Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க விரும்பும்  ரஷ்யா

இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை  ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார்.

அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும்,  9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது.

அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி கடற்பரப்பில் செயற்படுத்துவதா என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, ரஷ்யாவை சேர்ந்த ஒரு குழுவினரூடாக மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கும், சுமார் மூன்று வருடங்களுக்குள் இலங்கையில் ஒரு குழுவினருக்கு அதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் Rosatom State Nuclear Energy நிறுவனம் இதற்கான திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளது.

100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று சிறிய கடல் அணு மின் நிலையங்களை தேர்ந்தெடுக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளதாக S.R.D. ரோஸா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான முதலீடுகள், சலுகைக் காலம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்காக பங்களாதேஷுடன் ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தத்தை இலங்கை தற்போது ஆய்வு செய்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.samakalam.com/இலங்கையில்-அனுமின்-நிலைய/

 

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் – ரஷ்ய தூதுவர்

Levan S. Dzhagaryan – Sri Lanka Guardian


இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

110 மெகாவாட் அணு மின் உற்பத்தி நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமாயின், அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும், விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/255590

Posted

அதானியிடமும் ஒரு வார்த்தை கேட்பது நல்லது. 😂 பசுமை மின்சக்தியில் அதானியின் முத்த முதலீடு ஒரு பில்லியன் டொலர்களைத் தாண்டுகிறது.

ரஸ்யாவின் 110 மெகாவாட் அணு மின் நிலையம் ஒன்று அமைக்க ஏறத்தாள 30 மில்லியன் டொலர் ஆகும். இது தவிர அதற்கான எரிபொருள், அணுக் கழிவுச் சேமிப்பு, பராமரிப்பு என்று ஏராளமான செலவு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அணு மின்நிலையம் அமைக்க பண்ணைப்பாலத்துக்கு அங்காலை ஏராளமான இடங்கள் இருக்கு.....உதாரணத்துக்கு மண்டைதீவு,நெடுந்தீவு.....இப்பிடி கன தீவுகளை சொல்லிக்கொண்டு போகலாம் :cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

அணு மின்நிலையம் அமைக்க பண்ணைப்பாலத்துக்கு அங்காலை ஏராளமான இடங்கள் இருக்கு.....உதாரணத்துக்கு மண்டைதீவு,நெடுந்தீவு.....இப்பிடி கன தீவுகளை சொல்லிக்கொண்டு போகலாம் :cool:

தெற்கே ஒரு தீவும் இல்லையோ? அங்கினேக்க எங்கையாலும் கட்டச் சொல்லுங்கோ. சத்தியமா வடக்குக்கிழக்கில வேண்டாம், வேண்டவே வேண்டாம் அண்ணை.
கூடங்குளத்தையும் கல்பாக்கத்தையும் நினைக்கவே பீதியாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை (Nuclear Power Plant) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அடித்து  பிடித்துக்கொண்டு இலங்கைக்கு வக்காலத்து வாங்குவது இதற்குத்தானே! இதைப்போன்று வேறொரு திட்டத்தை அண்மையில் சீனாவும் அறிவித்திருந்ததே, தொழில் வாய்ப்பென்றும் சொன்னார்கள். அது என்ன திட்டம்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

தெற்கே ஒரு தீவும் இல்லையோ? அங்கினேக்க எங்கையாலும் கட்டச் சொல்லுங்கோ. சத்தியமா வடக்குக்கிழக்கில வேண்டாம், வேண்டவே வேண்டாம் அண்ணை.
கூடங்குளத்தையும் கல்பாக்கத்தையும் நினைக்கவே பீதியாக இருக்கு.

ஏராளன், அப்படி அமைப்பதாக இருந்தால் நிச்சயமாக வடக்கு கிழக்கில்தான் அமைப்பார்கள். அதட்கு மாற்று கருத்து இலங்கை அரசிடம் இருக்காது. அப்படி அது வடக்கில் அமையுமாக இருந்தால் தமிழனுக்கு பேராபத்துதான். கூடன்குளமும், கல்பாக்கமும் இதுவும் சேர்ந்தால் அழிவுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போரின்மூலம் அழிக்க முடியாததை அபிவிருத்தி எனும் பெயரில் அழிக்கும், அதுக்கு நம்மவரும் கைஉயர்த்துவினம். அரசியல் அதிகாரம் தர பின்னடிப்பது; நமது உழைப்பை நோகாமல் சுரண்டவும், நிலங்களை சொல்லிக்கொள்ளாமல் ஆக்கிரமிக்கவுமே. அவர்களின் நிலங்களை இயற்கை பாத்துக்கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, குமாரசாமி said:

அணு மின்நிலையம் அமைக்க பண்ணைப்பாலத்துக்கு அங்காலை ஏராளமான இடங்கள் இருக்கு.....உதாரணத்துக்கு மண்டைதீவு,நெடுந்தீவு.....இப்பிடி கன தீவுகளை சொல்லிக்கொண்டு போகலாம் :cool:

கு.சா எங்கட தோட்டத்திற்குள் கட்டச் சொல்லிக் காட்டிக் குடத்திடுவார் போல இருக்கு.பிறகு நாங்கள் எங்க புகையிலை வெங்காயம் மிளகாய் எல்லாம் வைக்கிறது. அணுக்கழிவுகளையா பசளையாப் போடுறது?. கச்சதீவுதான் இந்தியாவுக்கு சொம்ப கிட்ட அங்க அமைக்கப் போவதாக யோசனை சொன்னாலே போதும். அமரிக்காவும் இந்தியாவும் தாங்கள் விட்ட பிழைகளுக்கு தண்டனை கிடைத்து விட்டதை எண்ணிக் கலங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, புலவர் said:

கு.சா எங்கட தோட்டத்திற்குள் கட்டச் சொல்லிக் காட்டிக் குடத்திடுவார் போல இருக்கு.பிறகு நாங்கள் எங்க புகையிலை வெங்காயம் மிளகாய் எல்லாம் வைக்கிறது. அணுக்கழிவுகளையா பசளையாப் போடுறது?. கச்சதீவுதான் இந்தியாவுக்கு சொம்ப கிட்ட அங்க அமைக்கப் போவதாக யோசனை சொன்னாலே போதும். அமரிக்காவும் இந்தியாவும் தாங்கள் விட்ட பிழைகளுக்கு தண்டனை கிடைத்து விட்டதை எண்ணிக் கலங்குவார்கள்.

நீங்கள் வடிவாக கவனிக்கவில்லை. அண்ணா தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளார். பண்ணைக்கு அங்கால தீவுகள் என்று. தம்பியோட ஏன் முரண்படுவான் என்று சில தீவுகளை மட்டுமே எழுதியுள்ளார் 🤣

Edited by விசுகு
  • Haha 3
  • nunavilan changed the title to இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க விரும்பும்  ரஷ்யா
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் அணுமின் நிலைய திட்டங்களை அமைப்பது தொடர்பில் IAEA ஆய்வு செய்கிறது

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க Rosatom உதவும் என RIA Novosti தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாகவும், IAEA நிபுணர்களால் இது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ரஷ்ய கூட்டமைப்புக்கான இலங்கை தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

தூதுவரின் கூற்றுப்படி, அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பது மதிப்புள்ளதா அல்லது தரையில் கட்டுவது மதிப்புக்குரியதா என்பது குறித்து இன்னும் விவாதம் நடந்து வருகிறது.

அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ரோசாட்டம் உதவும்.

நாட்டில் நிலவும் எரிசக்தி பற்றாக்குறை பிரச்சினையை அணுசக்தியால் மட்டுமே தீர்க்க முடியும் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவாட்களை எட்டும், இது ஒரு தீவு தேசத்திற்கு மிகவும் பொருத்தமான விருப்பமாகும்.

2032 ஆம் ஆண்டளவில் ரஷ்யாவின் தொழில்நுட்ப ஆதரவுடன் இலங்கை தனது முதலாவது அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/258602

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஏராளன் said:

இலங்கையில் அணுமின் நிலைய திட்டங்களை அமைப்பது தொடர்பில் IAEA ஆய்வு செய்கிறது

அளவிற்கு அதிகமான சூரிய ஒளி கிடைக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. எனவே சூரிய ஒளிமூலம் மின்சார உற்பத்தி முறையை ஊக்குவித்தால் நல்லது.

சூரிய ஒளி இல்லாத ஐரோப்பிய நாடுகள் சூரிய ஒளிக்காக ஏங்கி தவிக்கின்றன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அளவிற்கு அதிகமான சூரிய ஒளி கிடைக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. எனவே சூரிய ஒளிமூலம் மின்சார உற்பத்தி முறையை ஊக்குவித்தால் நல்லது.

சூரிய ஒளி இல்லாத ஐரோப்பிய நாடுகள் சூரிய ஒளிக்காக ஏங்கி தவிக்கின்றன.

இது வட கிழக்கில் அமையப்பெறுவதால் இலங்கை அரசு இதில் உறுதியாக இருக்கின்றது. சூரிய சக்தி மூலமும் மின்சாரம் பெரும் திடடம் உண்டு. இருந்தாலும் அணு சக்தி மூலம் பெறுவதட்கான திடடதயும் நிறைவேற்ற முயட்சிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Cruso said:

இது வட கிழக்கில் அமையப்பெறுவதால் இலங்கை அரசு இதில் உறுதியாக இருக்கின்றது. சூரிய சக்தி மூலமும் மின்சாரம் பெரும் திடடம் உண்டு. இருந்தாலும் அணு சக்தி மூலம் பெறுவதட்கான திடடதயும் நிறைவேற்ற முயட்சிக்கிறது. 

அணுசக்தி மூலம்  மின்சாரம் பெற்ற நாடுகளே அதற்கு மூடுவிழா நடத்தும் போது சிங்களச்சிறிலங்கா மட்டும் ஏன் அணுமின் விடயத்தில் குறியாக நிற்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

3 hours ago, குமாரசாமி said:

அணுசக்தி மூலம்  மின்சாரம் பெற்ற நாடுகளே அதற்கு மூடுவிழா நடத்தும் போது சிங்களச்சிறிலங்கா மட்டும் ஏன் அணுமின் விடயத்தில் குறியாக நிற்கின்றது?

 

காசு பணம் துட்டு மணி மணி அண்ணா

நாடு  எக்கேடு  கெட்டாலென்ன???

இப்பவே 45- 50 க்கு  வந்திருக்கும்  வெப்பநிலை 

அணு ஆலை  திறப்புடன் 60-70 யை  கடந்து  விடும்??

அது பண்ணைக்கு அங்கால தானே என்று சொல்லக்கூடாது 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ; ரஷ்யாவுடன் அரசாங்கம் பேச்சு

Published By: DIGITAL DESK 3

17 JUN, 2023 | 03:43 PM
image
 

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசாங்கம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்துள்ளார்.

தேசிய மின்சார தேவையை ஈடுச்செய்ய கூடிய திட்டங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடுகளுடன் ஆராய்ந்து வந்தது. இந்தியாவுடன் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் மற்றுமொரு திட்டமாகவே ரஷ்யாவுடன் அணுமின் திட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது.  இந்தியப் பெருங்கடல் தீவு நாடான இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தில் செயல்படுகிறது.

இந்த திட்டத்தை துரிதப்படுத்தி கட்டுமானத்தை தொடங்கும் என்று இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவு உள்ளது. மேலும் சர்வதேச அணுசக்தி முகாமை குறித்து ரஷ்ய நிறுவனம் ஆராய்வதுடன் நான்கு பணிக்குழுக்களை அமைத்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும் என்று பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை தெரிவித்திருந்தது. அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடட்டதற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032ஆம் ஆண்டில் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.

இலங்கை அணுசத்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157916

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/6/2023 at 14:27, விசுகு said:

அது பண்ணைக்கு அங்கால தானே என்று சொல்லக்கூடாது 😀

என்ன விசுகர் நீங்கள் ஆகலும் தான் ??????? :beaming_face_with_smiling_eyes:

நான் என்ன அவ்வளவுக்கு இரக்கமில்லாதவனா? :408:

  • Haha 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பாவில் இருந்து அணுமின் நிலைய முன்மொழிவுகள்: காஞ்சனா

இலங்கை அணுசக்தி வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில், இந்தியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு பல்வேறு தொழில்நுட்பங்களின் கீழ் அணுமின் நிலையங்களை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை அணுசக்தி தெரிவுகளை ஆராய்ந்து வருவதாகவும் இந்த நாடுகளின் சலுகைகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“2023-2042 மின் உற்பத்தி திட்டத்தில் அதை இணைக்கும் திட்டங்களுடன், அணுசக்தி விருப்பங்களை ஆராய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு விரிவான மதிப்பீடு நமது நாட்டிற்கான அணுசக்தியின் பொருத்தம் மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும், மேலும் அதற்கேற்ப அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும், ”என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/261485



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.