Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷி சூனக், கமலா ஹாரிஸ் மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சூனக், கமலா ஹாரிஸ் மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

26 அக்டோபர் 2022
 
ரிஷி சூனக், கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ரிஷி சூனக், கமலா ஹாரிஸ்

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சூனக் பதவியேற்றுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுபூர்வ நிகழ்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரிஷி சூனக்குக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்காக எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

இந்திய சமூக ஊடகங்களில் ரிஷி சூனக்கின் இந்த சாதனைக்கு பல தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய தலைவர்களை 'திறமை குறைந்தவர்கள்' என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார். இப்போது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமராக வருவதைக் காண்கிறோம். வாழ்க்கை அழகானது" என்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தப் பின்னணியில், உலகின் பல நாடுகளில் முன்னணித் தலைவர்களாகத் தொடரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற தலைவர்களைப் பற்றி பலரும் பேசுகிறார்கள்.

தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ளனர். பிரிட்டனுடன் சேர்த்து மற்ற ஏழு நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்திய பிரதமர் மோதியுடன் போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா

பட மூலாதாரம்,TWITTER/ANTONIOCOSTAPM

படக்குறிப்பு,

இந்திய பிரதமர் மோதியுடன் போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா

போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா

அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் போர்ச்சுகல் நாட்டின் பிரதமர்.அன்டோனியாவின் தந்தை ஆர்லாண்டோ கோஸ்டா ஒரு கவிஞர். காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார். போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட புகழ்பெற்ற புத்தகம் 'Shine of Anger'.

அவரது தாத்தாவின் பெயர் லூயிஸ் அபோன்சோ மரியா டி கோஸ்டா. லூயிஸ் கோவாவில் வசித்து வந்தார். அன்டோனியா கோஸ்டா மொசாம்பிக்கில் பிறந்தார். இருப்பினும், அவரது உறவினர்கள் கோவாவில் உள்ள மார்கோவாவிற்கு அருகிலுள்ள ருவா அபேட் ஃபரியா கிராமத்துடன் தொடர்புடையவர்கள்.

அன்டோனியோ கோஸ்டா ஒருமுறை இந்திய அடையாளத்தைப் பற்றி பேசினார். "என்னுடைய தோல் நிறம் என்னை எதையும் செய்வதிலிருந்து ஒருபோதும் தடுக்கவில்லை. எனது தோலின் நிறத்தை சாதாரணமானதாகவே கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.

தவிர, இந்திய ஓசிஐ (இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள்) கார்டு வைத்திருப்பவர்களில் கோஸ்டாவும் ஒருவர். இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு 2017ஆம் ஆண்டில் ஓசிஐ அட்டையை வழங்கினார்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்

பட மூலாதாரம்,FACEBOOK/PJUGNAUTH

படக்குறிப்பு,

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்

மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதியும் கூட. அவர் இந்தியாவின் பிகாருடன் தொடர்புடையவர்.பிரவிந்த் ஜெகநாத்தின் தந்தை அனிருத் ஜெகநாத் மொரீஷியஸின் வலிமையான அரசியல்வாதிகளில் ஒருவர். மொரிஷியஸ் நாட்டின் அதிபராகவும் பிரதமராகவும் இருந்தவர் அனிருத் ஜெகநாத்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

தற்போது மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக இருக்கும் பிரவிந்த் ஜெகநாத், தனது தந்தை அனிருத்தின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு வந்திருந்தார். இது தவிர, பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

மொரீஷியஸின் தற்போதைய அதிபராக இருக்கும் பிருத்விராஜ் சிங் ரூபானும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்

பட மூலாதாரம்,FACEBOOK/HALIMAHYACOB

படக்குறிப்பு,

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் முன்னோர்களும் இந்தியாவில்தான் வேரூன்றியவர்கள். இவரது தந்தை ஒரு இந்தியர். தாயார் மலையாளி. சிங்கப்பூரின் மக்கள்தொகையில் மலையாளிகள் 15 சதவீதத்தினர் உள்ளனர்.

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்தார். இதற்கு முன், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஹலிமா பதவி வகித்தார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகரும் இவரே.

சந்திரிகா பிரசாத் சந்தோகி தனது மனைவியுடன்

பட மூலாதாரம்,TWITTER/CSANTOKHI

படக்குறிப்பு,

சந்திரிகா பிரசாத் சந்தோகி தனது மனைவியுடன்

சுரினாம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி

சந்திரிகா பிரசாத் சந்தோகி, லத்தீன் அமெரிக்க நாடான சுரினாமின் அதிபர். இந்தியாவுடன் அவருக்கும் தொடர்பு உள்ளது. இவர் இந்தோ-சூரினாமிஸ் இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் சான் சந்தோகி என்று அழைக்கப்படுகிறார்.

சந்திரிகா பிரசாத் சந்தோகி சமஸ்கிருத மொழியில் அதிபராக பதவியேற்றதாக சில தகவல்கள் கூறுகின்றன.

கயானாவின் அதிபர் இர்பான் அலி

பட மூலாதாரம்,OP.GOV.GY

படக்குறிப்பு,

கயானாவின் அதிபர் இர்பான் அலி

கயானாவின் அதிபர் இர்பான் அலி

கரீபியன் நாடான கயானாவின் அதிபரான இர்பான் அலிக்கும் இந்தியாவில் இருந்து முன்னோர்கள் உள்ளனர்.

இர்ஃபான் 1980இல் இந்தோ-கயானிய குடும்பத்தில் பிறந்தார்.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் வாவேல் ராமகலவன்

பட மூலாதாரம்,TWITTER/MIB_INDIA

படக்குறிப்பு,

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் வாவேல் ராமகலவன்

செஷெல்ஸ் அதிபர் வேவல் ராமகலவன்

செஷல்ஸ் அதிபர் வாவெல் ராமகலவனும் இந்திய வம்சாவளி தலைவர் ஆவார். இவரது முன்னோர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை ஒரு கொல்லர். அம்மா ஒரு ஆசிரியர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

2021இல், நரேந்திர மோதி அவரைப் பற்றி பேசியபோது, அவரை 'இந்தியாவின் மகன்' என்று அழைத்தார். "வாவேல் ராமகலவனின் முன்னோர்கள் பிகாரில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள். இன்று, அவரது சாதனைகளால் அவரது கிராம மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது" என்று மோதி கூறினார்.

అమెరికా ఉపాధ్యక్షురాలు కమలా హ్యారిస్

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளார்

அமெரிக்காவில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவர்.

2021ஆம் ஆண்டில், அவர் 85 நிமிடங்கள் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பணியாற்றினார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்தார். அதற்கு முன், 250 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தில் முதல் பெண், முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க பெண் துணை அதிபராக அவர் வரலாறு படைத்தார்.

இந்தியாவுடனான தனது தொடர்பு குறித்து கமலா ஹாரிஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். 2018இல், 'நாங்கள் சொன்ன உண்மை' என்ற அவரது சுயசரிதை வெளியிடப்பட்டது.

"மக்கள் என் பெயரை நிறுத்தி இரண்டாக அழைக்கிறார்கள். அவர்கள் 'கம-லா' என்று கூறுகிறார்கள்" என்று அவர் தனது சுயசரிதையில் எழுதினார்.

அந்த சந்தர்ப்பத்தில் கலிபோர்னியா செனட்டர் ஆக இருந்த கமலா ஹாரிஸ் தனது பெயரின் அர்த்தத்தை பொதுமக்களுக்கு விளக்கினார்.

"என் பெயருக்கு தாமரை மலர் என்று அர்த்தம். இந்த மலர் இந்திய கலாசாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தாமரை செடி நீருக்கடியில் உள்ளது. அதன் பூ நீரின் மேற்பரப்பில் பூக்கும். தாமரை செடியின் விரல்கள் நதியோடு இறுகப் பின்னிப் பிணைந்துள்ளன'' என்று தன் பெயரைப் பற்றி விளக்கினார் கமலா.

கமலாவின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். அப்பா ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

https://www.bbc.com/tamil/global-63404822

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சிகளும், காக்கைகளும் உலகம் முழுவதும்  இருப்பது ஆச்சரியமான விடயமா ? 

😏

1 hour ago, Kapithan said:

கரப்பான் பூச்சிகளும், காக்கைகளும் உலகம் முழுவதும்  இருப்பது ஆச்சரியமான விடயமா ? 

😏

🧯   தேவை போல இருக்கு 😀

Edited by Hana

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கரப்பான் பூச்சிகளும், காக்கைகளும் உலகம் முழுவதும்  இருப்பது ஆச்சரியமான விடயமா ? 

😏

இல்லை ஒருபோதும் இல்லை....திரியை....[.பதிவை.  ] நன்றாக வசித்து விளங்கிக் கொண்டீர்களா.   ?சொல்லப்பட்டது இந்தியர்கள் பற்றி       அவர்கள் உலகத்தலைவர்கள். ஆக வருவது  திறமையும் கடினமாக உழைத்தமையுமையாலுமேயாகும்.  பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் இல்லை....திரியை....[.பதிவை.  ] நன்றாக வசித்து விளங்கிக் கொண்டீர்களா.   ?சொல்லப்பட்டது இந்தியர்கள் பற்றி       அவர்கள் உலகத்தலைவர்கள். ஆக வருவது  திறமையும் கடினமாக உழைத்தமையுமையாலுமேயாகும்.  பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் 😄

எது அண்ணை திறமை??

வந்தமா 

பணக்கார பெண்ணை வளைத்து பிடித்து கட்டி கோடீஸ்வரர் ஆகி அரசியலுக்கு வந்தமா?

எல்லோரும் விட்டு விட்டு ஓடி விட தேடுவார் அற்று கிடந்த பிரதமர் பதவியை நாம புகுந்து அரசியல் செய்து பதவியை பிடித்தமா?? 

இதில் எது திறமை அண்ணை??😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் கையே தனக்குதவி.....வெள்ளையனே வெளியேறு எண்டு சொல்லி வெளியேற்றிப்போட்டு.....இப்ப நாங்கள் எல்லா இடமும் பரந்து ஆட்சி செய்யிறம் எண்டு குதுகாலிக்க வெட்கமாயில்ல? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Hana said:

🧯   தேவை போல இருக்கு 😀

இந்தியா மீதான வெறுப்பை ஒருபோதும் நான் ஒருபோதும்(பிறரைப் போன்று 😉) மறைத்ததில்லை.  

1 hour ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் இல்லை....திரியை....[.பதிவை.  ] நன்றாக வசித்து விளங்கிக் கொண்டீர்களா.   ?சொல்லப்பட்டது இந்தியர்கள் பற்றி       அவர்கள் உலகத்தலைவர்கள். ஆக வருவது  திறமையும் கடினமாக உழைத்தமையுமையாலுமேயாகும்.  பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் 😄

 நான் ஒருபோதும் இந்தியாவுக்கு(பலரைப் போன்று😉) வாளி தூக்குவதில்லை கந்தையர். உங்களுக்கு இந்தியனைப்பற்றி தெரியாதென்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? 

துருக்கியர்களை ஏமாற்றுப் பேர்வளிகள் என்று கூறுவார்கள். ஆனால் இந்தியர்கள் ஒழுக்கமற்ற, கபடத்தனமும், பச்சைச் சுயநலமும் ஒருங்கே சேர்ந்த, எதற்கும் இலகுவாக  சோரம் போகக்கூடியவர்கள் என்பது என் அனுபவம். 

வன்னியரிடம் கேட்டுப்பாருங்கள். குடம் குடமாகக் கொட்டுவார். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எது அண்ணை திறமை??

வந்தமா 

பணக்கார பெண்ணை வளைத்து பிடித்து கட்டி கோடீஸ்வரர் ஆகி அரசியலுக்கு வந்தமா?

எல்லோரும் விட்டு விட்டு ஓடி விட தேடுவார் அற்று கிடந்த பிரதமர் பதவியை நாம புகுந்து அரசியல் செய்து பதவியை பிடித்தமா?? 

இதில் எது திறமை அண்ணை??😂

விசுகு   எனக்கும் ரிசி சுனக்கும்  எந்தவித தனிப்பட்ட தொடர்புமில்லை   ஆனால் இணையதளத்திலும்.  ..தொலைக்காட்சியிலும் நிறையவே புகழ்ந்து தள்ளுகிறார்கள...அவர் இதற்கு முன்பு பல உயர் பதவிகளில். இருந்துள்ளார்  எனவேதான் திறமை உண்டு என்கிறேன்   இந்தியன் எனற ஒரே காரணமாக அவரை நான் எதிர்க்க முடியாது....சோனியா ரகுல்.    கருணாநிதி சுப்பிரமணிய சுவாமி................இப்படியானவர்களை எதிர்கிறேன்.  காரணம் அவர்கள் எமது விடுதலை போராட்டங்களை சிதைத்தவரகள்   திட்டமிடடு அழித்தவார்கள்    அவர்களுக்குக்காக எல்லா இந்தியனையும்.  எதிர்க்க முடியுமா  ?. இல்லை அல்லவா ?ரிசி சுனக் எங்கள் விடுதலைககு எதிராக என்ன செய்தார்  ?ஏன் நீங்கள் அவரை எதிர்கிறீர்கள்.  ?. ரிசி சுனக். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது காதலித்து திருமணம் செய்தார்....இது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை    நாங்கள் ஏன் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நட்புறவு கொணடாககூடாது?    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தன் கையே தனக்குதவி.....வெள்ளையனே வெளியேறு எண்டு சொல்லி வெளியேற்றிப்போட்டு.....இப்ப நாங்கள் எல்லா இடமும் பரந்து ஆட்சி செய்யிறம் எண்டு குதுகாலிக்க வெட்கமாயில்ல? 😂

அண்ணை   ஒரு தமிழன் பெரிய பிரித்தானியா இன்  பிரதமர் ஆகி இருந்தால் நீங்கள் நிச்சயமாக குதுகாலிக்கமாட்டீர்கள்.       மாறாக பதவியை விலகுங்களென்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பிர்கள்.   இல்லையா ? அமெரிக்காவில் கமலா பதவியேற்றபோது   நீங்கள் படமென்றும் இணக்கவில்லையா.??.  

1 hour ago, Kapithan said:

இந்தியா மீதான வெறுப்பை ஒருபோதும் நான் ஒருபோதும்(பிறரைப் போன்று 😉) மறைத்ததில்லை.  

 நான் ஒருபோதும் இந்தியாவுக்கு(பலரைப் போன்று😉) வாளி தூக்குவதில்லை கந்தையர். உங்களுக்கு இந்தியனைப்பற்றி தெரியாதென்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? 

துருக்கியர்களை ஏமாற்றுப் பேர்வளிகள் என்று கூறுவார்கள். ஆனால் இந்தியர்கள் ஒழுக்கமற்ற, கபடத்தனமும், பச்சைச் சுயநலமும் ஒருங்கே சேர்ந்த, எதற்கும் இலகுவாக  சோரம் போகக்கூடியவர்கள் என்பது என் அனுபவம். 

வன்னியரிடம் கேட்டுப்பாருங்கள். குடம் குடமாகக் கொட்டுவார். 

😀

ஒரு இந்தியன் போல மற்ற இந்தியன் இருக்க மாட்டார்கள் .....ஒரு இலங்கையன் போல மற்ற இலங்கையன். இருக்க மாட்டார்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு இந்தியன் போல மற்ற இந்தியன் இருக்க மாட்டார்கள் .....ஒரு இலங்கையன் போல மற்ற இலங்கையன். இருக்க மாட்டார்கள்    

கந்தையர் உங்களுக்கு மறதி அதிகம் என்பதை நிரூபிக்கிறீர்கள்.

😏

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

கந்தையர் உங்களுக்கு மறதி அதிகம் என்பதை நிரூபிக்கிறீர்கள்.

😏

நிச்சியமாக .....ஆனாலும் இந்த திரியின். தலையங்கம் என்ன என்பது நன்றாகவே ஞாபகம் இருக்கிறது...நான் அது பற்றி தான் எழுதுகிறேன்..எனவே… எழுதுவது முற்றிலும் சரியாகும்.  மேலும் இந்தியாவை எதிர்த்து என்ன சாதிக்க போகிறீர்கள்  ? தமிழ் ஈழம் அமைக்க முடியுமா  ?.  அன்ரன் பாலசிங்கம். அடிக்கடி இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டினார்  ஏன்   ? இந்தியாவை எதிர்த்து நாங்கள் தீர்வு பெற முடியாது    இந்தியாவில் எதிர்க்க வேணடியவார்கள்.  கூட்டி. கூட்டி.  பார்த்தாலும் சுமார் 500 பேர் தான் வருவார்கள்    மாறாக முழு இந்தியா இல்லை   உங்கள் செயல்பாடுகளால். எமக்கான தீர்வு இன்னும் 50....100..வருடங்கள் பிந்தும்.   அவ்வளவு தான்   நன்மை ஒரு சிறுதுளி கூட இல்லை    மற்றும் இலங்கையை இந்தியாவுடன் நன்றாக ஓட்டவைக்கும் வேலையையும் நீங்கள் தான் செய்கிறீர்கள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு மறதி அதிகம் என்பதை நீங்களே ஒத்துக்கொண்டபின்னர, கதைப்பதற்கு எதுவுமே இல்லை. 

அதுசரி கந்தையர், இந்தனை அழிவுகளுக்கும் காரணமான இந்தியாவை மன்னிக்கவும், மறக்கவும், அதற்கு குடை பிடிக்கவும் தயங்காத நீங்கள், ஏன் சிங்களத்தை மட்டும் வெறுக்கிறீர்கள்? 

அவர்களுடனும் கூடிக் குலவிக் கொஞ்சலாமே ? அல்லது ஏற்கனவே அது நடந்துகொண்டிருக்கிறதா ? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கருத்துகள் எழுத முடியவில்லை என்றால் அமைதியாக இருக்கவும் சும்மா குட்டையை குழப்ப வேண்டாம்  புரிகிறதா?.     

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

கருத்துகள் எழுத முடியவில்லை என்றால் அமைதியாக இருக்கவும் சும்மா குட்டையை குழப்ப வேண்டாம்  புரிகிறதா?.     

ஏன் கோபம் கொப்பளிக்கிறது?  உண்மையைக் கூறுவதாலா ? 

இந்தியாவை மன்னிக்கலாம் என்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது ? 

பதில் கூறவும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஏன் கோபம் கொப்பளிக்கிறது?  உண்மையைக் கூறுவதாலா ? 

இந்தியாவை மன்னிக்கலாம் என்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது ? 

பதில் கூறவும். 

1....இந்த கேள்வி தேவையற்றது 

2...முன்பின். யோசணைகள் அற்றது.  

3 ....ஒரு அறிவு குறைந்தவர்கள் தான் இப்படி கேட்ப்பார்கள்

4...இது ரிசி சுனக். மற்றும் வெளிநாட்டில் வாழும் உயர் பதவியேற்றுள்ள இந்தியர்கள் பற்றியது    

5 ......மேலே இலக்கம்.   ...4...இல் சொல்லப்பட்டவர்கள். எமக்கு எந்தவித தீங்குகளும். செய்யதவார்கள். எனவே… இவர்கள் மன்னிக்கட்டவே.   ....தண்டிக்கப்படவே.....திட்டப்படவே.  ..வேண்டியதில்லை   அப்படி செய்வதால் நாங்கள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது....இலங்கை தமிழர்கள் இவர்களுக்கு நேசக்கரம் நீட்டவேண்டும்.  இவர்களின் ஆதரவுடன் தீர்வு நோக்கி நகர முடியும் 

6....இலங்கையில் கருணா போன்றோர் செய்த வேலைகளுக்கு.    முழு இலங்கை தமிழர்களையும். திட்ட முடியுமா   ?இல்லை அல்லவா   ?அதேபோல். தான்  முழு இந்தியர்களையும் திட்ட முடியாது....அதிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்.  2009 நடந்த முள்ளிவாய்க்கால் உடன் எந்தவித தொடர்புகளுமற்றவர்கள்   அவர்களை எவ்வாறு கரப்பன் பூச்சி என்று விழிக்க முடியும்   ? 

7...இலங்கையையே இந்தியாவையே  மன்னிக்கவும் தண்டனை” வழங்கவும்’ எனக்கு தகுதிகள் இல்லை...நான் நீதிபதியுமில்லை  

8......திரியின்.  தலைப்பை  பார்த்து கருத்தடப்பழகவும் .....கண்ட குப்பைகளை எல்லாம் திரிக்குள்.    கொட்டவேண்டாம்.   😁

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

எது அண்ணை திறமை??

வந்தமா 

பணக்கார பெண்ணை வளைத்து பிடித்து கட்டி கோடீஸ்வரர் ஆகி அரசியலுக்கு வந்தமா?

எல்லோரும் விட்டு விட்டு ஓடி விட தேடுவார் அற்று கிடந்த பிரதமர் பதவியை நாம புகுந்து அரசியல் செய்து பதவியை பிடித்தமா?? 

இதில் எது திறமை அண்ணை??😂

கந்தையர் கருத்து சரியானது.

நாடு மிக இக்கட்டான நிலையில் உள்ளதால், யாருமே சிக்கலில் மாட்டவிரும்பாமல் நழுவ, துணிவுடன் பொறுப்பெடுத்துள்ளார். மயித்தை கட்டி மலையை இழுத்தால், வந்தால் மலை, போனா மயிர்.

இப்போது, பரிகாசத்துக்கு ஆளாகமல், சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே பலர் கவலை.

கூகிள் சுந்தர் பிச்சை. மைக்கிரோசொப் நாதல்லா, அடோப், டிவீட்டர், டெஸ்லா என்று இந்தியர்கள் திறமை, கடின உழைப்பில் மேலே வந்தவர்கள். அதிஸ்டத்தால் அல்ல.

20 hours ago, Kandiah57 said:

விசுகு   எனக்கும் ரிசி சுனக்கும்  எந்தவித தனிப்பட்ட தொடர்புமில்லை   ஆனால் இணையதளத்திலும்.  ..தொலைக்காட்சியிலும் நிறையவே புகழ்ந்து தள்ளுகிறார்கள...அவர் இதற்கு முன்பு பல உயர் பதவிகளில். இருந்துள்ளார்  எனவேதான் திறமை உண்டு என்கிறேன்   இந்தியன் எனற ஒரே காரணமாக அவரை நான் எதிர்க்க முடியாது....சோனியா ரகுல்.    கருணாநிதி சுப்பிரமணிய சுவாமி................இப்படியானவர்களை எதிர்கிறேன்.  காரணம் அவர்கள் எமது விடுதலை போராட்டங்களை சிதைத்தவரகள்   திட்டமிடடு அழித்தவார்கள்    அவர்களுக்குக்காக எல்லா இந்தியனையும்.  எதிர்க்க முடியுமா  ?. இல்லை அல்லவா ?ரிசி சுனக் எங்கள் விடுதலைககு எதிராக என்ன செய்தார்  ?ஏன் நீங்கள் அவரை எதிர்கிறீர்கள்.  ?. ரிசி சுனக். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது காதலித்து திருமணம் செய்தார்....இது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை    நாங்கள் ஏன் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நட்புறவு கொணடாககூடாது?    

Here is a non-exhaustive Indian-origin CEOs in the US.

Raj Subramaniam, FedEx

The chemical engineering graduate from the IIT Bombay hails from Thiruvananthapuram in the southern Indian state of Kerala. He has spent more than 30 years at FedEx. Subramaniam held an array of strategy and operations roles in various geographies before being made president and CEO of the logistics giant on March 29, 2022.

Leena Nair, Chanel

A native of a small town in the western Indian state of Maharashtra, Nair took charge at Chanel from Alain Wertheimer on Dec. 14, 2021. She is the first woman to take that position at the French luxury fashion house.

Earlier, Nair headed human resources at Unilever London, having spent 30 years with the consumer goods giant after starting as a trainee in India. Working her way up, she eventually became a British citizen.

Parag Agrawal, Twitter

Agrawal replaced CEO Jack Dorsey on Nov. 29, 2021, after serving as Twitter’s chief technology officer since 2017.

The IIT Bombay graduate has been good for the company’s culture. He’s already taken paternity leave, reduced draconian management oversight, and championed flexible working.

CS Venkatakrishnan, Barclays

Barclays appointed CS Venkatakrishnan as CEO on Nov. 1, 2021, after Jes Staley stepped down unexpectedly.

MIT-educated Venkatakrishnan was with New York-based JPMorgan Chase for two decades before joining Barclays in 2016. The first person of colour to hold the position, Venkatakrishnan is viewed as a fine balance between a consensus-seeker and a risk-taker.

Rangarajan Raghuram, VMware

The cloud computing company elevated Raghuram from executive vice-president and chief operating officer for products and cloud services to CEO on June 1, 2021. He joined the firm in 2003 and has since helped grow its core business even while leading its diversification efforts.

Shar Dubey, Match

Sharmistha Dubey, who goes by the nickname “Shar,” served as Match’s president before taking over as CEO on March 1, 2020. Prior to heading the $40 billion conglomerate, she used to be the chief operating officer at Tinder, one of the many dating and matrimony platforms owned by Match.

In 2021, the “boss of romance” won accolades for not only opposing the heinous Texas abortion law but also creating a fund to support employees affected by the restrictive law. 

Sonia Syngal, Gap

Syngal has been with Gap since 2014. Before the India-born Canada-bred executive was handed the reins for Gap on March 23, 2020, she led Gap-owned Old Navy for four years. Her strategy to help the struggling fashion brand has been to reduce store count and take more risks.

Sandeep Mathrani, WeWork

Unlike several other Indian-origin CEOs, Mathrani didn’t grow up with WeWork. He was an outsider hired for the crucial role on Feb. 18, 2020. The real estate expert was tasked with revamping and growing the company

The company that inspired Apple TV+ Series WeCrashed is in dire need of damage control after its business model and corporate governance went sideways.

Arvind Krishna, IBM

The IIT-Kanpur alumnus joined IBM way back in 1990. Before becoming CEO on Jan. 30, 2020, he served in multiple roles, including director of research and the head of the cloud and cognitive software unit.

The credit for IBM’s landmark 2019 deal with open source technology firm Red Hat—the company’s biggest purchasein its 109-year history—goes to Krishna.

Sundar Pichai, Alphabet

Pichai had been the company’s public face since being appointed Google’s CEO in 2015. On Dec. 3, the 1993 IIT-Kharagpur graduate replaced founder Larry Page at the top, becoming Alphabet’s CEO.

With the coveted position came a host of problems: over 70 different moonshots spread across sectors were all Pichai’s responsibility now.

Niren Chaudhary, Panera Bread

On May 23, 2019, Chaudhary came to Panera from doughnut giant Krispy Kreme, where he served as COO and president. Before that, he had spent 23 years, both in India and the US, at Yum! Brands, the parent company of KFC and Taco Bell.

Revathi Advaithi, Flex

Advaithi was brought on board on Feb. 11, 2019, to lead the company that makes everything from hair dryers to Macs. The mechanical engineering graduate from India’s Birla Institute of Technology and Science Pilani (BITS) is a fierce advocate of STEM education for girls and diversity in the workplace.

Sanjay Mehrotra, Micron

Born in Kanpur, Uttar Pradesh, Mehrotra, too, attended BITS Pilani before getting his bachelors’ and master’s degrees from the University of California, Berkeley. He co-founded SanDisk in 1988 and was its president and CEO from 2011 until its acquisition in 2016 by Western Digital. He arrived at Micron on April 27, 2017, as president and CEO.

George Kurian, NetApp

The Kerala-born executive, who joined the data storage and management company in 2011, took over as CEO on June 1, 2015. Earlier, he was its executive vice-president of product operations for more than two years.

Kurian’s twin, Thomas, is the CEO of Google Cloud.

Punit Renjen, Deloitte

Renjen, who became Deloitte’s CEO on May 31, 2015, was a small-town boy from  Rohtak, Haryana, who came to the US after winning a Rotary Foundation Scholarship that allowed him to study at Willamette University’s Atkinson Graduate School of Management. He has never looked back since.

The first Asian to lead the biggest among consulting’s Big Four, his octagenarian mother still lives in his childhood home in Rohtak.

Satya Nadella, Microsoft

Nadella grew up in Delhi and Hyderabad and then moved to the US for his masters’ degree. He joined Microsoft as a young engineer in 1992 and climbed the ranks, spearheading the early versions of Microsoft Office, Xbox Live, the Azure cloud platform, and more along the way. Since taking over as CEO on Feb. 4, 2014, he’s led with empathy, working to rid Microsoft of bureaucracy, suspicion, and alleged short-sightedness. He’s introduced collaborative hackathons and scrapped an unpopular performance ranking system that forced managers to give a percentage of negative reviews.

Shantanu Narayen, Adobe Inc

Narayen grew up in a Telugu-speaking household in Hyderabad to a mother who taught American literature and a father who ran a plastics company. Like Nadella, he moved to the US for his masters’ education.

Three decades since, the chair, president, and CEO of Adobe is still an avid follower of the Indian cricket team.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கமலா ஹாரிஸ்? ~இந்தியன் ரிஷி சுனக்? ~இந்தியன் பக்கத்து வீட்டு பாய்? ~அவரு பாகிஸ்தானி சங்கி நிருபர்'

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

1....இந்த கேள்வி தேவையற்றது 

2...முன்பின். யோசணைகள் அற்றது.  

3 ....ஒரு அறிவு குறைந்தவர்கள் தான் இப்படி கேட்ப்பார்கள்

4...இது ரிசி சுனக். மற்றும் வெளிநாட்டில் வாழும் உயர் பதவியேற்றுள்ள இந்தியர்கள் பற்றியது    

5 ......மேலே இலக்கம்.   ...4...இல் சொல்லப்பட்டவர்கள். எமக்கு எந்தவித தீங்குகளும். செய்யதவார்கள். எனவே… இவர்கள் மன்னிக்கட்டவே.   ....தண்டிக்கப்படவே.....திட்டப்படவே.  ..வேண்டியதில்லை   அப்படி செய்வதால் நாங்கள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது....இலங்கை தமிழர்கள் இவர்களுக்கு நேசக்கரம் நீட்டவேண்டும்.  இவர்களின் ஆதரவுடன் தீர்வு நோக்கி நகர முடியும் 

6....இலங்கையில் கருணா போன்றோர் செய்த வேலைகளுக்கு.    முழு இலங்கை தமிழர்களையும். திட்ட முடியுமா   ?இல்லை அல்லவா   ?அதேபோல். தான்  முழு இந்தியர்களையும் திட்ட முடியாது....அதிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்.  2009 நடந்த முள்ளிவாய்க்கால் உடன் எந்தவித தொடர்புகளுமற்றவர்கள்   அவர்களை எவ்வாறு கரப்பன் பூச்சி என்று விழிக்க முடியும்   ? 

7...இலங்கையையே இந்தியாவையே  மன்னிக்கவும் தண்டனை” வழங்கவும்’ எனக்கு தகுதிகள் இல்லை...நான் நீதிபதியுமில்லை  

8......திரியின்.  தலைப்பை  பார்த்து கருத்தடப்பழகவும் .....கண்ட குப்பைகளை எல்லாம் திரிக்குள்.    கொட்டவேண்டாம்.   😁

1)

2) இதெற்கெல்லாம் room போட்டு யோசிக்க முடியுமா ? 

3) எனக்கு அறிவு குறைவு என அறிவில் ஆதவன் கூறுவது 100%

4) இவர்கள் ஒருவரும் இந்தியர்கள் அல்ல. இன்னொருவனது கடின உழைப்பிற்கும், அதன் பயனாகப் பெறும் வெற்றிக்கு இன்னொருவன் சொந்தம் கொண்டாடுவது அயோக்கியத்தனம் மட்டுமல், அது ஒருவிதமான ம்னோ வியாதி.

5) முன்னுக்குப் பின் முரணாகப் பேசாதீர்கள். இவர்களை இந்தியர்கள் என்று கூறுவதும் நீங்கள்தான், இந்தியர்களுக்கு எமது அழிவில் எதுவித தொடர்பும் இல்லை என்பதும் நீங்களேதான். 

6) இந்தியனின், சிங்களவனின் செயல்களுக்கு ஒரு இனமாக நாம்  எல்லோரும் தினம் தினம் வெந்து சாகின்றோமே, தமிழர்கள் எல்லோருமா ஆயுதம் ஏந்தினார்கள் ?   போகிறபோக்கைப் பார்த்தால், யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை எழுப்புவீர்கள் போலுள்ளது உங்களது நிலைப்பாடு  🤣

7) இவர்களை மன்னிப்பதும் தண்டனை அளிப்பதும் எம்மக்களின் முடிவில்தான் உள்ளது. 

9) இதை முதலிலேயே நீங்கள் உணர்ந்திருந்தால் இந்தத் திரி இத்தனை நீளம் வளர்ந்திருக்காத. 

இப்படிக்கு ...

மண்டையன் மளிகைக்கடை ஒரிஜினல்..

🤣

  • கருத்துக்கள உறவுகள்

2...சிந்தனையற்ற செயல்களால். பிரயோஜனமில்லை...

4....நான் இதனை நம்பவில்லை 

5...இந்திய ஆளும் வர்த்தகம் வேறு. ....பாட்டளி.  இந்தியன் வேறு இரண்டையும் பிரிந்து அறியும்’ அற்றல் வேண்டும் 

6....யாழ்ப்பாணத்தில்.    இந்திய தூதுவர் அதைத்தான் செய்கிறார்.      இந்தியனை..சிங்களவனை.....2009 ஆணடின்.  பின் என்ன செய்தீர்கள்.   ? இணையத்தில் திட்டுவது தவிர வேறு ஒன்றுமில்லை......

7....இவர்களுக்கு தண்டிக்க. ஒருபோதும் முடியாது தேவையெனின் மன்னிக்க முடியும்...மன்னிகக விடடாலும்.  அவங்கள். கவலைப்படபோவதில்லை 

9...திரி வளர்ததாதல்.  நான் உணரவில்லை என்று  பொருள் இல்லை 

2 hours ago, Kapithan said:

7) இவர்களை மன்னிப்பதும் தண்டனை அளிப்பதும் எம்மக்களின் முடிவில்தான் உள்ளது. 

உண்மையை உணர்ந்து எற்க்கும். பண்பு அற்றவரகள். இலங்கை தமிழர்களின் தீர்வு பற்றி கதைப்பது விலாலுக்கு. இறைந்த நீராகும 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரிசி சுனக் தமிழ் பெண் ஒருவரை அமைச்சரவையில் இணைந்துள்ளார்.   மேலும் சமபத் ராஜபக்ஷ என்னும் பெயருடைய சிங்கள களனி பல்கலைக்கழக போராசிரியார ரிசி சுனக் மூலம் இலங்கை தமிழர்கள்   இலங்கையில் ஆதிக்கம் செலுத்தலாமெனறு கூறியுள்ளார்   உண்மையா. ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

2...சிந்தனையற்ற செயல்களால். பிரயோஜனமில்லை...

4....நான் இதனை நம்பவில்லை 

5...இந்திய ஆளும் வர்த்தகம் வேறு. ....பாட்டளி.  இந்தியன் வேறு இரண்டையும் பிரிந்து அறியும்’ அற்றல் வேண்டும் 

6....யாழ்ப்பாணத்தில்.    இந்திய தூதுவர் அதைத்தான் செய்கிறார்.      இந்தியனை..சிங்களவனை.....2009 ஆணடின்.  பின் என்ன செய்தீர்கள்.   ? இணையத்தில் திட்டுவது தவிர வேறு ஒன்றுமில்லை......

7....இவர்களுக்கு தண்டிக்க. ஒருபோதும் முடியாது தேவையெனின் மன்னிக்க முடியும்...மன்னிகக விடடாலும்.  அவங்கள். கவலைப்படபோவதில்லை 

9...திரி வளர்ததாதல்.  நான் உணரவில்லை என்று  பொருள் இல்லை 

உண்மையை உணர்ந்து எற்க்கும். பண்பு அற்றவரகள். இலங்கை தமிழர்களின் தீர்வு பற்றி கதைப்பது விலாலுக்கு. இறைந்த நீராகும 🤣

என்னைப்பொறுத்தவரை, 

வெற்றிபெறுபவனுடன், பலம்மிக்கவனுடன் ஒட்டிக்கொள்வது சுயநலம் மிக்கவர்களின் இயல்பு. அவர்கள் எப்போதும் தப்பிப் பிழைத்தலை மட்டுமே சரியென வாதிடுவார்கள். அதற்கு பிறரை குறை கூறவும் தயங்க மாட்டார்கள்.

அவர்கள் அறவழிப் போராட்டங்களை தேவையற்றவை எனக் கூறுவர்.

ஆயுதமேந்திப் போராடத் தொடங்கியவுடன் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்புவர்.

யுத்தம் ஆரம்பித்தவுடன் கொழும்புக்கு ஓடுவர். கொழும்பிலும் குண்டுகள் வெடிக்கத் தொடங்கியவுடன் பெட்டி படுக்கைகளுடன் ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும் புலம்பெயர்வர்(அகதியாக வந்தவனைப் பார்த்து நாங்கள் ஸ்பொன்சரில வந்தனாங்கள் எண்டு தங்களை உயர்வாகக் கூறும் ஆட்கள்). 

ஆனால் 2005 போன்ற காலகட்டங்களில், இனித் தமிழீழம்தான் என்றும் கூறுவர்.

2009 களின் பின்னர் 

"இந்தியனை..சிங்களவனை.....2009 ஆணடின்.  பின் என்ன செய்தீர்கள்.   ? இணையத்தில் திட்டுவது தவிர வேறு ஒன்றுமில்லை......" 

எனவும் கூறுவர். 

ஆதலால்தான் கூறுகிறேன் "பேசாமல் போய்ப் படுங்கோ கந்தையா அண்ணர். உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை" என்று. 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

எனக்கு தெரியும் ஒரு பிரயோஜனமுமில்லை என்று இருப்பினும் மரணமடையும் வரை இதை தான் செய்வேன் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியும் ஒரு பிரயோஜனமுமில்லை என்று இருப்பினும் மரணமடையும் வரை இதை தான் செய்வேன் 

நன்றி கந்தையர். மீண்டும் இன்னொரு திரியில் கடிபடுவோம். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

நன்றி கந்தையர். மீண்டும் இன்னொரு திரியில் கடிபடுவோம். 

😀

ஒகே நனறிகள் பல கோடி    🤣😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.