Jump to content

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா!

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா!

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரிமாற்றத்தை பிரித்தானியா விரும்பவில்லை என்றாலும், இது ஒரு அறியப்பட்ட ஆபத்து மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் இது ஒரு பெரிய கவலையாக இருக்காது என பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ கூட்டாளிகள் உக்ரைனியர்களால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ஆயுதங்களிலிருந்து ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ திறன்களைப் பற்றி அறிய ஒரு அற்புதமான வாய்ப்பை அனுபவித்து வருகின்றனர் என்று பென் வாலஸ் தெரிவித்தார்.

இதன்போது, பென் வாலஸ் மேலும் கூறுகையில், ‘நிச்சயமாக, இந்த விஷயங்கள் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அடிப்படையில், உக்ரைனுக்கு உதவுவது முக்கியம் என்று நாங்கள் முடிவு செய்தபோது நாங்கள் எடுத்த ஆபத்து இதுதான்.

ரஷ்யா அதன் ஏ-கிரேட் திறன்களில் கணிசமான எண்ணிக்கையை இழந்துவிட்டது. அவை நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது நேட்டோ நாடுகளுக்கு ரஷ்ய உபகரணங்களில் உள்ள தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாகும், மேலும் இது எதிர்காலத்தில் எங்களுக்கு மிகவும் மூலோபாய நன்மையைத் தரும்’ என கூறினார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 140 மில்லியன் யூரோக்களுடன் பிரித்தானியா மற்றும் அமெரிக்க டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. ஜாவெலின் மற்றும் ஸ்டிங்கர் வெடிமருந்துகள் உக்ரைனிய இராணுவத்திற்காக வடிவமைக்கப்பட்டன, ஆனால் அவை ரஷ்ய துருப்புகளிடம் சிக்கின.

https://athavannews.com/2022/1310016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டைகளில் பின்வாங்கும் ரஷ்யப் படையினர் மேற்கினால் வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றவில்லை!

வழமைபோன்று சில ஆயுதங்களை களவெடுத்து விற்கும் வேலைகள் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 3 என்லோ ராங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஒரு அமெரிக்க ஜவலின் ஏவுகணையையும் ஒரு ஸ்ரிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணையையும் நிறையப் பணத்தையும் கொடுத்து ரஷ்யா ட்ரோன்களை ஈரானிடமிருந்து வாங்கியதாம்

A Russian military aircraft secretly transported the cash and three models of munition - a British NLAW anti-tank missile, a US Javelin anti-tank missile and a Stinger anti-aircraft missile - to an airport in Tehran in August, the source told Sky News.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ஆக நீங்கள் பிரித்தானயா அவிக்கிறதை நம்புறீங்க. 

14 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யா அதன் ஏ-கிரேட் திறன்களில் கணிசமான எண்ணிக்கையை இழந்துவிட்டது. அவை நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் பிரித்தானியா முன்னர் சொன்னதற்கு இப்ப தானே மாற்றான கருத்துச் சொல்லுது. முன்னர் சொன்னார்கள் ரஷ்சிய ஆயுதங்களின் தரம் சோவியத் தரம் என்று. இப்ப சொல்லினம் ஏ கிரேட் ஆயுதங்கள் என்று. அதில் இருந்து பல தகவல்களை படிக்கினமாம். 

ரஷ்சியா சொல்லிட்டு தான் இந்த யுத்தத்தில் இன்னும் உருப்படியான ஆயுதங்களைப் பாவிக்கவே இல்லை. சில வகை நவீன ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டதை தவிர. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா, உக்ரைன், அமெரிக்கா விளையாடும் இந்த பரமபத ஆட்டத்துக்கு சாமானியன் படி அளப்பதுதான் பரிதாபமானது. ஊரெல்லாம் ஒரு காலத்தில் கொள்ளையடிச்சுக் கொண்டுவந்து கொட்டின பணத்தில இங்கிலாந்து கொடுப்பது வேறு. ஆனால் இரண்டாம் நிலைப் பொருளாதாரத்தை வைத்திருக்கும் ஐரோப்பிய நாடுகளும் உலகின் வளர்முகநாடுகளும் செய்வதறியாது முழிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பத்தாக்குறைக்கு சீனன் தைவானுக்கு அடிக்க ராகுகாலம் பார்க்கிறான் கடைசியில பழைய இலத்திரனியல் கருவிகளுக்குத்தான் மவுசு வரப்போகுது காரணம் உலகின் முதன்மை ஐ சி சேர்கியூட்டுக்களை உற்பத்தி செய்யும் நாடு தாய்வானாகும் 

உங்கட ரீ வி பெட்டியிலிருந்து ஐ போன் வரைக்கும் பார்த்துப் பத்திரமப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

சண்டைகளில் பின்வாங்கும் ரஷ்யப் படையினர் மேற்கினால் வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றவில்லை!

வழமைபோன்று சில ஆயுதங்களை களவெடுத்து விற்கும் வேலைகள் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 3 என்லோ ராங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஒரு அமெரிக்க ஜவலின் ஏவுகணையையும் ஒரு ஸ்ரிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணையையும் நிறையப் பணத்தையும் கொடுத்து ரஷ்யா ட்ரோன்களை ஈரானிடமிருந்து வாங்கியதாம்

A Russian military aircraft secretly transported the cash and three models of munition - a British NLAW anti-tank missile, a US Javelin anti-tank missile and a Stinger anti-aircraft missile - to an airport in Tehran in August, the source told Sky News.

உலகம் தட்டையானது என்று நம்பும் பலர் தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா!

உக்ரேனிட்ட ரஷ்யா ஆயுதங்களை கைப்பற்ற தேவையில்லை....உக்ரேன்காரர் ஆரும் காசுக்கு ஆயுதங்களை கேட்டால் விற்கக்கூடியவர்கள்.லஞ்சமும் ஊழலும் நிறைந்த நாடு உக்ரேன்.😂

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.