Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

By T YUWARAJ

28 AUG, 2022 | 04:59 PM
image

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565

  • கருத்துக்கள உறவுகள்

உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் தமிழ்வாணன் துவாரகேஸ் முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளார்!

உயிரியல் துறையில்... அகில இலங்கை ரீதியில், தமிழ் மொழி துறையில்... தமிழ்வாணன் துவாரகேஸ் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்!

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ், உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இன்று அவரது இல்லத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மருத்துவதுறையின் விஞ்ஞானியாக பல கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்பதே தனது இலட்சியம் என சாதனை படைத்த மாணவனானா துவாரகேஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கல்வியினை திட்டமிட்டு கற்கவேண்டும் எனவும் சரியான முறையினை தேர்வுசெய்து கற்கவேண்டும் எனவும் கஸ்டப்பட்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

வைத்திய நிபுணர் தமிழ்வாணன் – வைத்தியர் பகீரதி தம்பதியினரின் இரண்டாவது மகனான துவாரகேஸ் பாடசாலை மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டங்களில் பல சாதனைகளைப்படைத்துள்ளார்.

இதேநேரம் இவரது இலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கு.சுகுணனும் குடும்பத்துடன் வருகை தந்து மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

IMG_9015.jpg

IMG_8976.jpg

IMG_8973.jpg

https://athavannews.com/2022/1296406

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to உயிரியல் துறையில்... அகில இலங்கை ரீதியில், தமிழ் மொழி துறையில்... தமிழ்வாணன் துவாரகேஸ் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்!
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and text

 

May be an image of text that says 'ල್ಂದುು පയ දరමలතු பரீட்சைத் திணைக்களம் இலங்கை Department of Examinations Sri Lanka G.C.E. (A/L) EXAMINATION- 2021 (2022) Examination Year Name G.C.E.(A/L) EXAMINATION 2021(2022) THAMILVANNAN THUWARAGESH Index Number 8142335 NIC Number 200226500152 District Rank Island Rank Z-Score 2.9886 Subject Stream BIOLOGICAL SCIENCE Subject Result PHYSICS A CHEMISTRY A BIOLOGY A COMMON GENERAL TEST 090 GENERAL ENGLISH A'

தமிழ்வாணன் துவாரகேசிற்கு... மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். 👏

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
முகநூலில் பார்த்தேன். வித்தியாசமான சாதனையாக இருந்ததால் பதிந்துள்ளேன்.
அதன்  நம்பகத்தன்மை பற்றி, வாசகர்களின் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்.

 

யாழ்மாவட்டம்... 1 முதலாம் நிலை.
அகில இலங்கை... 22 ஆம் நிலை கலைப்பிரிவு.
செல்வி.கேசவன் உஷா
(தீபா என்ற வெள்ளைக்காரி)
ஊடகக்கற்கை A
வரலாறு A
தமிழ் A
வறுமையென்பது ஒரு பெரும் சவால்.
இந்தநிலையை அடைவதற்கு அவள் பெரும்பாடுகளை அடைந்திருக்கின்றாள் என்றே சொல்லவேண்டும். எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முன்னுக்கு வந்துள்ளார்.

தந்தையும், தாயும் தமிழீழத் தேசியத்திற்காக முன்நின்று உழைத்தவர்கள். இறுதிப்போர்க் களங்களில் வீரத்துடன் போராடிய தந்தை வீரச்சாவடைந்து உரமாகிப்போக, அதே போர்க்களத்தில் போரிட்டுப் படுகாயமடைந்து ஆரோக்கியமிழந்த தாயின் அன்றாட ஏழ்மையான வாழ்வில் இப்போது தன்னைத்தலை நிமிர்த்திக் கொண்டாள் என்றே சொல்லவேண்டும்.

இதுவரை நான் எந்தப்பிள்ளையினுடைய பெறுபேற்றையும் முகநூலில் போட்டதில்லை. ஆனால் இன்று இவளின் பெறுபேற்றினையல்ல. வறுமையான வாழ்வில் இருந்துகொண்டு இந்த நிலையினை அடைந்ததை எண்ணியே எழுதவேண்டும் என்று கருதுகின்றேன்..

அவளுடைய கனவுகள் எல்லாம் நிறைவேறும் காலம் வரும் விரைவில் நல்லதே நடக்கும். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபுகினும் கற்கை நன்றே. உன்னுடைய முயற்சிகளைக் கைவிடாமல் முன்னேறு வாழ்வில் நல்ல நிலைகளை அடையலாம்.
Copied

யாழ்ப்பாணத்தான்

May be an image of 1 person, standing and outdoors

May be an image of text that says '4:01 PM 36 G.C.E.(A/L) EXAMINATION- 2021(2022) 2021 (2022) 2021 Examination G.C.E.(A/L) EXAMINATION Year 2021 Name USHA KESAVAN Index Number 8371830 NIC Number 200263300802 District Rank 1 Island Rank 22 Z-Score 2.4274 Subject Stream ARTS'

May be an image of text that says '4:01 PM 36 Z-Score 2.4274 Subject Stream ARTS > HISTORY OF SRI LANKA & EUROPE > COMMUNICATION & MEDIA STUDIES A TAMIL A COMMON GENERAL TEST 034 GENERAL ENGLISH F Print Other Examination Results'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Telephone Number (Office) 2226896 (Principal) principal@ Office) Admin) (Admin): Parameswar www.jhc.edu.lk Deputy Principal (Edu Deu): JAFFNA யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி JAFFNA HINDU COLLEGE 28.08.2022 B.Sc,LLB Attorney N PGDE. G.C.E (A/L) Results 2021 3a-41 2AB- 20 Stream Bio Science Physical Science Commerce Non 2AB 10 3a 13 26 1 7 2 1'

No photo description available.

May be an image of text that says 'Physical Science 3a NADESAMOORTHY SIVAMYNTHAN THIRUKKUMARAN THEJASVENAN SRIKONES PRATHEEP ARUDCHELVAN IRATHISHANTH SHANMUGAVADIVEL MATHUJAN PARISHITH INUSHAANTH AANCHIKAN Tamil Tamil English Tamil 11 14 13 KURUSHEN THANESHGUMAR AARUTHIRANN BALACHANDRAN PIRASANTH KANESAVEL SARANJAN PETER DIAUS ANOLD KAJALAXSANAN MAATHAVAN 16 29 Tamil Tamil Tamil JEYAHARAN GUNASEELAN AROGANAN Tamil English 35 38 46 THILLAISELVAN T”INUJAN PAVINDRAN Tamil English English Tamil Tamil SUTAKARAN VITHURSHAN JEGAANANTHAM PITANAVAN VIGNESWARAN VITHUSAN 64 65 2AB English 86 99 ATHITHAMOORTHY English 68 VAKEESAN YATHURSANAN English English English English 74 106 124 127 130 &Senthilmaran College Hindu Jaffna Jaffna JAFFNA HINDU COLLEGE pag.'

  • கருத்துக்கள உறவுகள்
(28) வெளிவந்த உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் காரைதீவு மண்ணில் பிறந்த மாணவன் வைத்திய நிபுணர் டாக்டர் தமிழ்வண்ணன் அவர்களின் புதல்வர் துவாரகேஷ் அகில இலங்கை ரீதியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
 
302240785_2035983309936962_1295755595855
 
 
301141571_2035983406603619_4033969907107
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

301367398_1085622915410903_8470542953467

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

ஒரு இலட்சத்து... 71 ஆயிரத்து 497 பேர், பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி!

2021ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இன்று (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்ய அதிபர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இணையம் ஊடாக விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

அவர்களில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

விண்ணப்பித்த 49 பேரின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1296454

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை!

அகில இலங்கை ரீதியில்... மட்டக்களப்பு மாணவன் சாதனை!

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த லோ.கிசோபன் கணித துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

கொம்மாதுறையினை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் கணித பிரிவில் இந்த சாதனையினை படைத்து பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1296499

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்👏👏👏

பல்கலைக்கழக அனுமதி உயர்தரத்தில் தோற்றிய எல்லோருக்கும் கிடைக்காது. ஆனால் பிற தொழிற்கல்விகள் மூலம் நிபுணத்துவத்தை அடைந்து வாழ்வில் முன்னேற சரியான பாதையை தேட இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகேஸ், கிசோபன், உஷா ஆகியோரோடு, கல்வியில் சாதனைபடைத்துவரும் இளையதலைமுறைக்கு வாழ்த்துகள். போட்டி நிறைந்த, வாய்ப்பகளுக்காகவே போராட வேண்டிய சூழல் நிறைந்த நாட்டில் ஒரு தமிழ் இனமாகப் பெரும் அழிவுகளை எதிர்கொண்டுவருபவர்களென்ற வகையிலே அனைத்துச் சாதகமான வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற வேண்டும். சிங்களம் பொருமியடித்து அழிவுகளைக் கட்டமைத்ததும் இந்த வளர்சியைக் கண்டே என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் திரும்பி பார்க்க வைத்த மாணவி

 

எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ] உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார். 2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்,

 

https://thinakkural.lk/article/203769

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says "J/Jaffna Vembadi Girls' High School G.C.EA/L 2021 BEST PERFORMANCE Results No.Of Students 3a 2AB 2AC A2B ABC 34 34 20 7 17 15"

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

May be an image of text that says "No 1 NAME OF THE CANDIDATE Best performance for BIOSYSTEMS TECHNOLOGY 2 3 JAYANTHIKA KIRUBASKARAN NIVETHIKA JOKALINKAM Medium 4 Results T KEERTHTHIKA ANPALAGAN 3B AVERAGE Z-SCORE LATHUSHA JEYENTHIRA T 1.6386 2BC DISTRICT RANK T BCS 1.1955 ISLAND RANK 11 T 457 0.8937 B2C 22 0.8159 1141 27 1844 29 2047"

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாணவி தேசிய ரீதியில் சாதனை!

யாழ். மாணவி தேசிய ரீதியில் சாதனை!

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையைப் பெற்றுள்ளார்.

ஊடகக்கற்கை, வரலாறு, தமிழ் ஆகிய மூன்று பாடநெறிகளுக்கும் குறித்த மாணவி 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

மாற்றுத் திறனாளியான குறித்த மாணவி உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்தே தனது கல்வியை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றார்.

இவரது தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்த நிலையில் வறுமையின் மத்தியில் தயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1296677

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி

By T. SARANYA

30 AUG, 2022 | 09:42 AM
image

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையைப் பெற்றுள்ளார்.

ஊடகக்கற்கை, வரலாறு, தமிழ் ஆகிய மூன்று பாடநெறிகளுக்கும் குறித்த மாணவி 3ஏ சித்திகளைப் பெற்றார்.

IMG-20220829-WA0051.jpg

மாற்றுத் திறனாளியான குறித்த மாணவி உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்தே தனது கல்வியை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றார்.

இவரது தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்த நிலையில் வறுமையின் மத்தியில் தயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/134637

  • கருத்துக்கள உறவுகள்
உயிரியல் பிரிவில் கேகாலை மாவட்டத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் தமிழ் மாணவன்!
(செய்தி - ரா.கமல்)
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பூனுகல தோட்டத்தை சேர்ந்த மகேந்திரன் துஷ்யந்தன் எனும் மாணவன் உயிரியல் பிரிவில் கேகாலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். தரம் 1-13வரை எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் தேசியக் கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டு இரண்டாவது தடவையாக தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றியே இவர் இச்சாதனையை படைத்துள்ளார். 3 பாடங்களில் A தர சித்தியை பெற்று 2.7134 எனும் வெட்டுப்புள்ளியில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 22 வது இடத்தையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் பாடசாலை பரீட்சாத்தியாக புனித மரியாள் பாடசாலை மூலமாக தோற்றி 2A, C சித்தியையும் 1.8003 வெட்டுப்புள்ளியையும் பெற்றிருந்த போதிலும் வைத்தியத்துறைக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காதது காரணமாக, மீண்டும் இரண்டாவது முறையாக தோற்றி இவர் இச்சாதனையை படைத்துள்ளார். விடாமுயற்சியும், கடின உழைப்பும் இவரின் இந்த வெற்றிக்கு மூலக்காரணமாக இருந்துள்ளது. முதற்தடவையில் குறைவான பெறுபேறுகளை பெற்று தோல்வியை தழுவிய மாணவர்களுக்கு இம்மாணவனின் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. கேகாலை போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் எந்தவித வசதிவாய்ப்புக்களும் இல்லாமல் தமது சுயக்கற்றலில் மூலம் இவ்வாறான சாதனைகளை படைக்கமுடியுமாக இருந்தால் இதுபோன்ற இன்னும் எத்தனையோ மாணவர்கள் திறமையானவர்கள் இருந்தும் வாய்புக்கள் இன்றி வேறு வேறு பிரிவுகளில் உயர்தரத்தை தொடர்கின்றனர். எட்டியாந்தோட்டை புனித மரியாளில் உயர்தரம் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்பாடசாலைக்கான வளங்களை கல்வித்துறையினரும் அரசியல் தலைமைக்கும் பெற்றுக்கொடுக்கின்ற பொழுது எதிர்காலத்தில் பல துஷ்யந்தன்களை உருவாக்க உருவாக்கமுடியும். சிறந்த பெறுபேறுகளால் கேகாலைக்கு பெருமை சேர்ந்த அம்மாணவனை கேகாலை கல்வி சமூகம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
May be an image of 1 person and text
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.