Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார

By T. SARANYA

01 SEP, 2022 | 09:10 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.ஆனால் இந்தியா குறுகிய காலப்பகுதியில் 3 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

பிற தரப்பினரிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அவசியம் என அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் தொடர்ந்து கடன் பெறுவதை அரசாங்கம் பரிந்துரைக்கிறதா?

கடன் சுமை அதிகரிக்கப்படுமாயின் அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது,கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது,கடன் பெறுவதற்கான யோசனை முன்வைக்கப்படுகிது,ஆனால் கடனை திருப்பி செலுத்தும் யோசனை முன்வைக்கப்படுவதில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடுபவர்கள், விதிக்கப்படும் நிபந்தனைகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் கடினமானது எனவும் மக்களின் விரோதத்தை தீவிரப்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தினால் அரசாங்கம் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு முகம் கொடுக்க நேரிடும். இலங்கையின் உள்ளக நிர்வாகத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஏன் தலையிடுகிறார்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தனி இராச்சியமாக மாற்றியமைக்கும் விடயதானத்தை அமெரிக்க தூதுவர் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட அமெரிக்க தூதுவருக்கு அதிகாரமில்லை.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் ஒத்துழைப்பு வழங்கினார். முன்னாள் கோட்டபய ராஜபக்ஷவை போராட்டத்தின் ஊடாக விரட்டினார், ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். தற்போதும் அமெரிக்க தூதுவர் போராட்டத்திற்கு அனுசரனை வழங்குகிறார்.

இலங்கையில் போராட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஈடுப்படுகிறார். அதற்காக நிதி செலவு செய்யப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பிறிதொரு இராச்சியத்தை பெற்றுக்கொடுக்க அமெரிக்க தூதுவர் முயற்சிப்பது தமிழ், முஸ்லிம் மக்களுக்காக அல்ல,அது அமெரிக்கா, இலங்கையை பலவீனப்படுத்தி, இராச்சியமாக வேறுப்படுத்தி எம்.சி.சி.ஒப்பந்தந்தை செயற்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு உண்டு.

இலங்கையை யுத்த தளமாக மாற்றியமைக்கும் தேவை அமெரிக்காவுக்கு உண்டு அமெரிக்கா தூதுவர் ஜூலி சங்கிற்கு பாராளுமன்றில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். இதனை பாராளுமன்ற ஹன்சாட்டில் பதிவு செய்யுங்கள் என்றார்.வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கை பங்கு போட...   இந்தியா, சீனாவுடன்... அமெரிக்காவும் வந்திட்டுது.
மூன்றாவது... உலக யுத்தம், நம்ம  வடக்கு, கிழக்கிலை தான் ஆரம்பிக்கப் போகுது போலை. 😮 😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

முன்னாள் கோட்டபய ராஜபக்ஷவை போராட்டத்தின் ஊடாக விரட்டினார்,

கோத்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின முதல் ஆள் இவர், இப்போ அவர் விரட்டியடிக்கப்பட்டதற்காக அழுகிறார். இவர் ஒரு அரசியல் கோமாளி, இலங்கையின்  சுப்பிரமணியசாமி!

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சம்பந்தி ...😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நம்ம சம்பந்தி ...😀

எதுக்கு முட்டாளின் கருத்தை வைச்சு முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போட துடிக்கிறீங்க இப்போ?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தி விமல் வீரவன்ச தரத்துக்கு இறங்கி வந்துள்ளார். 
சிங்களவருக்கு இனவாதம் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என்பதற்கு இவரும் ஒரு சாட்சி.

"இலங்கையில் ஒரு இடது சாரியையும், கடும் நச்சுப் பாம்பையும் ஒன்றாக கண்டால், நச்சுப் பாம்பை விட்டுவிடுங்கள்"

இது தான் வாசு போன்றவர்கள் மீதான என் அபிப்பிராயம். நான் நினைப்பதை சரி என அடிக்கடி காட்டிக் கொள்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

"இலங்கையில் ஒரு இடது சாரியையும், கடும் நச்சுப் பாம்பையும் ஒன்றாக கண்டால், நச்சுப் பாம்பை விட்டுவிடுங்கள்"

இது தான் வாசு போன்றவர்கள் மீதான என் அபிப்பிராயம். நான் நினைப்பதை சரி என அடிக்கடி காட்டிக் கொள்கின்றார்.

இவர்களுக்கு என்ன நடக்குறது, நடந்தது என்று இப்போது தான் புரிகிறது போல நடிக்கிறார்கள்.

காசு வாங்காத கோஸ்டிகள் இப்ப புலம்புகிறது.

வாங்கியவர்கள், கமுக்கமாக இருக்கிறார்கள். கூட்டமைப்பிலும் வாங்கிய மகான்கள் உள்ளனர்.

இவர் காசு பார்க்கவில்லை. அதுதான் புலம்புகிறார். காசு கொஞ்சம் கையில், கிடைத்தால், அடங்கிவிடுவார்.

அடித்த ஆடிக்காத்தில், அம்மியே பறக்குது. சுளகு எம்மாத்திரம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எதுக்கு முட்டாளின் கருத்தை வைச்சு முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போட துடிக்கிறீங்க இப்போ?

யார் முட்டாள் ? 

சிங்களமா? தமிழா ? 

முடிச்சுப்போடுவது நீங்கள், நானல்ல’ 😏

(அடுத்து வரப்போகும் செய்திகள் எம்மை தலையில் துண்டைப்போட வைக்கும். எதற்கும் ஒரு துண்டை எடுத்து கவனமாக வைத்திருப்போம், நாம் எல்லோரும் 😀)

1 hour ago, nunavilan said:

சம்பந்தி விமல் வீரவன்ச தரத்துக்கு இறங்கி வந்துள்ளார். 
சிங்களவருக்கு இனவாதம் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என்பதற்கு இவரும் ஒரு சாட்சி.

அவRன் பூநகரி 100 ஏக்கர் காணியை விட எப்பD மனம் வரும் ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

கோத்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின முதல் ஆள் இவர், இப்போ அவர் விரட்டியடிக்கப்பட்டதற்காக அழுகிறார். இவர் ஒரு அரசியல் கோமாளி, இலங்கையின்  சுப்பிரமணியசாமி!

அப்படிக் கணித்துவிட முடியாது. இவர்போன்றோர்தான் சிங்களத்தின் கருத்துருவாக்கிளாகச் செயற்படுவோராவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

"இலங்கையில் ஒரு இடது சாரியையும், கடும் நச்சுப் பாம்பையும் ஒன்றாக கண்டால், நச்சுப் பாம்பை விட்டுவிடுங்கள்"

இது தான் வாசு போன்றவர்கள் மீதான என் அபிப்பிராயம். நான் நினைப்பதை சரி என அடிக்கடி காட்டிக் கொள்கின்றார்.

உண்மை. இல்லையென்றால் முதலாவது சனாதிபதித் தேர்தல் பரப்புரையின்போதென்று நினைக்கின்றேன். கிளிநொச்சி றொட்டிக்கோ மைதானத்தில் நின்று இலங்கையில் பிரிவினையை எதிர்ப்பதோடு, நாமெல்லோரும் இலங்கைச் சகோதரர்கள் என்று சிவப்புச்சாயம் பூசிய றோகண விஜயவீரவால் கூறமுடிந்ததென்றால், இவர்கள் இடதுசாரிகளா? இடதுசாரி முகமூடியணிந்த பச்சை இனவாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

"புலம்பெயர் புலிகளே" இதை நான் சொல்லவில்லை, பொருளாதாரத்தில் நாடு முடங்கும் வரை இலங்கையரசு, அரசியல்வாதிகள் உங்களை இப்படித்தான் அழைத்தார்கள். இப்போ மாற்றி போற்றினாலும் உள்கிடக்கையில் அது இருந்துகொண்டே இருக்கும் என்பதற்கு ஓர் சிறு உதாரணம்! இல்லாத விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு காலத்திற்கு காலம் தடைவிதிப்பு நடந்தேறிக்கொண்டிருக்கிறது, அது அவர்களின் பயம் உண்மையை எதிர்கொள்ள, இல்லை முட்டாள்த்தனம், அல்லது பொழுதுபோக்கு ஏதோ ஒன்று. புலம்பெயர்ந்தோரை இலங்கையர் என்று பாசத்தோடு அழைக்கும் பாராளுமன்றில் அண்மையில் நமது முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது புலிகளுக்கெதிரான தடையை நீக்கும்படி, அவர் வேண்டுமென்றே அந்தக்கோரிக்கையை வைத்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது. அவரின் கோரிக்கையை பைத்தியக்காரத்தனம் என்று சரத் பொன்சேகா விவரித்தார், இப்போ இந்த வாசுதேவ நாணயக்கார வேறொரு கதையெழுதுகிறார். சிங்களத்தின் மனநிலையை வெளிக்கொணருவதற்கு முதல்வரின் கோரிக்கை உதவியுள்ளது. என்னேரமும் தம் அலுவல் முடிந்தவுடன் இந்தப்புலம் பெயர்ந்தவர்களின் தடை அமுலுக்கு வரலாம்! ஏன் நம்ம சுமந்திரன் முன்பு பலதடவை சொல்லியிருக்கிறார், புலம்பெயர்ந்தோரின் விருப்பத்திற்கு நாம் இங்கு அரசியல் செய்ய முடியாது என. ஆகவே நின்று நிதானித்து செயற்படுங்கள், உங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த பணம், அதை எவ்வாறு முதலிடுவது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளது!             

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சிறப்பு, நன்றி! முதலிட முனைவோர் சிந்திக்க வேண்டிய கருத்து. சிந்திப்பார்களா? 

2 hours ago, satan said:

பாராளுமன்றில் அண்மையில் நமது முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது புலிகளுக்கெதிரான தடையை நீக்கும்படி, அவர் வேண்டுமென்றே அந்தக்கோரிக்கையை வைத்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.

உங்களின் ஊகம் சரியானதெனவே நினைக்கின்றேன்.நானும்  அப்படித்தான் நினைத்தேன்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.