Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

By DIGITAL DESK 5

26 SEP, 2022 | 03:06 PM
image

( எம்.நியூட்டன்)

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து  யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணி  எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். 

அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது,  அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. 

தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர்  நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள். 

IMG-20220926-WA0010.jpg

தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர்  கொடி கம்பங்களை நாட்டினார்கள். அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.

இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் செய்ய முற்பட்ட போது முரண்பட்டனர் 

இதேவேளை , தியாக தீபத்தின் நினைவிடத்தை.  காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 

நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது , தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள். 

IMG-20220926-WA0005.jpg

கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர். 

அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர். 

தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர்.  அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் , தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது , அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர். அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு , மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றினார்கள். 

அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே  ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ,காங்கிரசினர்  தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த  தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர். மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர். 

IMG-20220926-WA0009.jpg

காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த நிலையில்  தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது. அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.

காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர். காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார். அவரை அங்கிருந்தவர்கள் அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். 

இவ்வாறாக  நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொண்ட அநாகரிக செயற்பாடு அப்பகுதியில் நின்ற மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. 

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது காவாலிக்கூட்டங்கள்தான் குடா நாட்டில் மிஞ்சி நிக்குதுகள்போல

கஜேந்திரகுமார் மற்றும் மணிவண்ணண் ஆகியோர் கூட்டமைப்பு தங்களைவிட எவ்வளவோ பறுவாயில்லை எனச் சனம் கதைக்கிறமாதிரி நடக்குதுகள்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nochchi said:

ஒரு நினைவிடத்தில் நிற்கிறோம் என்ற சிந்தனை கூட இல்லாமல் நீ பெரிது நான் பெரிது என சண்டை பிடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் அடிப்பட... சனம் வெறுத்து, டக்ளசுக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு விடுவார்கள்.
தங்களுடைய தலையிலேயே.. மண் அள்ளிப் போடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

DAN தொலைக்காட்சி மற்றும் ஈழநாடு பத்திரிகை போன்ற ஊடகங்களில் கொஞ்சமாவது ஊடக தர்மத்தை எதிர்பார்க முடியாதுள்ளது. மேலும், மேலும் உண்மைக்கு புறப்பான செய்திகளை வெளியிடுவதன் மூலம் மக்களினால் புறக்கணிக்கப்படக் கூடிய வாய்புகளை நீங்களாகவே உருவாக்க வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Elugnajiru said:

இப்போது காவாலிக்கூட்டங்கள்தான் குடா நாட்டில் மிஞ்சி நிக்குதுகள்போல

கஜேந்திரகுமார் மற்றும் மணிவண்ணண் ஆகியோர் கூட்டமைப்பு தங்களைவிட எவ்வளவோ பறுவாயில்லை எனச் சனம் கதைக்கிறமாதிரி நடக்குதுகள்

21 hours ago, தமிழ் சிறி said:

இவைகள் அடிப்பட... சனம் வெறுத்து, டக்ளசுக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு விடுவார்கள்.
தங்களுடைய தலையிலேயே.. மண் அள்ளிப் போடுகிறார்கள்.

உண்மை. 
தமிழ்ச்சிறியவர்களது கூற்று நடைபெறப்போகிறது.

21 hours ago, nunavilan said:

ஒரு நினைவிடத்தில் நிற்கிறோம் என்ற சிந்தனை கூட இல்லாமல் நீ பெரிது நான் பெரிது என சண்டை பிடிக்கிறார்கள்.

அப்படி அவர்கள் யாருமே நினைக்கவில்லை. நினைத்திருந்தால் இப்படி இழுபறிப்பட்டிருக்கமாட்டார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

DAN தொலைக்காட்சி மற்றும் ஈழநாடு பத்திரிகை போன்ற ஊடகங்களில் கொஞ்சமாவது ஊடக தர்மத்தை எதிர்பார்க முடியாதுள்ளது. மேலும், மேலும் உண்மைக்கு புறப்பான செய்திகளை வெளியிடுவதன் மூலம் மக்களினால் புறக்கணிக்கப்படக் கூடிய வாய்புகளை நீங்களாகவே உருவாக்க வேண்டாம்.

இவர்களது வேலையே தமிழர் என்றயெரில் தமிழினவிடியலுக்கு எதிரான விசமப் பரப்புரைகள் செய்வதே. குகநாதனுக்கு இன்னும் நோ மாறவில்லை. அதனாலவர் மாறமாட்டார் என்று நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நடந்த தியாகி திலிபனின் நினைவுநாளன்று  நடந்த சில விரும்பத்தக்கதகாத நிகழ்வுகளை தமிழ்த்தேசிய முன்னனி என்னும் அரசியல்கட்சியின்  மீது குற்றஞ்சுமத்தி நாளேடுகளிலும் ஏனைய ஊடாகங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கிக்கின்றன.அனைத்து ஊடகங்களிலும் ஒரேமாதிரியான ஒருவரால் எழுதப்பட்ட செய்தயையே அசு;சுப்பிசகாமல்  பிரசுரித்திருப்பதைப்பார்த்தால் இதன் பின்னனியில் இந்தியாவின் அரூபக்கரற்கள் இரப்பது புலனாகிறது. கடந்த பாலங்களில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திலிபனின் நினைவஞ்சலியை தமிழ்த்தேசிய முன்னணி ஏனயை கட்சிகளின் ஒத்துழைப்புடன் நல்லபடியாகவே  செய்திருந்தது.இம்முறை அதற்காகான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பில் இது வரை நினைவேந்தல்களில் பங்கெடுக்காத வேலன் சுவாமிகள் ,மற்றும் இந்தியாவின்  ஆர்எஸ்எஸசின் கைப் பொம்மையான சிவசேனாவின் உறுப்பினர்கள். மற்றும் இந்தியாவின் நலனகளைப் பேணுகின்ற  அதன் தமிழர் விரோதப் போக்கினைக் கண்டும் காணாமல் விடுகின்ற இந்ரிய சார்பு நிலையெடுப்பவர்களை மையமாகக் கொண்டு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தலிபன் நினைவேந்தல் அரசியல் மயப்படுத்தக்கூடாது என்ற கருத்துருவாக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. திலிபனே ஒரு அரசில் போராளி  தமிழ்களின் அரசியல் விடுதலைக்காக தன் உயிரையே ஆகுதியாக்கியவன். திலிபனின் சாவுக்கு இந்தியாவே பொறுப்பு. அதன் துரோகத்தனத்தை மக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் திலிபனின் நினைவஞ்சலி ஞாபகப்படுத்தும். சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மீண்டும் தமிழர்களைக் கருவியாக்க இந்தியா மீண்டும் முனைகிறது. அதற்கு இடையுறாக இருக்கும் திலிபனின் நினைவஞ்சலிகளில் குழபங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்களை களத்தில் இறக்கி விட்டு தனது ஆதரவு ஊடகங்கள மூலம் தனது  பக்கம் இழுக்க முடியாமல் இருக்கின்ற தமிழத்தேசிய மக்கள் முன்னணி மீது சேறடிக்கும் விசமப்பிரசாரத்தை முன்கெடுத்து வருகிறது. முன்னாள் போராளிகள் சிலரையும் இதற்குள்  சேரத்து  குழப்பியடித்து வருகிறது. நாளை கருணா பிள்ளையான் போன்றவர்களும் முன்னாள் போராளிகள் எங்களுக்கே திலிபனை நினைவு நாள் நடத்தும் உரிமை இருக்கிறது என்று கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.திலிபன் அனைவருக்கும் பொதுவானவன்  அவனை எல்லோரும் நினைவு கூரலாம். ஆனால்  எந்த இந்தியா திலிபனை முதுகில் குத்திக் கொன்றதோ அந்த இந்தியாவின் அடிவருடிகள் திலிபனை நினைவு கூருவதை தமிழ்மக்கள் ஏற்க மாட்டார்கள் .எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் அப்படியாகில் தமிழ்தேசிய முண்ணணியுடன் நேரடியாக யாராவது கதைத்து செய்தியை வெளிவிடுங்கோவன்.

32 minutes ago, புலவர் said:

15 hours ago, nunavilan said:

DAN தொலைக்காட்சி மற்றும் ஈழநாடு பத்திரிகை போன்ற ஊடகங்களில் கொஞ்சமாவது ஊடக தர்மத்தை எதிர்பார்க முடியாதுள்ளது. மேலும், மேலும் உண்மைக்கு புறப்பான செய்திகளை வெளியிடுவதன் மூலம் மக்களினால் புறக்கணிக்கப்படக் கூடிய வாய்புகளை நீங்களாகவே உருவாக்க வேண்டாம்.

இக்காணொளியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர் மறவன் புலவை சேர்ந்தவர். சிவசேனை இயக்கத்தை சேர்ந்தவர். ( பெயரை குறிப்பிட விரும்பவில்லை)
இந்தியா பின்னணியில் இருந்தது என்பதற்கு இவர் சான்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

புலவர் அப்படியாகில் தமிழ்தேசிய முண்ணணியுடன் நேரடியாக யாராவது கதைத்து செய்தியை வெளிவிடுங்கோவன்.

https://www.facebook.com/100045862067655/videos/3242407079408715/

  • கருத்துக்கள உறவுகள்

Former Nagaland Home Minister and George Fernandez Party Chief General Secretary paid homage at Dilipan Memorial in Eelam. For the first time, North Indian party celebrities have visited Eelam and expressed their support to Tamils.

309219077_162096029824240_57096576877220

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர முதல்வரின் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டது- சுகாஸ்

யாழ். மாநகர முதல்வரின் குழுவினாலேயே... தியாகி திலீபனின், நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டது- சுகாஸ்.

ஈ.பி.டி.பி யின் ஆதரவில் உள்ள யாழ். மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தலின்போது குழப்பத்தை ஏற்படுத்த சதி மேற்கொள்ளப்பட்டது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரான சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் விவகாரம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஈ.பி.டி.பி மணிவண்ணன், அரச புலனாய்வுப் பிரிவினரின் இயக்கத்தில் இயங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் சில வேற்று நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை மேற்கொள்ளும் தரப்பினரால் நினைவேந்தலை குழப்புவதற்கு பல்வேறுபட்ட சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் தேசிய அரசியலிலை கடத்துகின்ற, தமிழர்களுடைய அபிலாசைகளை முன்வைக்கின்ற ஒரு இடமாக, தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தினை பார்க்காமல் தமிழ் தேசிய அரசியலிலை நீக்கம் செய்து இந்தியாவிற்கு இருக்கின்ற வரலாற்று கடமையை தட்டிக் கழிக்கின்ற, மறைக்கின்ற ஒரு சதிதான் இங்கு நடந்துகொண்டு இருக்கிறது.

தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தில் அவரது அபிலாசைகளை கதைப்பது தான் முக்கிய கடமை.

தியாக தீபத்தின் அபிலாசைகளையும் ஐந்து அம்ச கோரிக்கைகளையும் அவ்விடத்தில் பேசாது வெறுமனே அழுது விட்டு செல்லுமாறு கூறுவது இந்தியாவை காப்பாற்றுகின்ற செயற்பாடு.

நினைவேந்தல்களில் அரசியல் கதைக்க கூடாது என்று கருதி இருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர்கள் தினங்களில் தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் இனத்துக்கு வழிகாட்டிய மாவீரர் நாள் உரையை ஆற்றி இருக்க மாட்டார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டபோது தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னெடுக்க எவரும் வரவில்லை.

இன்று தியாக தீபத்தை நினைவேந்துவதற்கு அடக்குமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக காட்டப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பலர் அடிபடுகின்றார்கள்.

மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய அமைப்புகளே பொதுக்கட்டமைப்பை பற்றி பேச வேண்டும்.

ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் இருக்கின்ற யாழ். மாநகர சபை முதல்வர் எவ்வாறு பொதுக் கட்டமைப்பற்றி பேசலாம்?

தியாக தீபத்தின் நினைவேந்தல் வழமையாக, அவர் உயிர்நீத்த நேரமான 10.48 மணிக்கு அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தவகையில், நினைவேந்தல் செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் உள்ள மணிவண்ணன் தரப்பினை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் முண்டியடித்துக் கொண்டு நல்லூரிலே 10.47 மணிக்கு தீபம் ஏற்றி இருக்கிறார்.

அதன்பின்னர் புதிய நேரத்தில் பாரம்பரிய நினைவேந்தல் குழுவினர் சரியாக 10.48 மணியளவில் நினைவேந்தலை முன்னெடுத்தனர். இங்கே நினைவேந்தலை குழப்பியது யார்?

10.46 இற்கு ஒரு காவடி வருகின்றது. வந்த காவடியானது மக்களை ஊடறுத்துக் கொண்டு சென்று பொதுச்சுடரையும் தாண்டிச் சென்று தாங்கள் முதலே நினைவேந்தல் சுடர் ஏற்ற வேண்டும் என முண்டியடித்தனர்.

அங்கேதான் நேற்றைய குழப்பத்திற்கான அடிக்கல் நாட்டில் வைக்கப்பட்டது.
வேலன் சுவாமிகளும், அடியாட்களை வைத்து இயங்குகின்ற முதல்வர் மணிவண்ணன் தரப்பினரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் தான் அந்தக் காவடியை அழைத்துக் கொண்டு வந்தார்கள் – என்றார்.

அதேநேரத்தில், ஜனநாயக போராளிகளது வாட்ஸப் குழுமத்தில், “கஜேந்திரன் எப்படியும் நாளைக்கு ஆட்களை கொண்டு வந்து விடுவான், நாங்கள் எப்படியாவது எங்கட ஆட்களை செற்பண்ணி அவையிட்ட இருந்து மைக்க அடிச்சென்றாலும் பறிக்க வேணும், போராளிகளுக்கு களங்கம் வந்தாலும் அது ஆறு மாசத்துக்குள் போய்விடும். ஒருத்தரும் அதைப்பற்றி யோசிக்க தேவையில்லை, மணி நீங்கள் அந்த காவடிக்கு இரண்டு பேரை செட் பண்ணுங்கோ” என கடந்த 25 ஆம் கதைக்கப்பட்டது என தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் சுகாஸ் வெளியிட்டிருந்தார்.

https://athavannews.com/2022/1301606

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் திலீபன்!

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/sachithananthan/posts/pfbid02aYAQQgKbazc2uQKgoCbTddgojCFMxCBFkyxKLGygtoPJRL4dzhi9m4vvq77nEZqEl

எவ்வளவுதான் ஊடகங்களை கைகளுக்குள் போட்டு பொயப் பிரசாரம் செய்தாலும் குழப்பங்களுக்குப் பின்'னால் இந';தியா இருப்பது தெளிவாகியுள்ளது.இதற்குத் துணைபோன அனைத்து ஊடகங்களும் தமிழின நலனுக்கு எதிரான ஊடாக விபச்சாரிகளே என்பது புலனாகிறது.தமிழர்களை மதவாதம் ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்சைவத் தமிழன் திலீபன்.
 
புரட்டாதி வளர்பிறை மூன்றாம் நாள் (சதுர்த்திக்கு முதல் நாள்)
திலீபன் இறந்தார் (1987 செஃப் 26).
5000 ஆண்டுகளுக்கு மேலான
இராவணன் இறந்த காலத்துக்கும் முந்தைய வழக்கம்
ஈமக் கடன்களை நிலா காட்டும் திதியில் ஆற்றுவது.
இந்த வழக்கத்தைப் பொதுவெளியில் மாற்றியோர்
கடந்த 400 ஆண்டுகளாகத்
தமிழர்களை அடிமை கொண்ட
கத்தோலிக்க கிறித்தவ மேலைத் தேயத்தார்.
இந்த ஆண்டு புரட்டாதி வளர்பிறை மூன்றாம் நாள்
நாளை புதன்கிழமை (28.09.22).
நாளை புதன்கிழமையே திலீபனின் நினைவு நாள்
தியாகச் சுடரின் ஈகை நாள்
அறவழி அண்ணலின் ஈமக் கடன் நாள்.
அடிமை கொண்ட அந்நிய மரபினரான
பாதிரிகளின் வழிகாட்டலில்
மண்ணின் மைந்தன்
மரபுகளின் விளைச்சல்
சைவத்தமிழன்
தியாகச் சுடர் திலீபனின்
நினைவு நாளைச்
சைவ மரபிலிருந்து மாற்றவே முடியாது.
சைவத் தமிழ் மரபைக் காக்கவே
புத்த கிறிஸ்தவ முகமதிய மேலாதிக்கத்திலிருந்து காக்கவே
தனது முன்னோர் தனக்கு காட்டிய மரபுகளைக் காப்பாற்ற
திலீபன் தன் உயிரையே ஈந்தார்.
சைவத்தமிழனுக்கு
சைவ மரபே நினைவு நாள் வழிகாட்டி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

இணைப்புக்கு நன்றி.

3 hours ago, வாலி said:

பாவம் திலீபன்!

உண்மை. வேதனையான காலம். தியாக தீபத்தின் ஆத்மா சாந்தியடையுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, புலவர் said:

எவ்வளவுதான் ஊடகங்களை கைகளுக்குள் போட்டு பொயப் பிரசாரம் செய்தாலும் குழப்பங்களுக்குப் பின்'னால் இந';தியா இருப்பது தெளிவாகியுள்ளது.இதற்குத் துணைபோன அனைத்து ஊடகங்களும் தமிழின நலனுக்கு எதிரான ஊடாக விபச்சாரிகளே என்பது புலனாகிறது.தமிழர்களை மதவாதம் ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

இந்தியா சிறிலங்காவை கையுக்குள் வைப்பதற்காககத் தொடர்ந்தும் தமிழின அழிவுக்கு உதவிவருகிறது. இதைவிட கீழ்த்தரமான இந்திய அரசியல் உண்டா? அன்னளவாக அரை மில்லியனைக் கொண்ட ஒரு இனத்தின் மீதான வன்மத்தை எவளவு காலத்திற்குத் தமிழினம் எதிர்கொள்வது. தமிழர்களும், தமிழ்த் தலைமைகளும் புதிய திசை நோக்கி நகர்வதே பொருத்தமானது. இந்தியாவின் பாதுகாப்பு அது இது என்று பாராது நாமும் சிறிலங்காவைப் போன்று நடப்பதே எமக்கான நீதியைக் காண வழிசமைக்கும்.
நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nochchi said:

தமிழ்த் தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் போய் ஒரு கப் தேநீர் குடித்து விட்டு வந்தாலே எல்லாம் வழிக்கு வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

தமிழ்த் தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் போய் ஒரு கப் தேநீர் குடித்து விட்டு வந்தாலே எல்லாம் வழிக்கு வரும்.

தமிழ் தேசியக் கூட்டுமைப்புக் கடைசிமட்டும் போகாது. புலத்திலிருந்து அப்படி முயற்சியைச் செய்தாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் யாருக்கெதிராக உண்ணாவிரதமிருந்தார்?

அவர்கள்தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். 

எத்தனை யுகங்கள் சென்றாலும், திலீபனும் பூபதியும் இந்திய பயங்கரவாதிகளுக்குச் சிம்ம சொற்பனம்தான்.

🙏

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு எப்பொழுதும் எமக்கு கழுத்து அறுத்துக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு மிண்டு கொடுப்பவர்களை தமிழ் மக்கள் இனம் கண்டு  ஒதுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ibc,dan,thinakural,veerakesarari,lankasri உடபட உனைத்து ஊடகங்களும் தமிழ்த்தேசி முன்னனி மீது கூசாமல் பழியைப் போட்டன. அனைத்தும் இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டங்கள். தமிழ்த்தேசிய மக்கள முன்னனி இந்தியாவுடன் அனுசரித்துப் டபோகாத காரணத்தாலேயே அதன் மீது சேறு பூசும் வேலைகளில் இந்தியாவின் அனுசரணையோடு இந்தத்தரகர்கள் வேலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

திலீபன் யாருக்கெதிராக உண்ணாவிரதமிருந்தார்?

அவர்கள்தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். 

எத்தனை யுகங்கள் சென்றாலும், திலீபனும் பூபதியும் இந்திய பயங்கரவாதிகளுக்குச் சிம்ம சொற்பனம்தான்.

🙏

2 hours ago, புலவர் said:

ibc,dan,thinakural,veerakesarari,lankasri உடபட உனைத்து ஊடகங்களும் தமிழ்த்தேசி முன்னனி மீது கூசாமல் பழியைப் போட்டன. அனைத்தும் இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டங்கள். தமிழ்த்தேசிய மக்கள முன்னனி இந்தியாவுடன் அனுசரித்துப் டபோகாத காரணத்தாலேயே அதன் மீது சேறு பூசும் வேலைகளில் இந்தியாவின் அனுசரணையோடு இந்தத்தரகர்கள் வேலை செய்கிறார்கள்.

இது தான் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.