Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு சாவுவருகின்றது என்று நீங்கள் நினைத்த கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை?

24 members have voted

  1. 1. சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் நீங்கள் உண்மையில் சாகப் போவதாய் உணர்ந்த அந்த இறுதி அனுபவம் ஏதாவது உங்கள் வாழ்வில் ஏற்பட்டதா?

    • ஆம்!!
      12
    • இல்லை!!
      12

Please sign in or register to vote in this poll.

Featured Replies

என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. :D இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே?

சரி இனி விசயத்துக்கு வருவம்..

உங்களில் பலர் சாவின் விளிம்புக்கு போய் வந்து இருக்கலாம். அல்லது அவ்வாறு பாரதூரமான நிலமைக்கு போகாவிட்டாலும், நீங்கள் 'சாகப்போவதாய்' மனதில் நினைத்து இருக்கலாம். இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்று நீங்கள் உணர்கின்ற அந்தக் கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை? அவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இந்தக் கருத்தாடல்..

நான் வாழ்க்கையில் இரண்டு முறை இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்பதை உணர்ந்து சாவை எதிர்பார்த்துள்ளேன். ஆனால், சாகவில்லை. என்னை உடனடியாக சாகவிட கடவுளுக்கு விருப்பம் இல்லை போல இருக்கின்றது. :P

முதல் அனுபவம் - எனக்கு 12 வயது சொச்சம் இருக்கும்போது கிணற்றினுள் விழுந்தேன். இரண்டாவது அனுபவம் அண்மையில் ஒரு சத்திரசிகிச்சை செய்து சில கிழமைகளின் பின் திடீரென்று சுயநினைவு இல்லாமல் போனது.

கிணற்றில் விழுந்த அனுபவம்:

எங்கள் வீட்டிற்கு சுமார் 75 மீற்றர் தொலைவில் எங்கள் கோயில் கிணறு உள்ளது. நாங்கள் தான் கோயிலை பராமரிப்பது, கழுவுவது, திருவிழாக் காலங்களில் ஐயருக்கு பல உதவிகள் செய்வது... இப்படி நிறைய செய்வோம். சுருக்கமாக கோயில் ஐயரின் வலது கை என்று அல்லது பொடிகார்ட் என்று எம்மை சொல்லலாம்.

பெரும்பாலும் கோயிலடியில் இருந்து ஏதாவது விளையாடிக்கொண்டு இருப்போம். இப்படி விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்று கிணற்றில் மீன் பிடித்தல். அந்தக்காலத்தில் எமக்கு மீன்களை தேடிப்பிடித்து வளர்க்கும் வியாதி இருந்தது. கிணற்றினுள் இருந்தமீன்கள் அளவில் சிறிதளவு பெரிதாக இருந்தமையால் அவற்றை பிடித்து வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டோம். ஏனென்றால், எமது வீட்டு மீன்தொட்டியில் அப்போது குறுனி - சிறிய சைஸ் மீன்களே இருந்தன.

இதற்காக, ஒருநாள் கிணற்றில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது.. நான் கிணற்று கட்டில் எழும்பி நின்று சட்டைக்கு குத்தும் பின்னை நெளித்து வளைத்து செய்யப்பட்ட தூண்டிலை (homemade) நீரினுள் விட்டபின் தடியை தூக்கிவைத்துக் கொண்டு ஏதாவது மீன் அகப்படுகின்றதா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று மீன் ஒன்று தடியை இழுக்க (சிறிது பெரிய மீன் என்று நினைக்கின்றேன்) நான் தடியை எத்தி தூக்க... அந்த விபரீதம் நடந்தது..

1. தூண்டில் தடி ஓர் உக்கிய பூவரசம் அல்லது கிளுவை கதியாளினால் செய்து இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். இதனால் நான் தடியை எத்தும் போது தடி முறிந்துவிட்டது.. :D

2. மற்றது நாங்கள் மீன்பிடித்த கிணறு பழைய கிணறு. அப்போது நான் கால் வைத்து இருந்த சுண்ணாம்பினால் செய்யப்பட்ட சுற்றுக்கட்டின் சிறுபகுதி உடைந்தும் விட்டது.

இதனால் 'அம்மா' என்று கத்தியபடி கிணற்றினுள் விழுந்துவிட்டேன். கிணத்துக்க விழுந்தால் பிறகென்ன.. செத்தமாதிரித்தானே?

எனது அம்மாவின் ஒரு தங்கச்சி பதினாறு வயது அளவில் தற்செயலாக கிணற்றினுள் விழுந்து செத்து இருந்தா. இதைப்பற்றி வீட்டில் அடிக்கடி சொல்லக்கேட்டு இருக்கின்றேன். அவ கிணற்றடிக்கு போனது, பின் தவறி விழுந்தது, பின் அவவை காணவில்லை என்று வீட்டில் எல்லாரும் தேடியது, பின் ஒருவன் கிணற்றினுள் இருந்து நீர்க் குமிழிகள் வருவதைக் கண்டு இவா கிணற்றினுள் விழுந்து இருக்கலாம் என்று சொன்னது, பின் ஒரு சுழியோடி இறந்த உடம்பை மீட்டது, பின் அம்மா தலையில் அடித்து அழுதது, செத்தவீடு நடந்தது.. இப்படி எனக்கு இதுபற்றி ஒரு படமாக வீட்டில் சொல்லப்பட்டு இருந்தது.

இப்போது நானும் கிணற்றினுள் விழுந்துவிட்டேன். நான் விழுந்ததும் புளுக், புளுக் என்று நீர்க்குமிழிகள் எனது வாயினுள் அல்லது மூக்கினுள் வருவதை அல்லது போவதை அவதானித்தேன். கண்ணை திறந்து இருந்தேன். ஆனால் எல்லாம் தெளிவில்லாமல் நீர்மயமாக இருந்தது. நான் சாகப்போகின்றேன் என்பதை அப்போது உணர்ந்துகொண்டேன். பள்ளியில் யம மகாரசன் ஒரு எருமை மாட்டுடன் வந்து கயிறு ஒன்றை வீசி எமது உயிரைக் குடிப்பான் என்று சொல்லித்தர கேள்விப்பட்டு இருந்தேன். எனவே, அந்தக் கணத்தில் எருமையுடன், யமன் வருகின்றானா என எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால்..

யமனும் வரவில்லை... எருமை மாட்டையும் காணவில்லை. :)

கிணற்றில் உள்ள நீரின் ஆழம் ஏறக்குறைய எனது மூக்கின் மட்டதிற்கு மேல் சிறிதளவு உயரமாக இருந்தது. சில செக்கன்கள் நீரினுள் திக்குமுக்காடி மிகவும் துன்புற்றேன்.. தண்ணீரினுள் தத்தளித்து அலைந்தேன் என்று சொல்ல வேண்டும். பிறகு எனது நல்ல காலத்திற்கு நான் அங்கும் இங்கும் ஓடி அலைந்தபோது நீர் ஆழம் குறைந்த பகுதியில் காலை வைத்தபோது என்னால் நீருக்கு வெளியில் பார்க்கக்கூடியதாக இருந்தது.

எனது அண்ணாவும், என்னுடன் விளையாடும் நண்பன் ஒருவனும் கூட இருந்தமையால் நான் கிணற்றில் விழுந்தபோது எனக்கு உதவி கிடைத்தது. அவர்கள் நான் கிணற்றினுல் விழுந்ததும் ஓடிப்போய் அருகில் இருந்த நீளமான ஒரு பூவரசம் தடியை எடுத்துவந்து கிணற்றினுள் விட்டு நான் தடியைப் பிடித்து உயிர் தப்பலாம் என்ற நப்பாசையில் கிணற்றுக்கு மேலே இருந்து பிடித்து 'தடியப் பிடி! தடியப் பிடி' எண்டு கத்திக்கொண்டு இருந்தார்கள். :)

பின், நான் ஒருவாறாக கிணற்றினுள் நடந்து சென்று, தொட்டியில் தண்ணீர் இறைப்பதற்கு பயன்படுத்தும் எஸ்லோன் பைப்பை எட்டிப்பிடித்து அதில் ஏறி நின்றேன். அண்ணாவும், நண்பனும் ஓடிப்போய் கோயில் ஐயரை தூக்கத்தால் எழுப்பி கூட்டி வந்து மூவருமாக சேர்ந்து தண்ணீர் அள்ளும் வாளியை கிணற்றினுள் விட்டு பின் நான் வாளியை பிடித்து இருக்க என்னை மேலே சுமார் பதினைந்து நிமிடங்களின் பின் தூக்கி எடுத்தார்கள். :)

எனது நல்ல காலத்திற்கு அப்போது கிணறு மாரிக் கிணறாக இருக்கவில்லை. இதேபோல் நான் கிணற்றில் உள்ள ஆழமான பகுதியான பட்டையக் கிடங்கினுள் காலை வைக்கவில்லை. இல்லாவிட்டால் அன்றுடன் எனது சரித்திரம் முடிந்து இருக்கும். :)

கிணத்துக்கால வெளியால வந்தாச்சு! ஆனால், நான் போட்டிருந்த உடுப்பு எல்லாம் ஈரம். வீட்டில் தெரிந்தால் அடிவிழும். என்ன செய்வது என்று யோசித்தோம். முதலில் இந்த விசயம் பற்றி வெளியில் ஒருவருக்கும் சொல்லகூடாது என்று கோயில் ஐயரை வற்புறுத்தி வாக்குறுதி வாங்கிக்கொண்டோம். கோயிலில் எமது உதவிகள் கிடைக்காவிட்டால் ஐயர் பாடு திண்டாட்டம் தானே? என்றபடியால் ஐயர் எமது கோரிக்கைக்கு உடன்பட்டார்.

முதலில், நான் எனது அண்ணாவிடம் வீட்டுக்கு போய் எனக்கு நல்ல உடுப்பு எடுத்துக்கொண்டு வரும்படியும், இந்த ஈர உடுப்பை பிறகு காய்ந்ததும் நைசாக வீட்டுக்கு கொண்டுபோகலாம் என்றும் கூறினேன். ஆனால், அண்ணாவோ, வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், எனது அப்பா வீட்டு வெளிவிறாந்தையில் இருந்து பேப்பர் வாசித்துக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தான் வீடு போய் உடுப்புடன் திரும்பி வருவது சாத்தியம் இல்லை என்றும் சொன்னார். இதனால், திட்டத்தை மாற்றினோம். அதாவது நான் கோயிலினுள் உள்ள மற்றைய கிணற்றினுள் குளித்துவிட்டு வருவதாக பொய் சொல்லலாம் என்று தீர்மானித்தோம்.

நான் ஈர உடுப்புடன் வீட்டினுள் சென்றேன். முதலில் அப்பா, பின், அம்மா, பின் அக்காமார் என்று ஒவ்வொருவராக 'என்ன உடுப்பு எல்லாம் ஈரமா இருக்கு ?' என்று விசாரணையை தொடங்கினார்கள். நான் ஏற்கனவே திட்டமிட்ட பொய்யை சொல்லி சமாளித்துவிட்டேன்.

நான் இந்த கிணற்றினுள் விழுந்த விடயத்தை ஒளித்துவைத்து பல வருடங்களின் பின் அண்மையில் தான் எனது பெற்றோருக்கும், எனது அக்காமாருக்கும் சொன்னேன். அவர்கள் இதை கேட்டுவிட்டு தலையில் கை வைத்தார்கள். :P எனது பழைய நண்பனை திட்டித் தீர்த்தார்கள். அவனால்தான் நான் குட்டிச்சுவராகப் போனதாக சொல்லி கோபித்தார்கள்.

சத்திர சிகிச்சை அனுபவம்:

நான் சத்திர சிகிச்சை ஒன்றிற்கு ஆளான சம்பவம் பற்றியும் அதன் பின் ஏற்பட்ட சுயநினைவு போன சம்பவம் பற்றியும் எனது குளியலைறை அனுபவங்களில் கூறியுள்ளேன். அதன் பகுதி..

நான் அண்மையில் ஒரு பெரிய சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியிருந்தது. 10 மணித்தியால சத்திரசிகிச்சை. கடுமையான வேதனைகள் - Pain.. இதை குறைக்க நாலைந்து விதமான குளிகைகள் தந்தார்கள். டொபி மாதிரி ஒவ்வொரு கலருகளில்.. அதைவிட நிறைய பெட்டிகளில் அது இது என்று காயங்களை துப்பரவு செய்யும் மருந்துகள்.. துணிகள், துவாய்கள்...

ஆனால், எனக்கு பிரச்சனை என்னவென்றால் ரெண்டு நாளைக்கு என்னால் குளிக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடம்பு சரியான அரியண்டமாக இருக்கும். இதனால் சத்திரசிகிச்சை முடிந்து ஏழு நாட்களில் வீட்டில சனம் கத்தக் கத்த சொல்வழி கேளாமல் தலையில் ஒரு முழுக்கு போட்டேன்.

தண்ணியுக்க நின்று சந்தோசமா கூத்து அடித்து கடைசியில உடம்பை துடைக்க வெளிக்கிட்டபோதுதான்... அடக்கடவுளே... மரணத்தின் விளிம்புக்கு போய்வந்தேன். தலையினுள் கிர் குர் என்று கண்டபடி சத்தங்கள் கேட்க தொடங்கியது. தலையினுள் நடைபெறுகின்ற Blood Circulation ஐ என்னால் மிக நன்றாக ஒவ்வொரு இரத்தக் குழாயையும் என்று சொல்லலாம், உணரக்கூடியதாக இருந்தது. சிறிது நேரத்தில் அறிவு போய்விட்டது. பிறகு சில நிமிடங்களில் திரும்பவும் வந்தது. நான் எனக்குள் ஏதோ பிரச்சனை ஏற்படப்போவதை அறிந்ததும் உடனடியாக குளியலறை லொக்கை எட்டி திறந்துவிட்டு, வீட்டில் உள்ளவர்களிற்கும் ஒரு குரல் கொடுத்து இருந்தேன். இதனால் விபரீதம் தவிர்க்கப்படக்கூடியதாக இருந்தது.

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=322919

எனவே, இங்கு உடனடியாக விசயத்துக்கு வருகின்றேன். அதாவது சுயநினைவு போகப்போகும் சந்தர்ப்பத்தில் நான் பலவிடயங்களை சில செக்கன்களில் யோசித்தேன்..

அவை..

1. எனது உடம்பு எவ்வாறு செயல் இழக்கப்போகின்றது - நான் எப்படி இறக்கப் போகின்றேன் என்பதை மிகவும் நுணுக்கமாக அவதானித்தேன்.

2. எனது அம்மா, அப்பா, அக்காமார், அண்ணா, நண்பர்கள், உறவினர்களை நினைத்தேன். சிறிது அழுகையும் வந்தது. தனியாகப் பிரிந்து செல்கின்றேன் என்று!

3. எனது செத்தவீடு பற்றி நினைத்தேன்.

4. யாழ் பற்றியும் நினைத்தேன். நான் அப்போது யாழில் இணைந்து சில நாட்களே ஆகி இருந்தன. நான் வராவிட்டால் என்னை யாராவது தேடி, நான் இறந்த விடயத்தை அறிந்து இருப்பார்களா என்று யோசித்தேன். :)

5. ஒரு தனிமையை, ஒரு மிகப்பெரிய வெறுமையை - வெற்றிடத்தை உணர்ந்தேன்! சில கணங்கள் எலலாம் வெற்றுத்திரை - Blank ஆக இருந்தது.

ஒரு ஞானி சொல்கின்றார் சாவை எம்மால் உணர முடியாது என்று. அதாவது எமது உயிர் பிரியும் முன்னரே இறுதி ஹார்ட் பீட் அடிக்கும் முன்னரே - இறுதி மூச்சு போகும் முன்னரே - எமது நினைவுகள் போய் விடும் என்று!! மேலும், மூளையில் உள்ள கலங்கள் - செல்ஸ் எல்லாம் இறக்க சில மணித்தியாலங்கள் ஆகும். எனவே, நாங்கள் கோமா ஸ்டேஜுக்கு போனபின் - சுயநினைவை இழந்தபின் எமது இறுதி மூச்சை - இறுதி ஹார்ட் பீட்டை எம்மால் உணரக்கூடியதாக இருக்குமா என்பது சந்தேகமே!

ஹார்ட் -இதயம் - அடிக்காது - துடிக்காது இருந்தால் ஒருவர் இறந்துவிட்டதாக கூறுவார்கள். மூச்சு நின்றுவிட்டாலும் ஒருவர் இறந்துவிட்டதாக கூறுவார்கள். ஆனால், செயற்கையான முறையில், இதயத்தையும், சுவாசத்தையும் கொண்டு செல்லமுடியும். ஆனால், மூளை இறந்தால் - மூளையில் உள்ள கலங்கள் இறந்தால் - எல்லாமே நின்றுவிடும்! செயல் இழந்துவிடும்!

உண்மையில் எனக்கு அந்த சாவு - கடைசி முடிவு வரும்போது - அப்போது என்ன நினைக்கப்போகின்றேன் என்று எனக்கு இப்போது தெரியவில்லை!! நாம் சாகும்போது எதைப்பற்றி நினைக்கவேண்டும் என்று இப்பொழுதே திட்டமிடுவது நல்ல ஐடியாவாக இருக்குமோ?

இனி உங்கள் அனுபவங்களை - இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ. :P

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இங்க ஒரே சாவு பற்றியே பேசசுறீங்க. ஆளை விடுங்க.

  • தொடங்கியவர்

முன் கூட்டி சிந்தித்து செயற்படுவது நல்லது தானே!

எப்பவாவது நாங்கள் சாகத்தானே போறம்?

கடைசி நேரத்தில இருந்து அந்தரப்படாமல் இப்பவே யோசிச்சு திட்டமிட்டு செய்தால் நல்லம் எண்டு நினைக்கிறன். :P

உலகத்தில ஒவ்வொரு செக்கனும் சனம் மண்டையப் போட்டுக்கொண்டு இருக்கிதுகள். ஒவ்வொரு நாளும் உலகத்தில லட்சக்கணக்கான செத்தவீடுகள்!! ஒவ்வொரு நாளும் சனம் லட்சக்கணக்கில சாகிதுகள்!!

எங்களுக்கு எப்ப சங்கு ஊதப் போறாங்களோ! :D

அதான் இப்படி ஒரு இழவு யோசனை.. :):D:)

ஜெனரல் அவர்களே...............

உங்கள் சம்பவங்கள் அனைத்தையும் வாசித்தேன்..............சாவின் விளிம்பில் சென்று வந்து இருக்கிறீங்க பாராட்டுகள்..........எனக்கு இப்படி ஒரு அநுபவமும் இல்லை ஆனா ஒரு அநுபவம் இருக்கு ஆனா சிரிக்க கூடாது குருவே.........அதாவது தண்டவாளம் இருக்கு அதில நானும் நண்பணும் சைக்கிள் ஓடினாங்க...........டிரேயின் சத்தம் கேட்கும் போது தண்டவாளத்தை விட்டு போட்டு ஓடி வந்திடுவோம் நான் நினைக்கிறேன் அப்ப நான் 10 வகுப்பு படிபேன் என்று :P ...........இப்படி சைக்கிள் ஓடி கொண்டிருக்கும் போது நான் விழுந்து போனேன்.........நண்பன் என்னை தூக்க வந்தவன் அந்த நேரம் பார்த்து புகைவண்டி வேற வந்துவிட்டது.........என்னால் உடனே எழும்பவில்லை அவன் வாடா...வாடா என்று கத்தை எனக்கு அந்த நேரம் உடனடியா ஒன்றும் செய்ய முடியாம போச்சு...........உடனே அவனி நீ போ நான் வாரேன் என்று சொல்ல ஆனா அவன் என்னை துக்கிறதை நின்றான்.............புகையிரதம் மிகவும் அண்மித்துவிட்டது அந்த நேரம் எனக்கு ஒன்றுமே யோசிக்கவில்லை கண்ணை மூடினான் அது மட்டும் தான் எனக்கு தெரியும் ஆனா புகையிரதம் கொஞ்ச தூரதிற்கு முன்ன நின்றுவிட்டது........நண்பண் என்னை அழைக்க நான் திடுகிட்டு எழும்பினே அப்ப தான் இருகிறேன் என்றேன் தெரிந்தது........அவனும் தண்டவாளத்தில தான் நின்றான்..........எனக்கு அந்த நேரத்தில மிகவும் பிடித்த விசயம் என் நண்பனை தான் அவன் நினைத்து இருந்தா பாய்ந்து சென்று இருக்கலாம் ஆனா அவ்வாறு செய்யவில்லை :D ..........இன்று கூட அவன் எனக்கு மிகவும் நல்ல நண்பனாக தான் இருகிறான்..........சரி கதைக்கு வாரேன் பிறகு டிரேயினில இருந்த ஆட்களிட்ட வாங்கின ஏச்சு இருக்கே அதை ஏன் கேட்பான். :D ........இந்த விசயம் வீட்டு ஆட்களுக்கு இதுவரை தெரியாது எனக்கும் அவனுக்கு மட்டும் தான் தெரியும்............இப்ப இதில் எழுதுவதால் தான் வீட்டை தெரியவரும்..............இப்படி ஒரு வாய்பை தந்த ஜெனரலுக்கு நன்றிகள்...........ஆனா நாளைக்கு எல்லாம் சேர்த்து ஏச்சு விழுதோ தெரியாது...... :)

அடுத்த சந்தர்பம் கடலில் குளிக்கும் போது...வீட்டை தெரியாம நண்பர்களுடன் குளிக்க சென்றனான் :P ..அப்படியே குளித்து கொண்டு நல்ல தூரம் சென்றுவிட்டேன் நானும் இன்னொருவனும் மற்றவர்கள் ஒரளவு தூரத்தில் தான் நின்றவை.............இருந்தா போல வந்த பெரிய அலையை என்னால் சமாளிக்க ஏலாம் போயிட்டு..........அது என்னை இழுக்க தொடங்கிவிட்டது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை............இழுத்து கொண்டு செல்வது எனக்கு தெரிகிறது..........அம்மா என்று கத்தினேன் மற்ற நண்பனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..........நான் கத்தினது இன்றைக்கு காதில நிற்கிறது.............நல்ல தூரம் சென்ற பின் அடுத்து வந்த அலை என்னை மறுபடி கொண்டு வரும் போது நண்பர்கள் இழுத்து என்னை எடுத்து விட்டார்களாம் என்று சொல்லுவார்கள் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது பிகோஸ் நான் மயங்கி போனேன் அந்த நேரத்தில்...........பிறக் உவங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அப்பாவிற்கு வேற போன் பண்ணி இருகிறாங்க. :angry: ..........நாமளே வீட்டை சொல்லாம போனனாங்க பிறகு என்ன ஆஸ்பத்திரியால வந்த பிறகு நல்ல ஏச்சு விழுந்துச்சு அப்பாவிட்ட............ஒரு மாதிரி அம்மா காப்பாற்றிவிட்டா சந்தோசம் :P ................இது இரண்டும் தாஅன் உடனடியாக வருகிறது..............ஆனால் இது எல்லாம் பெரிய விசயங்கள் இல்லை என்று நினைகிறேன் ஜெனரல் அவர்களே B) ............

என்னப்பா இங்கை எல்லாம் சாவு பற்றியே பேசிட்டு இருக்கிறீங்க.

தண்ணியுக்க நின்று சந்தோசமா கூத்து அடித்து கடைசியில உடம்பை துடைக்க வெளிக்கிட்டபோதுதான்... அடக்கடவுளே... மரணத்தின் விளிம்புக்கு போய்வந்தேன். தலையினுள் கிர் குர் என்று கண்டபடி சத்தங்கள் கேட்க தொடங்கியது. தலையினுள் நடைபெறுகின்ற Blood Circulation ஐ என்னால் மிக நன்றாக ஒவ்வொரு இரத்தக் குழாயையும் என்று சொல்லலாம், உணரக்கூடியதாக இருந்தது. சிறிது நேரத்தில் அறிவு போய்விட்டது. பிறகு சில நிமிடங்களில் திரும்பவும் வந்தது. நான் எனக்குள் ஏதோ பிரச்சனை ஏற்படப்போவதை அறிந்ததும் உடனடியாக குளியலறை லொக்கை எட்டி திறந்துவிட்டு, வீட்டில் உள்ளவர்களிற்கும் ஒரு குரல் கொடுத்து இருந்தேன். இதனால் விபரீதம் தவிர்க்கப்படக்கூடியதாக இருந்தது
.

ரொம்ப கவலையாக இருக்குதுங்க. இப்ப எல்லாம் சரியாகி விட்டனவா? :D

  • தொடங்கியவர்

வெண்ணிலாவுக்கு கவலையாக இருக்கிதா? என்ன செய்வது மனித வாழ்க்கை என்றால் இப்படித்தான்! நாம் எல்லாரும் விரும்பியோ விரும்பாமலோ மண்டையை போடவேண்டும். இதை முன் கூட்டியே சிந்தித்து வைத்து இருப்பது நல்லது தானே? யாரோ ஒரு தத்துவம் சொல்லுவார்கள் 'சாகப் போறவன் செத்தவனப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறான்' எண்டு.

ஐயோ யமுனா, உங்கள் சாவு அனுபவம் வாசிக்க பயங்கரமாய் இருக்கிதே! ரெண்டு கண்டத்தில இருந்து தப்பி இருக்கிறீங்கள்! கொழும்பில புகையிரதம், கடல் இவை மூலம் எனக்கு தெரிந்த பலர் இறந்து உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

~தூங்கியது போலும் சாக்காடு தூங்கி விழிப்பது போலும் பிறப்பு| என்று திருவள்ளுவர் சொல்கிறார். சாவுக்குப்பின் எப்படியிருக்கும் என்பதை உணர பிறப்புக்குமுன் எப்படியிருந்தது அல்லது இருக்கிறது என்பதை உணர்ந்தாற் போதும். கனவே காணாத ஒரு சிறிய ஆழ்ந்த தூக்கத்தில் இந்த உலகமும் நானென்னும் தன்னுணர்வும் எப்படி மாயமாய் போய்விடுகிறதோ அவ்வாறே சாவிலும் நாம் ஒரு வெறுமைக்குள் போய்விடுவோம். அவ்வளவுதான். தற்கொடைப் போராளிகள் ஒரு கணத்தில் இந்த நிலையை அடைந்து விடுவார்கள். ஆழ்ந்த தியானத்திலும் இந்த நிலையை அடைய முடியும். உயிர்போனால்தான் சாவு என்பதில்லை. உணர்வு போனாலும் அதேநிலை வந்து விடுகிறது. நாம் அனைவரும் ஒவ்வொரு இரவிலும் செத்துச் செத்துப் பிழைப்பவர்கள்தான். ஆனால் ஒரு நாள் மீண்டும் திரும்பமுடியாத அந்த நிரந்தர அமைதி வந்து விடுகிறது.

"சாக போறவன் செத்தவன் பற்றி கவலை பட்டு கொண்டு இருகிறான் என்ற" டயலக் நல்லா இருக்கு குருவே........குருவே என்ட அநுபவத்தை வாசிக்க பயமா இருக்கா எனக்கு சிரிப்பா தான் இருக்கு இப்படி எல்லாம் செய்தனானா என்று.........என்னவோ தப்பி வந்து யாழிற்கு வந்து உங்க எல்லாரையும் மீட் பண்ணிணதில சந்தோசம் தான்...................ஆனாலும் குருவிற்கு நடந்ததை நினைக்க எனக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை நடந்தா எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும் நானும் பல விசயங்களை அறியலாம் என்ற யோசனை தான் வருகிறது........... :icon_idea: :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

கடல் விசயம் பகிடி இல்லை... கடல் பொல்லாத ஒரு சாமான்!

நீந்த தெரிந்தாலும், அறியப்படாத ஒரு கடலில் நாம் ஒருபோதும் கால் வைக்ககூடாது. நான் இப்போது நன்றாக நீந்துவேன். தண்ணீரினுள் எவ்வளவு நேரமும் மிதந்து கொண்டு இருப்பேன். ஆனால், குளிர் தண்ணீர் என்றால் கனநேரம் நிற்கமுடியாது.

கொழும்பு கடல் எனக்கு தெரிந்த பலர் உயிரை பறிகொண்டது. இதில் ஒருவன் எனது நண்பன், இன்னொருவன் சொந்தக்காரன். கொழும்புக்கு போற ஆக்கள் கடலில கால் வைக்காது இருப்பது நல்லது என்று சொல்லுவேன்.

கடலுக்க மூன்று அடி தண்ணீர் மாதிரி இருக்கும். திடீரென்று அலை வந்து மண்ணை அரிக்கும் போது அது ஆறு அடி ஆழமாக மாறிவிடும். இப்படி எல்லாம் ஆபத்து இருக்கு.

உங்களுக்கு நீந்தி விளையாடுவது விருப்பம் என்றால் சுவிமிங் பூலே - நீர்த்தடாகமே சிறந்தது!

சரியாக சொன்னீங்க குருவே எப்ப கொழும்பு கடற்கரையில் அலைமட்டம் உயரும் என்று சொல்லவே முடியாது..........அத்தோட ஒரு மட்டதிற்கு அப்பால் சென்றவுடன் அந்த கடலில் ஒரு பள்ளம் மாதிரி வரும் அந்த மண்ணும் மிகவும் வித்தியாசமாக காலை புதைகிற மாதிரி மண்.........அந்த பள்ளம் இருக்கு என்று தெரியாம போனா அந்த ஆள் சரி தான் இருந்தா போல அந்த பள்ளம் வாறபடியா உடனே ஒன்றும் செய்யமுடியாத நிலை.........இப்ப எல்லாம் நீர்தடாகத்தில தான் வாழ்க்கை போகுது பிகோஸ் கடற்கரை சரியான தூரம் இங்கே குருவே வீட்டில இருந்து.............. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் விழுந்ததும் புளுக், புளுக் என்று நீர்க்குமிழிகள் எனது வாயினுள் அல்லது மூக்கினுள் வருவதை அல்லது போவதை அவதானித்தேன். கண்ணை திறந்து இருந்தேன். ஆனால் எல்லாம் தெளிவில்லாமல் நீர்மயமாக இருந்தது. நான் சாகப்போகின்றேன் என்பதை அப்போது உணர்ந்துகொண்டேன். பள்ளியில் யம மகாரசன் ஒரு எருமை மாட்டுடன் வந்து கயிறு ஒன்றை வீசி எமது உயிரைக் குடிப்பான் என்று சொல்லித்தர கேள்விப்பட்டு இருந்தேன். எனவே, அந்தக் கணத்தில் எருமையுடன், யமன் வருகின்றானா என எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால்..

யமனும் வரவில்லை... எருமை மாட்டையும் காணவில்லை.

கலைஞாண்னே, யமன் அப்பவே வந்திருக்கக்கூடாதோவெண்டு தொனுது, வந்திருந்தா அப்பவே போய் சேந்திருப்பியள். உங்கட இந்த ரொதனையள் இருந்திருக்காதெல்லோ? :icon_idea:

உங்கட தலைப்பை பாத்ததும் சென்ரியில நிக்கிற அண்ணன்மார் கண்ணுக்க நிக்கினம். B)

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு 7 வயதாக இருக்கும் போது கடுமையான மின் தாக்கத்துக்கு இலக்கானேன். அதுதான் மரணத்தின் வாசலை அடைந்த முதல் நிகழ்வு. மின் தாக்கத்தை உணர்வதற்கிடையில்.. சூனியமான இருண்ட உலகில்.. இருந்தேன். எனது சகோதரர்கள்.. தக்க முதலுதவிகளை அளித்து விரைந்து செயற்பட்டதால் இன்று உயிர் வாழ்கின்றேன்.

இரண்டாவது அதுவும் சிறுவயதில் தான் சிறீலங்கா வான் படையின் தாக்குதலுக்கு இலக்கானது. அதன் போதும் தாக்குதல் உச்சத்தின் போது இதே போன்ற ஒரு நிலையை எய்தி இருந்தேன்.

யாழ் நகரை வதிவிடமாகக் கொண்டிருந்த படியால் அடிக்கடி கோட்டை இராணுவத்தின் செயற்பாடுகளால்.. மரணத்தை யாசிக்க பழகியவன்.

அதனாலோ என்னவோ கரும்புலி மில்லர் அண்ணா மீது அளவு கடந்த பாசம் உண்டு.

பலர் சாவைப் பற்றிக் கதைக்கவே பயப்பிடுகின்றனர். சாவில் பிறருக்காக வாழ விளைந்த கரும்புலிகளோடு ஒப்பிடும் போது நாம்.. மரணத்துக்குப் பயந்த கோழைகள்..!

உலகில் நீங்கள் எதை அனுபவிக்கிறீர்களோ இல்லையோ.. விரும்பியும் விரும்பாமலும் அனுபவிக்கப் போகும் கட்டாயம் என்பது மரணம்..! :huh::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம், கலைஞா, தங்களின் பிளஸ்பாக் பார்த்தேன்,

யாழ் களத்திலே சாவை தொட்டுவிட்டு வந்த பலர் இருக்கிறார்கள். (என்னை அது ஒரு நாளும் சீண்டியதில்லை, சீண்டினால் சும்மா விடமாட்டன் எண்டு பயம்), சாவை தொட்டுவிட்டு வந்தவர்கள் என்பதைவிட சாவை முறியடித்தவர்கள் எண்டு சொன்னால் மிகையாகாது.

அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சிறிய பகுதிகளை எம்.எஸ்.என், தொலைபேசி ஊடாக கேட்டு இருக்கிறேன். அவர்கள் வேறுயாருமல்ல, தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்காய் தங்களை இணைத்து செயற்பட்டு தற்பொழுது ஒதுங்கி வாழ்பவர்கள்.

அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டாலே புல்லரிக்கும், தொலை பேசி, எம்.எஸ்.எனில் அதை கேட்டே பொழுதே ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருந்தது.

இப்படி ஒரு தலைப்பை ஆரம்பித்து, சாதரணமாக கேள்விகளை கேட்டுவிட்டீர்கள், பார்ப்போம் அவர்கள் இதற்கு பதிலை சொல்லுகிறார்களா என்று. (பெரும்பாலும் சொல்லமாட்டார்கள், என்று நினைக்கிறேன்) :icon_idea::huh:

சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் நீங்கள் உண்மையில் சாகப் போவதாய் உணர்ந்த அந்த இறுதி அனுபவம் ஏதாவது உங்கள் வாழ்வில் ஏற்பட்டதா?

இல்லை எனக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லை

ஆனால் குளம் ஒன்றில் குளிக்கச் சென்று மரணத்தின் வாசலுக்குச் சென்ற

இரண்டு உயிர்களை மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றியுள்ளேன்.

ஒருமுறை எனது வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள குளத்தில் ஒருவர் மதுபோதையில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்துவிட்டார்

எனது நண்பர்கள் பலர் அந்நேரத்தில் மறுகரையில் குளித்துக்கொண்டிருந்தார்கள

  • தொடங்கியவர்

ஓம் போராட்டத்தில் முன்பு இணைந்து இருப்பவர்கள், இப்போது இருப்பவர்களின் அனுபவங்களுடன் ஒப்பிடும் போது நமது கதைகள் வெறும் ஜுஜுப்பிகள்!

ஆ நெடுக்காலபோவானுக்கு சின்ன வயசில கரண்ட் அடிச்சதா?

ஈரக் கையுடன் சுவிச்சை போடும்போது நாங்கள் வீட்டில் அடிக்கடி கரண்ட் சொக் வாங்குவோம். ஒருக்கால் நினைவு இருக்கு, நான் சுவிச்சை போட்டபோது யாரோ பின்பக்கத்தால் எனது பிடறியைப் பொத்தி அடித்த உணர்வு தோன்றியது. ஆ... பிடறியைப் பொத்தி அடி வாங்கினாலும் அவ்வளவு நோகாது. பிறகு தான் நான் கையில் கரண்ட் அடிப்பதை உணர்ந்து கொண்டேன். நான் ஈரக் கையுடன் சுவிச்சை போட்டபோது கரண்ட் அப்படி அடித்தது..

யாழ்ப்பாணப் பக்கம் கரண்ட் அடிச்சு ஏராளம் சனம் செத்து இருக்கு. சில ஆக்கள் கள்ள கரண்ட் எடுக்கப்போயும் செத்து இருக்கிறீனம். சில ஆக்கள் டீவி அன்ரனா தெருவில இருக்கிற கரண்ட் வயருல முட்டினதால செத்து இருக்கிறீனம்..

தண்னிய மாதிரி (நீர், மற்றதண்ணி இல்ல) கரண்ட்ம் ஒரு பொல்லாத சாமான்! :icon_idea:

இப்ப நினைக்கவும் உடம்பு நடுங்கிது! :huh:

சிவாவுக்கு அப்ப நீந்த தெரியுமா?

Edited by கலைஞன்

''சிவாவுக்கு அப்ப நீந்த தெரியுமா? ""

சுப்பரா நீச்சலடிப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் மாப்பிளையும் தற்போதைய கலைஞனுமாகிய இவரை யாரென்று அடையாளம் பிடித்து விட்டேன் .இவர் யார் ஊர் பெயர் அனைத்தையுமே B)

  • தொடங்கியவர்

அப்ப அந்த எங்கள் கோயில் ஐயர் நீங்கள்தானா? :D

எனக்கும் இப்படி ஒரு அனுபவமும் வரயில்லை..... அப்படி ஏதும் வந்தால் நேர.. மேலோகம் போய் ..அங்க சொர்க்கம் நரகம் இருக்கெண்டு கதைகள் படங்களில் சொல்லினம் அதை போய் பார்க்கனும் ..... ஹிஹி :D ;)

சாவின் விளிம்பிற்கு நான் சென்று வந்த அனுபவம் பல இருகின்றது நான் 4 வயதிருக்கும் போது அப்பாவுடன் சைக்கிளில் செம்மணியால் ஒரு இரவு 8 மணியளவில் வந்து கொண்டிருக்கும் போது இந்திய இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று எம்மை துரத்தி துரத்தி சுடத்தொடங்கியது அப்பாவோ தனக்கிருந்த எல்லா சக்தியையும் திரட்டி சைக்கிளை மிதித்து கடைசியில் செம்மணி சுடலையில்[மயானம்] இருக்கும் கொங்கிரீட் கட்டிடத்தில் கவர் எடுத்தோம் ஆனால் கட்டடத்துக்கும் மேல் எல்லாம் ரவைகள் விழ அங்கிருந்து தப்பி உடல்கள் எரிக்கும் இடத்தில் படுத்திருந்தோம் இது எனது முதலாவது அனுபவம் அதேபோல‌ இந்த சம்பவம் நடந்து ஒரு 3 மாதத்தில் எமது ஊரில் இருந்த வீட்டில் இந்தியன் ஆமியின் பிரச்சினை காரணமாக எமது அம்மாவின் தங்கையின் குடும்பம் அப்பாவின் சகோதரர்கள் என ஒரு 5 குடும்பம் வரையில் தங்கி இருந்தோம் ஒரு நாள் புலிகள் வைத்த கண்ணிவெடியில் கடுப்பான இந்தியன் ஆமி வீட்டை சுற்றிவளைத்து எம் அனைவரையும் வெளியே வரச்சொல்லி வீட்டு முற்றத்தில் லைனில நிக்க வச்சு சுடுவதற்கு ஆயத்தமாகினர் அந்த நேரத்தில் நாய் ஒன்று அவங்களை பார்த்து குரைக்க ஏற்க‌னவே கடுப்பில் இருந்த இந்தியன் ஆமி நாயை துரத்தி துரத்தி வெடி வைக்கும் போது அந்த சத்தத்தில் எமது ஊரின் இந்தியன் ஆமியின் கமாண்டராக இருந்த மல்கோத்திரா என்னும் இந்திய இராணுவ அதிகாரி அவ்விடத்துக்கு வர அவனே மற்றைய இராணுவத்தினரை சமாதானப்படுத்தி எம் அனைவரையும் காப்பாற்றினான் இல்லாவிட்டால் வல்வெட்டிதுறை படுகொலையை எப்படி நினைவு கூறுகின்றோமோ அப்படி கைதடி படுகொலை என ஒன்றை நினைவுகூர்ந்திருக்கும் தேவை இருந்திருக்கும்

அதன் பின்னர் நான் நினைகின்றேன் 93 அல்லது 94 என‌ மாமாவின் திருமணத்துகாக இந்தியா செல்வதற்கு கிளாளியை நோக்கிய பயணம் தொடங்கியது இருபாலைக்கும் கல்வியங்காட்டுக்கும் இடையில் அதாவது வரதர் மாஸ்டரின் ரியூட்டரிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு முன் என் கால்களை சைக்கிள் சில்லுக்குள் கொடுத்து விட்டேன்.இருபாலையில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவரின் வைத்திய நிலையத்துக்கு சென்று மருந்து கட்டிவிட்டு கிளாளி நோக்கி பயணமானோம் அங்கு ஒருவாறு படகுக்கு டிக்கட் எடுத்துவிட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்த போது இரவில் என்னால் நடக்கமுடியாது பயமாக இருகின்றது என அழுது ஆர்பாட்டம் பண்ணினேன் இன்று போகாமல் நாளைக்கு பயணமாகுவோம் என்பதை கேட்ட அப்பா சரி என சொல்லி வீட்டினை நோக்கி பயணமானோம் அடுத்த நாள் பத்திரிகையில் கிளாளி படகினை வழிமறித்த சிங்கள படைகள் சரமாரியாக வெட்டி 40 தமிழர்களை கொன்றனர் என்னும் செய்தி படித்தோம் இதனை சாவின் விளிம்பு என சொல்லமுடியாவிட்டாலும் என்னை பொறுத்தவரையில் அவ்வாறான நிகழ்வே.

அது போக போனவருடம் 2005ம் ஆண்டு டிச‌ம்பர் 26ம் திகதி சரியாக சுனாமி வந்து 1 வருடம் அன்று நாம் நண்பர்களுடன் அவுஸ்திரேலியாவில் கடற்கரை ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தோம் அது பெரிய பயங்கர அலைகளை கொன்ட கடல் நாம் 4 பேர் கடலில் விளையாடி கொண்டிருந்தோம் அப்படியே மெதுமெதுவாக முன்னேறி அலைகள் உருவாகுவதற்கும் இடம் அதாவது முதல் ஒருதிட்டாக எழுந்து வருமல்லவா அதில் நானும் இன்னொரு நாண்பரும் சென்று எமது உயரத்தில் நாம் இருவருமே 6 அடி 2 அங்குலம் உயரமானவர்கள் எம்மை விட உயரமான இடத்தில் அலைகளுக்குள் மாட்டாமல் துள்ளி துள்ளி விளையாடி கொன்டிருந்தோம் எனது இரு நண்பர்கள் கடற்கரையிலும் மற்றையவர்கள் வேறிடத்திலும் இருந்தார்கள்.திடீரென‌ கரையை திரும்பி பார்த்தது கரையில் இருந்து ஒரு 100 தொடக்கம் 150 மீற்றர் தொலைவில் நாம் நின்று கொண்டிருந்தோம் கரை எமக்கு தெரியவில்லை ஏன் எனின் இராட்சத அலைகள் எம்மை கரையில் இருந்தவர்களை மறைத்து கொண்டிருந்தது எனக்கு நீச்சல் வரும் என்றாலும் நீந்த முடியவில்லை காலை நிலத்தில் வைக்கலாம் என பார்த்தாலும் முடியவில்லை எனக்கு மூச்சு எடுப்பதற்கும் கஸ்டமாக இருந்தது பதட்டத்தில் நாம் உதவி உதவி என கத்தும் போது பக்கத்தில் நின்ற வெள்ளைகள் தாம் பிழைத்தால் காணும் என கரைக்கு போய் விட்டார்கள் கரையில் நின்ற நண்பர்கள் இருவரும் எம் நிலையை அறிந்தவுடன் ஒருவர் கடலை விட்டு வெளியே ஓடிவிட்டார் மற்றவர் தன் உயிரை பணயம் வைத்து எம்மை காப்பாற்ற மெதுமெதுவாக முன்வந்தார் அவரின் கையினை என் கை தொடும்போது வந்த இராட்சத அலை அவரை எமக்கு முன்னால் இருக்கும் நீரோட்டத்துகுள் இழுத்து சென்றுவிட்டது எனக்கென்றால் ஒரே விசர் என்னை காப்பாற்ற வந்தவரை என்னால் ஆபத்தில் சிக்கிக்கொண்டாரே என அப்போது லைப் காட்ஸினை என்னுடன் இருக்கும் நண்பர் கண்டு விட்டார்

எம்மை நோக்கி வேகமாக சர்வ சாதாரணமாக நீந்தி வந்த அந்த உயிர்காக்கும் தொண்டரை நாம் எப்படியும் கரையை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எம்மை காப்பாற்ற வந்து ஆபத்தில் சிக்கி கொண்ட மற்றைய நண்பரை நோக்கி செல்லும் படி சைகை காட்டினோம் பக்கத்தில் இருந்த நண்பரோ ஒருவாறு கரையை நீந்தி அடைந்து விட்டார்.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஒருவாறு கண்ணை மூடியபடி நீந்த தொடங்கினேன் ஒருவாறு அலைகள் உருவாகும் நீரோட்டத்தை அடைந்துவிட்டேன் அங்கிருந்து அலைகளோடு அலைகளாக கரையில் சுருட்டி வீசப்பட்டேன்.கரையில் நின்ற 3 நண்பர்களும் என்னை தூக்க வந்த போது அவர்களை உதறி விட்டு மற்றைய நண்பரை நினைத்து அவரின் நிலையை எண்ணி ஒரு குழப்பாமான நிலையில் விசரன் போல கடற்கரையை அதாவது கடலில் இருந்து எதிர்திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் அதன் காரணம் நான் தத்தளித்து கொண்டிருக்கும் போது அவர் எழுப்பிய அவலகுரல்தான் "இதோட நான் சரி" என்பது அதற்கு பிறகு அவரின் குரலை நான் கேட்கவில்லை அப்போது திடீரென ஜயாம் ஓகே சேவ் மை பிரன்ட்ஸ் என ஒரு குரல் கத்துவது கேட்டது திரும்பி பார்த்தால் கடலில் சிக்கிய நண்பரின் தலைமுடியை பிடித்து உயிர்காக்கும் தொண்டர் அவரது சேர்பிங் படகில் ஏற்றினார் அவரோ சேவ் மை பிரன்ட்ஸ் என அந்த லைப் காட்டினை கெஞ்ச லைப் காட்ஸ் அவரின் தலை முடியை பிடித்து திருப்பி எம்மிருவரையும் காட்டவே அவர் அமைதி அடைந்தார்.பின் ஒருவாறு கரையை அடைதார் அதன் பின்னரே நானும் வழமைக்கு வந்தேன் இல்லை வர முயற்சி செய்தேன் கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு 250 மீற்றர் தூரத்தில் எமது நண்பர்கள் கொஞ்ச பேர் இருந்தார்கள் அவர்களிடம் நாம் களைத்து விழுந்து போய் எமது சோககதை சொன்னபோது நம்ப மறுத்தபோது வந்த விசர் இருக்கே அதைபோல விசர் ஒருநாளும் வந்ததில்லை

அந்த சம்பவம் என் உண்மையான நண்பர் ஒருவரை எனக்கு இனம் காட்டியது என் நிலையை கண்டு தன் உயிரையும் பொருட்படுத்தாது என்னை காக்க வந்த அந்த நண்பரை வாழ்நாளில் எந்த சமயத்திலும் மறக்கமாட்டேன் .அன்றுகரையில் இருந்தே யோசித்தோம் நாம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கஸ்டபட்டிருபார்கள் என அதுமட்டுமா எமக்காக உயிரை துச்சமென மதித்து எமது விடுதலைகாக போராடும் போராளிகளின் உழைப்பு கண்முன்னால் திரும்ப திரும்ப ஓடியது அங்கயற்கன்னி அக்கா அவர்கள் 35 மைல் நீந்தி தன்னை ஆகுதி ஆக்கும் போதும் எப்படி கஸ்டப்பட்டு உழைத்திருப்பார் எனவும் புரிந்தது நாம் எமது உயிரை காப்பாற்ற கஸ்டப்பட்டோம் ஆனால் அங்கற்கன்னி அக்காவோ 35 மைல்கள் கஸ்டப்பட்டு நீந்தி தன்னை வெடிக்க வைத்து கப்பலையும் தகர்த்து வெற்றி கண்டார்.இவர்களின் சாதனைகளுக்கும் அவர்கள் படும் கஸ்டங்களுக்கும் முன் நாம் அன்று ஒரு 20 நிமிடம் அனுபவித்த‌ கஸ்டம் ஒரு தூசுக்கு சமன்

Edited by ஈழவன்85

உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள்

  • தொடங்கியவர்

ஈழவன் ஆறு அடி ரெண்டு அங்குலம் உயரமா? :icon_mrgreen: ஆ.. இது முன்னமே தெரியாமல் போச்சு.. தெரிந்திருந்தால் நீங்கள் சொல்வதற்கு எதிராக ஒன்றும் எழுதி இருக்கமாட்டேன்.. :lol:

ஈழவன் அண்ணை,

உங்கட அனுபவமும் வாசிக்க பயங்கரமா இருக்கு.. நீங்களும் வாழ்க்கையில நிறைய கண்டங்கள் தாண்டி இருக்கிறீங்கள். அதிலையும் அந்த கடல் அனுபவம் பெரிய ஒரு கண்டம் எண்டு சொல்ல வேணும்.. ஏன் தான் எல்லாரும் சும்மா கடலுக்க போய் விளையாடுறீங்கள் எண்டு தெரியவில்லை. நான் அறிந்தவரையில் எனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள் என்று சுமார் 20 பேர்வரையில கடலுக்க விளையாடப்போய் செத்து இருக்கிறீனம். இளங்கன்று பயம் அறியாது எண்டு சொல்லிறது இதாலதான்! சாகப்போறவனுக்கு புத்தி மத்திமம் எண்டும் சொல்லலாமோ?

பி/கு: வேறும் யாராவது உயரமான ஆக்கள் இப்பிடி யாராவது 6'2'' 6'6'' 7' அடி உயரங்களில இருந்தால் முன்னமே அறியத்தாருங்கள். என்னைவிட உயரமான ஆக்களை அண்ணை எண்டு கூப்பிடுவது எண்ட பழக்கமாக்கும்.. :lol: நான் ஈழவன் அண்ணையை விட 5 அங்குலம் உயரம் குறைவாக்கும்! :P

ம் நல்லதொரு விடயம்

என்ன எல்லாருக்கும் தண்ணியிலைதான் கண்டம்

எனக்கும் இரண்டு அனுபவங்கள் இருக்கின்றது.

ஒன்று கொழும்பில் பாணாந்துறைப்பகுதியில் இருக்கும் ஒரு விடுதிக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். குடும்பமாக சென்றோம். அங்கு உள்ள நீர்த்தடாகத்தில் குளிக்கும்போது அது முதலில் ஆழம் குறைவாக இருக்கும் போக போக 12அடி ஆழத்திற்கு செல்லும். எனக்கு நீச்சல் அந்த மாதிரி. அதனால் நன்றாக அனுபவிதது நீந்திக்கொண்டிருந்தேன். எங்களுடன் இரண்டு சிங்களப்பொடியன்களும் வந்தவர்கள். அவர்கள் நன்றாக மது அருந்திவிட்டார்கள். என்ன செய்யிறம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் தூக்கி உள்ளே எறிந்துகொண்டிருந்தார்கள். என்னுடைய கஸ்ட காலத்திற்கு எனக்கு மேலேயும் ஒருவனைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். எனக்கு ஏற்கனவே இராணுவத்தின் அடியினால் நாரி வேதனை இருக்கின்றது. தொடர்ந்து ஓரு இடத்தில் இருக்கமாட்டடேன். அல்லது நாரியில் யாராவது அடித்தால் மூச்சு எடுக்க முடியாது கஸ்டப்படுவேன். அவர்கள் தூக்கி போட்ட போது அவன் என்னுடைய நாரியில் விழுந்துவிட்டான். எனக்கு மூச்சு எடுக்க முடியவில்லை. நீந்தவே முடியாமல் தத்தளிததேன். தண்ணீருக்கு மேலே வந்து கையை ஆட்டி கூப்பிட்டேன். எல்லோரும் பகிடிக்கு செய்யிறன் என்று நினைத்துவிட்டார்கள். ஏனென்றால் எனக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று அவர்களிற்கு தெரியும். 3 தடவைகள் மேலே வந்துவிட்டேன். பிறகு என்ன நடந்ததென்று தெரியாது . சற்று நேரத்தில் கண்விழித்து பார்க்கின்றேன்.சுற்றி வர எல்லோரும் இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் நான் நினைத்தேன் விளையாட்டு வினையாகிவிட்டது என்று. ம் இன்ற நினைத்தாலும் நண்பர்களுடன் குளிக்க போவது பயங்கர பயம். இதுவரை நாளில் ஓரு நாள்கூட கடலில் குளிக்கவில்லை. பயங்கர பயம். இந்தியா சென்றும் கடலில் கால் நனைத்தேன். என்னுடன் வந்தவர்கள் எல்லோரும் நீந்தினார்கள். எனக்கு கடல் என்றாலே உயிர் போய்விடும். நீர்த்தடாக்தில் நனறாக நீந்துவேன். ஊரில் உள்ள குளங்கள் கிணறுகள் எல்லாம் எம்முடைய ஆட்சிதான்.

மற்றையது

திருகோணமலையில் 1998 இன் இறுதிப்பகுதியில் சிங்கள் இராணுவத்திடம் சிக்கி இருந்த காலப்பகுதியில் அவர்களின் சித்திரவதையில் சிக்கி ஒரு நாள் மயங்கியே வீழ்ந்துவிட்டேன். அன்று நினைத்தேன். கடவுளே என்னைக்காப்பாற்று உனக்கு நான்என்னவென்றாலும் செய்கின்றேன் என்று . ம் ஒரு நம்பிக்கைதான். இன்று நினைத்தாலும் என்னையறியாமலேயே ஓரு மனப்பயம்.

சின்ன சின்ன அனுபவங்கள் மயிரிழையில் உயிர் தப்பிய நிகழ்வுகள் ஏராளம்.

பகரீனில் வேலைசெய்தபோது ஒரு வாகன விபத்தில் என்னுடன் வேலைசெய்த 6 இந்திய நண்பர்கள் கண்முன்னேயே இறந்தார்கள். நினைக்கவே நெஞ்சு வலிக்கின்றது. அன்று அந்த வாகனத்தில் நான் செல்லவில்லை. வழமையாக அதில்தான் நான் செல்வேன். என்னுடைய நல்ல காலமோ என்னவோ மற்றைய வாகனத்தில் ஏறிவிட்டேன்.

நோர்வே வந்த புதிதில் மனைவியின் நண்பி வீட்டிற்கு சென்று வரும்போது ஒரு இறக்கத்தில் நான் விளையாட்டாக துள்ளி குதித்தேன் அது பனிகாலம் என்பதால் சறுக்கி இழுத்துக்கொண்டுபோய் மூக்குக்கண்ணாடி உடைந்து கால் கை எல்லாம் காயங்கள். சற்று நேரம் எனக்கு நினைவே இல்லை. அப்படி விழுந்தேன்.

சிறீலங்கா இராணுவம் முன்னேறி யாழ்குடாநாட்டை கைப்பற்றிய காலப்பகுதியில் அங்கு முத்திரைச்சந்தியில் ஒரு மாமாவீட்டிற்கு அவசரமாக செல்ல வேண்டிய நிலை நானும் மாமாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றோம். அவர்களின் வாயிற் கதவு திறந்திருந்தது. மோடட்டார் சைக்கிளை அப்படியே உள்ளே விட்டுவிட்டோம். உள்ளே போய் சில வினாடிகளில் எம்மைச்சுற்றி இராணுவம். எனக்கு பயத்தில் உயிரே போய்விட்டது. ஏற்கனவே நிறையப்பிரச்சினை. பிடிபட்டால் சங்குதான். ஏதோ சொல்லி இது எங்கடை வீடுதான் என்று உள்ளே போய் பொருட்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம்.

ம்

இன்னும் நிறைய விடயங்கள் நினைக்க நெஞ்சு கனக்கின்றுது.

சிவா அண்ணா,ஈழவன் அண்ணா மற்றும் பரணி மாஸ்டரின் சம்பவங்களை வாசித்தேன் மிகவும் பயங்கரமாக இருகிறது ஒரு மாதிரி எல்லாரும் தப்பி வந்துவிட்டீங்கள்..............இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த வாக்கெடுப்பு புகழ் ஜெனரல் அவர்களுக்கு நன்றிகள்........... :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.