Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு, தமிழ் தரப்பு முன்வரா விட்டால்.. இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது – ஹரீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு, தமிழ் தரப்பு முன்வரா விட்டால்.. இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது – ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் குறித்து அண்மையில் கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் மத்திய அரசுடன் முழுமையாக இருந்து நிர்வாகம் செய்ய முடியாது என்பதற்காகவே 1948ஆம் ஆண்டு தொடக்கம் சமஷ்டி தீர்வின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒரு தனியான நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் சமூகம் கோரி வருகின்றது. அதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அதில் நியாயமும் இருந்தது. அதனால்தான் எமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா போன்றோர் தமிழ் தலைமைகளுடன் இணைந்து அப்போராட்டங்களில் முக்கிய பங்காற்றியிருந்தனர். எங்களுடைய இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட தமிழ் சமூகத்தின் அதிகாரப் பகிர்வுக்காக பாடுபடுகின்ற ஒருவராக இருக்கின்றார்.

இந்நிலையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் ஒரு கொள்கையுடனும் அம்பாறையில் இன்னொரு கொள்கையுடனும் செயற்படக்கூடாது என்று நான் வேண்டுகோள் விடுகின்றேன்.

மத்திய அரசின் கீழ் தமது நிர்வாகத்தை முழுமையாக செய்ய முடியாது என்பதற்காகவே மாகாண நிர்வாக அதிகாரத்தை கோருகின்ற தமிழ் தரப்பினர் அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 67 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இங்கு மொழி ரீதியாக ஒரு கரையோர மாவட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றபோது, அதற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு, அவ்வாறான ஒரு மாவட்டம் உருவாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கல்முனை விவகாரத்திலும் கூட தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் இணைந்து நிர்வாகம் செய்ய முடியாது எனக்கூறுகின்ற தமிழ் தரப்பினர், அம்பாறை மாவட்ட நிர்வாகம் என்று வருகின்றபோது தமிழ் மொழி ரீதியிலான கரையோர மாவட்டத்தை மறுதலித்து சிங்கள மொழி ரீதியிலான நிர்வாகத்தினருடன் இணைந்து செயற்பட தயார் என்கின்றனர். ஒட்டு மொத்தமாக வடக்கு, கிழக்கு என்று வருகின்றபோது பெரும்பான்மையின ஆட்சியையும் சிங்கள மொழியையும் நிராகரித்து வருகின்ற நிலையில்தான் கல்முனை மற்றும் கரையோர மாவட்ட விவகாரங்களில் மாற்று நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இத்தகைய இரட்டை நிலைப்பாட்டைத்தான் தமிழ் கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனக் கோருகின்றேன். தலைவர் சம்மந்தன் ஐயா, சுமந்திரன் எம்.பி. மற்றும் தமிழ் எம்.பி.க்களிடம் இதனை மிகவும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.

இவ்விடயம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை சிந்திக்க வைக்கின்றது. இதுவொரு நியாயமற்ற போக்கு, மனச்சாட்சிக்கு விரோதமானது. தமிழருக்கான அதிகாரப்பகிர்வுத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருப்பதானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலை நீடிக்குமாயின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமிழ் சமூகத்துடன் முஸ்லிம் சமூகம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம். குறிப்பாக கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடனான தீர்வுக்கு முன்வராமல் தமிழ் தரப்பு மறுக்கின்றபோது நிச்சயமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் வேறு திசைக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற செய்தியை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அதேவேளை கல்முனை செயலக விடயத்தில் நாங்கள் எதுவும் செய்யாமல் மௌனம் காத்து வருவதாக எமது முஸ்லிம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், நான் மற்றும் மேயர் உட்பட எல்லோரும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்லா மட்டங்களிலும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அது தொடர்பிலான எல்லா விடயங்களையும் ஊடகங்களில் பறைசாற்றிக் கொண்டிருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் நாங்கள் பாரிய அழுத்தங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்த விடயத்தில் மிகவும் கரிசனையும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.

ஏனைய முஸ்லிம் எம்.பி.க்களுடனும் பேசியிருக்கின்றோம். அவர்களும் உரிய இடங்களில் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்- என்று ஹரீஸ் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1308653

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒரு பிரச்சணையும் இல்லையே.., தீர்வு காண...
 
இஸ்லாமியராக, கிளம்பினால் வாய்ப்பில்லை ராசா.... உங்களுக்கு தான் தமிழராக இணைவதுநல்லது. 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கல்முனையில் என்ன தான் பிரச்சனை. எனக்கு புரியவில்லை. 🤨

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை நீடிக்குமாயின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமிழ் சமூகத்துடன் முஸ்லிம் சமூகம் புரிந்துணர்வுடன் ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம். குறிப்பாக கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடனான தீர்வுக்கு முன்வராமல் தமிழ் தரப்பு மறுக்கின்றபோது நிச்சயமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் வேறு திசைக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற செய்தியை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

எங்கடைதான் ..பிரச்சினை..நாங்கள்தான் இதற்காக போராடினோம்...போராடிக்கொண்டிருக்கின்றோம்... ஆர் உங்களை வரச்சொன்னது...மூக்கு நுழைத்ததும் காணாமல்...நோகாமல் நுங்கு குடிக்கவும் யோசிக்கிறியள்.... பாச்சா பலிக்காது பாஸ்..

  • கருத்துக்கள உறவுகள்+

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு மாவட்ட வகையில்.

http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2012Visualization/htdocs/index.php?usecase=indicator&action=DSMap&indId=10&district=Ampara&Legend=3#

இதனைப் பார்க்கும் போது கரையோரக் கோட்டங்களில் மட்டும்தான் தமிழ்பேசுகின்ற மக்கள் வாழ்ந்துவருவதைக் காண முடிகிறது - அதில் சோனியே பெரும்பான்மை. அப்படியானால் ஏனைய (இலகுகல்லோடான) கோட்டங்களில் வாழ்ந்த தமிழருக்கு என்னானது? இதனைப் பிரிப்பதால் நாம் நிலப்பரப்புகளை இழந்துவிடுவோம். தென்மட்டக்களப்பு (மட்டக்களப்பின் தென்பகுதியே அம்பாறை. இதனோடு பதுளையின் தெகியத்த பரப்பும் இணைக்கப்படு தற்போதைய அம்பாறை உருவானது.) இரண்டாக துண்டாடப்படும். 

மட்டுமல்லாது இதுகள் தமிழரின் பண்பாட்டு தொன்மைமிக்க காணிகளைப் பிடுங்கி அதில் பள்ளிவாசல்கள், மாட்டிறைச்சிக் கடைகள் எனக் கட்டிதள்ளியமையே ஏராளம் என்பது கடந்துவந்த நாமறிந்த வரலாறுகள்.

இலங்கைச் சோனிகள் (மாவீரர்களை இதற்குள் இழுக்கவேண்டாம். அவர்கள் தம்மைத் தமிழராக எண்ணியே வீழ்ந்தனர்.) தமிழ்தேசியத்திற்கு ஒரு கடதாசி கூடத் தரவில்லை. மாறாக அம்பாறையில் சிங்களவரோடு சேர்ந்து தமிழரைக் கொன்று குவித்தமையே அவர்கள் செய்தவை.

https://www.eelamview.com/2019/06/21/amparai-muslim-para-militray/

இப்பட்டியலை NESHOR இன் இரு படுகொலை ஆவணப் புத்தகங்களையும் வாசித்தால் எம்மாம் பெரிதெனத் தெரியும்!

இவங்கள் பிரிப்பது தம்மால் மத அடிப்படையிலாக அமைக்கப்பட்ட இனத்திற்கான நன்மைக்காகவேயன்றி தமிழர் என்ற நன்மைக்காகவல்ல என்பது நான் ஊகித்தறிவது. இவங்கட பெரும்பான்மை 2/3 ஓடு அமையும் மாவட்டத்தில் தமிழரின் பண்பாட்டுச்சின்னங்கள் எதுவுமே அமையாது. அமையவும் விடாங்கள். இருப்பதையும் துடைத்தழிப்பாங்கள். 

இந்தச் சோனியோடு சேர்ந்தால் ஏற்கனவே நலிவுற்றுள்ள எமது இனம் - குறிப்பாக அப்பரப்பில் - நொந்து நூலாகிவிடும்.

இவங்களோடு சேர்வதா கூடாதா என்பதை அப்பரப்பில் வாழும் எம்மக்களே முடிவுசெய்யட்டும். ஏனெனில் வாழப்போவது அவர்களே. இவங்கட கடந்த/நிகழ்கால செயல்களை தொலைவிலிருந்து வாசித்தறிந்த எம்மைக்காட்டிலும் எட்டத்திலிருந்து நேரடியாக அனுபவித்த அவர்களே நன்கறிவர்.

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்+

அம்பாறை பிறந்த கதை

http://thulanch.blogspot.com/2018/07/blog-post_22.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்+

தென்தமிழீழத்தில் சோனிகள் தாம் தமிழ்தேசிய தமிழீழ உரிமை மற்றும் தொடர்பான பொருள்களுக்கு ஆதாரவளிக்கப்போவதில்லை என்று கூறியமை:

தன்ர தேவைக்காக சோனி எப்படி மாத்தி மாத்திக் கதைக்கிறான் என்டு பாருங்கோ.... அம்பாந்தோட்டைக் கள்ளர். தங்களுக்கு மட்டும்தான் எல்லாம். அடுத்தவனுக்கு கிடைக்கக்கூடாது என்டு நிக்கிறாங்கள்.

எந்தக்காலத்திலையும் அம்பாறையைப் பிரிக்கவிடக்கூடாது. பிரித்தால் அன்றோடு அம்பாறை எம்மைவிட்டுப் போகும். சோனியால் சிங்கள அரசியல்வாதிகளை வீழ்த்த இயலாது. ஆனால் தன்னலத்திற்காக இனத்தை கூட்டிக்கொடுக்கும் தமிழ்வியாதிகளை இலகுவாக வீழ்த்தலாம் என்பதை சோனி நன்கறிந்துள்ளான்.

நம்பிப் பிரித்தால் நாசமாய்ப்போவோம்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

எந்தக்காலத்திலையும் அம்பாறையைப் பிரிக்கவிடக்கூடாது. பிரித்தால் அன்றோடு அம்பாறை எம்மைவிட்டுப் போகும். சோனியால் சிங்கள அரசியல்வாதிகளை வீழ்த்த இயலாது. ஆனால் தன்னலத்திற்காக இனத்தை கூட்டிக்கொடுக்கும் தமிழ்வியாதிகளை இலகுவாக வீழ்த்தலாம் என்பதை சோனி நன்கறிந்துள்ளான்.

நம்பிப் பிரித்தால் நாசமாய்ப்போவோம்!!

அம்பாறையில்…. சம்பந்தன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக…
பியசேன என்ற சிங்களவனை போட்டியிட வைத்த முட்டாள் தனத்தை என்ன சொல்வது.

கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் வர பலம் இருந்தும்,
சம்பந்தன்  அதனை முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்த துரோகத்தை மறக்க முடியுமா?

இப்படி… கருணா, பிள்ளையான், டக்ளஸ், ஆனந்த சங்கரி, சுமந்திரன் என்று…
எங்களுக்கு வந்ததுகள் எல்லாம்… மற்றவனுக்கு, தமிழரை விற்றுக் கொண்டு திரியுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்+
15 minutes ago, தமிழ் சிறி said:

எமக்கென்டு வந்த எமன்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு தமக்கு ஏதாவது பெற வேண்டும் என்றால் மட்டுமே தாமும் தமிழர்கள் என்ற நினைப்பு வரும். 😷

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2022 at 17:58, தமிழ் சிறி said:

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

1 hour ago, விசுகு said:

தமக்கு ஏதாவது பெற வேண்டும் என்றால் மட்டுமே தாமும் தமிழர்கள் என்ற நினைப்பு வரும்

இல்லை, அவர் வடிவாக தெளிவாக சொல்லிவிட்டார். தாம் முஸ்ஹலீம்கள், இனப்பிரச்சனை என்பது தமிழருக்கு மட்டுமே, தமிழையும் முஸ்லீமையும் போட்டுக்குழப்புவது நாம் மட்டுமே. விட்டுக்கொடு நாம் துணை செய்கிறோம் என்பது ஒருவித அபகரிப்பே. வாங்குமட்டும் பேசுவார்கள் அதற்கு பிறகு அவர்கள் தங்களின் குணத்தை காட்டுவார்கள். நாங்கள் எங்களுக்குரியதை எங்களால் முடிந்தவரை போராடி பெறுவோம், இவர்களது பங்கும் வேண்டாம் இவர்களுக்கு பாகமும் வேண்டாம். போராடுவதும் இழப்பதும்  நாங்கள், பாகப்பிரிவினைக்கு அவர்கள். இவர்களோடு சேர்ந்தால் மூலத்து சிரங்கு, சொறியவும் முடியாது, சொறியாமல் இருக்கவும் முடியாது. உதுகளை கழட்டி விட்டு நமது வழியில் நாம் பயணித்தால் சிங்களத்துக்கும் தமிழுக்கும் வால்காட்டி பிழைப்பது கட்டுப்படும், தாங்களாகவே தேடி வருவார்கள்! உதுகளை வைச்சு பிழைப்பு நடத்தும் சிங்களமும் அடங்கும். இப்ப சாணக்கியனுக்கு விளங்கியிருக்கும் உதுகள் கப்பலில் ஏறவும் மாட்டுதுகள் ஏறுகிறவர்களை விடவும் மாட்டுதுகள்.          

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

சொல்ல வார்த்தைகள்  இல்லை
எனது  நிலைப்பாட்டை  அப்படியே சொல்கிறீர்கள்
உண்மையில்  எழுதியது  நானா  நீங்களா  என்று  சந்தேகமாக  இருக்கிறது
இதை  தலைவர் எப்பொழுதோ உணர்ந்தார்
ஆனாலும் இவர்களையும்  கட்டித்தான் எமக்கான தீர்வு?

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, satan said:

நன்றாகச் சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2022 at 05:22, island said:

உண்மையில் கல்முனையில் என்ன தான் பிரச்சனை. எனக்கு புரியவில்லை. 🤨

கல்முனையில் நடப்பது மனித உரிமை மீறல்.பாதிக்கப்படுவது அங்கு வாழும் தமிழர்கள்.அங்கு முஸ்லிம்களுக்கு ஒரு (தெற்கு) பிரதேச செயலகம் உள்ளது.தமிழர்களுக்கு ஒரு(வடக்கு)பிரதேச செயலகம் உள்ளது.முஸ்லிம்கள் தமது தேவைகளை தெற்கு பிரதேச செயலகத்துக்குச்சென்று விரைந்து பூர்த்தி செய்து கொள்ளலாம்.ஆனால் தமிழர்கள் தமது தேவைகளை வடக்கு பிரதேச செயலகத்தினூடாக பூர்த்தி செய்ய முடிவதில்லை,காரணம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் இல்லை.இதனால் ஆளணி,ஊழியர்கள்,கட்டிடங்கள்,பிரதேச செயலாளர் ஆகியனஇருந்தும் அவர்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்தையே நாட வேண்டி உள்ளது.இந்த கணக்காளர் நியமிப்பு விடயத்தில் இவர் கரீஷ் எம்.பி கடும் அழுத்தங்களைக் கொடுத்து தடுத்து வருகிறார்.அதனை மீறும் அழவு வலு எமது தமிழர் தரப்புகளுக்கு இல்லாமல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

சொல்ல வார்த்தைகள்  இல்லை
எனது  நிலைப்பாட்டை  அப்படியே சொல்கிறீர்கள்
உண்மையில்  எழுதியது  நானா  நீங்களா  என்று  சந்தேகமாக  இருக்கிறது
இதை  தலைவர் எப்பொழுதோ உணர்ந்தார்
ஆனாலும் இவர்களையும்  கட்டித்தான் எமக்கான தீர்வு?

இருபக்கத்தாலும் சுரண்டப்படும் நாங்கள் பட்ட, படுகிற  அனுபவங்களவை, யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. மயிலே இறகு போடு என்று கெஞ்சினால் அது தானாக வந்து போடாது, அதற்கு வேறு வழி தேட வேண்டும், தானாக வரவைக்கவேண்டும். சம்பந்தன் ஐயாபோல் உள்ளதையும் கொண்டு போய் தட்டில் வைத்துக்கொடுத்தால் இன்னும் விட்டுக்கொடுங்கள் என்றுதான் கேட்பார்கள். நஸீர் சொல்லவில்லை; என்ன ஒரு இரண்டு வருடந்தானே என்று சப்புகொட்டவில்லை? ஏன் அதை பதவி ஏற்க  முதலிலே சொல்லி  மறுக்கவில்லை. எல்லாம் காரியம் பெறும்வரை வயிற்றுப்பிள்ளை நழுவி விழுவதுபோல் கதைவிடுவார்கள், அப்புறம் சண்டித்தனம். என்று இருவரில் ஒருவரை விட்டுத்தள்ளிவிட்டு நாம் நம் பாதையில் பயணிக்க வெளிக்கிடுகிறோமோ அன்று பிறக்கும் வழி. நம்மை வைத்து இரண்டு இனம் பிழைப்பு நடத்துது, நாம் உள்ளதையும் இழந்து நிற்கிறோம், இன்னும் விட்டுத்தாருங்கள் என்று அவனவன் அதட்டுகிறான். கடல் வத்தும் கடல் வத்தும் (வற்றும்) என்று காத்திருந்து உடல் வத்தி  (வற்றி) செத்ததாம் நரி ஒன்று! என்பதுபோற்த்தான் நம் கதையும் முடியும் இவர்கள் இல்லாமற் தீர்வு இல்லை என்னும் வாதம். அவர்கள் தீர்வுக்காய் அவர்களை தனித்து உழைக்க விட வேண்டும், அப்போ தெரியும் அதன் வலி!
         
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

இல்லை, அவர் வடிவாக தெளிவாக சொல்லிவிட்டார். தாம் முஸ்ஹலீம்கள், இனப்பிரச்சனை என்பது தமிழருக்கு மட்டுமே, தமிழையும் முஸ்லீமையும் போட்டுக்குழப்புவது நாம் மட்டுமே. விட்டுக்கொடு நாம் துணை செய்கிறோம் என்பது ஒருவித அபகரிப்பே. வாங்குமட்டும் பேசுவார்கள் அதற்கு பிறகு அவர்கள் தங்களின் குணத்தை காட்டுவார்கள். நாங்கள் எங்களுக்குரியதை எங்களால் முடிந்தவரை போராடி பெறுவோம், இவர்களது பங்கும் வேண்டாம் இவர்களுக்கு பாகமும் வேண்டாம். போராடுவதும் இழப்பதும்  நாங்கள், பாகப்பிரிவினைக்கு அவர்கள். இவர்களோடு சேர்ந்தால் மூலத்து சிரங்கு, சொறியவும் முடியாது, சொறியாமல் இருக்கவும் முடியாது. உதுகளை கழட்டி விட்டு நமது வழியில் நாம் பயணித்தால் சிங்களத்துக்கும் தமிழுக்கும் வால்காட்டி பிழைப்பது கட்டுப்படும், தாங்களாகவே தேடி வருவார்கள்! உதுகளை வைச்சு பிழைப்பு நடத்தும் சிங்களமும் அடங்கும். இப்ப சாணக்கியனுக்கு விளங்கியிருக்கும் உதுகள் கப்பலில் ஏறவும் மாட்டுதுகள் ஏறுகிறவர்களை விடவும் மாட்டுதுகள்.          

4 hours ago, satan said:

இருபக்கத்தாலும் சுரண்டப்படும் நாங்கள் பட்ட, படுகிற  அனுபவங்களவை, யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. மயிலே இறகு போடு என்று கெஞ்சினால் அது தானாக வந்து போடாது, அதற்கு வேறு வழி தேட வேண்டும், தானாக வரவைக்கவேண்டும். சம்பந்தன் ஐயாபோல் உள்ளதையும் கொண்டு போய் தட்டில் வைத்துக்கொடுத்தால் இன்னும் விட்டுக்கொடுங்கள் என்றுதான் கேட்பார்கள். நஸீர் சொல்லவில்லை; என்ன ஒரு இரண்டு வருடந்தானே என்று சப்புகொட்டவில்லை? ஏன் அதை பதவி ஏற்க  முதலிலே சொல்லி  மறுக்கவில்லை. எல்லாம் காரியம் பெறும்வரை வயிற்றுப்பிள்ளை நழுவி விழுவதுபோல் கதைவிடுவார்கள், அப்புறம் சண்டித்தனம். என்று இருவரில் ஒருவரை விட்டுத்தள்ளிவிட்டு நாம் நம் பாதையில் பயணிக்க வெளிக்கிடுகிறோமோ அன்று பிறக்கும் வழி. நம்மை வைத்து இரண்டு இனம் பிழைப்பு நடத்துது, நாம் உள்ளதையும் இழந்து நிற்கிறோம், இன்னும் விட்டுத்தாருங்கள் என்று அவனவன் அதட்டுகிறான். கடல் வத்தும் கடல் வத்தும் (வற்றும்) என்று காத்திருந்து உடல் வத்தி  (வற்றி) செத்ததாம் நரி ஒன்று! என்பதுபோற்த்தான் நம் கதையும் முடியும் இவர்கள் இல்லாமற் தீர்வு இல்லை என்னும் வாதம். அவர்கள் தீர்வுக்காய் அவர்களை தனித்து உழைக்க விட வேண்டும், அப்போ தெரியும் அதன் வலி!
         
மிகவும் அருமையான கருத்து. 👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.