Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு!

ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு!

ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது.

கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அந்தப் பாலத்தை தகர்க்கின்றதா அல்லது வலுக்கட்டாயமாக அந்தப் பாலம் தகர்க்கப்படுகின்றதா என்பது முக்கியமில்லை எனவும் எந்த வகையிலாவது அந்தப் பாலம் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கருத்தின் மூலம் உக்ரைன் துருப்புக்கள் பாலத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆனால், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடித் தாக்குதலுக்கு, உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் தலைமை மையங்களும் தப்பாது என ரஷ்யா எச்சரித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட தையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர். அப்போது ரஷ்யாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

கிரீமியாவை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்குப் பிறகு, அந்த தீபகற்பத்துக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக சுமார் 19 கி.மீ. நீளமுடைய அந்தப் பாலத்தை கட்டியது. இந்தப் பாலத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கடந்த 2018ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.

https://athavannews.com/2022/1295144

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நான்கு நாளாக கிரிமியாவில் உக்ரேன் கரந்தடி தாக்குதல்களை செய்வதாக தெரிகிறது.

இவை அனைத்துமே உக்ரேனின் குண்டு வீச்சு எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பாதால் படைகள் உள்ளே இறங்கி செத்வதாகவே தெரிகிறது.

ஒரு இராணுவ விமானநிலையம் அதில் எட்டு வரையான போர் விமானங்கள் அழிந்ததாயும். தாக்குதலின் போது அருகில் இருந்த கடற்கரையில் இருந்த உல்லாச பயணிகள் ஓடுவதாயும் வீடியோக்கள், சட்டிலைட் படங்கள் வந்திருந்தன.

அதே போல் அடுத்த இரு நாட்களில் இருவேறு இராணுவ கிட்டங்கிகள் தகர்கப்பட்டுள்ளன.

கிட்டதட்ட 2ம் உலகபோரில் குளிர்காலத்தில் ரஸ்யாவில் எப்படி ஜேர்மனி எதிர்கொள்ளபட்டதோ அப்படி ஒரு உத்தியை உக்ரேன் கையில் எடுக்கிறதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இவை அத்தனையும் உக்ரேனின் திறமை அல்ல....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இவை அத்தனையும் உக்ரேனின் திறமை அல்ல....

நிச்சயமாக இல்லை.

ஆனால் என்னதான் தீத்தினாலும் குழந்தையும் சாப்பிட தயாராய் இருக்க வேணும் எல்லோ😆.

ஆப்கானிஸ்தானில் இருபது வருடம், பல பில்லியன் செலவிட்ட பின்னும் - அமரிக்கன் அங்கால போக இங்கால விட்டுட்டு ஓடேல்லையே🤣.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இவை அத்தனையும் உக்ரேனின் திறமை அல்ல....

@goshan_che அவையளுக்கும் தெரியும்... ஆனால், வெள்ளைக்கார பாசம்... 
உக்ரேனை விட்டுக் கொடுக்க, மனசு வருகுதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che அவையளுக்கும் தெரியும்... ஆனால், வெள்ளைக்கார பாசம்... 
உக்ரேனை விட்டுக் கொடுக்க, மனசு வருகுதில்லை. 

கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா என்ர பதிலையும் பார்த்துட்டு எழுதி இருக்கலாம் அண்ணை. ஜஸ்டு மிஸ்டு🤣.

பிகு

எனக்கு இந்த ரஸ்ய கறுபினத்வர்களை கண்டால் ஒரே கோவம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி தாக்குதல்கள் டிரோனால் தாக்கப்படவே சாத்தியம் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை.

ஆனால் என்னதான் தீத்தினாலும் குழந்தையும் சாப்பிட தயாராய் இருக்க வேணும் எல்லோ😆.

ஆப்கானிஸ்தானில் இருபது வருடம், பல பில்லியன் செலவிட்ட பின்னும் - அமரிக்கன் அங்கால போக இங்கால விட்டுட்டு ஓடேல்லையே🤣.

 இருவரும் ஆப்கானிஸ்தானில் தொட்டு கையை சுட்டுக்கொண்டவர்கள். அதை நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.

29 minutes ago, nunavilan said:

மேற்படி தாக்குதல்கள் டிரோனால் தாக்கப்படவே சாத்தியம் உள்ளது.

உண்மையும் அதுதான். செலென்ஸ்கி பெரிதாக பீத்திக்கொள்ள தேவையுமில்லை.😁

ஆனால் ஐரோப்பாவில் தற்போதைய அரசுகளிற்கு எதிராக பெரிய எழுச்சி போராட்டங்கள் நடைபெற சந்தர்ப்பம் உண்டு என பல பத்திரிகை கட்டுரைகள் எச்சரிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு!

என்னத்தை வேணுமானாலும் உடையுங்க.

ஆனால் வாங்கிய ஆயுதத்துக்கு துட்டை கெதியா கொடுத்துடுங்க.

இஞ்சை பெரிய கஸ்டமா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மேற்படி தாக்குதல்கள் டிரோனால் தாக்கப்படவே சாத்தியம் உள்ளது.

55 minutes ago, குமாரசாமி said:

உண்மையும் அதுதான். செலென்ஸ்கி பெரிதாக பீத்திக்கொள்ள தேவையுமில்லை.😁

 ரஸ்யாவே இது உள்ளிருந்து நாசகாரவேலை (sabotage) என்று சொல்கிறது.

https://www.aljazeera.com/amp/news/2022/8/16/russian-blames-sabotage-on-arms-depot-explosions-in-crimea

செலன்ஸ்கி கூட நேரடியாக உரிமை கோரவில்லை.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னத்தை வேணுமானாலும் உடையுங்க.

ஆனால் வாங்கிய ஆயுதத்துக்கு துட்டை கெதியா கொடுத்துடுங்க.

இஞ்சை பெரிய கஸ்டமா இருக்கு.

ஈயூ, யூகே மைண்ட் வாய்ஸ்

மாமா…
காஞ்சிப்போன பூமி எல்லாம்
வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
துன்பப் படுறவங்க எல்லாம்
அந்த கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க
ஆனா தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு
யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஈயூ, யூகே மைண்ட் வாய்ஸ்

மாமா…
காஞ்சிப்போன பூமி எல்லாம்
வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
துன்பப் படுறவங்க எல்லாம்
அந்த கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க
ஆனா தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு
யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

உங்கும் அதே நிலையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கும் அதே நிலையா?

அதுக்கும் மேல.

பணவீக்கம் 10%. சம்பளத்தை 5% கூட்டவே ரொம்ப முக்குறாங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கும் அதே நிலையா?

பல சிக்கல்களை வெளியே சொல்ல முடியாமல் முக்கிக்கொண்டு திரிகின்றார்கள்.ரஷ்யாவிலிருந்து தனியே எரிபொருள் மட்டும் ஏற்றுமதியாவதில்லை. எரிபொருள் ஏற்றுமதிக்கு பல நாடுகள் உள்ளன. ஆனால் பல பற்பல பொருள் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதியாகின்றது.
உதாரணத்திற்கு அத்தியாவசிய மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் ரஷ்யாவிலிருந்தே வருகின்றன. இப்போது ஜேர்மனியில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு பிரச்சனை புகைய ஆரம்பித்து விட்டது.

மருந்து ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் உக்ரேன் யுத்தத்தின் மூலமான ரஷ்யாவிற்கான பொருளாதார தடையின்  பலன்கள் இவை.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னத்தை வேணுமானாலும் உடையுங்க.

ஆனால் வாங்கிய ஆயுதத்துக்கு துட்டை கெதியா கொடுத்துடுங்க.

இஞ்சை பெரிய கஸ்டமா இருக்கு.

கடலில் போட்டதாக நினைத்து கொள்ளுங்கோ. தாய்வானிலை இப்போ தான் தொடங்கி இருக்கிறோம். அங்கே ஏதாவது அள்ள முடியுமோ என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பல சிக்கல்களை வெளியே சொல்ல முடியாமல் முக்கிக்கொண்டு திரிகின்றார்கள்.ரஷ்யாவிலிருந்து தனியே எரிபொருள் மட்டும் ஏற்றுமதியாவதில்லை. எரிபொருள் ஏற்றுமதிக்கு பல நாடுகள் உள்ளன. ஆனால் பல பற்பல பொருள் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதியாகின்றது.
உதாரணத்திற்கு அத்தியாவசிய மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் ரஷ்யாவிலிருந்தே வருகின்றன. இப்போது ஜேர்மனியில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு பிரச்சனை புகைய ஆரம்பித்து விட்டது.

மருந்து ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் உக்ரேன் யுத்தத்தின் மூலமான ரஷ்யாவிற்கான பொருளாதார தடையின்  பலன்கள் இவை.....

நேற்று போலந்து பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஜேர்மனியும் பிரான்சும் தன்னிச்சையாக இயங்குவதாக கூறினார். 
ஸ்லோவாக்கியா ரஸ்யாவிடம் எண்ணை, எரிவாயுவுக்காக புதிய டீலை போட்டுள்ளது.  பணபரிவர்த்தனை ரூபிளில் நடைபெற இருப்பதாக புதிய டீல் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் கூறியது போன்று, உக்ரேனை எல்லோரும் மறந்துவிட்டனர். 

பாவம் உக்ரேனியர்கள். 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, nunavilan said:

நேற்று போலந்து பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஜேர்மனியும் பிரான்சும் தன்னிச்சையாக இயங்குவதாக கூறினார். 
ஸ்லோவாக்கியா ரஸ்யாவிடம் எண்ணை, எரிவாயுவுக்காக புதிய டீலை போட்டுள்ளது.  பணபரிவர்த்தனை ரூபிளில் நடைபெற இருப்பதாக புதிய டீல் சொல்கிறது.

உண்மையில் ஜேர்மனியும் பிரான்ஸ்ம் விரும்பாத போர் இது. அதுவும் பிரான்ஸ் மக்கள் ஐரோப்பாவிற்குள் போரை விரும்ப மாட்டார்கள். ஜேர்மனி போரினால் கெட்டு நொந்த நாடு.

எல்லாம் மண்டைக்கிறுக்கன் பெரியண்ணன் செய்யிற வேலை 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

முன்னர் கூறியது போன்று, உக்ரேனை எல்லோரும் மறந்துவிட்டனர். 

பாவம் உக்ரேனியர்கள். 

☹️

அப்போ டம்மி தம்பி பாவமில்லையா? 😁

Ukraine: Selenski ist auch für den Westen ein Wagnis

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கடலில் போட்டதாக நினைத்து கொள்ளுங்கோ. தாய்வானிலை இப்போ தான் தொடங்கி இருக்கிறோம். அங்கே ஏதாவது அள்ள முடியுமோ என பார்க்கலாம்.

அங்க விட்டதை இங்க தான் பிடிக்கணும்.

அதுக்கு தான்அலையுறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச சும்மா புறு புறுத்து கொண்டு நிக்காம….ஆளாளுக்கு உலக நீண்ட தாழ்வு (world long depression)  நிலைக்கு தயார் படுத்துங்கோ.

இந்த சண்டையள் எல்லாம் சும்மா பேக்காட்டல்.

உலகம் வெப்பமாதலில் தாண்டு நிலையை (tipping point) ஐ நெருங்கி விட்டது.

எப்படியோ, விரும்பியோ விரும்பாமலோ இனி பெற்றோலியத்தை எரிச்சு வாழ்வது கன நாளைக்கு முடியாது.

அதற்கு உங்களை எல்லாம் தயார்படுத்தி தள்ளி விடத்தான் இந்த போர்கள் எல்லாம்.

5 நிமிசத்தில் பெற்றோல் டாங்கை நிரப்பி, நிரப்பி 1000 கணக்கில் மைல் ஓடும் வேலை எல்லாம் இனி இல்லை.

காசிருந்தால் டெஸ்லா, போல்ஸ்டாரை வாங்கி ஒவ்வொரு 250 மைலுக்கும் 40 நிமிடம் துரித சக்தி ஏற்றி போகலாம்.

காசு கொஞ்சம் இருந்தால் - ரெனோ சோயி யை வாங்கி 100 மைலுக்கு ஒருக்கா 90 நிமிடம் சார்ஜ் பண்ணி ஓடுங்கள்.

அதுக்கும் காசில்லை எண்டால் வீட்டில் இருங்கள்.

உலக பொருளாதரத்தில் இருந்து பெற்றோலியத்தை நீக்குவது என்பது பொருளாதாரத்தை பாரிய தாழ்வுக்கு தள்ளியே மீட்கும்.

இந்த போரினால் வரும் தாக்கம் எல்லாம் ஜுஜுபி. 

மெயின் பிக்சர் இனிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அதுக்கும் காசில்லை எண்டால் வீட்டில் இருங்கள்.

ஏன் மாட்டுவண்டில்,குதிரை வண்டில்,துவிச்சக்கர வண்டில் எதுவும் சரி வராதா சார்?

மின்சக்தி,எரிசக்தி இல்லாமல் தான் இந்த உலகு முதலில் இருந்தது.

கண்டறியாத பெற்றோலை கண்டு புடிச்சிட்டினமாம்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஏன் மாட்டுவண்டில்,குதிரை வண்டில்,துவிச்சக்கர வண்டில் எதுவும் சரி வராதா சார்?

மின்சக்தி,எரிசக்தி இல்லாமல் தான் இந்த உலகு முதலில் இருந்தது.

கண்டறியாத பெற்றோலை கண்டு புடிச்சிட்டினமாம்

போங்க சார் நீங்க சும்மா ஜோக் அடிச்சு கொண்டு.

லண்டனில ஒரு செத்த வீட்டுக்கு உடலம், காரில போனால் £225, இரெண்டு குதிரை பூட்டிய வண்டி எண்டால் £950.

4 குதிரை பூட்டிய வண்டி எண்டால் 1400.

அதிக கூடிய தூரம் 8 மைல் ஓடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

போங்க சார் நீங்க சும்மா ஜோக் அடிச்சு கொண்டு.

லண்டனில ஒரு செத்த வீட்டுக்கு உடலம், காரில போனால் £225, இரெண்டு குதிரை பூட்டிய வண்டி எண்டால் £950.

4 குதிரை பூட்டிய வண்டி எண்டால் 1400.

அதிக கூடிய தூரம் 8 மைல் ஓடுவார்கள்.

வீட்டுக்கு வீடு குதிரையும்,நாம்பன் மாடுகளும் வளர்க்க வெளிக்கிட எல்லாம் நோர்மல் விலைக்கு வரும்

சுற்ற சூழலும் மாசு படாது.

23 minutes ago, goshan_che said:

5 நிமிசத்தில் பெற்றோல் டாங்கை நிரப்பி, நிரப்பி 1000 கணக்கில் மைல் ஓடும் வேலை எல்லாம் இனி இல்லை.

காசிருந்தால் டெஸ்லா, போல்ஸ்டாரை வாங்கி ஒவ்வொரு 250 மைலுக்கும் 40 நிமிடம் துரித சக்தி ஏற்றி போகலாம்.

காசு கொஞ்சம் இருந்தால் - ரெனோ சோயி யை வாங்கி 100 மைலுக்கு ஒருக்கா 90 நிமிடம் சார்ஜ் பண்ணி ஓடுங்கள்.

உங்களுக்கு இந்த வரலாறு பற்றி நிறைய தெரிந்திருக்கும். இருந்தாலும் கருத்துக்களோடு கருத்தாக இணைத்து நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வீட்டுக்கு வீடு குதிரையும்,நாம்பன் மாடுகளும் வளர்க்க வெளிக்கிட எல்லாம் நோர்மல் விலைக்கு வரும்

சுற்ற சூழலும் மாசு படாது.

நீங்கள் சொல்லுவது சரிதான் அண்ணை. ஆனால் அப்ப பிம் டபில் யூ, பென்ஸ், வால்வோ….இந்த கம்பனிகள், ஊழியர்கள், இதர ஆடக்ளோட வாழ்க்கைதரம் எப்படி இறங்கும் என்று யோசியுங்கோ.

நீங்கள் சொல்லும் நிலை வந்தால் உலக பொருளாதாரம், இப்போ இருக்கும் வர்த்தகம் 99% இல்லாமல் போகும் நிலையாகவே இருக்கும்.

நான் கூட அப்படி ஒரு நிலை வரும் என எண்ணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கனடாவில் லிபேரல் கட்சி எல்லோருக்கும் அடிப்படை சம்பளம் என்ற ஒன்றைப்பற்றி பேச தொடங்கி விட்டது.. கொரோனா போகிற போக்கில் அரைவாசிப்பேரை வீட்டில் இருந்தே வேலை செய்ய வைத்து விட்டது. ட்ரான் மூலம் டெலிவரி நடக்க எல்லாம் ஆயத்தம் ஆகி விட்டது, பாடசாலைகள் zoom மூலம் நடக்கிறது, எக்ஸாம், நேர்முகத்தேர்வு என்று எல்லாமே zoom மூலம் தான். ஆக அடுத்த ஒரு வருசத்துக்குள் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.