Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார்.

இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2022/1298779

  • கருத்துக்கள உறவுகள்

அணில் ஏறவிட்ட நாய்க்குச் சமானம் இந்தியாவின் நிலைப்பாடு... 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நிலவரம் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவலை !!

இலங்கையின் நிலவரம் குறித்து... கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவலை !!

தற்போது நிலவும் நெருக்கடியானது இலங்கையில் மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு உட்பட, போராட்டக்கார்கள் மீதான சமீபத்திய நடவடிக்கை குறித்து நியூசிலாந்து கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் நியூசிலாந்து மீண்டும் வலியுறுத்தியது.

அத்தோடு இலங்கையின் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அமுல்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இதேவேளை 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறைகள் நடைபெறாதமை காரணமாக இலங்கையில் சாட்சியங்களை சேகரிக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணி தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் முழுமையாக ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2022/1298796

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

நாட்டில்... நல்லிணக்கத்தை ஏற்படுத்த, அர்த்தமுள்ள நடவடிக்கை வேண்டும் – ஜப்பான், அமெரிக்கா !!

சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, ஒரு முக்கிய நடவடிக்கையாக இவற்றுக்கு தீர்வை காணவேண்டும் என கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் பயங்கரவாத தடை சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தாம் வரவேற்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஆனால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2022/1298794

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு

இலங்கையில்... பாலின அடிப்படையிலான, வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு.

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அயர்லாந்து கவலையை வெளிட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்போம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அயர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2022/1298784

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

இலங்கை... மனித உரிமை மீறல்களுக்கு... பொறுப்புக் கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்.

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான, ஜனநாயக மற்றும் பாதுகாப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியறுத்தியுள்ளார்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலை வெளியிட்ட அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை மீறியமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல்போனவர்கள் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாணவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

அத்தோடு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்டமை, வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் நடவடிக்கை மற்றும் காணி அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

https://athavannews.com/2022/1298764

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின்  இனப்பிரச்சினை  இந்தியாவை  தாண்டிச்செல்ல  தயாராகிறது  என்று  அர்த்தம்

அதற்காக  உழைத்த  அனைத்து மக்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்போம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் சுத்துமாத்தை அறியாத அயர்லாந்தை என்ன செய்வது?

4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை... மனித உரிமை மீறல்களுக்கு... பொறுப்புக் கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்.

13 வருடங்களாக பொறுப்பு கூறுகிறார்களா அம்மணி?
நீங்களும் வருடத்துக்கு ஒருக்கால் வந்து இப்படி ஒரு அறிக்கை விட்டு விட்டு போவீர்கள் என சுத்துமாத்து சிறிலங்கா அறியும்.  எந்த முன்னேற்றமும் இல்லை.
போர் நடக்கும் உக்ரேனில் இருக்கும் நீங்கள் வன்னியில் போர் நடக்கும் போது பெட்டியை கட்டியது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

13வது சட்டத்தை நடைமுறைப்படுத்தி இந்தியா தன்னை பலப்படுத்தவே முனைகிறது.

இதனால் தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து.

இந்தியா ஒரு வசனத்தை வைச்சுக்கொண்டு செய்யிற தெருக்கூத்து இருக்கே.....சொல்லி வேலையில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

பாவம் இந்தியா! சீனா பக்கம் சாயும் இலங்கையை கட்டுப்படுத்த இதுதான் கடைசி துருப்புசீட்டு என நினைத்து, அப்பப்போ இதை காட்டி ஏதோ தமிழரையும் சிங்களத்தையும் கட்டி வச்சிருக்கிறமாதிரி கனவு, ஆனால் நிலைமை மாறி இலங்கை இந்தியாவை மறைமுகமாக அச்சுறுத்தி நன்மை அடைந்துகொண்டு வருகிறது  ஆனால் நேரடியாகவே சவால் விடும் நேரம் நெருங்குகிறது. நாட்டை எல்லா நெருக்கடிகைளிருந்தும் கைதூக்கி விட்ட தமிழரை துவம்ஷம் செய்துபோட்டு குற்றவுணர்வு இல்லாமல் வீரக்கதை பேசிக்கொண்டு முதலிட அழைக்கும் இலங்கையை நம்பி ஏமாந்தாலும், ஏனோ இன்னும் அதுக்குப்பின்னால் திரியுது. தமிழருக்கு ஆதரவு கொடுத்தாலே இலங்கையை கட்டுப்படுத்த முடியும் இந்தியாவும் பாதுகாப்பாக இருக்க முடியும் இருந்தும் இதுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு தமிழர்மேல்?  கைக்குள் இருந்த பறவையை பறக்க விட்டிட்டு வலையோடு அலையும் காலத்தை  எதிர்நோக்கி இந்தியா நகருகுது.        

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கோரிக்கைகளோ, கூப்பாடுகளோ இலங்கை அரசை எதுவுமே செய்யப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த வெற்றுக் கோரிக்கைகளும் கூப்பாடுகளும் கூட தமிழ் மக்களின் நலன்களுக்காக முன்வைக்கப்படவில்லை என்பது இதை முன்வைக்கும் மேற்கின் ஜனநாயகப் போலிகளுக்கும் தெரியும், இலங்கையரசிற்கும் தெரியும். ஆகவே இந்தக் கூட்டமும் பத்தோடு பதினொன்றாகக் கலைந்துவிடும்.

மீளப் பலம்பெற்றுவரும் சீனச் சார்பு ராஜபக்ஷேக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கைகளிலேயே இனி மேற்குலகும் இந்தியாவும் ஈடுபடும். இதில் தமிழ் மக்களின் நலன்கள் மீண்டும் காற்றில் புழுதிபோல அடிபட்டுச் சென்றுவிடும். சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு எமது தாயகத்தில் தங்குதடையின்றி முன்னரைப்போலவே தொடர்ந்து நடக்கும். 

ஆனால்,  எமது தாயகம் மீதும், எமது உறவுகளின் இழப்புக்களின் மீதும், எமது மாவீரர்களின் தியாகங்கள் மீதும் எமது உரிமைகள் மீதும் எமக்கிருக்கும் அக்கறை இருக்கும்வரை எமது விடுதலைக்கான தீ எரிந்துகொண்டேயிருக்கும். அத்தீயே காலத்தின் ஓட்டத்தில் எமக்கான பாதையொன்றினை மீளவும் திறக்கும். அதுவரை அத்தீயினை அணையாது காப்பதே எமது கடன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

ஏன் இவ்வளவு வெறுப்பு தமிழர்மேல்? 

காரணம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். தமிழ்த்தேசியத்தின் எழுச்சியென்பது இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தில் தொடர்ச்சியாக இருந்துவரும் வட இந்திய எதிர்ப்புணர்விற்கு ஈழ விடுதலைப் போராட்டம் வடிகாலாக அமைந்துவிடக் கூடாதென்பதற்காகவே அதனை தானே முன்னின்று அழித்தது. அகன்ற தமிழ்த்தேசியத்தினை புலிகள் தலைமையில் ஈழத் தமிழர்கள் தமிழகத்துடன் சேர்ந்து உருவாக்கிவிடுவார்கள் என்கிற அச்சமே இந்தியாவை இன்றுவரை தமிழர் அழிப்பில் முன்னின்று செயற்படத் தூண்டி வருகிறது என்றே நான் நினைக்கிறேன். 

அத்துடன், 1987 இற்குப் பின்னர் ஈழத்தமிழருக்குத் தான் செய்துவருகின்ற துரோகங்களால் இந்தியா தன்னை நிரந்தரமாக தமிழரிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டதும், தனது துரோகத்தனத்தால் ஈழத்தமிழர்களுடனான உறவை இனிமேல் தன்னால் எப்பாடு பட்டும் மீள புதுப்பிக்க முடியாது என்கிற யதார்த்தத்தினை இந்தியா முற்றிலுமாகப் புரிந்துகொண்டிருப்பதும், அவர்களை எதிரிகளாக பார்க்கும் நிலமைக்கு இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

காரணம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். தமிழ்த்தேசியத்தின் எழுச்சியென்பது இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தில் தொடர்ச்சியாக இருந்துவரும் வட இந்திய எதிர்ப்புணர்விற்கு ஈழ விடுதலைப் போராட்டம் வடிகாலாக அமைந்துவிடக் கூடாதென்பதற்காகவே அதனை தானே முன்னின்று அழித்தது. அகன்ற தமிழ்த்தேசியத்தினை புலிகள் தலைமையில் ஈழத் தமிழர்கள் தமிழகத்துடன் சேர்ந்து உருவாக்கிவிடுவார்கள் என்கிற அச்சமே இந்தியாவை இன்றுவரை தமிழர் அழிப்பில் முன்னின்று செயற்படத் தூண்டி வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.

நூறு வீதம் பயமே காரணம். இந்தியத்தமிழர் தமிழ் என்கிற உணர்வை விட பாரதமாதா புதல்வர் என்று சொல்வதில் பெருமை கொள்பவர். ஆனால் எதை நினைத்து இந்தியா பயப்படுகிறதோ அதை நோக்கி அவர்களை உந்தி தள்ளுகிறது. தமிழகம் நினையாத ஒன்றை நோக்கி தீவிரப்படுத்துகிறது.  இன்று விடுதலைப்போராட்டத்தை முறியடித்து எதிரிகளை அதிகப்படுத்திக்கொண்டது,  வெகு விரைவில் இது எதை நினைத்து பயந்ததோ அதை நிறைவேற்ற அதுவே காரணமாக அமைந்த்துவிடலாம். வேலிக்கு வைச்ச முள் ஒருநாள் காலை தைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.