Jump to content

சாம் சூசைட் பண்ணப் போறான் - யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பொழுதுபோக்கு குறும்படம்.


Recommended Posts

இந்த குறும்படத்தை என் மச்சான் தான் இயக்கியுள்ளார். 20 நிமிட பொழுது போக்கு குறும்படம். 

இதில் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால், பாசையூர் மற்றும் குருநகரை மிக அழகாக காட்டி இருக்கும் விதம் தான். இந்த இடங்கள் என் மனசுக்கு மிகவும் பிடித்த இடங்கள். எப்ப ஊர் போனாலும், பாசையூர் கடலை பார்க்காமல் விட்டதில்லை. அதே போன்று தான் பாசையூர் அந்தோணியார் கோவிலும்.

இசையும் நல்லாக உள்ளது.

பார்த்து முடிய கண்டிப்பாக மெலிதாகவேனும் சிரிப்பீர்கள்.

பார்த்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள். 

 

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு நல்லா இருக்கு ......மற்றவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.......!

பாஷையூர் மட்டுமல்ல கரையூர், கொழும்புத்துறை,  துண்டி எல்லாம் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஊர்கள்.......இங்கு வந்தும் பாசையூர் ஆட்கள் எனது அயலவர்களாகவும் நண்பர்களாகவும் இப்போதும்  இருக்கிறார்கள்......கதைக்களத்தில் இருக்கும் "தந்தையுமானவன்" கதையின் பிற்பகுதி பாசையூர்தான்.....ஏராளமான பழைய நினைவுகளை நினைக்கிறேன்........!  😇

நன்றி நிழலி .......! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசையூர் கடற்கரையோரக் காட்சிகளைப் பார்க்க விரைவில் ஊருக்கு ஒரு விசிட் அடிக்கும் ஆசை வருகிறது.

அருமையான திறமையாளர்கள் அந்த நடிகர்களும், இசை, ஒளிப்பதிவு செய்தோரும். கமெரா கோணங்களும், பிசிறில்லாத வேக நகர்வுகளும் உச்ச சிறப்புகள்! பகிர்விற்கு நன்றி நிழலி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒளிப்பதிவு. ஏதோ கிட்டத்தட்ட நீர்கொழும்பு மீன்பிடி பகுதி போல் தெரிகின்றது. பாசையூர் பகுதியில் நிறைய கத்தோலிக்க வாழ்கின்றார்களா? சோபாசக்தியின் கதைகளில் இந்த ஊரைபற்றி அடிக்கடி விபரிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் காட்சியில் வரும் கடலின் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அருமையாக காட்சிகளை எடுத்துள்ளார்கள். 

எல்லாவற்றையும் விட பாசையூர் மக்களின் நாயகன் MGRரை நினைவூட்ட பிண்ணனியில் அவரது பாடல்👌.. அதே போல ஆரவாரமில்லாத இசை 👏

படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு சிரிப்பும் எனக்கு வந்தது, ஏனெனில் படம் பழைய நினைவுகளை மீண்டும் ஒருதரம் கண்முன்னே கொண்டு வந்து கொண்டிருந்தமையால். எத்தனை காலமானாலும் இளவயது நினைவுகள் மறக்கமுடியாதவை..

 

@நிழலிஅண்ணா!, உங்களது மைத்துனருக்கு பாரட்டுக்கள்👏👏👏

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பேச்சு வழக்கில் வந்த அருமையான குறும் படம். ரசித்து பார்த்தேன். 
அந்த கடைசி காட்சி  அருமை. அந்த ஒற்றை வரியில்... 
20 நிமிட படத்தை, சோர்வில்லாமல் கொண்டு போயுள்ளார்கள்.
படப்பிடிப்பு, இசை, எல்லாமே சிறப்பு. 
இணைப்பிற்கு நன்றி நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

நல்ல ஒளிப்பதிவு. ஏதோ கிட்டத்தட்ட நீர்கொழும்பு மீன்பிடி பகுதி போல் தெரிகின்றது. பாசையூர் பகுதியில் நிறைய கத்தோலிக்க வாழ்கின்றார்களா? சோபாசக்தியின் கதைகளில் இந்த ஊரைபற்றி அடிக்கடி விபரிப்பார்.

பாசையூரும், குருநகரும் அதிக கத்தோலிக்கர்கள் வாழும் பகுதிகள். அது மட்டுமல்லாமல் பலவழிகளில் பிரபலமான ஊர்கள் : உப்புக் காற்று வீசும் கடற்கரை, உதை பந்தாட்டம், ஊர்ச்சண்டை (அப்பவே குழுக்கள் இருந்தன) இப்படிப் பல காரணங்களால் தனித்துவமான ஊர்கள். உலர வைத்த திருக்கை (stingray) வால் இந்த இரு ஊர்களிலும் பிரபலமான ஆயுதம், உலோக வாளை விட ஆபத்தானது என்பார்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான குறும்படம்.

இணைப்புக்கு நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நிழலி...இதில் நகைச்சுவை பாத்திரமேற்று நடிப்பவர் உங்கள் மச்சானோ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் ஊருக்கு போன போது நானும் ,தம்பியும் இந்த இடத்திற்கு மீன் வாங்க போயிருந்தோம் ...வீடியோவில் பார்க்க சுப்பராய் இருக்கு 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி நிழலி...இதில் நகைச்சுவை பாத்திரமேற்று நடிப்பவர் உங்கள் மச்சானோ?
 

இல்லை ரதி. படத்தை இயக்கியவர். அருளானந்தம் ஜீவதர்சன். படத்தின் இறுதியில் Attempt by என்று போட்டு பெயர் வருகின்றது.

இவர் தான், ருடோ தமிழர் ஒருவரை விமானமோட்டியாக போட்டு சிரியா போய் அகதிகளை மீட்டவர் என்ற கதையை முகனூலில் எழுதி, அதை சீமான் உட்பட பலரை உண்மை என்று நம்ப் வைத்து பெரும் செய்தியாக்கிய குறும்பர்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.