Jump to content

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

Published By: DIGITAL DESK 5

23 MAR, 2023 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று , அதனை மீள செலுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். பாரிய எரிமலையின் கீழ் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். அந்த தீயை அணைந்து சிறந்த நாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தே சிந்திக்க வேண்டியுள்ளது.

யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சியாளர்கள் தற்போதுள்ள நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ளது. தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார். ஆனால் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரிலிருந்தே நாம் இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு எம்மால் பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கை , பொதுஜன பெரமுனவினரின் செயற்பாடுகளால் இடை நிறுத்தப்பட்டன. எனினும் நாம் இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். எனவே தற்போதேனும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

அதற்கமைய குடும்ப அரசியல் அற்ற தூய்மையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். பதவிகள் குறித்த எண்ணங்களை முற்றாகத் துறந்து ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் பின்னர் யார் ஆட்சியமைத்தாலும் மீண்டும் நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/151268

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடுத்த நசியல் கள்ளர். 

இவருக்கும் ஒரு ஆசை. 

அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள்

ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள்

ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம்.  

இலங்கையிலும் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதன் பின் அடுத்த நிலை பதவிகளுக்கு போன சில்லறைகள் மைத்திரியும், மகிந்தவும்தான்?

அடுத்து இந்த லிஸ்டில் நரியும் சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

சுற்றிச் சுற்றி சுப்பர்ரை கொல்லைக்குள் நிற்கும்  குப்பன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையிலும் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதன் பின் அடுத்த நிலை பதவிகளுக்கு போன சில்லறைகள் மைத்திரியும், மகிந்தவும்தான்?

அடுத்து இந்த லிஸ்டில் நரியும் சேரலாம்.

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂
 
7 minutes ago, குமாரசாமி said:

சுற்றிச் சுற்றி சுப்பர்ரை கொல்லைக்குள் நிற்கும்  குப்பன்..

உலகத்திலேயே… தோசை பாட்டி வைத்து, ஜனாதிபதி ஆனதென்றால் சிங்கன் மைத்திரிதான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂

போகும் போது கதிரையில் போக வேணும் எண்டு ஆசையாம்🤣

20 minutes ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே… தோசை பாட்டி வைத்து, ஜனாதிபதி ஆனதென்றால் சிங்கன் மைத்திரிதான். 🤣

அது அப்பம் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

போகும் போது கதிரையில் போக வேணும் எண்டு ஆசையாம்🤣

அது அப்பம் எல்லோ?

ஓ.. நான், தோசை என நினைத்து விட்டேன்.
ஓரு சின்ன தோசை பாட்டி… மகிந்தவின் காதில் பூ சுற்றி,
My3‘ஐ.. ஜனாதிபதி ஆக்கினது சாதனைதான்.
இந்த மூஞ்சை எல்லாம் ஜனாதிபதியாக வரும் என்று, யாரும் நினைத்திருக்கவில்லை.
போதாக் குறைக்கு… சரவணபவனின் மகளின் “பேர்த்டே” பாட்டியையும் மனுசன் விட்டு வைக்கவில்லை. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.. நான், தோசை என நினைத்து விட்டேன்.
ஓரு சின்ன தோசை பாட்டி… மகிந்தவின் காதில் பூ சுற்றி,
My3‘ஐ.. ஜனாதிபதி ஆக்கினது சாதனைதான்.
இந்த மூஞ்சை எல்லாம் ஜனாதிபதியாக வரும் என்று, யாரும் நினைத்திருக்கவில்லை.
போதாக் குறைக்கு… சரவணபவனின் மகளின் “பேர்த்டே” பாட்டியையும் மனுசன் விட்டு வைக்கவில்லை. 🤣

அப்பத்துக்கே இலங்கை ஜனாதிபதி எண்டா..

கேக்குக்கு அமெரிக்க ஜனாயிபதியே ஆகலாம் என போயிருப்பார்🤣

யாரு கிட்ட?  ஹோம் பினான்ஸ் எண்டு நாமம் போட்ட முதலாளி கிட்ட?

பினாட்டை நாலா மடிச்சு கேக் எண்டு கொடுத்து முடிச்சிருப்பார் சோலியை🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂

கொஞ்சம் பொறுங்கோ இன்னுமொரு செய்தி வருமாம்.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 09:45, goshan_che said:

அது அப்பம் எல்லோ?

மஹிந்தா ஒன்றும் அப்பம் சுட்டு பாட்டி வைக்கேலை. மைத்திரி செய்த துரோகத்தை வர்ணிக்க; ஒரே மேசையில், ஒரே வரிசையில், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து விருந்து உண்டுவிட்டு கட்சியை விட்டு விலகி சென்றதை விளக்க அப்படி சொன்னார். அதற்காக மஹிந்தா ஒன்றும் யேசுவுமில்லை, ஒன்றும் புனிதரை காட்டிக்கொடுக்கவுமில்லை, இவர்கள் விலைக்கு வாங்கிய தமிழரை விட மைத்திரி செய்தது ஒன்றும் பெரிய குற்றமுமில்லை. போன மைத்திரி ஒழுங்காக ஆட்சி செய்யவுமில்லை ரத்தம் மணக்க மீண்டும் அதே பாதையில் தமிழரை பலி வாங்கி பழைய  குகைக்கே மீண்டார் கூழ் முட்டை மைத்திரி. இப்போ நீதிமன்றத்தோடு முட்டுறார் இருந்தும் ஆசை விடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

மஹிந்தா ஒன்றும் அப்பம் சுட்டு பாட்டி வைக்கேலை. மைத்திரி செய்த துரோகத்தை வர்ணிக்க; ஒரே மேசையில், ஒரே வரிசையில், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து விருந்து உண்டுவிட்டு கட்சியை விட்டு விலகி சென்றதை விளக்க அப்படி சொன்னார்.

இல்லை இது வெறும் சொலவடை அல்ல. 

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

Incidentally, the journalists who were invited for the discussion with the former President were served hoppers, which were the same food Sirisena ate with Rajapaksa, the night before his announcement where he broke ranks from Rajapaksa and announced his candidature at the 2015 Presidential Election, which he won, defeating his former leader, Rajapaksa.

https://www.colombotelegraph.com/index.php/ill-be-back-to-rule-sri-lanka-mahinda-rajapaksa-declares-while-serving-hoppers/amp/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ! அப்போ....  இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று முன்பே மஹிந்தா அறிந்தேதான் அப்பம் பரிமாறினாரோ? சொல்லி புலம்ப ஏற்ற வசீகரமான வசனநடை, அதற்கேற்ப ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மைத்திரி யார் என்பதை  நிரூபித்து, அவர் தொடங்கிய அரசியல் வாழ்விற்கு முடிவுரை வைத்தது. அவர் நாண்டுகொண்டு சாகவேண்டியவர் கதையின்படி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

8 minutes ago, satan said:

ஓஓ! அப்போ....  இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று முன்பே மஹிந்தா அறிந்தேதான் அப்பம் பரிமாறினாரோ? சொல்லி புலம்ப ஏற்ற வசீகரமான வசனநடை, அதற்கேற்ப ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மைத்திரி யார் என்பதை  நிரூபித்து, அவர் தொடங்கிய அரசியல் வாழ்விற்கு முடிவுரை வைத்தது. அவர் நாண்டுகொண்டு சாகவேண்டியவர் கதையின்படி.  

"அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

"அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

சந்திரிக்காதான் மஹிந்தாவுக்கு எதிராக மைத்திரியை களமிறக்கியவர்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

சந்திரிக்காதான் மஹிந்தாவுக்கு எதிராக மைத்திரியை களமிறக்கியவர்!

அப்ப, கணக்கு சரிதானே சாத்தான்.
பார்ட்டி வைக்க வேண்டிய கட் டாயத்தில்... சந்திரிகாதான் இருந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

அலரிமாளிகையில்?

அந்த சமயம் சந்திரிகா, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மறைமுகமாக ரணில்+மங்கள+சந்திரிகா+மைத்திரி பேசிக்கொண்டர்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொழும்பு டெலிகிராப் - பொது வேட்பாளராக மைத்திரி என செய்தி வெளியிட்டது.

ஆனால், அந்த மைத்திரி - ரணிலில் மனைவி மைத்திரி என மங்கள கொழும்பு டெலிகிராபை நம்ப வைத்து விட்டார்.

ஆகவே சிறிசேன கடைசிவரைக்கும் சந்தேகிக்கபடாமல் இருந்து வேலையை கொடுத்தார்.

1 minute ago, தமிழ் சிறி said:

அப்ப, கணக்கு சரிதானே சாத்தான்.
பார்ட்டி வைக்க வேண்டிய கட் டாயத்தில்... சந்திரிகாதான் இருந்தவர். 

அண்ணை, பார்ட்டி கொடுத்தது மகிந்த. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அலரிமாளிகையில்?

அந்த சமயம் சந்திரிகா, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மறைமுகமாக ரணில்+மங்கள+சந்திரிகா+மைத்திரி பேசிக்கொண்டர்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொழும்பு டெலிகிராப் - பொது வேட்பாளராக மைத்திரி என செய்தி வெளியிட்டது.

ஆனால், அந்த மைத்திரி - ரணிலில் மனைவி மைத்திரி என மங்கள கொழும்பு டெலிகிராபை நம்ப வைத்து விட்டார்.

ஆகவே சிறிசேன கடைசிவரைக்கும் சந்தேகிக்கபடாமல் இருந்து வேலையை கொடுத்தார்.

அண்ணை, பார்ட்டி கொடுத்தது மகிந்த. 

தகவலுக்கு நன்றி கோசான்.
பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

இதே மாதிரி...  சிறிமாவோ உயிருடன் இருக்கும் இறுதி காலத்தில்,
சந்திரிகா, அனுராவுக்கு இடையில் ஏதோ... லடாய் ஏற்பட..
சிறிமாவோ, இருவரையும்  கூப்பிட்டு... தோசைப் பார்ட்டி வைத்த கதை ஒன்றும் வந்தது.
அதனை கேள்விப்பட்டீர்களா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

நீங்கள் சொல்லுறது... 100% சரி. 😛
@Nathamuni நாதத்தை... உடனடியாக மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தாவிடம் அப்பம் வாங்கி உண்டவர் அவரை விட்டு விலகி  நேராக சந்திரிகாவை சந்தித்து தமிழரின் வாக்கில் அரச கதிரை ஏறி அந்த மக்களையே பலிகொடுத்து பதவியிறங்கினார். ஆனால் அவர் கணக்கு இன்னும் முடியவில்லை காத்திருக்கிறது முடிவுக்காக.

26 minutes ago, தமிழ் சிறி said:

பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

எத்தனை என்று நினைவில் வைத்திருப்பது? எல்லாம் நிரம்பி வழிந்து கலந்து மண்டையே குழம்புது எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்லுறது... 100% சரி. 😛
@Nathamuni நாதத்தை... உடனடியாக மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

அய்யா தெரியாதைய்யா...

தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும்.

நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... 

ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர்.

என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அய்யா தெரியாதைய்யா...

தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும்.

நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... 

ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர்.

என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁

Sri Lanka's former minister Mangala Samaraweera passes away | Tamil Guardian

மறைந்த முன்னாள் வெளிநாட்டமைச்சர்   மங்கள சமரவீரவும் லேசுப்பட்ட ஆளில்லையாம்..
என்று மகிந்த கூறியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி; அப்பம் சாப்பிட்டதும், விட்டுப்பிரிந்ததும் பெரிய விடயமல்ல. கடைசிமட்டும் நம்பிக்கைக்குரியவராய் இருந்து, அப்பம் சாப்பிடும்வரை பதறாமல், அந்த குற்றச்சாட்டை மறுத்து, பொறுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்ததுதான் பெரிய விடயம். அதிலொன்று சொன்னார் பாருங்கள்! தேர்தல் முடிவு வரும்வரை ஒளித்திருந்தாராம், சரத் பொன்சேகாவின் நிலை, சிறை நிழலாடியிருக்கும். தமிழரை பிரித்து மோதவிட்டு குளிர் காய்ந்தவர்கள், துரோகம், காட்டிக்கொடுப்பு பற்றி பேசுவது வேடிக்கை. உலகத்துக்கு அது என்னவோ ஈஸ்ரர் குண்டுவெடிப்பு, ஆனால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தமிழருக்கும் அது புனித வெள்ளி! தமிழரின் வாக்கில் வென்ற மஹிந்தா அழித்ததும் அவர்களை, மைத்திரி குண்டு வைப்பித்தும் அவர்ளுக்கு, தமிழரால் கதிரை ஏற இருந்த பொன்சேகாவை இழுத்து விழுத்திய மஹிந்தவின் கொள்கைகளையே அவரும் பின்பற்றி தமிழரை அழித்தார் தொடர்ந்தும் செய்கிறார். அழித்தவர்களை வாழவைக்கும் இனம் என்னினம். வாழ வைத்தவர்களை அழிக்கும் இனம் மற்ற இனம். அதனாலேயே எங்களையே எல்லோரும் குறி வைக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.