Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்துமஸ் பார்ட்டியும், உணவும் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைப்புகள் வந்தன. போனவருசம் போய் பட்ட அதே அவஸ்தை, இம்முறையும் இருக்குமோ என்றால், போனமுறை என்னுடன் அவஸ்தைப்பட்ட நண்பர், இம்முறை தான் பட்ட அவஸ்தை அடுத்தவர்கள் பட கூடாது என்று சரியான முறையில் பார்ட்டி வைத்தார்.

வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துமஸ் உணவு என்றால், வெதுப்பியில் வைத்து எடுத்த, வெங்காயம், எலுமிச்சை திணிக்கப்பட்ட வான் கோழியும், அதுக்கு ஒரு சோஸ், சீஸ் கோலிஃப்ளவர், அவித்த உருளைக்கிழங்கு பாதிகள், அவித்த போஞ்சி, Yorkshire pudding, asparagus...

இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது.

அட நாம சோத்து கோஸ்டிகளை அல்லவா கூப்பிடுறோம் என்ற யோசனை கிச்சித்தும் இருக்காது.

ஆனால் நேற்றும் நண்பர், அழகாக, மேலே உள்ளவைகளுடன், வான்கோழிக்கு பதிலாக கோழியையும், மேலதிகமாக, கோழிப்புக்கை, toast, வட்டிலாப்பம் என்று செய்து வைத்து அசத்தினார். மேலும், யார் அசைவம் சாப்பிடாதோர் என்று நினைவில் வைத்து, அவர்களுக்கும் சரியான உணவினை வழங்கினார்.

என்ன பார்ட்டி ஆயினும், வருபவர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து அதை கொடுப்பதே விருந்தோம்பல். (வரும் விருந்தறிந்து, விருந்தோம்பல்)

சிறுவயதில் படித்த, கொக்கு, நரி ஒன்றை ஒன்று விருந்துக்கு அழைத்து, ஒன்றுக்கொன்று ஒவ்வாத பாத்திரத்தில் உணவை பரிமாறும் கதை போல இருக்கக் கூடாது விருந்தோம்பல்.

சிறு பிள்ளைகள் பிறந்த நாள் விழாவுக்கு அழைப்பார்கள். சிறு பிள்ளைகள் விரும்பும் எந்த உணவுமே இருக்காது. வழக்கம் போல, கொத்து ரொட்டி, இடியப்பம், கறிவகைகள் தான் இருக்கும்.

சிறுவர்கள் விரும்பக்கூடிய, பிஸ்சா ஆர்டர் பண்ணி கொடுப்பவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

மேலே, கடந்த வருடமும், இந்த வருடமும் பார்ட்டி வைத்தவர்கள் கிறிஸ்தவர்களும் அல்ல. போனவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல.

ஆகவே, சொல்லவருவது என்னவென்றால், இன்னொரு நாட்டில், அந்நாட்டுக்குரிய வழக்கங்களை அப்படியே கொப்பி அடிக்க வேண்டியதில்லை. விருந்தினர்களுக்கு அமைய, சிறு மாறுதல்களை செய்ய வேண்டும்.

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 கிறிஸ்மஸ் பார்ட்டியில்.... தாகம் தீர்க்க பரிமாறிய, திரவங்களின் பெயரையும் சொல்லுங்கோவன்.  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

 கிறிஸ்மஸ் பார்ட்டியில்.... தாகம் தீர்க்க பரிமாறிய, திரவங்களின் பெயரையும் சொல்லுங்கோவன்.  😎

தண்ணி, பச்சை தண்ணி, சுடுதண்ணி, குளிர் தண்ணி, தேத்தண்ணி, கோப்பித்தண்ணி, மல்லித்தண்ணி... 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது.

அட நாம சோத்து கோஸ்டிகளை அல்லவா கூப்பிடுறோம் என்ற யோசனை கிச்சித்தும் இருக்காது.

அரைகுறை கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைப்புகள் வந்தன. போனவருசம் போய் பட்ட அதே அவஸ்தை, இம்முறையும் இருக்குமோ என்றால், போனமுறை என்னுடன் அவஸ்தைப்பட்ட நண்பர், இம்முறை தான் பட்ட அவஸ்தை அடுத்தவர்கள் பட கூடாது என்று சரியான முறையில் பார்ட்டி வைத்தார்.

வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துமஸ் உணவு என்றால், வெதுப்பியில் வைத்து எடுத்த, வெங்காயம், எலுமிச்சை திணிக்கப்பட்ட வான் கோழியும், அதுக்கு ஒரு சோஸ், சீஸ் கோலிஃப்ளவர், அவித்த உருளைக்கிழங்கு பாதிகள், அவித்த போஞ்சி, Yorkshire pudding, asparagus...

இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது.

அட நாம சோத்து கோஸ்டிகளை அல்லவா கூப்பிடுறோம் என்ற யோசனை கிச்சித்தும் இருக்காது.

ஆனால் நேற்றும் நண்பர், அழகாக, மேலே உள்ளவைகளுடன், வான்கோழிக்கு பதிலாக கோழியையும், மேலதிகமாக, கோழிப்புக்கை, toast, வட்டிலாப்பம் என்று செய்து வைத்து அசத்தினார். மேலும், யார் அசைவம் சாப்பிடாதோர் என்று நினைவில் வைத்து, அவர்களுக்கும் சரியான உணவினை வழங்கினார்.

என்ன பார்ட்டி ஆயினும், வருபவர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து அதை கொடுப்பதே விருந்தோம்பல். (வரும் விருந்தறிந்து, விருந்தோம்பல்)

சிறுவயதில் படித்த, கொக்கு, நரி ஒன்றை ஒன்று விருந்துக்கு அழைத்து, ஒன்றுக்கொன்று ஒவ்வாத பாத்திரத்தில் உணவை பரிமாறும் கதை போல இருக்கக் கூடாது விருந்தோம்பல்.

சிறு பிள்ளைகள் பிறந்த நாள் விழாவுக்கு அழைப்பார்கள். சிறு பிள்ளைகள் விரும்பும் எந்த உணவுமே இருக்காது. வழக்கம் போல, கொத்து ரொட்டி, இடியப்பம், கறிவகைகள் தான் இருக்கும்.

சிறுவர்கள் விரும்பக்கூடிய, பிஸ்சா ஆர்டர் பண்ணி கொடுப்பவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

மேலே, கடந்த வருடமும், இந்த வருடமும் பார்ட்டி வைத்தவர்கள் கிறிஸ்தவர்களும் அல்ல. போனவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல.

ஆகவே, சொல்லவருவது என்னவென்றால், இன்னொரு நாட்டில், அந்நாட்டுக்குரிய வழக்கங்களை அப்படியே கொப்பி அடிக்க வேண்டியதில்லை. விருந்தினர்களுக்கு அமைய, சிறு மாறுதல்களை செய்ய வேண்டும்.

ஏன் ராசா

364 நாளும் இவற்றை  தானே  சாப்பிடுகிறீர்கள்?

ஒரு  நாளைக்கு  புதுசுகுளை  ருசி  பார்த்தா  என்ன??😜

இந்த மாற்றத்தை  விரும்பாதவரின்  தொல்லை  தாங்கமுடியலையப்பா?🤣

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் பாரம்பரிய உணவு என்பது நாட்டுக்கு நாடு, காலத்துக்கு காலம் மாறுபடும் ஒன்று.

நான் ஒரு சாப்பாட்டு இராமன் என்பது அறிந்ததே.

குத்தரிசி சோறு, ஆட்டுக்கறி, புட்டு, இறால் பொரியல், ….

இப்படி என் விருப்ப பட்டியல் இருந்தாலும்….

கிரேக்கர்களின் பொரித்த கணவாய், கத்தரிக்காய், துருக்கியரின் கோப்பி, போத்துகீசரின் சூடை மீன் பொரியல், குர்தீக்களின் கெபாப், ஆப்கானிகளின் ஷிர்சி, ஜேர்மன் சொசேஜ், பிரெஞ்ச் சொக்கிலேட் கேக் வகைகள், இப்படி பலதுக்கும் நான் அடிமைதான்.

அதே போல் சில சமயம் ஒரு மாறுதலுக்காக, ஒரு இங்கிலிஷ் Café போய் full English breakfast மூக்கு முட்ட ஒரு பிடி பிடிப்பதும் உண்டு.

ஆனால் கண்ணில் காட்ட முடியாத சாமான் இந்த வான்கோழி. எமது வீட்டில் எப்போதும் கோழி அல்லது ஆடுதான் ரோஸ்ட். ஆனா வெளியார் வீடுகளில் போனால் - வருடத்தில் ஒரு நாள் ஒரு மாறுதலுக்காக இதை ரசித்து சாப்பிடுவதுண்டு.

யோக்சியர் புடிங், நல்ல உறைப்பான கிரேவி ஊத்தி சாப்பிட நல்லாய் இருக்கும். அதேபோல் அஸ்பெர்கஸ்+பட்டர்+உப்பு தூக்கும்.

பிகு

சாப்பாட்டு கோப்பை, கட்டில், இரண்டிலும்  இனவாதாம் அறவே கூடாது. நட்டம் நமக்குத்தான்🤣

7 minutes ago, விசுகு said:

ஏன் ராசா

364 நாளும் இவற்றை  தானே  சாப்பிடுகிறீர்கள்?

ஒரு  நாளைக்கு  புதுசுகுளை  ருசி  பார்த்தா  என்ன??😜

இந்த மாற்றத்தை  விரும்பாதவரின்  தொல்லை  தாங்கமுடியலையப்பா?🤣

அதே😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

ஏன் ராசா

364 நாளும் இவற்றை  தானே  சாப்பிடுகிறீர்கள்?

ஒரு  நாளைக்கு  புதுசுகுளை  ருசி  பார்த்தா  என்ன??😜

இந்த மாற்றத்தை  விரும்பாதவரின்  தொல்லை  தாங்கமுடியலையப்பா?🤣

அதை, வெள்ளையர்கள், அல்லது குறைந்தபட்சம் நமது தமிழ் கிறிஸ்தவர்கள் என்றாலும் பரவாயில்லையே.

அன்னத்தை பார்த்து, நடை போட முயன்ற காக்கை கதை போலவே.....

வான்கோழியின் வெள்ளை இறைச்சியினை விரும்பி உன்பீர்களோ? 😁

அதனை விரும்பாத பல வெள்ளைகள் உள்ளனரே...

கோழியினை ரசித்து சாப்பிட பெரி-பெரி சாஸ் அல்லது சில்லி சாஸ் என்றால் ஓகே.

இது, உறைப்பு இல்லாத, ஒரு சாஸ்... அய்யோ...

10 best Christmas sauces and stuffings | Tesco Real Food

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

ஏன் ராசா

364 நாளும் இவற்றை  தானே  சாப்பிடகிறீர்கள்?

ஒரு  நாளைக்கு  புதுசுகுளை  ருசி  பார்த்தா  என்ன??😜

ருசி பார்க்கலாம் தப்பில்லை ஆனால் ஒரு விடயத்தை அந்த விருந்து பற்றி முழுமையாக விளங்கிக்கொள்ளாமல் அறைகுறை கூட்டம் தாங்களும் முக்குடைந்து எங்களையும்  மூக்குடைய வைக்க பார்ட்டி என்று கூப்பிடுவது சகிக்க முடியாது .

போர்க் வலது கையில்  கத்தி இடது கையில் வைத்து கொண்டு அந்த விருந்தை பற்றி பாடம் கொடுக்கும் அதி  புத்தி சாலிகள் .

அதுக்காக தோசைக்கடை  போனால் முள்ளு கரண்டி வைத்து தோசையை அவமானப்படுத்த கூடாது .😄

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

தண்ணி, பச்சை தண்ணி, சுடுதண்ணி, குளிர் தண்ணி, தேத்தண்ணி, கோப்பித்தண்ணி, மல்லித்தண்ணி... 😎

சுப்பு தண்ணி உப்பு தண்ணி  சிவப்பு தண்ணி     மஞ்சள் தண்ணி ..........இப்படியான...தண்ணிகள். இல்லையா  ?🤣 எங்கே   இலங்கையில்லா.  பார்ட்டி நடந்தது?.  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

அதை, வெள்ளையர்கள், அல்லது குறைந்தபட்சம் நமது தமிழ் கிறிஸ்தவர்கள் என்றாலும் பரவாயில்லையே.

அன்னத்தை பார்த்து, நடை போட முயன்ற காக்கை கதை போலவே.....

வான்கோழியின் வெள்ளை இறைச்சியினை விரும்பி உன்பீர்களோ? 😁

அதனை விரும்பாத பல வெள்ளைகள் உள்ளனரே...

கோழியினை ரசித்து சாப்பிட பெரி-பெரி சாஸ் அல்லது சில்லி சாஸ் என்றால் ஓகே.

இது, உறைப்பு இல்லாத, ஒரு சாஸ்... அய்யோ...

10 best Christmas sauces and stuffings | Tesco Real Food

நம்ம பாணியே  வேற  ராசா

அதுக்கெல்லாம் குடுத்து வைத்திருக்கணும்😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

சுப்பு தண்ணி உப்பு தண்ணி  சிவப்பு தண்ணி     மஞ்சள் தண்ணி ..........இப்படியான...தண்ணிகள். இல்லையா  ?🤣 எங்கே   இலங்கையில்லா.  பார்ட்டி நடந்தது?.  

பிரிட்டனில் 😜

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ருசி பார்க்கலாம் தப்பில்லை ஆனால் ஒரு விடயத்தை அந்த விருந்து பற்றி முழுமையாக விளங்கிக்கொள்ளாமல் அறைகுறை கூட்டம் தாங்களும் முக்குடைந்து எங்களையும்  மூக்குடைய வைக்க பார்ட்டி என்று கூப்பிடுவது சகிக்க முடியாது .

போர்க் வலது கையில்  கத்தி இடது கையில் வைத்து கொண்டு அந்த விருந்தை பற்றி பாடம் கொடுக்கும் அதி  புத்தி சாலிகள் .

அதுக்காக தோசைக்கடை  போனால் முள்ளு கரண்டி வைத்து தோசையை அவமானப்படுத்த கூடாது .😄

அங்கேயும்  ஏதாவது  நமக்கேற்றது தட்டுப்படும்  ராசா😝

தேடணும்

முயலணும்

ருசிக்கணும்

நம்ம  சோறுகள் என்று  நம்ம  அடுத்த  தலைமுறையே  அழைப்பதையாவது  மாற்றணும்

சும்மா  எங்க  போனாலும்  சோறு சோறு சோறு என்றபடி...???🤣

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நம்ம பாணியே  வேற  ராசா

அதுக்கெல்லாம் குடுத்து வைத்திருக்கணும்😅

அதைத்தானே சொல்கிறேன். அப்படியே கொப்பி அடிக்காமல் சிறு மாறுதல்கள் செய்து, சுவாரசியமாக்க வேண்டும். வான்கோழி விரும்பாதவர்களுக்கு, வேறு உணவை தயாராக வைத்திருக்கலாமே (கோழி). 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அதைத்தானே சொல்கிறேன். அப்படியே கொப்பி அடிக்காமல் சிறு மாறுதல்கள் செய்து, சுவாரசியமாக்க வேண்டும். வான்கோழி விரும்பாதவர்களுக்கு, வேறு உணவை தயாராக வைத்திருக்கலாமே (கோழி). 

இதைப்பார்த்தால்....

நம்ம  தாலி  கட்டுக்கு  வந்து  வெள்ளையள்  மாட்டிறைச்சு  வதக்கல் கேட்டா  எப்படி  இருக்கும்??😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

அங்கேயும்  ஏதாவது  நமக்கேற்றது தட்டுப்படும்  ராசா😝

தேடணும்

முயலணும்

ருசிக்கணும்

நம்ம  சோறுகள் என்று  நம்ம  அடுத்த  தலைமுறையே  அழைப்பதையாவது  மாற்றணும்

சும்மா  எங்க  போனாலும்  சோறு சோறு சோறு என்றபடி...???🤣

1...உடுப்பை மாற்றினோம்

2...மொழியை மாற்றினோம்

3....உணவையும் மாற்றுகிறோம..  

நாங்கள் தமிழர்கள்   என்பதற்கு என்ன அடையாளம் உண்டு”?.   எங்கள் பிள்ளைகள் சிலர் கேட்பார்கள்.    சும்மா தமிழ்  தமிழ்   தமிழ்   என்ற படி......அவர்கள் கூட மாற்றங்களை விரும்புகிறார்கள்......அதிகாலையில் பழமையான சோற்றில். தண்ணீர் விட்டு சிறு வெங்காயம் பச்சை மிளகாய்.  உப்பு கல்.  கலந்து பாட்டிமார்   தருவார்கள்   ..அதனை குடித்து எந்தவித நோய் நெடி இன்றி   நல்ல ஆரோக்கியத்தோடு நமது முன்னோர்  வாழ்ந்து இருக்கிறார்கள்........இப்ப என்னடா என்றால்   புது  உணவுகள்   கூடவோ   ஆயிரம் நோய்களும்     ....சாப்பிடுங்கள் தொடர்ந்தும் சோற்றை   🤣😂😛

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

தாலி கட்டு வீட்டில் சோறு சாப்பிடுவதில்ல  பிரச்சினை

அங்கே  ஏன் மாட்டுக்கறி இருக்கவில்லை  என்பது கேள்வியண்ணே??

  • கருத்துக்கள உறவுகள்

@பெருமாள் @Nathamuni

என்னப்பா இது…யேசு கிறிஸ்து என்ன சைவ நாயன்மாரா?

அல்லது நம்ம குல தெய்வமா?

கிறிஸ்மஸ் தாத்தா என்ன தாடிச் சித்தரா?

கிறிஸ் மஸ் லஞ் எப்படி செய்ய வேணும் எண்டு அருணகிரி நாதர் பாடி வச்சிருக்காரா என்ன?

எல்லாமுமே,

கிரிஸ்மஸ், யேசு, கிப்ட், டிரீ, போடும் உடுப்புகள், குடிக்கும் வைன், கிறிஸ்மஸ் புடிங், ரிச் கேக் …

எல்லாமுமே அவர்கள் பாணியில் இருக்கும் போது சாப்பாடு மட்டும், புட்டும் மிளகாய் பொரியலும் வேண்டும் எண்டு அடம்பிடிக்கிறியள்.

இப்படி பார்த்தால் நீங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடாமல் அதை ஹராம் என்று ஒதுக்கி வைக்கும் ஆட்கள் போல அல்லவா இருக்க வேண்டும்.

எனக்கும் வான் கோழி பிடிக்காது, ஆனால் உருளை கிழங்கு ரோஸ்ட், கிரேவி, பிரசிள்ஸ் ஸ்பிரவுட்ஸ் எண்டு இருக்கும்தானே?

பிறகு ஸ்டாட்டரில் நல்ல வகை வகையா, ஒலிவ், சீஸ் இருக்கும். உலர்த்திய பழங்கள், கொட்டைகள் (நட்ஸ்) இருக்கும். 

ஒரு நாளாவது இப்படி சாப்பிடிவதுதானே?

9 minutes ago, Kandiah57 said:

வெள்ளைகாரன் நல்லூரில் சேர்ட் இல்லாமல் நிண்டால் …ஆகா…ஓகோ…யுடியூப் கதறும்.

ஜேர்மென் மக்கள் உலக உணவை எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள், வேற்றின கடைகளில் கூட்டம் அலைமோதும், இனவாதம் இல்லாதோர் என்று ஒரு திரியில் சற்று பெருமையாக சொன்னீர்கள்.

ஆனால் தமிழர்கள்  ஜேர்மனி வந்தாலும் பழஞ்சோறும், வெஙகாயமும் மட்டும்தான் சாப்பிட வேண்டும்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அப்பாடா

எனக்கு  நேரம் மிச்சம்🤣

இதுகள் இருந்திருந்தால், வெட்டி ஆடி சமாளிச்சு வந்திருக்க மாட்டாம? இவர்கள் ஒருபோதுமே, முறையான கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு போயிருக்கமாட்டார்கள். அரைகுறை விளக்கதோடை,  இன்னோரு கலாசாரத்துக்கிளை துளாவ நிக்குறது. தின்ன வாரதும் நம்மட ஆட்கள் தானே என்று நினைப்பது. அங்கயும் இல்லாமல், இங்கயும் இல்லாமல், விருந்தினரை அல்லாட வைப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

தாலி கட்டு வீட்டில் சோறு சாப்பிடுவதில்ல  பிரச்சினை

அங்கே  ஏன் மாட்டுக்கறி இருக்கவில்லை  என்பது கேள்வியண்ணே??

எனக்கு தெரிந்தளவில் வெள்ளைகள், கலியாணத்துக்கு வரும் போது, தேடி மினக்கெட்டு முழு விபரம் அறிந்தே வருகின்றனர். அங்க வந்து இறைச்சி கேட்கும் அளவில் விபரம் இல்லாமல் வர மாட்டார்கள்.

அண்மையில் ஒரு கலியாணம், வெள்ளை பொம்பிளை, நம்ம மாப்பிள்ளை. youtube எல்லாம் தேடி விபரம் அறிந்து, 6 cd மாப்பிள்ளை பகுதியில் இருந்து வாங்கி, பொருத்தமான உடைகளை வேட்டி, சாரி ப்ளௌஸ், வாங்கி போட்டு வந்தார்கள். எப்படி வேட்டி இடுப்பில் நிக்கிறது என்று ஒரு வெள்ளை இடம் கேட்டால், அதுவா, sticky வேட்டி என்று சொல்லி சிரித்தார். அதுவரை எனக்கு தெரியாது அப்படி ஒரு வேட்டி விக்கிறார்கள் என்று.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இதுகள் இருந்திருந்தால், வெட்டி ஆடி சமாளிச்சு வந்திருக்க மாட்டாம? இவர்கள் ஒருபோதுமே, முறையான கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு போயிருக்கமாட்டார்கள். அரைகுறை விளக்கதோடை,  இன்னோரு கலாசாரத்துக்கிளை துளாவ நிக்குறது. தின்ன வாரதும் நம்மட ஆட்கள் தானே என்று நினைப்பது. அங்கயும் இல்லாமல், இங்கயும் இல்லாமல், விருந்தினரை அல்லாட வைப்பது.

அட பாவமே. நான் இப்படி இடங்களில் போய் மாட்டினால் - அப்படியே கழண்டு வந்து நேரா வண்டிய விரும்பிய கடைக்கு விட்டுடுவன்🤣.

எனது நண்பர் ஒருவர், என்னை விட மோசம்.

ஒரு முறை ஒரு பார்ட்டியில் சைவ சாப்பாடு (வெள்ளி) - ஆள் அப்படி, இப்பிடி பார்த்து போட்டு, “நான் டேக் எவே எடுக்க போறன், வேற ஆருக்கு வேணும்” எண்டு கேட்டிட்டார்🤣

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தும் மருந்தும் தினசரி விடயங்களல்ல. எப்பவாவது வரும் ஒரு நிகழ்வான விருந்தில் தினசரி செய்வது போல சோத்தால் குழம்பை அணைகட்டிச் சாப்பிடாமல்😂 வித்தியாசமாகச் சாப்பிட்டால் ஒரு விக்கினமும் இல்லை. ஒப்பீட்டளவில் வான்கோழி (white meat), குறைந்த உப்புடைய சோஸ்கள் எங்கள் நாட்டு உணவுகளை விட ஆரோக்கியமானவை - எனவே நன்மை தான் உடலுக்கு.

விருந்தோம்புபவர் விருந்தாளியை எப்படி மதிக்க வேண்டுமோ, அதே போல விருந்தாளியும் விருந்தோம்புபவரின் உணவுக்கு ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பது தான் நல்ல மரபென நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை இப்படி யாராவது என் விருந்தின் உணவை பொது வெளியில் விமர்சித்து , எனக்கு "அரைகுறை" பட்டமும் தருகிறார்கள் என்று அறிந்தால் அவர்களுக்கு என்னுடைய வீட்டு நிகழ்வுகளில்  வாழ் நாள் தடை தான்!😎  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

அரைகுறை கூட்டம் .

சரியாச்சொன்னியள்.😁
எங்கட ரமில்ஸ்  எலும்புக்கறி போட்டு நூடில்ஸ் பிரட்டி எடுப்பினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை.....
கையாலை சாப்பிடுறதோ கரண்டியாலை சாப்பிடுறதோ  எண்டு திண்டாட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

இப்ப என்னடா என்றால்   புது  உணவுகள்   கூடவோ   ஆயிரம் நோய்களும்     ....சாப்பிடுங்கள் தொடர்ந்தும் சோற்றை   🤣😂😛

உலகம் முழுக்க சோறு இருக்கு. சாப்பிடுகிறார்கள்.
ஆனால் எங்கடை ஜாம்பவான்களுக்கு சோறு எண்டால் நக்கல்....

ஒவ்வொரு இனத்துக்கும் அவரவர் சாப்பாட்டை வைச்சு நக்கல் நளினம்  இருக்கும்.

ஜேர்மன்காரருக்கு கட்டோவில்.😁
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உலகம் முழுக்க சோறு இருக்கு. சாப்பிடுகிறார்கள்.
ஆனால் எங்கடை ஜாம்பவான்களுக்கு சோறு எண்டால் நக்கல்....

ஒவ்வொரு இனத்துக்கும் அவரவர் சாப்பாட்டை வைச்சு நக்கல் நளினம்  இருக்கும்.

ஜேர்மன்காரருக்கு கட்டோவில்.😁
 
தனக்கெடா சிங்களம் தன் பிரடிக்கு சேதம்.

நான் கிறிஸ்தவன் இல்லை. ஆனால் கிறிஸ்துமஸ் லஞ்ச் தயார் செய்து, கிறிஸ்தவர்கள் அல்லாத விருந்தாளிகளை அழைத்தால், அதுக்கு அமைய, உணவை மாத்தி அமைக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

அது புரியாமல், கிறிஸ்தவ வெள்ளியினத்தவரை அழைப்பது போல, உணவை தயாரித்து, வருபவர்கள் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தால், கதை கந்தல் தான்.

அடுத்த முறை வாங்கோ என்று கூப்பிட்டால், இல்லை... வேறு பார்ட்டி முன்னமே அழைப்பு வந்துடுது வர ஏலாது என்று காய் வெட்டி விடுவோம்.

கிறிஸ்துமஸ் பார்ட்டி செய்யுங்கோ.... முறையா செய்யுங்கோ. அந்த கிறிஸ்துமஸ் சாஸ் தான் வைப்பேன், வேறு chilli சாஸ், அல்லது பெரி-பெரி சாஸ் ஒன்றும் தர ஏலாது. வெள்ளைகள் இதோட தானே சாப்பிடுகினம் என்ற ரீதியில் நடந்தால்... அலுப்பு தான் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.