Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Published By: VISHNU

21 FEB, 2023 | 05:44 PM
image

தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், சீரான  எரிபொருள் விநியோகத்துக்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு மின்சார தட்டுப்பாடோ அல்லது எரிபொருள் தட்டுப்பாடோ ஏற்படாது என உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர, QR குறியீடுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எரிபொருளை வழங்குவது மூன்று மாதங்களுக்குள் இடைநிறுத்தப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் மின்சாரத்தை வழங்குவதற்கான நிலக்கரியை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், நிலக்கரி கப்பல்களுக்கான நிதியும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/148796

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரலில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நீக்கப்படாது - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

Published By: T. SARANYA

27 FEB, 2023 | 01:46 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக தேசிய எரிபொருள் விநியோக முறைமையின் கீழ் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் நிதியமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடைமுறை பற்றிய முடிவுகள் எடுக்கப்படும். அதனை விடுத்து கியூ.ஆர். குறியீட்டு முறைமை இரத்து செய்யப்பட மாட்டாது. 

https://www.virakesari.lk/article/149259

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

நண்பர்களின் கியூ ஆரை பயன்படுத்தலாம், அதோடு கியூ.ஆர் ஒன்றுக்கான எரிபொருள் அளவை அதிகரிக்கப் போகிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

விமானநிலையத்திலேயே வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏதோ ஒரு பாஸ் நடைமுறை வழங்க போவதாக சொன்னார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

நண்பர்களின் கியூ ஆரை பயன்படுத்தலாம், அதோடு கியூ.ஆர் ஒன்றுக்கான எரிபொருள் அளவை அதிகரிக்கப் போகிறார்களாம்.

நன்றி ஏராளன். ஆனால் கிழமைக்கு 20லீற்றர்கள்  தான்  ஆகக் கூடியதாம்… 

46 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானநிலையத்திலேயே வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏதோ ஒரு பாஸ் நடைமுறை வழங்க போவதாக சொன்னார்களே?

நாங்க சொல்லுவம்… ஆனால் செய்ய மாட்டம்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 04:13, ஏராளன் said:

தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

10 hours ago, ஏராளன் said:

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

9 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

தான் சொன்னதையே மறுத்துரைக்கும் மின்சக்தி அமைச்சர்! நாளைக்கு எதைச்சொல்லுவார் என்பதை யாரறிவார்? ஆளாளுக்கு ஒரு சட்டம், அறிக்கை. கடிவாளம் இல்லாத குதிரையை நம்பி சவாரி செய்ய புறப்படலாமா? உங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

அட நானும் இந்த முறை ஊருக்கு போய் எரிபொருளுக்கு கஸ்டப்பட தேவையில்லை என்றிருந்தேன்😭😭😭.

போகும் போது….. ஒரு மாசம் போரெண்டா…. இரெண்டு மாசத்துக்கு தேவையான மருந்து மாத்திரையளை எடுத்துக் கொண்டு….

ஒரு நல்ல ஆளாய் பிடிச்சு போதியளவு பெற்றோலையும் எடுத்து வச்சிட்டு…

குறைந்த பட்சம் கொழும்பு பிரிடிஷ் ஹைகொமிசனுக்கு ஓடி வர கூடிய மாரியாவது ஏற்பாடுகளை செய்து போட்டு…

பொத்தினாமேரி போயி…பொத்தினாமேரி வந்திரணும்….சரியா🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

தான் சொன்னதையே மறுத்துரைக்கும் மின்சக்தி அமைச்சர்! நாளைக்கு எதைச்சொல்லுவார் என்பதை யாரறிவார்? ஆளாளுக்கு ஒரு சட்டம், அறிக்கை. கடிவாளம் இல்லாத குதிரையை நம்பி சவாரி செய்ய புறப்படலாமா? உங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

💯 உண்மை சாத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

போகும் போது….. ஒரு மாசம் போரெண்டா…. இரெண்டு மாசத்துக்கு தேவையான மருந்து மாத்திரையளை எடுத்துக் கொண்டு….

ஒரு நல்ல ஆளாய் பிடிச்சு போதியளவு பெற்றோலையும் எடுத்து வச்சிட்டு…

குறைந்த பட்சம் கொழும்பு பிரிடிஷ் ஹைகொமிசனுக்கு ஓடி வர கூடிய மாரியாவது ஏற்பாடுகளை செய்து போட்டு…

பொத்தினாமேரி போயி…பொத்தினாமேரி வந்திரணும்….சரியா🤣🤣🤣

கான்களில் பெற்றோல் அடிக்க ஏலாதாம். வேறு வாகனங்களுக்கு அடிச்சுத்தான் கான்களை நிரப்பணும்.ஒரு மாதத்திற்கு எத்தனை கான் தேவையோ🙄

வாயை சாப்படுவதற்கு மட்டுமே திறப்பது மற்றும் படி பொத்தோ பொத்துத் தான் 🤣.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

கான்களில் பெற்றோல் அடிக்க ஏலாதாம். வேறு வாகனங்களுக்கு அடிச்சுத்தான் கான்களை நிரப்பணும்.ஒரு மாதத்திற்கு எத்தனை கான் தேவையோ🙄

வாயை சாப்படுவதற்கு மட்டுமே திறப்பது மற்றும் படி பொத்தோ பொத்துத் தான் 🤣.

கான்களில் அடிக்கலாம்.மற்றும் வெளிக் கடைகளிலும் வாங்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.