Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிங்கிலம் தவிர்ப்போம்

Featured Replies

கந்தப்பு தாத்தா நீங்க சொல்லுற எல்லாம் வாசிக்க நல்லா இருக்குது பாருங்கோ..............இதை நாங்கள் எத்தனை பேர் நடைமுறையில் கடைபிடிகிறோம் என்பது தான் என் கேள்வி??..............யாழில வந்து தமிழ் வளர்த்தா காணும் என்று ஒருத்தரும் சொல்லவில்லை அவை சொல்லுறது எல்லாம் நடைமுறையை பற்றி ஆனா நாம நடைமுறையில ஒன்றை செய்து கொண்டு யாழில வந்து தமிழில எழுதுவோம் என்று மற்றவைய கட்டாயபடுத்துறதை பற்றி தான் சொன்னனான்............... :D

தமிழ் மொழியை காப்பாற்றுறது கடமை இல்லை என்று சொல்லவில்லை அதை யாழில மட்டும் காப்பாறாம சமூகத்திலையும் இதை மாதிரி செய்தா நல்லா இருக்கும்............. பேனா தூக்கிறவர்கள் எல்லாம் போராளிகள் என்று சொன்னது உண்மை ஆனால் அவர்கள் நிஜ வாழ்கையிலும் அதையே செய்கிறார்கள்.........நாங்கள் இங்கே கதைத்துவிட்டு அங்கே பிறந்தநாளிள இங்கிலிசிலையும் தமிழையும் சேர்த்து ஒரு ஸ்பீஸ் கொடுபோம் பிறகு கேக்கில தெலுங்கில "ஓம்" என்று போட்டு கேக் வெட்டுவோம் இப்படி எல்லாம் செய்து போட்டு பிறகு மற்றவைய குறை பிடிகிறது தவறு தானே தாத்தா :) ..........நான் உங்களை சொல்லவில்லை சிட்னியில அரைவாசி சனம் இப்படி தான் தமிழ் வளர்கீனம் :angry: ...........தமிழருக்காக மீட்டிங் வைப்பீனம் பார்த்தா அங்கே வந்திருகிற எல்லாரும் தமிழராக தான் இருப்பீனம் ஆனா ஆங்கிலிசில வெட்டி விலாசுவீனம் அதுவும் ஒழுங்கா வராது அவைக்கு என்பது தான் வேடிக்கை..............பிறகு இதே சனம் வந்து மற்ற ஆட்களிற்கு தமிழை பற்றி கதைப்பினம் உங்களிற்கு தெரியும் தானே தாத்தா நான் இதை பற்றி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்........... :lol:

ஆகவே தாத்தா எடுத்தவுடனே தமீழத்தை நாங்கள் உடனே உள்ளுகுள்ள கொண்டு வந்திடுவோம் அப்ப தான் எதிர்த்து வாதாட முடியாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில............அது பிழை இல்லை ஆனா எல்லா நேரத்திலையும் எடுத்து அதற்குரிய மரியாதை இல்லாமல் செய்து விடாதீர்கள் என்பது என்னுடைய தாழ்வான விண்ணப்பம்......... :lol:

அடுத்து பெயரை பற்றி குறிபிட்டு இருந்தீங்க...........தமிழ் பெயர் வைப்பது நல்லது இல்லை என்று சொல்லவில்லை ஆனால தமிழ் பெயர் வைத்து விட்டு "சாய்" என்று சேர்பீனம் அதை பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே தாத்தா?????? :lol:

ஆகவே வெறுமனே நாங்கள் யாழில மட்டும் இல்லாம சமூகத்திலையும் பார்த்தா நல்லது என்பது என்னுடைய கருத்து...........அது எல்லாம் கஷ்டம் தானே தாத்தா............இங்கே வந்து பேனா தூக்கமட்டும் தான் எங்களாள முடியும் தானே தாத்தா........ :)

  • Replies 54
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யமுனா, யாழ் இணைய கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்ப்போம் என்பதே இங்கு கருத்தாடப்படும் விடயம். வெளியில் நம் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது பெரும்பாலான கருத்துக்கள உறவுகளுக்குத் தெரிந்திருக்கும். தமிங்கிலம் மட்டுமல்ல ஏனைய மொழிச் சொற்களும் கலந்தே தமிழ் கதைக்கப்படுகிறது என்பதும் தெளிவு.

எனவே, நாம் கருத்துக்களத்தில் முடிந்தளவு தமிங்கிலத்தை தவிர்த்து எழுதப் பழகுவோம். நல்ல தமிழ்ச் சொற்களை எமது கருத்துக்களில் பயன்படுத்த முயல்வோம். எழுத எழுத அதுவே பழக்கமாகிவிடும். பின்னர் வெளியில் நண்பர்களுடன், உறவினர்களுடன் உரையாடும்போதும் அந்த சொற்கள் இயல்பாகவே எமது பேச்சில் வரும். அப்போது நம்மிடம் இருந்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நாம் முன்னுதாரணமாக நடந்துகொள்வோமே?

நீங்க சொல்கிற - எமது சமூகத்தில் இருக்கிற - தமிங்கிலத் திணிப்பு, வேற்றுமொழிப் பெயர்களின் திணிப்பு போன்றவை பற்றி ஒரு கட்டுரையை "சமூகச் சாளரம்" பிரிவில் எழுதுங்கள். அதுபற்றி விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா,

சமூகம் என்பது என்ன?!! நம்மைப்போல் பலர் இணைந்தது தானே?!! பூனைக்கு யார் மணி கட்டுறது என்றெல்லாம் பார்த்தோமானால் எதுவும் நடக்காது. களத்தில் நாமே முதலில் குதிக்க வேண்டியது தான்.

உங்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன். இடையிடையே தேவையில்லாத ஆங்கிலச் சொல் திணிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இங்குள்ள கருத்தாடல்!

நாம் இன்றி சமூகம் இல்லை! ஒன்று படுவோம்!

வலைஞன் அண்ணா

உங்கள் கருத்து எனக்கு விளங்குது ஆனா அவுஸ்ரெலியாவிற்கு குழுமம் ஒன்று அமைத்து தந்திருகிறீர்கள் அதில இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்பது எமது முதல் கட்ட வேலை அதில் குறிப்பாக இங்கேயே பிறந்து வளர்ந்த சிறுவர்கள் தான் இணைக்க முடியும் அவர்களை பொறுத்தவரை தூய தமிழில் எழுதுவது என்றா மிகவும் கடின காரியம் சொல்ல போனால் என்னால் தூய தமிழில் என்னாலேயே எழுதுவது கடினமாக இருகிறது அப்ப அவர்களிற்கு......... :D

இங்கே கருத்தை தமிழில் எழுதி முன் உதாரணமாக தமிழில் வெளியால கதைபோம் என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை...........அது இன்றைய புல சூழலில் சாத்தியபடாத விசயம் என்பதே எனது பார்வையில்.........மற்றது நகைசுவையாக தான் தமிங்கிலத்தில் பலர் எழுதுகிறார்கள் அவர்களிற்கு நல்ல தமிழ் தெரியும் என்பது என்னுடைய கருத்து.......... B)

அத்தோட நான் மேலே எழுதின கருத்து எல்லாம் ஒரு தமிழமைப்பு நடந்து கொள்ளும் விதத்தை சுட்டி காட்டி தான் எழுதி இருந்தேன் கந்தப்பு தாத்தாவிற்கு எழுதுவது போல் எழுதினா வெட்டு படாது என்று..........நிச்சயமாக இதை பற்றி எழுதுகிறேன் விவாதிபோம்......... :lol:

நன்றி

தமிழ்தங்கை அக்கா

அக்கா எம்மை இணைத்து தான் சமூகம் நீங்க சொல்வதை ஏற்று கொள்கிறேன் ஆனா நான் இங்கே செய்வது போலவே சமூகத்திலும் செய்கிறேன் ஆனா சமூகத்தில் ஒன்று செய்து கொண்டு இங்கே இன்னொன்று செய்தா என்னால பொறுக்கவில்லை அக்கா அது தான் சொன்னேன்............மற்றும்படி வலைஞன் அண்ணாவிற்கு எதிர் கருத்து சொல்வது என் நோக்கமில்லை.......... :)

அத்துடன் நகைசுவையாக தமிங்கிலம் வந்து செல்லும் அதை நிற்பாட்டமுடியாது அக்கா குறிப்பாக என்னால் உடனடியா நிற்பாட்ட முடியாது...........அத்துடன் களம் முழுவது சுத்த தமிழில் எழுதுவது என்பது என்னால் முடியாத காரியம் என்றேன் சொல்லுவன் அக்கா........... :lol:

நன்றி

  • தொடங்கியவர்

மற்றது நகைசுவையாக தான் தமிங்கிலத்தில் பலர் எழுதுகிறார்கள் அவர்களிற்கு நல்ல தமிழ் தெரியும் என்பது என்னுடைய கருத்து..........

அதைத்தான் சொல்கிறோம். நகைச்சுவையாக நாம் எழுதும் சொற்கள் நாளடைவில் பழக்கமாகி - வழக்கமாகி - அவை இயல்பாகவே எமது பேச்சில் கலந்துவிடுகிற விபரீதம் பற்றியே நாம் கவலைகொள்கிறோம். இப்படித்தான் பல சொற்கள் இன்று இயல்பாகிப் போய்விட்டன.

உதாரணமாக நாம் களத்தில் நாம் இணையம், கணினி, வலைப்பதிவு, தரவிறக்கம் போன்ற சொற்களை மிக இயல்பாகவே பயன்படுத்தகிறோம். வெளியில் நாம் பிறருடன் கதைக்கும்போதும் இயல்பாகவே எமது பேச்சில் வருகிறது. நாம் இங்கே பிறந்து வளர்கிற இளையவர்களுடன் கதைக்கும்போது இப்படி ஒரு சொல்லை இயல்பாகப் பயன்படுத்தும்போது - அவர்களுக்கு சிலநேரம் அது விளங்காமல் இருக்கலாம். விளங்காவிட்டால் கேட்பார்கள். நீங்கள் இணையம் என்றால் Internet என்று விளங்கப் படுத்துவீர்கள். அப்போது அவர்களும் அதை உள்வாங்கிக் கொள்வார்கள்.

இங்கே தூய தமிழில் உடனடியாக எழுதவேண்டும் என்பதல்ல விடயம். அப்படிப் பார்க்கப்போனால் நாம் இன்று எழுதும் பலவற்றில் ஆங்கிலம் தவிர்ந்த வேற்றுமொழிச் சொற்களும் கலந்துள்ளன. ஆனால், நல்ல தமிழ்ச் சொற்கள் தெரிந்திருந்தும் அவற்றை நகைச்சுவைக்காக, கலகலப்புக்காக திணிப்பது/எழுதுவதை தவிர்க்க முயற்சிக்குமாறே சொல்கிறோம்.

தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்துவோம். நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவோம். யாழ் கருத்துக்களம் என்றாலே - தமிழில் கருத்தாடல் செய்யும் களம் தானே? இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், சிறு வயதில் இருந்து இங்கு வளர்ந்தவர்கள் எல்லோரும் தமிழில் எழுதப் பேச பழகுவதற்கு கருத்துக்களம் ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் தானே. உதாரணத்துக்கு கருத்துக்கள உறவு தூயாவே தான் யாழ் கருத்துகளத்தில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டது பற்றி தெரிவித்திருக்கிறார்.

எனவே, எதிர்கால விபரீதங்களையும் கவனத்தில் கொண்டு செயற்படுவது நல்லதல்லவா? புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா சொல்கிற சில விடயங்களுக்கு நான் உடன் படுகிறேன். தமிழ் ,தமிழ் என்று கதைப்பவர்களின் உறவினர்கள் ஆங்கிலத்தில் நிகழ்வுகளில் கதைப்பதுண்டு. இவர்களை உடனடியாக மாற்ற முடியாது. நாள் செல்லச்செல்ல மாற்றலாம்.

புலம் பெயர்ந்த நாடுகளில் கணவர் தாயகப் பற்றுடன் இருக்கும் போது மனைவி தாயகப்பற்று அற்றவராக இருக்கிறார். உடனடியாக மனைவியினை தாயகப்பற்றுக்கு மாற்ற முடியாது. ஆனால் நாள் செல்லச் செல்ல அவர்களை மாற்ற முடியும். (மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் உறவினர்களை என்ன செய்தாலும் மாற்ற முடியாது.)

மருத்துவர் தமிழ்குடிதாங்கியும், தொல்திருமாவளவனும் தமிழ்த்திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் சூடச் சொல்லச் சொன்னார்கள். அதற்கு தமிழ் உணர்வு அற்ற சிலர், தமிழ்க்குடிதாங்கியின் மகன் அன்பு மணியின் பிள்ளைகள் ஆங்கிலப்பாடசாலையில் கல்வி கற்கிறார்கள் என்றும் கேட்கிறார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

சன், ஜெயா தொலைக்காட்சிகளில் நேயர்கள் பங்கு பெற்றும் நிகழ்வுகளில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நேயர்கள் உரையாடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழகச் சூழ்நிலையில் அண்மையில் மறுத்துவர் தமிழ்குடிதாங்கியின் பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. அதில் நேயர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி நடாத்துபவர்கள் தூயதமிழில் கதைக்க, பங்கு பெறுபவர்கள் ஆங்கிலம் கலந்து கதைத்தார்கள். ஆனால் தற்பொழுது பங்கு பெறுபவர்கள் பலர், ஆங்கிலத்தைக் குறைத்து தூய தமிழில் பெரும்பாலும் கதைக்க முயல்கிறார்கள். நேற்று அவுஸ்திரெலியா தரிசனம் தொலைக்காட்சியில் மக்கள் தொலைக்காட்சியின் சொல் விளையாட்டு நிகழ்ச்சியினைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் நேயர் ஒருவர் கொம்பியூட்டர் என்று சொல்லி விட்டு மன்னிக்கவும் கணனி என்று சொல்லி கதைத்தார். காலப் போக்கில் மக்கள் தொலைக்காட்சி நேயர்கள் பலர் தூயதமிழில் கதைக்கப் பழகி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சன், ஜெயா தொலைக்காட்சிகளில் நேயர்கள் பங்கு பெற்றும் நிகழ்வுகளில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நேயர்கள் உரையாடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழகச் சூழ்நிலையில் அண்மையில் மறுத்துவர் தமிழ்குடிதாங்கியின் பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. அதில் நேயர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி நடாத்துபவர்கள் தூயதமிழில் கதைக்க, பங்கு பெறுபவர்கள் ஆங்கிலம் கலந்து கதைத்தார்கள். ஆனால் தற்பொழுது பங்கு பெறுபவர்கள் பலர், ஆங்கிலத்தைக் குறைத்து தூய தமிழில் பெரும்பாலும் கதைக்க முயல்கிறார்கள். நேற்று அவுஸ்திரெலியா தரிசனம் தொலைக்காட்சியில் மக்கள் தொலைக்காட்சியின் சொல் விளையாட்டு நிகழ்ச்சியினைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் நேயர் ஒருவர் கொம்பியூட்டர் என்று சொல்லி விட்டு மன்னிக்கவும் கணனி என்று சொல்லி கதைத்தார். காலப் போக்கில் மக்கள் தொலைக்காட்சி நேயர்கள் பலர் தூயதமிழில் கதைக்கப் பழகி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

சன் தொலைக்காட்சியில் "மலரும் மொட்டும்" சிறுவர் நிகழ்ச்சியை நடத்தும் அனிதா குப்புசாமி அவர்கள் நிகழ்ச்சியில் பங்பெற்றும் பிள்ளைகள் தமிழில் உரையாடல் செய்வதற்கு ஊக்குவிப்பதைக் காணலாம். இப்படி ஒரு சிலர் தான் செயற்படுகினம். ஆனால் அநேகர் ஆங்கிலம் கலந்து கொன்னைத் தமிழ் பேசினால் தான் நாகரிகம் என்று நினைக்கினம். ஏன் யாழ் களத்தில் கூட தீவிர விவாதங்களில் ஈடுபடுபவர்களில் சிலர் இடையிடயே தமிழில் அமைக்கக் கூடிய வசனங்களை ஆங்கிலத்தில் மட்டும் அமைக்கினமே.. எல்லாம் ஆங்கிலத்து மேல ஒரு இது...??! :lol::D

நாமும் தமிங்கலத்தைப் பாவிச்சிருக்கிறோம். தனித் தமிழில் தான் உரையாடினம் என்று சொல்ல முடியாது.

தமிழில் கலைச் சொல் உருவாக்கம் பற்றி யாழில் பேசப்படுகிறது. ஆனால் சிலர் தங்கள் கருத்துக்கள் கருத்தாழம் கொண்டவை என்று காட்டவோ என்னவோ.. இல்ல சோடிக்கவோ என்னவோ..இடைக்கிடை ஆங்கிலப் பதங்களை மட்டும் பாவிச்சு கருத்து எழுதினம். அவர்கள் ஆங்கிலத்தைப் பாவிக்கிறது தவறல்ல. அது பதங்களின் அறிமுகத்துக்கு உதவும். ஆனால் ஆங்கிலப் பதங்களுக்குரிய தமிழையும் சேர்த்து பதிந்தால் நன்றாக இருக்கும். தமிழுக்குப் பயனளிக்கும். உதாரணமாக.. உலக வெப்பமுறுதலை (Global warming) இப்படிக் குறியிடுவதால்.. பயனாளிகள் தகவல்களை பெறும் ஆற்றல் அதிகரிப்பது மட்டுமன்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லறிமுகமும் பாவனையும்.. பாவனைக்குரிய அர்த்தமும் கூடிய அளவுக்கு தெளிவான விளக்கங்களும் கிடைக்க வாய்ப்புண்டு.

நாங்க கூட இங்கு வாறது கற்ற தமிழ் எம்மை விட்டு ஓடிடக் கூடாது என்பதற்கும் சேர்த்துத்தான்..! :P :rolleyes:

Edited by nedukkalapoovan

வெரி சொறி! :)

இந்த திட்டத்திற்கு எம்மால் ஆதரவு தர முடியாது! :P

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி தமிங்கிலத்தை என்னால் தவிர்க்கமுடியாது.

இதற்காக நீங்கள் என்னில் கோபித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வேண்டுமானால் என்னை நீங்கள் யாழின் திமிங்கிலம் என்று இங்கு அழைக்கலம். அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ;)

வெரி சொறி எகெயின்!

[நான் எழுதும் சொற்களில் திமிங்கிலம் வந்தால் மட்டறுத்துனர்கள் தாராளமாக நான் எழுதுபவற்றை வெட்டலாம், தூக்கலாம்! :lol: ]

வெரி சொறி! :)

இந்த திட்டத்திற்கு எம்மால் ஆதரவு தர முடியாது! :P

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி தமிங்கிலத்தை என்னால் தவிர்க்கமுடியாது.

இதற்காக நீங்கள் என்னில் கோபித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வேண்டுமானால் என்னை நீங்கள் யாழின் திமிங்கிலம் என்று இங்கு அழைக்கலம். அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ;)

வெரி சொறி எகெயின்!

[ நான் எழுதும் சொற்களில் திமிங்கிலம் வந்தால் மட்டறுத்துனர்கள் தாராளமாக நான் எழுதுபவற்றை வெட்டலாம், தூக்கலாம்! :) ]

கவனம் :lol: , நீங்கள் இப்பிடி சொன்ன என்ன வெட்டு கொத்து விளாதெண்டு நினைப்போ? அந்த ஒரு வரி போதும் தமிங்கிலத்திலை ஒரு சொல்லு இருக்கிற உங்கடை முழு கருத்தையும் தூக்க :P . இனி உங்களுக்கு கொண்டாட்டம் தான். :D

கருத்துக்களை தூக்கினால் பரவாயில்லை. என்னை தூக்காதவரை பிரச்சனை இல்லை... :lol:

வெரி சொறி! :lol:

இந்த திட்டத்திற்கு எம்மால் ஆதரவு தர முடியாது! :P

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி தமிங்கிலத்தை என்னால் தவிர்க்கமுடியாது.

இதற்காக நீங்கள் என்னில் கோபித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வேண்டுமானால் என்னை நீங்கள் யாழின் திமிங்கிலம் என்று இங்கு அழைக்கலம். அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ;)

வெரி சொறி எகெயின்!

[நான் எழுதும் சொற்களில் திமிங்கிலம் வந்தால் மட்டறுத்துனர்கள் தாராளமாக நான் எழுதுபவற்றை வெட்டலாம், தூக்கலாம்! :lol: ]

இதை தான் நான் எதிர்பார்தேன் ஒருத்தராவது என்னை மாதிரி சொல்லுவார்களா என்று அதே மாதிரி நம்ம குரு சொல்லிட்டார் வெரிகுட் குரு அப்படியே கீப்பப் பண்ணுங்கோ நானும் தொடர்கிறேன் குருவே.............. :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு அவ்வப்போது தனி ஆங்கிலத்தில் செய்திகளை இணைப்பவர்களே தமிங்கிலத்திற்கு எதிராக கூச்சலிடுகின்றனர் :D

ஆகா! அப்ப நான் எடுத்தது ஒரு நல்ல முடிவு எண்டு சொல்லுறீங்கள்! :D

அப்படியானால்..

நானும் ஒரு காலத்தில் தமிங்கிலத்துக்கு எதிராக கூச்சலிடுவேனோ?? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது நாம் ஒரு கருத்தை பதிய முனையும்போது இந்த தலைப்பை நினைவு படுத்தினோம் என்றால், ஓரளவு உங்களால் முன்வைக்கப்பட்ட தமிங்கிலம் என்ற பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

அடுத்ததாக எங்களால் முன்வைக்க முயலும் கருத்தை விட்டு வெளியே நகரமுனையும்போது, அதாவது அளவுக்கு அதிகமாக அலட்ட முனையும்போதும் இந்த தமிங்கிலம் பிரச்சினை சந்தரப்பம் உள்ளது.

எது எப்படியிருப்பினும் முயற்சி செய்தால் பலனுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு அவ்வப்போது தனி ஆங்கிலத்தில் செய்திகளை இணைப்பவர்களே தமிங்கிலத்திற்கு எதிராக கூச்சலிடுகின்றனர் :D

ஆங்கிலத்தில் வைப்பவங்களில் தப்பில்லை. அது ஒரு மொழி. ஆனா தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதுறது என்றது ஒரு அடையாளமாகப் போட்டுது. அங்கே தமிழ் மறைக்கப்படுது. அதனால் நான் நிறையப் பிரச்சனை. ஆங்கிலத்தில் எழுதக்ககே அது தமிழுக்கு ஒரு சிதைவையும் கொடுக்காது. ஆனா தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதுறது என்றது தமிழின் சொற்களை மறைச்சு இடத்தைத் தொலைக்க வைக்குது.

இங்க எல்லோரும் சின்னப்பிள்ளைகள் மாதிரி அடம் பிடிக்கின்றது நல்லாகத் தோணல்லை. முக்கியமாகக் கலைஞன் அண்ணா குழந்தைப் பிள்ளை மாதிரி ஏன் அடம்பிடிக்கின்றியள்.

இங்க எல்லோரும் சின்னப்பிள்ளைகள் மாதிரி அடம் பிடிக்கின்றது நல்லாகத் தோணல்லை. முக்கியமாகக் கலைஞன் அண்ணா குழந்தைப் பிள்ளை மாதிரி ஏன் அடம்பிடிக்கின்றியள்.

நான் பேபி நான் அடம்பிடிகலாம் தானே மதனராசாமாமா..............கலைஞன் அண்ணாவா உண்மையா குருவே சொல்லவில்லையே அவ்வளவு வயசா உங்களுக்கு............. :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா! அப்ப நான் எடுத்தது ஒரு நல்ல முடிவு எண்டு சொல்லுறீங்கள்! :)

அப்படியானால்..

நானும் ஒரு காலத்தில் தமிங்கிலத்துக்கு எதிராக கூச்சலிடுவேனோ?? :lol:

<<

கலைஞா,

நீங்கள் விளையாட்டாகச் சொன்னாலும் தங்கள் கருத்து வேதனை அளிக்கிறது. உங்களுக்கு முடிந்தவரையில் தமிங்கிலம் தவிர்ப்பது நல்லதுதானே?

எங்கள் தேசியத்தின் குரல் பாலா அண்ணை ஆங்கிலத்தில் எத்தனை பாண்டித்தியம் பெற்றவர் ஆனால் அவர் தமிங்கிலம் கலந்து குழப்புவதில்லை. மிகத்தெளிவாகத் தமிழில் கதைக்கும் போது தமிழ் சொற்களையே பயன் படுத்துவார். "தமிழரிடம் நாம் தமிங்கிலம்தான் கதைப்போம். மாற்றவே முடியாது என்பது வீண் பிடிவாதம் தானே?

பலருக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டிய நீங்கள் இப்படிச்செய்யலாமோ கலைஞா? சிந்திப்பீர்களென நினைக்கின்றேன்.

நன்றி.

தமிழ்தங்கை,

பிரச்சனை என்னவென்றால் எனக்கு தமிழும் அரைகுறை, ஆங்கிலமும் அரைகுறை...

நான் தமிழில் தனித்து இருந்துவிட்டால் உள்ள கொஞ்ச நஞ்ச ஆங்கிலமும் மறந்து போகும்..

மற்றது, அளவுக்கு அதிகமாக தமிழில் கதைப்பதால் சில விபரீதங்களிற்கு ஆளாக நேரிடுகின்றது..

சொன்ன சிரிக்ககூடாது...

நான் பல தடவைகள் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு மறதியில் எங்கட ஆக்கள் எண்டு நினைச்சு தமிழில் கதைக்க தொடங்கிவிடுவேன்... ஒரு முறை ஒரு புரபசருடன் அப்படி கதைத்தபோது அவர் என்னடா திடீரென்று இவனுக்கு நடந்தது என்று ஒரு மாதிரியாகப் பார்த்தார்...

இதேபோல் வேற்று இன நண்பர்களுடன் கதைத்துக் கொண்டு இருக்கும்போதும் திடீரென்று என்னை அறியாமல் தமிழில் கதைக்க தொடங்கிவிடுவேன்.. பிறகு நிலமையை அறிந்து சமாளிச்சு போடுவன்..

இப்படி இங்கு திமிங்கிலம் கதைக்கின்றேன் என்று முறைப்பாடு செய்தாலும், வெளியில் மற்ற வலத்தால் பிரச்சனை வருகின்றது. தமிழ் வரக்கூடாத இடங்களில் வாய் தடுமாறி ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழ் வருகின்றது..

என்றபடியால்... இடைக்கிடை ஆங்கிலத்தில் கலந்து அடிப்பது பிழை என்று நினைக்கவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கலைஞன் அண்ணா

இப்படிச் சொல்ல வெக்கமாக இல்லையா? நீங்கள் என்ன பால் குடியா இரண்டையும் கலந்து கதைக்கின்றதற்கு. பேசாமல் தமிழை மறந்து போட்டு எனிமேல் ஆங்கிலத்தில மட்டும் கதையுங்கோவன். அது புண்ணியமாகப் போகும்.

என்றபடியால்... இடைக்கிடை ஆங்கிலத்தில் கலந்து அடிப்பது பிழை என்று நினைக்கவில்லை...

ஜெனரலின் இந்த ஆக்கபூர்வமான கருத்தை வரவேற்கிறேன்............சகல விதத்திலும் இதற்கு நான் ஒத்துழைப்பு நல்குகிறேன்.............நீங்க சொன்ன தமிழில் புரோப்புடன் இருந்தவுடன் கதைத்த சந்தர்ப்பம் அதிகம்..........அதுக்கு காரணம் புரோபிற்கு தெரியாம லெக்சர்கோலில இருந்து யாழிற்கு வாறதாகவும் இருக்கலாம் கண்டுகாதையுங்கோ............ :P :lol:

ஆகவே இறுதிவரை கொள்கையில் தளறகூடாது என்பதை ஜெனரலிடல் அன்புகட்டளை இடுகிறேன்......... ;) :lol:

இப்படிக்கு ஜெனரல் ஜம்மு பேபி.......... :lol: ;)

Edited by Jamuna

அறிவியல், கணினி, இணையம் போன்றவற்றை பற்றி பேசும்போது ஆங்கிலம் வருமே அதற்க்கு என்ன பண்ணுவது?

இந்த திமிங்கிலத்தில் நானும் சிலவேளை மாட்டுப்படுகின்றேன். அவ்வாறு இருந்தால் மன்னியுங்கள். புத்தன் அந்தப்பாட்டு இதுதான்பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ மௌவல் மௌவல்உன் பூவிழி பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் மலருமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

இந்த பாடலில் எங்கே ஆங்கிலம் வருகிறது?

ஆம்பல் - தாமரை

மௌவல் - காட்டுமல்லிகை

Edited by வானவில்

ஆம்பல் - தாமரை

மௌவல் - காட்டுமல்லிகை

இப்படி ஒரு விளக்கம் இருகிறதா எனக்கு இன்றைக்கு தான் தெரியும்.............நன்றி உங்கள் விளக்கதிற்கு வான்வில் அண்ணா......... :lol:

அப்ப இந்த பாட்டுக்கு விளக்கம் என்ன...............ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட் ஒன்றாக சேர்ந்தா ................ :P

'ஒரு கூடை சூரிய ஒளிக்கதிர் ஒரு மூடை சந்திர ஒளிக்கதிர் ஒன்றாக சேர்ந்தால்'

இப்படி பாடினால் நீங்கள் பாட்டை கேட்கமாட்டீங்கள் என்றுதான் 'ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட் ஒன்றாக சேர்ந்தா' என்று பாடி இருக்கிறார் போல.

கவிஞர் மரக்கறி அல்லது மீன் யாவாரம் செய்பவர் போல இருக்கு.. அல்லது ஏதாவது சந்தையில் நின்று இந்தப் பாட்டை எழுதி இருக்கலாம்...

இப்படி பாடினா பாடலையே கேட்க மாட்டாங்களாம் குருவே அப்ப களத்தில் எழுதினா கேட்பாங்களா உது எப்படி இருக்கு குருவே........... :P

கவிஞர் அநேகமாக மீன் மாக்கேட்டில இருந்து தான் எழுதி இருக்க வேண்டும் குருவே........ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.