Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி உள்ளாட்ச்சி சபை தேர்தல்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி (09/03/2023) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கும் என தேர்தல்கள் திணைக்களம் சற்று முன் அறிவித்துள்ளது.

https://www.newswire.lk/2023/01/21/sri-lanka-local-council-elections-on-march-9th/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போவதானால் தேர்தலுக்கு முன் போகலாமா?

தேர்தலுக்கு பின் போகலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கை போவதானால் தேர்தலுக்கு முன் போகலாமா?

தேர்தலுக்கு பின் போகலாமா?

இது உள்ளாட்சி தேர்தல்தானே. பெரிய அலுப்பு இராது. 

தேர்தல் நேரம் போனால் நல்லா கூத்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

தேர்தல் நேரம் போனால் நல்லா கூத்து பார்க்கலாம்.

சீ சீ

சாராயத்தை வாங்கி தந்து கள்ளவாக்கு போடச் சொல்லி கரைச்சல்படுத்தலாம்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

சீ சீ

சாராயத்தை வாங்கி தந்து கள்ளவாக்கு போடச் சொல்லி கரைச்சல்படுத்தலாம்.

நீங்கள் விடையை வைத்துக்கொண்டு எங்களை  ரெஸ்ட்  பண்ணிப்பார்த்து இருக்கிறீங்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

நீங்கள் விடையை வைத்துக்கொண்டு எங்களை  ரெஸ்ட்  பண்ணிப்பார்த்து இருக்கிறீங்கள்.🤣

சிலர் வேறு மாதிரியும் சிந்திக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

சீ சீ

சாராயத்தை வாங்கி தந்து கள்ளவாக்கு போடச் சொல்லி கரைச்சல்படுத்தலாம்.

அப்படி கேட்டால்,  அமெரிக்கன் சிற்றிசன் என்று சொல்லிப் போடுங்கோ...
அப்பதான்... சாராயத்துக்கு பதிலாக.. விஸ்கி தருவார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, outdoors and text that says '## mt ஆமா எதுக்கு ரெண்டு கையையும் வெட்டிக்கிட்டீங்க? SIYA SVYAMEHEJ MEME mt Me வார Elections தப்பித்தவறி கூட இவனுங்க ஒருத்தனுக்கும் வோட்டு போட்டுட கூடாதுன்னு தான்'

animiertes-lachen-bild-0171.gif ஆமா... எதுக்கு, இரண்டு கையையும்... வெட்டிக்கிட்டீங்க. animiertes-lachen-bild-0046.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அப்படி கேட்டால்,  அமெரிக்கன் சிற்றிசன் என்று சொல்லிப் போடுங்கோ...
அப்பதான்... சாராயத்துக்கு பதிலாக.. விஸ்கி தருவார்கள். 🤣

விஸ்கியை தந்திட்டு பாஸ்போட்டை உருவிக் கொண்டு போயிடுவாங்களே?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2023 at 18:31, ஈழப்பிரியன் said:

இலங்கை போவதானால் தேர்தலுக்கு முன் போகலாமா?

தேர்தலுக்கு பின் போகலாமா?

கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா வேட்பாளர் ஆக்கியிருப்பினம்!
கட்சிகள் கூட போட்டியிட ஆளில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா வேட்பாளர் ஆக்கியிருப்பினம்!
கட்சிகள் கூட போட்டியிட ஆளில்லை!

அட பாவிகளா ஈழப்பிரியனுக்கு மாலை போடுறதென்றே முடிவே எடுத்துட்டீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அட பாவிகளா ஈழப்பிரியனுக்கு மாலை போடுறதென்றே முடிவே எடுத்துட்டீங்களா?

இது வரவேற்பு மாலை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இது வரவேற்பு மாலை.

இது என்ன மாலை என்று பார்க்க நான் இருக்கோணுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இது என்ன மாலை என்று பார்க்க நான் இருக்கோணுமல்ல.

இக் காணொளியில் 9.20 இல் இருந்து பார்த்ததை நினைவு வைச்சுக்காதீங்க அண்ணை.

நீங்கள் நலமாக இருப்பீர்கள், பயப்படாதீங்க அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

விஸ்கியை தந்திட்டு பாஸ்போட்டை உருவிக் கொண்டு போயிடுவாங்களே?

ஓமோம். பாஸ்போட் கவனம்.
அதுகும்… அமெரிக்கன் பாஸ்போட் என்று தெரிந்தால்
விஸ்கி வாங்கித்தர வரிசை கட்டி நிப்பாங்கள். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2023 at 14:01, ஈழப்பிரியன் said:

இலங்கை போவதானால் தேர்தலுக்கு முன் போகலாமா?

தேர்தலுக்கு பின் போகலாமா?

On 21/1/2023 at 14:14, goshan_che said:

இது உள்ளாட்சி தேர்தல்தானே. பெரிய அலுப்பு இராது. 

தேர்தல் நேரம் போனால் நல்லா கூத்து பார்க்கலாம்.

இவர் தேர்தலுக்கு முன்னமோ பின்னோ போகப்போவதில்லை.ஊருக்கு போவதில்லை என்டு எப்பவோ முடிவெடுத'திட்டார்.🙂மற்றது இங்கு ஒரு தேர்தல் நடக்கப்போகுது என்டு யாழைப் பாக்கும் போதுதான் தெரியுது.இங்கு மக்களிடம் எந்தவிதமான அசமாத்தங்களம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இவர் தேர்தலுக்கு முன்னமோ பின்னோ போகப்போவதில்லை.ஊருக்கு போவதில்லை என்டு எப்பவோ முடிவெடுத'திட்டார்.

தம்பீ விலாசத்தை எழுதுங்க வந்து சந்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ விலாசத்தை எழுதுங்க வந்து சந்திக்கிறேன்.

அண்ணை இதோ விலாசம் 

சாராயத்தவறனை

பெரிய கடை றோட்

யாழ்ப்பாணம் 

இலங்கை 

எப்ப  பயணம்  தேர்தலுக்கு முன்பா. ?  இல்லை பின்பா. ?😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஓமோம். பாஸ்போட் கவனம்.
அதுகும்… அமெரிக்கன் பாஸ்போட் என்று தெரிந்தால்
விஸ்கி வாங்கித்தர வரிசை கட்டி நிப்பாங்கள். 😁

2017 இல் இலங்கையில் இருந்து துருக்கி விமானத்தில் திரும்பினோம்.துருக்கியில் இடைத்தங்கல் 22 மணிநேரம்.பிள்ளைகள் உதக்குள்ள அடைபட்டு கிடக்காமல் வெளியே போய் இடங்களை பாருங்கோ என்று       இந்த Hagia Sophia இடத்தை போய்ப் பாருங்கோ என்றார்கள்.

சரி என்று காசு மாத்திற இடத்தில் ஒரு பெட்டை எப்படி புகையிரதத்தில் போவது என்பதிலிருந்து விபரமாக சொல்லி தந்தா.ஒரு பேப்பரும் பேனையும் தா என்று எழுதி வைத்து முதல் இடத்தில் இறங்கினோம்.

கையிலே ஒரு பை முதுகிலே ஒரு பை புகையிரத நிலையத்தால் வெளியே போக நிறைய பேர் கூடிவிட்டார்கள்.

முதல் கேள்வி எங்கேயிருந்து வருகிறீர்கள்.இலங்கை என்றதும் எங்க பொலிஸ் இங்க பொலிஸ் அப்பிடி போகலாம் இப்படி போகலாம் எந்த நாட்டுக்கு போக போறீங்கள் என்று ஒரே கேள்விக்கணை.

அமெரிக்காவை பற்றி மூச்சும் காட்டவில்லை.

அந்த பிள்ளை சொன்னது போலவே சின்ன திறந்த ரெயிலில் ஏறி ஆறுதலாக எல்லாம் சுற்றிப் பார்த்தோம்.

நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்.கொஞ்ச ரிசேட்கள் வாங்கினோம்.

போகும் போது மூச்சு காட்டாமல் நேராக சென்று புகையிரதம் ஏறி வந்துவிட்டோம்.

நாங்கள் இங்கு வந்து 10வது நாள் நாங்கள் சுற்றி பார்த்த இடத்தில் குண்டு வெடித்து 10 பேர் இறந்து பலர் காயம்.

19 minutes ago, Kandiah57 said:

அண்ணை இதோ விலாசம் 

சாராயத்தவறனை

பெரிய கடை றோட்

யாழ்ப்பாணம் 

இலங்கை 

எப்ப  பயணம்  தேர்தலுக்கு முன்பா. ?  இல்லை பின்பா. ?😂😂

பெரியகடை ரேட்டில் பல சாராய தவறணைகள் உண்டு.

உங்கடை கடை எதில?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

2017 இல் இலங்கையில் இருந்து துருக்கி விமானத்தில் திரும்பினோம்.துருக்கியில் இடைத்தங்கல் 22 மணிநேரம்.பிள்ளைகள் உதக்குள்ள அடைபட்டு கிடக்காமல் வெளியே போய் இடங்களை பாருங்கோ என்று       இந்த Hagia Sophia இடத்தை போய்ப் பாருங்கோ என்றார்கள்.

சரி என்று காசு மாத்திற இடத்தில் ஒரு பெட்டை எப்படி புகையிரதத்தில் போவது என்பதிலிருந்து விபரமாக சொல்லி தந்தா.ஒரு பேப்பரும் பேனையும் தா என்று எழுதி வைத்து முதல் இடத்தில் இறங்கினோம்.

கையிலே ஒரு பை முதுகிலே ஒரு பை புகையிரத நிலையத்தால் வெளியே போக நிறைய பேர் கூடிவிட்டார்கள்.

முதல் கேள்வி எங்கேயிருந்து வருகிறீர்கள்.இலங்கை என்றதும் எங்க பொலிஸ் இங்க பொலிஸ் அப்பிடி போகலாம் இப்படி போகலாம் எந்த நாட்டுக்கு போக போறீங்கள் என்று ஒரே கேள்விக்கணை.

அமெரிக்காவை பற்றி மூச்சும் காட்டவில்லை.

அந்த பிள்ளை சொன்னது போலவே சின்ன திறந்த ரெயிலில் ஏறி ஆறுதலாக எல்லாம் சுற்றிப் பார்த்தோம்.

நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்.கொஞ்ச ரிசேட்கள் வாங்கினோம்.

போகும் போது மூச்சு காட்டாமல் நேராக சென்று புகையிரதம் ஏறி வந்துவிட்டோம்.

நாங்கள் இங்கு வந்து 10வது நாள் நாங்கள் சுற்றி பார்த்த இடத்தில் குண்டு வெடித்து 10 பேர் இறந்து பலர் காயம்.

துருக்கியில் இடைத் தங்கல் என்றால்…. இஸ்தான்புல் விமான நிலையத்திலா நின்றீர்கள்.
அமெரிக்காவில் இருந்து வருகிறீர்கள் என்றால்…
முஸ்லீம் நாடுகளில் வெறுப்பை காண்பிப்பார்கள்.
நான், துனீசியாவிற்கு சுற்றுலா போன போது.. போகின்ற இடம் எல்லாம் பலரும் அமெரிக்காவில் இருந்து வருகின்றேனா என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அமெரிக்கர்களில்… அவ்வளவு வெறுப்புடன் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஆம் ஸ்ரம்புல் தான்.

வெளியே போகமுதலே அமெரிக்காவைப் பற்றி மூச்சே விடக் கூடாது என்றே பேசிக் கொண்டோம்.

ஏதொ சேதாரமில்லாமல் வந்து சேர்ந்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

சிலர் வேறு மாதிரியும் சிந்திக்கலாம் தானே.

வாள்வெட்டுக்குழுக்களை எல்லாம் தேர்தல் வேட்பாளர்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கினமாம், சொல்லக்கேள்வி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

துருக்கியில் இடைத் தங்கல் என்றால்…. இஸ்தான்புல் விமான நிலையத்திலா நின்றீர்கள்.
அமெரிக்காவில் இருந்து வருகிறீர்கள் என்றால்…
முஸ்லீம் நாடுகளில் வெறுப்பை காண்பிப்பார்கள்.
நான், துனீசியாவிற்கு சுற்றுலா போன போது.. போகின்ற இடம் எல்லாம் பலரும் அமெரிக்காவில் இருந்து வருகின்றேனா என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அமெரிக்கர்களில்… அவ்வளவு வெறுப்புடன் இருந்தார்கள்.

துருக்கி, துனிசியா, ஈரான், ஆப்கனிஸ்தால் எல்லாத்தையும் விட,

ஜேர்மனியில் ஈழத்தமிழர் இருக்கும் இடங்களில், அமெரிக்கராய் கூட இருக்க தேவையில்லை, அப்பிள் ஐபோன், கூகிள் போன்ற அமெரிக்க தயாரிப்புகளை பாவித்தாலே தலையை கொய்துபோடுவார்கள்🤣.

எனக்கு தெரிஞ்ச ஒரு பிரேசில் காரருக்கு எங்கே இருந்து வாறாய் என கேட்க “தென்னமரிக்கா” என சொல்லியதால் கண்ணை நோண்டி போட்டார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

வாள்வெட்டுக்குழுக்களை எல்லாம் தேர்தல் வேட்பாளர்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கினமாம், சொல்லக்கேள்வி!

வாள்வெட்டுக் குழக்களுடன் வக்கீல்மார் அரசியல்வாதிகள் பொலிஸ் என்று சகலருமெ தொடர்பில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஜேர்மனியில் ஈழத்தமிழர் இருக்கும் இடங்களில், அமெரிக்கராய் கூட இருக்க தேவையில்லை, அப்பிள் ஐபோன், கூகிள் போன்ற அமெரிக்க தயாரிப்புகளை பாவித்தாலே தலையை கொய்துபோடுவார்கள்🤣

என்னா தம்பி புது குண்டாக இருக்கே?

ஐரொப்பா சுத்தி பார்க்க விருப்பமாக இருந்தது.

இப்போ யோசிக்க வேண்டி இருக்கு.

தகவலுக்கு நன்றி.

@Kandiah57 @தமிழ் சிறி @குமாரசாமி   தொடர்புகளையும் கவனமாகத் தான் கையாள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.