேலையால் நிப்பாட்டமல் பசியை தவிர்க கொடுக்கபட்டது furlough.

எது எப்படியோ bounce back loan, furlough இரெண்டுமே சொந்த பெயரில் சொத்து வாங்க கொடுக்கபடவில்லை. அதை அப்படி முறைகேடாக பாவித்து லாபம் பார்த்தது களவுதான்.

👆இதைதான் மேலே தந்த கார்டியன் கட்டுரை விளக்குகிறது.

16 minutes ago, Nathamuni said:

அது வேறு, late வரி கட்டுதல் வேறு. நாளை £10,000 கட்ட வேண்டும், ரெடி. எதிர்பாராத விடயமாக, பணம் தேவைப்படுகிறது. ஒரு மாதம் தாமதிக்கும் என்று வரித்துறைக்கு சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். களவு அல்ல.

இதைதான் நான் மேலே சொன்னேன். லைக்கா விடயம் கொவிட்டுக்கு பல ஆண்டு முந்தியது என.

லைக்கா, வரியை தாமதித்து கட்டுகிறோம் என்று கோரிக்கை வைத்து அதை திணைக்களம் ஏற்று கொண்டிருந்தால் -  நீங்கள் சொல்வது பொருந்தும்.

ஆனால் இங்கே குற்றசாட்டு அதுவல்ல. 

வரியை வருடக்கணக்கில் தன்னிச்சையாக தாமதித்து, அல்லது கட்டாமல் விட்டு, அதை வைத்து கொள்ளை லாபம் பார்த்து பின் அபராதம் என சின்ன தொகையை கட்டுகிறார்கள் என்பதே குற்றசாட்டின் சாரம்சம்.

ஒரு படத்தில் விவேக் மைனர் குஞ்சு “அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் பண்ணுகிறார்” அதை போல, ஆனால் அதன் ரிவேர்ஸ்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்?:411:
சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.:hurra:

வழமையா ஆளில்லாத கடையில ஆத்துவம். பரவாயில்லை இண்டைக்கு சுப்ஸ், குப்ஸ் இரெண்டு பேராவது பாக்கிறாங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

நாதம் அந்த கடனின் பெயரே “bounce back” loan. அதாவது வியாபாரத்தை கொவிட் தாக்கத்தில் இருந்து மீள எழுப்ப.

அதை வைத்து சொந்த பெயரில் வீடு, கார் வாங்கியது, அதில் லாபம் பார்த்தது களவு. லோன் அதுக்கு கொடுக்கபடவில்லை. 

நீங்கள் bounce back loan ஐ யும், “சாப்பிடுங்கோ” என கொடுத்த furlough வையும் குழப்புகிறீர்கள்?

கொவிட்நேரம் ஆட்களை வேலையால் நிப்பாட்டமல் பசியை தவிர்க கொடுக்கபட்டது furlough.

எது எப்படியோ bounce back loan, furlough இரெண்டுமே சொந்த பெயரில் சொத்து வாங்க கொடுக்கபடவில்லை. அதை அப்படி முறைகேடாக பாவித்து லாபம் பார்த்தது களவுதான்.

👆இதைதான் மேலே தந்த கார்டியன் கட்டுரை விளக்குகிறது.

இதைதான் நான் மேலே சொன்னேன். லைக்கா விடயம் கொவிட்டுக்கு பல ஆண்டு முந்தியது என.

லைக்கா, வரியை தாமதித்து கட்டுகிறோம் என்று கோரிக்கை வைத்து அதை திணைக்களம் ஏற்று கொண்டிருந்தால் -  நீங்கள் சொல்வது பொருந்தும்.

ஆனால் இங்கே குற்றசாட்டு அதுவல்ல. 

வரியை வருடக்கணக்கில் தன்னிச்சையாக தாமதித்து, அல்லது கட்டாமல் விட்டு, அதை வைத்து கொள்ளை லாபம் பார்த்து பின் அபராதம் என சின்ன தொகையை கட்டுகிறார்கள் என்பதே குற்றசாட்டின் சாரம்சம்.

ஒரு படத்தில் விவேக் மைனர் குஞ்சு “அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் பண்ணுகிறார்” அதை போல, ஆனால் அதன் ரிவேர்ஸ்🤣.

furlough is a monthly government grant!!

Bounce back, is a loan: கொடுக்கப்பட்டதன் காரணம் வியாபாரம் செய்ய அல்ல. கோவிட் காலத்தில வியாபாரமே இல்லை.

அது கொடுக்கப்பட்டது, வீட்டில் இருந்து சாப்பிடுங்கோ, அதே வேளை நாட்டு பணசுற்றோட்டம் நலிந்து போகாமல் இருக்க செலவழித்து வரிவருமானத்தை கூட்டுங்கோ என்று தான்.

வீடு வாங்கியது மட்டுமல்ல, தெருவுக்கு, தெரு வீடு திருத்துகிறார்கள். வியாபார தொகையின் இருபத்தைந்து வீதம், 2.5% வருச வட்டிக்கு யார் தருவார். அதை எடுக்காதவர் கார்டியனில் புலம்பி பயனில்லை. காரணம்,அந்த கடனில் எதை வாங்க கூடாது என சட்டபூர்வமான தடை இல்லையே.

முன்னனுபவம் இல்லாமல், தவறான பெயர், தவறான நடைமுறை. உதாரணமாக வெளில போய் சாப்பிட்டால் £10, அரசு தரும் என்பது தவறு, அதனாலேயே கொரோணா இன்னும் ஒரு ரவுண்டு வந்தது.

பின்னர், Business Recovery Loan (until June 30, 2022) கொடுக்கப்பட்டது. அதுவே, கடுமையான நிபந்தனைகளுடன், வியாபார கணக்கு பார்த்து கொடுத்தார்கள்.

சரி, நித்திரை வருது, சந்திப்பம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

Bounce back, is a loan: கொடுக்கப்பட்டதன் காரணம் வியாபாரம் செய்ய அல்ல. கோவிட் காலத்தில வியாபாரமே இல்லை.

அது கொடுக்கப்பட்டது, வீட்டில் இருந்து சாப்பிடுங்கோ, அதே வேளை நாட்டு பணசுற்றோட்டம் நலிந்து போகாமல் இருக்க செலவழித்து வரிவருமானத்தை கூட்டுங்கோ என்று தான்.

மிக தவறான புரிதல் நாதம். கீழே bounce back loan ஏன் கொடுக்கப்பட்டது என்பதை விளக்கும் அரச இணையதள விளக்கம்.

The Bounce Back loans were made on the condition that they were not to be used for personal purposes, but could be used, for example, to purchase a company asset such as a vehicle, if it would provide an economic benefit to the business.

https://www.gov.uk/government/publications/fact-sheet-bounce-back-loans/fact-sheet-bounce-back-loans

அதாவது தனிபட்ட காரணங்களுக்காக இந்த கடனை பாவிக்க கூடாது. வாகனம் போன்றவை வாங்கலாம் அவை வியாபாத்தை பொருளாதார ரீதியில் அனுகூலமாக்கும் என்றால். அதுவும் கம்பெனியின் சொத்தாக. தனி சொத்தாக அல்ல.

ஆகவே இந்த லோனை எடுத்து வியாபாரத்து சம்பந்தமில்லாமல் சாப்பிட்டதோ, வீடு வாங்கினதோ, வாகனம் வாங்கியதோ களவுதான். 

18 minutes ago, Nathamuni said:

காரணம்,அந்த கடனில் எதை வாங்க கூடாது என சட்டபூர்வமான தடை இல்லையே.

நிச்சயமாக இருக்கிறது. மேலே தந்த இணைப்பு விளக்குகிறது.

சரி போய் நித்திரை கொள்ளுங்கோ சந்திப்பம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

மிக தவறான புரிதல் நாதம். கீழே bounce back loan ஏன் கொடுக்கப்பட்டது என்பதை விளக்கும் அரச இணையதள விளக்கம்.

The Bounce Back loans were made on the condition that they were not to be used for personal purposes, but could be used, for example, to purchase a company asset such as a vehicle, if it would provide an economic benefit to the business.

https://www.gov.uk/government/publications/fact-sheet-bounce-back-loans/fact-sheet-bounce-back-loans

அதாவது தனிபட்ட காரணங்களுக்காக இந்த கடனை பாவிக்க கூடாது. வாகனம் போன்றவை வாங்கலாம் அவை வியாபாத்தை பொருளாதார ரீதியில் அனுகூலமாக்கும் என்றால். அதுவும் கம்பெனியின் சொத்தாக. தனி சொத்தாக அல்ல.

ஆகவே இந்த லோனை எடுத்து வியாபாரத்து சம்பந்தமில்லாமல் சாப்பிட்டதோ, வீடு வாங்கினதோ, வாகனம் வாங்கியதோ களவுதான். 

நிச்சயமாக இருக்கிறது. மேலே தந்த இணைப்பு விளக்குகிறது.

சரி போய் நித்திரை கொள்ளுங்கோ சந்திப்பம்.

Loan was given in April - May 2020.

This was,

Published 31 March 2022

இதில் உள்ள நிபந்தனைகள் எதுவுமே, ஒரிஜினல் அக்ரீமெண்ட்டில் இல்லை. எடுத்த பணம், கம்பெனி ஹவுசில் சமர்ப்பித்த கணக்கின் sales figure ன்  25% ஆக உள்ளதா.... சரி... நேர்மையாளர் தான். மாதாந்த தொகை வாங்கிக்கொண்டு, உண்மையாக களவு எடுத்தவர்களை தேடுவோம் என்று, £100 மில்லியன் ஒதுக்கியிருந்தாரே ரிஷி.

ரிஷி சுனக் குதிரை ஓடினாப்பிறகு லாயத்தினை பூட்ட முயன்றார் என்பது பலரது குற்றசாட்டு.

முக்கியமான விடயம், அவசரத்தில், கிரெடிட் ரெபெரென்ஸ் கூட செக் பண்ணாமல் கடன் கொடுத்தார்கள். படுத்துக்கிடந்த பலர், bankruptcy அடித்த பலர் dormant கம்பெனிகளை விலைக்கு வாங்கி அதன் மேல் கடன் எடுத்து உள்ளனர்.

உதாரணமாக, நாதமுனி அண்ட் கம்பெனி, கோசன் அண்ட் கம்பெனிக்கு, ஒரு மில்லியன் பவுனுக்கு invoice தயாரித்து, அதனை sales figure ஆக கொடுத்து £250,000 வாங்கின வேலை நடந்துள்ளது. அது தான் களவு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நாதம் இது பின்னர் வெளியிட்ட factsheet - ஆனால் bounce back loan கொடுக்கப்பட்டபோதே அது எதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் small print இல் இருந்தன. 

கடன் கொடுப்பதில் பல தவறுகள் நடந்தன, அரசு, வங்கிகள் மிக மெத்தனமாக இருந்தன, இருக்கிறன என்பதும், அது கள்ளர்களுக்கு வசதியாக போனது என்பதும் உண்மை.

ஆனால் அதைவைத்து கள்ளர் செய்தது களவு அல்ல என்றாகாது.

bounce back (மீள் எழும்) கடனை, கம்பெனியின் வியாபார மீள் எழுச்சிக்கு பயன்படுத்தாமல், சுயமாக லாபம் பார்த்த அனைவரும் சட்டப்படி கள்ளர்களே.

அவர்களை இந்த ஒண்டுக்கும் உதவாத, கள்ளர்களிடம் டொனேசன் வாங்கும் அரசு கண்டுபிடித்து தண்டிக்க சுணங்கினாலும், களவு, களவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

வரியை வேண்டுமென்றே தாமதமாக கட்டுவது, COVID recovery loanனை அதன் உண்மையான நோக்கங்களிற்கு எதிராக பாவிப்பது, COVID relief payments பொய்யான காரணங்களை காட்டி எடுப்பது இங்கேயும் நடந்தது.. இது எல்லாம் privilege misuse அவ்வளவுதான். 

இப்படி தங்களுக்கு கிடைத்த/ தங்களது தொழில் முயற்சிகளுக்கு கிடைத்த நன்மை/சலுகைகளை தவறாக பயன்படுத்துபவர்களால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் கூட சரியான சமயத்தில் போகவில்லை, மேலும் வங்கிகள் கூட இது தொடர்பான தங்களது விதிகளை மாற்ற வேண்டி வந்தது. சிறிய நடுத்தர முதலீட்டாளர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாங்கள் குறுகிய கண்ணோடத்திலேயும், மற்றவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்தால் என்ன என்ற நோக்கிலுமே நடக்கிறோம். மற்றைய விளைவுகளை யோசிப்பதில்லை. மனசாட்சியையும் தேவைக்கு ஏற்ப மாற்றிவிடுவோம். அவ்வளவுதான். 

இதையெல்லாம் எடுத்துக் கூறினால் உலகம் மாறுது, அதற்கேற்ப நடக்கவேண்டும், தந்திரமாக வியாபாரம் செய்யவேண்டும் என விரிவுரை தருவார்கள். அவர்களைப் பொறுத்த வரை எப்படியாயினும் இலாபம் வந்தால் சரி.. இன்று உலகம் இந்த மாதிரி பல அழிவுகளை சந்திப்பதே மனிதனால் வந்த greedyதான். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இந்த நாடுகளின் வளமான வாழ்க்கைக்கு அடிப்படை சட்டம், ஒழுங்கு, ஒழுங்கான வரி செலுத்தல் போன்றவைதான்.

அல்லது இந்தியா, ரஸ்யா போல கொள்ளையர்களின் கூடாரமாகிவிடும் நாடு.

உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் 👍

மோசடியாக காசு எடுப்பது எடுக்க முயற்ச்சிப்பது பின்பு அது தான் சரியானது என்று ஒரு விளக்கம் தருவது. மோசடியாக காசு எடுப்பதை ஏதோ சாதனை செய்ததாகவும் சொல்வது.அபாயகரமான போக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லோன் குறித்து பல விடயத்தை தர முடியும், நேரமில்லை.

பிரிட்டனில், கடன் கொடுத்தது வங்கிகள். கடன் உடன்படிக்கை வங்கிகளுக்கும், வாடிக்கையாளருகும் இடையே மட்டுமே. அதிலே, கடன் பணம் பாவிக்கும் நிபந்தனை இல்லை.

அரசு, வங்கிகள் கொடுத்த கடனுக்கு நூறு வீத உத்தரவாதம் வழங்கியது. அதனால், அரச வழிகாட்டுதல் சட்டபூர்வமான உடன்படிக்கை அல்ல.

ஊரில் உள்ள உறவினர்கள், பசியில் இருக்கக் கூடாது என கடனை எடுத்து அனுப்பிய பல வெளிநாட்டவர் உள்ளனர். அதற்காக கடன் தரப்படவில்லை. ஆகவே கள்ளர் என சொல்ல முடியுமா என்ன?

கனடாவில், கடன் எடுத்து, குறித்த காலத்தில் கட்டிவிட்டால், பத்துவீத கழிவு என்று அரசு சொன்னது. சும்மா இருந்தவர்கள் கூட, அட பத்து வீத கழிவு இலவசமாக வருதே என்று விண்ணப்பித்து, பெற்று, தொன்னாறு வீதத்தை கட்டினார்கள்.

அவர்களை கள்ளர் என சொல்ல முடியுமா என்ன?

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள்.

பிரிட்டனில், கோரணா காலத்தில், திறந்திருந்த குரோசரி கடைக்காரர்களுக்கு, சில உள்ளூர் அதிகார சபை தாமாக இருபத்தையாயிரம், இனாமாக கொடுத்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்ல.

PAYE முலம் அரசுக்கு Employers ஊடாக வரி கட்டியர்களுக்கு, Furlough  முலம், ஆகக் கூடியதாக £2,500 இலவசமாக கிடைத்தது.

மிகுதியாக இருந்த, சுய தொழிலாளர், சிறு தொழிலாளர் பசியாற்ற கொடுக்கப்பட்டதே கொராணா தாக்குதலை சமாளிக்க Bounce Back கடன்.

வியாபார விருத்திக்கு அண்மை வரை கொடுக்கப்பட்டதே business recovery loan. இது மிக கவனமாக, வழமையான கடன் போலவே கொடுக்கப்பட்டது.

கொரோணா காலத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், பத்திரங்களை நிரப்ப முகவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தது. இதுவே, பலரை, முகவர்கள் போல செயல்பட வைத்து, ஜந்து, பத்து வீத கமிசன் வாங்கி, தேவையற்றவர்களை கூட கடன் பெற வைத்து பலரை கடனாளி ஆக்கி விட்டது.

யார் கள்ளர்கள் என்பது குறித்து, அரசு தெளிவாக முடிவெடுத்து, அவர்களை பிடிக்க என்று task force அமைத்து, அதற்கான பணமும் ஒதுக்கி விட்டது. அது புரியாமல், நாமாக, அவர்கள் கள்வர்கள், இவர்கள் கள்வர்கள் என தீர்ப்பு சொல்வதில் அர்த்தம் இல்லை.

இன்றும் கூட பலர், வட்டியை மட்டுமே கட்டுகிறார்கள். சிலர், லோன் கொலிடே எடுக்கிறார்கள்.

அவர்கள், தமது உண்மையான, Turnover தொகையின் இருபத்தைந்து வீதம் கடன் வாங்கியிருந்தால், பிரச்சணை இல்லை.

Turnover தொகையை, பொய்யாக பெருப்பித்து சொல்லி, கடன் வாங்கியவர்கள் தான் கள்வர்கள்..... அவர்களே சிக்கலில்....

நான் மேலே சொன்னது போல..... பெருந்தொகை அடித்தவர்கள், நாட்டை விட்டே போய்விட்டார்கள். அவர்கள் விபரம் இருப்பதால் அரசு அவர்களை விடாது என்றே நிணைக்கிறேன்.

இந்தக் கள்ளரை விட்டு்ட்டு, முறையான வழியில் கடனை வாங்கினவன், கார் வாங்கினது பிழை, வீடு வாங்கினது பிழை, ஊருக்கு அனுப்பினது பிழை எண்டு, அரசே எடுக்காத moral preaching, அர்த்தமற்றது.

Turnover ன் 25வீதம், 2.5 வீதத்துக்கு கடனாகப் பெற்று, காரை, வீட்டை வாங்கி, அதற்குரிய வரியை செலுதினார்கள்.

அதுவே அரசு எதிர்பார்த்த விடயம்.

நன்றி

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.