Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தமிழரசு மத்திய குழு தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க தமிழரசு மத்திய குழு தீர்மானம் | Srilanka Tamil Remove Sambandhan Political

காணி கையகப்படுத்தும் நடவடிக்கை

நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும், தமிழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பௌத்த மயமாக்கப்படும் நிலையில், அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் காணிகளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த அவர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலைமையால் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பம்

மூப்புக் காரணமாக உடல் நிலை தளர்வடைந்துள்ள இரா.சம்பந்தன், நாடாளுமன்ற அமர்வுகளில் சீராகக் கலந்துகொள்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவுள்ளது. இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார்.

அதனால் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சந்தர்ப்பங்களும் குறைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை தொடர்பாகக் ஆராயப்பட்டு, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/srilanka-tamil-remove-sambandhan-political-1663702368

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை மட்டுமல்ல….
கூட்டமைப்பில் உள்ள எல்லோரையும் தூக்கி, குப்பைத் தொட்டியில் போட வேண்டும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சம்பந்தன்... இதுவரை, சிறப்பாக செயல் பட்டதாலேயே... 
தமிழ்நாட்டில்  வீடும், கொழும்பில் பங்களாவும்... கொடுக்கப் பட்டுள்ளது. 😎

அத்துடன்... கனடா அமைப்பு ஒன்றினால், 
"வாழ்நாள் நிரந்தர  செயல் தலைவர்" என்ற பட்டமும்...  
சில வருடங்களுக்கு முன் கொடுக்கப் பட்டதை... நினைவில் கொள்ள வேண்டும். 😁

வாற தீபாளிக்கு... தீர்வு வர இருக்கும் நிலையில், 
சம்பந்தனை... பதவியில் இருந்து விரட்டியடிக்க  வேண்டாம் என்று 
கேட்டுக் கொள்கின்றோம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்... இதுவரை, சிறப்பாக செயல் பட்டதாலேயே... 
தமிழ்நாட்டில்  வீடும், கொழும்பில் பங்களாவும்... கொடுக்கப் பட்டுள்ளது. 

இந்தியாவுக்கும் சிங்களத்துக்கும் சிறப்பாக செயல்பட்டதாலேயே என்று வந்திருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன்... கனடா அமைப்பு ஒன்றினால், 
"வாழ்நாள் நிரந்தர  செயல் தலைவர்" என்ற பட்டமும்...  
சில வருடங்களுக்கு முன் கொடுக்கப் பட்டதை... நினைவில் கொள்ள வேண்டும். 😁

இந்த பட்டம் கனடாவில் கொடுத்த தலீவருக்கும் அய்யாவின் வயதுதானுங்கோ....பொழுது போக்கும் பட்டமந்தா😆ன்

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் உடல்நிலை பிரச்சனை போ. திண்ணைக்கு அடிபடுகிறாங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

இவை தொடர்பாகக் ஆராயப்பட்டு, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

இஞ்ச பார்ரா நம்ம  வெடியரசன் மாவையும்  சம்பந்தனை அகற்றும்  குழுவில இருக்கிறாராம்...... 😂
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிச்ச கதையாய் எல்லே கிடக்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இஞ்ச பார்ரா நம்ம  வெடியரசன் மாவையும்  சம்பந்தனை அகற்றும்  குழுவில இருக்கிறாராம்...... 😂
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிச்ச கதையாய் எல்லே கிடக்கு 😁

அந்தக் குழுவிலை… சுமந்திரனும் இருக்கிறார்.
சுமந்திரனை…. கூட்டமைப்புக்குள் கொண்டு வந்து சேர்த்ததே சம்பந்தன் தான்.
வளர்த்த கடா… மார்பில் பாய்ந்த கதை, சம்பந்தனுக்கு நடக்குது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் செயல்படாமல் இருக்கிறார், என்று…
இவர்கள் இப்பதான் கண்டு பிடித்திருக்கிறார்கள். 😁
அந்த ஆள்… 40 வருசமாய், செயல்படாமல்… சும்மாதான் இருக்கிறார். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் செயல்படாமல் இருக்கிறார், என்று…
இவர்கள் இப்பதான் கண்டு பிடித்திருக்கிறார்கள். 😁
அந்த ஆள்… 40 வருசமாய், செயல்படாமல்… சும்மாதான் இருக்கிறார். 😂 🤣

இனி சுமந்திரனுக்கு 90 வயது வர தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டதை கண்டு பிடிப்பாராக்கும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இனி சுமந்திரனுக்கு 90 வயது வர தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டதை கண்டு பிடிப்பாராக்கும் 😁

சுமந்திரனும்…. ஆள் தானாக, போகும்  எண்டு பார்த்து களைச்சுப் போனார்.
அதுக்கு இன்னும்… மூன்று பேரை, சோடி கட்டிக் கொண்டு….
சம்பந்தனை விலத்திப் போட்டு, அந்த இடத்திலை குந்த… ஆயத்தப் படுத்துறார்.
மற்றதுகளும்… வெள்ளி பார்க்கிற சனம்தானே…
இழுத்த பக்கம் எல்லாம், இழு படுகுதுகள்.

சுமந்திரன் செய்த வேலைகளுக்கு…. முதலில் அவரைத்தன் தூக்கி வெளியிலை போட வேணும். 
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் காணிகளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த அவர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உடல் நலம் உள்ளவராக இருக்க வேண்டும். சிங்களவர் கதிர்காமத்தில் போய் நிற்பார்கள்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்ச பார்ரா நம்ம  வெடியரசன் மாவையும்  சம்பந்தனை அகற்றும்  குழுவில இருக்கிறாராம்...... 😂
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிச்ச கதையாய் எல்லே கிடக்கு 😁

இளசுகள் தானே துள்ளி விளையாடட்டும் விடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

உடல் நலம் உள்ளவராக இருக்க வேண்டும். சிங்களவர் கதிர்காமத்தில் போய் நிற்பார்கள்.😁

கட்சியில் சேர்ந்த நாளிலிருந்தா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கட்சியில் சேர்ந்த நாளிலிருந்தா?

சிங்களவர்கள் கதிர்காமத்தில் போய் நிற்காததால் கட்சி தொடங்கிய நாளில் இருந்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வயோதிபர் இனி உங்களால் இயங்க முடியாது  என்ற இந்த சின்ன விடயத்தை  பல ஆணடுகள் தமிழ் கட்சிக்கு தலைவராக இருந்தவருக்கு. சொல்லி கொடுக்க வேண்டி இருக்கிறது    தமிழர் பிரச்சனை பற்றி இவருக்கு தெரியுமா?.  அதனை சொல்லி கொடுக்க ஒரு குழு அமைத்தால். நல்லது 😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனி சுமந்திரனுக்கு 90 வயது வர தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டதை கண்டு பிடிப்பாராக்கும் 😁

இது எப்படி இருக்கு 👆

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும், தமிழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பௌத்த மயமாக்கப்படும் நிலையில், அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

21 hours ago, ஈழப்பிரியன் said:

மூப்புக் காரணமாக உடல் நிலை தளர்வடைந்துள்ள இரா.சம்பந்தன், நாடாளுமன்ற அமர்வுகளில் சீராகக் கலந்துகொள்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவுள்ளது. இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார்.

அவரின் வயது நிலை, செயல் திறன்  தெரிந்தும் அவரை தெரிந்தெடுத்தவர்களை என்ன செய்வது?

சம்பந்தப்பட்டவருக்கு தெரியவில்லை தன் நிலை, மற்றவர்கள் நினைவூட்டபோகினமாமெல்லே. ஏதோ இனிமேல் எல்லாம் கிரமமாக நடக்கபோகிறமாதிரி கதைக்கினம். இவ்வளவு காலமும் இவர்களும் அவரோடு கூட இருந்தவர்கள்தானே? என்ன தமக்கு பதவி வேண்டும் அவ்வளவே. சர்வதேசத்திடம் போய் பயங்கரவாதத்தை அழிக்க உதவி வேண்டி தமிழரை  கொன்று குவிக்கும்போது,  இளைஞரை உசுப்பிவிட்டவர்கள், நிஞாயத்தை விளக்க முன்வரவில்லை ஒதுங்கி ஒளித்துவிட்டார்கள். நிஞாயமான தீர்வை வைக்கும்படி சர்வதேசம் சிங்களத்தை வற்புறுத்தியபோது நாட்டில் வன்முறை வெடிக்கும் மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை என்று எந்த தயக்கமும் இல்லாமல் மஹிந்தா சொன்னபோது; சர்வதேசமும் நம்ம தலைவர்களும் வாய் மூடி, தலை சாய்த்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு இனத்தின் சம உரிமையை  பறிக்க ஆயுதத்தை ஏந்துவது சரியென்றால், தமது உடைமையை உயிரை காப்பதற்காக ஆயுதம் ஏந்தியத்தில் தப்பென்ன கண்டீர்கள்? எதற்காக எல்லோரும் சேர்ந்து எம்மக்களை அழைத்தீர்கள் என்று  கேட்க துப்பில்லை யாருக்கும், எமது  மக்கள்  எதற்காக எமக்கு வாக்களித்தார்கள்? அவர்களது வேணவா என்ன? என்று சொல்லி நிஞாயம் கேட்க வக்கில்லை, கலவரம் செய்து மற்ற இனத்தை வஞ்சிப்பவர்களுடன் வாழ்வதில் மகிழ்ச்சி காண்பதாக அறிக்கை விடுகிறார் ஒருவர், மற்றவர் சிங்கள மக்கள்  விரும்பாத தீர்வு நமக்கு வேண்டாம் என்கிறார், அதை வாக்கு கேட்கும்போது சொல்லி கேட்டிருக்கலாமே? தீவபாவளிக்கு தீர்வு, பொங்கலுக்கு தீர்வு என்று நிலா காட்டுவது.  தாங்களும் கதைப்பதில்லை, கதைப்பவர்களையும் கலவர பயங்காட்டி வாயை அடக்குவது.  அப்ப  சிங்களவன் உதல்ல உதுக்கு மேலேயும் கதைப்பான். இப்பதான் அவருக்கு வயது போனமாதிரி எல்லோரும் நித்திரையால எழும்பி அதுவும் மக்கள் எழுப்பி விட்டிருக்கிறார்கள். இவர் கடந்த எழுபது வருடங்களாக அசைவற்று இருந்ததை யாரும் கவனிக்கவில்லை, சிங்களவன் செய்தவை மட்டும் தெரியப்போகுதாக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன், @alvayan@Kapithan@குமாரசாமி, @nunaviIan, @Kandiah57@satan

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இரா.சம்பந்தனை பதவி நீக்க குழு நியமனம் –  மறுத்தார் எம்.ஏ சுமந்திரன்!

இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் இரா.சம்பந்தனை விலக்குவதற்காக அவருடன் கலந்துரையாட மத்திய குழு கூட்டத்தின் போது குழுவொன்று நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இவ்வாறு வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1300422

  • கருத்துக்கள உறவுகள்

முதல்நாள் ஒரு அறிக்கை விடுவது, மறுநாள் இல்லை என்று மறுப்பறிக்கை விடுவது இவர்களுக்கு புதியது அல்லவே. நெருப்பில்லாமலே புகை வந்ததா? யாரோ சம்பந்தனுக்கு பிடிக்காதவர்கள் புரளி  கிளப்பிவிட்டு அவரின் கதிரையை பிடிக்க போகினம்  பாருங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2022 at 03:29, ஈழப்பிரியன் said:

வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

--- வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

22 minutes ago, satan said:

முதல்நாள் ஒரு அறிக்கை விடுவது, மறுநாள் இல்லை என்று மறுப்பறிக்கை விடுவது இவர்களுக்கு புதியது அல்லவே. நெருப்பில்லாமலே புகை வந்ததா? யாரோ சம்பந்தனுக்கு பிடிக்காதவர்கள் புரளி  கிளப்பிவிட்டு அவரின் கதிரையை பிடிக்க போகினம்  பாருங்கோ! 

 தமிழரசுக் கட்சியின்... மத்திய குழுக் கூட்டத்தில், இந்தக் குழு... அமைக்கப் பட்டது.
அதில் சுமந்திரன் உட்பட நால்வர் நியமிக்கப் பட்டுள்ளனர். -செய்தி.-

சுமந்திரனுக்கு... எங்கும் ஒற்றுமையாக இருந்து பழக்கம் இல்லை.
திடீரென்று எல்லாரையும்... கழட்டி விட்டுட்டு, குறுக்குசால் ஓடுவது அவரது பிறவிக்குணம்.

இப்படி அவர்  நடப்பது... இது முதல் முறை அல்ல.
கூட்டடமைப்பில் உள்ள மற்ற கட்சிகளின்  விடயத்திலும், 
ஐ.நா. விடயத்திலும், ஜனாதிபதி தேர்தல் விடயத்திலும், 
ஜனாதிபதிகள்  எவராக இருந்தாலும்... அவர்களை பின் கதவால் 
தனியே சந்திப்பதிலும்... அவரது குணம், பலமுறை வெளிப் பட்டது.

இந்த முறையும்... சுமந்திரன் மற்றவர்களை காட்டிக் கொடுத்துவிட்டு, 
சம்பந்தன் முன்  நல்ல பிள்ளைக்கு, நடிக்கின்றார்.
இது... மூன்றாம் வகுப்பு பிள்ளைகள் செய்யும் விளையாட்டு.
இவரைப் பற்றி... தமிழர் நன்கு அறிந்து விட்டார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

 இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். யாராவது கஷ்ரப்பட்டு ஒழுங்கு செய்யும் பேரணிகளில் நுழைந்து தான் பெயர் எடுப்பது, எல்லாவற்றுக்குள்ளும் தலையை நீட்டி கம்பீரமாக  படத்துக்கு தன்னை காட்டுவது, டக்கியரை போல எங்கும் எதிலும் தன் பெயர் இருக்க வேண்டும் என்று திரிவது, அறிக்கை விடுவது. இது சில துப்புக்கெட்ட  சுயநல வாதிகளின் பொதுக்குணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இரா.சம்பந்தனை பதவி நீக்க குழு நியமனம் –  மறுத்தார் எம்.ஏ சுமந்திரன்!

அட இரண்டு நாள் கொஞ்ச நிம்மதியாக இருந்திச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

அட இரண்டு நாள் கொஞ்ச நிம்மதியாக இருந்திச்சு.

உண்மைதான்….. போய்த் தொலையுது, என்று சந்தோசப் பட்டோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்….. போய்த் தொலையுது, என்று சந்தோசப் பட்டோம்.

கிட்டடியில போகத்தானே வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.