Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலேடை நயம்

Featured Replies

  • தொடங்கியவர்

நல்லது சுவி. அறிந்தவற்றை இணயுங்கள்.

இது காளமேகம், தன் அத்தைமகள் சமைத்த உணவைப்பற்றி பாடியது. எல்லாச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பொருளெழுதவும்.

கரிக்காய பொரித்தாள்கன் னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக்காண் சீச்சி உமி.

:lol::lol:

ஈழத்திருமகன்... "்இம்சை அரசன் 23ம் புலிகேசி" படத்திலயும் அரசனை போற்றிப் பாடுவது போல் இகழ்ந்து ஒரு கவிதை சொல்லப்படும்.

ஏன் இங்கு கருத்துக்களத்தில் கூட பல சிலேடைகள் புகுந்து விளையாடியிருக்கின்றன. அவற்றில் சில மாபெரும் புரட்சியை உண்டுபண்ணியும் உள்ளன :lol:

:lol::lol: ஆமாம்.

புலிகேசியின்மேல் பாடப்பட்ட சிலேடையை இணைத்துவிடுங்கள். B)

Edited by Eelathirumagan

  • Replies 69
  • Views 37.2k
  • Created
  • Last Reply

மன்னா மாமன்னா நீ ஓர் மாமா மன்னா

பூமாரி தேன்மாரி நான்பொழியும் நீ ஓர் முல்லைமாரி

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி

தேடிவரும் வறியவர்க்கு மூடா

நெடுங்கதவு உன்கதவு

என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு

எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாகு

அகிலங்களைக் காக்கும் ஓர் அண்டங்காக்கா....

நன்றி: தமிழ் விக்கிபீடியா

  • தொடங்கியவர்

ஒருமுறை ஔவைப்பாட்டி ஒரு வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார். பாவம் அந்த வீட்டு தலைவன். அவர் மனைவிக்கு மிகவும் பயந்தவர். ஔவையார் விருந்துக்கு வந்தபின் என்ன நடைபெற்றதென்பதை அவரே பாடிவிடுகிறார்.

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி

விருந்தொன்று வந்ததென விளம்ப - வருந்திமிக

ஆடினாள் பாடினாள் ஆடிப் பழம்முறத்தால்

சாடினாள் ஓடோடத் தான்.

இருந்து முகந்திருத்தி - தன் மனைவிக்கு அருகில் சென்று அமர்ந்து, இனிய கதைகள் பேசி என்றுமே சிடுசிடுவென இருக்கும் அவள் கொடிய முகத்தில் சிறிது மகிழ்ச்சி வரும்படியாக அதை திருத்தி,

ஈரோடு பேன்வாங்கி - மனைவி தலையில் ஈர் பேன் என்பவற்றை வாரியெடுத்து (நயமாக நடப்பதாக காண்பித்து)

விருந்தொன்று வந்ததென விளம்ப - இஞ்சரப்பா, எங்கடை வீட்டுக்கு விருந்து சாப்பிட ஒருவர் வந்திருக்கிறார் என சொன்னதுதான் தாமதம் :lol::lol:

வருந்திமிக - மிக்க கோபமுற்று

ஆடினாள் பாடினாள் - உருத்திர தாண்டவமாடி, வசைமொழிகள் பேசி

ஆடிப் பழம்முறத்தால் சாடினாள் ஓடோடத்தான் - கிடந்த பழைய முறத்தினால் (முறம் - சுழகு) கணவனை ஓடோட விரட்டி விரட்டி அடித்தாள். B) B)

Edited by Eelathirumagan

தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய எம்பெருமான் என்ற தமிழ்ப் புலவர் ஒருவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் பூங்கோதை. சிறந்த தமிழ் அறிவும், வேத உபநிடதங்களில் ஆழ்ந்த அறிவையும் பெற்ற மங்கை நல்லாள் இவர்.

ஒரு நாள் புலவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது சில புலவர்கள் அவரைப் பார்த்து அளவளாவி மகிழ அவர் இல்லத்திற்கு வந்தனர். புலவர் பெருமான் வெளியில் சென்றிருப்பதை அறிந்த அவர்கள் வீட்டில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு பெண்களைப் பற்றித் திரும்பியது.

எவ்வளவு தான் பெண்கள் படித்தாலும் அவர்களுக்கு முதிர்ந்த அறிவு உண்டாகாது என்றும் பெண் மக்கள் ஆணுக்குத் தாழ்ந்தவர்களே என்றும் அவர்கள் தம்முள் பேசி மகிழ்ந்தனர்.

வீட்டின் உள்ளே இருந்து இவர்களின் பேச்சைச் செவி மடுத்த பூங்கோதையார் ஒரு சிறிய ஓலை நறுக்கில் வெண்பா ஒன்றை எழுதி சிறுவனிடம் கொடுத்து புலவர்களின் பார்வைக்கு அனுப்பினார்.

"அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர்

அறிவின் முதிஞரே ஆவர் - அறிகரியோ

தான் கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள்

தான் கொண்ட சூலறியார் தான்"

என்ற வெண்பாவைப் படித்த புலவர்கள் பெரும் வியப்பை அடைந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேச முடியாமல் வெட்கம் அடைந்தனர். "அறிவில் ஆண்களை விடப் பெண்களே உயர்ந்தவர்கள்; தான் கொண்டிருக்கும் கர்ப்பத்தைப் பெண்களே அறிவர். ஆண்கள் அதை அறிய மாட்டார்கள் என்பதை அறியவில்லையோ?' என்ற கருத்தும் உயர்ந்தது; அதை ஏற்கவும் முடியவில்லை; மறுக்கவும் முடியவில்லை; அதைச் சொல்லிய தமிழ் அவர்களுக்குத் தேனாய் இனித்தது!

அந்தச் சமயத்தில் உள்ளே வந்தார் புலவர் பெருமான். திகைப்புற்று இருக்கும் நண்பர்களிடம் "என்ன விஷயம்?" என்றார். அவர்கள் ஓலை நறுக்கைக் காட்டினர். அவர் நகைத்தார். தன் மனைவியிடம் இப்படி ஆண் மக்களை இழித்துக் கூறலாமா?" என்று கேட்டார். உள்ளிருந்தபடியே நடந்ததைக் கூறிய பூங்கோதையார், "நான் இந்தப் பாடலில் ஆண்களை இகழவில்லையே! ஆன்மாவானது நீர்த்துளி வழியாகப் பூமியில் சேர்ந்து உணவு வழியாகப் புருஷ கர்ப்பத்தில் தங்குகிறது. பிறகு பெண்ணின் கருப்பையை அடைந்து கர்ப்பமாகி குழந்தையாகப் பிறக்கிறது. இதை உபநிடதங்கள் விளக்கவில்லையா? பெண்கள் தான் கர்ப்பமானதை அறிவது போல ஆண்கள் தங்கள் கர்ப்பத்தை உணராமல் இருப்பது உண்மைதானே!" என்றார். உயர்ந்த உபநிடதக் கருத்தைக் கேட்ட புலவர்கள் மெய் சிலிர்த்தனர்.

பிரம சூத்திரமும் சிவ ஞான போதமும் விளக்கும் உயிர்ப் பிறப்பு ஒரு பெரும் ரகசியம்! மேலுலகம் சென்ற உயிர் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் என்று ஐந்து இடத்தில் புகுந்து வருவதை தியானிக்கும் வித்தை பஞ்சாக்கினி வித்தை என்பதை ஞானிகள் அறிவர்! சொர்க்கம் சென்ற ஆன்மா மேகம் வழியே மழையாக மாறி உணவுப் பொருளாக ஆகி ஆண் தேகத்தில் விந்துவாக இரண்டு மாதம் இருந்து பின் பெண்ணின் சேர்க்கையால் பத்து மாதம் கர்ப்பத்தில் இருந்து குழந்தையாகப் பிறக்கிறது என்ற அரிய தத்துவத்தை அறிந்த புலவர்கள் பெண் தமிழைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து பெண்ணே உயர்ந்தவர் என்று கருத்துக் கூறி விடை பெற்றனர்.

இந்த அற்புதமான உண்மை வரலாற்றை அப்படியே ஒரு பாடலில் சொல்கிறது கொங்கு மண்டல சதகம்!

"குறுமுனி நேர் தமிழ் ஆழியுண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட

சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே"

- பாடல் -65

தமிழ் முனிவர் அகத்தியர் போன்ற பல புலவரும் வியக்கும் வண்ணம் அறிவில் இளையவர்கள் ஆண்களே என்று நிலை நிறுத்திய எம்பெருமான் புலவரின் மனைவி வாழ்ந்த பெருமையை உடையது கொங்கு மண்டலம் என்று சதகம் கூறும் போது பெண்ணின் பெருமையையும் பெண் தமிழின் மென்மையையும் அவர் சொல்லின் வன்மையையும் உணர்கிறோம் இல்லையா?

நன்றி நிலாச்சாரல்

Edited by Rasikai

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல் கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

அத்திக்காய் காய்காய்.............

அவரைக்காய் அவரின் பக்கமா காய் ( எறித்தல்)

கோவைக்காய் கோ (அரசன்ஈ, தலைவன்) எனது தலைவன் பக்கமாக காய்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழிப்போக்கர் ஒருவர் நடந்து வந்தபோது ஓரு குளத்தைக் கண்டதும் சாப்பிட்டு இளைப்பாற நினைத்து தான் கொண்டுவந்த கட்டுச்சாதத்தை அருகேயிருந்த அரசமரத்தின் கீழ் வைத்துவிட்டு கை, கால் அலம்ப குளத்தில் இறங்கினார். பின் கை, கால் கழுவிவிட்டு மேலே வந்து தான் வைத்த இடத்தில் சாப்பாட்டு மூட்டையைத் தேடியபோது அதைக் காணவில்லை. நிமிர்ந்து பார்த்தபோது ஒரு பிள்ளையார் சிலையொன்று கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். உடனே அவருக்கிருந்த பசிக்களைப்பில் பிள்ளையாரைப் பார்த்து:

தம்பியோ பெண்திருடி -- தாயாரோடுடன் பிறந்த

மா மாயன் வம்பனோ நெய்திருடி --மூத்தவனும்

நம்பால் முடிச்சவிழ்த்தான்-- என் செய்வேன்

உங்கள் கோத்திரத்துக்கு ள்ளகுணமே!

என்று பாடினார்.

கருத்து: தம்பி முருகன் வள்ளியைத் திருடியவன்,

மாமன் கன்னன் கோகுலத்தில் நெய் திருடியவன்,

மூத்தவனாகிய நீ கூட என்ர பொதியைத் திருடிவிட்டாய்,

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, ஏனென்றால் அது உன் பரம்பரைக்கே உள்ள குணம்தான்.

  • தொடங்கியவர்

சுவி.. :lol::)

  • தொடங்கியவர்

காளமேகம் தில்லை நடராசரை தரிசித்து மீண்டபோது தில்லை மூவாயிரர் "நடராசர் கையில் இருக்கும் மான் தன் முகத்தையும் முன்னங்கால்களையும் அவர் திருமுகத்துக்கு நேராக உயரத் தூக்கியிருப்பதன் காரணம் என்னவோ?" என கேட்டனர். அதற்கு காளமேகம்,

பொன்னம் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்

தன்னெஞ்சு உவகையுறத் தாவுமே - அன்னங்கள்

செய்கமலட்த்து உற்றுலவும் தில்லை நடராசன்

கைக்கமலத்து உற்றமான் கன்று.

பொன்னம்பலத்தானுடைய சடை (சடாமுடி) அறுகம்புல் போன்றது. அவர் தலையில் கங்கை குடிகொண்டிருப்பதால் பூம் புனலும் கிடைக்கும். எனவே அறுகம்புல்லும் தண்ணீரும் கிடைத்ததென மிக அகமகிழ்ந்து தன் முன்னங்கால்களை உயர்த்தி நடராசரை நோக்க்கி பாய்கிறது என பொருள்படும்படி வெண்பா பாடினார்.

  • தொடங்கியவர்

சிலேடையில் காளமேகத்தை விஞ்சியவர் இல்லை எனலாம்.. இங்கு எலுமிச்சம் பழத்துக்கும் பாம்புக்கும் பொருந்தும்படி வெண்பா பாடியிருக்கிறார். :lol::)

பெரியவிட மேசேரும் பித்தர்முடி ஏறும்

அரியுண்ணும் உப்பும்மேல் ஆடும் - எரிகுணமாம்

தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம்.

பெரியவிடமே சேரும் - எலுமிச்சை பெரியவர்களுக்கு மரியாதை நிமித்தம் தரப்படுவது. பாம்பில் பெரிய விசமே இருக்கிறது.

பித்தர் முடியேறும் - பித்தம் பிடித்தவர் தலையில் எலுமிச்சை வைத்து தேய்ப்பார்கள். பித்தனாகிய சிவன் தலையில் இருப்பதும் பாம்பே.

அரியுண்ணும் - எலுமிச்சை பழம் அரிபடும் (ஊறுகாய்க்காக வெட்டுப்படும்), பாம்பும் காற்றை (அரி) உண்ணும்.

உப்பும் - எலுமிச்சம்பழ ஊறுகாய்க்கு உப்பும் சேர்க்கப்படும். பாம்பு உப்பிப் பெருக்கும்.

எரிகுணமாம் - எலுமிச்சை காயத்தில் பட்டால் எரியும். பாம்பின் கடிவிடமும் எரியும்.

என்று வருகிறது இந்தப் பாடல்.

கண்ணதாசனின் பாடல் ஒன்று.

பெண்ணை அப்படியே நிர்வாணமாய் பாடி இருக்கிறார் கவியரசு.

பளிங்கினால் ஒரு மாளிகை - பளிங்கு போன்ற உடல்

பருவத்தால் மணிமண்டபம் - பலர் கூடும் மண்டபம் (பெண்ணுறுப்பு)

உயரத்தில் ஒரு கோபுரம் - கொஞ்சம் உயரத்தில் இருக்கும் மார்பகம்

உன்னை அழைக்குது வா!

(ஐயையோ வரமாட்டேன் :D )

இன்னொரு கண்ணதாசன் பாடல்:

கனவில் நடந்ததோ

கல்யாண ஊர்வலம்

கனிந்து வந்ததோ

மேனியில் கள்ளூறும் நாடகம்.

(அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்)

Edited by vettri-vel

வெற்றிவேல் நன்றி பாடல் வரிகளுக்கு :P

அந்தக் காலத்தில இரட்டை அர்த்தத்தில் எப்படி எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். ஆனாலும் அதில் இலக்கிய நயம் இருக்கிறது. இன்று ??? :)

  • கருத்துக்கள உறவுகள்

காளமேகபுலவர் எழுதியது

காக்கைக்காகாகூகை கூகைக்காகா காக்கை ..."

இந்தப் பாடல்களை ஒருவர்க்கப்பாடல்கள் என்று சொல்வார்கள்.

இந்த குறிப்பிட்ட பாடல் "க" வரிசையை மட்டுமே கொண்டு விளங்குகிறது.

அதனை "ககர வர்க்கப்பாடல்" என்று கூறுவார்கள்.

"காக்கைக்காகாகூகை கூகைக்காகாகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைகா கா!"

இதனைப்பிரித்துப் படிக்கவேண்டும்.

காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகையை(ஒரு வகை ஆந்தை)

இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.

கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை

வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.

கோக்கு கூ காக்கைக்கு

கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு

கூ = புவி

காக்கைக்கு = காப்பதற்கு

கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும். திருக்குறள்: "கொக்கொக்க கூம்பும்பருவத்து..."இல்லையெனில்,

கைக்கைக்கு = பகையை எதிர்த்து

காக்கைக்கு = காப்பாற்றுதல்

கைக்கைக்காகா = கைக்கு ஐக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.

இந்தப்பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து,

வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.

உதவி :- அகத்தியர் தொடுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமயம் கடைமடை என்னும் ஊரிலிருந்து வேம்பு என்னும் புலவர் அரசசபைக்கு விரைந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆறு. பரிசிலில்(ஓலைப்படகு) அதைக் கடந்து வரத் தாமதமாகிவிட்டது. புலவர்களால் அவை நிரம்பியிருந்தது. அன்று புலவர்சபைக்கு அரசனும் வந்திருந்ததால் எல்லோரும் உற்சாகமாக இருந்தனர். நம்ம புலவர் வேம்புவுக்கு அமர ஆசனம் கிடைக்கவில்லை. அதைக்கவனித்த தலைமைப் புலவர், இவருக்கும் வேம்புவுக்கும் எப்போதும் ஒரு சுவாரஸ்யமான உரசல் இருந்துகொண்டேயிருக்கும்.(இந்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் வணக்கம்.

இப்போதுதான் இங்கே நுழைந்தேன். சிலேடைக் கவிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. 'தனிப்பாடல் திரட்டு" என்ற புத்தகத்தில் இங்கு இருப்பவற்றில் பலவற்றைக் காணலாம்.

எட்டேகால் லட்சணமே... என்று ஆரம்பிக்கும் பாடல் ஒளவையார் விடயத்தில் மனத்தில் வேறுபாடு கொண்ட கம்பர் அவளை, 'அடீ' என்று அலட்சியமாக முன்னிலைப் படுத்தி விளித்தபோது பாடியது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கம்பர் காலத்தில் ஒளவையார் வாழ்ந்தாரோ இல்லையோ எமக்கு அருமையான சிலேடைக் கவி கிடைத்தது மட்டும் உண்மை.

ஒரு வழிப்போக்கர் ஒருவர் நடந்து வந்தபோது ஓரு குளத்தைக் கண்டதும் சாப்பிட்டு இளைப்பாற நினைத்து தான் கொண்டுவந்த கட்டுச்சாதத்தை அருகேயிருந்த அரசமரத்தின் கீழ் வைத்துவிட்டு கை, கால் அலம்ப குளத்தில் இறங்கினார். பின் கை, கால் கழுவிவிட்டு மேலே வந்து தான் வைத்த இடத்தில் சாப்பாட்டு மூட்டையைத் தேடியபோது அதைக் காணவில்லை. நிமிர்ந்து பார்த்தபோது ஒரு பிள்ளையார் சிலையொன்று கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருந்ததைக் கண்டார். உடனே அவருக்கிருந்த பசிக்களைப்பில் பிள்ளையாரைப் பார்த்து:

தம்பியோ பெண்திருடி -- தாயாரோடுடன் பிறந்த

மா மாயன் வம்பனோ நெய்திருடி --மூத்தவனும்

நம்பால் முடிச்சவிழ்த்தான்-- என் செய்வேன்

உங்கள் கோத்திரத்துக்கு ள்ளகுணமே!

என்று பாடினார்.

கருத்து: தம்பி முருகன் வள்ளியைத் திருடியவன்,

மாமன் கன்னன் கோகுலத்தில் நெய் திருடியவன்,

மூத்தவனாகிய நீ கூட என்ர பொதியைத் திருடிவிட்டாய்,

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, ஏனென்றால் அது உன் பரம்பரைக்கே உள்ள குணம்தான்.

என் மனதில் நிழலாடும் பாடல்களில் ஒன்று இது. அது இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணுகிறேன்.

தம்பியோ பெண்திருடி தாயாருடன் பிறந்த

வம்பனோ நெய்திருடும் மாமாயன் - நம்பியின்

மூத்தவனோ நம்பால் முடிச்சவிழ்த்தான் என்செயலாம்

கோத்திரத்திற் குள்ள குணம்.

என்று வெண்பாவின் சீர்கள் கெடாமல் வரவேண்டும் என்பதே என் கருத்து. தவறென்றால் மன்னிக்கவும்.

காளமேகத்தின் சிலேடைப் பாடல்களுக்கு இணை எதுவுமில்லை. 'சொல் சாதுரியம்' என்பதன் கீழிருக்கும் ஒரு பாடலைப் பாருங்கள்.

பூனைக்கி ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால்

ஆனைக்குக் கால்பதினே ழானதே - மானேகேள்

முண்டகத் தின்மீது முழுநீலம் பூத்ததுண்டு

கண்டதுண்டு கேட்டதில்லை காண்.

பொருள்: பூக்களை நக்கும் வண்டுகளுக்கு ஆறு கால்களும், பறவைக் கூட்டத்திற்கு ஒன்பது கால்களும்

(9/4= 2 1/4), யானைக்குப் பதினேழு கால்களும் (17/4=4 1/4 ) ஆயினவோ, மான்போல கண்களையுடைய பெண்ணே! நான் சொல்லுவதைக் கேட்பாயாக. முட்கள் கொண்ட தாமரை (முண்டகம்) மலரின் மேல் நீலோற்பல மலர்கள் பூத்திருப்பதுண்டு. பார்த்திருப்பதுவும் உண்டு ஆனால் காதால் கேட்டதே கிடையாது. என்று இருக்கிறது.

Edited by Selvamuthu

சோழ அரசவையில் கம்பரின் சபையமர்வில் நடந்ததாகக் கூறப்பட்ட சம்பவமொன்றில் சிலேடை நயமுடைய பாடலொன்று எப்போதோ வாசித்த ஞாபகம். நினைவில் நிற்பதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

ஏழையொருவன் அரசனைப் பாடிப் பொருள் பெற விரும்பினான். அதனால் இன்னொரு புலவனையணுகி விபரத்தைக் கூறி பாடல் பாடுவது எவ்வாறெனக் கேட்டான். புலவனோ அந்த ஏழைமீது எரிந்து விழுந்து எதையாவது கன்னா பின்னா என்று பாடெனக் கூறிவிட்டான். அறிவிலியான அந்த ஏழையும் அரசனைப்பார்க்கச் சென்றான். செல்கின்ற வழியில் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து "காவிறையே" என்றான். இன்னும் சற்று அப்பால் சென்றபோது, குயில் கூவும் குரல் கேட்டது. அதைப்பார்த்துக் "கூவிறையே" என்றான். தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, சோழ மன்னனின் தகப்பனால் கட்டப்பட்ட கோயில் ஒன்றிலிருந்து எலியொன்று வெளியே ஓடியது. அதைக் கண்டதும் "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" என்று சொலிக்கொண்டு அரசவையை அடைந்தான். மன்னனையும் ஏனையோரையும் வணங்கி, தான் வந்த விபரத்தைக் கூறினான். மன்னரும் மகிழ்ந்து பாடலைக் கூறும்படி கேட்க அந்த ஏழை பின் வருமாறு பாடினான்.

"காவிறையே கூவிறையே உங்களப்பன்

கோவிலில் பொருச்சாளி "

இந்த இருவரிகளின் பின் எப்படி முடிப்பதென அறியாது, புலவன் சொல்லியது போல மிகுதியைப் பாடிவிட்டான்.

"கன்னா பின்னா தென்னா மன்னா

சோழமங்கப் பெருமானே."

பாடலைக் கேட்டு சபையேர் சிரிக்க அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனைச் சிரச்சேதத்திற்கு உத்தரவிட்டார். அவனது பரிதாப நிலை கண்டு சபையிலிருந்த கம்பர் அவன் சரியாகத்தான் பாடியுள்ளான் எனக் கூறி அதற்கு விளக்கம் சொன்னாராம்.

காவிறையே "கா" என்றால் ஆகாயம். அங்கு அரசன் இந்திரன். "கூ" என்றால் பூமி. பூமிக்கு அதிபதியானவனே. உன் தந்தையானவர் "கோ" அரசன். அவர் வில்வித்தையில் சிறந்த தேர்ச்சியுடையவர். "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" "கான்னா" கொடையிற் சிறந்தவன். "பின்னா" கன்னனுக்குப் பின் பிறந்தவன். "தர்மன்".

  • 5 years later...

முழுவதாக சிலேடையாகப் பாடாவிட்டாலும் மணிவாசகர் ஒரு சிலேடை சம்பவத்தை பாடியிருக்கிறார் திருவெம்பாவை 7 ம் பாடலில்

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவுவார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : பைங்குவளை - பசுமையான குவளையின், கார் மலரால் - கருமையான மலர்களை உடைமையாலும், செங்கமலப் பைம்போதால் - செந்தாமரையினது குளிர்ந்த மலர்களை உடைமையாலும், அங்கும் குருகு இனத்தால் - கையில் வளையற்கூட்டத்தை உடைமையாலும் (அம்கம் - அழகிய நீர்ப்பறவைகளையுடைமையாலும்) பின்னும் அரவத்தால் - பின்னிக் கிடக்கின்ற பாம்பணிகளாலும் (மேலும் எழுகின்ற ஒலியுடைமை யாலும்) தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - தங்களுடைய மும்மலங்களை நீக்கிக்கொள்ளக் கருதுவோர் வந்து அடைதலினாலும் (தம் உடம்பிலுள்ள அழுக்கைக் கழுவுதற்பொருட்டு மூழ்குவார் வந்து அணைவதாலும்), எங்கள் பிராட்டியும் - எம்பெருமாட்டியையும், எம் கோனும் போன்று - எங்கள் பெருமானையும் போன்று, இசைந்த - பொருந்தியுள்ள, பொங்கு மடுவில் - நீர் பொங்குகின்ற மடுவையுடைய பொய்கையில், புகப் பாய்ந்து பாய்ந்து - புகும்படி வீழ்ந்து மூழ்கி, நம் சங்கம் சிலம்ப - நம் சங்கு வளையல்கள் சத்திக்கவும், சிலம்பு கலந்த ஆர்ப்ப - காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும், கொங்கைகள் பொங்க - தனங்கள் பூரிக்கவும், குடையும் புனல் பொங்க - முழுகுகின்ற நீர் பொங்கவும், பங்கயப் பூம்புனல் - தாமரை மலர்கள் நிறைந்த நீரில், பாய்ந்து ஆடு - பாய்ந்து ஆடுவாயாக.

விளக்கம் : பொய்கையானது, கருங்குவளை மலரையுடைத்தாதலின் எம்பிராட்டி திருமேனி போன்றும், செந்தாமரை மலரையுடைத்தாதலின், எம்பிரான் திருமேனி போன்றும் இருந்தது. ‘குருகு’ என்பது, சிலேடையால் வளையலையும், பறவையையும் குறித்தது. ‘அரவம்’ என்பதும், அவ்வாறே பாம்பையும் ஒலியையும் குறித்தது. மடு, குருகினத்தை உடைமையால் எம்பிராட்டி போன்றும், அரசத்தை உடைமையால் எம்பிரானைப் போன்றும் இருந்தது என்க. பைங்குவளைக் கார் மலரையும் செங்கமலப் பைம்போதினையும் கண்ட அடிகட்கு, அம்மையப்பரது காட்சியே தோன்றியதால், இவ்வாறெல்லாம் சிலேடை முறையால் மடுவைப் புனைந்துரைத்தருளினார். கன்னிப் பெண்கள் நீராடிய போது பொய்கையை அம்மையப்பராகக் கண்டு பாடியபடியாம்.

இதனால், எப்பொருளையும் இறைவனாகக் காணுதலே சிறப்பு என்பது கூறப்பட்டது.

Edited by மல்லையூரான்

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
. அமர்க்கள‌ம் திரைப்படத்தின்  'மேகங்கள் என்னைத்தொட்டு..' என்ற பாடலில் வரும்
'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தின‌ந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன், இதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?' 
என்ற வரிகளில் சிலேடையின் சிகரம் தொட்டிருப்பார். இதில் முதலாவது செவ்வாய்‍  செவ்வாய்க்கிரகம், அடுத்தது செவ் வாய் (சிவந்த வாய்). அந்த வாய் உதிரப்போகும் வார்த்தையில் தான் அவன் உயிர் உள்ளது என்ற அர்த்தத்தில் வரும் இந்த சிலேடை வைரமுத்துவின் தமிழ் ஆளுமைக்கு ஒரு சோறு பதம்.
 
2006101400680101.jpg
நீண்ட நாளைக்கு முன்பு எழுதிய ஒன்று...
 
ஜென்டில்மேன் படத்தில் வரும் பாடல் 
 
"ஒட்டகத்தை கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி"
 
சாதரணமாக படிக்கும்போது ஒன்றும் தெரியாது.  ஒட்டம் என்பதற்கு வேறு பொருள் ஒன்று உண்டு எனத் தெரிந்தால் கொஞ்சம் இனிமை கூடும். 
 
ஒட்டம் - மேல் உதடு
இதழ் - கீழ் உதடு
 
இப்பொழுது வாசித்துப் பாருங்கள் 
 
"மேலுதட்டை கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ"
 
முத்தம் இடும்போது இதழ் பருகுவது என்பது கீழ் உதடைச் சுவைப்பதுதான். கீழ் உதடைச் சுவைப்பதைப் போல மேல் உதடை அவ்வளவு எளிதாகச் சுவைக்க முடியாது(திருமணம் ஆனவர்கள் உடனே முயற்சி செய்து பார்க்கலாம் :) )
 
ஒட்டகத்திற்குப் பெயர் வந்ததும் ஒட்டத்தின் அமைப்பில் இருந்து வந்திருக்கக் கூடும். ஒட்டத்தின் (மேலுதட்டை) அமைப்பை அப்படியே கவனமாகப் படம் வரைந்து பார்த்தால் அது ஒட்டகத்தின் முதுகை ஒத்திருக்கும்.

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • 5 years later...

 ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவர் இல்லத்தார் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டனர்.   இறுதியில் அவருக்குப் பால் கொடுப்பதற்காக ஒரு துணியில் பாலை முக்கி அவருக்குக் கொடுத்தார்கள். அவர் முகத்தை சுளித்தார். உடனே ஏன் "பால் கசக்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் உடனே "பாலும் கசக்கவில்லை நூலும் கசக்கவில்லை" என்று துணி அழுக்காக இருப்பதை நயமுடனே சுட்டிக் காட்டினார்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
1.கவி காளமேகம் – நகைச்சுவை பாடல்
நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்குஉணவு அருந்துவதற்காக கவிஞர் காளமேகபுலவர் ஒரு தடவை சென்றிருந்தார்.நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை.
பசியின் உச்சத்துக்குப் போன பின்னரே உணவு வந்தது .உண்ட பின் காளமேகம் கவிதை பாடினார்.“கத்துக்கடல் நாகைக்காத்தான் தன் சத்திரத்தில்அத்தமிக்கும்போதில் அரிசி வரும் – குத்தி உலையில் இட ஊர் அடங்கும்;ஓரகப்பை அன்னம் இலையில் இட வெள்ளி எழும்.”
பாடலைக் கேட்ட பின்னர்தான் உரிமையாளருக்கு, வந்திருப்பது காளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கேதனது சத்திரத்திற்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்தகாத்தான், காளமேகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
காளமேகம் நிலைமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தைஇவ்வாறு சொல்லிக் கொண்டார்.
”காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டைமூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம், வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்.”
-------------------------------------------------------------------------------------------------------2. ஏழையொருவன் அரசனைப் பாடிப் பொருள் பெற விரும்பினான். அதனால் இன்னொரு புலவனையணுகி விபரத்தைக் கூறி பாடல் பாடுவது எவ்வாறெனக் கேட்டான். புலவனோ அந்த ஏழைமீது எரிந்து விழுந்து எதையாவது கன்னா பின்னா என்று பாடெனக் கூறிவிட்டான். அறிவிலியான அந்த ஏழையும் அரசனைப்பார்க்கச் சென்றான். செல்கின்ற வழியில் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து "காவிறையே" என்றான். இன்னும் சற்று அப்பால் சென்றபோது, குயில் கூவும் குரல் கேட்டது. அதைப்பார்த்துக் "கூவிறையே" என்றான். தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது, சோழ மன்னனின் தகப்பனால் கட்டப்பட்ட கோயில் ஒன்றிலிருந்து எலியொன்று வெளியே ஓடியது. அதைக் கண்டதும் "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" என்று சொலிக்கொண்டு அரசவையை அடைந்தான். மன்னனையும் ஏனையோரையும் வணங்கி, தான் வந்த விபரத்தைக் கூறினான். மன்னரும் மகிழ்ந்து பாடலைக் கூறும்படி கேட்க அந்த ஏழை பின் வருமாறு பாடினான்."காவிறையே கூவிறையே உங்களப்பன்கோவிலில் பொருச்சாளி " (இந்த இருவரிகளின் பின் எப்படி முடிப்பதென அறியாது, புலவன் சொல்லியது போல மிகுதியைப் பாடிவிட்டான்)"கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே."
பாடலைக் கேட்டு சபையேர் சிரிக்க அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனைச் சிரச்சேதத்திற்கு உத்தரவிட்டார். அவனது பரிதாப நிலை கண்டு சபையிலிருந்த கம்பர் அவன் சரியாகத்தான் பாடியுள்ளான் எனக் கூறி அதற்கு விளக்கம் சொன்னாராம்.
காவிறையே கூவிறையே உங்களப்பன்கோவிலில் பொருச்சாளி "
"கன்னா பின்னா தென்னா மன்னாசோழமங்கப் பெருமானே."

காவிறையே "கா" என்றால் ஆகாயம். அங்கு இறைவனாக அரசனாக இருப்பவன் இந்திரன். "கூ" என்றால் பூமி. பூமிக்கு அதிபதியானவனே. உன் தந்தையானவர் "கோ" அரசன். அவர் இந்திரன் போன்று வில்வித்தையில் சிறந்த பெருமைமிக்க தேர்ச்சியுடையவர். "உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி" "கான்னா" கொடையிற் சிறந்தவன் (கர்ணன்) "பின்னா" கண்ணனுக்குப் பின் பிறந்தவன் "தர்மன்". இவ்வாறு கொடை வழங்குவதில் கர்ணணுக்கும் அறசெயல்களில் தர்மனுக்கும் இணையாணவர் எங்கள் சோழ மன்னன் என்று பாடலுக்குப் பொருள் கூறினார்.

சோழமன்னன் மகிழ்ந்து பரிசு வழங்கி சிறப்பித்தான்.



"பாம்பும்" "எள்ளும்" ஒன்றே தான் என்று கவி காளமேகம் பாடிய ஒரு சிலேடை. ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டைபற்றில் பரபரவெனும் பாரில்பிண்ணாக்கும் உண்டாம்உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.எள்ளு செக்கிலே கடையப்பட்டு (ஆடி) எண்ணெய்க்குடத்திலே சேரும். பாம்பும் படமெடுத்தாடியபின் பாம்பாட்டி கொண்டுவரும் குடத்தில் அடைந்துவிடும்.எள்ளு செக்கிலே கடையப்படும் போது இரைவதுபோன்ற சந்தம் எழுப்பும். பாம்பும் படமெடுத்தாடும்போது சினந்து சீறும்எண்ணெய் வைத்துள்ள குடத்தின் மூடியை திறந்தால் அங்கு பார்ப்பவரின் முகத்தை கண்ணாடிபோல் காட்டும். பாம்பு இருக்கும் குடத்தின் மூடியை திறந்தாலும் பாம்பு "எட்டி முகம் காட்டும்". எள்ளெண்ணெயை தலையில் (மண்டை) தேய்த்தால் அது பரபரவென தலையோட்டினுள் ஊடுருவி செல்லும். பாம்பின் தலையை பிடித்தால் அதுவும் பரபரவென சுற்றிக்கொள்ளும்.எள்ளில் இருந்து வருவது எள்ளுப் பிண்ணாக்கு. பாம்பின் நாக்கும் பிளவுபட்ட நாக்கு (பிண்ணாக்கு).
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.