Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை - இன்னுமொரு நல்ல படம்

Featured Replies

May be an image of 2 people, beard and text

என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும்.

மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம்.

படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. 

ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம்.

கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன்.

---------------------------------------------------------------

இரட்டை 

இரட்டையர்களில்  ஒருவன் காமுகன், குடிகாரன், சுயநலம் நிரம்பியவன். இன்னொருவன் புனிதமானவனாக இல்லாவிட்டாலும் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து அதனால் தான் இழந்த குடும்பத்தை எண்ணி ஏங்குபவன்.
முழுத் திரைப்படமும் தீமைகள் முழுவதும் நிரம்பி வழியும் திரைக்கதையாக மாறி நகர்கிறது.ஒவ்வொரு கதாபாத்திரமும் தீடிரென்று வெளிப்படுத்தும் தீமைகள் திரைப்படம் முழுவதும் நமக்கு ஒரு சங்கடத்தைத் தந்தாலும் மனித மனங்கள் கணங்கள் தோறும் எப்படி தீமைகளின் ஊற்றுக்கண்களாக  மாறுகிறது என்பதையும் நமக்கு  அப்பட்டமாகச் சொல்கிறது.


மொத்த தீமைகளையும் தனது உடல் மொழி முதல் நடிப்பு வரை சுமந்து நடித்திருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். தனது வித்தியாசமான உடல் மொழியில், நடிப்பில், வசன உச்சரிப்புகளில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் வழியாக அவர் காட்டிருக்கும் நுணுக்கமான வித்தியாசங்கள் பார்வையாளனாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அஞ்சலியிடம் நான் அழுக்கு என்று சொல்லும் இடத்திலும். திரைப்படத்தின் இறுதிப்பகுதியில் தான் என்றோ செய்த தீமை ஒன்று கண் முன்னே வந்து  இன்னும் இன்னும்  நீ பெரிய அழுக்கு  என்று அவருக்கே உணர்த்தும் போதும் ஜோஜூ ஜார்ஜ் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் தானும் ஒருவர் என்பதைத் தனது நடிப்பின் வழியாக நிரூபிக்கிறார்.


திரைப்படம் பார்க்கும் போது எனக்கு ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை கதாபாத்திரம் கரமசோவ் தான் நினைவில் வந்து போனது. ஏறக்குறைய ஜோஜூ ஜார்ஜ் கதாபாத்திரம் கரமசோவ் கதாபாத்திரத்தை இமிடேட் செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு விஷயம் நாவலில் கடைசி வரை கரமசோவ் தனது அழுக்குகளுக்குக் கலங்கி எங்கும் தலைதாழ்ந்த நிற்கவில்லை. இதில் ஜோஜூ ஜார்ஜ் தனது சரியான இடத்தில் தனது அழுக்கை உணர்ந்து கொள்கிறான். அதற்காக அவன் எடுக்கும் முடிவும். அந்த முடிவு தனது இரட்டைச் சகோதரனையும் சேர்த்து எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது #iratta என்கிற இத்திரைப்படம்.


மேசமான குழந்தைப் பருவம் அமைகிறது என்பதால் மட்டும் ஒருவன் வாழ்நாள் முழுதும் தீமைகளைச் சுமந்து அலைய மாட்டான். திரைப்படத்தில் இந்த இடம் மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை அல்லது இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்கிற சலிப்பா என்று தெரியவில்லை.
இதைமட்டும் சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் மிகச்சிறந்த  காட்சி அனுபவமாக அமைந்துள்ளது 
கரமசோவ் நாவலில் இந்த வரிகள் வரும்


"இழிநிலையிலிருந்து உயர்நிலை நோக்கித் தன் அழிவிலா ஆன்மாவை உயர்த்திக் கொள்ளும் நல்ல மனிதனே என்றுமுள பூமித்தாயின் அணைப்பில் மகிழ்கிறான்...."


அதனால் தீமைகளின் பெரும் ஊற்றுக்கண் மனித மனம். அதை வென்றிட நீங்கள் அடிக்கடி செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம் ஆன்மாவைப் பக்குவமாகப் பார்த்துக் கொள்ள முயற்சி செய்வது.  அந்தப் பக்குவத்தை வாழ்வின் நல்ல அல்லது மேசமான அனுபவங்கள் வழியாகத்  தேடித்தேடி அறிந்துகொள்பவனே கொஞ்சமாவது மேன்மை பெறுகிறான். 
திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது.

க. விக்னேஸ்வரன்
https://www.facebook.com/groups/997256144439563/user/100001499004580/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரைப்படம் ஒரு சிறந்த படம் என கூறுகிறார்கள், ஆனால் படம் எனக்கு பிடிக்கவில்லை. படம் முழுவதும் ஒரே மோசமான காட்சிகள் நிறைந்த மோசமான படம்.

சில வேளை எனக்கு இலக்கிய இரசினை இல்லாததால் படம் பிடிக்கவில்லை என கருதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.

  • தொடங்கியவர்
10 hours ago, vasee said:

 

சில வேளை எனக்கு இலக்கிய இரசினை இல்லாததால் படம் பிடிக்கவில்லை என கருதுகிறேன். 

அப்படியெல்லாம் இல்லை, ரசனைகள் மாறுபடும் வசி. ஒன்றை பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்கும் அவரவர்களுக்கு உள ரீதியிலான காரணங்கள் பல இருக்கும். 

27 minutes ago, முதல்வன் said:

படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.

ஓம்... அதுவும் அந்த நிலைக்கண்ணாடியில் தன்னை அவராக பார்த்த பின் போனை தூக்கி வீசும் காட்சி..!

இரட்டையரின் வாழ்வு இருவருக்குமே மோசமாகவே அமைந்து விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இண்டைக்குதான் பாத்தன்.. கடுப்பா இருக்கு.. விமர்சனங்கள பாத்து ஓவரா நம்பி போய் பாத்தன்.. ஒன்னும் இல்லை..

இதைவிட எத்தினையோ நல்ல படங்கள் வந்திருக்கு.,

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் வேற்று மொழி படம் தமிழில் மொழிமாற்றம் பெற்று வர நீண்ட நாட்களாகும் ஆனால் ரசிகர்களின் குறைவு காரணமோ அல்லது இணையத்தின் மூலம் படம் பார்ப்பது இலகுவானபின்னர்  கன்னடா தெலுங்கு மலையாளம் தமிழ் அனைத்து மொழி படம்களும் ரிலிஸ் அன்றே மொழிமாறி வந்து அவரவர் மொழிகளில் படம் காட்டுகின்றன .எனக்கு இந்த படத்தை பார்த்ததே வீண் நேரமினகெடல் என்று தோன்றுகின்றது .இந்திய படங்கள் அனைத்துமே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவன எப்பவாவது அத்தி பூத்தது போல் நாலைந்து படம்கள் பேர் சொல்வது போல் நின்று பிடிக்கும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.

பொறுமை கூடிய ஆள் நீங்கள் வாழ்துக்கள் உங்கள் ரசனைக்கு .

  • தொடங்கியவர்
8 minutes ago, பெருமாள் said:

பொறுமை கூடிய ஆள் 

அப்படி என்றால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? நான் இரண்டு தரம் பார்த்துள்ளேன் 😅

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதுவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நெட்பிளிக்ஸில் வந்த அன்றே பார்த்திருந்தேன். துப்பறியும் படத்தை பார்க்கும் ஆவலில் பார்த்துக்கொண்டிருந்தபோது படம் சிக்கலான முடிச்சுக்கள் கொண்டது என்று புரிந்தது. தற்கொலை என்பதை முதலிலிலே உய்ர்துணர்ந்திருந்தாலும் காரணத்தை கடைசியில்தான் புரியமுடிந்தது. இரட்டையர்களாக நடித்த ஜோஜூ ஜார்ஜின் இயல்பான நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மீசை கூட ஒரே மாதிரியாக இருக்கவேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

அப்படி என்றால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? நான் இரண்டு தரம் பார்த்துள்ளேன் 😅

இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும்போதே நிழலியருக்கு பிடித்து இருக்குமென்று 

வினோத் சார் இங்கு ஸ்டேசனில்  இருக்கும்போது யாராவது....... குழந்தைகளை கூட்டி வருவார்களா என்ற ஒருவார்த்தையின் பதமே போதும் படம் எங்கு செல்கிறது என்று அப்படியொரு போலிஸ் நிலையம் வேணுமா ?அதுவும் இந்திய ஜனநாயக நாட்டில் வெட்டுகளில் இருந்து தப்பி வந்ததாம் சென்சார் பணம் வாங்குவது உண்மைதான் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 03:33, நிழலி said:

அப்படியெல்லாம் இல்லை, ரசனைகள் மாறுபடும் வசி. ஒன்றை பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்கும் அவரவர்களுக்கு உள ரீதியிலான காரணங்கள் பல இருக்கும்

ஓம்... அதுவும் அந்த நிலைக்கண்ணாடியில் தன்னை அவராக பார்த்த பின் போனை தூக்கி வீசும் காட்சி..!

இரட்டையரின் வாழ்வு இருவருக்குமே மோசமாகவே அமைந்து விடுகின்றது.

ஊருக்குதான் உபதேசம் உனகில்லையடி🤣

On 21/3/2023 at 05:12, நிழலி said:

அப்படி என்றால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? நான் இரண்டு தரம் பார்த்துள்ளேன் 😅

🤣

On 21/3/2023 at 04:03, பாலபத்ர ஓணாண்டி said:

நானும் இண்டைக்குதான் பாத்தன்.. கடுப்பா இருக்கு.. விமர்சனங்கள பாத்து ஓவரா நம்பி போய் பாத்தன்.. ஒன்னும் இல்லை..

இதைவிட எத்தினையோ நல்ல படங்கள் வந்திருக்கு.,

👍👍

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2023 at 22:17, கிருபன் said:

இரட்டையர்களாக நடித்த ஜோஜூ ஜார்ஜின் இயல்பான நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மீசை கூட ஒரே மாதிரியாக இருக்கவேண்டுமா?

இறுதிக் காட்சியில் கண்ணாடியில் தோன்றும் விம்பம் அச்சு அசலாகத் தன்னைப் போல் இருப்பதால்தான் அந்த முடிவை அவர் எடுக்கிறார். மீசையும் ஒரேமாதிரி இருப்பது என்னை குழப்பவில்லை.

கன்னத்தில் மரு, அல்லது வெட்டுக்காயம், நிறத்தில் மாற்றம், குரலில் வேறுபாடு என எதையும் சேர்க்காமல் தனது நடிப்பால் மட்டும் இரண்டு பாத்திரங்களையும்   வேறு படுத்திக்  காட்டியிருக்கிறார் ஜோஜூ ஜோர்ஜ்.  கதை சொன்ன விதம், நடிப்பு என  படத்தில் எனக்கு எல்லாமே பிடித்திருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற கதைகளை படமாக கொண்டு வருவதற்கும் ஒரு துணிவு வேண்டும்......ஜோர்ஜ் இன் நடிப்பு அபாரம்......இடையில் வந்த அமலாபால் நல்ல நடிப்பு.......!  👍

ஒரு போலீஸ் நிலையத்தை அப்படியே எக்ஸ்ரே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.....அதற்கு ஒரு சபாஷ் .....!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 06:33, நிழலி said:

அப்படியெல்லாம் இல்லை, ரசனைகள் மாறுபடும் வசி. ஒன்றை பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்கும் அவரவர்களுக்கு உள ரீதியிலான காரணங்கள் பல இருக்கும். 

உண்மைதான், பெரியளவில் எதிர்பார்க்கும் ஒரு படம் எமது இரசினையினை பூர்த்தி செய்யாவிட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக இருக்கலாம், வெளிநாடு வந்த காலத்தில் வேலை செய்யும் இடத்தில் நல்ல படத்தினை கேட்டேன் அதில் பலர் கூறிய ஒரே படத்தினை வாடகைக்கு எடுத்து பார்த்தேன், படம் நல்ல படம்தான், முதல் தரம் எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என கருதினேன் ஆனால் காலப்போக்கில் பல தடவை அந்த ப்டத்தின் காட்சிகளை யூடுப்பில் பல தடவை பார்த்தாலும் சலிக்காத படமாக இன்றுவரை உள்ள ஒரே படமாக உள்ள படம்.
இந்த படத்திலும் சில மோசமான காட்சிகள் உள்ளன.

 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எழுதின மாதிரி இந்த படம் நெட் பிளிக்சில் வந்தவுடனேயே பார்த்து விட்டேன் ...சுப்பர் படம்...அந்த படத்தில் நடித்தவர்களது நடிப்பு அருமை ...படம் பார்த்தவுடனேயே யாழில் வந்து எழுத வேண்டும் என்று நினைத்தேன்...இப்ப எல்லாம் எழுதவே பஞ்சியாய் இருக்கின்ற படியால் எழுதவில்லை 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.