Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Published By: RAJEEBAN

14 MAR, 2023 | 03:43 PM
image

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளியொருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறிப்பிட்ட தான் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக  அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/150501

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிச் செல்ல உதவியவரை மீண்டும் இலங்கைக்கு வந்து காட்டிக்கொடுத்த பெண். செய்த உதவிக்கு நல்ல கைமாறுதான் போங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

தப்பிச் செல்ல உதவியவரை மீண்டும் இலங்கைக்கு வந்து காட்டிக்கொடுத்த பெண். செய்த உதவிக்கு நல்ல கைமாறுதான் போங்கள். 😂

13 hours ago, ஏராளன் said:

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

இது தர்ம சங்கட நிலை. ஆதாரம் கேட்டிருப்பார்கள். கெடுபிடியை பார்த்தால் அந்தப்பெண் தமிழராக இருக்கலாம். 

எத்தனையோ பேர் போகிறார்கள் வருகிறார்கள், ஏன் இவரை மட்டும் கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

தப்பிச் செல்ல உதவியவரை மீண்டும் இலங்கைக்கு வந்து காட்டிக்கொடுத்த பெண். செய்த உதவிக்கு நல்ல கைமாறுதான் போங்கள். 😂

நானும்… முதலில் நீங்கள் சொல்லியதைத்தான் நினைத்தேன்.
ஆனால்.. சில வருட ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டுக்கு செல்லும் போது,
அந்த ஒப்பந்த காலம் முடிந்த பின் நாட்டுக்கு திரும்பி போக வேண்டும்.
உதாரணமாக சிங்கப்பூர்,   சில மத்திய கிழக்கு நாடுகளை குறிப்பிடலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எத்தனையோ பேர் போகிறார்கள் வருகிறார்கள், ஏன் இவரை மட்டும் கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

அதை என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? 😂 கைது செய்து விசாரித்தவரை கேட்டிருக்கவேண்டும். 

1 hour ago, தமிழ் சிறி said:

நானும்… முதலில் நீங்கள் சொல்லியதைத்தான் நினைத்தேன்.
ஆனால்.. சில வருட ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டுக்கு செல்லும் போது,
அந்த ஒப்பந்த காலம் முடிந்த பின் நாட்டுக்கு திரும்பி போக வேண்டும்.
உதாரணமாக சிங்கப்பூர்,   சில மத்திய கிழக்கு நாடுகளை குறிப்பிடலாம்.

இருக்கலாம். நான் ஐரோப்பிய நாட்டிற்கு சென்று விட்டு வந்தவர் என்றே நினைத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

நான் ஐரோப்பிய நாட்டிற்கு சென்று விட்டு வந்தவர் என்றே நினைத்தேன். 

ஐரோப்பா போனவன் திரும்பவும் இலங்கைப் பக்கம் தலை வைத்து படுப்பானா?

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள ராஜதந்திர கடவையில் வேலிதாண்டிய கொம்மான் , சிறை மீண்ட செம்மலாக திரும்பிய நேரம் , இதே கட்டுநாயக்காவில் எந்தத் கான்ஸ்டபிளை ஐயா கைது செய்தவை ??  😜

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐரோப்பா போனவன் திரும்பவும் இலங்கைப் பக்கம் தலை வைத்து படுப்பானா?

கொம்மான் இப்பவும் படித்த படி தானே.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐரோப்பா போனவன் திரும்பவும் இலங்கைப் பக்கம் தலை வைத்து படுப்பானா?

அப்படியல்ல. நான்றிய பல முக்கியஸ்தர்களே ஒரு முறை அல்ல பல முறை சென்று  பாதுகாப்பாக திரும்பி  வந்துமுள்ளனர். அதிஷ்ரமற்றவர்கள் மாட்டுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

எத்தனையோ பேர் போகிறார்கள் வருகிறார்கள், ஏன் இவரை மட்டும் கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

காட்டிக் கொடுப்புகளும் நடந்திருக்கும்.
அதுக்குத்தான்… எம் இனத்தில், நிறைய ஆட்கள் இருக்கிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

ஐரோப்பா போனவன் திரும்பவும் இலங்கைப் பக்கம் தலை வைத்து படுப்பானா?

நியாயமான கேள்வி போன ஆட் கள் யார் திரும்பி  இருக்கிரார்கள் மத்திய கிழக்கில் ஒப்பந்தகாலம் முடிந்தால் திரும்பவும் புதுப்பிக்கலாம் விருப்பம் / வேலை கெடு பிடி அதிகமாக இருந்தால் மீண்டும் நாட்டுக்கு  திரும்பலாம் தற்போது இலங்கை இருக்கிற நிலையில் பல லட்சம் பேர் போயிருப்பார்கள் மத்திய கிழக்கிற்கு அதிக வேலையாட் கள் செல்வதால் அங்கே சம்பளம் அதிக,ம் கேட் க முடியாது அதிகமாக கேட்டவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் அங்குள்ள முதலாளிமார்கள் .

நான் இருந்த காலத்தில் போராளி ஒருவரை எடுத்து வேலை வாங்கி கொடுக்க படாத பாடு பட்டோம்  ஒரு வழியாக வேலை செய்து கொண்டிருக்குறார் இப்ப வரைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, island said:

அதை என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? 😂 கைது செய்து விசாரித்தவரை கேட்டிருக்கவேண்டும். 

இது உங்களுக்கான கேள்வியல்ல, எல்லோருக்கும் பொதுவானது. பொதுவாக தமிழருக்கான கெடுபிடி அதிலும் போராளிகளென்றால் வறுத்தெடுப்பார்கள். காரணம் இனிமேற்காலத்தில் போராட்டம் என்று ஒன்றை நம் இளம் சந்ததி நினைத்துக்கூடப்பார்க்கக்கூடாது என்பதற்காக. அவர்களை அணைக்கும் உறவுகள், சமுதாயம் போன்றவர்களுக்கு கொடுக்கும் கெடுபிடிமூலம் அவர்களை சமுதாயத்தில், உறவுகளில் இருந்து ஒதுக்குவது, மற்றவர்களுக்கு கொடுக்கும் பாடம். யாராவது போராட வெளிக்கிட்டால் இதுதான் தண்டனையென்பது உதவி செய்தவரை தண்டிப்பதன்மூலம் சொல்லும் செய்தியும் அதுவே. போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமுதாயத்துடன் இணைத்திருக்கிறோம் என்கிற அறிக்கைக்குப்பின்னால், அவர்கள் மீள இணைகிறார்கள், முன்னாள் போராளிகள் என்று குற்றம் சுமத்துவதும், கைது செய்வதும் பின்னணி என்ன? அவர்களுக்கு தெரியும் போராட்டத்திற்கான காரணம், பிரச்சனை நிஞாயமான முறையில் தீர்க்கப்படவில்லை, அதற்கான தேவை இன்னும் இருக்கிறது அந்த மக்களுக்கு, உண்மையான புனர்வாழ்வு என்பது அவர்களை தண்டிக்கும் காலமாகவே பயன்படுத்தப்பட்டது. ஆகவே ஒரு போராட்டத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள்.  

21 hours ago, தமிழ் சிறி said:

காட்டிக் கொடுப்புகளும் நடந்திருக்கும்.
அதுக்குத்தான்… எம் இனத்தில், நிறைய ஆட்கள் இருக்கிறார்களே.

   ஒன்று, போராளிகளை இறுக்கமாக, நெருக்கமாக கண்காணிக்கிறார்கள், போகும்போது தவற விட்டிருந்தாலும் பின்னர் விசாரித்தறிந்து காத்திருந்து கைது செய்திருக்கலாம். அல்லது வேண்டுமென்றே காட்டியும் கொடுத்திருக்கலாம். போராளிகளுக்கும் அவர்களுக்கு உதவுவோருக்கும் இது தண்டனை. சிங்களம் தமிழரை வாழவும் விடாது, சாகவும் விடாது. எங்களை வைத்து தான் விளையாடவும் அரசியல் செய்யவும் நாம் வேண்டும் அதுக்கு. எங்களை வைத்து தன் மக்களையே அச்சுறுத்துகிறது. போராட்டங்களை அடக்கும் முறை, எங்களை அடக்கும்போது, சித்திரவதை செய்யும் போது குரல் கொடுக்காதவர்கள் தங்களுக்கு நிகழும்போது எப்படி அது தவறு என்று வாதாட முடியும்? கோத்தா ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரை எச்சரித்த விதம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு!      

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.