Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் வாழிடங்களிடையே அமைக்கப்பட்ட சித்திரவதைகளின் தலைமைக் காரியாலயம்

 வீரதுங்கவின் பயங்கரவாதத்தின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான, தமிழர் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட சில அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு, யாழ்நகரின் இதயப்பகுதிகளில் ஒன்றான சுண்டுக்குளி பழைய பூங்காவில் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பீடத்தை அமைத்தார் "காளைமாடு" வீரதுங்க. 1979 ஆம் ஆண்டின் ஆடி மாதம் , மூன்றாம் வாரத்தில் இந்தச் சித்திரவதைக் கூடம் வீரதுங்கவினால் அமைக்கப்பட்டது. இப்பகுதியின் பாதுகாப்புக் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கென்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இப்பகுதிக்குள் வந்துசெல்வோர் அவதானிக்கப்பட்டு வந்ததுடன் அனுமதியும் கடுப்படுத்தப்பட்டது. 

ஒருகாலத்தில் அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளராகக் கடமையாற்றிய முனசிங்கவுடன் செய்தியாளன் என்கிற வகையில் நான் அவ்வப்போது சில விடயங்கள் குறித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பலாலியில் இயங்கிவந்த இராணுவப் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளராக பணிபுரிந்த முனசிங்க இந்த விசேட அடையாள அட்டை குறித்துக் கூறுகையில், "மூன்று விதமான அடையாள அட்டைகள் அப்பகுதியில் வசித்துவந்த மக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் இவை விநியோகிக்கப்பட்டன. சிவப்பு நிற அடையாள அட்டைகளை வைத்திருப்போர் சுதந்திரமாக இப்பகுதிக்குள் வந்து செல்ல முடியும். இவர்கள் ராணுவ தலைமைப் பீடத்திற்குள்ளும், பழைய பூங்கா சித்திரவதைக் கூடத்திற்குள்ளும் சுதந்திரமாகச் சென்றுவர முடியும். வெள்ளை அடையாள அட்டை வைத்திருப்போர், தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இருக்கும் இரண்டாம் நிலை காவலரண் வரையே செல்ல முடியும். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரித்தானிய அரச பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமாக விளங்கியிருந்தது" என்று கூறினார்..

 KingSangili2002.jpg

பழைய பூங்காவின் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியனின் சிலை

 முனசிங்க வடமாகாணத்திற்கான இராணுவ அதிகாரிகளின் உதவித் தலைவராகவும், இராணுவத்தின்  பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய மூத்த தளபதி.

 உளவுப்பிரிவிற்கு பச்சை அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதுபற்றி முனசிங்க தனது புத்தகம் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார், ஒரு ராணுவ வீரனின் பார்வையிலிருந்து : "எனக்கு பச்சை அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பாவித்து, பிரதான வாயிலின் உட்பக்கமாக அமைந்திருந்த ராணுவக் காவலரண் வரையே செல்லமுடியும். இதற்கப்பால் செல்லவேண்டுமென்றால் நியமனம் ஒன்றை முன்பதிவு செய்தபின்னரே செல்ல முடியும்".

 "1979 இல், இராணுவத் தலைமையகம் இப்பகுதியில் அமைக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களை கைதுசெய்து விசாரணைக்கு இழுத்துவந்தோம். அவர்கள் அனைவருமே விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விடயம் மட்டும் எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது, யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பழைய பூங்காவில் நடக்கும் கொடூரமான சித்திரவதைகள் பற்றி அவர்கள் தமக்குள் பேசிவந்தார்கள். இரவானதும் இப்பகுதியின் தெருக்கள் வெறிச்சோடி விட்டிருக்கும்".

ஆனால், முனசிங்கவிற்கு அங்கு நடந்தவைபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய அந்தக் கொடூரமான மாதங்களான ஆடி முதல் மார்கழி வரையான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். வட மாகாண ஒட்டுமொத்தத் தளபதி வீரதுங்க மற்றும் வடமாகாண ராணுவத் தளபதி ரணதுங்க ஆகியோரின் கீழ் முனசிங்க அக்காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் விசேட பிரிவொன்றும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

 தனக்கு வழங்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவை தனது திட்டத்திற்கு முழுமையாக வீரதுங்க பயன்படுத்திக்கொண்டார். கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டதுடன், இராணுவத்தினர் மிகக்கொடூரமாக போராளிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்தத் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டு, யாழ்ப்பாணத்து வீதிகள் வீசியெறியப்பட்டனர். இந்த சித்திரவதை முன்னெடுப்புக்கள் போராளிகள் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தன.

1979 ஆம் ஆண்டி முதல் அரைப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் குட்டிமணியும், தங்கத்துரையுமே என்று அரசு நம்பியதால், அவர்களே  வீரதுங்கவின் பிரதான இலக்காக இருந்தார்கள் என்று முனசிங்க கூறுகிறார். மார்கழி 5 ஆம் திகதி இடம்பெற்ற தின்னைவேலி வங்கிக் கொள்ளையின் பின்னர் பிரபாகரன் சற்று அமைதியாகிவிட்டிருந்தார். தனது கெரில்லா அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். வவுனியா பூந்த்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது பயிற்சி முகாமில் தங்கியிருந்த பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் தனது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். அதைவிடவும் அவருக்கு மேலும் சில பிரச்சினைகள் இருந்தன. முதலாவது ஈரோஸ் அமைப்புடனான பிணக்கு. 

Shankar Rajee.jpg

சங்கர் ராஜீ

நான் முன்னர் இத்தொடரில் குறிப்பிட்டது போல, ஈரோஸ் அமைப்பு லெபனானில்  பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடன் பயிற்சி தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தது. ஆகவே, ஆக்காலப் பகுதியில் ,செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியவையும் இந்தப் பயிற்சிகள் மூலம் பலன் பெறவேண்டும் என்று ஈரோஸ் அமைப்பு விரும்பியிருந்தது. வன்னியில் தங்கியிருந்த அருளர் மற்று சங்கர் ராஜீ ஆகிய ஈரோஸ் முக்கியஸ்த்தர்கள் பிரபாகரனிடமும் உமா மகேஸ்வரனிடமும் லெபனான் பயிற்சிகள் குறித்துப் பேசி அவர்களின் விருப்பத்தினையும் பெற்றிருந்தனர். புலிகளின்  மத்திய குழு இதுபற்றிக் கலந்தாலோசித்து, முதலாவதாக லெபனான் பயிற்சிக்குச் செல்வதற்கு உமா மகேஸ்வரனையும், விஜேந்திராவையும் தெரிவு செய்தது. இவர்களுக்கான பயிற்சிகள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில போராளிகளை அனுப்பி வைக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். மேலும், இந்தப் பயிற்சிகள் மூலம் ஆயுதங்களைத் தருவிப்பதற்கான வழியொன்றும் தமக்குக் கிடைக்கும் என்று பிரபாகரன் எண்ணினார். ஆகவே, லெபனான் பயிற்சிக்காக ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார்.

சுமார் மூன்று மாதகால லெபனான் பயிற்சியை முடித்துக்கொண்டு உமா மகேஸ்வரனும், விஜேந்திராவும் நாடு திரும்பியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட பயிற்சி அவர்களுக்குத் திருப்தியைத் தந்திருக்கவில்லை. லெபனானில் நடைபெற்ற சண்டைகளில் அவர்கள் பங்கேற்க விடப்படவில்லை என்பதுடன், புதிய ரக ஆயுதங்களைக் கையாளவும் அனுமதிக்கப்படவில்லை. "பெரும்பாலான நேரங்களில் நாம் முகாமில் தூங்கினோம், பெரிதாக எதனையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று அவர்கள் கூறினார்கள். இதனை மத்தியகுழுவில் உமாமகேஸ்வரன் முறைப்பாடாக முன்வைத்தார். அவர்கள் எந்த ஆயுதங்களையும் தம்முடன் கொண்டுவந்திருக்கவுமில்லை. பணவிடயத்தில் மிகவும் கண்டிப்பானவராக விளங்கிய பிரபாகரன், ஈறோஸ் அமைப்பினரை அழைத்து, பயிற்சி ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்ததுடன் மீதிப்பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறும் கேட்டார். ஈரோஸ் அமைப்பு அப்பணத்தை முற்றாகச் செலவழித்திருந்ததுடன், அதனை மீளச் செலுத்தும் முகாந்திரங்களும் அதற்கு இருக்கவில்லை. அனால், பிரபாகரன் விடாப்பிடியாக மீதிப்பணத்தினைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கவே, அவருக்கும் ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜீக்கும் இடையே பிணக்கொன்று உருவாகியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சங்கர் ராஜீ ஏமாற்றிவிட்டதாக பிரபாகரன் கருதியதால், புலிகளின் மத்திய குழுவின் முன்னால் வந்து ஈரோஸ் பக்க நியாயத்தைக் கூறவேண்டும் என்று சங்கர் ராஜீயை அவர் கேட்டார். ஆனால், சங்கர் ராஜி இதனை முற்றாக நிராகரித்து விட்டார். ராஜி இதுதொடர்பாக என்னிடம் பின்னர் பேசும்போது, "பிரபாகரன் இந்தப் பிரச்சினையை அமிர்தலிங்கத்திடம் கொண்டுபோனார். அமிர்தலிங்கம் ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தினார். நான் 285 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பணத்தை சிவசிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தேன்" என்று கூறினார்.

 

  • Thanks 2
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்

தமிழர் ஐக்கிய விடுதலை  முன்னணி புலிகளுக்காக பணம் சேர்க்கிறதென்றும், சிவசிதம்பரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வெளிநாடுகளிலிருந்து தமிழ் மக்கள் பணம் அனுப்பிவருகிறார்கள் என்றும் சங்கர் ராஜி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைத்த பணத்தைக் காட்டி அரசாங்கம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. ஈழம் எனும் தனிநாட்டினை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு உதவும்படி புலம்பெயர் தமிழ் மக்களிடம் அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் இணைந்து எழுதிய கடிதம் ஒன்றும் அரசாங்கத்திடம் சிக்கியிருந்தது. இக்கடிதத்தினையும் வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிரான பிரச்சாரத்தினை அரசாங்கம் முடுக்கிவிட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி எழுதப்பட்ட இக்கடிதம் புலம்பெயர் தமிழர்களை நோக்கி பின்வரும் வேண்டுகோளினை முன்வைத்திருந்தது,

அன்பான நண்பர்களே,

எமது விடுதலைப் போராட்டம் முக்கியமான தருணம் ஒன்றை அடைந்திருக்கும் வேளையில் தாயகத்திலும், சர்வதேச நாடுகளின் தலைநகரங்களிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு தமிழரும் தமது பங்கினை செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஈழத்தமிழர்கள் இதுவரை செய்துவந்த முயற்சிகள் போல், இன்னும் பல விடயங்களில் அவர்கள் செயற்பட முடியும் என்றும், எமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சுதந்திரத்திற்காகவும், எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் அரச செயற்பாடுகளில் திட்டமிட்ட வகையில் புகுத்தப்பட்டிருக்கும் புறக்கணிப்பிற்கு எதிராகவும் சர்வதேச அளவில் தொடர்ந்தும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். லண்டனில் இருந்து இயங்கிவரும் எமது சகோதரகள் இதுவரை காலமும் எடுத்துவந்த தம்மாலான முயற்சிகளுக்கு நாம் நன்றிகூறும் அதேவேளை, எமது புலம்பெயர் தமிழர் சமூகம் குழுக்களாகப் பிரிந்து இயங்குவதையும், தனிமனிதர்களுக்கிடையிலான பிணக்குகளால் பிரிந்து நின்று செயற்படுவதையும் பார்த்துக் கவலையடைகிறோம். எமக்கு முன்னால் நடந்த சரித்திரம் எமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது.  நாம் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும், முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் எமக்குள் ஒற்றுமையின்மையால் எமக்குக் கிடைக்கவேண்டிய சுதந்திரம் கைநழுவிப் போவதற்குக் காரணமாக அமைந்தது என்பதையும் பார்த்திருக்கிறோம். நாம் இன்று தாயகத்திலும் இதனைக் காண்கிறோம். பலமான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இன்று இந்த ஐக்கியத்தின் அவசியத்தை வேண்டி நிற்கிறது. இந்த வேண்டுகோளினை புலம்பெயர்ந்து வாழும் எமது சகோதர்களிடம் மிகவும் தாழ்மையாக முன்வைக்கிறோம். 

சரியான திசையில் முன்னெடுத்து வைக்கப்பட்ட எமது முயற்சிகளில் ஒன்றாக ஈழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழர் விடுதலைப் பரணி ஆகிய அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுப்பதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரூடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்வந்திருக்கின்றன. தனிநபர்களாகவும், குழுக்களாகவும் ஈழம் எனும் பொது இலட்சியம் நோக்கிச் செயற்படும் அனைவரையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் சேர்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது ஜனநாயக ரீதியில் செயற்படும் என்று நாம் நம்புவதுடன், அனைவரும் தமது கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரமும், சுதந்திரமான முறையில் கருத்துக்களை விவாதித்து கருத்தொருமைப்பாட்டிற்கு வரும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

நாம் பலதரப்பட்ட, கடுமையான கடைமைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி நிற்கிறோம். எமது இலட்சியமான விடுதலை நோக்கிய  பயணம் மிக நீளமானது. அதனை அடைவதற்கு எம்மிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைந்தவை. எம்மிடமிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும், பொன்னான நேரத்தையும் எமக்கிடையே வரும் தனிப்பட்ட பிரச்சினைகளில் செலவழிக்காதிருப்போமாக. எம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, எமது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடாக எமது பணிகளை முன்னெடுப்போமாக.

இக்கடித்தத்தை கைப்பற்றிக்கொண்ட அரசாங்கம், இதனை வைத்து அமிர்தலிங்கத்தையும், சிவசிதம்பரத்தையும் அச்சுருத்தி அடிபணியவைத்து, மாவட்ட சபைகளுக்கான சட்டவாக்கல் நடவடிக்கைகளுக்கு அவர்களை உடன்பட வைப்பதன் மூலம் சர்வதேசத்தில் தமிழர்களை தனது அரசு அரவணைத்து நடப்பதாக பிரச்சாரப்படுத்தலாம் என்று எண்ணியது. 

அதேவேளை போராளி அமைப்புக்களுக்குள் , குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் சில உள்முறண்பாடுகள் உருவாவதையும் அரசாங்கம் அறிந்துகொண்டது.

யாழ்க்குடாநாட்டில் வீரதுங்கவால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான படுகொலைகளும், சித்திரவதைகளும் போராளி அமைப்புக்கள் மீது கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தன. பாதுகாப்பான மறைவிடங்களுக்கான தேடலும், உணவினைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போராளி அமைப்புக்களுக்கு உற்ற துணையான இருந்த ஆதரவாளர்களும் தற்போது உதவுவதற்கு அஞ்சினர். இவ்வைகையான அழுத்தங்கள் போராளி அமைப்புக்களின் தலைமைப்பீடங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கத் தொடங்கின. ஆவணியில் இடம்பெற்ற புலிகளின் மத்திய குழுக் கூட்டத்திலும் இந்த கருத்து வேறுபாடுகள் தலைக்காட்டத் தொடங்கின. உமா மகேஸ்வரன் தலைமையிலான பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் பிரபாகரனை இரு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விமர்சித்திருந்தனர். முதலாவது இயக்கத்தின் கட்டமைப்பு, இரண்டாவது போராட்ட வழிமுறை. இரத்திணசபாபதி கடந்தவருடம் முன்வைத்திருந்த அதேவகையான கருத்துக்களையே இம்முறை மத்தியகுழு உறுப்பினர்களும் முன்வைத்தனர். அவர்களைப்பொறுத்தவரை இயக்கத்தின் கட்டமைப்பு மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இப்படிச் செய்வதன் மூலம் இராணுவத்தினர் போராளிகளைக் கண்டுபிடிப்பதைக் கடிணமாக்கிவிடலாம் என்று அவர்கள் வாதாடினர். மறைந்திருந்து தாக்கிவிட்டு மறையும் உத்தி, தலைமைப்பீடத்தை இராணுவத்தினரின் இலக்காக மாற்றிவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால், பிரபாகரன் தனது வழிமுறையில் தீர்மானமாக இருந்தார். மக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் போராட்டம் என்பது மக்களின் பின்னால் ஒளிந்திருந்து நடத்தும் போராட்டமாகும் என்று அவர் கூறினார்.  ஆகவே, வெற்றிகரமான விடுதலைப் போராட்டம் மக்களின் பின்னால் ஒளிந்து நின்று நடப்பதிலிருந்து வெளியேறி நடைபெறவேண்டும் என்று அவர் வாதிட்டார். மிகவும் சிக்கலான தாக்குதல்களுக்கான பொறுப்பினை தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் அவர்களின் பின்னால் ஒன்றுதிரண்டு  துணைநின்றால் போதுமானது என்றும் அவர் கூறினார்.

இந்தத் தருணத்தில் தான் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கு ஆரம்பித்தது. இப்பிணக்கின் அடிப்படை போராட்டத்தில் கோட்பாடுகளிலிருந்தே ஆரம்பமானது. உமாமகேஸ்வரன் மார்க்ஸிய கோட்பாடுகளைக் கொண்டிருந்தவேளை பிரபாகரன் தேசியவாத நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். உமா மகேஸ்வரன் தத்துவார்த்த ரீதியில் கருத்துக்களை முன்வைத்தாலும், அவற்றை முன்வைக்கும்போது மற்றையவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வாதாடும் மனோநிலையினைக் கொண்டிருந்தார். தனது கருத்துக்களை மற்றையவர்கள் மீது திணிக்க அவர் முயன்றார். பிரபாகரனோ யதார்த்தவாதியாக இருந்ததுடன், மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க ஆர்வம் காட்டியிருந்தார். மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்து  ஏற்றுக்கொள்வதிலும் பிரபாகரன் தன்னை ஒரு சிறந்த தலைவராக வெளிப்படுத்தியிருந்தார்.   இயக்கத்தின் இரு பிரதான தலைவர்களுக்கிடையே இருந்த இந்த முரண்பாடான நிலைப்பாடு இயல்பாகவே இயக்கத்திற்குள் பிளவினை உருவாக்கக் காரணமாகியது. ஆனாலும், புலிகள் இயக்கத்திலிருந்து உமாமகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம்  இயக்கத்தின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக உமா மகேஸ்வரன் நடந்துகொண்டதால் உருவானது. புலிகளின் களையெடுத்தல் தொடர்பான உரிமை கோரலினை தட்டச்சுச் செய்த ஊர்மிளா எனும் பெண்ணுடன் உமா மகேஸ்வரன் வைத்திருந்த பாலியல் ரீதியான தொடர்பே இதற்கான ஒற்றைக் காரணமாக அமைந்தது.

See the source image

உமா மகேஸ்வரன்

அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளும், புலிகளின் தலைமைப் பீடத்திற்குள் உருவாகியிருந்த கருத்து முரண்பாடும், போராளி அமைப்புக்களின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தமையும் யாழ்க்குடா நாட்டில் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மார்கழி 31 ஆம் திகதி வீரதுங்க, அரச படைகளின் தளபதியான ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிவைத்த செய்தியில் தனக்கு இடப்பட்ட ஆணையான பயங்கரவாதத்தை முற்றாக அழித்தலை தான் செவ்வணே செய்து முடித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனைக் கொண்டாடும் முகமால கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்திருந்த "ரொக் ஹவுஸ்" எனப்படும் உல்லாச விடுதியில் பாரிய களியாட்ட நிகழ்வொன்றினை ஒழுங்குசெய்தார் வீரதுங்க. அவரின் வெற்றியை பாராட்டும் விதமாக ஜெயாரும் இந்த களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

வீரதுங்கவினால் ஈட்டப்பட்ட வெற்றிக்குச் சன்மானமாக அப்போது பதவியிலிருந்த இராணுவத் தளபதி டெனிஸ் பெரேரா ஓய்வுபெறும்பொழுது, வீரதுங்கவே இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவார் என்று ஜெயவர்த்தன அறிவித்தார். ஆனால், அனுபவத்திலும், தகமை அடிப்படையிலும், ஏனைய இராணுவத் தளபதிகளால் பரிந்துரை செய்யப்பட்டவருமான ஜஸ்டஸ் ரொட்ரிகோ எனப்படும் தளபதிக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இராணுவத் தளபதி எனும் தகமையினை உதாசீனம் செய்த ஜெயார், தனது மருமகனான "காளைமாடு" வீரதுங்கவுக்கு வழங்க முடிவுசெய்தார். இலங்கையின் ராணுவத்தின் சரித்திரத்தில் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்ட  முதலாவது இராணுவ பதவியுயர்வு நிகழ்வு இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. வீரதுங்கவை இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் இராணுவத்தின் மீதும், பொலீஸார் மீதும் தான் கொண்டிருந்த அதிகாரத்தினை மேலும் பலப்படுத்திக்கொண்டார் ஜெயவர்த்தன. இராணுவத் தளபதி வீரதுங்க ஜெயவர்த்தனவின் மருமகன் என்பதும், பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண வீரதுங்கவின் மைத்துனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தன்னை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுதல் 

தனது ஆட்சியை எதிர்க்கும் எந்தத் தமிழருக்கும் பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்தார்.

ஜெயவர்த்தனவின் அரசாட்சியின் இலக்கணமே தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் பாடத்தினைப் புகட்டுவதுதான். தன்னை எதிர்த்த தமிழர்களுக்கு, சுதந்திரக் கட்சியினருக்கு, தொழிற்சங்கவாதிகளுக்கு மற்றும்  உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு  ஜெயாரினால் பாடம் புகட்டப்பட்டது. 1993 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் லங்கா கார்டியன் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆர்டன் என்பவரால் வன்முறைகளையே தனது ஆயுதமாக நம்பி ஜெயவர்த்தன புரிந்த ஆட்சி ஆளமாக அலசப்பட்டிருந்து.

தனது அரசியல் எதிரிகளான சுதந்திரக் கட்சியையும், எதிரிகளான தமிழர்களையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் ஜெயவர்த்தனா எவ்வாறு வன்முறைகள் மூலம் அடக்கி ஆண்டார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின், தொழிற்சங்கங்களின் நீதியான  கோரிக்கைகள் கூட ஜெயாரினால் மிகவும் மூர்க்கத்தனமாக வன்முறைகள் கொண்டு அடக்கப்பட்டன.

தனது குண்டர்களான ஜாதிக சேவக சங்கமய அமைப்பினரைப் பாவித்து தொழிற்சங்கப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டார். தொழிற்சங்கங்கள் வழமையாக இடதுசாரிகளின் பின்புலத்திலேயே இயங்கிவந்தன. இத்தொழிற்சங்கங்கள் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காக செயற்பட்டன. ஜெயார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்தவுடன் தனது கட்சியின் தொழிற்சங்கமாக ஜாதிக சேவக சங்கம யவை உருவாக்கியதுடன் இதன் தலைவராக பிரபல இனவாதியான சிறில் மத்தியூ நியமிக்கப்பட்டார். இத்தொழிற்சங்கம் சிங்கள தேசியவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டதுடன் சிங்கள மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது அதன் முக்கிய நோக்கமாக உருவாக்கப்பட்டது.

Interview: Mahathir Mohamad

மகதிர் மொஹம்மட்

சிறில் மத்தியூ, மலேசிய அதிபரான மகதிர் மொஹம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் அடிப்படையினைப் பின்பற்றி ஜாதிக சேவக சங்கமயவை வழிநடத்தினார். மகதிர் மொஹம்மட் ஒரு காலத்தில் எழுதிய தனது சுயசரிதையான "மலே மக்களின் தடுமாற்றம்" எனும் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை ஆதரித்துவந்த மகதிர், தனது நாட்டின் மக்களான மலேயர்களுக்கு ஏனைய இன மக்களைக் காட்டிலும் பொருளாதார நலன்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும் , வர்த்தகப் போட்டியிலிருந்து மலே மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இஸ்லாம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும், அம்மதத்தைப் பரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். மலே மக்களே மலேசியாவின் பூர்வகுடிகள் என்று அவர் கூறியதுடன், மலே மக்களுக்கு மலேசியாவை விட்டால் வேறு நாடொன்றில்லை என்றும் அவர் வாதிட்டார். மேலும், மலேசியாவில் வாழும் சீனர்கள் சீனாவுக்கும், அங்குவாழும் இந்தியர்கள் இந்தியாவுக்குச் செல்லமுடியும் என்றும் அவர் வாதிட்டார்.

மகதிர் முகம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் கொள்கைகள் மலேசியாவைக் காட்டிலும் இலங்கைக்கே பொருந்தும் என்று சிறில் மத்தியூ கூறினார். மலேசியச் சனத்தொகையில் மலே மக்கள் 53 வீதமும், சீனர்கள் 35 வீதமும், தமிழர்கள் 10 வீதத்திற்குச் சற்றுக் குறைந்த எண்ணிக்கைய்லும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், இலங்கையிலோ சிங்களவர்கள் 74 வீதமாக இருக்க தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 17 வீதம் மட்டுமே என்று மத்தியூ வாதாடினார். சனத்தொகை எண்ணிக்கையில் தமிழர்கள் மிகவும் குறைந்த இருந்தபோதும் தொழில் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இந்த வீதாசாரத்தைக் காட்டிலும் மிக அதிகமான தாக்கத்தை தமிழர்கள் கொண்டிருப்பதாக மத்தியூ கருதினார். தமிழர்கள் வேண்டுமென்றால் தமிழ்நாட்டிற்குத் திருப்பிச் செல்ல முடியும், ஆனால் சிங்களவர்களுக்கு இலங்கையை விட்டால் வேறு நாடு கிடையாது என்று மத்தியூ வாதாடினார். ஆகவே சிங்களவரின் மேன்மை வன்முறைகளற்ற வழிமுறைகளிலோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடைந்தே தீரவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

50735912_378672132944890_5108996476290203648_o.jpg

ஜாதிக சேவக சங்கம

தனது இனவாத வன்முறைகளுக்காக தனது தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவினை மத்தியூ தயார்ப்படுத்தினார். கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிறி கோத்தாவின் பின்புறத்தில் இருந்த மைதானத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அரச அதிகாரிகளை அச்சுருத்தி வந்த இத்தொழிற்சங்கக் குண்டர்களுக்கு அரசால் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிறின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஞானரத் ஒபேசேகர அவர்கள் இத்தொழிற்சங்கக் குண்டர்களின் செயல்ப்பாட்டினை மிகவும் விரிவாக இரு தலைப்புக்களான, "அரசியல் வன்முறைகளும் இலங்கையின் ஜனநாயகத்தின் எதிர்காலமும்" மற்றும் "இலங்கையில் சமூக உரிமைகளுக்கான அமைப்பு" ஆகியவற்றில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட 35 வன்முறைகளை  ஆராய்ந்திருந்தார்.

image_1467052056-af808b912e.jpg

சிறி கோத்தா

இதனைப் படிக்கும் ஒருவருக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைக் கலாசாரத்துடனான அரசியல் சூழ்நிலையினை ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இச்சூழ்நிலை மேலும் மோசவடைவதை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றதன் பின்னர், அரச வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அங்குபணிபுரிந்து வந்த எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட கலைஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்திறங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் வாட்களாலும், தடிகளாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். அப்படி விரட்டப்பட்டவர்களில் பிரபல சிங்கள நாடகக் கலைஞர் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

1978 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு  தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்ற காரணத்தினால் துல்கிரிய ஆடைத்தொழிற்சாலை தலைவர்களான நால்வரை சுமார் 400 பேர் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் அடித்து விரட்டியதுடன், அவர்கள் தமது பதவிகளை இராஜினாமச் செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நான்கு அதிகாரிகள் அவ்விடங்களுக்கு நியமிக்கப்பட்டனர்.

1980 ஆம் ஆண்டு ஆடி 4 ஆம் திகதி, மகரகமை ஆசிரியர் கலாசாலையில் வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் வந்திறங்கிய ஜாதிக சேவக சங்கமய குண்டர்கள் இறப்பர் நார்களாலும், சைக்கிள் சங்கிலிகளைக் கொண்டும் கடுமையான தாக்குதலை நடத்தினர். பெண் ஆசிரியர்கள் நிலத்தில் இழுத்து வீழ்த்தப்பட்டு அவர்கள் மேல் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது.

ஜெயவர்த்தனா எவ்வாறு ஒரு தொழிற்சங்கத்தைப் பயன்படுத்தி இன்னொரு தொழிற்சங்கத்தை  வன்முறையால் அடக்கினார் என்பதை ஆர்டன் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஜெயாரினால் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து பல தொழிலாளர்களின், குறிப்பாக அரச ஊழியர்களின்  சம்பளம் கடுமையான சரிவினைச் சந்தித்தது. ஆகவே, எதிர்க்கட்சியின் ஆதரவு பெற்ற ஒருமித்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தொழிலாளிகளுக்கு மாதாந்தம் 300 ரூபாய்கள் சம்பள உயர்வு கோரி அரசுக்கு வேண்டுகோள் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு பங்குனியில் முன்வைக்கத் தீர்மானித்தது. இதனை வலியுறுத்தி ஆனி 5 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டமாக அரைநாள் வேலை நிறுத்தத்தில் அது ஈடுபட்டது. இதற்குப் பதிலளிக்க விரும்பிய ஜெயார், தனது கட்சியின் தொழிற்சங்கத்தை ஆனி 5 ஆம் திகதியை கூட்டுறவுக்கான நாளாக அனுஷ்ட்டிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்கப் பணியாளர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே ஜெயார் இதனைச் செய்ததோடு, அன்றைய வன்முறையில் பல எதிர்க்கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் காயமடைந்ததோடு சோமபால எனும் தொழிற்சங்கவாதியும் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.  

ஆடி 5 ஆம் திகதி இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த 12 ஊழியர்கள் ஆனி 5 ஆம் அன்று பணிக்கு வராமையினால்  பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசி சூழ்நிலையினைத் தணிக்க முயற்சித்தன. ஆனால், பிடிவாதமாக பேச மறுத்த நிர்வாகம் தாம் மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தொழிலாளர்களை  பதவிநீக்கம் செய்ததாகத் தெரிவித்தது. இதையடுத்து ஆடி 7 ஆம் திகதி ரயில்வே தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கும் மீளவும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும், தமது சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரினர். இதற்கும் நிர்வாகம் பதிலளிக்காது விடவே, ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆடி 14 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்று பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்ததுடன், ஆடி 18 வேலை நிறுத்தம் ஆரம்பிக்கும் என்றும் கூறியது. 

copy-banner2.jpg

ஜெயவர்த்தன

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அரசு ஆடி 16 அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை அமுல்ப்படுத்தியது. இதன்படி அரச மற்றும் தனியார் அத்தியாவசிய சேவைகளில் தொழில் புரிபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாதென்றும், அவ்வாறு வேலைநிறுத்தம் செய்தால் அவர்கள் தமது பதவிகளை தாமே இராஜினாமாச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. ஆனால், தொழிற்சங்கம் கூறியதன்படி வேலை நிறுத்தம் ஆடி 18 ஆரம்பித்தது. அன்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஜெயார், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது பதவிகளை இழந்துவிட்டதாகவும், எக்காரணம் கொண்டும் அரசு அவர்களை மீளவும் பணிக்குச் சேர்த்துக்கொள்ளாது என்றும் அறிவித்தார்.   மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினாலும் கூட, இதனால் எந்தப் பலனும் கிடைக்காது போயிற்று. ஒரு சாதாரண சம்பள உயர்வுக் கோரிக்கை ஜெயாரினால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கும் தனக்குமிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டு, ஈற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற  முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் நசுக்கப்பட்டுப் போனது. இவ்வாறே ஜெயார் தனது ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்கங்களை நசுக்கி வந்திருந்தார். ஜெயாரினால் பணிநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் பின்னர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Edited by ரஞ்சித்
Picture attached
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உச்சநீதிமன்றத்தைப் பணியவைத்த ஜெயார்

undefined

இவையெல்லாவற்றைக் காட்டிலும் உச்சநீதிமன்றத்துடன் ஜெயார் நடந்துகொண்ட விதமே மிகவும் மோசமாகக் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜெயார் அமைத்ததிலிருந்தே இந்தப் பிணக்கு உருவானது. இந்த ஆணைக்குழு  சிறிமாவையும், அவரது அமைச்சரவையில் முக்கியவராகக் கருதப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவையும் விசாரிக்கவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சட்டபூர்வமான தன்மையினைக் கேள்விகேட்டு சிறிமாவோ உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்த அதேநேரம், பீலிக்ஸ் பண்டாரநாயக்கவோ இந்த ஆணைக்குழுவிற்கும் அதன் நீதிபதிகளுக்கும் எதிரான அதிகார வினாப் பேராணைகளை தாக்கல் செய்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் நீதிபதிகளில் ஒருவரான அல்விஸ், ஊழலில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்ட கொழும்பு நகர மேயரான எச் எம் பெளசியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்பதை முன்வைத்து, விசாரணைக் குழுவில் இடம்பெற அல்விஸுக்குத் தகமை கிடையாதென்று வாதிட்டிருந்தார். அல்விஸின் மகனிடமிருந்து பெளசியின் மகளுக்கு கொள்வனவுசெய்யப்பட்ட நிலத்திற்கு பெளசி பணம் செலுத்தியது மற்றும் அல்விஸின் மகனின் வீடொன்றில் வாடகைக்கு பெளசியின் மனைவி அமர்ந்துகொண்டது ஆகிய இரு நடவடிக்கைகளிலும் அல்விஸே பெளசியின் மகன் சார்பில் சட்டத்தரணியாகச் செயலாற்றியிருந்தார்.

A. H. M. Fowzie.jpeg

எச் எம் பெளசி

 பீலிக்ஸின் வழக்கினை விசாரித்த பிரதம நீதியரசர்களான சமரகோன், விமலரட்ண மற்றும் கொலின் தொம்மே ஆகியோர் அளித்த தீர்ப்பின்படி ஜெயாரின் விசேட ஆணைக்குழுவின் நீதிபதி அல்விஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு நீதிபதியாகத் தொழிற்பட தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயார், அல்விஸை நீதியரசர்கள் விமலரட்னணைக்கும், கொலின் தொம்மேக்கும் எதிராக, "தன்மீதான தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கெதிராகத் தீர்ப்பளித்தார்கள்" என்கிற குற்றச்சாட்டுடன் ஜனாதிபதியான தன்னிடம் முறைப்பாட்டு மனுவொன்றினைத் தருமாறு கூறினார்.  தனது எடுபிடியான காமிணி திசாநாயக்காவைக் கொண்டு பாரளுமன்றத்தில் அல்விஸின் மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் ஜெயார் கொண்டுவந்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசும்போது, தான் நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் மேலானவர் என்றும், தான் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் தனக்கிருப்பதாகவும் பேசினார்.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம் - ஊர்ப் புதினம் -  கருத்துக்களம்

ஈவிரக்கமற்ற கொலைகாரன் என்று அறியப்பட்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரேமதாச உடுகம்பொல

 தான் கூறியதுபோலவே செய்யவும் தலைப்பட்டார் ஜெயார். 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவந்த வேளையில் மதகுருக்களின் குரல் எனும் பெயரில் சில பெளத்த பிக்குகளும், கத்தோலிக்க குருக்களும் எதிர்க்கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் தலைவராக தெரமிடிபொல ரட்னசார தேரோ எனும் பிக்கு கடமையாற்றினார். இந்த அமைப்பால் வெளியிடவென அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 20,000 துண்டுப்பிரசுரங்களையும், அச்சகத்தையும் இழுத்து மூடினார் பொலீஸ் அத்தியட்சகர் உடுகம்பொல. இதற்கெதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்த ரட்னசார தேரர், பேச்சுச் சுதந்திரத்தின் மீதான தலையீடு என்று தனது அமைப்பின் துண்டுப்பிரசுரங்கள் பொலீஸாரால் கையகப்படுத்தப்பட்டதைக் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடுகம்பொல செயல்ப்பட்ட விதம் பேச்சுச் சுதந்திரத்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நட்ட ஈடாக 10,000 ரூபாய்களையும், வழக்கிற்கான செலவுகளையும் உடுகம்பொல செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட ஜெயார், உடுகம்பொலவை சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு கொடுத்ததுடன், வழக்கின் இழ்ப்பீட்டுச் செலவுகளை அரசே வழங்கும் என்றும் கூறினார்.

Vivienne_Goonewardene.jpg

விவியேன் குணவர்த்தன

ஜெயாரின் இந்த செயல், அரசுக்குச் சார்பாக தாம் எதைச் செய்தாலும், அரசு தமக்குப்பின்னால் நிற்கும் எனும் தைரியத்தைப் பொலீஸாருக்குக் கொடுத்திருந்தது. இதன்படி, சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர் கொள்ளுப்பிட்டிய பொலீஸார் சட்டத்தை தம் கைகளில் எடுத்துச் செயற்பட்டிருந்தனர். 1982 ஆம் ஆண்டு, பங்குனி 8 ஆம் நாள், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர் விவியேன் குணவர்த்தன தலைமையிலான பெண்கள் குழுவினர் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அமெரிக்க தூதுவராலயத்திற்கு மனுவொன்றைனைக் கையளிக்கச் சென்றிருந்தனர். அது ஒரு அமைதியான ஊர்வலமாகத்தான் இடம்பெற்றிருந்தது. தமது மனுவினை அமெரிக்க உயர்ஸ்த்தானிகரின் பிரதிநிதியிடம் கையளித்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்திய கொள்ளுப்பிட்டிய பொலீஸார், அவர்கள் கொண்டுவந்திருந்த பதாதைகளைப் பறித்து கிழித்தெறிந்தனர். பெண்கள்மீது பொலீஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைப் படம்பிடித்த புகைப்படக் காரர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். பேரணியில் பொலீஸார் நடந்துகொண்ட விதம் பற்றிப் பேசுவதற்காக விவியேன் கொள்ளுப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்குச் சென்றார். பொலீஸ்நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட விவியேன், பொலீஸாரினால் கீழே விழுத்தப்பட்டு கால்களால் உதைக்கப்பட்டார். பின்னர் அவரையும் பொலீஸார் கைதுசெய்திருந்தனர்.  உச்ச நீதிமன்றில் பொலீஸாரின் அடாவடித்தந்திற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்தார் விவியேன். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்று, விவியேனின் கைது சட்டத்திற்குப் புறம்பானதென்றும், இழப்பீடாக 2500 ரூபாய்களை பொலீஸார் செலுத்த வேண்டும் என்றும் மேலும் விவியேன் மீதும், பேரணி மீதும் தாக்குதல் நடத்திய பொலீஸார் அனைவரின்மீதும் பொலீஸ் மா அதிபர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்று தீர்ப்பளித்த மறுநாளான ஆனி 9 ஆம் திகதி, பேரணி மீது தாக்குதல் நடத்திய பொலீஸ் குழுவின் அதிகாரியான உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஜெயாரின் உத்தரவின் பெயரில் பதவியுர்வு வழங்கப்பட்டது. 

தீர்ப்பு வழங்கப்பட்டு இருநாட்களின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளினதும் வீடுகளுக்கு அரச வாகனங்களில் சென்ற காடையர்கள், அவர்களைக் கொல்லப்போவதாக மிரட்டியதுடன், ஆபாசமாகவும் திட்டிவிட்டுச் சென்றனர். காடையர்கள் தமது வீடுகளைச் சுற்றி கோஷமிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, பொலீஸாரின் உதவியினை நீதிபதிகள் தொலைபேசி மூலம் கேட்க எத்தனித்தபோது, பொலீஸாரின் அனைத்துத் தொலைபேசி இணைப்புக்களும்  மெளனமாக காணப்பட்டன. 

சர்வதேச நீதிபதிகளின் அமைப்பின் தலைவர் போல் சைகிரெட் இந்த பொலீஸ் அத்துமீறல்கள் குறித்தும், நீதித்துறை எதிர்நோக்கியிருந்த அச்சுருத்தல்கள் குறித்தும் ஜெயாரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த ஜெயார், இரு பொலீஸ்காரர்களினதும் பதவியுயர்விற்கு தானே பரிந்துரை செய்ததாகவும், நட்ட ஈடுகளை செலுத்தும்படி அரச திறைசேரிக்கு தானே உத்தரவிட்டதாகவும் கூறியதுடன், பொலீஸாரின் மனவுறுதியை நிலைநாட்ட இவை அவசியமாகச் செய்யப்படவேண்டியன என்றும் வாதிட்டிருந்தார்.

போல் சைகிரெட்டின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு சரியான பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்ததுடன், தனது நிறைவேற்றதிகாரம் பொருந்திய ஜனாதிபதிப் பதவிக்கு உச்ச நீதிமன்றும், நீதியரசர்களும் அடிபணிந்திருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தார் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலிருந்தே தமிழர்கள் மீது ஜெயார் கட்டவிழ்த்து விடவிருக்கும் அக்கிரமங்கள் நோக்கப்படல் வேண்டும்.

 

anita-prabakaran.jpg 

தலைவருடன் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப்

ஜெயாரை ஆதரிப்பவர்கள், பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகள் சிலவற்றின் அழுத்தத்தினாலேயே ஜெயார் தமிழருடன் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதாகியது என்று ஜெயாரின் கொடுங்கோண்மையினை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், ஜெயார் குறித்த பிரபாகரனின் கணிப்போ மிகவும் வித்தியாசமானது. 1984 இல் முதன் முதலாக பிரபாகரன் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில், "ஜெயார் தனது விருப்பத்தின்படியே நடக்கிறார். அவரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகளும், பெளத்த பிக்குகளும் அவருக்குப் பக்கபலமாக பின்னால் நிற்கின்றனர்" என்று அந்தச் செய்தியாளரான அனீட்டா பிரதாப்பிடம் கூறியிருந்தார். 

large.Prabhakaran11-17march1984AnitaPrathapSundaymagazine.jpg.93b504dc905042958411be7abda2a821.jpg

 மேலும், "ஜெயவர்த்தனா உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை இருந்திருக்காது " ன்றும் அவர் கூறினார். பிரபாகரனின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பது இத்தொடரினைத் தொடர்ந்து படிக்கும்போது தெளிவாகும்.

 

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு

உமா மகேஸ்வரனிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு

உமா மகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலியல் ரீதியில் தொடர்பில் உள்ளார்கள் என்று  தோழர்கள் தன்னிடம் கூறியபோது பிரபாகரனால் அதனை நம்பமுடியவில்லை. ஆனால், அச்செய்தி உண்மைதான் என்று அறிந்தபோது அவர் மிகவும் கோபமடைந்தார். இயக்கத்தின் தலைவரான ஒருவரே தான் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு கொள்கையினை மீறுவதென்பது பிரபாகரனினால் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு குற்றமாகக் கருதப்பட்டது.

உமாவை இயக்கத்திற்குள் கொண்டுவந்து, அவரையே அரசியல்த் தலைவராக உருவாக்குவதில் பிரபாகரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. பிரபாகரனுக்கெதிரான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட இந்த நகர்வு காரணமாக அமைந்திருந்தது. வெளியார் ஒருவரை இயக்கத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அவரையே தலைவராகவும் அமர்த்தியது இயக்கத்திற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அது பிரபாகரனின் இரண்டாவது பிழை என்று அவர்கள் முணுமுணுத்து வந்திருந்தார்கள். முதலாவது தவறு எதுவென்றால், செட்டி தனபாலசிங்கத்தை புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமித்திருந்தது அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. செட்டி வங்கிக்கொள்ளைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டதுடன், இறுதியில் புலிகள் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கும் உளவாளியாகவும் மாறிப்போனார். செயலில் இறங்கும் போராளிகளை எப்போதுமே மதித்து வந்த பிரபாகரன், செட்டியின் செயல்த்திறனிற்காக அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

உமா மகேஸ்வரன் விடுதலைப் போராட்டம் குறித்து முற்றான முற்றான அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினாலும், அமிர்தலிங்கம் உமாவையும் இயக்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டிருந்தமையினாலும் பிராபாகரன் உமாவை இயக்கத்தினுள் சேர்த்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவான தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையின் காரியாதரிசியாக இயங்கிவந்த உமா, அமைப்பு வேலைகளில் மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தார். உமா சர்வதேச விடுதலைப் போராட்டங்கள் பற்றி அதிகளவு விடயங்களைத் தெரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கியதாலும், தன்னை விடவும் 10 வயது அதிகமாக இருந்ததனாலும் பிரபாகரன் அவரை தலைவராக பதவியில் அமர்த்தினார். தன்னைக் காட்டிலும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக உமா காணப்பட்டதும், அவரே தலைவராக இருக்கத் தகுதியானவர் என்று பிரபாகரன் முடிவெடுத்தமைக்கு இன்னுமொரு காரணம். .

 1978 ஆம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டம் ஒன்றிற்கு உமாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த பிரபாகரன், அங்கிருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த பின்னர், அவரைத் தலைவராக பரிந்துரை செய்வதாகக் கூறினார். உமா கொண்டிருந்த சர்வதேசத் தொடர்புகள் மற்றும் அவரது தொடர்பாடல் ஆற்றல் ஆகியவற்றை இயக்கம் உபயோகித்துக்கொள்ள  முடியும் என்று பிரபாகரன் அங்கிருந்தவர்களிடம் கூறினார். புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை தான் முற்றாகக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்த உமா, குடும்ப வாழ்க்கை, பாலியலுறவு, மாற்றியக்கங்களுடன் சேர்தல் அல்லது புதிதாக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தல், மதுபானம் புகைப்பிடித்தல் ஆகியவை உட்பட இன்னும் பல விடயங்களை முற்றாகத் தவிர்த்து இலட்சியத்திற்காக உழைப்பேன் என்று அவர் உறுதியளித்தார்.

UmaMaheswaran_10_03.gif

உமாவிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உறுதிப்படுத்தப்பட்டபோது, இயக்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுமாறு உமாவிடம் கூறினார் பிரபாகரன். "நீங்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறீர்கள். நீங்களே இயக்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தைச் செய்தீர்களென்றால், மற்றையவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள். நான் கட்டி வளர்க்கும் இயக்கத்தை நீங்கள் அழிக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். ஆகவே உடனடியாக விலகிச் செல்லுங்கள்" என்று உமாவைப் பார்த்து கர்ஜித்தார் பிரபாகரன்.

ஆனால், உமா மாறவில்லை. தனது எதிரிகள் தனக்கெதிராக சதித்திட்டம் ஒன்றை நடத்திவருவதாகவும், தான் எந்தத் தவறும் இழைக்காததால் , தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதில்லை என்றும் பிடிவாதம் பிடித்தார்.

உமாவின் காரணங்களை பிரபாகரன் ஏற்கும் நிலையில் இல்லை. யாழ்க்குடா நாட்டில் வீரதுங்கவின் அட்டூழியங்கள் பெருகிவந்த நிலையில், இயக்கத்தின் மத்திய குழு 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூடியது. அங்கு கூடிய மத்தியகுழு உமாவிடம் இரண்டு தெரிவுகளை முன்வைத்தது,

1. திருமணம் முடியுங்கள் அல்லது

2. தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள்.

என்பவையே அவையிரண்டும். ஆனால், உமா இதில் எதனையும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இதனால், உமாவை இயக்கத்திலிருந்து விலக்கும் முடிவினை மத்திய குழு எடுத்தது. மத்திய குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான பரா, நாகராஜா மற்றும் ஐய்யர் ஆகியோர் உமாவை விலக்கும் முடிவிற்கு ஆதரவாக நின்றார்கள். இயக்கத்தின் தலைவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இயங்கவேண்டும் எனும் பிரபாகரனின் கொள்கையினை அவர்கள் முற்றாக ஆமோதித்தார்கள். "தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எள்ளளவு சந்தேகம் வரினும், அவர் உடனடியாக விலக வேண்டும்" என்று நாகராஜா வாதாடினார்.

1984 ஆம் ஆண்டு, பிரபாகரன் முதன்முதலாக வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டியளித்திருந்தார். அந்தச் செய்தியாளரான அனித்தா பிரதாப்பிடம் பேசும்போது "ஒரு புரட்சிகர அமைப்பின் தலைவராக இருப்பவர் தனது அமைப்பின் ஒழுக்கத்திற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்தவராக இருக்கவேண்டும். தலைவரே அடிப்படை விதிகளையும், கொள்கைகளையும்  மீறிச் செயற்படும்போது , இயக்கத்திற்குள் குழப்பகரமான சூழ்நிலை தோன்றுவதோடு, ஈற்றில் அதுவே இயக்கத்தை முற்றாக அழித்து விடும்" என்று கூறினார்.

மேலும், இயக்கத்திற்குள் உருவான பிரச்சினையினை, தான் புலிகள் இயக்கத்திற்கும், உமா மகேஸ்வரன் எனும் தனிநபருக்கும் இடையிலான வேறுப்பாடக் கருதுவதாகக் கூறினார். "இந்தப் பிரச்சினைக்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது. உமா மகேஸ்வரனே இந்த பிரச்சினையை உருவாக்கினார். இயக்கத்தின் ஒழுக்கக் கோட்ப்பாட்டினை மீறியவர் உமா மகேஸ்வரனே. ஆகவே, ஒழுக்காற்று நடவடிக்கையாக அவரை மத்தியகுழுவினூடாக இயக்கத்திலிருந்து வெளியேற்றினோம். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவன் என்கிற வகையிலும், உமா மகேஸ்வரனை இயக்கத்திற்குள் கொண்டுவந்தவன் என்கிற வகையிலும், மத்திய குழு எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு எந்த வழிகளும் இருக்கவில்லை" என்றும் கூறினார் பிரபாகரன்.

See the source image

அனித்தா பிரதாப்

மேலும், புலிகளின் லண்டன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, உமா பற்றிய குற்றச்சாட்டுக்கள பற்றி விளக்கமளித்தார் பிரபாகரன். லண்டனில் வசித்துவந்த புலிகளின் உறுப்பினரான கிருஷ்ணனிடம் பேசும்போது, உமா ஈழம் எனும் இலட்சியத்திற்கு தகுதியற்றவர் என்று கூறினார். "ஒழுக்கமற்ற ஒரு தலைவனால், மக்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது" என்று அவர் கூறினார். இதனைக் கேட்டுவிட்டு பின்னர் பேசிய கிருஷ்ணன், "பிரச்சினையினைப்பேசித் தீர்க்கலாம், நான் அன்டன் ராஜாவை உவ்விடம் அனுப்புகிறேன்" என்று பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். உமா பதவி விலகுவதற்குப்  பிடிவாதமாக மறுத்துக்கொண்டே இருந்தார். இது நீண்ட உள் விவாதங்களுக்கு வித்திட்டது. சில மூத்த உறுப்பினர்கள் பிரபாகரன் தொடர்ந்தும் உமாவை வற்புறுத்தத் தேவையில்லை என்று எண்ணம் கொண்டிருந்தனர். சூழ்நிலைகளின் தாக்கத்தால் உமா தவறு செய்திருப்பதால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். ஆனால், பிரபாகரன் அசரவில்லை. "ஒழுக்கம் என்று வரும்போது விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எல்லோரும் இயக்க விதிகளை முழுமையாகப் பின்பற்றியே ஆகவேண்டும்" என்று தனது முடிவில் உறுதியாக நின்றார் பிரபாகரன்.

கிருஷ்ணன் இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வொன்றை எட்டவே விரும்பினார். கிருஷ்ணனும், அன்டன் ராஜாவும் அப்போதுதான் மூன்றாம் உலக விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் தொடர்பினை ஏற்படுத்தி புலிகள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் விழிப்புணர்வினை உருவாக்கும் நடவடிக்கைகளில் லண்டனில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். உமா மகேஸ்வரனையே புலிகளின் தலைவராகவும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். "நாங்கள் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் போய், எமது தலைவர் இயக்க விதிகளுக்கு முரணாக பாலியல் உறவில் ஈடுபட்டதனால் அவரை விலக்கிவிட்டோம் என்று எம்மால் சொல்ல முடியாது" என்று கிருஷ்ணன் பிரபாகரனிடம் கெஞ்சினார்.

தாம் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் குறித்து சென்னையில் பிரபாகரனைச் சந்தித்தபோது அன்டன் ராஜா விளங்கப்படுத்தினார். "இது ஒரு பெரிய பிரச்சினையா?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் அன்டன் ராஜா. இதைக் கேட்டதும் கோபமடைந்த பிரபாகரன், "லண்டனில் வாழும் உங்கள் போன்ற ஆட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்கு, எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சினைதான். இயக்கத்தில் சேரும் தமது பெண்பிள்ளைகளை தலைவர்கள் பாலியல் வன்புணர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தால், எந்தப் பெற்றோராவது தமது பெண்பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்புவார்களா?" என்று ஆவேசத்துடன் அன்டன் ராஜாவைப் பார்த்துக் கேட்டார்.  ஊர்மிளா என்று அறியப்பட்ட கந்தையா ஊர்மிளாதேவியே புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண்போராளியாகும். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வந்த ஊர்மிளா, உமாவுடன் நெருங்கிப் பழகிவந்தார். உமாவின் பரிந்துரையின் பேரிலேயே ஊர்மிளா புலிகள் இயக்கத்திற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். அன்டன் ராஜாவை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் பேசிய அவர், "பிரபாகரன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை, நான் லண்டனுக்கே திரும்பிச் சென்றுவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையினை தீர்க்கும் தனது முயற்சியை லண்டன் அலுவலகம் கைவிட விரும்பவில்லை. ஆகவே, இன்னொருமுறை முயன்று பார்க்கலாம் என்று கிருஷ்ணன்  எண்ணினார். இம்முறை, தன்னுடன் மத்தியஸ்த்தத்திற்கு இன்னுமொருவரையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். அவர்தான் அன்டன் பாலசிங்கம். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்பினை  நியாயப்படுத்தி பிரசுரங்களையும், புத்தகங்களையும் பாலசிங்கம் வெளியிட்டு வந்ததனால் பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஆனால், அந்தக் கட்டத்தில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. மத்தியகுழுவினரால தன்னை விலக்குவதாக எடுக்கப்பட்ட முடிவினை முற்றாக நிராகரித்திருந்த உமா, பின்னர் தானே புலிகள் இயக்கத்தின் தலைவர் என்றும், தனது இயக்கமே உண்மையான புலிகள் இயக்கம் என்றும் உரிமை கோரத் தொடங்கினார். உமாவின் விசுவாசிகளில் ஒருவரான சுந்தரம் என்று அழைக்கப்பட்ட எஸ் சிவசண்முகமூர்த்தி, புலிகளால் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களைத் திருடி வேறிடங்களுக்கு மாற்றத் தொடங்கியபோது, உமாவின் உரிமைகோரலுக்கான காரணம் வெளித்தெரியவந்தது. இது பிரபாகரனை மிகவும் சினங்கொள்ள வைத்திருந்தது. உடனே செயலில் இறங்கிய பிரபாகரன் ஏனைய மறைவிடங்களிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்தியதுடன், அவை உமாவின் கைகளுக்குக் கிடைப்பதையும் தவிர்த்துவிட்டார்.

1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன், பாலசிங்கத்தையும், அவரது இரண்டாவது மனைவியான அவுஸ்த்திரேலியப் பெண்மணி அடேலையும் அழைத்துக்கொண்டு மும்பாயூடாக சென்னைக்குப் பயணமானார் கிருஷ்ணன். அக்காலத்தில் தமிழ்நாட்டில் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தது. பாலசிங்கம் உள்ளே நுழைவதை மீனாம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் அதிகம் விரும்பியிருக்கவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பேபி சுப்பிரமணியம் தூரத்தில், மக்களுடன் மக்களாக நின்று நடப்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு நின்றார். பின்னர் ஒருவாறு சுங்க அலுவல்களை முடித்துக்கொண்டு கிருஷ்ணனுன், பாலசிங்கம் தம்பதிகளும் வாடகை வண்டியொன்றில் ஏறி அவர்களுக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி ஒன்றிற்குச் சென்றனர். மிகவும் அழுக்காக, துப்பரவின்றி, ஒழுகும் மலசலகூடத்தைக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையில் பாலசிங்கம் தம்பதிகளைத் தங்கவைத்துவிட்டு கிருஷ்ணன் அவசர அவசரமாகப் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரபாகரனைச் சந்தித்த பாலசிங்கம்

பாலசிங்கம் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இரவு இரு சந்திப்புக்களில் கலந்துகொண்டார். முதலாவது உமா மகேஸ்வரனுடனும் அவரது குழுவுடனும் இடம்பெற்றது. புலிகள் இயக்கத்திற்காக பாலசிங்கம் உருவாக்கியிருந்த துண்டுப்பிரசுரங்கள் பற்றியே அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. புலிகள் பற்றிய பாலசிங்கத்தின் ஆவண்ங்கள் உமா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமையவே எழுதப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியவுடன் உமாவுக்கு அதனை அனுப்பிவைத்த பாலசிங்கம், உமா அவற்றைத் திருத்திச் சரி பிழை பார்த்தபின்னர் மீண்டும் பாலசிங்கத்திற்கு இறுதிவடிவமாக்க அனுப்பி வைப்பது வழமை. ஆகவே, அன்றைய சந்திப்பு ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பாகவே இருந்தது.

See the source image

அடேல் பாலசிங்கம்

ஆனால், பிரபாகரனுடனான பாலசிங்கத்தின் சந்திப்பு வித்தியாசமானதாக இருந்தது. மிகவும் தோழமையாக, நட்புறவுடன் அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சரித்திரத்தின் இரு முக்கிய கதாப்பாத்திரங்களின் முதலாவது சந்திப்பாக அது அமைந்தது. நள்ளிரவளவில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி பிரபாகரனும், பேபி சுப்பிரமணியமும் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். பிரபாகரன் நீளக் காற்சட்டையும், மென்மையான நிறத்தில் அச்சிடப்பட்ட மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். பேபி சுப்பிரமணியம் வழமை போல வெண்ணிற வேட்டியும், நஷணல் மேலாடையும் அணிந்திருந்தார். கூடவே தன்னுடன் ஒரு பை நிறைய ஆவணங்களையும், அரசியல் கட்டுரைகளையும் எடுத்து வந்திருந்தார். அடேல் பாலசிங்கம் தான் எழுதிய விடுதலைக்கான வேட்கை எனும் புத்தகத்தில் இந்தச் சந்திப்புக் குறித்து எழுதும்பொழுது, அன்று தான் பிரபாகரனிடம் அவதானித்த ஆளுமையின் பண்புகள் எப்படி அவரை உலகத்தின் தலைசிறந்த்ச கெரில்லாத் தலைவராக உருவாக்கியிருந்தது என்பதுபற்றி எழுதுகிறார். 

"பயங்கவராதிகள் என்றழைக்கப்பட்ட,  இளமையான, அப்பாவிகளாகத் தோற்றமளித்த அந்த இரு இளைஞர்களையும் பார்த்தபோது ஒருகணம் எனது கண்களை என்னால் நம்பமுடியாது போய்விட்டது. அவர்கள் பற்றி நான் அறிந்துகொண்டவைக்கும் அவர்களின் உருவ அமைப்புக்களுக்கும் இடையே எந்த ஒற்றுமையினையும் நான் காணவில்லை. சற்றுக் குட்டையான, நேர்த்தியாக உடையணிந்து காணப்பட்ட அந்த இரு இளைஞர்களைப் பார்த்தபோது, மிகவும் அப்பாவிகளாகத் தெரிந்தார்கள்" என்று அவர் எழுதுகிறார்.

பிரபாகரன் நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பின்னர் வல வருடங்களாக பிரபாகரனின் விடுதலைப் பயணத்தில் பயணித்த அடேல் பின்வருமாறு கூறுகிறார்,

"தலைமுடியினை சீராக வாருவது அவருக்கே உரித்தான ஒரு பண்பு. உடையணிதல் என்பது வழக்கமான சம்பிரதாயங்கள் போன்று உடுத்தோமா, கிளம்பினோமா என்பது போல அல்ல பிரபாகரனுக்கு. அவரைப்பொறுத்தவரையில் அது ஒரு நிகழ்வு. அன்றிரவு எம்மைச் சந்திக்க வந்தபோது அவர் முழுமையாக ஆயுதம் தரித்திருந்தார். மிகவும் தளர்வான மேற்சட்டைக்குள் இடுப்பில் பத்திரமாக செருகப்பட்டிருந்த அவரது பிரத்தியேக ஆயுதத்தை கூர்ந்து கவனித்தாலன்றி, சாதாரணமாகத் தெரிந்துவிடாது. தனது மேலாடையினை இலகுவாக கழற்றி தனது ஆயுதத்தை துரிதமாக வெளியே எடுக்கும்வகையில் அழுத்தப் பொத்தான்களை அவர் தனச்து மேலாடைக்குப் பாவித்திருந்தார்".

பிரபாகரனின் இளமையான முகம் நேர்த்தியாகச் சவரம் செய்யப்பட்டு, பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்தது. அவரின் ஊடுருவிப் பார்க்கும், அகன்ற கறுத்த விழிகள்  பற்றி அடேல் பின்வருமாறு எழுதுகிறார்,

 " அவர் உங்களைக் கூர்ந்து பார்க்கும்போது அவரது பார்வை உங்களின் உள்ளத்தை ஊடுருவிப் போவது உங்களுக்குப் புலப்படும். அவரது பார்வையின் ஆளம் அவரின் மனதையும், எண்ணங்களையும் வெளிக்காட்டும். பிரபாகரனுடனான எனது வாழ்க்கையில் அவரது ஆள ஊடறுத்து நோக்கும் பார்வை பல விடயங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது".

AVvXsEh0Gt3M8fU9sFTpxW2J3RXt7XIVzEiDgPM6HBZSm77Epcx6SON0jtX6jKO8vWNBr6_DzfcE_2eO0Ix_KdiN_lNZDKZ-i725yO91bKggSZOVHKH9z5rvEh3eQo8OGxcCn2IIuz-vXbGLpkHtAoSAFXP1fiSVwMDKDtsVqSUMa37SUBhzeswd0vztwfz9=s640

தலைவருடன் எங்கள்  தேசத்தின் குரல்

அந்தச் சந்திப்பு நள்ளிரவில் இருந்து அதிகாலைவரை தொடர்ந்தது. அடேலைப் பொறுத்தவரை பிரபாகரனும் பாலசிங்கமும் ஒருவரை ஒருவர் அனுமானிக்கவும், கணிப்பிடவும், புரிந்துகொள்ளவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துக்கொண்டார்கள் என்று எழுதுகிறார்.

ஒவ்வொருவரும் ஈழம் எனும் தனிநாட்டிற்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை நாடிபிடித்தறிவதே அவர்கள் இருவரினது நோக்கமாக இருந்தது. பாலசிங்கத்தின் முகபாவனைகள் ஊடாகவும், அவரை அரசியல் ரீதியிலான கேள்விகளைக் கேட்பதன் மூலமாகவும் அளவிடத் தொடங்கினார் பிரபாகரன். தன்னுடன் பேசும்போது, பாலசிங்கத்தின் முகபாவனையின்போது அசைந்த ஒவ்வொரு தசையினையும் பிரபாகரன் கூர்ந்து கவனித்தார். பாலசிங்கத்தின் பின்புலம், அவரது நம்பிக்கைகள் குறித்து பிரபாகரன் அறிந்துகொள்ள விரும்பினார். சேகுவேரா மற்றும் மாஒ சேதுங் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை பாலசிங்கம் மொழிபெயர்த்தது பற்றியும்,  தானாக எழுதிய அரசியற் கட்டுரைகள் பற்றியும் பிரபாகரன் கேட்டுத் தெரிந்துகொண்டார். சரித்திரப் பெருமைமிக்க உறவொன்றினை அன்று ஆரம்பித்துக்கொண்ட அவர்கள் இருவரும் அதனை இறுதிவரை தொடர்ச்சியாகப் பேணிவந்தனர்.

அந்தச் சந்திப்பு நிறைவுபெறும் நேரம் வந்ததும், பாலசிங்கம் இரு விடயங்கள் குறித்து பேசலாம் என்று எண்ணினார். முதலாவது பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான முறுகல் நிலையினைச் சரிசெய்வது. இரண்டாவது புலிகளின் உறுப்பினர்களுக்கு அரசியல்ப் பாடங்களை நடத்துவது. அரசியல்ப் பாடங்களை எடுப்பதற்கு உடனேயே சம்மதித்த பிரபாகரன், தானும் அதில் கலந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். ஆனால், முறுகல் நிலையினைத் தளர்த்துவது குறித்துப் பிடிவாதமாக இருந்தார். "தனது கொள்கைகளை காற்றில்ப் பறக்கவிட்ட ஒருவருடன் என்ன சமரசம் வேண்டிக் கிடக்கிறது?" என்று அவர் பாலசிங்கத்திடம் கேட்டார். "இது எமது போராட்டத்தையே அழித்துவிடும்" என் அவரே தொடர்ந்தார்.

தமிழர்கள் மிகவும் பலவீனமான நிக்லையில் இருப்பதாகப் பிரபாகரன் கூறினார். அடிமை வாழ்வை நோக்கி தமிழர்கள் தள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார். அரச படைகளைக் கொண்டும், தமது சனத்தொகைப் பலத்தைக் கொண்டும் ஆளும் சிங்கள வர்க்கம் தமிழர்களை அடிமைகளாக நடத்த எத்தனிக்கிறது என்று அவர் கூறினார். தமிழர்களின் சமாதான வழியிலான போராட்டங்கள் முற்றாகத் தோற்றுவிட்டன என்று அவர் கூறினார். பெரும்பான்மையினரின் விருப்பங்களை சிறுபான்மையினர் மேல் திணிக்கும் அளவிற்கு சனநாயகம் விபச்சாரப் பொருளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். ஆகவே, தமிழர்களுக்கு முன்னாலிருக்கும் ஒரே வழி ஆயுத ரீதியிலான போராட்டம் மட்டுமே என்று பாலசிங்கத்திடம் அவர் எடுத்துக் கூறினார்.

பாலசிங்கம் உடனடியாகப் பிரபாகரனின் பேச்சில் கவரப்பட்டுப் போனார். தனது பின்வரும் கூற்றின்மூலம் பிரபாகரன் பாலசிங்கத்தை தன்பக்கம் இழுப்பதில் பூரண வெற்றி கண்டார்.

"இலங்கை அரசாங்கம் ஒரு அடக்குமுறை அரசாகும். இந்த அரசு சிங்கள இனவாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது. தமிழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த தனது ஆயுதங்களான இராணுவத்தையும், பொலீஸாரையும் அது பாவிக்கிறது. ஆகவே, தமிழர்களின் முன்னால் உள்ள முதலாவது எதிரிகளாக இருப்பது சிங்கள இராணுவமும், பொலீஸும்தான். தமிழர்களின் சமாதான ரீதியிலான போராட்டங்களையும், வன்முறை ரீதியிலான போராட்டங்களையும் இவை கொடுமையாக நசுக்கி வருவதோடு, சிங்களவரின் கீழ் முற்றான அடிபணிதலுக்கும் தள்ளி வருகின்றனர்".

"இராணுவமும், பொலீஸாரும் தமது எதிரிகள் என்பதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கெதிராக அவர்கள் போராட வேண்டும்".

"ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கும் முகமாக தமிழர்கள் ஒன்றுதிரளவேண்டும். கற்பித்தல் வழிகள் மூலமும், பிரச்சாரம் மூலமும் இதனைச் செய்வதென்பது சாத்தியமில்லாததுடன், நேர விரயமும் ஆகும். இராணுவம் மீதும் பொலீஸார் மீதும் மிகவும் கடுமையாகத் தாக்க வேண்டும்.  அவர்கள் பதிலுக்கு தமிழர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வார்கள். இது மக்களை தமது தேசம் மீது, விடுதலை மீது அக்கறை கொள்ளவைக்கும். மக்கள் போராளிகளிடம் அடைக்கலம் தேடி வருவார்கள்".

"இராணுவத்தையும், பொலீஸாரையும் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டுவதன் மூலம், போராளிகளை அவர்களின் பாதுகாவலர்களாக காட்ட முடியும். இதன்மூலம் ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்".

"மக்களின் நம்பிக்கையினை வளர்த்தெடுப்பதும், அதனைத் தக்கவைப்பதும் மிகவும் கடிணமான ஒரு காரியம். ஒழுக்கமே இவை எல்லாவற்றிற்கு மிக அவசியமானது. மக்களின் காவலர்கள் ஒழுக்கமின்றிச் செயற்பட முடியாது. ஒழுக்கமின்றிப் போனால், எமது ஆயுதப் போராட்டம் முற்றாக உருக்குலைந்துபோகும்".

என்று பிரபாகரன் பாலசிங்கத்திடம் கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயக்கத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன்

பிரபாகரனின் நிலைப்பாட்டிற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் பாலசிங்கம். ஆனால், பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சிக்கலை எப்படியாவது தீர்த்துவிடவேண்டும் என்று அவர் தொடர்ந்தும் முயற்சிசெய்தார். ஆகவே, மத்திய குழுவின் முதலாவது தீர்மானத்தின்படி உமாவும் ஊர்மிளாவும் தமக்கிடையே இருக்கும் பாலியல் உறவினை ஒத்துக்கொண்டு வெளிப்படையாகத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவர்களை பாலசிங்கம் கேட்டார். ஆனால், இதனை உமாவும், ஊர்மிளாவும் முற்றாக மறுத்துவிட்டனர். சரி, உடனடியாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகாவது திருமணம் முடிப்பதாக ஒப்புதல் தாருங்கள் என்று கேட்டார் பாலசிங்கம். அதற்கும் அவர்கள் இருவரும் மசியவில்லை. பாலசிங்கம் கூறுவதுபோல் எதிர்காலத்தில் திருமணம் முடிக்க தாம் ஒத்துக்கொண்டால், தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வதாக இருக்கும் என்பதால், தாம் ஒருபோதும் பாலசிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். உமாவின் ஆதரவாளர்கள் பாலசிங்கத்தை, பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக விமர்சிக்கத் தொடங்கினர். பாலசிங்கத்திற்கு சிறப்பான தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்ததன் மூலம், அவரை தன்பக்கத்திற்குப் பிரபாகரன் இழுத்துவைத்திருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர். ஆனால், பாலசிங்கத்திற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தங்குமிடம் எவ்வளவு அசெளகரியமானதென்பதை பாலசிங்கத்தின் சந்திப்பின்போதே பிரபாகரன் முதன் முதலில் அறிந்துகொண்டார். ஆகவே, பாலசிங்கம் தம்பதிகள் தங்குவதற்கென்று ஓரளவிற்கு வசதியான விடுதியொன்றினைத் தேடுமாறு தனது சகாக்களுக்குப் பணித்தார் பிரபாகரன். புதிதாக ஒழுங்குசெய்யப்பட்ட விடுதி குறித்து அடேல் திருப்தி தெரிவித்தததுடன், அதனை ஒழுங்கு செய்தமைக்காக பிரபாகரனுக்கு நன்றியும் தெரிவித்தார். 

தனது போராளிகளின் செளகரியங்கள் குறித்து பிரபாகரன் கொண்டிருந்த அக்கறையே ஏனைய போராளித் தலைவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. தனது போராளிகளுக்கு சிறந்த உணவு, சுத்தமான உறைவிடம், தரமான குடிநீர் ஆகியவற்றை வழங்குவதில் பிரபாகரன் கவனமெடுத்துச் செயற்பட்டு வந்தார். அவரின் பரம வைரிகளான இலங்கை இராணுவத்தினர் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், "பிரபாகரனின் இந்த அக்கறையே புலிப் போராளிகளை உத்வேகத்துடன் போராட ஊக்குவித்திருந்தது" என்று கூறுகிறார்கள்.

அருளர் தனது அனுபவம் பற்றிக் குறிப்பிடுகையில், பூந்தோட்டம் பயிற்சி முகாமிற்கு ஒருமுறை பிரபாகரனைச் சந்திக்க மதிய வேளைக்குப் பின்னர் அவர் போயிருந்தார். காட்டிற்குச் சென்ற பிரபாகரன் இரு காட்டுக் கோழிகளை வேட்டையாடி வந்து அவருக்குச் சமைத்து உணவளித்ததாக கூறுகிறார். மேலும் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடிப்பது பிரபாகரனின் வழக்கம். தனது போராளிகளுக்கும் இதனையே பிரபாகரன் சொல்லிவந்தார். தன்னோடு எப்போதுமே கொதிக்கவைத்து ஆறிய நீரைப் போத்தலில் இட்டு வைத்துக்கொள்வார் பிரபாகரன். தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொதித்தாறிய நீரை எடுத்துவைத்துக்கொள்வதும் ஒரு அங்கமாக இருந்தது.

பிரபாகரனும், பாலசிங்கமும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளத் தொடங்கியதுடன், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர். தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதியில் செஞ்சி ராமச்சந்திரனின் அறையில் பாலசிங்கம் நடத்திய அரசியல் வகுப்புக்களில் பிரபாகரனும் கலந்துகொள்வார். உமாவும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டதுண்டு. பாலசிங்கத்தின் வகுப்பில் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பிரபாகரன் ஒருபோதும் அவரைக் குறுக்கிட்டுக் கேள்வி கேட்டதில்லை என்று கூறும் அடேல் பாலசிங்கம், உமாவோ அடிக்கடி பாலசிங்கத்தைக் குறுக்கிட்டு அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிடுகிறார். சிலவேளைகளில் பாலசிங்கம் கூறுவதைத் தவறென்றும் உமா வாதாடியதாகவும், இது பாலசிங்கத்தை பலமுறை எரிச்சலடைய வைத்திருந்ததாகவும் அடேல் கூறுகிறார். பிரபாகரன் நோக்கி பாலசிங்கம் சாய்வதற்கும் பிரபாகரனின் இந்த நற்குணம் ஒரு காரணமாக அமைந்திருந்ததாகவும் அடேல் மேலும் கூறுகிறார். பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கினைத் தீர்க்கமலேயே பாலசிங்கம் லண்டன் திரும்பினார்.

உமாவை இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு பிரபாகரன் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தார். இப்பிணக்கு நீட்டிக்கப்பட்டு வந்தமையினால் சலிப்படைந்த சில மூத்த உறுப்பினர்கள் உமாவிடம் சென்று பிரபாகரனை நேரில் சந்தித்து பிணக்கினை சுமூகமாகத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் அந்த சமரச முயற்சியும் தோல்வியைச் சந்தித்தது. ஊர்மிளாவின் பாதம் மீது பிரபாகரன் காறி உமிழ்ந்தபோது ஊர்மிளா அழத் தொடங்கியதுடன், "என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்? இப்படி என்னை நடத்துவது நியாயமா?" என்று அவர் கேட்டார். பிரபாகரனின் செயலுக்காக அவர் ஊர்மிளாவிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று சில மூத்த உறுப்பினர்கள் கேட்டனர், பிரபாகரன்  மறுத்துவிட்டார். பிரபாகரனின் கோரிக்கையான இயக்கத்தை விட்டு விலக வேண்டும் என்பதை பிடிவாதமாக மறுத்துவிட்ட உமா, பிணக்கு இன்னமும் ஆளமாகக் காரணமானர்.

இயக்கத்திற்குள் உருவாகிவந்த சிக்கலை தீர்ப்பதற்கு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் மீண்டும் இலங்கைகு வந்தார். ஊரில் இருந்த தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்ட உமா மகேஸ்வரன், தனது முன்னைய புகார்களான போராட்டத்தின் வழிமுறை, உள்ளக ஜனநாயகம் குறித்துத் தொடர்ந்தும் வாக்குவாதப்படும்படி கோரியிருந்தார். அவரின் திட்டத்தின்படி அவரது ஆதரவாளர்கள் இவற்றிற்கு மீளவும் உயிர்கொடுத்து அமைப்பினுள் சர்ச்சைகள் தொடர்ச்சியாக உருவாகக் காரணமாக இருந்தனர்.

உமா இன்னுமொரு சர்ச்சையினையும் உருவாக்கினார். அதாவது பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் கட்டளைப்படியே ஆடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது ஓரளவிற்கு உண்மைதான், பிரபாகரன் அமிர்தலிங்கம் மீது அபிமானம் வைத்திருந்தார். அமிர்தலிங்கத்திற்கும் பிரபாகரனைப் பிடித்திருந்தது. ஈழத்திற்காகப் பிரபாகரன் கொண்டிருந்த அர்ப்பணிப்பை மெச்சிய அமிர்தலிங்கம், ஆயுதப்போராட்டம் ஒன்றினைத் தலைமைதாங்கி நடத்தும் ஆளுமை பிரபாகரனிடம் இருப்பதாக முழுமையாக நம்பியிருந்தார். அமிர்தலிங்கத்துடன் சிறந்த நட்புறவைப் பிரபாகரன் பேணிவந்தார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமிர்தலிங்கம் செய்த தியாகங்களை பிரபாகரன் பெரிதும் மதித்தார். ஈழ விடுதலைக்காக அமிர்தலிங்கம் கொண்ட அர்ப்பணிப்பை மெச்சிய பிரபாகரன், "இந்த குணாம்சமே எம் இருவரையும் பிணைத்து வைத்திருக்கிறது, இந்த பொதுவான இலட்சியம் உயிர்ப்புடன் இருக்கும்வரை எமது சிநேகம் தொடர்ந்திருக்கும்" என்று தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்போது பிரபாகரன் தனக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இருக்கும் சிறப்பான சிநேகம் குறித்து  குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரன் மீது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பழைய சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் பேசி வந்ததுடன், அவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும் முயன்று வந்தனர். பற்குணராஜா மற்றும் மைக்கேல் (மட்டக்களப்பு) ஆகியோரின் கொலைகள் பிரபாகரனின் தவறுகளாலேயே நடத்தப்பட்டதாகக் அவர்கள் கூறினர். பற்குணராஜாவே அல்பேர்ட் துரையப்பா கொல்லப்பட்டபின்னர் தப்பிச்செல்லும்போது காரை ஓட்டிச் சென்றவர் என்பதுடன், ஆரம்பக் காலங்களில்  புலிகளுக்கும் ஈரோஸ் அமைப்பிற்கும் இடையே உறவினை ஏற்படுத்துவதில் முக்கியமானவராகவும் கருதப்பட்டவர். அவரும், மைக்கேலும் மத்திய குழுவின் ஒருமித்த தீர்மானத்திற்கமைய இயக்க ஒழுக்கத்தை மீறியதற்காகக் கொல்லப்பட்டிருந்தனர். மத்திய குழுவின் இந்த முடிவினை முதலில் ஆதரித்து வக்களித்த நாகராஜ இறுதியில் அக்கொலைகளுக்கான பழியினைப் பிரபாகரன் மீது சுமத்தினார். புலிகள் இயக்க ஆரம்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி பற்குணராஜாவை வவுனியாவிற்கு அழைத்துச் சென்று கொன்றதே நாகராஜா தான் என்று கூறுகிறார்கள்.

பிரபாகரன் இலங்கைக்கு மீள வந்ததன் பிறகு, உருவாகிவந்த சிக்கலான சூழ்நிலைபற்றி விவாதிக்க,  யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலுமாக மத்திய குழு இருமுறை கூடியிருந்தது. இரு கூட்டங்களும் மிக காரசாரமாக இடம்பெற்றிருந்தன. முதலாவதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய குழுவிற்கு புதியதாக 5 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு தானே இறுதியான முடிவினை எடுப்பேன் என்று பிரபாகரன் மத்திய குழுவினரிடம் உறுதிபடத் தெரிவித்தார். மற்றையவர்கள் இதனை எதிர்த்தார்கள். அனைத்து முடிவுகளும் கூட்டாகவே எடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அதற்கு ஏளனத்துடன் பதிலளித்த பிரபாகரன், "அப்படியானால், நாமும்கூட இன்னொரு அரசியல்க் கட்சியாக மாறிவிடுவோம். பேசிக்கொண்டிருப்பதுடன், செயலில் ஒருபோதும் இறங்கப்போவதில்லை" என்று கூறினார்.

வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாகராஜா, பரா மற்றும் ஐய்யர் ஆகியோர் புலிகள் இயக்கத்தை பாரிய போராட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பிரபாகரனைப் பொறுத்தவரை அக்கோரிக்கை மிகையானதாகத் தெரிந்தது. ஆயுதப் போராட்ட கரந்தடிப்படை ஒன்றினை உருவாக்கும் தனது திட்டங்கள் உடையத் தொடங்குவதாக பிரபாகரன் உணரத் தலைப்பட்டார். இதனால் அவர் வெறுப்படைந்தார். கண்களில் கண்ணீருடனும், தழுதழுத்த குரலுடனும் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "இந்த இயக்கத்திற்காக நான் பல விடயங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், எவரும் அதனை உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இன்றுடன் நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார். அங்கிருந்த பலருக்கு அது பாரிய அதிர்ச்சியைக் கொடுத்ததுடன், சிலர் அவரின் கைகளைப் பற்றிச் செல்லவேண்டாம் என்று வேண்டத் தொடங்கினர். ஆனால், பிரபாகரன் எவரின் சொல்லையும் கேட்கத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது கைத்துப்பாக்கியினை பிரபாகரனிடம் நினைவுச் சின்னமாகக் கொடுக்க முனைய, பிரபாகரன் அதனை ஏற்க மறுத்து விட்டார்.

அவர் வெளியேறி சென்றார். வெறுங்கைய்யுடன், ஆனால் புதிய சரித்திரம் ஒன்றினைப் படைக்கும் திடமான உறுதியுடன் அவர் சென்றார். அங்கிருந்து சென்ற பிரபாகரன், தின்னைவேலியில் அமைந்திருந்த தனது மாமனாரின் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து தனது எதிர்காலம் குறித்துச் சிந்தித்து வந்தார்.

தன்னுடன் ஆரம்பத்தில் இணைந்த தோழர்களும், சேர்த்த ஆயுதங்களுமின்றி பிரபாகரன் இருந்தபோதிலும், தான் அப்படியே தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாதென்பதை அவர் உணர்ந்தே இருந்தார். தன்னுடன் சேர்ந்து பயணிக்க அர்ப்பணிப்புள்ள சில இளைஞர்களையும், சில ஆயுதங்களையும் சேகரித்துக்கொண்டு, தனது உறவினர்கள் தலைமையேற்று நடத்திவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துடன் கூட்டணியொன்றினை அமைத்து சேர்ந்து பயணிக்கலாம் என்று அவர் எண்ணினார். தனது மாமனாரின் உதவியுடன், அவரது வீட்டில் டெலோ இயக்கத்தின் தங்கத்துரை, குட்டிமணி மற்றும் நடேசுதாசன் ஆகியோருடன் இதுகுறித்துப் பேசுவதற்காக கூட்டமொன்றினை ஒழுங்குசெய்தார்.  தங்கத்துரையிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய பிரபாகரன், "நான் அன்று உங்களின் தம்பியாக விட்டு விலகிச் சென்றேன். இன்று அதே தம்பியாக உங்களிடம் மீளவும் வந்திருக்கிறேன்" என்று கூறினார். பிரபாகரன் தனித்துச் சுதந்திரமாகச் செயற்பட தாம் அனுமதியளிப்பதாகவும், அவருக்கு சில ஆயுதங்களைத் தரவிரும்புவதாகவும் குட்டிமணி கூறினார்.

See the source image

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்

 பிரபாகரனை தமது இயக்கத்தினுள் மீள உள்வாங்குவதன் மூலம் இரு அமைப்புக்களும் சேர்ந்தியங்கலாம் என்று தங்கத்துரை தீர்மானித்தார். தமிழ்நாட்டில் டெலோ அமைப்பினருக்குப் பயிற்சியளிக்க உருவாக்கப்படடவிருந்த முகாம்களுக்கு பொறுப்பாக பிரபாகரனை நியமிக்கலாம் என்கிற தங்கத்துரையின் விருப்பத்திற்கு பிரபாகரனும் சம்மதித்தார்.

திருச்சிக்குச் சென்ற பிரபாகரன் பயிற்சி முகாம்களை உருவாக்கினார்.அவரும், அவரின் தோழர்களும் இணைந்து காட்டிற்கு அருகில் அமைந்திருந்த மேய்ச்சல் நிலங்களைத் துப்பரவு செய்து கொட்டகைகளை அமைத்தனர். தமது உணவைத் தாமே தயாரித்ததுடன், பாய்களில் படுத்துறங்கினர். பிரபாகரன் இரண்டாவது முகாமை மதுரையில் உருவாக்கினார். இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளின் உதவியினை பயிற்சிகளுக்குப் பிரபாகரன் பயன்படுத்தினார்.

PHOTO-2020-10-21-19-16-18-copy-150x150.jpg

புலேந்திரனுடன் சந்தோஷம் மாஸ்ட்டர்

ஆனாலும் பிரபாகரனின் மனது அமைதியடையவில்லை. யாரோ ஒருவரின் அமைப்பிற்கு பயிற்சிகளை ஒருங்கிணைப்பதும், பயிற்றுவிப்பதும் அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. தான் தனித்துச் செயற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். தனக்கு விசுவாசமான அமைப்பொன்று தனக்குத் தேவை என்பதை அவர் உணர்ந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அரியாலையைச் சேர்ந்தவரும் பின்னாட்களில் திருகோணமலை மாவட்டத்தின் புலிகளின் தளபதியாகப் பணியாற்றியவருமான சந்தோஷம் என்னிடம் அன்றைய காலம் குறித்துக் கூறுகையில், பிரபாகரன் 1978 இலிருந்து 1980 வரையான காலப்பகுதியில் இரு முக்கியமான விடயங்களைக் கற்றுக்கொண்டதாக என்னிடம் கூறினார்.

முதலாவது , தனக்கு முற்று முழுதான விசுவாசத்தைக் காட்டும்  அமைப்பொன்றினை உருவாக்க வேண்டும் என்பது.

இரண்டாவது, இயக்கத்தின் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் தன்னிடத்திலேயே இருக்க வேண்டும் என்பது.

PHOTO-2020-10-21-19-16-20.jpg

 

சந்தோசம் மேலும் என்னுடன் பேசுகையில், ஆரம்பத்தில் தன்னுடன் இணைந்த பல உறுப்பினர்களிடமிருந்து பெருமளவு பிரச்சினைகளை பிரபாகரன் எதிர்கொண்டதாகக் கூறினார். "அவர்களில் பெரும்பாலானவர்கள் பேச்சில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு சின்னப்பிரச்சினையினைக் கூடத் தீர்க்க முடியாமல் விதண்டாவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவரும் தத்தமது திசையிலேயே இயக்கம் இயங்கவேண்டும் என்று ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டனர். அப்படியானவர்களைக் கொண்டு எந்த விடுதலை இயக்கமும் வெற்றிபெற முடியாது" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கூறினார். முத்துக்குமாரசாமி தலைமையில் தமிழ் விடுதலைக் கழகம் என்கிற பெயரில் சில காலம் மட்டுமே அமைப்பாகவிருந்து, செயற்பாடுகள் ஏதுமின்றி காணாமற்போன ஒரு குழுவினர் குறித்துப் பிரபாகரன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்ததாகவும், சமூக சீர்திருத்தம் ஒன்றின்மூலமே அவர்கள் விடுதலையினை வேண்டி நின்றதாகவும் கூறினார்.

தனக்கு விசுவாசமாகவிருந்த முன்னாள் போராளிகள் சிலருடன் பிரபாகரன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். பேபி சுப்பிரமணியம், பண்டிதர், ராகவன், கிட்டு, செல்லக்கிளி மற்றும் சீலன் ஆகியோர் அவருடன் இருந்தனர். அத்துடன் ஆயுதங்களையும் சேகரிக்கத் தொடங்கினார் பிரபாகரன். அவர் முதலில் வாங்கிய ஆயுதம் 0.38 மி மீ கைத்துப்பாக்கியாகும்.

See the source image

1970 இல் தயாரிக்கப்பட்ட 0.38 கொல்ட் வகை துப்பாக்கி

Military-HK-G3-RIA.jpg

 

ஜி - 3 ரக ரைபிள்

அத்துப்பாக்கியினை இந்தியர் ஒருவரிடமிருந்து 300 ரூபாய்களுக்கு அவர் வாங்கினார். பின்னர் ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து 3000 ரூபாய்களுக்கு ஜி - 3 ரக ரைபிள் ஒன்றினை வாங்கினார். அப்பணத்தைச் சேகரிப்பதற்கு அவர் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. இந்தத் துப்பாக்கியைக் கொள்வனவு செய்வதில் பிரபாகரனுடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டு, விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மடலான "விடுதலைப் புலிகள்" இல் பேட்டியளிக்கும்போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களைச் சந்தித்த பிரபாகரன், "நாம் இப்படியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொண்டிருக்க முடியாது. எதிர்காலத்தில் எதிரியிடமிருந்தே நாம் ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும்" என்று பிரகடணம் செய்ததாகக் கூறியிருக்கிறார். அச்செவ்வியில் கிட்டு மேலும் கூறும்போது, எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது என்பது எமது கொள்கையில் ஒரு திருப்புமுனையான தீர்மானமாக இருந்தது. அதன் பின்னர் தாக்குதல்களின்போது எதிரியின் ஆயுதங்களைக் கைப்பற்றுவதென்பது முக்கிய கடமையாகவும் ஆகிப்போனதென்றும் கூறுகிறார்.

kiddu-praba.jpg

 தலைவருடன் கிட்டு, சொர்ணம் மற்றும் போராளிகள்

பிரபாகரன் தனது அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதிலும், தங்கத்துரையும் குட்டிமணியும் தமது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்க 1980 ஆம் ஆண்டு பெரும்பாலும் சம்பவங்கள் அற்ற அமைதியான ஆண்டாகவே கடந்து சென்றது. இந்த அசாதாரண அமைதி ஜெயாருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகவும் தவறான செய்தியொன்றைச் சொல்லியிருந்தது. ஜெயாரைப்பொறுத்தவரை வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் நடவடிக்கைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை முழுமையாக ஒடுக்கிவிட்டதாக நினைத்திருந்தார். அதேவேளை, அமிர்தலிங்கமும் ஜெயாரின் ராணுவ நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்கள் பலவீனமாகிவிட்டதாகவும், ஆகவே இனிமேல் அவர்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது சுலபமாகிவிடும் என்றும் நம்பத் தலைப்பட்டார்.

 

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் நூலக எரிப்பு

Jaffna-Public-Library-A.jpg

 யாழ்ப்பாணம் நூலகம்

 பிரிகேடியர் வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் இராணுவ நடவடிக்கைகளினால் போராளிகள் அடங்கி ஒடுங்கிவிட்டார்கள் என்று நினைத்த ஜெயார், தனது அரசியல் இருப்பினை மேலும் பலப்படுத்தும் முகமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த விழைந்தார். இந்த விசேட ஆணைக்குழு ஜெயாரினால், நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்தது. தனது பிரேரணைகளை ஆணைக்குழு 1980 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்திருந்தது. 

தென்னக்கோனின் இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இடையே உருவாகி வந்த விரிசலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அறிவிப்பை ஜெயார் வெளியிட்டிருந்த காலப்பகுதியில் , 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கெதிராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காதது குறித்து அக்கட்சியின் இளைஞர் பிரிவு தனது ஆட்சேபணையினை வெளியிட்டிருந்தது. வட மாகாணத்தின் பலவிடங்களிலும் தமது தலைமையினை விமர்சித்து சுலோககங்கள் எழுதப்பட்டிருந்தன. "நீங்கள் பெற்றுத்தருவதாகக் கூறிய ஈழம் இதுதானோ?" என்று ஒரு வாசகம் தலைமையைக் கேள்வி கேட்டிருந்தது.

SC Chandrahasan

தந்தை செல்வாவின் இளைய மகனும், இந்தியக் கைக்கூலியுமான எஸ் சி சந்திரகாசன்
 

 1979 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட வேளை மாவை சேனாதிராஜா சிறையிலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும், சுதந்திரன் அமைப்பினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தார். சுதந்திரன் பத்திரிக்கை தந்தை செல்வாவினால் தனது சமஷ்ட்டிக் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இப்பத்திரிக்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் கொள்கைகளையும் முன்னெடுத்துச் சென்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது இளைய மகனான எஸ் சி சந்திரகாசன் நடத்தி வந்தார். 1980 ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி இப்பத்திரிக்கை மிகவும் காரசாரமான தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினைக் கடுமையாக விமர்சித்திருந்த இப்பத்திரிக்கை, போலியான மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டி தமிழரை ஏமாற்றாமல் தாம் உறுதியளித்தவாறு சுதந்திரத் தனிநாடு நோக்கிய பயணத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

அக்காலத்தில் சுதந்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக கோவை மகேசனே செயற்பட்டு வந்தார். கோப்பாயைச் சேர்ந்த மகேஸ்வர ஷர்மா தனது பெயரைக் கோவை மகேசன் என்று மாற்றியிருந்தார். அரசியல் மடல் எனும் தலைப்பில் அவர் எழுதிவந்த தீவிர அரசியல் கட்டுரை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது. அவ்வாறானதொரு அரசியல் கட்டுரையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கோவை மகேசன் அதனை எள்ளி நகையாடியுமிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையாக இருந்தபோதும், கோவை மகேசனின் அரசியல் கட்டுரைப்பகுதியில் தலையிடுவதில்லை என்கிற தந்தை செல்வாவின் முடிவினால் அமிர்தலிங்கமோ அல்லது முன்னணியின் தலைவர்களோ கோவை மகேசன் முன்வைத்து வந்த விம்ர்சனங்களை கட்டுப்படுத்த முடியாமல்ப் போயிற்று. மேலும், முன்னணியினரின் கருத்துப்படி கோவ மகேசனுக்கு தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனின் பலமான ஆதரவு இருந்தமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்கிறர்கள். 

ஆகவே, கோவை மகேசனின் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க அமிர்தலிங்கம் உதயசூரியன் எனும் பெயரில் இன்னொரு பத்திரிக்கையினை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கையை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிக்கை என்றும் அவர் அழைக்கத் தொடங்கினார். அப்பத்திரிக்கை பறவைகளே பறவைகளே எனும் தலைப்பில் விசேட பகுதியொன்றைத் தாங்கி வெளிவந்தது. இப்பகுதியை கோவை மகேசனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ஒரு களமாக அமிர்தலிங்கம் பாவித்து வந்தார். இவ்விரு பத்திரிக்கைகளினதும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் விவாதங்கள் வாசகர்களான தமிழ் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தன.

 உதாரணத்திற்கு,

 கோவை மகேசன் ஒருமுறை சுதந்திரனில் பின்வருமாறு எழுதியிருந்தார்,

"சோறு வேண்டாம்

சுதந்திரமே வேண்டும்

பாலம் வேண்டாம்

ஈழமே வேண்டும்"

 அதற்கு உதயசூரியனில் பதிலளித்த அமிர்தலிங்கம் பின்வருமாறு எழுதுகிறார்,

"சோறும் வேண்டும்

சுதந்திரமும் வேண்டும்

பாலமும் வேண்டும்

அந்தப் பாலத்தை வைத்தே

ஈழத்தை உருவாக்கும்

விவேகமும் வேண்டும்". 

அவ்வேளை மாவை சேனாதிராஜாவும், உணர்வெழுச்சிகொண்ட இளையவர்களான ஈழவேந்தன், தர்மலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய கோவை மகேசன் அமைப்பும் ஒருங்கிணைந்து வெளியிட்ட தீர்மானத்தில் 1980 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிக்குள் தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் ஆரம்பிக்காதுவிடில், தாம் பிரிந்து சென்று அதனைச் செய்யப்போவதாக அச்சுருத்தியிருந்தனர். சிறிது நாட்களின் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் ஒருபோதுமே செயலில் இறங்கமுடியாது என்று விமர்சித்துவிட்டு மாவை சேனாதிராஜா அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அதன் இளைஞர் பிரிவுக்கும் இடையிலான விரிசல் 1980 ஆம் ஆண்டு மேதினத்தில் அப்பட்டமாக வெளித்தெரிந்தது. அன்றைய நாளை முன்னணியினர் வழமையான மேதின பேரணியாக அனுஷ்ட்டித்தபோது, அதில் பங்கேற்ற தமிழ் இளைஞர் பேரவையினர், முன்னணியினரின் தலைமைப்பீடத்திற்கெதிராகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். "தமிழ் மக்களுக்கு உறுதியளித்ததன்படி எப்போது தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை உருவாக்கப்போகிறீர்கள்?", "உங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு தனிநாட்டிற்கான விடுதலைப் போராட்டத்தை உடனே ஆரம்பியுங்கள்", "அதிகாரப் பலம் தளபதியையே பாதை மாற வைத்துவிட்டதோ?" என்று சுலோகங்கள் எழுப்பப்பட்டன.

 இது அமிர்தலிங்கத்திற்கு சினத்தை ஏற்படுத்தியது. ஆகவே, பேரணியின் நிறைவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக அவர்
பேசினார். அவ்வுரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை விமர்சிப்பவர்கள் மீதும், போராளிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். போராளி அமைப்புக்களை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பகிரங்கமாக ஏளனம் செய்தார்.

 தொடர்ந்து உரையாற்றிய அமிர்தலிங்கம், "நீங்கள் சிறு குழுக்களாக அலைந்து திரிகிறீர்கள். நீங்கள் அழிவுகளையே எம்மீது கொண்டுவரப்போகிறீர்கள்" என்று கடிந்தும் கொண்டார்.

image_7142752001.jpg

அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த சிவசிதம்பரம் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசினார். தலைமையினை விமர்சிப்பவர்களைப் பார்த்து, "அமிர்தலிங்கத்தை அகற்றிவிட்டு உங்களால் எதையாவது சாதிக்க முடியுமா?" என்று அவர் கேட்டார்.

 

1 hour ago, புங்கையூரன் said:

தொடருங்கள், ரஞ்சித்..!

ஆவலுடன் பின் தொடருகின்றேன்..!

உங்களின் ஆதரவிற்கு நன்றியண்ணா

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, vasee said:

நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்...

நன்றி வசி !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா !

1980 ஆம் ஆண்டு ஆவணி 8 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான பிரேரணையினை பிரதம மந்திரியான பிரேமதாசா பாராளுமன்றத்தின் முன்வைத்தபோது பிரச்சினை இன்னும் சிக்கலானது. அதனை உடனடியாகவே நிராகரிக்க வேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பிரேரணையினை பாராளுமண்ரத்திலேயே நிராகரித்துவிட்டு, வெளியே வந்து தனிழ்நாட்டிற்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், இளைஞர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்னணி மறுத்துவிட்டது. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை பிரேரணையினை ஆதரிப்பதென்றும், அதனை நடைமுறைப்படுத்த ஜெயாருக்கு தமது முழு ஆதரவினையும் வழங்குவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழு முடிவெடுத்தது.

Jaffna-Public-Library-2-300x204.jpg

எரிக்கப்பட்டுக் காட்சிதரும் யாழ்ப்பாண நூலகம்

சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பொதுச்சபை, அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பான தமது தீர்மானத்தை கலந்தாலோசித்திருந்தது. சுமார் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் "இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்" என்று கூறியதுடன் தமது கட்சி இதனை முற்றாக ஆதரிக்கும் என்றும் கூறினார்.

இச்சட்டத்தை தானும், தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதற்கு மூன்று காரணங்களை அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, இச்சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கலை நாடு முழுவதற்கு விஸ்த்தரிக்க முடியும் என்று அவர் கூறினார். அபிவிருத்திப் பணிகளில் மக்களையும் இதன்மூலம் ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

இரண்டாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரிக்காவிட்டாலும் கூட, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அரசாங்கம் நிச்சயம் அதனை நிறைவேற்றியே தீரும். ஆகவே, அதனை எதிர்த்து அரசுடன் பகைமையினை வளர்ப்பதைக் காட்டிலும், ஆதரித்து நட்புப் பாராட்டலாம் என்று அவர் கூறினார்.

மூன்றாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரித்து சட்டமாக்க உதவுவதன் மூலம், தமிழ் மாவட்டங்களில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என்றும், அவ்வாறில்லாமல் இதனை எதிர்த்தால் வடக்குக் கிழக்கில் இன்றுவரை அரசால் அபிவிருத்திப்பணிகளில்  காட்டப்பட்டுவரும் மாற்றாந்தாய் மனப்பான்மை இனிமேலும் தொடரும் என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால், அமிர்தலிங்கத்தின் இந்த யோசனைக்குப் பலமான எதிர்ப்பு இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. அவரை விமர்சித்தவர்கள் இச்சட்டம் மிகவும் பலவீனமானதென்றும், இதனால் தமிழருக்கென்று நண்மைகள் ஏதும் இல்லையென்றும் வாதிட்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் டட்லி சேனநாயக்கவினால் வரையப்பட்ட பிராந்திய சபைகள் அடிப்படையிலான தீர்வினைக் காட்டிலும் ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மிகவும் பலவீனமானவை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். டட்லியின் பிராந்திய சபைகளையே தமிழ் இளைஞர்கள் "மிகைப்படுத்தப்பட்ட நகர சபைத் தீர்வு" என்று ஏளனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது. மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தினை விமர்சித்தவர்களின் கருத்தின்படி சட்டவாக்கல் மற்றும் வரி அறவிடல் ஆகிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் போதுமானதாக இல்லையென்றும், மத்திய அரசாங்கத்தின் விருப்பின் அடிப்படையிலேயே இவை தீர்மானிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், இந்த சட்டத்தினை தமிழர்களுக்கான தீர்வாக சர்வதேசத்திற்கு காட்டுவதே ஜெயாரின் உண்மையான நோக்கம் என்றும், இச்சட்டத்தினை அவர் ஒருபோதும் உண்மையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

Eelaventhan Manickavasakar

ஈழவேந்தன்

தமிழர் ஐக்கிய முன்னணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வவுனியா நகர மண்டபத்திற்கு வெளியே இளைஞர் குழுவொன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் இறங்கியது. அந்த இளைஞர்கள் பதாகை ஒன்றினை ஏந்தியிருந்தனர். "எமது இலட்சியத்திலிருந்து எம்மை திசைதிருப்பும் இந்த சட்டத்தினை உடனடியாக நிராகரியுங்கள்" என்று அந்தப் பதாகை கூறியது. கூட்டத்தின் முடிவில் அச்சட்டத்தினை தமது கட்சி ஏற்கும் என்று அன்று இரவு 9 மணிக்கு முடிவெடுத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்த அமிர்தலிங்கத்தைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் "அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா, அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா" என்று ஆக்ரோஷமாகக் கூச்சலிடத் தொடங்கினர். அதாவது, அமிர்தலிங்கம் சிங்களவர்களுக்கான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் என்று பொருள்.  அந்தச் சத்தியாக்கிரகத்தை ஒழுங்குசெய்த ஈழவேந்தன் எழுந்துசென்று, அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசியின் முன்னால்ப் போய் அழுதுகொண்டே, "உங்களின் கணவர் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்,உங்களுக்கு வணக்கம்" என்று கூறிவிட்டுச் சென்றார். கனகேந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட ஈழவேந்தன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் பலகாலம் பணிபுரிந்தவர் என்பதுடன், செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய அமைப்பாளராக ஆரம்ப காலங்களில் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஈழவேந்தனின் அந்த இறுதி விடைபெறுதல் நிகழ்வு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் இருந்த பிளவை முழுமையாக்கியிருந்தது என்றால் அது மிகையில்லை.  முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற கோவை மகேசனின் அமைப்பு தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பினை உருவாக்கியது. இப்புதிய அமைப்பின் தலைவராக கலாநிதி தர்மலிங்கமும், செயலாளராக ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டார்கள்.

அக்காலத்தில் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். தனது அமைப்பை மீள உருவாக்கிக் கட்டமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். தான் எப்படியாவது மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும் என்று அவர் உறுதி பூண்டிருந்தார். தனக்கு விசுவாசமான, தனது நோக்கத்தினைச் செவ்வணே நிறைவேற்றும் கெரில்லா அமைப்பொன்றினை உருவாக்க அவர் விரும்பினார். தேவையற்ற விவாதங்களும், பலனற்ற தத்துவார்த்தச் சிந்தனைகளும், இயக்கம் எப்படி பயணிக்கவேண்டும் என்பது குறித்து காலவரையறையின்றி நடக்கும் கலந்துரையாடல்களும் ஒருபோதும் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப்போவதில்லை என்று அவர் திடமாக நம்பினார். ஆகவே, தந்தை செல்வாவைப்போன்று தானும் யதார்த்தமான வழிகளைப் பின்பற்ற விரும்பினார். ஒரே தலைவன், ஒருவனே தீர்மானம் எடுப்பது, தமிழ் மக்களின் விடுதலையினை வென்றெடுக்க ஒரே சிந்தனையுடன் இலட்சியத்தில் பயணிப்பது ஆகியவையே அவரைப்பொறுத்தவரை தனது இயக்கத்திற்குத் தேவையானதாக இருந்தது. பிரபாகரனின் தளபதிகளில் ஒருவராக கிட்டு அவர்கள் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இற்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். தமிழர்களின் தலைவர் தான் மட்டுமே என்ற காரத்தினால்த்தான் தந்தை செல்வாவினால் பிரதமர்களான பண்டாரநாயக்கவுடனோ அல்லது டட்லி சேனநாயக்கவுடனோ நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியதாக இருந்தது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கிட்டு கூறுகிறார். தந்தை செல்வா தன்னுடன்  G G பொன்னம்பலத்தையோ அல்லது சுந்தரலிங்கத்தையோ உடன் அழைத்துச் சென்றிருந்தால், தந்திரசாலிகளான சிங்களப் பிரதமர்கள் இருவரும், தமிழர்களின் பிரதிநிதிகளுக்குள் பிளவினை உருவாக்கி பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பினைப் பலவீனப்படுத்தியிருப்பார்கள் என்று பிரபாகரன் கிட்டுவிடம் கூறியிருக்கிறார்.

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரஞ்சித் said:

தேவையற்ற விவாதங்களும், பலனற்ற தத்துவார்த்தச் சிந்தனைகளும், இயக்கம் எப்படி பயணிக்கவேண்டும் என்பது குறித்து காலவரையறையின்றி நடக்கும் கலந்துரையாடல்களும் ஒருபோதும் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப்போவதில்லை என்று அவர் திடமாக நம்பினார். ஆகவே, தந்தை செல்வாவைப்போன்று தானும் யதார்த்தமான வழிகளைப் பின்பற்ற விரும்பினார். ஒரே தலைவன், ஒருவனே தீர்மானம் எடுப்பது, தமிழ் மக்களின் விடுதலையினை வென்றெடுக்க ஒரே சிந்தனையுடன் இலட்சியத்தில் பயணிப்பது ஆகியவையே அவரைப்பொறுத்தவரை தனது இயக்கத்திற்குத் தேவையானதாக இருந்தது. பிரபாகரனின் தளபதிகளில் ஒருவராக கிட்டு அவர்கள் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இற்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். தமிழர்களின் தலைவர் தான் மட்டுமே என்ற காரத்தினால்த்தான் தந்தை செல்வாவினால் பிரதமர்களான பண்டாரநாயக்கவுடனோ அல்லது டட்லி சேனநாயக்கவுடனோ நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியதாக இருந்தது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கிட்டு கூறுகிறார். தந்தை செல்வா தன்னுடன்  G G பொன்னம்பலத்தையோ அல்லது சுந்தரலிங்கத்தையோ உடன் அழைத்துச் சென்றிருந்தால், தந்திரசாலிகளான சிங்களப் பிரதமர்கள் இருவரும், தமிழர்களின் பிரதிநிதிகளுக்குள் பிளவினை உருவாக்கி பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பினைப் பலவீனப்படுத்தியிருப்பார்கள் என்று பிரபாகரன் கிட்டுவிடம் கூறியிருக்கிறார்.

 

தந்தை செல்வா நல்ல ஒரு அரசியல்வாதி என்பதனால் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழுத்தத்திற்குப் பணிந்த உமா மகேஸ்வரன்

See the source image

தனக்கு விசுவாசமான , தனக்கும், இலட்சியத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தபோதும் கூட, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினை உமா மகேஸ்வரன் கைவிட வேண்டும் என்று பிரபாகரன் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தார். மேலும், தான் வேறு பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினைக் கைவிட்டு விட்டதாகவும் உலவி வந்த வதந்திகளை அவர் ஒதுக்கித் தள்ளினார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சரித்திரத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வது இலகுவானது. எனது இயக்கம், தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்தியிருப்பதுடன், தமிழ் மக்களின் மனங்களிலும் அது குடிகொண்டுவிட்டது" என்று தன்னிடம் சமரசம் பேச வந்த சிலரிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார். 

இலங்கையிலும், லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வந்த கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை விட்டுக் கொடுக்க உமா மகேஸ்வரன் முன்வந்ததுடன், தனது அமைப்பிற்கு தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் என்றும் பெயர் சூட்டினார். இந்த அமைப்பினுள் உமாவுடன், மார்க்ஸிசச் சிந்தனையும், தத்துவார்த்த அடிப்படையில் காலம் காலமாக வீண் விவாதங்களில் ஈடுபட்டும் வந்த பல செயலற்ற உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். தனது சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் முட்டுக்கட்டையாகவிருந்த பல செயலற்ற சிந்தனாவாதிகள் தனது இயக்கத்தை விட்டுச் சென்றது குறித்து பிரபாகரன் நிம்மதி அடைந்திருந்தார்.

தமிழ் மக்களின் மனங்களில் தானும் ஒரு இடத்தினைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த உமா, அரசுக்கெதிராக அதிரடியான தாக்குதல்கள் சிலவற்றை நடத்தினார். மேலும், அரச சதியான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்கேற்கக் கூடாது என்று வன்மையாக எதிர்த்தும் வந்தார். 

இதேவேளை, தனது அரசியல் அதிகாரத்தை மேலும் பலப்படுத்த விரும்பிய ஜெயார். தனது அரசியல் வைரியான சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்குவதன் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிமா போட்டியிடுவதை எப்படியாவது தடுத்துவிடலாம் என்று திட்டம்போட்டார். இதற்காக, தனது பிரதமரான பிரேமதாசவூடாக சிறிமாவின் குடிமை உரிமைகளை 7 ஆண்டுகளுக்குப் பறித்துப்போடும் தீர்மானம் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சிறிமாவோ திட்டமிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஜெயாரின் இந்தப் பழிவாங்கும் செயலினை எதிர்த்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், இரு தடவைகள் நாட்டை ஆட்சிபுரிந்த ஒரு பிரதமரின் குடிமை உரிமைகளைப் பறிப்பது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் செயல் என்று விமர்சித்திருந்தனர். இறுதியாக, இந்தப் பழிவாங்கும் செயலில் இறங்கவேண்டாம் என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் கோரினார். இது முன்னணியினர் மீது ஜெயார் கடுமையாகக் கோபம் கொள்ளக் காரணமாகியது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியலில் பிரபாகரனுக்கு இருந்த ஆர்வம்

எத்தனையோ சவால்களுக்கும், கஷ்ட்டங்களுக்கும் பின்னர் தான் மீளப் பெற்றெடுத்துக்கொண்ட தனது இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீளவும் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைப்பதில் மும்முரமாக பிரபாகரன் ஈடுபட்டிருந்தபோதும் கூட, அரசியலில் அப்போது நடைபெற்று வந்த நிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானித்து வந்தார். இயல்பில் அவர் ஒரு அரசியல்த் தீவிரவாதியாகத் திகழ்ந்தார். இதனை பலமுறை நேர்காணல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் மீதிருந்த தீவிர ஈடுபாடே தன்னை ஒரு போராளியாக மாற்றியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அனித்தா பிரதாப்பிற்கு அவர் 1984 இல் வழங்கிய முதலாவது நேர்காணலில் பின்வருமாறு கூறுகிறார்,

அனித்தா பிரதாப் : எந்தக் கட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகளில் நீங்கள் நம்பிக்கையிழந்தீர்கள்? அதன்மீதான உங்களிம் ஏமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது எது?

பிரபாகரன் : இளைய சமுதாயம் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்த 70 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஆயுத ரீதியிலான போராட்டச் சிந்தனையுடனேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். தமிழ் மக்களின் அவலங்கள் மீது அடுத்தடுத்து ஆட்சி செய்த சிங்கள அரசுகள் காட்டிய அசமந்தமும், அலட்சியமும் மாற்றாந்தாய் மனப்பாங்குமே பாராளுமன்ற அரசியல் ஒரு ஏமாற்று நாடகம் எனும் நிலைக்கு என்னைத் தள்ளியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களும், அந்த அவலங்களைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியில் முன்னெடுத்த போராட்டங்களின் முற்றான தோல்வியுமே ஆயுதம் ஏந்துவதற்குக் காரணமாக இருந்தது. அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் நெருக்கமாக அவதானித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்கள் குறித்த நுட்பங்களைத் தொடர்ச்சியாக அரசியல் அவதானிகளுடன் பேசிவந்திருக்கிறார்.

V. Dharmalingam.jpg

வி. தர்மலிங்கம்

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பீடத்துடன் இளைஞர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாக பிரச்சினைப்படுகையில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஒரு நாள் காலை வி தர்மலிங்கத்தின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன் அரசு முன்வைக்கும் யோசனைதான் என்ன என்று அறிய முயன்றார். தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தனினின் கூற்றுப்படி, அன்று காலை பிரபாகரனுக்கு தோசை உணவாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. அங்கு, தனது கைத்துப்பாக்கியை பிரபாகரன் சித்தார்த்தனுக்குக் காட்டியிருக்கிறார். "இது பஸ்டியாம்பிள்ளையிடம் முன்னர் இருந்தது" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இன்று புளொட் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் சித்தார்த்தன், அன்று பிரபாகரனுக்கு தனது தந்தையாரான தர்மலிங்கம், அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபை திட்டத்தினை விளக்கியதாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் சமஷ்ட்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு அடித்தளமிட முடியும் என்றும் தர்மலிங்கம் பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். "தமிழர்களுக்கான சுயாட்சிப் பிராந்தியம் ஒன்றிற்கான அடித்தளத்தினை இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைக் கட்டமைப்பு கொடுக்கக் கூடியது என்பதனால், இதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம் " என்று பிரபாகரனிடம் தனது தந்தையார் கூறியதாக சித்தார்த்தன் கூறுகிறார்.

தனது தந்தையாரிடம் மிகவும் தீவிரமாகப் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்ததை தான் அவதானித்ததாக சித்தார்த்தன் கூறுகிறார். மாவட்ட அபிவிருத்திச் சபையின் நிதி அதிகாரம், காணியதிகாரம், பொலீஸ் அதிகாரம் குறித்து பல கேள்விகளை பிரபாகரன் தர்மலிங்கத்திடம் கேட்டிருக்கிறார். பிரபாகரனின் அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்துபோன தர்மலிங்கம், இறுதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இருக்கும் அதிகாரம் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்பதை ஒப்புக்கொண்டார். "பிரபாகரன் அதுகுறித்து எந்தவித அபிப்பிராயத்தையும் கூறவில்லை. ஆனால் அவரது கேள்விகளில் அவரது சிந்தனையின் வீச்சு தெளிவாகத் தெரிந்தது" என்று சித்தார்த்தன் அந்த நாளை நினைவுகூர்ந்தார்.

மாவட்ட அபிவிருத்திச் சபைகள் குறித்து பிரபாகரன் அதிகம் அலட்டிக்கொள்ளாதபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு தமது தலைமைக்கெதிரான தமது எதிர்ப்பினை இன்னும் அதிகப்படுத்தியிருந்தனர். இவ்வகையான முதலாவது சம்பவம் 1981 ஆம் ஆண்டு மாசி மாதம் நடந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அக்கூட்டத்திலேயே அமிர்தலிங்கம் அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கப்போவதாக  அறிவித்திருந்தார். அடுத்த சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னணியினர் தீர்மானம் எடுத்தபோது நடந்தது.

அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக அகிம்சை ரீதியில் தமது எதிர்ப்பினைக் காட்டி வந்த இளைஞர்கள் 1981 ஆம் ஆண்டு பங்குனி 16 ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். அன்றிரவு, அமிர்தலிங்கமும், தர்மலிங்கமும், ராஜலிங்கமும் வல்வெட்டித்துறையில் தமது இரவுணவை அருந்திக்கொண்டிருந்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தர்மலிங்கத்தின் ஜீப் வண்டியை மூன்று இளைஞர்கள் சேதப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராஜலிங்கத்தின் ஜீப் வண்டியும் அடித்து நொறுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் மன்னாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலி வங்கிக்கொள்ளை

Selvarajah Yogachnadran - Kuttimuni

கடுமையான பணத்தட்டுப்பாடினை எதிர்நோக்கிய டெலோ அமைப்பு, தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தியான சூழ்நிலையினைப் பாவித்து, குறும்பசிட்டியில் இயங்கிவந்த  தனியாருக்குச் சொந்தமான நகை அடைவுபிடிக்கும் நிலையம் ஒன்றினை 1981 ஆம் ஆண்டு தை மாதம் 7 ஆம் திகதி கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். பின்னர் நடைபெறவிருந்த வன்முறைகளுக்கு இது முன்னோடியாக அமைந்திருந்தது. தனது பணத்தினையும், நகைகளையும் கொள்ளையடிக்க வந்திருந்த குழுவைக் கண்டதும் உரத்துக் கூக்குரலிட்ட உறிமையாளர், அயலவர்களின் உதவியுடன் கொள்ளையிட வந்த குழுவினரைக் கலைத்துவிட்டார். ஆனால், அக்குழு ஒரு தமிழ்ப் போராளி அமைப்பென்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. தப்பியோடிய கொள்ளைக் குழு தம்மைத் துரத்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஐய்யாத்துரை, குலேந்திரன் ஆகிய இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பங்குனி 16 ஆம் திகதி, டெலோ அமைப்புடன் சேர்ந்து பிரபாகரன் தனது முதலவாது ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மேற்கொண்டார். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளியாக மாறியிருந்த முன்னாள் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவரான செட்டி தனபாலசிங்கத்தை யாழ்ப்பாண நகருக்குச் சற்று வெளியே இருந்த கல்வியங்காடு பகுதியில் சைக்கிளில் சென்ற பிரபாகரனும், குட்டிமணியும் சுட்டுக் கொன்றனர். வீதியில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த செட்டி, பிரபாகரனும், குட்டிமணியும் வருவதைக் கவனித்திருக்கவில்லை. செட்டி சுதாரித்து, இடுப்பில் செருகியிருந்த தனது கைத்துப்பாக்கியை எடுக்கும் முன்னரே  நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

1981 ஆம் ஆண்டு, பங்குனி 25 ஆம் திகதி, இலங்கையில் அதுவரை நடைபெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் மிகவும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமான நீர்வேலி வங்கிக்கொள்ளையினை குட்டிமணி நடத்தியிருந்தார். நீர்வேலிக் கிளையில் தினமும் சேரும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தலைமைக் கிளைக்குக் கொண்டு சேர்க்கும் மக்கள் வங்கியின் செயற்பாட்டினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த குட்டிமணி இக்கொள்ளையினை மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டார். நீர்வேலிச் சந்திக்கு அருகில், ஆளரவமற்ற பகுதியில், இராணுவச் சீருடையில் பதுங்கியிருந்த குட்டிமணியும் அவரது தோழர்களும் யாழ்ப்பாணக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டி வரும்வரை காத்திருந்தனர். பணத்தைக் காவிவந்த வாகனம் தமக்கருகில் வந்தவுடன், குட்டிமணியின் தோழர்களில் ஒருவர் வீதிக்குக் குறுக்கே, வாகனத்தின் முன்னால்ப் பாய்ந்து, "நிறுத்துங்கள்" என்று சிங்களத்தில் உரக்கக் கூவியிருக்கிறார். தம் முன்னால் நிற்பது இராணுவ வீரர்கள்தான் என்று எண்ணிய வாகனத்திலிருந்த பொலீஸார், வாகனத்தை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு கீழிறங்கும்போது, அவர்கள் இருவரையும் குட்டிமணியும் தோழர்களும் சுட்டுக் கொன்றனர்.  கொல்லப்பட்ட பொலீஸ்காரர்களின் பெயர்கள் முதுபண்டா மற்றும் ஆரியரட்ண என்பதுடன், வாகனத்தில் நேர்த்தியாக பணம் அடுக்கப்பட்டிருந்த ஐந்து சூட்கேஸுகளுடன் குட்டிமணியும், தோழர்களும் தப்பிச் சென்றனர். அன்று கொள்ளையிடப்பட்ட பணத்தின் அளவு 79 லட்சம் ரூபாய்கள்.

அரசாங்கம் அதிர்ந்து போனது. ஜெயவர்த்தன கலங்கிப் போனார். வீரதுங்கவின் ராணுவ நடவடிக்கையினால் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் செயலிழந்து போய்விட்டன என்று அவர் கட்டிவந்த கனவுக் கோட்டை கலைந்துபோனது. தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஜெயார், கொள்ளையிட்டவர்களை எப்படியாவது கைதுசெய்யவேண்டும் என்று கூறியதுடன், கொள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டார். மேலும், கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோரு பத்து லட்சம் ரூபாய்கள் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சித்திரை 5 ஆம் திகதி, பருத்தித்துறை கிழக்கில் அமைந்திருந்த கரையோரக் கிராமமான மணற்காடு பகுதியில் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல படகிற்காகக் காத்திருந்தவேளை குட்டிமணி, தங்கத்துரை, செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (தேவன்) ஆகிய மூவரும் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பில் வழக்கைச் சந்தித்த தங்கத்துரையுடன் பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.  என்னிடம் பேசிய தங்கத்துரை பின்வருமாறு கூறினார்,

"எங்களை சிறிசபாரட்ணமே கடற்கரையில் இறக்கிவிட்டார். படகு இரவு 11 மணிக்கு வரும் என்று எங்களிடம் அவர் கூறினார். ஆனால், அது வரவில்லை. பின்னர், துப்பாக்கிகளை எம்மை நோக்கி நீட்டியபடி வந்துகொண்டிருந்த பொலீஸ்காரரை நாங்கள் கண்டோம். "சரணடையுங்கள்" என்று அவர்கள் உரக்கக் கத்தினார்கள். தப்பியோடுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தோம், அப்போதுதான் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எம்மால் தப்பிச்செல்ல முடியவில்லை. நாம் கைகளை உயர்த்தியபடி சரணடைய முயலும்போது, குட்டிமணி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுக்க முனைந்தார். தன்னைத்தானே சுட்டுக்கொல்லவே அவர் முயன்றார். ஆனால், பொலீஸார் அவரை மடக்கிப் பிடித்துவிட்டனர். கைகலப்பில் துப்பாக்கி வெடித்து, சன்னம் அவரது காதினைத் துளைத்துச் சென்றது. எம்மைக் கைது செய்து, விலங்கிட்டு, சங்கிலிகளால் பிணைத்து வைத்தார்கள். பின்னர் கொழும்பிற்கு விமானத்தின்மூலம் கொண்டுவரப்பட்டு பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம்".

"உங்களைப் பற்றி யாராவது பொலீஸாருக்கு அறிவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் அவரைக் கேட்டேன்.

"நாமும் அந்த முடிவிற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

தனது சந்தேகத்திற்கான காரணங்களை தங்கத்துரை பின்வருமாறு கூறினார். அவர்களைக் கைதுசெய்ய வந்த பொலீஸ் பரிசோதகரும் அவரது படையும் தமது ஜீப் வண்டியை தொலைவில் நிறுத்திவிட்டு, கால்நடையாகவே சத்தமின்றி அவர்களை நோக்கி முன்னகர்ந்து வந்திருக்கின்றனர். ஆறுபேர் அடங்கிய அந்த பொலீஸ் குழுவினர் தாமிருந்த பகுதியை வட்டமாகச் சுற்றிவளைத்து முன்னேறியது தாம் தப்பிச்செல்வதைத் தடுத்துவிடவே என்று அவர்களுக்குப் புரிந்தது. பொலீஸார் தம்முடன் கைவிலங்குகளையும் எடுத்து வந்திருந்தது, குட்டிமணி குழுவினரைக் கைதுசெய்யும் திட்டத்துடனேயே என்பதைப் புலப்படுத்தியிருந்தது. மேலும், சிறி சபாரட்ணம் கூறியபடி இரவு 11 மணிக்கு படகு வராது போனது கூட, நேரம் வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்டதனால்த்தான் என்றும் அவர்கள் சந்தேகித்திருந்தனர்.

"நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டேன்.

அவர் பதில் கூறவில்லை. புன்னைகையே பதிலாக வந்தது. "நாங்கள் வெளியில் வந்ததன் பின்னர் நீங்களே அறிந்துகொள்வீர்கள்" என்று அவர் என்னிடம் கூறினார்.

"அப்படியானால், படகோட்டியைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று மீண்டும் அவரைக் கேட்டேன்.

அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது.

"படகினை ஒழுங்கு செய்தது யார்?" என்று நான் கேட்டேன்.

"பிரபாகரன்" என்று அவர் பதிலளித்தார்.

"அவரைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் மீண்டும் கேட்டேன்.

சிரித்துக்கொண்டே பேசிய அவர், "நான் எனது சந்தேகங்களை ஒரு பத்திரிக்கையாளரிடம் சொல்ல முடியாது. நான் வெளியே வந்தவுடன் இதுபற்றி நானே விசாரிப்பேன்" என்று அவர் கூறினார்.

ஆனால், அவரால் வெளியில் வரமுடியாமலேயே போய்விட்டது. அவரும், குட்டிமணியும்,  தேவனும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நேர்காணல் நடந்து சரியாக ஒருவருடத்தின் பின்னர், 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி சிறைச்சாலைப் படுகொலைகளின் முதலாம் நாளன்று அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுப் போனார்கள்.

நீர்வேலி வங்கியைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையொன்றினை முடுக்கிவிட்டிருந்தனர். அதனைச் செய்தது டெலோ அமைப்பினரே என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்த தேடுதல் வேட்டை மீண்டும் ஒருமுறை பிரபாகரனின் சமயோசிதத்தை வெளிக்காட்டியிருந்தது. பொலீஸாரின் ஒவ்வொரு அசைவினையும் முன்னமே கணிப்பிட்டு , அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். தனது ஆயுதங்களை உடனடியாக புதிய மறைவிடங்களுக்கு அவர் மற்றிக்கொண்டார். பிரபாகரனின் பழைய மறைவிடங்களைப் பொலீஸார் சோதனையிட்டபோது எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் தேடுதல் நடவடிக்கை பிரபாகரனைத் தொடர்ந்தும் ஓட்டத்தில் விட்டிருந்தது. இதனால் வன்னிக்குத் தப்பியோடிய பிரபாகரன், காட்டில் வாழ்ந்து வந்ததுடன் முட்புதர்களுக்குள் தூங்கியும், உணவின்றியும் அவதிப்பட்டார்.

See the source image

குட்டிமணியும், ஜெகனும் 1982 ஆம் ஆண்டில்

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரின் பொக்கிஷத்தை எரித்த சிங்களக் காடையர்கள்

dharman02.jpg

யாழ்ப்பாணத்தில் அரசியல் சூழ்நிலை எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு வன்னியில் மறைந்திருந்த நாட்களிலும் கூட, இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றார் பிரபாகரன். ஆனால், அவரும், மீதமாக இருந்த டெலோ தலைவர்களும் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தனர். டெலோ இயக்கம் 1981 ஆம் ஆண்டு சித்திரை 26 ஆம் திகதி தனது தலைவர்களில் ஒருவரான ஜெகன் எனப்படும் கணேசநாதன் ஜெகநாதனை காட்டிக்கொடுத்தல் ஒன்றின் மூலம் பொலீஸாரிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தமிழ் மக்களின் மனங்களில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்று எதிர்பாத்திருந்த உமா மகேஸ்வரனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சுந்தரம் எனப்படும் சிவஞானமூர்த்தியுடன் இணைந்து மாவட்ட அபிவிருந்திச்சபைகளுக்கான தேர்தல்களைக் குழப்புவதென்று உமா முடிவெடுத்தார்.  அதன்படி, வைகாசி 24 ஆம் திகதி, காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும், வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்,  . தியகாராஜா புளொட் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Dr_A_Thiyagarajah-287x397.jpg

. தியகாராஜா

தொண்டைமானும், 1978 ஆம் ஆண்டிலிருந்து ஜெயாருக்கு ஆலோசகராகக் கடமையாற்றி வந்தவரான .ஜே. வில்சனும் வட மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்று ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். "தமிழர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு ஒருவரைத் தெரிவு செய்யட்டும்" என்று வில்சன் ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால், ஜெயாரோ வடக்கில் தனது விசுவாசிகளாக இருந்த கணேசலிங்கம், புலேந்திரன் போன்றோரின் ஆலோசனைகளையே நடைமுறைப்படுத்த விரும்பினார். 10 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையில் குறைந்தது இரு உறுப்பினர்களையாவது வெல்லவைப்பதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தன்னுடன் இருப்பதாகக் காட்டலாம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார். இதனைச் செய்வதற்கு தேர்தலில் எந்தவகையான முறைகேடுகளையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார்.

Alfred_Jeyaratnam_Wilson.jpg

.ஜெயரட்ணம் வில்சன்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும், தேர்தல்களை நடத்துவதற்கும் உதவியாக தனது இரு முக்கிய அமைச்சர்களான சிறில் மத்தியூவையும், காமிணி திசாநாயக்கவையும் ஜெயவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். முதலில் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற சிறில் மத்தியூ, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில் தனது காடையர்களை ஏற்றிக்கொண்டு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் தங்கிக்கொண்டார். ஒரு சில நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற காமிணி திசாநாயக்க யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கிக்கொண்டார். வில்சனின் கூற்றுப்படி, காமிணி யாழ்ப்பாணத்திற்குப் போகும், அவரை வழியனுப்பி வைத்த ஜெயார், "சிறில் மத்தியூ மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சிறில் மத்தியூ யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்றில் ஈடுபடப்போகிறார் என்பதை ஜெயார் அறிந்திருந்தார் என்பது உறுதியாகிறது.

dharman03..jpg

சிங்கள மிருகங்கள் - ஜெயவர்த்தன, சிறில் மத்தியூ

இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல்ப் பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வந்தது. அக்கட்சியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் வைகாசி 31 ஆம் திகதி, காங்கேசந்துறை வீதியில், நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ் நகர மேயர் தலைமை தாங்கியிருந்தார். பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தனர். கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்க வந்திருந்த நான்கு பொலீஸார், கூட்டத்தின் பின்புறமாக அடுக்கப்பட்டிருந்த வாங்குகளில் அமர்ந்திருந்து கூட்டத்தை அவதானித்தானித்துக்கொண்டு இருந்தனர். பொலீஸாரின் பின்புறமாக வந்த புளொட் அமைப்பின் ஆயுததாரிகள் பொலீஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சார்ஜன்ட் புஞ்சி பண்டா மற்றும் கொன்ஸ்டபிள் கனகசுந்தரம் ஆகிய இரு பொலீஸ்காரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனைய இரு பொலீஸ்காரர்களான உஸ்மானும், குலசிங்கவும் காயப்பட்டனர். இச்சூட்டுச் சம்பவம் இன்னொரு வன்முறையினைத் தூண்டிவிட்டது.

Vettivelu_Yogeswaran.jpg

வெற்றிவேல் யோகேஸ்வரன்

இச்சம்பவம் நடந்து சரியாக 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு வந்த பொலீஸார், கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட தமது சகாக்களை எடுத்துச்சென்றதுடன், அவ்வாறு செல்லுமுன் நாச்சிமார் கோயிலுக்கும், அருகிலிருந்த சில வீடுகளுக்கும், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கார்களுக்கும் தீவைத்துவிட்டுச் சென்றனர். மேலும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இறுதி போக்குவரத்து பஸ்ஸை மறித்து, பயணிகளை அடித்து விரட்டிவிட்டு அதிலேறி யாழ்நகர் நோக்கிப் பயணித்தது ஒரு பொலீஸ் குழு. யாழ்நகரை அடைந்ததும், யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் இயங்கிவந்த பல வியாபார நிலையங்களை வரிசையாகக் கொழுத்திக்கொண்டே சென்றனர் பொலீஸார். பின்னர், யாழ்நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த  யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் பஸ்ஸை நிறுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யோகேஸ்வரனின் ஜீப் வண்டி, அவரது நண்பரின் கார் மற்றும் யோகேஸ்வரனின் வீடு ஆகியவற்றிற்கும் தீமூட்டினர். தாக்குதல் நடந்தவேளை யோகேஸ்வரனும், மனைவியும் வீட்டில் இருந்தபோதும், சமயோசிதமாக தமது வீட்டின்பின்புறத்தால் ஏறிக் குதித்து அயலவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்ததன் மூலம் உயிர்தப்பிக்கொண்டனர்.  யோகேஸ்வரனின் வீட்டிற்குத் தீமூட்டிய பொலீஸார் பின்னர் அங்கிருந்து, பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகம் நோக்கிச் சென்று அதற்கும் தீமூட்டினர்.

பொலீஸாரின் இந்த வன்முறைகள் நடந்தேறி சரியாக ஒருவாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து முறையிட்ட யோகேஸ்வரன், "என்னைக் கொல்வதற்காகவே அன்றிரவு பொலீஸார் எனது வீட்டிற்குத் தீவைத்தனர். நான் உயிருடன் இருப்பது அதிஷ்ட்டமே" என்று கூறினார்.

யோகேஸ்வரனின் பேச்சினை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறில் மத்தியூ, "யோகேஸ்வரனது வீட்டில், அவரும் பயங்கரவாதிகளும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது குறித்து பொலீஸாருக்குத் தகவல் வந்ததனாலேயே பொலீஸார் அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது" என்று கூறினார். மேலும், "யோகேஸ்வரனின் வீட்டிற்குள் இருந்த பயங்கரவாதிகள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வீடு தீப்பற்றிக்கொண்டது" என்றும் பொலீஸாரின் அக்கிரமத்தை நியாயப்படுத்தினார் சிறில் மத்தியூ.

 கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் இனங்களுக்கிடையிலான சமத்துவம், நீதிக்கான அமைப்பு இத்தாக்குதல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் யோகேஸ்வரனைக் கொல்லும் நோக்கிலேயே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குத் தீவைத்தனர் என்று கூறியிருந்தது. "பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உயிர் தப்பியது அதிஷ்ட்டமே, ஏனென்றால், அவரைக் கொல்லும் ஒரே நோக்கத்திற்காகவே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குச் சென்றனர்" என்று அது கூறியிருந்தது.

பொலீஸாரின் வெறியாட்டம் மறுநாளான, 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதியும் தொடர்ந்தது. அந்தச் சோகமான இரவில், தமிழர்களின் பெருமையான, விலைமதிப்பற்ற யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

அந்த நிசப்தமான இரவில், யாழ்ப்பாணத்தின் வானத்தை மறைத்துக்கொண்டு மேலெழுந்த கரிய புகையினை, உதவுவார் எவருமின்றி ஆதரவற்ற தமிழர்கள், செய்வதறியாது பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தமது பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்படுவது தெரிந்து உணர்வுமேலீட்டால் ஓடிச்சென்று அணைத்துவிடலாம் என்று எண்ணி,  வீதிகளில் இறங்கி நூலகம் நோக்கிச் சென்ற தமிழர்களை நூலப்பகுதியில் நின்றிருந்த பொலீஸார் அடித்து விரட்டினர். பல தமிழர்கள் தம் கண்முன்னே தமது சொத்து எரிக்கப்படுவது கண்டு ஓவென்று அழ, மீதிப்பேர் அந்த அக்கிரமத்தைப் பார்க்க விரும்பாது கண்களை இறுக மூடிக்கொண்டனர். 

Jaffna-Public-Library-gutted-June-1981-300x231.jpg

எரிக்கப்பட்டுக் கிடக்கும் எமது பொக்கிஷம் - யாழ்ப்பாண நூலகம் 1981

ஆனால், ஒரு இளைஞன் மட்டும் இதனை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்று உறுதிபூண்டான். வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகளை அவன் ஏறெடுத்துப்  பார்த்துக்கொண்டான். கண்கள் வீங்கிச் செந்நிறமாக, முகத் தசைகள் இறுகத்தொடங்க அவனது இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது.

இதற்குப் பழிவாங்குவேன் என்று அவன் சபதம் பூண்டான்.

ஜெயவர்த்தனவின் காடையர்கள் எனது பணியை இலகுவாக்கி விட்டார்கள் என்று அவனது வாய் முணுமுணுத்துக்கொண்டது. உலகத்தமிழர் மாநாட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் அடைந்த துன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு துன்பத்தை இந்த நூலக எரிப்பு அவர்களுக்குக் கொடுத்தது. அவர்கள் மனங்களில் என்றும் அழியாத வடுவை அது ஏற்படுத்தியது. இந்த சதிகார நாசச் செயலை எந்தவொரு தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல, அவனே பிரபாகரன். எரிந்துகொண்டிருந்த தமிழரின் பொக்கிஷத்திற்கு வெகு அருகிலேயே அவன் அப்போது ஒளிந்திருந்தான். அவனது மனம் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது.

 

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும்படி உத்தரவு வழங்கியது யார்? நூலகத்தை எரித்தது யார்?

Jaffna Library yalpanam library

யாழ்ப்பாண நூலகம்

 தமிழரின் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாக முக்கியமான மூன்று கேள்விகள் எழுந்தன. 

நூலகத்தை எரித்தது யார்? எவ்வாறு அதனை எரித்தார்கள்? எரிக்கும்படி உத்தரவிட்டது யார்? என்பனவே அம்மூன்று கேள்விகளும். 

யாழ்ப்பாண தமிழர்களின் கலாசாரப் பொக்கிஷமான நூலகம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரன் மிகுந்த வேதனையும், அதேநேரம் ஆத்திரமும் கொண்டார். இந்த நாசகாரச் செயலினால் தமிழினம் "கலாசாரப் பேரிழப்பொன்றினை அடைந்திருக்கிறது" என்று அவரது வாய் முணுமுணுத்தது.

 தென்னாசியாவின் முக்கிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை இன்னும் பலர் செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றார்கள். சரித்திரத்தில் ஒரு இனத்தின் கலாசார அடையாளத்தைப் பேணும் நூலகங்கள் எரிக்கப்படுவது இதுவே முதல்முறையுமல்ல. இதற்கு முன்னர் இரு தடவைகள் இவ்வாறான் நூலக எரிப்புக்கள் சரித்திரத்தில் நடைபெற்றிருக்கிறன.  முதலாவது 12 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசிய காடையர் கூட்டமான கில்ஜி எனப்படும் கொடூரனின் படைகள் நாலந்த என்றழைக்கப்பட்ட பெளத்த பல்கலைக் கழகத்தையும், அதனோடிணைந்த நூலகத்தையும் எரித்தது. இரண்டாவதாக 1619 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் தமிழ் ராஜதானியைக் கைப்பற்றிய போர்த்துக்கேய படைகளின் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா என்பவன் தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த நூலகமும், தமிழர்களின் சரித்திரம், திராவிடப் பாரம்பரியம் ஆகியவற்றின் மூலங்களையும் கொண்ட சரஸ்வதி மகால் எனும் நூலகத்தை எரித்தான். மேலும், 500 சைவக் கோயில்களையும் அழித்துத் தரைமட்டமாக்கியதுடன் தமிழரின் தொன்மையின் அடையாளங்களை இல்லாமப் போகச் செய்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.   மூன்றாவதாக பாரம்பரிய நூலகம் ஒன்றும் பெளத்த நாடு என்று அறியப்பட்ட, பெளத்த ஜனாதிபதியினால் ஆளப்படும் இலங்கையில் எரிக்கப்பட்டிருக்கிறது. 

1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதி இரவு 10:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரான சி.வி. சிவஞானம் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தி யாழ் நூலகம் எரிந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். உடனேயே சிவஞானம் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான யோகேந்திரா துரைசாமிக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த, அவரது மனவி மறுமுனையில் பேசினார். நூலகம் எரிவதுபற்றி தனக்கெதுவும் தெரியாது என்று கூறிய அவர், விடயங்களை அறிந்துகொண்டு மீளவும் அழைப்பதாகக் கூறினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சிவஞானத்தை மீள அழைத்த அரசாங்க அதிபரின் மனைவி நூலகம் எரிவது உண்மைதான் என்பதனை உறுதிப்படுத்தினார். உடனேயே சிவஞானம் நகரசபையின் காவலர் அறைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி நூலகம் எரிவது உண்மையா என்று கேட்டார். காவலர்களும் அதனை உறுதிப்படுத்தினர். நூலகத்தைச் சுற்றி நிற்கும் பொலீஸாரே நூலகத்திற்கு தீவைப்பதாக காவலர்கள் சிவஞானத்திடம் கூறினர். 

sivan-300x167.jpg

சி.வி. சிவஞானம்

 கடமையிலிருந்து ஆறு காவலர்களை தீயணைக்கும் இரு வாகனங்களை எடுத்துக்கொண்டு நூலகத்தை தீயிலிருந்து காக்குமாறு சிவஞானம் உத்தரவிட்டார். ஆனால், யாழ்ப்பாண நகரசபையிடம் அன்றிரவு தீயணைப்பு வாகனங்கள் இருக்கவில்லை, "குறைந்தது நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவதையாவது தடுத்து நிறுத்துங்கள்" என்று தனது காவலாளிகளிடம் கத்திவிட்டு, தானும் நூலகப் பகுதிக்குச் சென்றார்.

 ஆனால் நூலகத்திற்கு அருகில் செல்வதிலிருந்தும், யாழ் நகரசபை கட்டடத்திற்குள் செல்வதிலுமிருந்து அவர் தடுக்கப்பட்டார். அவரை வழிமறித்த பொலீஸார், "நீ உள்ளே போகமுடியாது , திரும்பி சென்றுவிடு" என்று திருப்பியனுப்பினர். மேலும், மாநகரசபையின் ஊழியர்கள் சிலர் எப்படியாவது நூலகத்தினுள் சென்று தீயை அணைக்க முயற்சியெடுத்த வேளை, "வீதிக்கு வந்தீர்கள் என்றால் சுட்டுக் கொல்வோம்" என்று மாநகரசபையின் வாயிலுக்கு முன்னாலிருந்த் பொலீஸ் காவலரனில் கடமையிலிருந்த பொலீஸ் காடையர்கள் ஊழியர்களைப் பார்த்துக் குரைத்தனர்.

keuneman.jpg

பீட்டர் கியூனுமென்

 கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியூனுமென் நூலகம் எரிந்த பின்னர் அதனை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே "அத்த" (உண்மை) எனும் சிங்களப் பத்திரிக்கையும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தது. அப்பத்திரிக்கைக்கு அழுதுகொண்டே பேட்டியளித்த நகரசபை ஊழியர் ஒருவர், "எங்களை உள்ளே செல்ல விடுங்கள் என்று பொலீஸாரிடம் நாங்கள் மன்றாடினோம். அவர்கள் எம்மை அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் எம்மைப்பார்த்து, நூலகம் முற்றாக எரியவேண்டும்" என்று கத்தினார்" என்று கூறினார்.

கியூனுமெனின் விசாரணைகளின்போது, நூலகம் எரிக்கப்பட்ட அன்றிரவு, அதனைச் சூழவுள்ள வீதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்திக் காவலுக்கு நின்ற பொலீஸார் அப்பகுதியினூடாக நூலகத்தை நோக்கி செல்லும் அனைவரையும் தடுக்கும் நோக்குடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. நூலகத்தின் பிரதான வாயில் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்டு, அவற்றின் முன்னால் பழைய டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. 

ஊர்காவற்றுரையில் இருந்த இலங்கை கப்பற்படையின் தளபதியுடன் தொடர்புகொண்ட சிவஞானம் உடனடியாகச் செயற்பட்டு தமிழரின் கலாசார சின்னமான நூலகம் முற்றாக எரிந்து சாம்பலாவதைத் தடுக்க உதவுமாறு கெஞ்சினார். தயக்கத்துடன் கடற்படைத் தளபதி சில வீரர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் நூலகம் முற்றாக எரிக்கப்பட்டுவிட்டது. நூலகத்தின் முழுக் கட்டிடமும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தமிழரின் வரலாற்றுப் பெருமையான யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாக மாறிக்கொண்டிருந்தது.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் முதன்மை நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் 

யாழ்ப்பாணம் பல விடயங்களில் இலங்கையின் முன்னணி மாவட்டமாகத் திகழந்தது போல் நூலகத்துறையும் சிறந்து விளங்கியிருந்தது. முதலாவது வாசகர் அறையினை யாழ் நூலகமே கீரிமலையில் 1915 ஆம் ஆண்டு நகுலேஸ்வரா வாசக அறை என்ற பெயரில் உருவாக்கியிருந்தது. அதேபோல் இலங்கையின் முதலாவது பொது நூலகம் யாழ்ப்பாணத்திலேயே 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி திறக்கப்பட்டது. யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குப் பின்னரே கொழும்பு பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் சர்வதேச நூலகத்துறையில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றினை தானும் நடைமுறைப்படுத்தி வந்தது. அந்தவகையில் பொதுமக்களிடம் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுமக்கள் புத்தக இயக்கம் எனும் செயற்பாட்டினை யாழ்ப்பாண நூலகம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இயக்கத்தின் மூலம் 1930 களில் மக்களுக்கு மலிவான விலையில் பல புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்திருந்தது. இதற்கு முதல், புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், செல்வம் படைத்தவர்களின் இல்லங்களில் மட்டுமே காணப்பட்ட அரிய பொருளாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்காலத்தில் புத்தகங்கள் கம்பளியில் எழுதப்பட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டு, மினுங்கும் மைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Remembering the Jaffna Public Library in 2001 

யாழ் நூலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறித்தவப் பாதிரியார் லோங்கின் உருவச் சிலை

 யாழ் நூலகத்தின் முதலாவது கட்டிடம் 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றின் செயலாளர் எப். சி. கிரெய்னரின் வாசிப்பு அறையாகவே உருவாக்கப்பட்டிருந்தது. 1848 இல் இந்த வாசிப்பு அறை முறையான பொது நூலகமாக உதவி அரசாங்க அதிபர் வில்லியம் டியுனத்தினால் மேம்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நீதிமன்ற செயலாளராகக் கடமையாற்றிய கே. எம். செல்லப்பா அவர்கள் கந்தர்மடத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி யாழ்ப்பாண நூலகத்திற்காக புத்தகங்களைச் சேகரிக்குமாறு கேட்டிருந்தார்.  மேலும், அவ்வருடம் மார்கழி 11 ஆம் திகதி தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்களுக்கான வேண்டுகோள் ஒன்றினை அவர் விடுத்திருந்தார். "யாழ்ப்பாணத்தில் இயங்கப்போகும் இலவச மத்திய நூலகம்" என்கிற தலைப்பில் அவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மக்களிடமிருந்து சிறந்த வரவேற்புக் கிடைத்தது. 1934 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் மாவட்ட நீதிபதி சி. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை அமைக்கும் நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதன்படி நூலக நிர்வாக சபையின் தலைவராக நீதிபதி குமாரசாமியும், உதவித் தலைவராக பாதிரியார் ஐசக் தம்பையாவும், இணைந்த செயலாளர்களாக வழக்கறிஞர் சி பொன்னம்பலமும், செல்லப்பாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Chellappah.png

                                                                             கே. எம். செல்லப்பா

யாழ்ப்பாண நூலகம் முதன்முதலாக 1934 ஆம் ஆண்டு, ஆவணி முதலாம் திகதி 844 புத்தகங்களுடனும், 30 செய்தித் தாள்களுடனும், ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த இலங்கை மின்சார சபைக் கட்டடத்தின் முன்னாலிருந்த தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து மாநகரசபையின் பிரிவான யாழ்நகர அபிவிருத்திச் சபை 1935 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இந்த நூலகத்தினை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறது. யாழ் நூலகம் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. 1952 ஆம் ஆண்டு நூலகத்தின் செயற்பாடுகள் விஸ்த்தரித்து மக்களின் அபிமானத்தை பெருவாரியாகப் பெற்றுவந்த நிலையில் அதற்கென்று தனியான கட்டடம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்த அன்றைய யாழ் நகர மேயர் சாம் சபாபதி கட்டடம் ஒன்றினைக் கட்டுவதென்று முடிவெடுத்தார்.  கட்டடத்திற்கான அமைவிடம் நகர அபிவிருத்தி அதிகாரியான வீரதுங்கவினால் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான அடிக்கல் 1954 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி மேயர் ஆர். விஸ்வநாதனின் மற்றும் பாதிரியார் லோங்கினாலும் நாட்டி வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் பின்னணியில் பிரித்தானியா , அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இருந்திருக்கின்றனர்.

Ranganathan Version 2.jpeg

கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன்

இரு இந்தியர்களான நூலக விஞ்ஞானத்தின் நிபுணர் கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் மற்றும் திராவிட கட்டிடக் கலையின் விற்பன்னரான கே. எஸ். நரசிம்மன் ஆகியோர் நூலகக் கட்டிடத்தின் வடிவமைப்பையும், நூலகத்தின் பிரிவுகள் அமைக்கப்படவேண்டிய ஒழுங்கினையும் வரைந்து கொடுத்திருந்தனர்.

நூலகத்தின் முதலாவது கட்டம் பூர்த்தியாக்கப்பட்டபோது அன்றைய யாழ் மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவினால் 1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏனைய பிரிவுகளும் பூர்த்திசெய்யப்பட்டு வந்தன. இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாக யாழ் நூலகம் திகழ்ந்ததோடு 15,910 சதுர அடிகள் நிலப்பரப்பையும் கொண்டிருந்தது. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தில் ஏழு முக்கிய பகுதிகள் இருந்தன. புத்தகங்களை  வாசிப்பதற்குக் கொடுக்கும் பகுதி, புதினப் பத்திரிக்கைகள் மற்றும் பருவப் புத்தகங்கள் பகுதி, சிறுவர் பிரிவு, கேட்போர் கூடம், குறிப்புப் புத்தகங்கள் பிரிவு, கலைப்பிரிவு மற்றும் கற்றல் பிரிவு ஆகியவையே அவை.

நூலகம் எரிக்கப்பட்டபோது அங்கு 96,000 நூல்கள் இருந்தன. புத்தகங்களைப் பாவனைக்கு வழங்கும் பகுதியிலேயே அதிகளவான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. குறிப்புப் பகுதியில் 29,000 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வந்ததுடன் இவற்றுள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமையான நினைவுக் குறிப்புக்கள், பழைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள், நாடகக் குறிப்புகள், அரசியல்க் குறிப்புகள், பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றிய தொகுப்புகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல வரலாற்று ஆவணங்கள் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வந்திருந்தன.  இறுதியாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வைபவமாலையின் பிரதியும் அங்கிருந்தது. இலங்கையின் பெரிய சிறுவர் பகுதியைக் கொண்டிருந்த யாழ் நூலகம் 8,995 சிறுவர்களுக்கான புத்தகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

இக் கொடூரமான நூலக எரிப்பினை விசாரித்த பிரபல நூலகரான எம்.கமால்டீன் தனது விசாரணைகளின் முடிவில் பின்வருமாறு கூறியிருந்தார். "அந்தப் பயங்கரமான இரவில் யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்தவர்களின் ஒரே நோக்கம் அங்குள்ள புத்தகங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு புத்தகத்தையாவது விட்டுவைக்க விரும்பவில்லை. பாதி எரிந்த நிலையில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே எம்மால் அங்கிருந்து மீட்க முடிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது.

அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை)

இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது.

நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, vasee said:

அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை)

 

1995 இன் பிற்பாடு கல்வி கலாச்சாரம்களை அழிப்பதற்கு சிங்களம் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தி இப்போ வெற்றியும் காண்கிறது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது.

அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை)

இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது.

நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.

மிக்க நன்றியும், மட்டற்ற மகிழ்ச்சியும் வசி.இந்தத் தொடர் பெரும்பாலும் வரலாற்றுத் தொடர் போன்றே செல்வதனால் வாசகர்களின் கவனத்தை ஈர்க்காது என்று எதிர்பார்த்தேன். ஆனாலும், தமிழில் இது பதியப்படவேண்டும் என்பதற்காகவும், எனது தேடலுக்காகவும் இதனைச் செய்யலாம் என்றே ஆரம்பித்தேன். உங்கள் போன்றவர்களின் ஆதரவு புத்துணர்ச்சியைத் தருகிறது.

நன்றி !
 

2 hours ago, ஈழப்பிரியன் said:

1995 இன் பிற்பாடு கல்வி கலாச்சாரம்களை அழிப்பதற்கு சிங்களம் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தி இப்போ வெற்றியும் காண்கிறது.

உண்மை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நூலகம் எவ்வாறு எரியூட்டப்பட்டது?

Image

 

தமிழரின் கலாசார பொக்கிஷத்தை முற்றாக எரியூட்டி, கட்டிடத்தை அழிக்கும் இந்த நாசகாரச் செயல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இரவு சுமார் 10 மணியளவில் குட்டையாக தலைமுடி வெட்டப்பட்டு, காக்கி நிற காற்சட்டைகளும் வெண்ணிற பெனியன்களும் அணிந்திந்திருந்த வாட்டசாட்டமான பொலீஸ் காடையர்கள் கைகளில் பெற்றொல் கொள்கலன்களும், இரும்புத் தடிகளும், கோடரிகள் மற்றும் வாட்கள் என்பவற்றுடன் அல்பிரெட் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீதிக்கு மறுபுறத்தில் அமைந்திருந்த யாழ் நூலகம் நோக்கிய தமது நாசகார பயணத்தை ஆரம்பித்தனர். நூலகத்தின் வாயிலுக்குச் சென்ற  பொலீஸ் காடையர்கள், வாயிலின் உட்புறமாக சரஸ்வதிச் சிலையின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ஒற்றைக் காவலாளியையும் அடித்துத் துரத்தினர். பின்னர் தாம் கொண்டுவந்திருந்த கோடரிகளால் நூலகத்தின் கதவுகளைக் கொத்தித் திறந்தனர்.

Image

 

"அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்த்தபோது, இந்த நாசகாரச் செயலினை அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு, இந்தச் செயலுக்காகப் பயிற்றப்பட்டு வந்தது போலத் தெரிந்தது" என்று பொலீஸாரால் திரத்தப்பட்டபின்னரும், அருகில் ஒளிந்திருந்து இந்த அக்கிரமத்தைக் கண்ணுற்ற அந்தக் காவலாளி கூறினார்.

நூலகத்தை எரிக்கவந்த குழு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டது. முதலாவது குழு, புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கும் பிரிவினுள் நுழைந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குத் தட்டுக்களூடாக நடந்துகொண்டே இருபுறமும் இருந்த புத்தகங்கள் மேல் தாம் கொண்டுவந்த பெற்றோலினை ஊற்றிக்கொண்டே சென்றது. இரண்டாவது குழு, செய்தித்தாள்களும், பருவப் புத்தககங்களும் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, மரத்தாலான தளபாடங்கள் அனைத்தையும் அந்த மண்டபத்தின் மத்தியில் இழுத்துவந்து குவித்து அவற்றின்மேல் பெற்றோலினை ஊற்றியது. மூன்றாவது குழு குறிப்புப் புத்தகங்களும், ஈடுசெய்யப்பட முடியாத, புராதன ஓலைச் சுவடிகளும் பாதுக்கக்கப்பட்டு வந்த பகுதிக்குச் சென்று அவற்றின் மேல் பெற்றோலினை ஊற்றியது. இன்னொரு குழு சிறுவர் பகுதி உட்பட நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று தமது திட்டத்தின் முதலாவது கட்டத்தை நிறைவுசெய்தன.

"ஒரேநேரத்தில் முழுக் கட்டடமும் தீப்பற்றிக் கொண்டது" என்று நூலகக் காவலாளி நகர மேயர் சிவஞானத்திடம் கூறினார்.

"இந்த நாசகாரச் செயலினை அவர்கள் எதற்காக எங்களுக்குச் செய்தார்கள்?" என்று விம்மி அழுதுகொண்டே விசாரணைகளை மேற்கொண்ட பீட்டர் கியுனுமென்னைப் பார்த்துக் கேட்டார் தலைமை நூலகரான ஆர் நடராஜா. அவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிகொள்ள முடியவில்லை. அவரால் பொங்கிவரும் அழுகையினையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

Image

யாழ் நூலகத்தின் பிரதான நூலகர் திருமதி ரூபா நடராசா இடிந்துபோன நிலையில் நூலகத்தின் தரையில் அமர்ந்திருக்கும் காட்சி

ஆனால், சொற்பிறப்பியல் நிபுணரான பாதிரியார் டேவிட்டிற்கு இந்த அதிர்ச்சி இலகுவானதாக இருக்கவில்லை. புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர் விடுதியில் இருந்த தனது அறையிலிருந்து வானத்தில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த யாழ் நூலகத்தைப் பார்த்த கணம் அவர் நடுக்கத்துடன் கீழே விழுந்தார், சில கணங்களில் அவரது உயிரும் பிரிந்தது.

Image

பாதிரியார் டேவிட்

"அத்த" எனும் சிங்கள மொழி பத்திரிக்கை இந்த நாசகாரச் செயல் பற்றி எழுதும்போது, பீட்டர் கியுனுமென் நூலகத்தைப் பார்வையிடச் சென்றவேளை நூலகத்திலிருந்து இன்னமும் வெப்பமும் கரிய புகையும் வெளியேறிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. "நூலகத்தின் சில பாகங்கள் இன்னும் வெப்பத்தால் தகதகத்துக்கொண்டிருந்தன, எம்மால் அப்பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை" என்று அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார். 

ஆடி 17 ஆம் திகதி, பிரான்ஸிஸ் வீலன் எனப்படும் ப்சர்வதேசப் பத்திரிக்கையாளர் எரிந்த நூலகத்தை சில தினங்களுக்குப் பின்னர் சென்று பார்வையிட்டார். தான் அங்கு பார்த்ததை பின்வருமாறு தனது பத்திரிக்கையில் எழுதுகிறார்,

"இன்று நான் நூலகத்தினுள் சென்றபோது அதன் நிலம் முழுவதும் எரிந்து சாமபலான புத்தகங்களால் மெழுகப்பட்டிருந்தது. அருகிலிருந்த உடைந்த யன்னல்களுடாக உள்ளே வீசிய மெல்லிய காற்றில் பாதி எரிந்த புத்தகத் தாள்கள் காற்றில் பறந்து ஊசலாடிக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த சுவர்களின் சுண்ணாம்புப் பூச்சுக்கள் புத்தகங்கள் எரிந்து வெளியிட்ட வெப்பத்தால் வலுவிழந்து நொறுங்கத் தொடங்கிவிட்டன. எரிந்த நூலகத்தைச் சுற்றி நான் நடந்துவந்துகொண்டிருந்தபொழுது, ஆசிரியர் கலாசாலையில் பயிற்றுனராகக் கடைமையாற்றும் ஒருவர் மனமுடைந்து என்னைப்பார்த்துக் கேட்டார், "ஏன் இப்படிச் செய்தார்கள்? நிச்சயமாக சிங்களவர்கள் எமது நூலகத்தின் மீது பொறாமைப்பாடிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. எனது விரிவுரைகளுக்காகவும், குறிப்புகளுக்காகவும் நான் இந்த நூலகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருவேன். ஆனால், இனி என்னால் இங்கு வரமுடியாது. எனக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள நான் இனிமேல் கொழும்பிற்குச் செல்லவேண்டும், ஆனால் அங்கு எனக்குத் தேவையான புத்தகங்கள் இருப்பது சந்தேகமே என்று கூறினார்".

செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய யாழ்நகர மேயர், "பொறாமையே இந்த நாசகாரச் செயலுக்குக் காரணமாக இருந்தது என்பதை நான் நம்பவில்லை. தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, சிறுமைப்படுத்தவேண்டும் என்கிற நோக்கம் சிங்களவர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் தமது நாகரீகத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, தனித்துவமான அடையாளத்தை  பறைசாற்றிப் பெருமைப்படும் எந்த சின்னத்தையும் கொண்டிருக்கக் கூடாதென்பதே சிங்களவர்களின் நோக்கம்" என்று அவர் கூறினார்.

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

மிக்க நன்றியும், மட்டற்ற மகிழ்ச்சியும் வசி.இந்தத் தொடர் பெரும்பாலும் வரலாற்றுத் தொடர் போன்றே செல்வதனால் வாசகர்களின் கவனத்தை ஈர்க்காது என்று எதிர்பார்த்தேன். ஆனாலும், தமிழில் இது பதியப்படவேண்டும் என்பதற்காகவும், எனது தேடலுக்காகவும் இதனைச் செய்யலாம் என்றே ஆரம்பித்தேன். உங்கள் போன்றவர்களின் ஆதரவு புத்துணர்ச்சியைத் தருகிறது.

 

நீங்கள் இப்படி மொழிபெயர்த்து எழுதுவது 
யாழ்கள உறவுகள் மட்டுமல்ல தமிழினமே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்தினால்த் தான் போராளி இல்லை.
பேனா பிடித்தாலும் போராளி தான்.
தொடருங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நூலகம் எரியும் செய்தி பரவுவதைத் தடுக்க ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்திற்கும் தீமூட்டிய பொலீஸ் காடையர்கள்

No photo description available.
 

தமது நாசகாரச் சதிச்செயல் சர்வதேசத்தின் கண்களில் தெரிந்துவிடக்கூடாதென்பதில் இதனைச் செய்தவர்கள் மிகவும் அவதானமாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருந்தனர். இக்கொடுஞ்செயலினை மறைக்க அவர்கள் யாழ்நகரிலிருந்து  மாநிலச் செய்திகளைக் காவிவரும் நாளிதழான ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்தையும், நூலகம் எரிந்துகொண்டிருந்த அதே கணப்பொழுதுகளில் எரித்தனர். ஈழநாட்டு அச்சகத்தை எரிப்பதற்காக சென்ற இன்னொரு பொலீஸ் குழு, உள்ளிருந்தவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டது.

S.M. Gopalratnam

எஸ்.எம். கோபாலரட்ணம்

ஈழநாட்டு பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலரட்ணம் என்னிடம் பேசுகையில்,

"ஞாயிற்றுக்கிழமை யாழ்நகரில் பொலீஸார் ஆடிய கோரத் தாண்டவத்தைக் கண்டித்து நான் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தை இறுதியாக சரிபார்த்துவிட்டு அச்சகத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியர் செய்திப்பிரிவில் கடமையாற்றியோர் சில மணிநேரத்திற்கு முன்னர்வரை பொலீஸார் நடத்திவந்த கொடூரங்களை செய்தியாக்கும் அவசரத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.  தமிழர்களின் கலாசாரத் தொன்மையினையும், பெருமையினையும் வெளிக்காட்டும் முகமாக யாழ்நகரின் வீதிகளெங்கும் நிறுவப்பட்டிருந்த சரித்திரப் பெருமைவாய்ந்த பெரியார்களினதும் சமயப் பெரியார்களினதும் சிலைகளை பொலீஸார் அடித்து நொறுக்கும் காட்சிகளை நாம் ஒளிப்படங்களாகப் பதிந்து, அவற்றினை  அச்சிடும் பணியினையும் அப்போதுதான் நிறைவுசெய்திருந்தோம். எமது அலுவலகத்திலிருந்தே தூரத்தில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் எம்மால் கேட்க முடிந்தது. அதனைச் செய்வது அமைச்சர்கள் சிலரும், அவர்களோடு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஆதரவாளர்களும்தான் என்கிற செய்தி யாழ்ப்பாணமெங்கும் அப்போது பரவிவந்தது. அப்போதுதான் எமது அச்சகத்தைச் சூழ்ந்து ஒரு பொலீஸ் பிரிவொன்று நிற்பதை நாம் உணர்ந்தோம்.  திடு திடுப்பென்று உள்ளே நுழைந்த பொலீஸார் எம்மை அங்கிருந்து அடித்து விரட்டினர். எமது அச்சக இயந்திரங்கள் மீதும், காரியாலயம் மீதும் பெற்றோலினை ஊற்றி எம் கண்முன்னே அவற்ரைக் கொழுத்தினர்" என்று கூறினார்.

"சிங்களத்தில் தூஷண வார்த்தைகளால் எம்மை வைத பொலீஸார், முன்னிரவு நடந்த பொலீஸ் கலவரங்கள் குறித்து நாம் அளவுக்கதிகமாக செய்தி வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினர். இப்போது உங்கள் நூலகத்தையும் எரித்துவிட்டோம், அதை எப்படி செய்தியாக வெளியிடப்போகிறீர்கள் என்று பார்க்கலாம் என்று வந்திருந்த பொலீஸ் அதிகாரி ஏளனமாக எம்மைப் பார்த்துக் கேட்டார்" என்று ஈழநாட்டு செய்தியாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

நூலகம் எரிக்கப்படும்போது, அச்செய்தி வேறிடங்களுக்குப் பரவாதிருக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் தொலைபேசி இணைப்புக்களையும் பொலீஸார் துண்டித்துவிட்டிருந்தனர்.

தமிழினத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட  கலாசாரப் பேரழிவுபற்றி சர்வதேசம் முதன்முதலில் அறிந்துகொண்டது "அத்த" எனும் சிங்கள பத்திரிக்கையில் வந்த செய்தியின் ஊடாகத்தான். இதற்குப் பின்னர் தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசன் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் இந்தக் கொடூரம் பற்றி தெரியப்படுத்தியிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நூலகம் எரியும் காட்சிகளைக் கொண்ட பல புகைப்படங்களை அவர் செய்தியாளர்களுக்குக் காண்பித்தார். சர்வதேசச் செய்திச் சேவைகளில் இப்புகைப்படங்கள் பின்னர் பெருமளவில் செய்தியாகப் பாவிக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்த நாசகாரச் செயல் குறித்து விமர்சித்திருந்தன. ஆனி இரண்டாம் வாரம் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு அறிக்கையினை யாழ் நூலக எரிப்புப் பற்றி வெளியிட்டிருந்தன,

"நூற்றிற்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு, களவாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த சந்தைக் கட்டடத் தொகுதிகள் போர்க்காலத்தில் அகப்பட்ட நகரங்கள் போன்று அழிக்கப்பட்டுக் காட்சி தருகின்றன. மக்களின் பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டபின்  இடிக்கப்பட்டு, எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லம் அடையாளம் தெரியாது எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. அரச இராணுவத்தாலும், பொலீஸாரினாலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாழ்நகரின் இதயப்பகுதியில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகமும் அடித்து நிறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமும், 90,000 இற்கும் அதிகமான விலைமதிப்பற்ற புத்தகங்களையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது".

"இதில் மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் யாதெனில் இந்த அட்டூழியங்கள் யாழ்நகரில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தவேளை அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும், பாதுகாப்பு உயரதிகாரிகளும் யாழ்நகரில் தங்கியிருந்து இந்த கொடுஞ்செயல்களை முடுக்கி விட்டிருந்ததும், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டவென்று அனுப்பப்பட்ட பாதுகாப்புப் படைகளும் பொலீஸாரும் நேரடியாக இந்த அழிவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததும் தான்" என்று அந்த அறிக்கை கூறியது. 

சுண்ணாகம் சந்தைப்பகுதியிம், கடைகளும் வைகாசி 31 ஆம் திகதி இரவே பொலீஸாரினால் நாசமாக்கப்பட்டிருந்தன. சுண்ணாகம் பொலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற பொலீஸ் காடையர்கள், சுண்ணாகம் சந்தைப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்து, உள்ளிருந்த பொருட்களைச் சூறையாடிவிட்டு தீமூட்டினர். பின்னர், அருகிலிருந்த பொதுமக்கள் வீடுகளும் அவர்களால் எரியூட்டப்பட்டிருந்தன. இதேவகையான நாசகார செயல்களை காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற பொலீஸ் காடையர்களும் செய்திருந்தனர். சிவசிதம்பரத்தின் அலுவலகத்தைச் சூழ்ந்துகொண்ட இராணுவப் பிரிவொன்று அதன்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதலினை மேற்கொண்டது. அலுவலகத்தினருகில் இருந்த பொதுமகன் ஒருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நாட்களில் ஐந்து தமிழர்கள் கொல்லப்பட்டதாக பொலீஸார் அறிவித்திருந்தனர், ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் மிக அதிகமானது என்பது மக்களின் கருத்தாக இருந்தது.

 

 

 

38 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இப்படி மொழிபெயர்த்து எழுதுவது 
யாழ்கள உறவுகள் மட்டுமல்ல தமிழினமே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்தினால்த் தான் போராளி இல்லை.
பேனா பிடித்தாலும் போராளி தான்.
தொடருங்கள்.

நன்றியண்ணா உங்களின் கருத்திற்கு. நானெல்லாம் போராளியில்லை. எனக்காக எனது சகோதரங்களை போராடச் சொல்லிவிட்டு வேறுநாட்டில் தங்கியிருக்கும் ஒரு அகதி, அவ்வளவுதான். 

Edited by ரஞ்சித்
spelling
  • Like 1
  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.