Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • Replies 59
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஜனநாயகம் 👍

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் நடந்த 13 மணிநேர சோதனை: 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க நீதித்துறையின் புலனாய்வாளர்கள் டெலவேரில் இருக்கும் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் 13 மணிநேரம் நடத்திய சோதனையின்போது, ஆறு ரகசிய ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்று பைடனின் வழக்கறிஞர் கூறுகிறார்.

வெள்ளிக்கிழமையன்று வில்மிங்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் அவர் செனட்டராக இருந்த காலத்தைச் சேர்ந்தவை. சில பரக் ஒபாமாவின் அரசாங்கத்தில் துணை அதிபராக இருந்த காலத்தைச் சேர்ந்தவை.

“தனிப்பட்ட முறையால் கையால் எழுதப்பட்ட குறிப்புகள்”, மற்றும் “அது சம்பந்தப்பட்ட பொருட்கள்” ஆகியவையும் உடன் எடுத்துச் செல்லப்பட்டதாக வழக்கறிஞர் பாப் பாயர் கூறினார்.

இந்தச் சோதனையின்போது ஜோ பைடனும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை.

“சாத்தியமான துணை அதிபர் பதிவுகள், சாத்தியமான வகைப்படுத்தப்பட்ட பொருட்களுக்காக முழு வீட்டையும் சோதனையிடுவதற்கு நீதித்துறையை அதிபர் அனுமதித்ததாக” பயர் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில் பைடனின் வழக்கறிஞர்கள், நவம்பர் 2ஆம் தேதியன்று வாஷிங்டன் டிசியில் அதிபரால் நிறுவப்பட்ட ஒரு சிந்தனைக் குழுவான பென் பைடன் மையத்தில் முதல் தொகுதி ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர்.

இரண்டாவது தொகுதி பதிவுகள் டிசம்பர் 20ஆம் தேதியன்று, அவரது வில்மிங்டன் வீட்டிலுள்ள வாகன பழுது பார்க்கும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதேநேரத்தில் மற்றோர் ஆவணம் ஜனவரி 12ஆம் தேதியன்று வீட்டிலுள்ள சேமிப்பு ஸ்டோரேஜ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆவணங்களைக் கண்டுபிடித்த பிறகு, தனது குழு உடனடியாக அவற்றை தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் நீதித்துறையிடம் ஒப்படைத்ததாக அதிபர் கூறினார். ஜோ பைடன் அவற்றை ஏன் வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதிபர் அலுவலக ஆவணங்கள் சட்டத்தின்கீழ், வெள்ளை மாளிகையின் ஆவணங்கள் ஓர் அரசின் நிர்வாகக் காலம் முடிந்ததும் ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு அவை பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்.

முக்கிய ஆவணங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு ராபர்ட் ஹர் என்ற சிறப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டில் பைடன் போட்டியிடுவாரா என்பதை அறிவிக்கத் தயாராகி வரும் அதிபருக்கு இந்தச் சோதனைகளும் பல ஆவணங்கள் கிடைத்திருப்பதும் அரசியல் தலைவலியாக மாறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் நடந்த 13 மணிநேர சோதனை: 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,REUTERS

பைடனும் அவரது மனைவியும் டெலவேரில் உள்ள கடலோர நகரமான ரெஹோபாத் கடற்கரையில் வார இறுதியைக் கழிக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு மற்றொரு வீடு உள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் அங்கு சோதனையிடப்பட்டது. ஆனால், அங்கு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இடைக்காலத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, இரண்டு மாத கால இடைவெளி விட்டு ஜனவரியில் அந்தச் செய்தி வெளியாவது போன்றவை அதிபரின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாக பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோனி ஜர்ச்சர் கூறுகிறார்.

நீதித்துறை விசாரணைக்கு அதிபர் முழுமையாக ஒத்துழைத்ததாக பைடனின் குழு வலியுறுத்துகிறது. நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக சில ரகசிய கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை பகிரங்கமாக வெளியிடாதது குறித்து தனக்கு “வருத்தமில்லை” என்று கூறிய பைடன் இந்த விவகாரத்தை அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஃப்ளோரிடா மார்-ஏ-லாகோ இல்லத்தில் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதாகக் கூறப்படும் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் இது நடந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் எஃப்.பி.ஐ அவரது ஃப்ளோரிடா விடுமுறை இல்லத்தைச் சோதனை செய்யும் வரை டிரம்ப் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் ஆவணங்களை ஒப்படைப்பதை எதிர்த்தனர். எஃப்.பி.ஐ அதிபர் பைடனுக்கு சாதகமாக நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

https://www.bbc.com/tamil/articles/c98x25yvlxqo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

இது ஜனநாயகம் 👍

ஒவ்வொரு அமெரிக்க சனாதிபதிகளும் கொள்ளையடிக்கும் நோக்குடனே வருகின்றார்கள். இதுதான் உலகிற்கு பாடம் படிப்பிக்கும் அமெரிக்க ஜனநாயகம்...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒவ்வொரு அமெரிக்க சனாதிபதிகளும் கொள்ளையடிக்கும் நோக்குடனே வருகின்றார்கள். இதுதான் உலகிற்கு பாடம் படிப்பிக்கும் அமெரிக்க ஜனநாயகம்...:rolling_on_the_floor_laughing:

பெரிய‌ வ‌ய‌தாகியும் இன்னும் சில‌ர் அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளை புரிந்து கொள்ளாமை பெருமையா எழுதுவ‌து வேத‌னைக்கு உரிய‌ விடைய‌ம் தாத்தா............

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொரு அமெரிக்க சனாதிபதிகளும் கொள்ளையடிக்கும் நோக்குடனே வருகின்றார்கள். இதுதான் உலகிற்கு பாடம் படிப்பிக்கும் அமெரிக்க ஜனநாயகம்...:rolling_on_the_floor_laughing:

1 hour ago, பையன்26 said:

பெரிய‌ வ‌ய‌தாகியும் இன்னும் சில‌ர் அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளை புரிந்து கொள்ளாமை பெருமையா எழுதுவ‌து வேத‌னைக்கு உரிய‌ விடைய‌ம் தாத்தா............

உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்குமான வித்தியாசம் இது தான்.

நான் ஆட்களை பார்ப்பதில்லை

உலகுக்கு எது தேவை, சிறந்தது என்று பார்க்கிறேன்

நீங்கள் ரசிக்கும் அல்லது போற்றும் ரசியாவிலோ வட கொரியாவிலோ இது எல்லாம் கனவில் கூட சரிவராது. நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இது ஜனநாயகம் 👍

அண்ணை நீங்கள் வங்கியில் முகாமையாளராக இருக்கிறீர்கள். நீங்கள் வங்கியில் உள்ள பணத்தை காரில், கராஜில், வீட்டில் வைக்க முடியுமா? இது ஒரு உதாரணத்துக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்குமான வித்தியாசம் இது தான்.

நான் ஆட்களை பார்ப்பதில்லை

உலகுக்கு எது தேவை, சிறந்தது என்று பார்க்கிறேன்

நீங்கள் ரசிக்கும் அல்லது போற்றும் ரசியாவிலோ வட கொரியாவிலோ இது எல்லாம் கனவில் கூட சரிவராது. நன்றி 

வ‌ட‌ கொரியா ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளை சுர‌ண்டி கொழுத்த‌ பூத‌ங்க‌ள் கிடையாது...........வ‌ட‌கொரியா மூட‌ப் ப‌ட்ட‌ நாடு...........அமெரிக்கா அள‌வுக்கு ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளை சுர‌ண்ட‌ வில்லை............

அமெரிக்கா சுர‌ண்டின‌ நாடுக‌ளை சிம்பிலா ப‌ட்டிய‌ல் இட்டு சொல்ல‌லாம்

நீங்க‌ள் அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்ப‌து உங்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌  விருப்ப‌ம் .............2003ம் ஆண்டுட‌ன் என‌க்கு அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்டாக் கூடாது

ஈராக்கில் சதாம் அனுகுண்டு வைத்து இருக்கிறார் என்று ஈராக்கில் புகுந்த‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் அங்கு செய்த‌ அட்டுழீய‌ங்க‌ள் கொடுமைக‌ள் காது கொடுத்து கேட்க்க‌ முடியாத‌வை...........அணுகுண்டு எங்கை என்று கேட்டால் அத‌ற்க்கு ப‌தில் இல்லை...........

ஈராக்கில் சுர‌ண்டி விட்டு தான் ஈராக்கில் இருந்து அமெரிக்க‌ ப‌டைக‌ள் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து வெளி ஏறின‌வை...............

அமெரிக்க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்தார்க‌ள் என்று ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே செய்திக‌ள் வ‌ந்த‌து

அப்ப‌டி பார்த்தா ஏன் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியாவில் கூட‌ ஜ‌ன‌னாய‌க‌ம் இருக்கு என்று தான் சொல்லுவேன்...........பா சித‌ம்ப‌ர‌ம் க‌னிமொழி தொட்டு எல்லாரும் சிறை வாழ்க்கையை அனுப‌வித்து விட்டு தான் வெளியில் வ‌ந்த‌வை 🤣😁😂

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அண்ணை நீங்கள் வங்கியில் முகாமையாளராக இருக்கிறீர்கள். நீங்கள் வங்கியில் உள்ள பணத்தை காரில், கராஜில், வீட்டில் வைக்க முடியுமா? இது ஒரு உதாரணத்துக்கு. 

52 minutes ago, பையன்26 said:

வ‌ட‌ கொரியா ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளை சுர‌ண்டி கொழுத்த‌ பூத‌ங்க‌ள் கிடையாது...........வ‌ட‌கொரியா மூட‌ப் ப‌ட்ட‌ நாடு...........அமெரிக்கா அள‌வுக்கு ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளை சுர‌ண்ட‌ வில்லை............

அமெரிக்கா சுர‌ண்டின‌ நாடுக‌ளை சிம்பிலா ப‌ட்டிய‌ல் இட்டு சொல்ல‌லாம்

நீங்க‌ள் அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்ப‌து உங்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌  விருப்ப‌ம் .............2003ம் ஆண்டுட‌ன் என‌க்கு அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்டாக் கூடாது

ஈராக்கில் சதாம் அனுகுண்டு வைத்து இருக்கிறார் என்று ஈராக்கில் புகுந்த‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் அங்கு செய்த‌ அட்டுழீய‌ங்க‌ள் கொடுமைக‌ள் காது கொடுத்து கேட்க்க‌ முடியாத‌வை...........அணுகுண்டு எங்கை என்று கேட்டால் அத‌ற்க்கு ப‌தில் இல்லை...........

ஈராக்கில் சுர‌ண்டி விட்டு தான் ஈராக்கில் இருந்து அமெரிக்க‌ ப‌டைக‌ள் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து வெளி ஏறின‌வை...............

அமெரிக்க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்தார்க‌ள் என்று ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே செய்திக‌ள் வ‌ந்த‌து

அப்ப‌டி பார்த்தா ஏன் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியாவில் கூட‌ ஜ‌ன‌னாய‌க‌ம் இருக்கு என்று தான் சொல்லுவேன்...........பா சித‌ம்ப‌ர‌ம் க‌னிமொழி தொட்டு எல்லாரும் சிறை வாழ்க்கையை அனுப‌வித்து விட்டு தான் வெளியில் வ‌ந்த‌வை 🤣😁😂

உண்மையில் நான் பேசுவது உங்களுக்கு புரியவில்லையா அல்லது உங்களுக்கு பிடித்த மாதிரி பேச எனக்கு வரலையா என்று தெரியவில்லை

நான் சொல்வது ஒரு ஜனாதிபதி வீட்டில் சோதனை நடாத்தும் நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனநாயகம் மட்டுமே.

உலகத்தில் 99% கள்ளர் என்று எனக்கும் தெரியும்

ஆனால் அந்த ஒரு வீதத்தையாவது காப்பாத்தி அதை பெருக்கணும். அந்த 1% த்தில் நான் ஒருத்தன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அனுகுண்டு

குண்டா இருப்பாவே அனு ராதா, அவவையா சதாம் வச்சிருந்த்தார்…சை என்ன டேஸ்டோ அந்தாளுக்கு.

பிகு

ஈராக்கில் இருப்பதாய் மேற்கு சொன்னது அணு குண்டல்ல. உயிரியல், இரசாயன ஆயுதங்கள். 

WMD - Weapons of Mass Destruction 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இது ஜனநாயகம் 👍

ஜனநாயகம் என்பது இதுதானா என்பது தெரியாது, ஆனால் ஒரு சாதாரண வேலையில் உள்ள நடமுறை என கருதுகிறேன்.

எமது வேலையில் உள்ள கணனியில் யு ஸ் பி இனை இணைத்து தரவேற்றவோ அல்லது தரவிறக்கவோ முடியாது.

தனிப்பட்ட ஈமெயிலுக்கு ஈமெயில் அனுப்பமுடியாது.

கோப்புகளை பதிவெடுக்கும் போது நீர் எழுத்தில் பிரதி என கோப்பில் பெரிதாக வரும், அத்துடன் பதிவெடுத்தவரின் பெயரும் திகதி நேரம் என்பனவையும் வரும்.

வேலையில் சேரும் போதே நிறுவன கோப்புகளை மற்றும் இலத்திரனியல் கோப்புகளை பாதுகாப்போம் என ஆவனத்தில் உறுதி மொழி வழ்ங்கவேண்டும்.

கோப்புகளை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாது, அனைத்து நிறுவன சட்ட ஒழுங்கினை ஆண்டு தோறும் மீண்டும் மீண்டும் நினைவில் வைப்பதற்காக இலத்திரனியல் ஆவணத்தினை வாசித்து உறுதி மொழி வழங்கப்பட வேண்டும்.

ஆனாலும் சிலர் இதனை மீறி ஆவணங்களை நிறுவனத்திற்கு வெளியே எடுத்து சென்றமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசின் முக்கிய தகவல்களை வெளியில் எடுத்து சென்றவரை நிட்சயமாக பதவி நீக்கம் செய்வார்கள், அந்த வேலைக்குரிய நிபந்தனை அதுவாக உள்ளது.

அரசின் முக்கிய ஆவணங்களை வெளியில் கொணர்ந்த சிலருக்கு தேசத்துரோக குற்றச்சாட்டப்பட்டுள்ளார்கள், அதனை மக்களுக்கு எடுத்துரைத்ததனால் அவர்கள் பல நெருக்கடிக்குள் வாழ்கிறார்கள், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்கமன்றி அவர்களுக்கு எந்த பொருளாதார நன்மையுமில்லை.

அதே நிலை பைடனுக்கு வருமா எனபது தெரியவில்லை, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பது ஒரு கருதுகொள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

Error

1 minute ago, vasee said:

சீனாவில் ஷி இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால், அல்லது ரஸ்யாவில் புட்டின் இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் - அந்த நாட்டு அமைப்புகள், இவர்கள் பதவியில் இருக்கும் போதே இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்க முடியுமா?

இதைதான் விசுகு அண்ணா கேட்கிறார்.

நான் மேலே கேட்ட கேள்விக்கு கூச்சமே இல்லாமல் ஆம் என பதில் சொல்ல கூடியோர் யாழில் உள்ளார்கள்🤣.

வசியும் அந்த வகையா என அறிய ஆவல்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

Error

சீனாவில் ஷி இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால், அல்லது ரஸ்யாவில் புட்டின் இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் - அந்த நாட்டு அமைப்புகள், இவர்கள் பதவியில் இருக்கும் போதே இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்க முடியுமா?

இதைதான் விசுகு அண்ணா கேட்கிறார்.

நான் மேலே கேட்ட கேள்விக்கு கூச்சமே இல்லாமல் ஆம் என பதில் சொல்ல கூடியோர் யாழில் உள்ளார்கள்🤣.

வசியும் அந்த வகையா என அறிய ஆவல்🤣

எனக்கு  ஜனநாஜகம் என்பதற்கான அர்த்தம் தெரியாது,  ஜனநாயக நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

ஜனநாயகம் என்பது இதுதானா என்பது தெரியாது, ஆனால் ஒரு சாதாரண வேலையில் உள்ள நடமுறை என கருதுகிறேன்.

நீங்கள் சொல்கின்ற அந்த சாதாரண நடை முறை  ரஷ்யா , பெலாருஸ் , சீனா  , வட கொரியா , ஈரான் போன்ற சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளில் நடைபெறமுடியாது ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

எனக்கு  ஜனநாஜகம் என்பதற்கான அர்த்தம் தெரியாது,  ஜனநாயக நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதா?

மன்னிக்கவும் உங்கள் பதிவிற்கு நேரடியான  பதிலளிக்காமல் நகைசுவையாக பதிலளித்தமைக்கு.

அதற்கு பதிலளிதால் கருத்து திசை திரும்பிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

குண்டா இருப்பாவே அனு ராதா, அவவையா சதாம் வச்சிருந்த்தார்…சை என்ன டேஸ்டோ அந்தாளுக்கு.

பிகு

ஈராக்கில் இருப்பதாய் மேற்கு சொன்னது அணு குண்டல்ல. உயிரியல், இரசாயன ஆயுதங்கள். 

WMD - Weapons of Mass Destruction 

ச‌தாம் அனுகுண்டு வைத்து இருக்கிறார் என்று தான் அமெரிக்க‌ ப‌டைக‌ள் உள்ளை புகுந்த‌வை.............2003ம் ஆண்டு ஈராக் நாட்டை சேர்ந்த‌ முதிய‌வ‌ர் கூட‌ தொலைக் காட்சியில் செய்தியை பார்த்தேன்..............2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் கால் வைச்சா பிற‌க்கு எத்த‌னை ஆயிர‌ம் பொது ம‌க்க‌ள் இற‌ந்தார்க‌ள்...........ச‌தாம் கொன்று குவிச்ச‌து 5000க்கு குறைவான‌ ம‌க்க‌ளை தான் ஆனால் அமெரிக்க‌ ப‌டைக‌ள் ஈராக்கில் புகுந்த‌ பிற‌க்கு பொது ம‌க்க‌ளின் இழ‌ப்பு அதிக‌ம் 
ச‌தாம் 2003ம் ஆண்டு  ம‌க்க‌ளை ம‌னித‌ கேடைய‌மா ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை
ச‌தாமின் ஆட்க‌ள் அமெரிக்க‌ ப‌டைக‌ளுக்கு எதிரா ப‌ல‌ த‌ற்கொலை தாக்குத‌லை ந‌ட‌த்தி ப‌ல‌ அமெரிக்கா இராணுவ‌த்தை கொன்றார்க‌ள்..............கூடுத‌லான‌ த‌ற்கொலை தாக்குத‌ல் வாக‌ன‌த்தில் குண்டை பொருத்தி ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்..............

2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ப‌ல‌ ஆயுத‌ங்க‌ளை பாவிச்ச‌து

அப்ப‌ இருந்த‌ அமெரிக்கா பிர‌சிட‌ன் வுஸ் 

பின்னாளில் தான் செய்த‌ பாவ‌த்தை போக்க‌ ஆபிரிக்கா நாட்டு சென்று அங்கு இருக்கும் தேவாலைய‌த்துக்கு வெள்ளை பெயின்ட் அடிச்ச‌வ‌ர்.............

வ‌ர‌லாறு பெரிசு பிரோ 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்கின்ற அந்த சாதாரண நடை முறை  ரஷ்யா , பெலாருஸ் , சீனா  , வட கொரியா , ஈரான் போன்ற சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளில் நடைபெறமுடியாது ஒன்று .

நன்றி இதனைத்தன் கோசானும் கூறுகிறார். எனக்கு புரிகிறது,  சினோடன் போலவோ, யூலியன் அசாஞ்ச் போலவோ படனுக்கும் வரவேண்டும் என்று உன்மையாக விரும்பவில்லை சும்மா ஒரு கருத்து பதிந்தேன் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

குண்டா இருப்பாவே அனு ராதா, அவவையா சதாம் வச்சிருந்த்தார்…சை என்ன டேஸ்டோ அந்தாளுக்கு.

பிகு

ஈராக்கில் இருப்பதாய் மேற்கு சொன்னது அணு குண்டல்ல. உயிரியல், இரசாயன ஆயுதங்கள். 

WMD - Weapons of Mass Destruction 

அனுகுண்டு வ‌ட‌கொரியா தொட்டு அமெரிக்காவுக்கு எதிரான‌ ப‌ல‌ நாடுக‌ள் வைச்சு இருக்கின‌ம் 

ஏன் அமெரிக்கா அவேன்ட‌ நாட்டுக்குள் போக‌ வில்லை

கால‌ப் போக்கில் ஈரானும் அனு ஆயுத‌ம் வைச்சு இருக்கிறோம் என்று அறிவிக்கும் நாள் வ‌ரும் 
அமெரிக்காவால் ஈரானுக்குள் நுழைய‌ முடியுமா பிரோ

கேட்க்க‌ நாதியில்லா நாடுக‌ள் மீது தான் அமெரிக்கான்ட‌ வீர‌ம் 

ர‌ஸ்சியா
வ‌ட‌கொரியா
ஈரான் இப்ப‌டியான‌ நாடுக‌ளுட‌ன் அமெரிக்கா ம‌ல்லு க‌ட்ட‌ த‌ய‌க்க‌ம்  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, vasee said:

நன்றி இதனைத்தன் கோசானும் கூறுகிறார். எனக்கு புரிகிறது,  சினோடன் போலவோ, யூலியன் அசாஞ்ச் போலவோ படனுக்கும் வரவேண்டும் என்று உன்மையாக விரும்பவில்லை சும்மா ஒரு கருத்து பதிந்தேன் அவ்வளவுதான்.

நீங்கள் விரும்பும் ஜனநாயகம் அல்லது நீதி பற்றி நீங்கள் தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

இந்த உலகுக்கும் எமது அடுத்த தலைமுறைக்கும் எதை விட்டு செல்லணும் என்பதையும் நீங்கள் தான் முடிவு செய்யணுமே தவிர உலகில் நடக்கும் தவறுகளை பார்த்து அதனையே தொடரணும் என்பதாகாது.

எனது மக்களுக்கு ஒன்றை மட்டுமே சொல்வதுண்டு

யாருடனும் பழகு. ஆனால் அவர்களிடம் இருந்து நல்லதை மட்டுமே எடுத்துக் கொள். அது நானாக இருந்தாலும். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்குமான வித்தியாசம் இது தான்.

நான் ஆட்களை பார்ப்பதில்லை

உலகுக்கு எது தேவை, சிறந்தது என்று பார்க்கிறேன்

நீங்கள் ரசிக்கும் அல்லது போற்றும் ரசியாவிலோ வட கொரியாவிலோ இது எல்லாம் கனவில் கூட சரிவராது. நன்றி 

நீங்கள் ஆட்களை பார்ப்பதில்லை. ஆனால் ஒன்றின் பின் ஒன்றாக வரும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும்/தலைவர்களும் ஜனநாயகம் எனும் போர்வையில் தவறு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

தவறு அல்லது குற்றம் செய்தவருக்கு  கொடுக்கப்படும் தண்டனை என்பது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டும் என்பதே. ஆனால் அமெரிக்க ஜனநாயகவாதிகள் தொடர் குற்றவாளிகளாகவே காணப்படுகின்றனர்.

அமெரிக்கா ஜனநாயகத்தின் உச்சமாம்.:rolling_on_the_floor_laughing:

ரஷ்யாவிலோ அல்லது வடகொரியாவிலோ ஒருவருக்கு  நாட்டு நலன்களுக்கு தகாத குற்றங்களை செய்து தண்டனை கொடுத்தால்   அதை ஜனநாயகம் எனும் பெயரில் இன்னுமொருவர் செய்யமாட்டார். செய்யவும் கூடாது. இது ஆசிய நாடான இலங்கையிலும் ஒரு காலத்தில் இருந்தது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவிலோ அல்லது வடகொரியாவிலோ ஒருவருக்கு  நாட்டு நலன்களுக்கு தகாத குற்றங்களை செய்து தண்டனை கொடுத்தால்   அதை ஜனநாயகம் எனும் பெயரில் இன்னுமொருவர் செய்யமாட்டார். செய்யவும் கூடாது. இது ஆசிய நாடான இலங்கையிலும் ஒரு காலத்தில் இருந்தது.:cool:

ச‌ரியா சொன்னீங்க‌ள்
வ‌ட‌கொரியா அமெரிக்காவுக்கு நேர‌டி மிர‌ட்ட‌ல் விட்ட‌ நாடு அமெரிக்காவால் வ‌ட‌கொரியாவை என்ன‌ செய்ய‌ முடிஞ்ச‌து 

சோமாலியா
அப்கானிஸ்தான்
ஈராக் போன்ற‌ ப‌ல‌ம் இல்லா நாடுக‌ள் மீது கேட்டு கேள்வி இன்றி உள்ளை புகுந்து இய‌ற்கை வ‌ழ‌ங்க‌ளை கொள்ளை அடிப்ப‌து தான் அமெரிக்காவின் ஜ‌ன‌னாய‌க‌ம்..........

கேட்டால் நாச‌கார‌ ஆயுத‌ங்க‌ளை வைச்சு இருக்கின‌ம்
அட‌ மூதேவி பிடிப்பாங்க‌ளே ஜ‌ப்பான் மீது அனு குண்டை போட்டால் ம‌க்க‌ளுக்கும் அந்த‌ நாட்டுக்கும் பாதிப்பு வ‌ரும் என்று தெரிந்தும் அந்த‌ நாச‌கார‌ குண்டை போட்ட‌ கொடுங்கோல‌ர்க‌ள் தான் அமெரிக்கா ஜ‌ன‌னாய‌வாதிக‌ள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சீனாவில் ஷி இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால், அல்லது ரஸ்யாவில் புட்டின் இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் - அந்த நாட்டு அமைப்புகள், இவர்கள் பதவியில் இருக்கும் போதே இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்க முடியுமா?

ஜனநாயகவாதிகள் ஏன் அசான்சேக்கும் ஸ்னோடனுக்கும் குத்தி முறிகின்றார்கள்?  :face_with_hand_over_mouth:

26 minutes ago, பையன்26 said:

ச‌ரியா சொன்னீங்க‌ள்
வ‌ட‌கொரியா அமெரிக்காவுக்கு நேர‌டி மிர‌ட்ட‌ல் விட்ட‌ நாடு அமெரிக்காவால் வ‌ட‌கொரியாவை என்ன‌ செய்ய‌ முடிஞ்ச‌து 

சோமாலியா
அப்கானிஸ்தான்
ஈராக் போன்ற‌ ப‌ல‌ம் இல்லா நாடுக‌ள் மீது கேட்டு கேள்வி இன்றி உள்ளை புகுந்து இய‌ற்கை வ‌ழ‌ங்க‌ளை கொள்ளை அடிப்ப‌து தான் அமெரிக்காவின் ஜ‌ன‌னாய‌க‌ம்..........

கேட்டால் நாச‌கார‌ ஆயுத‌ங்க‌ளை வைச்சு இருக்கின‌ம்
அட‌ மூதேவி பிடிப்பாங்க‌ளே ஜ‌ப்பான் மீது அனு குண்டை போட்டால் ம‌க்க‌ளுக்கும் அந்த‌ நாட்டுக்கும் பாதிப்பு வ‌ரும் என்று தெரிந்தும் அந்த‌ நாச‌கார‌ குண்டை போட்ட‌ கொடுங்கோல‌ர்க‌ள் தான் அமெரிக்கா ஜ‌ன‌னாய‌வாதிக‌ள் 

அப்பன்! கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமெண்டு எங்கடை ஆக்கள் சும்மாவே சொன்னவையள்?:408:

உக்கல் உக்ரேன் பிரச்சனை தொடங்கி ஒரு வருசமாச்சு. உந்த சனநாயகவாதிகள் தங்கடை பிரச்சனையை தீர்க்க ஏலாதவங்கள் இல்லாட்டி விரும்பாதவங்கள்  எங்கடை நாட்டு பிரச்சனையை தீர்ப்பாங்கள் எண்டுறியள்? :406:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

எனக்கு  ஜனநாஜகம் என்பதற்கான அர்த்தம் தெரியாது,  ஜனநாயக நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதா?

நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னொரு கேள்வியா🤣.

வாழ்துக்கள்! நீங்களும் தேர்ந்த யாழ்கள கருத்தாளர் ஆகிவிட்டீர்கள்🤣

ஜனநாயக நாட்டில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானதே ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் வழுக்கள் வரலாம், வராமலும் போகலாம்.

உண்மையில் என் பார்வையில் அமெரிக்கா ஒரு குறை-ஜனநாயக நாடே. ஸ்கண்டிநேவியா, ஐரோப்பா வில் சில நாடுகள்தான் உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு கிட்ட நெருங்கி வருவன.

ஆனால் அமெரிக்காவில் கூட, நிக்சன், கிளிண்டன், டிரம்ப், இப்போ பைடன் என நாம் அறிய 4 பதவியில் உள்ள அதிபர்கள், பதவியில் இருக்கும் போதே அரச அதிகாரிகளால் விசாரணைக்குள்ளாகி உள்ளனர்.

இப்போ என் கேள்வியை மீள கேட்கிறேன். ஆம். இல்லை என பதில் சொல்லும் எளிமையான கேள்வி. இது. திரி திசை திரும்பும் என்ற அச்சம் வேண்டாம் (அது எப்படியும் திரும்பித்தான் தீரும்🤣).

2 hours ago, goshan_che said:

சீனாவில் ஷி இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால், அல்லது ரஸ்யாவில் புட்டின் இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் - அந்த நாட்டு அமைப்புகள், இவர்கள் பதவியில் இருக்கும் போதே இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்க முடியுமா?

1 hour ago, பையன்26 said:

ச‌தாம் அனுகுண்டு வைத்து இருக்கிறார் என்று தான் அமெரிக்க‌ ப‌டைக‌ள் உள்ளை புகுந்த‌வை.............2003ம் ஆண்டு ஈராக் நாட்டை சேர்ந்த‌ முதிய‌வ‌ர் கூட‌ தொலைக் காட்சியில் செய்தியை பார்த்தேன்..............2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் கால் வைச்சா பிற‌க்கு எத்த‌னை ஆயிர‌ம் பொது ம‌க்க‌ள் இற‌ந்தார்க‌ள்...........ச‌தாம் கொன்று குவிச்ச‌து 5000க்கு குறைவான‌ ம‌க்க‌ளை தான் ஆனால் அமெரிக்க‌ ப‌டைக‌ள் ஈராக்கில் புகுந்த‌ பிற‌க்கு பொது ம‌க்க‌ளின் இழ‌ப்பு அதிக‌ம் 
ச‌தாம் 2003ம் ஆண்டு  ம‌க்க‌ளை ம‌னித‌ கேடைய‌மா ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை
ச‌தாமின் ஆட்க‌ள் அமெரிக்க‌ ப‌டைக‌ளுக்கு எதிரா ப‌ல‌ த‌ற்கொலை தாக்குத‌லை ந‌ட‌த்தி ப‌ல‌ அமெரிக்கா இராணுவ‌த்தை கொன்றார்க‌ள்..............கூடுத‌லான‌ த‌ற்கொலை தாக்குத‌ல் வாக‌ன‌த்தில் குண்டை பொருத்தி ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்..............

2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ப‌ல‌ ஆயுத‌ங்க‌ளை பாவிச்ச‌து

அப்ப‌ இருந்த‌ அமெரிக்கா பிர‌சிட‌ன் வுஸ் 

பின்னாளில் தான் செய்த‌ பாவ‌த்தை போக்க‌ ஆபிரிக்கா நாட்டு சென்று அங்கு இருக்கும் தேவாலைய‌த்துக்கு வெள்ளை பெயின்ட் அடிச்ச‌வ‌ர்.............

வ‌ர‌லாறு பெரிசு பிரோ 
 
ஒகே ப்ரோ…நீங்க சொன்னா க்ரெட்க்டாதான் இருக்கும் 🤣.

உங்க கூட இருந்த ஈராக்கிய முதியர் பெயர் கெமிக்கல் அலி இல்லையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

குண்டா இருப்பாவே அனு ராதா, அவவையா சதாம் வச்சிருந்த்தார்…சை என்ன டேஸ்டோ அந்தாளுக்கு.

எழுத்து பிழைகளை நக்கலடிக்கும் நீங்கள் மாற்று திறனாளிகளையும் நக்கலடிக்க தயங்க மாட்டீர்கள்.

நானும் யாழ்களத்தில் எழுத பழகி  எழுத்து பிழைகளுடன் எழுத ஆரம்பிக்கும் போது சக உறவு ஒருவர் வந்தமாம் வாசிச்சமாம் என்றிருக்கோணும் என பதில் எழுதி இருந்தார்.

பிழைகளை திருத்த மனம் இல்லாவிட்டாலும் தமிழில் எழுதிய கருத்தை நையாண்டி பண்ணாமல் இருந்தாலே தமிழ் உலகிற்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தமிழர்கள். அடுத்த முறை திருத்தி எழுதுவார்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நன்றி இதனைத்தன் கோசானும் கூறுகிறார். எனக்கு புரிகிறது,  சினோடன் போலவோ, யூலியன் அசாஞ்ச் போலவோ படனுக்கும் வரவேண்டும் என்று உன்மையாக விரும்பவில்லை சும்மா ஒரு கருத்து பதிந்தேன் அவ்வளவுதான்.

ஸ்னோடனும், அசாஞ்சும் அமெரிக்க உளவு தகவல்களை பகிரங்கபடுத்தி அதன் மூலம் அமெரிக்க உளவாளிகள், தகவல் கொடுப்போர் உயிருக்கு ஆபத்து விளைவித்தனர் என்பது குற்றச்சாட்டு.

பைடன், டிரம்ப் மீது இன்னும் உளவு தகவல்களை பகிரங்கபடுத்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. உளவு தகவல்களை முறைகேடாக பத்திரப்படுத்தினர் என்பதே குற்றச்சாட்டு. 

இவர்களும் உளவு தகவலை பகிரங்கபடுத்தினர் அல்லது இன்னொரு நாட்டுக்கு கொடுத்தனர் என நிறுவப்பட்டால் - இருவருக்கும் அதைவிட மோசமான நிலை ஏற்படும்.

20 minutes ago, குமாரசாமி said:

ஜனநாயகவாதிகள் ஏன் அசான்சேக்கும் ஸ்னோடனுக்கும் குத்தி முறிகின்றார்கள்?  :face_with_hand_over_mouth:

பதில் மேலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.