Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் தொலைக்காட்சியும், விளங்கிக் கொள்ள வேண்டியனவும்

Featured Replies

கடவுள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு வாதம் என்ற முனைகளே யாழ் களத்தின் மிகப்பிரபலமான விவாதத் தலைப்புக்கள் என்றால், அனேகமாக எவரும் சண்டைக்கு வரமாட்டார்கள். அத்தனை தலைப்புக்கள் இம்முனைகளில் பதிவாகி உள்ளன. இன்னமும் பதிவாகும். இதில் தவறேதும் இருப்பதாய்ச் சொல்ல விழைவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, இவ்விவாதங்களின் அடிப்படைப் பொருள் தொடர்பில் இவ்விவாதங்கள் தவற விடுகின்ற ஒரு அவதானிப்பினைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.

இத்தலைப்பில் நான் சொல்ல விழைகின்ற கருத்தினைப் பதிவதற்கு முன்னால், இதுவரை யாழ் களத்தில் பகுத்தறிவு வாதிகளிற்கும் கடவுள் நம்பிக்கை உடையவர்களிற்கும் இடையே நடந்தேறிய வாதப் பிரதி வாதங்களின் சாராம்சத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன்.

முதலில், கடவுளிற்கெதிரான மேற்படி வழக்குகளின் வாதிகள் ஆக விளங்குகின்ற பகுத்தறிவு வாதிகள் எதற்காக இத்தனை உறுதியுடன் இம்முனையில் தொடர்ந்து விவாதிக்கின்றார்கள் என்று பார்ப்போமேயாயின், அவர்களே அதற்கான பதிலினைத் தமது வாதங்களில் திருப்பத் திருப்பத் தருகின்றார்கள். அதாவது, கடவுளின் பெயரால் தான் சமூகத்தில் சாதிய அமைப்புக்கள் கட்டிக் காக்கப்பட்டு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். ஆனால் மக்கள் இவ்வாறு ஒடுக்கப்படுகின்றார்களே இதைத் திருத்துங்கள் என்று மக்கள் நலன் ஒன்றே குறியாக நாம் குரல் எழுப்புகின்ற போது, இரக்கமுள்ள மற்றவர்கள் கூட, கடவுள் பயம் முதலிய விடயங்களால் கட்டுண்டு நாம் சொல்பவற்றைச் செவி மடுக்காது இருந்து விடுவதேர்டு, அது முற்பிறவிப் பயன், அது அப்படித் தான் என்று விட்டுவிடுகின்றார்கள். இது சமூக ஓடுக்குமறைகள் தொடர்வதற்கே உதவுகின்றது. எனவே தான் முதலில் இப்பிரச்சினையின் மூல காரணமாக எமது பெரியார் காட்டிய கடவுளோடு நாம் பொருதுகின்றோம் என்கிறார்கள்.

மேலும், ஒடுக்குமறையானது சாதிய வகுப்புக்களோடு நின்று விடவில்லை என்றும், கடவுள் நம்பிக்கை என்ற கருவியினைப் பாவித்துப் பிராமணர்கள் என்ற ஆரியர்கள் தமிழ் மொழியின் மகிமைகளையும் தமிழரின் புராதன காலம் தொட்டு இருந்து வருகின்ற சிறப்புக்களையும் சிதைக்கிறார்கள் என்றும் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள். இன்னும் தனிமனித ஆளுமையினைக் கடவுள் நம்பிக்கை சிதைக்கிறது முதலான வாதங்களும் அப்பப்போ வருகின்றன என்றபோதிலும், பொதுவாக 'தனிமனித ஆளுமையும் கடவுள் நம்பிக்கையும்' என்ற ரீதியில் அமைகின்ற வாதங்கள் மிகவும் பலவீனமான முறையில் முன்வைக்கப்படுகின்றன என்பதோடு, விவாதத்தின் மூலப்பொருளிற்கு எப்படியேனும் பலம் சேர்த்துவிடவேண்டும் என்ற பதைபதைப்பில் வக்கீலினால் கையாளப்படுகின் வாhத்தை ஜாலங்களை ஒத்தனவாகவே அமைந்து வருகின்றன என்பதனால், இத்தலைப்பை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் பிரயத்தனத்தில் மேற்படி கிளை முனைகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்வோம்.

ஆக. பகுத்தறிவு வாதிகளின் கடவுள் மறுப்பு மற்றும் பிராமண எதிர்ப்புப் போராட்டங்களானது பகுத்தறிவாளர்களின் மனிதநேயத்தில் இருந்தும் இன உணர்வில் இருந்தும் தான் வெளிப்படுகின்றதே அன்றி வேறேதுமில்லை என்பது அவர்களின் வாதம். இம்மனித நேயமும் இன உணர்வும் மதிக்கப்பட வேண்டியன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இனி கடவுள் பக்க பிரதிவாதிகளின் வாதம் எப்படி உள்ளது என்று பார்த்தால், அவர்கள் கூறுகின்றார்கள், சமூகத்தில் ஒடுக்கு முறைகள் மற்றும் சுரண்டல்கள் இல்லை என்று நாங்கள் சொல்லவரவில்லை. இவை கண்கூடு. ஆனால் நாங்கள் கூறுவதெல்லாம், இப்பிரச்சினைகள் என்னென்ன காரணங்களின் நிமித்தம் எமது சமூகத்தில் வலுப்பெற்றன என்ற உங்களின் திட்டவட்டமற்ற வரலாற்று ஆராய்ச்சிகளிற்கெல்லாம் அப்பால், இப்பிரச்சினைகள் இன்றைய காலத்தில் இருக்கின்றன என்பதே முக்கியம். இன்றைய காலத்தில் இருக்கின்ற பிரச்சினைக்கு இன்றைய பரிகாரங்கள் தான் தேவை. மேலும், மனிதநேயத்தின் பிரகாரம் தான் உங்களது கடவுள் மறுப்புப் போராட்டம் ஆரம்பித்து இருக்கலாம் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளினும் கூட, நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நீங்கள் எதிர்பாhத்த விரைவில் ஏற்படாததைக் கண்ட நீங்கள், உங்களது உத்திகள் ஏன் பயனளிக்கவில்லை எனப் பரிசீலிப்பதற்குப் பதிலாக, உங்களின் பார்வையில் இப்பிரச்சினைகள் அனைத்திற்குமான ஒரேஒரு காரணம் என நீங்கள் கருதுகின்ற மக்களின் கடவுள் நம்பிக்கை மீது ஒரு உளவியல் ரீதியில் ஆழ்ந்த வெறுப்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்பது எமது பார்வையில் ஒரு ஆபத்தான விடயமாகப் படுகின்றது.

அதாவது, பிரச்சினகைள் என நீங்கள் கருதிய விடயங்களின் சாயல் எப்போதெல்லாம் சமூகத்தில் தெரிகின்றதோ, அப்போதெல்லாம் அப்பிரச்சினையின் மூலகாரணமாக நீங்கள் கருதுகின்ற கடவுள் நம்பிக்கை மீதான உங்களின் வெறுப்பு அதிமாகி வந்துள்ளது. படிப்படியாக, பிரச்சினை என்னவென்பதே உங்களின் கவனத்தில் இருந்து தப்பித்து வெறும் வெறுப்பு மட்டுமே உங்களிற்குள் தங்கிவிட்டது. இவ்வாறு வெறுப்பு என்ற மிகவும் பலமான உணர்வு உங்களிற்குள் ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியதால், தற்போது பிரச்சினை என்ன என்பததைக் கூடத் தொடர்ந்து ஆராய்வதை விடுத்து வெறுப்பிற்குத் தூபம் போடுவதில் மட்டுமே உங்கள் காலம் கரைகிறது. ஆனால், நீங்கள் எந்தப் பிரச்சினைகளிற்கெதிராகப் போராடத் தொடங்கினீர்களோ அந்தப் பிரச்சினைகள் அப்படியே தான் இருக்கின்றன எப்பதற்கும் மேலால், புதிய சுரண்டல் உத்திகளும் பிராமணர்களிற்கு அப்பாலான இன்னோரன்ன புதிய சுரண்டல் பேர்வழிகளும் இன்றைய பிரச்சினையின் அங்கமாகி விட்டார்கள்.

ஆக, நாங்கள் கூறுவதெல்லாம் இனியும் வெறுமனே காலந் தாழ்த்திக் கொண்டு கடவுள் நம்பிக்கையுடையவர்களைத் தேடி நோண்டிக் கொண்டு இருப்பதற்குப் பதிலாக. நாம் இரு சாராரும் சேர்ந்து இன்றை நிலையில் இந்தச் சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு விநயமாகக் கையாழ்வது என்று நோக்குவதே ஆக்கபூர்வமாக இருக்கும் என்பதே. கடவுள் நம்பிக்கை ஏன் எங்களோடு இருக்கின்றது அது எங்களிற்கு என்ன செய்கின்றது என்பதனை எங்களைக் காட்டிலும் எவரும் எங்களிற்குச் சிறப்பாக விளக்க முடியாது. ஏனெனில் இது உணர்வு சம்பந்தப்பட்டது. உணாந்தால் மட்டுமே புரிவது. எனவே எங்களிற்குப் புரியவைக்கிறோம் பேர்வழிகள் என உங்களை நீங்கள் நகைப்பிற்கிடமாக்குவதைக் காட்டிலும், நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்களது பொதுவான மனிதாபிமானத்தை வெளிக்காட்டிச் செயற்படின் அனைவரிற்கும் அது நன்மை பயக்கும் என்கிறார்கள் கடவுள் பக்கப் பிரதிவாதிகள்.

யாழ் கள பகுத்தறிவுவாதிகள் எதிர் கடவுள் நம்பிக்கையாளர்கள் வழக்கின் சாராம்சம், ஏறத்தாள மேற்படி ரீதியில் தான் அமைகிறது.

இத்தருணத்தில் ஒரு தெளிவுபாட்டை முன்வைத்தல் முக்கியம். அதாவது, சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் முதலிய பிரச்சினைகள் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் இருக்கின்றன என்ற போதிலும், பெரியாரியல் என்பது தமிழகச் சூழலை மட்டும் முன்நிறுத்தி இந்தியர்களால் இந்தியர்களிற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கருத்தில் எடுக்கப்படவேண்டும். என்ன தான் ஈழத்தமிழர் வாழ்வியலிற்கும் தமிழக வாழ்வியலிற்குமிடையே கலாச்சார ஒற்றுமைகள் மற்றும் பொதுவான வரலாற்றுப் பின்னணிகள் இருப்பினும் கூட, பெரியார் காலத்திலாகட்டும் இன்றாகட்டும் ஈழத் தமிழர் வாழ்வியலும் தமிழக வாழ்வியலும் தனித் தனியானவை தனித்துவமானவை. யாழ் கள பகுத்தறிவு வாதிகள், விரும்புகிறார்களோ இல்லையோ, பெரியாரஸ்டுக்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுகின்ற இவாக்களின் வாதங்களின் தோன்று தளம் தமிழகமாகவே பெரிய அளவில் இருக்க முடியும். இந்நிலையில் இந்தியாவின் இன்றைய நிலை பற்றிச் சற்றுப் பார்த்து விடுவது அவசியமாகின்றது.

அண்மையில், கனடாவின் ரொறன்ரோ சண் பத்திரிகைக் குழுமத்திற்காக இந்தியாவிற்குச் சென்று இந்தியா பற்றிய ஒரு கணிப்பினை எறிக் மாகோலிஸ் என்ற ஊடவியலாளர் மற்றும் அரசியல் அவதானி மேற்கொண்டு திரும்பியிருந்தார் ( எறிக் மர்கோலிஸ் என்பவர் யார் என்பதும் மற்றும் ஏன் இத்தகைய ஒரு இந்தியா பற்றிய கணிப்பு மேற்கிற்கு இப்போது அவசியமாகிறது என்பதும், அதன் அரசியல் என்ன என்பதும் போன்ற பேசப்படாத செய்திகள் இதில் ஏராளம் உள்ளன. எனினும் அவை ஒரு தனித்தலைப்பிற்குப் போதுமானவவை என்ற ரீதியிலும், அக்கேள்விகளிற்கான பதில்கள் இவரின் தரவுகளை மாற்றப்போவதில்லை என்பதனாலும் அவை பற்றிப் பேசுவதை இங்கு தவிர்கின்றேன்).

எறிக் மாகோலிசின் கணிப்புப் பிரகாரம், ஒரு பில்லியன் இந்தியர்கள் தலைக்கணக்கிற்கு இந்தியாவில் இருக்கின்ற போதிலும், இந்தியாவிற்கு வெளியே நாம் காணுகின்ற, ஆசியாவின் எழுச்சி என்று சித்தரிக்கப்படுகின்ற இந்தியாவானது வெறும் 150 மில்லியன் இந்தியர்களால் தான் அமைக்கப்பட்டுள்ளதோடு இந்த 150 மில்லியன் தொகையினர் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரப் பிரிவினராக விளங்குகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. மேலும், இவ்வாறு பதினைந்து வீத மக்கள் மீதி எண்பத்தைந்து வீத மக்களை ஆட்டிப் படைக்க முடிவதனால்தான் இந்தியாவில் பட்டினி, அடிப்படைச் சுகாதார வசதிகள் இன்மை, எயிட்ஸ் முதலிய நோய்கள் மற்றும் இன்னோரன்ன சமூகவியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாம் பற்றி மறைக்கப்பட்டு அல்லது மறக்கடிக்கப்பட்டு, மறு முனையில் சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியா கட்டமைக்கும் ஆழ்கடல் கடற்படை முதலிய சற்றும் பொறுப்பற்ற முயற்சிகள் சாத்தியமாகின்றன என்றும் எறிக் மாகோலிஸ் கூறுகின்றார். மேலும் இந்தியாவில் உள்ள 400 மில்லியன் மாவோயிஸ்டுக்கள் அல்லது நக்சலைட்டுக்கள், தலித் போராளிகள் முதலிய அனைத்து இன்னோரன்ன பிரிவினரும் இந்த 150 மில்லியன் அதிகாரப்பிரிவினரால் கனகச்சிதமாகக் கட்டுப்படுத்தப்படுகின்ற 850 மில்லியன் பிரிவிற்குள்ளேதான் வருகின்றார்கள் என்பதும் மாகோலிசின் கணிப்பில் கோடிட்டுக் காட்டப்படுகின்றது.

மேற்படி கணிப்பிற்கு எடுத்த எடுப்பில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு எதிர்வினை வரும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது மேற்கின் அரசியல் இது என்பதே அது. நான் கூட, எறிக் மாகோலிசிசுடன் நேரே பேசக் கிடைத்தால், அவரின் இந்தக் கணிப்பிற்கான "மெதடோலஜி" என்ன? கணிப்பிற்காக நீங்கள் நேர்கண்ட மக்கள் பரந்து பட்ட இந்தியாவை பிரதிநிதிப்படுத்துகின்றார்

அழகான ஆழமான கருத்துக்களையுடைய கட்டுரை. யாழில் நடைபெறும் சில கருத்தாடல்களுக்கு ஒரு நடுவரின் தீர்ப்பாக இதனைப் பார்க்க முடிகிறது. பெரியார் - பார்ப்பணர் பிரச்சனையில் ஆரம்பித்து விஜய் தொலைக்காட்சியின் மூலம் இன்று நாம் செய்யவேண்டிய கடமையை உணர்த்திய விதம் வியக்க வைக்கிறது. இன்னுமொருனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இன்னுமொருவன்

கடவுள் எதிர்பு, இந்து மத எதிர்ப்பு, பெரியார் கொள்கை ஆதரவாக போன்றவற்றைப் பற்றி பல இடங்களில் யாழ் களத்தில் வாதாடியவர்கள் கண் மூடித்தனமாக பிராமணராகப் பிறந்தவர்கள் என்பதற்காக எதிர்க்க வில்லை. அவர்களில் யார் பார்பணியம் என்ற மேலாண்மை வாதத்தை தூக்கி நிறுத்துகிறார்களோ அதை மதச் சடங்குகள் வேத ஆகமங்கள் மூலம் நியாப்படுத்தி கட்டிக்காக்க நிக்கிறார்களோ அதைத்தான் எதிர்க்கிறார்கள்.

பகுத்தறிவு வாதிகள் பெரியாரிஸ்ருக்கள் ஒரு இனக்குழுமம் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற புலம்பல் இங்கு பல தடவை வைக்கப்பட்டது. அதற்கு நாரதர் சபேசன் போன்றோர் விளக்கம் பல தடவை தந்திருக்கிறார்கள்.

நித்திரை கொள்ளுபவனை எழுப்பலாம் ஆனால் அப்படி பாசாங்கு செய்பவர்களை?

கிட்டத்தட்ட 2 வருடங்களிற்கு முன்னர் யாழ்களித்தில் மிகவும் சூடாக நடந்த விவாதம் ஒன்று ஈழத்தில் இருக்கும் பிராமணர்களும் இந்தியப் பார்ப்பணர்கள் போன்றவர்கள் என்பது. இதை கடுமையாக எதித்து பார்ப்பனர்களின் அடிவருடிகள் என்ற பட்டத்தையும் பெற்றவர்கள் இங்கு இருக்கும் பகுத்தறிவுவாதிகள்.

சிங்கள மக்களை எதிர்க்கவில்லை சிங்கள பேரினவாதத்தைத்தான் எதிர்கிறம் வெறுக்கிறம் அது போலவே பார்ப்பணியம் என்ற மேலாண்மைவாதத்தையும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள சமூக நிர்வாக கட்டமைப்புகள் தான் எதிர்க்கப்படுகிறது.

இன்று சிங்களப் பேரினவாதத்தின் நடைமுறை வடிவங்களை கருவிகளை இனங்காணுவது என்பது இலகுவாக பலருக்கு இருக்கிறது ஏன் என்றால் அது சமகாலத்தில் தோற்றம் பெற்றது. அதனால் அதன் அறிமுகத்தை அதனால் வந்த மறைமுகத் தாக்கத்தை ஆயினும் நம்மில் பலர் அனுபவரீதியாகக் கூட அறிந்திருப்பார்கள். இந்த சிங்களப் பேரினவாதம் என்பது வெற்றி பெற்றுவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த அடக்குமுறைச் சின்னங்கள் கருவிகள் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிற்கு அவர்களது கலாச்சாரம் பண்பாட்டின் ஒரு அங்கமாக உணர்வுபூர்வமான விடையமாகத்தான் இருக்கும்.

இது போன்று ஒரு அடக்குமுறை பல நூற்றாண்டுகளிற்கு முன்னர் வெற்றி பெற்று எமது கலாச்சாரம் பண்பாடாக ஊடுருவிய நிலையில் அதை விளங்குவதற்கு திறந்த மனம் தேவை பரந்து பட்ட பார்வை தேவை. அய்யோ அது எங்கடை உணர்வு சார்ந்தது அதைப்பற்றி விமர்சிக்காதேங்கோ குத்துது குடையுது என்று ஒப்பாரி வைச்சால் இதை விளங்கிக் கொள்ள முடியாது.

இதற்குத் தான் ஈழத்திருமுகன் சொன்னது போல் உண்மையைத் தேடும் சிந்திக்கும் பக்குவம் தேவை பல்வேறுபட்ட வரையறைகளிற்குள் இருந்தபடி எதிர்வாதமாக வரும் கற்பனை அல்ல.

  • தொடங்கியவர்

இணையவன்,

உங்களின் கனிவான ஊக்குவிப்பிற்கு நன்றி.

குறுக்காலவோவன்,

உங்களது வாதப் போக்கில் எனக்கெழுகின்ற ஒரு ஆதங்கம் என்னவெனில், சில

சமயங்கள் நீங்கள் கருத்து எழுதுகின்றதற்குக் காரணமாக அமைந்த கருத்தைத்

தெளிவாக உள்வாங்கிய பின்னர் தான் கருத்தெழுதுகின்றீர்களா இல்லையா என்ற சந்தேகம் எழுகின்றது. தயவு செய்து இது உங்கள் மீதான உட்குத்தல் என்று வகைப்படுத்தி விடாதீர்கள்.

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், இப்போ பாருங்கள், உங்களது மேலுள்ள கருத்தானது, இத்தலைப்பின் ஆரம்பக் கருத்தில்

கூறப்பட்டிருக்கும் இன்னோரன்ன, அதுவும் சம்பந்தப்பட்ட (சம்பந்தப் படாத வேறு வேறு கருத்துக்கள் என்றால் அப்படி ஒதுக்குவதில் தவறில்லை) கருத்துக்களை அப்டியே ஒதுக்கி விட்டு, ஒரு வித்தியாசமான கோணத்தில் உள்ளே புகுந்து கொழுக்கி போடுகின்றது.

மேலே தலைப்பில் கூறப்பட்ட முக்கிய கருத்து என்ன என்பதைக் கூட உள்வாங்க வேண்டாம், குறைந்தபட்சம் அக்நொலேட்ச் பண்ணவே நீங்கள் மறுக்கின்றீர்கள். இந்நிலையில், எக்கருத்துக்களை நீங்கள் வாசித்து விட்டீர்கள் எதனை வாசிக்கவில்லை, எக்கருத்துக்களை நான் மீளவும் எழுத வேண்டும் என்பன போன்ற சந்தேகங்கள் எனக்குள் எழுவதானல், உண்மையை ஒத்துக் கொள்கின்றேன் உங்களோடு வாதத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை.

குறிப்பிட்டுச் சொல்வதானால், நீங்கள் கூறுகின்றீர்கள் நாங்கள் பிராமணரை எதிர்க்கவில்லை ஒடுக்குமுறைக்கான கட்டுமானங்களாக உருவாக்கப்பட்டுள்ளவற்றைத் தான் எதிர்க்கின்றோம் என்று. மேலும், பார்ப்பனர்களின் வாழ்வியல் என்பதற்கு மேலால் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்க

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் நீண்ட தொகுப்பும் அதன் மூலம் அவர் சொல்ல வந்த செய்தியும் பல விடயங்களை தெளிவாக்குகிறது.

யாழின் பல விவாதத்தலைப்புக்கள்.. இடியப்பச் சிக்கலாகவே இருக்கின்றன.

சபேசன்.. நாரதர் என்போருக்கு சான்றிதழ் வழங்க சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையே அதுதான்.. அப்படியானவர்களை.. விட்டுத்தள்ளுங்கள்.

விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்..

சபேசன் முழுக்க முழுக்க பிராமண சமூகத்தை பார்பர்னிய வாரிசுகள்.. பார்பர்னிய எச்சங்கள் என்று குற்றம் சுமத்தி எழுதியவை இங்கு அழிக்கப்படாமலே இருக்கின்றன.

பிராமண சமூகத்தினர் தங்களளவில் கடைப்பிடிக்கும் சில தீவிரமான சமூக பழக்க வழக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு.. அவர்களைப் பார்பர்ன எச்சங்கள் என்று விழித்து.. தொடர்சியாக நடத்தப்பட்ட விவாதங்கள் இருக்கின்றன.

பிராமண சமூகம் சில தீவிரமான சமூகப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கிறது என்பதற்காக.. அது அவற்றை ஏனையவர்களுக்கு திணிக்கிறது என்பது பொருள் அல்ல. இஸ்லாமியர்கள்.. யூதர்கள்.. கிறிஸ்தவர்கள் என்று எல்லோருக்கும் அவரவற்கு என்று சில தனித்துவ பழக்கவழக்கங்கள்.. இருக்கின்றது. அதை அவர்கள் எவரையும் கட்டாயப்படுத்தி திணிக்கவில்லை. அப்படி திணிப்பது சம கால உலகில்.. அடிப்படை மனித உரிமையைப் பறிக்கும் செயல் என்பதாகவே கருதப்படும்... மதமாற்றங்களின் போது தனிநபர்களின் விருப்பைப் பெறும் பொருட்டு பிரச்சாரங்கள் செய்யப்படுதல் நெகிழ்வுப் போக்கில் பார்க்கப்படுகிறது. ஆனால் கட்டாய மதமாற்றங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதேபோல்.. எமக்குப் பிடிக்கவில்லை.. என்பதற்காக பிராமண சமூகத்தினதோ.. அல்லது மற்றைய மதத்தினரினதோ தனித்தன்மையான செயற்பாடுகளை.. களைந்து கொள் என்று கூக்குரல் இடமுடியாது. அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. நாம் எமக்குப் பிடிக்கவில்லை என்றால்.. விலகிச் செல்வதை விடுத்து.. கருத்துத் திரிபுகள் மூலம்.. திணிப்புகளைச் செய்யலாம் அதன் மூலம் மக்கள் மத்தியில் சில சமூகத்தவர்கள் தொடர்பில் தப்பபிப்பிராயங்களை வளர்க்கலாம்.. அதன் மூலம் பகுத்தறிவு என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் கடவுள் விரோத சிந்தனைகளைப் பெருக்கலாம். மக்களின் சமூகக் கட்டமைப்பை.. குலைக்கலாம்.. விலங்குகள் போல நடக்க அனுமதிக்கலாம் என்று கனவு காண்கின்றனர்..!

அதற்கு களமாக யாழ் களம்.. இடமளிப்பது இன்று நடக்கும் விடயமல்ல. புரட்சிச் சேனைகளாக வரிந்து கட்டிக் கொண்டு.. சிலர் அதைத்தான் தொடர்ந்து செய்கின்றனர்.

அவர்கள் நினைப்பதில்லை.. தமக்கு அடுத்தவர்களை விமர்சிக்க உள்ள உரிமை போல அடுத்தவர்களுக்கும் தங்கள் நியாயத்தை விளக்க உரிமை உண்டென்று. ஆனால் யாழ் களம் அதற்கு இடமளிப்பதில்லை. ஆறுமுகநாவலர் போன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை சமயப் பிரச்சாரம் என்று அடக்கி ஒடுக்கி விட்டு.. பெரியாரின் தூசணங்களை.. அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு அது புரட்சியாகத் தெரிகிறது இன்னும். பெரியார் மண்டையைப் போட்டே.. அரை நூற்றாண்டு கடக்கப் போகிறது..!

உலகம் நவீன ஒழுங்கியலுக்குள்.. அனைத்து மக்களின் வாழ்வுரிமையையும் சமனாக மதிக்க விளையும் வேளையில்.. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்வோர் மட்டும்.. இன்னும் பிராமண சமூகத்தை பார்பர்னிய எச்சங்களாக்கி அவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஒழுங்கில் வாழ உரிமையளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் ஆதிக்கம் செய்கின்றனர் என்ற நிலை இல்லை. அப்படி இருக்க.. அரைநூற்றாண்டுக்கு முந்திய.. கோமாளித்தனங்களை இன்னும் காவ நிற்கின்றனர்.

சாதி அழிப்பை செய்த ஈழத்தில் கூட பிராமண சமூகத்தின் தொழில்சார் தகமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது சமயப்பணிக்கான சமூக நிலையைப் பெற அனுமதிக்கப்படுகின்றனர். அது சாதியமாக இங்கு காட்டப்படுகிறது. இந்த நிலைகள் மாற வேண்டின்.. பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவு வரனும்.. இல்ல அது நடக்காது..! :P :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவன்,

உங்களது ஊக்குவிப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு வாதம், பகுத்தறிவுவாதிகளுக்கும் கடவுள்நம்பிக்கை உடையவர்களுக்கும்? இந்தக்கூற்றுக்களின் அடிப்படையில் கடவுள்நம்பிக்கை உடையவர்கள் பகுத்தறிவற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

பகுத்தறிவாளர்களாக தங்களை இனம் காண்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம்

முன்னம் கேட்கப்பட்ட கேள்விதான் திரும்பவும் கேட்கவேண்டிய தேவை அதற்கான நேரம் ஆகவே இதற்கு பதில் கூறுங்கள் பின்னர் யார் பகுத்தறிவாளர்கள் என்று முடிவுசெய்யலாம்.

பூமியில் உள்ள அத்தனை நாடுகளும் அதாவது நாட்டுக்குநாடு (விதிவிலக்காக ஒனறு இருக்கலாம்) உத்தியோகபூர்வமாக ஆகக்குறைந்தது ஒரு மதமாவது வத்திருக்கிறார்கள், நாடுகள் அத்தனையிலும் கோடிக்கணக்கில் கோயில்கள் (பொதுப்படையாக சொல்லியிருக்கிறேன்) இது கடவுள் இல்லையென்றதாலா அல்லது கடவுள் நம்பிக்கை மனிதனை நன்நெறிப்படுத்தாது என்று தெரிந்ததாலா அல்லது கடவுள் நம்பிக்கை அவசியமில்லை என்பதாலா??

உங்கள் அறிவை காட்டுங்கள்

Edited by Aadhi

  • தொடங்கியவர்

ஆதி உங்களின் கேள்வி முற்றிலும் நியாயமானது. இது பற்றி முன்னர் ஒரு தடவை பெரியாரிஸ்டுகள்களிடம் நானும் கேட்டதோடு |பகுத்தறிவாளர்கள்| என்று தங்களை மட்டும் அவர்கள் அடையாளப்படுத்துவது தவறென்றும் கேட்டிருந்தேன்.

இந்தத் தலைப்பில், அவர்கள் அவ்வாறு தங்களை அழைக்கிறார்கள் என்ற அடிப்படையில்.; அவ்வாறு கூறிவிட்டேன். இருப்பினும் அது தவறுதான் இனிமேல் கருத்துக்களில் இப்பதத்தைப் பாவிப்பதைத் தவிர்த்து விடுகிறேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் நீண்ட பதிவைப் படித்தேன். எனினும் எல்லாவற்றையும் விளங்கிக்கொண்டேன் என்று சொல்லமுடியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வந்த சேதி பார்ப்பனியம், பகுத்தறிவுவாதங்கள் காலங் கடந்தவை. எனவே அவற்றை விட்டுவிட்டு தற்போதுள்ள பூதங்களாகிய நுகர்வோரிசம், மேற்கத்தையக் கலாச்சாரத் திணிப்பு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதே.

இந்தியாவில் நுகர்வோரிசம் கோலூச்சும் பெங்களூருக்கு இருமுறை சென்று வந்த அனுபவத்தில் நான் கண்டவையும், இன்னுமொருவன் விஜய் தொலைக்காட்சி பார்த்துப் புரிந்துகொண்டதற்கும் அதிகம் வித்தியாசமில்லை என்றே நினைக்கின்றேன். கண்டிப்பாக நுகர்வோரிசம் இந்திய இளைஞர்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 500 000 துறைசார் வல்லுனர்கள் வேலை செய்யும் பெங்களூரில் அவர்களிடம் தாராளமாகப் புரள்கின்றது. எனவே அவர்கள் மேற்கத்தைய நாடுகளில் வசிப்பவர்கள் போன்று காரும், வீடும், மாலை நேரங்களில் உணவு விடுதிகளும், மதுபான விடுதிகளும் என்று வருகிறார்கள் (இரவு விடுதிகள் 11 1/2 மணியோடு பூட்டப்படுகின்றது). இத்தகைய வசதிகளையும் வாழ்க்கைத் தர உயர்வையும் அதிகம் கொண்டவர்கள் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது நான் போன நிறுவனங்களில் பரிமாறிய உணவு வகைகளில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது.

இவ்வளவு செல்வச் செழிப்பில் இருக்கும் அதே நகரில், பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் பரிதவிக்கும் அரச ஊழியர்களும், கீழ்நிலை ஊழியர்களும் வசிக்கின்றனர். அவர்களின் பெரும்பாலானோரின் கனவு தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து இப்படியான பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்க வைக்கவேண்டும் என்பதே. இவ்வாறு எல்லோரிடமும் மேற்கத்தைய மோகமும், நுகர்வோரிசமும் கொடிகட்டிப் பறக்கின்றன. இப்படியான விருப்பங்கள் அவர்களை வாழ்க்கையில் முன்னேற தூண்டுதலாக உள்ளன என்பது நல்ல விடயம்தான். எனினும் 85 % வீதமானோர் விடுபட்டுப் போகின்றனர் என்பதும் உண்மைதான்!

  • தொடங்கியவர்

கிருபன்,

பதிவு நீண்டுதான் விட்டது. பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி.

நீங்கள் புரிந்ததாகக் கூறுகின்ற விடயங்கள் சரியானவையே. பழைய சுரண்டல் முறைகளும் இப்புதிய முறைகளோடு சேர்ந்து தொழிற்படுகின்றன என்தும் எனது கருத்து.

மொத்தத்தில் சுரண்டல் முறைகளும் சுரண்டல் பேர்வழிகளும் வளர்கிறார்கள், அவற்றிற்கெதிரான நடவடிக்கைகள் தான் இன்னோரன்ன காரணங்களால் வினைத்திறன் அற்றுக் கிடக்கின்றன (எனது பார்வையில் இவ்வினைத்திறனின்மைக்கான முக்கிய காரணி, எமது மனங்களிற்குள் முடிந்தமுடிபாகிவிட்ட சில குறுகிய கருத்து நிலைகள்).

அத்தோடு பொருளாதார சுபீட்சத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் 85 வீதம் (இந்த 85 வீதத்திற்குள் பார்பான், தலித், மாவோயிஸ்ட் என்று எத்தனையோ பிரிவினர் அடங்குவர்) விடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதும் திட்டமிட்டுப் பல வழிகளில் உறுதிப்படுத்தப் படுகின்றது. இந்நிலையில் இந்து சமயத்தையும் பார்பனியத்தையும் பொழுதுபோக்காக வசைபாடிக் கொண்டிருப்பதில் பலனில்லை என்பதும் என் கருத்தே.

அத்தோடு, கலாச்சாரம் அல்லது பெறுமதிகளை மேற்கைப்போலவே, ஏறத்தாள அனைத்துச் சுரண்டல்காரர்களும், தங்களது முதல் குறிக்கோளான பொருளாதார மேலாண்மையை உறுதிப்படுத்தல் என்ற விடயத்திற்கு உதவும் ஒரு கருவியாகத் தான் அணுகிறார்கள் என்பதும் எனது கருத்து.

வாசித்தமைக்கு நன்றி

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் உள்ள அத்தனை நாடுகளும் அதாவது நாட்டுக்குநாடு (விதிவிலக்காக ஒனறு இருக்கலாம்) உத்தியோகபூர்வமாக ஆகக்குறைந்தது ஒரு மதமாவது வத்திருக்கிறார்கள், நாடுகள் அத்தனையிலும் கோடிக்கணக்கில் கோயில்கள் (பொதுப்படையாக சொல்லியிருக்கிறேன்) இது கடவுள் இல்லையென்றதாலா அல்லது கடவுள் நம்பிக்கை மனிதனை நன்நெறிப்படுத்தாது என்று தெரிந்ததாலா அல்லது கடவுள் நம்பிக்கை அவசியமில்லை என்பதாலா??

முதலில் ஏன் 200 க்கும் மேலான நாடுகள் உலகில் உள்ளன? ஏன் மேலும் நாடுகளை உருவாக்கப் போராடுகின்றனர் (தமிழீழத்தையும் சேர்த்துத்தான்)?. மதங்களின் தேவை ஏன்?

இவற்றிற்கு இலகுவான விடைகள் கிடையாது. எனினும் அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. எவ்வளவுதான் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் இருந்தாலும், மற்றயோரை அடக்கியாள வேண்டும், தன் குடும்பத்தை, தன் சமூகத்தை, தன் இனத்தை ஆண்டாண்டு காலம் இந்தப் பூமியில் நிலை நிறுத்தப் பண்ணவேண்டும் என்ற கொள்கையோடுதான் பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர். இக் கொள்கைகளை நடை முறைப்படுத்த பாவிக்கப் படுகின்ற ஆயுதங்களில் மதமும் ஒன்று. மதங்கள் நிறுவன மயப்படுத்தப்பட்டு அதன் மூலம் மக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. உலகிலுள்ள எல்லா மதங்களில் இவை சர்வசாதாரணமாக உள்ளன. எனவே ஒவ்வொரு நாட்டுக்கும் உத்தியோக ரீதியான மதமும் உள்ளது.

மக்களை நன்னெறிப்படுத்த மதம் தேவையென்பது அடிப்படையில் மக்கள் சாத்தான்களாகப் பிறந்து வளர்கின்றார்கள் என்பதலா?

இன்னுமொருவனின் நீண்ட தொகுப்பும் அதன் மூலம் அவர் சொல்ல வந்த செய்தியும் பல விடயங்களை தெளிவாக்குகிறது.

யாழின் பல விவாதத்தலைப்புக்கள்.. இடியப்பச் சிக்கலாகவே இருக்கின்றன.

சபேசன்.. நாரதர் என்போருக்கு சான்றிதழ் வழங்க சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையே அதுதான்.. அப்படியானவர்களை.. விட்டுத்தள்ளுங்கள்.

விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்..

சபேசன் முழுக்க முழுக்க பிராமண சமூகத்தை பார்பர்னிய வாரிசுகள்.. பார்பர்னிய எச்சங்கள் என்று குற்றம் சுமத்தி எழுதியவை இங்கு அழிக்கப்படாமலே இருக்கின்றன.

பிராமண சமூகத்தினர் தங்களளவில் கடைப்பிடிக்கும் சில தீவிரமான சமூக பழக்க வழக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு.. அவர்களைப் பார்பர்ன எச்சங்கள் என்று விழித்து.. தொடர்சியாக நடத்தப்பட்ட விவாதங்கள் இருக்கின்றன.

பிராமண சமூகம் சில தீவிரமான சமூகப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கிறது என்பதற்காக.. அது அவற்றை ஏனையவர்களுக்கு திணிக்கிறது என்பது பொருள் அல்ல. இஸ்லாமியர்கள்.. யூதர்கள்.. கிறிஸ்தவர்கள் என்று எல்லோருக்கும் அவரவற்கு என்று சில தனித்துவ பழக்கவழக்கங்கள்.. இருக்கின்றது. அதை அவர்கள் எவரையும் கட்டாயப்படுத்தி திணிக்கவில்லை. அப்படி திணிப்பது சம கால உலகில்.. அடிப்படை மனித உரிமையைப் பறிக்கும் செயல் என்பதாகவே கருதப்படும்... மதமாற்றங்களின் போது தனிநபர்களின் விருப்பைப் பெறும் பொருட்டு பிரச்சாரங்கள் செய்யப்படுதல் நெகிழ்வுப் போக்கில் பார்க்கப்படுகிறது. ஆனால் கட்டாய மதமாற்றங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதேபோல்.. எமக்குப் பிடிக்கவில்லை.. என்பதற்காக பிராமண சமூகத்தினதோ.. அல்லது மற்றைய மதத்தினரினதோ தனித்தன்மையான செயற்பாடுகளை.. களைந்து கொள் என்று கூக்குரல் இடமுடியாது. அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. நாம் எமக்குப் பிடிக்கவில்லை என்றால்.. விலகிச் செல்வதை விடுத்து.. கருத்துத் திரிபுகள் மூலம்.. திணிப்புகளைச் செய்யலாம் அதன் மூலம் மக்கள் மத்தியில் சில சமூகத்தவர்கள் தொடர்பில் தப்பபிப்பிராயங்களை வளர்க்கலாம்.. அதன் மூலம் பகுத்தறிவு என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் கடவுள் விரோத சிந்தனைகளைப் பெருக்கலாம். மக்களின் சமூகக் கட்டமைப்பை.. குலைக்கலாம்.. விலங்குகள் போல நடக்க அனுமதிக்கலாம் என்று கனவு காண்கின்றனர்..!

அதற்கு களமாக யாழ் களம்.. இடமளிப்பது இன்று நடக்கும் விடயமல்ல. புரட்சிச் சேனைகளாக வரிந்து கட்டிக் கொண்டு.. சிலர் அதைத்தான் தொடர்ந்து செய்கின்றனர்.

அவர்கள் நினைப்பதில்லை.. தமக்கு அடுத்தவர்களை விமர்சிக்க உள்ள உரிமை போல அடுத்தவர்களுக்கும் தங்கள் நியாயத்தை விளக்க உரிமை உண்டென்று. ஆனால் யாழ் களம் அதற்கு இடமளிப்பதில்லை. ஆறுமுகநாவலர் போன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை சமயப் பிரச்சாரம் என்று அடக்கி ஒடுக்கி விட்டு.. பெரியாரின் தூசணங்களை.. அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு அது புரட்சியாகத் தெரிகிறது இன்னும். பெரியார் மண்டையைப் போட்டே.. அரை நூற்றாண்டு கடக்கப் போகிறது..!

உலகம் நவீன ஒழுங்கியலுக்குள்.. அனைத்து மக்களின் வாழ்வுரிமையையும் சமனாக மதிக்க விளையும் வேளையில்.. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்வோர் மட்டும்.. இன்னும் பிராமண சமூகத்தை பார்பர்னிய எச்சங்களாக்கி அவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஒழுங்கில் வாழ உரிமையளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் ஆதிக்கம் செய்கின்றனர் என்ற நிலை இல்லை. அப்படி இருக்க.. அரைநூற்றாண்டுக்கு முந்திய.. கோமாளித்தனங்களை இன்னும் காவ நிற்கின்றனர்.

சாதி அழிப்பை செய்த ஈழத்தில் கூட பிராமண சமூகத்தின் தொழில்சார் தகமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது சமயப்பணிக்கான சமூக நிலையைப் பெற அனுமதிக்கப்படுகின்றனர். அது சாதியமாக இங்கு காட்டப்படுகிறது. இந்த நிலைகள் மாற வேண்டின்.. பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவு வரனும்.. இல்ல அது நடக்காது..! :P :(

நெடுக்கால்போவான்.

உங்கள் வருத்தம் புரியுது அதில் நியாயம் இருக்கு.

பிராமண சமூகத்தை தாக்கிவருகிறோம் என்றால் அங்கு "கடவுள்" இந்தபெயரைவைத்து எவ்வளவு அநியாயம் நடக்குது. அதை ஏன் தாக்குதல் என்று எடுத்துக்கொள்கிறீர்கள். பெரியார் ஓர் இந்துமதத்தவர் அவர் தனது மதத்தில் நடந்ததவறுகளை சுட்டிக்காட்டினார்.

கடவுள் எனும் பெயரில் இன்று நான்தான்கடவுள் என்பவர்களை எதிர்பதிலும் தவறு இல்லையே?

மற்றும் நீங்கள் பெரியாரை"பெரியாரின் தூசணங்களை" "மண்டையைபோட்டு" என்றவரிகள் சகித்துக்கொள்ளமுடியவில்லை.

"பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவு வரனும்" ம்சரி .............?

Edited by Naththikan.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் ஏன் 200 க்கும் மேலான நாடுகள் உலகில் உள்ளன? ஏன் மேலும் நாடுகளை உருவாக்கப் போராடுகின்றனர் (தமிழீழத்தையும் சேர்த்துத்தான்)?. மதங்களின் தேவை ஏன்?

இவற்றிற்கு இலகுவான விடைகள் கிடையாது. எனினும் அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. எவ்வளவுதான் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் இருந்தாலும், மற்றயோரை அடக்கியாள வேண்டும், தன் குடும்பத்தை, தன் சமூகத்தை, தன் இனத்தை ஆண்டாண்டு காலம் இந்தப் பூமியில் நிலை நிறுத்தப் பண்ணவேண்டும் என்ற கொள்கையோடுதான் பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர். இக் கொள்கைகளை நடை முறைப்படுத்த பாவிக்கப் படுகின்ற ஆயுதங்களில் மதமும் ஒன்று. மதங்கள் நிறுவன மயப்படுத்தப்பட்டு அதன் மூலம் மக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. உலகிலுள்ள எல்லா மதங்களில் இவை சர்வசாதாரணமாக உள்ளன. எனவே ஒவ்வொரு நாட்டுக்கும் உத்தியோக ரீதியான மதமும் உள்ளது.

மக்களை நன்னெறிப்படுத்த மதம் தேவையென்பது அடிப்படையில் மக்கள் சாத்தான்களாகப் பிறந்து வளர்கின்றார்கள் என்பதலா?

கிருபண்னை இங்க இப்பிடி எழுதிறதுகள்தான் சாத்தானுகள். உதுவளுக்கு வேற வேலையில்லை, சாமிப்படத்த வீட்டுக்குள்ள வச்சுக்கொண்டு மதத்துக்கெதிரா கடவுளுக்கெதிரா எழுதிற கூட்டம். அப்பல்லாம் வருசாவருசம் செல்லச்சன்னதி திருவிழா வாறவர் தலைவர், இவங்கட கருத்துப்படி அவரும் பகுத்தறிவில்லாதவர்தான். சாத்தானுகள் பூந்திட்டிது இங்க பலருடைய மூளைக்குள்ள, நல்ல செய்தியள் ஒண்டும் வாறதா கானேல்லை சொல்லுற செய்தியள் அத்தனையும் மறைமுகமா தோல்வியை எடுத்துச்சொல்லுது. அதுதான் இந்தச் சாத்தானுகளுக்குள்ள இப்பத்தய பிரச்சனை, வெண்டாலும் உதுவளுக்கு உந்தப் பிரச்சனை கூடும் தோத்தாலும் கூடும். எண்டவடியா உதுவளுக்கு நாங்கள் ஒண்டுமே செய்ய ஏலாது. ராமர்பாலம் கத்தி முடிஞசு இப்ப இங்கை சாத்தான் வேதம் ஓதுதிகள்.

இன்னுமொருவன் உங்கடை எழுத்தின் சாரம்சம்

பார்ப்பணியம், இந்துத்துவவாதிகள் இந்து மதத்தின் சீடர்கள் பக்த்தர்கள் என்ற தரப்பிற்கும் பகுத்தறவுவாதிகளிற்கும் இடையில் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை விடுத்து இரு தரப்பிற்கும் 1 பொது எதிரி இருக்கு அதைப் பற்றி வாதிப்பம். :lol:

globalisation, consumerism எதிர்த்து வாதிட நான் hypocrite அல்ல.

ethical globalisation இல் நம்பிக்கையுள்ளவன். அதைப்பற்றி தாராளமாக கருத்தாடலாம்.

விஜே ரிவிக்காலாவது இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் globalisation அய் அறிந்ததையிட்டு மகிழ்ச்சி. அதற்கான அறிகுறிகளை அடுத்தடுத்து miss universe, miss world சூட்டினதிலேயே காணலாம். அது மாத்திரமல்ல olympics venue awarding போன்றவற்றின் இல் கூட இவற்றின் தாக்கம் இருக்கு.

நாடுகள் சர்வதேச அமைப்புகள் போன்றவை கொண்ட பலம் சக்த்தி ஆழுமை என்பவற்றை எப்படி பயன்படுத்துவது எங்கு பிரயோகிப்பது என்பதை தீர்மானிப்பவர்கள் அவர்களிற்கு நிதி முதல் ஏனைய வளங்களை வழங்குபவர்கள் அதனுள்ள இயங்கும் பல்வேறு பட்ட தரப்புகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள் lobby பண்ணுபவர்கள். The power capacities and capabilites of a state or any international institutions are deployed ultimately to defend and further the agend of the interest groups that surround them.

இந்த interest group என்பது இனம் சார்ந்ததாக அல்லது மொழிசார்ந்ததா அல்லது மதம் சார்ந்தாக பணம் சம்பாதித்தல் என்ற capitalism/consumerism/ driven globalisation என்பதா அல்லது வேறு ஒரு கொள்கை communism? சார்ந்ததா என்பது அந்தந்த states and institutions இன் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது.

தற்பொழுது இந்தியாவின் மீது நடைபெறும் onslaught என்பது capitalism/consumerism சார்ந்தது. அது உருவாக்கும் power base தற்பொழுது உள்ள இந்துத்துவவாதிகளின் power base அய் over shadow பண்ணுகிறது. ஆனால் ஏற்கனவே உள்ள power structure ஓடு வெளிப்படையாக முரண்படாது தான் புதிய power base ஆக தன்னை வேரூன்றும். அந்த வகையில் ஏற்கனவே உள்ள சுரண்டல்களையும் power structure அய்யும் வெளிப்படையாகத் திருத்தி அமைக்க முயலாது. அவர்களிற்குள் மாற்றமடையத் தயாரானவர்களை உரிய incentives அய் கொடுத்து உள்வாங்கிக் கொள்ளும்.

அந்த வகையில் இந்துத்துவம் என்ற கொள்கையின் பிடியை monopoly படிப்படியாக இழந்தாலும் புதிய power structure இல் இவர்கள் legacy இடைத்தரகர்களாக கணிசமான காலம் இருப்பார்கள். புரட்சிகரமாக செய்யப்படாத power structure மாற்றங்களில் இது இயல்பானது.

இதனால் குறுகிய கால நோக்கில் எல்லோரும் பயன் அடையவில்லை சிறு தொகையினரே பயனடைவதாக தெரிகிறது. பழய power structure இல் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் தான் தொடர்ந்தும் அனுபவிக்கிறார்கள் என்பதாக இருக்கிறது.

ஆனால் நீண்ட கால நோக்கில் புதிய power structure இன் சுரண்டல் என்பது இந்தியாவின் அனைத்துத் தரப்பையும் கொள்கை அளவில் சம அளவாக பார்ப்பதால் கணிசமான மாற்றத்தை இதுவரைகாலமும் சுரண்டப்பட்டவர்களிற்கு கொண்டுவரும். அதாவது கொள்கை அளவில் எல்லோரையும் நோக்கிய சம அளவிலான சுரண்டல் என்பது இவர்களிற்கு பழய சுரண்டல் நிலையில் இருந்து ஒருவகை விடுதலைக்கான கான சந்தர்ப்பத்தை தருகிற அதே நேரம் அவர்கள் இன்னொரு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலில்ற்குள் நுளைவது தவிர்க்க முடியாது.

இந்த புதிய power structure இல் தாம் இதுவரை அனுபவித்து வந்த monopoly அய் இழக்க விரும்பாதவர்கள் communists ஓடு கூட்டுச் சேர்வது எதிர்பார்க்கக் கூடியதே. அப்படியான ஒரு கருத்தியல் விதைப்பை வெற்றிகரமாக உள்வாங்கியதன் பிரதிபலிப்புத்தான் உந்த விஜே ரீவி கண்டு படிப்போ :rolleyes:

கிருபன் நிர்வாக மயப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் தான் மதங்கள்.

நிர்வாகமயப்படுத்தப்பட்ட மதம் என்று சொல்வது நடுச் சென்ரர் மாதிரிக் கிடக்கு. B)

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு வாதிகளிற்கும் கடவுள் நம்பிக்கை உடையவர்களிற்கும் இடையே நடைபெற்ற விவாதங்கள் தங்களது மனவெளிப்பாட்டைக் காட்டியபடியே தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இருபக்கத்தின் சாராம்த்தையும் எடுத்துக்கூறி தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியினையும் தொட்டுச் சென்று, இறுதியில் ஒரு பிரச்சினைக்கான தீர்வு பற்றிய எமது சிந்தனை ஒரு போதும் ஒரு குறித்த காலகட்டத்து வழிமுறைகளிற்குள் புதைந்து நின்று விடக்கூடாது. மாறாக, காலத்தின் நீட்சியில் எமது பிரச்சினை முடிவுறாது தொடரும் போது, அப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய எமது சிந்தனையும் பல முனைகளில், எமது மனத்திற்குள் முடிந்த முடிபாக வியாபித்து வளர்ந்து நிற்கின்ற முடிவுகளையும் கடந்து, புதிய முனைகளில் வளர்வது அவசியம்.

என்று தலைவரிடம் கற்கவேண்டிய விடயம் என்று கூறி நிறைவு செய்த கருத்துப்பகிர்வு அற்புதம்.

  • தொடங்கியவர்
இன்னுமொருவன் உங்கடை எழுத்தின் சாரம்சம் பார்ப்பணியம், இந்துத்துவவாதிகள் இந்து மதத்தின் சீடர்கள் பக்த்தர்கள் என்ற தரப்பிற்கும் பகுத்தறவுவாதிகளிற்கும் இடையில் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை விடுத்து இரு தரப்பிற்கும் 1 பொது எதிரி இருக்கு அதைப் பற்றி வாதிப்பம். :lol:
குறுக்காலபோவன்,நான் சொல்லும் கருத்தின சாராம்சம் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு அல்லது இந்தியச் சூழலில் இருக்கின்ற ஒடுக்குமுறைகளினது தன்மை, நீங்கள் கற்பிப்பது போன்று, அல்லது இற்றைக்குப் பல தசாப்தங்களிற்கு முன்னர் பெரியாரால்எடுத்தியம்பப்பட்

Edited by Innumoruvan

இன்னுமொருவன்

முதலே கூறியது போல் புதிதாக உருவாகி வரும் power structure இப்பொழுது இருப்பதை open ஆக challenge பண்ணாது என்பதால் தற்பொழுது சுரண்டப்படுபவர்களின் நிலைகளில் மாற்றங்கள் என்பது வேகம் குறைந்ததாகத்தான் இருக்கும் ஏன் என்றால் இது ஒரு புரட்சி அல்ல. எனவே தற்பொழுது சுரண்டப்படுபவர்களைப் பொறுத்தவரை பிரச்சனை மாறவில்லை அதற்கான காரண கர்த்தாவும் மாறவில்லை. மாறாக புதிதாக உருவாகும் power structure இல் அவர்களிற்கு கிடைக்கக் கூடி சம அந்தஸ்தை அடைவதற்கு தடையாக legacy இருக்கிறது. மாற்றம் கண்டிருப்பது தற்போதுள்ள power structure உம் அது சார்ந்த சுரண்டல் முறைக்கான long term survival & sustainability.

புதிய power structure உம் அது சார்ந்த சுரண்டலுக்கும் பழய இன்றும் dominant இருக்கும் (monopoly not yet lost) power structure இற்கும் அது சார்ந்த சுரண்டலிற்கும் இடையிலான சாதக பாதகங்களை விவாதிக்கலாம் நீங்கள் தயார் என்றால்.

அதற்காக இப்ப உள்ள power structure இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை இனி globalisation ஆல் தான் எல்லாப் பிரச்சனையும் என்ற பூச்சாண்டி வேண்டாம்.

உங்கள் வாதம் அண்மையில் (பூவியல்?) துறை சார்ந்த சிங்களவர் ஒருவர் global warming ஆல் தமிழர்கள் போராடும் பகுதிகளும் கடலுக்குள் போய்விடும் என்று கூறியது போன்ற மிகவும் innocent ஆன ஒன்று என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

தற்போதைய நிலையில் இந்துத்துவ வாதிகளிற்கு கமியூனிஸ்ருக்களோடு மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் (பொது எதிரி) இணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று தான் சொன்னே தவிர இந்துத்துவவாதிகளும் அவர்களின் வால்களும் கொள்கை நிலையில் கமியூனிஸ்ருக்கள் ஆகிவிடப் போகிறார்கள் என்று சொல்லவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்.. நீங்கள் இன்னும் ஒன்றை தெளிவாகப் புரிஞ்சு கொள்ளேல்ல..! அமெரிக்க.. சந்தையில் பங்கு விலை சரிகிறது என்பதற்குக் கூட பார்பர்னிய செல்வாக்குத்தான் காரணம் என்று காரணம் கற்பிக்க முனையும் மீன்கள் நிறைந்த குட்டையில் தான் இந்தக் கருத்துத் தூண்டிலைப் போட்டிவிட்டு... பால் சுறா பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்..!

இன்னும் சற்று நேரத்தில் உங்களை அப்பாவிப் பொடிப்பயல்..என்று விடுவார்கள். அதைக்கேட்டு நீங்கள் அடங்கிவிட்டால் அத்தோடு வாதத்தை வெற்றிகரமாக முடிச்சு பகுத்தறிவுக் கொடி நாட்டி.. இந்துத்துவாக்களை இந்துமா சமுத்திரத்தில் தூக்கி எறிந்துவிட்டதாகப் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்..! :rolleyes:

இந்துக் கோயில்கள் தான் நவீன முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயங்கு சக்தியாக இருக்கின்றன... என்று சொல்லி.. அதற்கு கூரிய ஆய்வுத்திறன் வேணும் உண்மையை அறிய என்று.. உங்களை மட்டம் தட்டிவிட்டார்கள் என்று வையுங்கள்.. அதுதான்..."power structure உம் அது சார்ந்த சுரண்டல் முறைக்கான long term survival & sustainability".. யாழ் களத்தைப் பொறுத்தவரை...!

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.. எவர் அநாவசியமாக அதிகமாக சோடிக்கிறாரோ.. அவர் திசை தளம்பி இருக்கிறார் என்று..! நீங்கள் தான் ஒரு compass ஐ சா.. எல்லாரும் ஆங்கிலம் கலந்து எழுதினமே என்று.. எழுதிட்டன்..திசைகாட்டியாக இருக்கனும்...! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ கடவுளே....................

இன்னுமொருவன் மற்றும் கிருபன் அவர்கள் முன்வைக்கும் விடயம் உலகமயமாக்கல் என்னும் பூதகரமான பிரச்சனைகள் என்பனவாகும். இந்த உலகமயமாக்கல் பிரச்சனையில் பாதிக்கப்படுவது சிறுபான்மை மக்களும் அவர்களுடைய பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளும் கலாச்சாரமும்தான். என நினைக்கின்றேன்.

இதில் முன்வைக்கப்படும் தீர்வில் ஒன்று நாத்திகம் ஆத்திகம் தொடர்பான வாதங்களை கடந்து இந்தப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஆக்கம் நன்றாக இருக்கின்றது .

Edited by sukan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன்.. நீங்கள் இன்னும் ஒன்றை தெளிவாகப் புரிஞ்சு கொள்ளேல்ல..! அமெரிக்க.. சந்தையில் பங்கு விலை சரிகிறது என்பதற்குக் கூட பார்பர்னிய செல்வாக்குத்தான் காரணம் என்று காரணம் கற்பிக்க முனையும் மீன்கள் நிறைந்த குட்டையில் தான் இந்தக் கருத்துத் தூண்டிலைப் போட்டிவிட்டு... பால் சுறா பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்..!

இன்னும் சற்று நேரத்தில் உங்களை அப்பாவிப் பொடிப்பயல்..என்று விடுவார்கள். அதைக்கேட்டு நீங்கள் அடங்கிவிட்டால் அத்தோடு வாதத்தை வெற்றிகரமாக முடிச்சு பகுத்தறிவுக் கொடி நாட்டி.. இந்துத்துவாக்களை இந்துமா சமுத்திரத்தில் தூக்கி எறிந்துவிட்டதாகப் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்..! :rolleyes:

இந்துக் கோயில்கள் தான் நவீன முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயங்கு சக்தியாக இருக்கின்றன... என்று சொல்லி.. அதற்கு கூரிய ஆய்வுத்திறன் வேணும் உண்மையை அறிய என்று.. உங்களை மட்டம் தட்டிவிட்டார்கள் என்று வையுங்கள்.. அதுதான்..."power structure உம் அது சார்ந்த சுரண்டல் முறைக்கான long term survival & sustainability".. யாழ் களத்தைப் பொறுத்தவரை...!

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.. எவர் அநாவசியமாக அதிகமாக சோடிக்கிறாரோ.. அவர் திசை தளம்பி இருக்கிறார் என்று..! நீங்கள் தான் ஒரு compass ஐ சா.. எல்லாரும் ஆங்கிலம் கலந்து எழுதினமே என்று.. எழுதிட்டன்..திசைகாட்டியாக இருக்கனும்...! :lol:

நெடூக்கண்ணா நீங்கள் சொல்லுறது சரி, இங்க எல்லாரும் சுரண்டுறாக்களாத்தான் தெரியிது, வாயக்கட்டி வயத்தைக்கட்டி கடவுளே நமக்கொரு நாடுவேணுமெண்டு எங்களாலான பங்களிப்பை செய்ய, இவங்கெல்லாம் சுரண்டலில இருந்துகொண்டு வம்பளக்கிறாங்கள். இவங்களுடைய "power" கருத்துக்கள் என்னுடைய பங்களிப்ப தொடருறதோ நிப்பாட்டிறதோ எண்ட நிலைக்கு தள்ளிப்போட்டுது.

:D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்.. புதுப்புதுச் சொற்களைப் பாவிக்கிறீங்கள்.. நமக்கு ஒன்றுமா விளங்கல்ல..!

அதென்ன உலகமயமாக்கம் என்றால்..??!

ethical globalisation அப்படி என்றால் என்ன..??!

driven globalisation அப்படி என்றால் என்ன..??!

அதெப்படி உலகமயமாக்கல் சிறுபான்மையினரைப் பாதிக்கும்..??!

Power structure என்றால் என்ன..??!

power base என்றால் என்ன..??!

capitalism.. என்றால் என்ன...??!

consumerism.. அப்படி என்றால் என்ன..??!

இவற்றை தமிழில வரையறுத்தீர்கள் என்றால் ஆங்கிலம் அறியாத மக்கள் அடிப்படைகளை விளங்கிக் கொண்டு.. நீங்கள் என்ன விவாதிக்கிறியள் என்பதையாவது புரிஞ்சு கொள்ளுவினம்.

சிறீலங்காவில யாழ்ப்பாணம் என்ற ஒரு ஊர் இருக்கு. அங்க உள்ள படிச்ச மேட்டுக் குடியினர்.. தமிழை பேசினாலும்.. ஆங்கிலத்தில் தான் "பெரிய" விசயங்களைப் பேசிவினம். ஏனென்றால்.. அப்பதான் அது அடுத்தவைக்கு விளங்காது. அது அடுத்தவைக்கு (சாதாரண மக்களுக்கு) விளங்காதவரைக்கும் தான் "பெரிய" விசயம். அது அவர்களுக்கும் விளங்கிட்டா.. இவர்கள் பேச "பெரிய" விசயம் இருக்காது...! இது கொழும்பில உள்ள "படிச்ச மேட்டுக் குடி" சிங்களவர்கள் மத்தியிலும் இருக்கு.. புலம்பெயர்ந்துள்ள.. தாங்கள் படிச்ச மனிசர் என்று காட்டிக்கனும் என்று விரும்பிறவையட்டையும் தாராளமா இருக்கு..!

தயவுசெய்து.. நீங்கள் வைக்கின்ற விவாதத்தை யாழுக்கு வாற எங்களைப் போன்ற பாமர மக்களும் விளங்க எழுதுங்க. நாங்க ஒன்றும் உதுகளை விளங்கக் கூடாது என்றில்லைத்தானே. இல்ல சுரண்டல்.. ஒடுக்குமுறை என்றெல்லாம் பேசுறீங்க.. இதுகளும் ஒருவகை சுரண்டல்.. ஒடுக்குமுறைக்கான அத்திவாரமிடல்கள் தான். பகுத்தறிய வேண்டிய எளிமையான விடயங்களைக் கூட ஏன் அந்நிய மொழியால.. மறைச்சுக்குறீங்க.. ! அந்நியமொழியைப் பாவிக்க வேண்டாம் என்றல்ல.. பாவிங்க.. தமிழிலும் அதுக்கு விளக்கம் தர முயலுங்க. அதுமட்டுமில்ல இங்க பல்வேறு மொழி தெரிஞ்சவங்களும் வருகினம்.. அவையும் பிறகு ஜேர்மன்.. நொஸ்க் என்று எழுத வெளிக்கிட்டா... இறுதியில.. பாமர மக்களுக்கு "பெரிய" விசயம் பேசிறவை என்ன பேசினம் என்றது 1% கூடப் புரியாது...???!

தெளிவா அடிப்படைகளை வரையறுத்துப் போட்டுக் கதையுங்கோ. பாமர மக்களும் அறியட்டன் விசயங்களை..! மூடுமந்திரமா "பெரிய" மனிசர்தான் "பெரிய" விசயங்களைப் பேசனும் என்று வரையறுத்திருந்தா.. கேட்டது தப்புத்தானுங்கோ..! மன்னிச்சுக்கோங்க. எங்க இல்ல சுரண்டல்.. படிச்சவன் படிக்காதவன் என்ற வெளிப்பாட்டில இருந்து யாழ் களத்தில இருந்து ஆரம்பிக்குது. நாங்கள் அதுக்குள்ள உலகமயமாக்களுக்குப் போயிட்டம்.. அதற்கு அடிப்படை யாழுக்க.. இருக்குது பெரியார் மயமாக்கல் தொடங்கி பல வடிவங்களில..! அதுகளில இருந்து தேடிக் கொண்டு.. மேல போறதுதான் நல்லது. இது என்னடான்னா.. சட்டிக்க இருக்கிற மீனை.. சமுத்திரத்தில தேடுறது.. "பெரிய மனுசத்தனம்" போல எல்லோ கிடக்குது. :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

குறுக்காலபோவன்,

உலகமயமாக்கலால் தான் பிரச்சினை, அதற்கு முன் பிரச்சினை இல்லவே இல்லை என்று எங்கும் நான் சொல்லவில்லையே! சுரண்டலின் வளர்ச்சி, மருவல், பரவல் பற்றி மட்டும் தானே பேசினேன்.

அது மட்டும் அன்றி மேற்கு மட்டும் தான் சுரண்டல் பேர்வழி, கிழக்கிற்கு சுரண்டல் பற்றி எதுவுமே தெரியாது என்றும் எங்கும் நான் சொல்லவில்லையே.

சரி இன்னுமொருமுறை நான் என்ன சொல்கின்றேன் என்று விளக்க முயல்கிறேன், இதுவும் தோற்றால் எனது இயலாமையை நானே வருத்தத்துடன் ஒத்துக் கொள்கின்றேன்.

நானறிந்த வரையில், யாழ் களத்தில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக எழுந்த குரல்கள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்வைத்து, அம்மக்களிற்கான குரல்களாக மட்டுமே தான் எழுவதாகவே சித்தரித்து வரப்படுகின்றன. அதாவது கடவுள் நம்பிக்கை தான் ஒடுக்குமுறையின் மூலகாரணம் என்ற அடிப்படையில் மட்டும் தான் இத்தகைய கருத்துக்கள் உங்களிடம் இருந்து வருகின்றனவே அன்றி வேறெந்தக் காரணமும் இல்லை என்றே நீங்கள் கூறி வந்துள்ளீர்கள். அதாவது, கடவுள் நம்பிக்கை தான் சுரண்டலின் மூலகாரணம் என்ற அடிப்படையில், மனிதர்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய சுதந்திரத்தையே மதிக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் நீங்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இந்நிலையில் தான் அந்த 150 மில்லியன் 850 மில்லியன், அல்லது 15 வீதம் 85 வீதம் கணிப்புப் பற்றிக் கூறப்பட்டு (விஜய் தொலைக்காட்சி விடயங்களும் கூறப்பட்டு) அதுசார்ந்து உங்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கற்பிதம் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் விவாதங்கள் வழமை போல் திசைமாறப் பார்கின்றன. புதிய சுரண்டல் பற்றியும் பழைய சுரண்டல் பற்றியும் அவற்றின் சாதகபாதகங்கள் பற்றியும் விவாதிப்போம் வாருங்கள் என்கிறீர்கள்.

ஏற்கனவே சுரண்டலினால் ஒரு மேலாண்மை நிலையை அடைந்தவர்கள், மாறுகின்ற சுரண்டல் சூழ்நிலையிலும் தமது இடத்தை மற்றவர்கள் அடையவிடாதே பார்த்துக் கொள்ளத் தான் முனைவர் என்று நீங்கள் கூறுவதும், மாகோலிசின் கணிப்பையும் விஜய் தொலைக்காட்சி உதாரணத்தையும் அடிப்படையாக வைத்து, அந்த 150 மில்லியன் மேலாண்மைப் பிரிவு தனது மேலாண்மையைத் தொடாந்து தக்கவைக்க முயன்று கொண்டே இருக்கும் என்று நான் கூறுவதற்கும் வித்தியாசங்கள் இல்லை.

என்ன, மேலாண்மைப் பிரிவு அந்த மேலாண்மையை அடைந்ததும் அதைத் தக்கவைக்க முடிவதற்கும் மூலகாரணம் மக்களின் கடவுள் நம்பிக்கை என்கிறீர்கள் நீங்கள், இல்லை 150 மில்லியன் வெறுமனே பிராமணர்களால் உருவாக்கப்பட்டதில்லை (பெரியாரிஸ்டான கருணாநிதியின் குடும்பமும் அக்குடும்பத்தில் இனிமேல் வரப்போகின்ற சந்ததிகளும் மக்களின் கடவுள் நம்பிக்கையின் காரணமாகத் தான் அந்த 150 மில்லியன் மேலாண்மைப் பிரிவிற்குள் வந்தார்களா என்ன?) என்ற அடிப்படையில் கடவுள் நம்பிக்கை தான் ஒடுக்குமுறைக்கான மூலகாரணம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை, கடவுளே சம்பந்தப்படாத பல ஒடுக்குமுறை வடிவங்களும் உண்டென்று இத்தலைப்பின் ஆரம்பக் கருத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று நான் கூறுகின்றேன். அவ்வளவு தான் வித்தியாசம்.

மொத்தத்தில் ஒடுக்குமுறை, அது எவ்வடிவினதாயினும், எங்கிருப்பினும் இனங்கண்டு இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதில் எமக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதாய் நானுணரவில்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றைப் பற்றி மட்டும் உங்களது சிந்தனைகளைக் குவிக்காது, மாறுகின்ற ஒடுக்குமுறை வடிவங்கள் பற்றிய காலத்திற்கேற்ப உங்களது தீர்வு நோக்கிய சிந்தனைகளையும் வடிவமைத்துக் கொள்ளுங்கள் என்றால் தான் மாட்டேன் என்கிறீர்கள். சேர்ந்துழைக்க மாட்டவே மாட்டேன் என்கிறீர்கள்.

Edited by Innumoruvan

நண்பர்களே!!

உங்கள் விவாதங்களில் இருந்து எனக்கு தெரிபவை, வழமைபோல், வெறும் ஏமாற்றமே. என்ன செய்வது. நாம் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது. :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.